Pages

Search This Blog

Monday, February 14, 2011

பா.ஜ.க. மோடி ஆளும் குஜராத்தில்தான் ஏழை,பணக்காரன் இடைவெளி அதிகம்

பா.ஜ.க. மோடி ஆளும் குஜராத்தில்தான்ஏழை,பணக்காரன் இடைவெளி அதிகம்!பசி, பட்டினியும் அதிகம்!! பொருளாதார ஆய்வுக் குழு அறிவிப்பு

பொருளாதார வளர்ச்சி யிலும், தனி நபர் வரு மானத்திலும் முன்னணி யில் உள்ளதாகக் கூறப் படும் மாநிலமான குசராத் தில் தான் பசியும், பட்டி னியும் அதிகம் இருப்ப தாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், தனி நபர் வருமானம் மனித வாழ் நிலை மேம்பாட்டுக் குறி யீடு, பசிக் கொடுமை யின்மை, ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட் டம் ஆகிய வற்றில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பி டும் போது தமிழகம் மதிப்பான இடத்தில் இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை அண் மைக்காலத்தில் அதி வேக வளர்ச்சியடைந்து வரும் மாநிலமாக கரு தப்படுவது குசராத் ஆகும். வெளிநாட்டு முதலீடுகள் இந்த மாநி லத்தில்தான் பெரு மளவில் குவிந்து வருகின் றன. தமிழகத்தில் உள்ள பல தொழில் நிறுவனங் கள் கூட குசராத்திற்கு இடம் மாறப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், பணம் கொட் டும் மாநிலமாகக் கருதப் படும் குசராத்தில் பசி யும், பட்டினியும், அதி கம் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொரு ளாதார ஆராய்ச்சிக் குழுவின் தலைமை பொருளாதார வல்லுநர் அபுசல் ஷெரீப் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக் கிறது. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு, மனித வாழ்நிலை மேம்பாட் டுக் கணக்கெடுப்பு, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை உள் ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களின் அடிப் படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருப்பதாக பொருளாதார வல்லுநர் அபுசல் ஷெரீப் தெரி வித்திருக்கிறார்.

தனிநபர் வருமானம்

தனிநபர் வருமா னத்தை பொறுத்தவரை இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக குசராத் திகழ்கிறது. கடந்த 1970-1971 ஆம் ஆண்டில் தனிநபர் வரு மானத்தில் ஆறாவது இடத்தில் இருந்த குச ராத், 2007-2008 ஆம் ஆண்டில் நான்காவது இடத்திற்கு முன்னேறி யுள்ளது. அந்த ஆண்டில் குசராத் மக்களின் தனி நபர் வருமானம் 45 ஆயிரத்து 773 ரூபாயா கும். இப்பட்டியலில் அரியானா ரூ. 59,008 தனி நபர் வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது.

ஆனால், தனிநபர் வருமானம் தவிர மற்ற அனைத்து விசயங்களி லும் குசராத் மாநிலம் மிகவும் பின்தங்கியுள் ளது. உதாரணமாக மனித வாழ்நிலை குறி யீட்டை பொறுத்த வரையில் குசராத் மாநி லம் ஆறாவது இடத் திற்குத் தள்ளப்பட்டுள் ளது. இப்பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் இரண் டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும், மாராட் டியம், அரியானா ஆகி யவை நான்கு மற்றும் அய்ந்தாவது இடத்தில் உள்ளன.

பட்டினி மாநிலங்கள்

பட்டினியில் வாடும் மாநிலங்களின் பட்டி யலை பொறுத்தவரை பஞ்சாப், கேரளா, அரி யானா ஆகிய மாநிலங் களிளிலே மிகக் குறைந்த அளவில் பட்டினி நிலவு கிறது. எனவே இந்த மூன்று மாநிலங்களும் மிகக் குறைந்த பட்டினி நிலவும் மாநிலங்களாக கருதப்படுகின்றன. அசாம் மாநிலத்தில் மிதமான அளவில் பசி யும், பட்டினியும் நிலவு கிறது. அதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு, ஆந்திரா, இராசஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் பட் டினிக் கொடுமை மித மாகவே உள்ளது. எனவே, இந்த மாநிலங் கள் அனைத்தும் மித மான பட்டினி நிலவும் மாநிலங்களாக கருதப் படுகின்றன. ஒரிசா, கரு நாடகா, மராட்டியம், குசராத், பிகார் ஆகிய மாநிலங்களில் அதிக பட்டினி நிலவுகிறது. சார்க்கண்ட், சத்தீசுகர், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றில் மிக அதிக பட்டினி நிலவுகிறது.

ஏழை, பணக்காரர் வேறுபாடு

இந்தியாவில் பொரு ளாதார உற்பத்தியிலும், தனிநபர் வருமானத்தி லும் முன்னணியில் இருக் கும் மாநிலமான குசராத், பட்டினியில்லாத மாநிலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதிக பட்டினி நிலவும் மாநிலங் களில் ஒன்றாக குசராத் திகழ்கிறது. அது மட்டு மின்றி, பணக்காரர்கள் அதிகம் வாழும் குசாரத் தில்தான் மிக அதிக அள வில் ஏழைகள் உள்ளனர். ஏழை பணக்காரர் வேறு பாடு இம்மாநிலத்தில் தான் மிக அதிகமாக உள் ளது. குசராத்தில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானோர் பணக்காரர்களாக இருக்கும் நிலை யில், அங் குள்ள ஏழை களில் பெரும்பாலா னோர் இசுலாமியர்களாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குசராத்தில் உள்ள இந்துக்கள் அரசு நிறுவ னங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் அதிக அளவில் பணியாற்று கின்றனர். அது மட்டு மின்றி பெரிய அளவி லான தொழில் நிறுவனங் களையும் அவர்கள் நடத் துகின்றனர். இதனால், அவர்களின் பொருளா தார வாழ்நிலை சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் அங்குள்ள இசுலாமி யார்களில் 54 விழுக் காட்டினர் சுயதொழில் செய்ய வேண்டிய கட் டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளனர். குசராத்தில் சுயதொழில் பெரிய அளவில் வளர்ச்சியடை யாததால், அங்குள்ள இசுலாமியர்கள் ஏழைகளாக தொடர்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்திருப்பதாக பொருளாதார ஆராய்ச்சி வல்லுநர் அபுசல் ஷெரீப் குழு தெரிவித்துள்ளது.

கடைசி இடம் குஜராத்துக்கு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் குசராத் மாநிலம் மிக வும் பின்தங்கியுள்ளது. குசராத் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் உள் ளது. இசுலாமியர்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் குசராத் பின்தங்கியுள்ளது.
http://viduthalai.in/new/e-paper/3403.html 

No comments:


weather counter Site Meter