அறிஞர் அண்ணா பதவியினால் பெயர் பெற்றவர் அல்லர்.கொள்கையினால் பெயர் பெற்றவர் .பெரியார் அவர்கள் அவருடைய அரசியல் கொள்கையின் படி 1967 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா வைத்த கூட்டணியை எதிர்த்து ஊர் ஊராக கடுமையாக பிரச்சாரம் செய்து ,அதற்க்கு பின்னர் அறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்ற காரணத்தினால் அண்ணா முதலமைச்சராக ஆக வேண்டிய நேரத்தில் அவருக்கு பக்கத்திலே இருந்த நண்பர்கள் கலைஞரை போல ,நாவலரைப்போல இருக்கிறபோது அண்ணா சொன்னார் :"வெற்றி பெற்று விட்டோம் .அய்யாவை(பெரியார்) போய் பார்த்து விட்டு வருவோம் " என்றார் . நாவலர் நெடுஞ்செழியன் சொன்னார் : " இவ்வளவு திட்டி பேசுகிறார் .நேற்று வரை நம்மை கண்டித்தார்.இப்போது எதற்கு அவரை போய் பார்க்க வேண்டும்? மெதுவாய் போய் பார்க்கலாம் என்றார்.
அண்ணா சொன்னார் : "அவர் இல்லாமல் நான் இல்லை -பெரியார் இல்லாமல் நான் இல்லை." என்றார்.அந்த அடிப்படை உணர்வு அந்த உணர்வு தான் நம்மை மனிதனாக்குவது.
(26.09.2009 காஞ்சியில் நடை பெற்ற தி.மு.க வின் முப்பெரும் விழ ,அண்ணா நூற்றாண்டு விழாவில் தி.மு.க பொது செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உரை)
தகவல்:தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு விடுதலை மலர்.
No comments:
Post a Comment