Pages

Search This Blog

Monday, February 14, 2011

மோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசாரணைக் குழு கூறியதா?-பா.ஜ.க. பிரச்சாரம் பொய் பொய்

பா.ஜ.க. பிரச்சாரம் பொய்! பொய்!!
மோடி வெறி உணர்வைத் தூண்டினார், ஆவணங்களை அழித்தார்


தெகல்கா இதழ் அம்பலப்படுத்துகிறது

மோடி மீதான மீதான சிறப்பு விசாரணைக் குழு மோடி பற்றி சொன்னது என்ன என்ற உண்மையை தெகல்கா இதழ் அம்பலப் படுத்தியுள்ளது.

12.2.2011 தெகல்கா இதழில் ஆசிஷ் கேத்தான் என்பவர் என்ன எழுதியுள்ளார்? இதோ:

கோத்ரா கலவரங்கள் நடைபெற நரேந்திர மோடி  விரும்பியே அனுமதித்தார் என்ற குற்றச்சாற்றி லிருந்து சிறப்பு விசாரணைக் குழு விடுவித்து விட்டது என்ற தலைப்புச் செய்திகள் ஒரு தேசிய நாளிதழில் 3-12-2010 அன்று வெளிவந்தது. இச் செய்தியைப் பிடித்துக்கொண்டு தொங்கிய  தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது ஒளிபரப்புகளில் சிறப்பு விசாரணைக் குழு நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று நற்சான்று வழங்கி விட்டது என்ற செய்தியைக் கொட்டை எழுத்து களில் ஒளிபரப்பின.

நாளிதழில் முதன் முதலாக வெளிவந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று எவ ருக்கும் தெரியவில்லை. என்றாலும், அப்பாவி என்ற சான்றிதழை மோடிக்கு ஊடகங்கள் அளித்தன.

பொய்யான தோற்றம்

ஒரு சில மணி நேரத்தில், நரேந்திர மோடி குற்ற மற்றவர் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. இதைப் பற்றி விசாரணை செய்த சிறப்பு விசா ரணைக் குழு உச்ச நீதி மன்றத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டிருப்பதால்,  தங்களது அறிக்கை பற்றி வாய் மூடி அமைதியாக இருக்கும் நிலையில்,  இது தங்களுக்குக் கிடைத்த அரசியல் வெற்றி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டனர்.

அதிக உற்சாக மடைந்த அத்வானியோ, வெகு நீண்டதொரு காலத்திற்குப்பின் நான் படித்த மிகவும் மகிழ்ச்சியான செய்தி இது என்று கூறினார். மோடியின் தனித் தன்மையையும், அவரது ஆட்சித் திறனையும் பாராட்டிய அத்வானி, தனது கட்டுரையில், நரேந்திர மோடிக்கு ஏற்பட்டது போன்று, தொடர்ச்சியாகவும், நீடித்த முறையிலும், குற்றம் சாற்றியும் எந்த ஒரு அரசியல் நண்பருக்கும் இந்த ஒரு நிலை ஏற்பட்டதை எனது 60 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் கண்டதே இல்லை என்று எழுதினார்.

மோடியின் மீதான தனது பாராட் டுரையைக் கீழே குறிப்பிட்ட குறிப்புடன் அத்வானி முடிக்கிறார். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாற்றை மெய்ப்பிப்பதற்குப் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறிய சிறப்பு விசாரணைக் குழு அவரை குற்றமற்றவர் என்று விடுவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு இக்குழு அளித்த அறிக்கையின் முழு விவரங்களை அறிய நாடே ஆவலுடன் காத்திருக்கிறது.

600 பக்க அறிக்கை

நல்லது, இந்தக் காத்திருப்பு முடிவுக்கு வந்து விட்டது.  2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்கு உள்ள பங்கு பற்றிய விசாரணைக் குழுவின் 600 பக்க அறிக்கை தற்போது தெகல்காவிடம் இருக்கிறது. அந்த அறிக்கையின்  செய்திகள் அதிர்ச்சி அளிப்ப வையாக உள்ளன; ஒரு சிறந்த நிருவாகி, நல்லாட்சி தருபவர் என்று மிகுந்த கவனத்துடன் உருவாக்கி, வளர்ந்து வந்த மோடியின் தோற்றத்திற்கு பெருத்த அடியாக விளங்குகிறது.

குஜராத்தில் எவ்வாறு  எல்லாம் நீதிக்குப் புறம்பான செயல்கள் நடைபெற்று வந்துள்ளன என்று கடந்த எட்டு ஆண்டு காலமாக கலவரங்களால் பாதிக்கப் பட்டவர்களும், மனித உரிமைக் குழுக்களும் பெருங்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

காவல்துறையும், மாநில அரசும் எவ்வாறு கலவரக்காரர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர் அல்லது அவர்களுக்கு எவ்வாறு தூண்டுதலாகவும், ஆதரவாகவும் இருந்தனர், படுகொலைகளை நிகழ்த்த எவ்வாறு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர், ஒரு புதிய ஆபத்து நிறைந்த அளவுக்கு பொதுமக்களின் உணர்ச்சியை ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் எவ்வாறு தூண்டிவிட்டனர், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மாநில அரசு எவ்வாறு தொடர்ந்து கெடுதல்களைச் செய்து கொண்டிருந்தது, குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு மாறாக, அவர்களுக்கு உதவும் வகையில் எவ்வாறு அரசு வழக்கறிஞர்கள் நீதி மன்றங்களில் நீதியையே பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுத்தனர் என்றெல்லாம் அவர்கள் கூறி வந்துள்ளனர்.

ஆனால் காலம் செல்லச் செல்ல, நன்று வெளிப்படையாகத் தெரியும் சாட்சிகள் இருந்த போதிலும்,  இத்தகைய குற்றச்சாற்றுகள் தங்களது தாக்கும் வேகத்தை இழந்தன. அத்வானி கூறியது போல  மோடி மீது ஒரு பொய்யான குற்றச்சாற்றை வைத்து அவரைப் களங்கப்படுத்தி வந்த பிரச்சாரம்தான் அது என்பதைப் போன்ற தோற்றத்தை அளிக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து  இரண்டு தேர்தல்களிலும் மோடி வெற்றி பெற்றார். அவருக்கு எதிரான பிரச்சாரங் கள் பலமிழக்கத் தொடங்கின.

ஒரு மாபெரும் ராஜதந்திரி என்றும், எதிர் காலத்தில் பிரதமராக வரத் தகுதி பெற்றவர் என்றும் மோடியைப் பற்றி தொழில் நிறுவனத் தலைவர்களும், தேசிய ஊடகங்களின் ஒரு பிரிவினரும் கொண்டாடத் தொடங்கினர். அவரது தவறுகளும், குறைகளும், குற்றங்களும் ஒதுக்கி வைக்கப்பட்டன. 1984 இல் டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களை எவ்வாறு கையாண்டோம் என்று நன்கு அறிந்திருந்த காங்கிரஸ் கட்சி  மோடி விஷயத்தில் வாய்மூடி அமைதி காத்தது.

குற்றச்சாற்றுகள் உண்மையானவை

மோடியின் மீது பாதிக்கப்பட்ட மக்களும், மனித உரிமைக் குழுக்களும் இது வரை சாற்றி வந்த குற்றச்சாற்றுகளில் பல உண்மையானவை என்று தற்போது முதன் முறையாக அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி இந்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  இக்குழுவின் அறிக்கை மோடி குற்றமற்றவர் என்ற நற்சான்றிதழ் எதனையும் அளித்து விடவில்லை. அதற்கு மாறாக 12-5-2010 நாளிட்ட தனது அறிக்கையில்  (இந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ரகசியமாகக் காத்து வருகிறது)  பல விஷயங்களில் -  மதம் சார்ந்த மனநிலையைக் கொண்டிருந்தது, வெறி உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியது, முக்கியமான ஆவணங்களை அழித்தது, சங் பரிவார உறுப்பினர்களை பொது அரசு வழக்கறிஞர்களாக நியமித்தது, கலவரங்களின் போது காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளில் அமைச்சர்களை வைத்திருந்தது, நடுநிலை வகித்த அலுவலர்களைத் துன்புறுத்தியது போன்ற செயல்களைச் செய்த வகையில் மோடி குற்றவாளி தான் என்று விசாரணைக் குழு கண்டுபிடித் துள்ளது.

முன்மாதிரியாக விளங்கக்கூடிய ஒரு முதலமைச்சர்  செய்யக்கூடிய செயல்கள்தான் இவையெல்லாம் என்று கூறக் கூடிய சரியான மனநிலையில் உள்ள, சரியான வழியில் சிந்திக்கும் குடிமகள் எவனாவது இருக்க முடியுமா? திறமையும், முதலீடுகளைக் கவர்வதும் மட்டுமே நமது தலைவர்களுக்கான தகுதிகள் என்று நாம் கருதுகிறோமா?

சிந்தனையற்றவர், பொறுப்பற்றவர் மோடி!

2002 குஜராத் கலவரங்களின் போது முதலமைச்சர் நரேந்திர மோடி செய்ததாகக் கூறப்படும் பல குற்றங்கள் பற்றிய குற்றச்சாற்று களில் இருந்து சிறப்பு விசாரணைக் குழு விடுவித்துவிட்டது என்ற பா.ஜ.கட்சியின் பிரசாரத்திற்கு இப்போது தெரிய வந்துள்ள விசாரணைக் குழுவின் அறிக்கை பேரிடியாக அமைந்துள்ளது. அறிக்கையில் மோடிக்கு எதிராகவே பல செய்திகள் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன.

குற்றவியல் நீதி நடைமுறையை மோடி கையாண்ட விதத்தில் அரசியல் மற்றும் மதம்சார்ந்த செயல்திட்டங்கள் மிகுந்து காணப் படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் மோடியின் அரசு எவ்வாறு தவறிவிட்டது என்பதை அது பதிவு செய்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக குற்றம் சாற்றும் வகையில் மோடி தெரிவித்துள்ள ஒட்டு மொத்த குற்றச் சாற்றுகளும், ஓர் உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர் எவ்வளவு சிந்தனையற்ற முறையிலும், பொறுப்பற்ற முறையிலும் பேசியுள்ளார் என்பதையே காட்டுகிறது என்றும் அந்த அறிக்கை குற்றம் சாற்றுகிறது.

ஆனால், இந்த அறிக்கையில் மோடியின் மீது கண்டு பிடிக்கப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளில் ஓர்    அளவிலானவை மட்டும்தான் இவை.

No comments:


weather counter Site Meter