Pages

Search This Blog

Tuesday, February 8, 2011

கபாடியும் - கிரிக்கெட்டும்

ஒரு காலத்தில் ஹாக்கி என்பது இந்திய மண்ணுக்குரிய விளையாட்டாக இருந்தது. ஹாக்கி என்றால் இந்தியா, இந்தியா என்றால் ஹாக்கி என்று கூறும் அளவுக்கு ஓங்கு புகழ் பெற்றிருந்தது. பாகிஸ்தான் பிரிவினைக்குப்பிறகு அதில் தொய்வு ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த விளையாட்டில் அடி எடுத்து வைத்த நாடுகள் எல்லாம் முன்னணியில் ஒளிர்கின்றன.

இந்தியா இதில் பின்னடைந்ததற்குக் காரணம் - கிரிக் கெட் என்னும் வெள்ளைக்காரர்கள் ஆட்டம் - இந்தியாவின் வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் கையில் சரண் அடைந்ததால், கிரிக்கெட் மேலோங்கி ஹாக்கி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.

ஊடகங்கள் பார்ப்பனர்கள் கையில் வசமாகச் சிக்கிக் கொண்டு இருப்பதாலும், பார்ப்பனர்கள் இதனை கையில் எடுத்துக் கொண்டதாலும் மக்கள் மத்தியில் கிரிக்கெட்டுக்கு ஒரு மகத்துவம் ஏற்படும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

விவசாயம் பார்ப்பனர்களுக்கான தொழில் இல்லை என்பதால் எப்படி அது நசிந்து போனதோ, அதே நிலைதான் விளையாட்டில் வருணாசிரமக் கண்ணோட்டம் இந்த நாட்டில் எல்லாத் துறைகளிலும் புகுந்து புறப்பட்டுக் கொண்டுதானிருக் கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஏன் கிரிக்கெட்டைப் பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்? ஹாக்கி, கால்பந்து, கபாடி போட்டிகளில் ஏன் அவர்கள் பங்கு கொள்வதில்லை என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இந்த விளையாட்டுகளில் உண்மையான திறன் குடி கொண்டிருக்கிறது. அதிக உழைப்பும், அதிகத் திறனும் இருந்தா லன்றி இந்த விளையாட்டுகளில் பங்கு கொள்ள முடியவே முடியாது. இந்த விளையாட்டுகளில் பங்கு பெறும் அத்தனைப் பேர்களும் அத்துணை நேரத்திலும் சுறுசுறுப்புடனும், கவனத் துடனும் சிரத்தையுடனும் இருந்தே தீர வேண்டும்.

கிரிக்கெட்டில் அப்படியல்ல. ஒருவர் பந்துவீசுவார்; ஒருவர் அடிப்பார்; ஒருவர் ஓடுவார், அவ்வளவுதான். மற்றவர்கள் அந்த நேரத்தில் பொழுதுபோக்காக நின்று கொண்டிருப்பார்கள். எல்லையில் நின்றுகொண்டு இருப்பவர்கள் ரசிகர்களுக்கு ஆட்டோகிராபில் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.

எதிலும் நளினமான, அலட்டிக் கொள்ளாதவற்றை யெல்லாம் தட்டிப் பறித்துக் கொள்வது பார்ப்பனர்களின் தனித் தந்திரமாகும்.

சம்பளம் என்று எடுத்துக் கொண்டாலும் கிரிக்கெட்டில் கொள்ளையோ கொள்ளை. ஆண்டு சம்பளம் கோடிக்கணக் கில்; ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனிச் சம்பளம். அதிலும் உள்நாட்டில் ஆடினால் ஒரு வகை அளவுகோல் (Rate); வெளிநாடுகளில் ஆடினால் கூடுதல் தொகை.

4 ஓட்டம் (Four) ஓடினால் அதற்கு சிறப்புத் தொகை; 6 ஓட்டம் ஓடினால் (Sixer)அதற்கொரு தொகை அவற்றை அளிப்பதற்கே புரவலர்கள் (Sponsors) உண்டு. சூதாட்டம் (Match Fixing)

இந்தத் தொகை போதாது என்று விளம்பரம் மூலம் கோடி கோடியாக சம்பாத்தியம்! விளையாடினாலும், விளையாடா விட்டாலும் மாற்றாளாக (Substitute) உள்ளவர்களுக்கும் அந்தக் கொள்ளைச் சம்பளம் உண்டு.

கிரிக்கெட் குழுவில் இடம் பெறுவதற்கு வெளியிலிருந்து ஏராளமான அழுத்தங்கள் உண்டு. குழுவில் இடம் பெற்றுள்ளவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் வெளியில் ஏராளம் உண்டு. அந்தப் பார்ப்பனர்க் கோட்டைக்குள் மற்றவர்கள் நுழைவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

இப்பொழுதுகூட விளையாட்டுக்காரர்களைத் தேர்வு செய்யும் குழுவிற்குச் சென்னையைச் சேர்ந்த ஒரு பார்ப்பனர்தான் தலைவராக இருக்கிறார். கேட்க வேண்டுமா?

இதில் ஓர் உண்மை என்னவென்றால் பார்ப்பனர் அல்லாத கபில்தேவ் குழுத் தலைவராக (ஊயயீவய) இருந்தபொழுது தான் இந்தியா உலகக்கோப்பையை வென்றது.

தென்னாப்பிரிக்காவில் மண்ணுக்குரியவர்கள் கருப்பர்கள். ஆனால் அங்கு கிரிக்கெட் யார் கையில் இருக்கிறது என்றால் வெள்ளையர்கள் கையில். அங்கும் பிரச்சினை ஏற்பட்டதால் கிரிக்கெட்டில் இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட வெள்ளைக்காரர்களும், பார்ப்பனர்களும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவர்கள்தானே!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சடுகுடு என்பது இந்த மண்ணுக்குரிய சிறப்பான வீரமும், விவேகமும் செறிந்த விளையாட்டாகும். ஆற்று மணலிலும், கட்டாந்தரையிலும், உபகரணங்கள் எதுவும் தேவையின்றி மிக எளிதாகக் கோடு கிழித்துக்கொண்டு ஆடும் விளையாட்டாகும்.

என்ன கொடுமை என்றால் இப்பொழுது கிராமப்புறங்களில், வயல்களில்கூட கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக் கிறார்கள். காரணம், இந்த ஊடகங்கள்தான்.

சினிமா போதைபோல கிரிக்கெட் போதை இளைஞர் களைக் கிறங்கச் செய்துவிட்டது. இந்தப் போதையிலிருந்து நம் இளைஞர்களை, மாணவர்களைக் காப்பாற்றவும், தமிழர்களின் வீர விளையாட்டை மீட்டெடுக்கவும் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தைத் திராவிடர் கழகம் தொடங்கி இருக்கிறது. இதுவரை சென்னை, தஞ்சாவூர், திருப்பத்தூர், காரைக்குடி, சிங்காரப்பேட்டை ஆகிய இடங்களில் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு இளைஞர்கள் மத்தியில் புத்துணர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து தூத்துக்குடியில் நடத்தப்பட உள்ளது.

அண்மையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்தது கபடிதான், தமிழ்நாட்டைச் சேர்ந்த - பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கவிதா இதில் முக்கிய வீராங்கனையாக ஜொலித்தார் என்பது தமிழர்களுக்கான பெருமையாகும்.

அவருக்குப் பாராட்டு விழாவை தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.பி.எம். மொய்தீன்கான் தலைமையில் திராவிடர் கழகம் நடத்தி, விருதும் அளிக்கப்பட்டது.

பாராட்டு விழாவில் பங்கு கொண்ட திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் புரவலருமான மானமிகு கி.வீரமணி அவர்கள், சடுகுடு போட்டி ஒலிம்பிக்கில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சி தொடங்கப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார்.

கபாடி விளையாட்டில் இதுவரை 20 நாடுகள் பங்கு கொண்டு வருகின்றன. இன்னும் 12 நாடுகள் கூடுதலாகப் பயிற்சி கொள்ளுமானால், ஒலிம்பிக்கில் இடம் பிடித்து விடும் - அப்படி ஒரு நிலை வரும்பொழுது தமிழ் மண்ணின் புகழ் பாரெல்லாம் பட்டொளி வீசும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. ஊருக்கு ஊர் பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தினை கழகத் தோழர்கள் குறிப்பாக இளைஞரணி, மாணவரணித் தோழர்கள் தொடங்க வேண்டும்.

பண்பாட்டுப் புரட்சி விளையாட்டிலும்கூட நடைபெற்றாக வேண்டும்.
http://viduthalai.in/new/home/archive/2938.html 

No comments:


weather counter Site Meter