Pages

Search This Blog

Sunday, October 3, 2010

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஏழுமலையான்! திருப்பதி கோவிலில் மாபெரும் ஊழல் அம்பலம் டிக்கெட் விற்பனையில் கோடிக்கணக்கில் மோசடி!

இந்தி யாவிலேயே பணக்காரக் கோவில் என்ற அழைக் கப்படும் திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் நடந்த மிகப் பெரிய ஊழல் வெளிச் சத்துக்கு வந்துள்ளது. முக்கிய வி.அய்.பி.,க்கள் என்ற பெயரில் ஆர்ஜித சேவா டிக்கெட்கள் கள் ளச்சந்தையில் விற்கப் பட்டு, கோடிக்கணக்கில் பணம் சுருட்டல் நடந் துள்ளது.
சம்பந்தப்பட் டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் படி, காவல்துறையில் கோவில் நிருவாகமே புகார் செய்திருப்பது தான் மிகப்பெரிய வேடிக்கை. திருமலை கோவில் வரலாற்றில், இதுவரை நடந்திராத ஒன்று.
சமீப காலமாக பல சிக்கல்கள்
திருமலை வெங்கடா ஜலபதி கோவில் சமீப காலமாக பல்வேறு சிக் கல்களை சந்தித்து வரு கிறது. கோவில் நிருவா கத்தில் முறைகேடுகளும், ஊழல்களும் நடப்பதாக முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திர பாபு நாயுடு குற்றம் சாற்றினார். கோவில் நிரு வாகக் குழுவை மாற்ற வேண்டும் என கோரிக் கையும் வைத்தார். இந் நிலையில், கோவில் நிரு வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மாற்றப் பட்டனர். லட்டு விற்பனையில் முறைகேடு நடப்பதாக வும், லட்டு தரம் குறைந்து வருவதாகவும் குற்றம் சாற்றப்பட்டது. தர்ம தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு, இரண்டு லட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு கட்டணமாக ரூ.20 பெறப்படுகிறது. லட்டு ஊழல்
லட்டு ஒன்றின் எடை 175 கிராம் இருக்க வேண் டும். ஆனால், தற்போது வழங்கப்படும் லட்டு 100 கிராம் எடை கூட இல்லை. தர்ம தரிசனத் தில் வரும் பக்தர்களுக்கு லட்டு வினியோகிக்கும் கவுன்டர்களில், லட்டு களை உதிர்த்து கையில் பிடித்து ஊழியர்கள் கொடுக்கின்றனர். இது ஈரப்பதமாகவும் இருக்கிறது. உதிர்வதில் பெரும்பகுதி மிஞ்சும் படி செய்து அதை கவுன் டரிலேயே கள்ளச்சந்தை யில் அதிக விலைக்கு விற்கின்றனர். இதைப் பார்த்து பக்தர்கள் செய் வதறியாது குமுறுகின்ற னர். தற்போது லட்டு தரத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள் ளது.
டிக்கெட்டில் ஊழல்
இந்நிலையில், ஆர் ஜித சேவை டிக்கெட் விற்பனையில் மிகப் பெரும் ஊழல் நடந் துள்ளது தெரியவந்துள் ளது. திருமலை கோவி லில் காலை 3.30 மணிக்கு சுப்ரபாத சேவை, அதை தொடர்ந்து தோமாலா சேவை, அர்ச்சனா, வெள்ளிக்கிழமை நடத் தப்படும் வஸ்திர அலங் கார சேவை போன்ற சேவைகளுக்கு முன் பதிவு பல ஆண்டு களுக்கு தொடர்ந்து செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் பங் கேற்க விரும்பும் வி.வி. அய்.பி.,களுக்கு என்று சில டிக்கெட் "வரை யறுக்கப்பட்ட கோட்டா' என்ற பெய ரில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. மேலும் சேவைக்கு முதல் நாள், விஜயா வங்கி கவுன்டரில் கடைசி நேர பக்தர் களுக்கு என்று சில டிக் கெட் விற்கப்படுகின்றன.
பணம் படைத்தவர்களுக்கே
இதில் டிக்கெட் பெறு வது என்பது குதிரைக் கொம்பு மாதிரிதான். இங்குள்ள ஊழியர்களே இரவில் வாங்கிவிடுவர். ஆந்திரா, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நா டகா ஆகிய மாநிலங் களை சேர்ந்த செல் வாக்குமிக்க அரசியல் வாதிகள், பணம் படைத்த தொழில் அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்து வைத்துள் ளனர்.
கோவிலில் அதி காலையில் நடக்கும் அபிஷேக அலங்காரங் களை சாதாரண பக்தர் கள் பார்க்க வேண்டும் என்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த சேவா டிக்கெட்டு களை வழங்குவதில் தேவஸ்தான அதிகாரி கள், ஊழியர்கள், நிரு வாக போர்டில் உள்ள உறுப்பினர்கள் தனி உதவியாளர்கள் என பலரும் கூட்டணி அமைத் துக் கொண்டு கள்ளச்சந்தையில் சேவை டிக்கெட்டுகளை விற்று கோடிக்கணக்கில பணம் சுருட்டியுள்ளனர்.
சேவா டிக்கெட் விற்பனையில் ஊழல் நடப்பதாக தொடர்ந்து வந்த புகாரையடுத்து, மாநில அரசு உயர் அதிகாரிகளை நியமித்து புலனாய்வில் இறங்கிய போதுதான் இது வெளிச்சத்துக்கு வந்தது. போர்டில் உள்ள உறுப் பினர்கள் இதில் சம்பந் தப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்த போதுதான், நீண்ட காலமாக நடந்து வரும் முறைகேடு என்பது தெரியவந்துள்ளது. கோவிலில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுமே நம்பகத் தன்மைமிக்கவர்களா என்று சந்தேகப்படும் அளவிற்கு ஊழல் நிறைந்துள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் அம லாக்க குழு டைரக்டர் ஜெனரல் வி.தினேஜ் ரெட்டி தலைமையில் மிகவும் கவனமாக நடத்திய சோதனையில், 55 பேர் ஊழலில் சம் பந்தப்பட்டு இருப்பதாக கண்டுபிடித்தது. துணை நிருவாக அதிகாரிகள் இருவர் தான் மய்ய புள்ளி யாக செயல்பட்டு வந்துள் ளனர். அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அனைவரும் சஸ்பெண்ட்
இது தொடர்பாக முழு விசாரணை நடத் துவதற்காக விசாரணை அதிகாரி ஒருவரை தேவஸ்தான சிறப்பு அதிகாரி நியமித்துள் ளார். இவரது விசார ணைக்கு பின், ஊழலில் சிக்கிய அனைவரும் பணி யில் இருந்து இடை நீக் கம் செய்யப்பட உள்ளனர்.
ஆர்ஜித சேவா டிக் கெட்கள் பல ஆண்டு களுக்கு முன்பதிவு செய் யப்பட்டுள்ளன. புதிதாக சேவா டிக்கெட் வாங்கு வது என்பது இயலாத காரியமாக இருந்தது. தற்போது, தேவஸ்தானத் தின் சிறப்பு அதிகாரி மாற்றப்பட்ட பிறகு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னையில் விற்பனை
சேவா டிக்கெட் களை திருமலை தேவஸ் தானத்தின் கிளை அலு வலக மய்யங்கள் உள்ள சென்னை போன்ற நகரங்களில் சேவா டிக் கெட்களை விற்க நட வடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. குறிப்பிட்ட சேவைகளில் காலியாக இருக்கும் டிக்கெட் களில், குறிப்பிட்ட சத விகிதம் சென்னையில் விற்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பாக முன்பதிவு செய்யப் படுகிறது. (எ-டு) டிசம்பர் 15ஆம் தேதிக்குரிய சேவைக்கு அக்டோபர் 17ஆம் தேதி பதிவு). வெள் ளிக்கிழமை நடை பெறும் நிஜபாத சேவை டிக்கெட்டுக்கான பதிவு, வாரத்தில் திங்கள் கிழமை செய்யப்படுகிறது
http://www.viduthalai.periyar.org.in/20101003/news01.html

No comments:


weather counter Site Meter