சென்னை, ஜூன் 10: பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை பெரியார் அறக்கட்டளையின் அனுமதி பெற்று எவரும் வெளியிடலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெரியாரின் "குடிஅரசு' தொகுதிகளின் எழுத்து, பேச்சுகளை தனி நபர்கள் லாபம் அடையும் நோக்கில் வெளியிடத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அவ்வாறு விதிக்கப்பட்ட தடையை தனி நீதிபதி நீக்கினார். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது. எனினும், குடிஅரசு தொகுதிகளை வெளியிடும் உரிமை பற்றிய பிரதான வழக்கு இனிமேல்தான் விசாரிக்கப்பட உள்ளது. திரிபுவாதம் மற்றும் திருட்டிலிருந்து பெரியார் எழுத்துகளை, கருத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். எனினும், பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை பெரியார் அறக்கட்டளையின் அனுமதி பெற்று, எவரும் வெளியிடலாம். இதற்கு எப்போதும் தடை இல்லை என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
நன்றி:தினமணி
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அனுமதி பெற இந்த வீரமணி யார்?
Post a Comment