கேள்வி: தர்மம்தான் எக்காலத்திலும் வெற்றிபெறும். அதர்மம் வெற்றி பெறாது என காஞ்சி ஜெயேந்திரர் கூறியுள்ளதுபற்றி தங்கள் கருத்தென்ன?
பதில்: ஆம். அதிலென்ன சந்தேகம்? கொலை வழக்கில் முதல் குற்றவாளி இவர்; 33 சாட்சியங்களுக்கு மேல் பிறழ் சாட்சிகளாக (பிஷீவீறீமீ கீவீஸீமீ) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி உள்பட மாறியது, இவர் செய்த தர்மத்தின் பயன் தானே! தர்மத்தின்விலை மதிப்பு என்னவோ?
கேள்வி: வைக்கம் போராட்டத்தில் காமராசர் கலந்து கொண்டு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் என்பது உண்மையா? - இரா. தமிழன்பன், சாத்திப்பட்டி
பதில்: ஓர் இளைஞராக இருந்தபோது அவர் கலந்துகொள்ளச் சென்றார். பிறகு உடனே திரும்பி விட்டார் என்பதுதான் தகவல். அப்போது அவர் ஒரு காங்கிரஸ் தொண்டர்.
கேள்வி : அயல்நாட்டு _ அயல் மாநில அரசியல் பிரமுகர்கள் எல்லாம் தங்கள் பாபங்களைக் கழுவிக் கொள்ள தமிழ்நாட்டுக் கடவுள்களைத் தேடி வருவது ஏன்/ அவர்கள் நாட்டுக் கடவுள்கள் என்னவாகின? - நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில்: அங்குள்ள கடவுளுக்கும் ஊழலில் பங்கு வாங்கியிருக்கும் போலிருக்கிறது! இங்குள்ளவர்கள் அவர்களிடமிருந்து இனிமேல்தான் பங்கு வாங்கு வார்கள் _ அவர்கள் தட்சணை, நன்கொடைகள் மூலம்!
கேள்வி : விநாயகர் சதுர்த்தி பற்றிய விளக்கத் துண்டு அறிக்கைகளை கழகத் தோழர்கள் விநியோகம் செய்தமைக்காக சில ஊர்களில் கழகத் தோழர்கள்மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதே? - கு. மனோகரன், திண்டுக்கல்
பதில்: வல்லபை கணபதி என்ற பெண்ணுறுப்பில் துதிக்கை விட்ட கடவுள் _ கணபதி சிலை இருப்பதை யெல்லாம் (தருமபுரி மத்தூர் கோயிலில்) நார் நாராய்க் கிழித்தெறிய நல்வாய்ப்பு. இதன்மூலம் பக்தர்களும், அவர்களைப் பாதுகாத்த காவல்துறை கறுப்பு ஆடுகளும் நாக்கைப் பிடுங்கி சாவது உறுதி! அதை எதிர்பார்க் கிறோம். முடிவு முத்தாய்ப்பாக வரும்!
கேள்வி : ராஜீவ்காந்தியின் பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சென்னைப் பொது மருத்துவ மனைக்குப் பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று நீங்கள் அறிக்கை கொடுத்தீர்களா? - வ.மு. சிவனேசன், சென்னை-40
பதில்: காமாலைக் கண்ணனுக்கு கண்டது எல்லாம் மஞ்சள்தானே!
பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது அம் மருத்துவமனை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டபோதே நாம் எழுப்பிய வேண்டுகோள் என்பது விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
கேள்வி : நபிகள் நாயகம் விழாவில் திராவிட இயக்கத் தவர்கள் கலந்து கொள்வது எந்த அடிப்படையில்? - அ. தமிழ்க்குமரன், ஈரோடு
பதில்: அவர் ஒரு மனிதநேயர் -_ 1400 ஆண்டுகளுக்கு முன்பே சிலை வணக்கத்தை ஒழித்தவர்; விதவைக்கு மறுமணம் என்பதை நடத்திக் காட்டியவர்; சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தியவர் என்பதால்.
கேள்வி : அண்ணா பெயரில் திமுக (அதிமுக). ஆனால், அண்ணா பிறந்த நாளில்கூட வெளியில் வந்து அண்ணா சிலைக்கு மாலை போடுவதில்லையே ஜெயலலிதா? - அ.க. கலைமதி,, உதகை
பதில்: சிலைக்கு மாலை போட்டால் அது நல்லதல்ல என்று ஜோசியர்கள் கூறியிருக்கிறார்களாம் என்று ஒரு தோட்டத்துக் குருவி கூறுகிறது. அண்ணா பெயரில் அவ்வளவு மரியாதை.
கேள்வி : காவிரி நீரைக் கிடைக்காமல் செய்தவர்தான் கருணாநிதி என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளாரே? - சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை
பதில்: தேர்தல் நெருங்குகிறதே! பின் இப்படிப் பேசினால் தானேஅவர் பலரது கவனத்தை ஈர்க்க முடியும்? பிரதமர் வி.பி. சிங் நடுவர் மன்றத்தை அமைக்கச் செய்ததே அவரல்லவா!
கேள்வி: தங்களுடைய அறிக்கையில் இப்பொழு-தெல்லாம் திருக்குறள் அதிகமாக எடுத்துக்காட்டப்-படுவதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா? - மு. அகம்மது, நாகை
பதில்: இயல்பான சிந்தனைதான்; இப்பொழுது மட்டும் என்பதில்லை.
கேள்வி: முற்போக்குவாதிகள்கூட துரதிர்ஷ்ட வசமாக என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்துகிறார்களே? -
பதில்: தவறுதான்; குருட்டுதனம் என்பது அதிர்ஷ்டம் என்பதன் பொருள். - துர்+அதிர்ஷ்டம் _ எதிர்பொருள் அதற்கு. அதை இப்படித் தவறாகப் பயன்படுத்தலாமா?
வி. அம்மணி, வாசுதேவநல்லூர்
No comments:
Post a Comment