Pages

Search This Blog

Monday, February 14, 2011

அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப்திப்படுத்துவது

அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப்திப்படுத்துவது
நீதிமன்றத்தின்வேலையாகாது! நம்பிக்கை என்பது ஆதாரத்துக்கான அடிப்படையா?
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அசோக்வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ். தொடுத்த வினா

சட் டத்தை அடிப்படை யாகக் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டுமா அல் லது நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டுமா என்ற வினாவை அசோக் வர்தன் ஷெட்டி எழுப் பினார்.

சென்னைப் பல் கலைக் கழகத்தின் இந் திய வரலாற்றுத் துறை சார்பில் வெள்ளியன்று (பிப்.11) நீதிபதி பி. ராஜ கோபாலன் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மதச் சார்பற்ற அரசும் மதம் சார்ந்த சமுதாயமும்; இந்தியாவின் மதச் சார்பின்மையை வடிவ மைப்பதில் சட்டம், நீதித்துறையின் பங்கு என்ற தலைப்பில் தமிழக அரசின் முதன்மைச் செயலர் (நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வியோகத்துறை) கே. அஷோக்வர்தன் ஷெட்டி உரையாற்றினார். வளர்ந்த பெரிய மனித ராக ராமனின் பல்வேறு செயல்பாடுகள் அனை வருக்கும் தெரிந்துள்ள நிலையில், அவரை என்றென்றும் சிறுவர் என்பதுபோல் அலகா பாத் நீதிமன்றம் எடுத் துக் கொண்ட தன் மூலம் சட்டத்தின் ஆட்சி யில் ஒரு கடுமையான உறுதியின்மைச் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த வழக்கில் 1989-இல் ராம்லல்லா (பால ராமன்) சார்பில் தேவ்கி நந்தன் என்பவர், மூல வழக்கு தாக்கல் செய்யப் பட்ட 40 ஆண்டுகள் கழித்து தன்னை மூன்றா வது தரப்பாக இணைத் துக் கொண்டார். சிறு வர்கள், மூளை வளர்ச்சி யற்றவர்கள் போன் றோரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக உள்ள சட்ட விதிகளை ராமன் கோயிலுக்கு சாத கமாக பயன்படுத்த தேவ்கி நந்தன் முயன் றார். சட்டப்படி வழக் குத் தொடரப்பட்ட 12 ஆண்டுகளில், 1961-இல் பால பருவம் முடிந்து ராமன் வளர்ந்தவராகி விடுகிறார். இந்நிலையில் பாலராமன் சார்பில்தாக் கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்றார் அஷோக் வர்தன்.

இந்திய ஆதாரங்கள் சட்டப்படி, நிரூபிக்கப் பட்ட அல்லது நிரூபிக் கப்படாத உண்மைகள் மட்டுமே வழக்குகளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நம்பிக்கை என்பது ஒருபோதும் ஆதாரத்திற்கான அடிப் படையாக இருக்க முடி யாது. பாபர் மசூதியின் மய்யக் கோபுரப் பகுதி யில் தான் ராமன் பிறந்த தாக இந்துக்கள் பலர் நம்புகிறார்கள் என்று கூறி, உண்மை என்ப தற்கு மேலாக நம்பிக் கையை அடிப்படை யாகக் கொண்டு தீர்ப் பளிக்கப்பட்டிருப்பது ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் பலரும் இந்த நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள் என் பதை நீதிமன்றம் உறுதிப் படுத்தியது எப்படி? வழக்கில் எதிர்த் தரப் பினரான முஸ்லிம் மக் களின் நம்பிக்கை என்ன ஆவது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மசூதி இருந்த இடத் தின் அடியில் முன் னொரு காலத்தில் ஒரு கோயில் இருந்ததாக தொல்லியல் துறையினர் தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் நீதி மன்றம் தனது தீர்ப்பை அளித்திருக்கிறது. அது கண்டிப்பாக ராமர் கோயிலாகத்தான் இருந் திருக்க வேண்டும் என்ப தில்லை. மசூதி கட்டப் படுவதற்கு முன் ஒரு கோயில் இருந்தது என் பது, நன்கு நிலைநாட் டப்பட்டுள்ள இந்திய சட்ட விதிகளின்கீழ் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று முடிவு செய்வதற்கான அடிப் படையாக இருக்க முடி யாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1949 முதல் 37 ஆண்டு களாக மூடப்பட்டிருந்த பாபர் மசூதியை 1986-இல் அன்றைய மத்திய அரசு திறந்து விட்டது. இந்துக் களை திருப்திப்படுத்த இவ்வாறு செய்யப்பட் டது. அதற்கு முன், ஜீவ னாம்ச உரிமை தொடர் பான ஷா பானு வழக் கில் அந்தப் பெண் ணுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதை ஒரு பகுதி சிறு பான்மை மத அடிப் படைவாதிகள் எதிர்த் தனர். அதைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் சட்டத்தை அன்றைய (ராஜீவ் காந்தி) அரசு கொண்டு வந்தது. இது சிறுபான்மையினரை திருப்திப்படுத்துகிற அணுகுமுறை என்ற குற்றச்சாற்றுக்கு வழி வகுத்தது.

பொதுவாக நாட் டின் அரசமைப்பு சாச னம் அனைத்து மதங் களையும் சமமாகவே நடத்துகிறது. எனினும், பல்வேறு சூழல்களில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மாறுபட்ட மதங்களும், நம்பிக்கைகளும், பண் பாடுகளும் சமூகங்களும் உள்ள ஒரு நாட்டில் மதச் சார்பின்மை கோட் பாடு மிகவும் அவசிய மாகிறது. அரசு என்பது எந்த மதத்தையும் சாரா ததாக குடிமக்களின் நம் பிக்கைச் சுதந்திரத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் எவ்வித பாகுபாடுகளும் இருக்க து என்பதை அரசு உறுதிப்படுத்த வேண் டும் என்றார் அவர்.

பொது சமூகச் சட் டம் குறித்த தமது கருத் துக்களை வெளியிட்ட அவர் மதவாதத்தின் அடிப்படையில் இதைப் பற்றிப் பேசுவது சிறு பான்மையினருக்கு அச் சத்தை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய ஒருமைப்பாட்டிற்கு இந்தச் சட்டம் தேவை என்பதாக முன்வைக் கிறபோது, சிறுபான்மை யினருக்கு தங்களது அடையாளங்கள் அழிக் கப்பட்டு விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. எனவே, பெண்களின் உரிமைகள், மனித உரி மைகள் என்ற அடிப் படையிலேயே தனி நபர் சட்டங்களில் திருத்தங் கள் கொண்டு வரப்பட வேண்டும். சிறுபான்மை மதங்களுக்குள் உள்ள முற்போக்குச் சிந்தனை யாளர்களின் ஒத்துழைப் போடு இதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும் அஷோக் வர்தன் ஷெட்டி கூறினார்.

தொகுப்புரையாற்றிய பேராசிரியர் கருணா கரன், நிலப்பிரபுத்துவ கால மனப்போக்குடன் ஒரு நவீன சமுதாயத்தை உருவாக்க முடியாது. மக்கள் ஒருமைப்பாட்டை உருவாக்க மதச்சார் பின்மை கோட்பாடு தான் நம்பகமான வழி மதச்சார்பற்ற மனப் போக்கை வளர்க்க நாட் டின் சட்டங்களும் தீர்ப் புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை தலைவர் முனை வர் ஜி. வெங்கட்ராமன் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மகாராஷ்டிரா மாநில முன்னாள் தலைமை இயக்குநர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார் பேராசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
http://viduthalai.in/new/home/archive/3387.html 

No comments:


weather counter Site Meter