Pages

Search This Blog

Wednesday, September 22, 2010

பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் என்கிற உணர்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கொண்டு வந்த வ.வே.சு அய்யர்

திருச்சியிலே கூட்டப்பட்ட ஒரு மாகாண வருசாந்திர கூட்டத்தில் நிர்வாக சபை அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்க படும்போது தோழர்கள் ஈ.வெ.ரா. அவர்கள் காரியதரிசியாக இருந்து செய்த வேலையையும் கொஞ்ச நாள் இடைக்க காலத் தலைவராக இருந்து செய்த வேலையையும் பாராட்டி தீர்மானம் செய்து பதிந்து விட்டு புது வருசத்துக்கு ஈ.வெ.ரா அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத் தேர்தல் நடந்த உடன் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மீது தோழர் வ.வே.சு. அய்யர் அவர்கள் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார் .சென்னை முஸ்லிம் தோழர் ஒருவர் (தோழர் எஸ்.சீனிவாச அய்யங்கார் பாதுகாப்பில் இருந்தார்) அதை ஆதரித்தார்.

உடனே தோழர் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கு கோபம் வந்து எழுந்து மிக்க பட படப்போடு ,அய்யர் அவர்களிடத்தில் தனக்கு மிக்க மரியாதை உண்டென்றும்,ஆனால் இச்செய்கையை வெறுப்பதாகவும் கூறி, ஒரு உபன்யாசம் செய்தார். அதாவது பாழும் பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் என்கிற உணர்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அய்யர் கொண்டு வந்து இன்று புகுத்திவிட்டார் என்றும் ,காங்கிரஸ் ஏற்பட்டு இத்தனை காலத்துக்கு இன்று தான் ஒரு பார்பனரல்லாதார் தலைவரானார் என்றும், அவரது நடத்தையை புகழ்ந்து பாராட்டி தீர்மானம் செய்து பத்து நிமிட காலத்துக்குள் நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டு வந்திருப்பதற்கு அன்பர் ராமசாமியார் பார்ப்பனரல்லாதாராய் இருப்பது தான் காரணமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை என்றும்,அவர் போன்றவர் கதியே இப்படி ஆனால் ,இனி தம் போன்றவர் கதி என்ன ஆகுமோ என்று பயப்பட வேண்டி இருக்கிறது என்று கூறி , கூட்டத்திற்கு எச்சரிக்கை செய்தார். பிறகு அத்தீர்மானம் 100 க்கு எதிராக 10 என்கிற அளவில் தோல்வி அடைந்தது .அந்த 10 வீதமும் தோழர் எஸ்.சீனிவாச அய்யங்கார் சிப்பந்திகலேயாகும்.
--குடி அரசு (20.06.1937) (பக்கம் 12 )--

2 comments:

Thamizhan said...

தமிழ் தாத்தா எனப்படும் உ.வே.சா வெறு, இந்த வ.வே.சு எனப்படும் காங்கிரசு பணத்தில் சேரன்மாதேவி குருகுலம் நடத்திப் பார்ப்பனக் குழந்தைகளுக்குத் தனி மரியாதை,சாப்பாடு போட்டுவந்து பெரியாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் வேறு.

அசுரன் திராவிடன் said...

தகவலுக்கு நன்றி அய்யா..!


weather counter Site Meter