Pages

Search This Blog

Wednesday, April 20, 2011

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்ச வைபவமாம்

தனது காலினை முதலை பிடித்து இழுத்தவுடன் கஜேந்திரன் (யானை) கண்களில் கண்ணீர் மல்க, ஆதிமூலமே! என்று அலறி அழைத்தவுடன் விஷ்ணுபகவான் தன் கருட வாகனத்துடன் பறந்தோடி வந்து, சக்ராயுதத் தினால் முதலையை அழித்து, கஜேந்திரனுக்கு (யானைக்கு) விடுதலை யளித்ததோடு மட்டும் அல்லாமல், முதலை உருவத்தில் இருந்த ஹீ ஹீ வென்ற கந்தர்வனுக்கும் சாபவிமோசனம் அளித்தாராம். எப்படி இருக்கிறது கதை?
ஆதிமூலமே என்று யானை கூப்பிடுமா? கடவுள்தான் சகலமும் அறிந்தவராயிற்றே - அவனன்றி ஓர் அணுவும் அசையாததாயிற்றே - அப்படி இருக்கும்போது தனது பக்தனான கஜராஜனை முதலை கவ்விக் கொண்டதை அறியமாட்டாரா?

யானை இருக்கட்டும். கோவிந்தா, கோவிந்தா! என்று பக்தர்கள் கோஷம் போடுகிறார்களே, எந்தப் பக்தன் வீட்டுக்குச் சங்கு சக்கரத்தோடு வந்து, அவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை சம்ஹாரம் செய்திருக்கிறார்?

திருப்பதி வெங்கடாசலபதியென்னும் விஷ்ணு பகவானைத் தரிசிக்கச் செல்லுவோரும், தரிசித்துவிட்டுத் திரும்புவோரும் விபத்தில் பலியாகிறார்களே, அப்பொழுதெல்லாம் விஷ்ணு பகவான் ஏன் ஓடோடி வரவில்லை?

இந்த இலட்சணத்தில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்ச வைபவமாம், அதற்குப் பக்தர்கள் கூட்டமாம். கேழ்வரகில் நெய் வடிகிறதாம். குண்டாஞ்சட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடோடி வாருங்கள் வாருங்கள்!

ஹி . . ஹி. . பக்தி நோயிலிருந்து இவர்கள் புத்தி எப்பொழுது குணமாகப் போகிறதோ! தேவை - ஈரோட்டு மருந்து!

No comments:


weather counter Site Meter