Pages

Search This Blog

Monday, November 1, 2010

அய்யப்பன் நோயைத் தீர்க்கும் லட்சணம் இதுதானா? புண்ணிய நதி பம்பையின் யோக்கியதையும் இதுதானா?

பயபக்தியோடு சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் போவதுபற்றி பலூனை ஊது வதுபோல பிரச்சாரத்தைக் கட்டி விடுகிறார்கள். அய்யப்ப பக் தர்களின் ஒழுக்கத்திற்கு எத்தனை மதிப்பெண் (மார்க்)?

போடுபவர் நாம் அல்ல - மூத்த தந்திரி ஒருவர் சொன்ன அந்தத் தகவலை நக்கீரன் (30.9.2009) விலாவாரியாக வெளியிட்டது.

10 வயது முதல் 50 வயதுவரையுள்ள பெண்கள் கோயிலுக்குள் வர அனுமதி கிடையாது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக வயதை மறைத்து ஏராளமான பெண்கள் கோயி லுக்கு வந்திருக்கிறார்கள். அந்தப் பெண்களைத் தடுத்து நிறுத்தாமல், போலீசார் மார்பை வேண்டுமென்றே பிடித்து பதினெட்டாம் படியில் தூக்கி விட்டுள்ளனர்.

தந்திரிகள் வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டு அய்யப்பனுக்குப் பணி விடை செய்கின்றனர். நெய் அபிஷே கத்தின்போது, தந்திரிகள் தங்கள் தொடை மற்றும் பாதங் களில் கைகளைத் தடவிவிட்டு, மீண்டும் அதே கைகளால் அய்யப்பன் விக்ரகத்தில் படிந்த நெய்யை எடுத்து விற்கவும் செய்கின்றனர். இதனால் அய் யப்பன் சாமி கடும் கோபத்தில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு அய்யப்பனை தரிசிக்க வந்த பல கோடி பக்தர்களில் 7 பேர் மட்டும்தான் உண்மையான பக்தியுடன் வந்தார்கள். அவர்களுக்கு மட்டும்தான் அய்யப்பனின் அருள் கிடைத்துள்ளது என ஜோதி டத்தில் தெரிய வந்துள்ளது என்று கூறியிருக்கிறார் மூத்த தந்திரி.

ஒழுக்கக்கேடுதான் இந்தத் தரத்தில் இருக்கிறது என்றால், சுகாதாரமும், சுற்றுச்சூழலும் எப்படியிருக்கின்றன?

பக்தர்களின் வருகைக் கணக்குப்படி சன்னிதானம் மற்றும் பம்பாவில் 5000 கழி வறைகளாவது தேவையாம். ஆனால், 2000 தான் உள்ள னவாம்.

சன்னிதானத்தில் சேரும் எல்லாக் கழிவுகளும் பம்பா நதிக்குப் போகிறதாம் - இப்படிச் சொல்பவர் தேவஸ் தானத்தின் தலைமைப் பொறி யாளர் கே. ரவிக்குமார்.

பம்பை நதியில் ஆண்டு ஒன்றுக்கு 2000 டன் மனிதக் கழிவுகள் கலக்கப்படுகின்றன. 100 மி.லிட்டர் பம்பை நீரில் 3 லட்சம் எம்.பி.என். கோல் ஃபார்ம் பாக்டீரியாக்கள் உள்ளனவாம். உலகில் இந்த அளவுக்கு மோச மான நதி வேறு எங்குமே இருப் பதற்கு வாய்ப்பு இல்லையாம்.

இதைச் சொல்லுவது நாத்திகர்கள் அல்லர். கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த இந்தத் தகவலை விலாவாரியாக வெளியிட்டுள் ளதே - இந்தியா டுடே (19.12.2007) - விடுதலை ஏடு அல்லவே!

அய்யப்பன் கோயிலில் மாளிகைபுரத்தம்மனின் தனி சன்னதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது - உருட்டி வழிபடவேண்டும். இங்கே மஞ்சள் பொடியை அம்பாளுக்குப் படைத்துப் பொட்டாக இட்டுக் கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும், வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.

(தினமலர், 16.11.2009).

இதே தினமலர் 15 நாள் கழித்து (1.12.2009) எந்த செய்தியை வெளியிடுகிறது?

இதய நோயாளிகள் சபரி மலை வரும்போது முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சன்னிதானம் மருத்துவர் அதிகாரி டாக்டர் ஹரீந்திரபாபு கூறினார். பயணத்தின் முன் டாக்டரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சாப்பிட்டுவரும் மருந்துகளை டைரியில் எழுதிக் கொண்டு வரவேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள்.

அய்யப்பன் நோயைத் தீர்க்கும் லட்சணம் இதுதானா?

புண்ணிய நதி பம்பையின் யோக்கியதையும் இதுதானா?

- மயிலாடன்

3 comments:

கீதா லட்சுமி said...

i could nt read ur blog since each charecter is diplayed one by one.

அசுரன் திராவிடன் said...

that mean lef-side widget or right-side widget or whole site...can u explain..bcoz i have customized the template according to my pc resolution.if u give detail eplanation i can adjust that.thank u for ur feed back

அசுரன் திராவிடன் said...

now i have reverted my old one.how is display..pls send me the feedback


weather counter Site Meter