Pages

Search This Blog

Wednesday, October 27, 2010

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க் கப்பட்டிருந்த விடுத லைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. பொட்டு அம்மான் பெய ரும் நீக்கப்பட்டுள்ள தாக இந்திய அரசு அறி வித்துள்ளது. இறுதி யுத் தத்தில் புலிகளின் தலை வர் பிரபாகரன் கொல் லப்பட்டதாக கூறப்பட் டதை இதுவரை உறு திப்படுத்தாமல் இருந்த இந்தியா, முதல் முறை யாக இப்போது இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளது.
1991 ஆம் ஆண்டு, மே 21 இல் ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சிபிஅய் தொடர்ந்த வழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதன்மைக் குற்றவாளி யாகவும், புலிகள் அமைப் பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம் மான் அடுத்த முக்கிய குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங் கையில் தமிழீழ விடுத லைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் நடந்த இறுதி யுத் தத்தில் புலிகளின் தலை வர் பிரபாகரனும், பொட் டம்மானும் கொல்லப் பட்டதாக இலங்கை அறிவித்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 'உடலை'யும் காட்டியது. ஆனால் இதனை புலிகளின் ஆத ரவாளர்கள் நம்ப மறுத்த தோடு, அவரும் பொட்டு அம்மானும் உயிருடன் இருப்பதாகவும் கூறி வந்தனர்.

இந்தியாவும் இது தொடர்பாக எதுவும் கூற வில்லை. ராஜீவ் கொலை வழக்கை முடிக்க ஏது வாக பிரபாகரன், பொட் டம்மான் இறப்புச் சான் றிதழை அனுப்புமாறு இலங்கையிடம் தொடர்ந்து கோரி வந் தது. ஆனால் இலங்கை அரசு இதுவரை இறப் புச் சான்றிதழ் எதையும் அனுப்பவில்லை. மாறாக, பிரபாகரன் இறந்துவிட் டார் என்ற கடிதத்தை நீதிபதி ஒருவரின் அத் தாட்சியுடன் அனுப்பி வைத்தது. இதனை ஏற்ற தாகவோ, மறுப்பதா கவோ எதையும் தெரி விக்காமலிருந்தது இந் திய அரசு.

சி.பி.அய்.யின் இணைய தளங்களில், ராஜீவ் கொலை வழக்கில் தேடப் படும் குற்றவாளிகள் பட் டியலில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம் மான் பெயர்கள் நீக்கப் படாமல் இருந்தன.

இந்நிலையில், இப் போது இந்த இருவரது பெயரையும் ராஜீவ் கொலை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாகவும் அவர்கள் மீதான குற்றச்சாற்றுகள் கைவிடப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித் துள்ளது.

சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சி ணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப் பில், முதன்மைக் குற்ற வாளி பிரபாகரன், இரண் டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என் கிற சண்முகநாதன் சிவ சங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கி லிருந்து நீக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கு எதி ரான குற்றச்சாற்றுகளும் கைவிடப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

குற்றவாளியின் மர ணத்துக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாற்றுக ளும் தானாகவே காலா வதியாகிவிடும் என்ற இந்திய குற்றவியல் சட்ட அடிப் படையில் இந்த முடிவை மேற்கொள்ள சிபிஅய் அனுப்பிய குறிப் புகளின் பேரிலேயே நீதிபதி தட் சிணாமூர்த்தி இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த அமிர்தலிங்கம் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம் மான் பெயர்கள் நீக்கப் பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதை யும் சிபிஅய் தனது குறிப் பில் தெரிவித்திருந்தது.
http://www.viduthalai.periyar.org.in/20101027/news05.html

1 comment:

நம்பி said...

பிராபாகரன் பெயர் நீக்கப்பட்டுள்ளது...பொட்டு அம்மான் பெயர் நீக்கப்படவில்லை..அது இன்னும் சி.பி.ஐ தளத்தில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் புகைப்பட்த்துடன் தான் வைக்கப்பட்டுள்ளது.


weather counter Site Meter