Pages

Search This Blog

Thursday, November 18, 2010

திராவிடர் கழகப் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி! சீரங்கத்தில் பார்ப்பனரைப் பல்லக்கில் சுமப்பது நிறுத்தப்பட்டது கோயில் பின்புறமாகப் பார்ப்பனர்கள் ஓட்டம்!

திருவரங் கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த பல ஆண்டு களாக பார்ப்பனர் களைப் பல்லக்கில் சுமந்து செல்லும் கொடுமை வழக்கம் இருந்து வருகிறது. இந்த வழக்கம் கூடாது என்றும் இதனைக் கண்டித்து முதன் முதலில் விடுதலை யில் செய்தி வெளியிட்டி ருந்தோம். மேற்கண்ட வழக்கத்திற்கு எதிராக கோவில் இணை ஆணை யரும் நடவடிக்கை எடுத் ததால் ஆத்திரம் கொண்ட பார்ப்பனர் கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் திருவரங்கத் தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவரங்கம் ரங்கநா தர் கோவிலில் தற் போது கைசிக ஏகாதசி புரா ணங்கள் பாடும் நிகழ்ச் சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சி நிறைவு நாளன்றுதான் பார்ப்பனர்களுக்கு பிரம்ம ரத மரியாதை யுடன் பல்வேறு பொருள் கள் அளிக்கப்பட்டு, யானை கள் முன்னே செல்ல, வீடு வரை அவர்களை (பிரம்ம ரதம்) பல்லக்கில் சுமந்து சென்று விட்டுவருவது வழக்கமாம். பல்லக்கு சுமந்து செல் லும் சீமான் தாங்கிகள் ஏற்கெனவே இனி பல் லக்கு தூக்கமாட்டோம் என்று கூறி வந்ததால், பெரும் சர்ச்சைகள் இருந்து வந்தன. இதற் கிடையில் பார்ப்பனர் களை பல்லக்கில் தூக்கி சுமந்து செல்லும் முறை மனித உரிமைக்கு எதி ரான போக்கு என்று திருவரங்கத்தில் நடை பெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடுமையாக சாடியிருந்தார். இந்நிலை தொடர்ந்தால், திரா விடர் கழகம் விரைவில் போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பார்ப்பனர் கள் சார்பில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தங் களுக்கு சாதகமாக வரு மென்று நினைத்திருந்த பார்ப்பனர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டது. ஏற்கெனவே இந்த முறையை ரத்து செய்வ தென அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் இணை ஆணையர் தெரிவித்த தால் , எப்படி பல்லக்கில் செல்வது, நம்மை யார் பல்லக்கில் தூக்குவார்கள் என்று பல்வேறு முயற்சி களை மேற்கொண்டனர் பார்ப்பனர்கள். மேலும் மேலும் எதிர்ப்புகள் வந்ததால், அதனையும் மீறி பார்ப்ப னர்கள் நேற்று (நவ.17) பல்லக்கில் செல்வதாக முடிவு செய்திருந்தனர். இதற்கு மீண்டும் சர்ச்சை கள் வரவே, காவல் துறையினர் சம்பந்தப் பட்ட பார்ப்பனர்களை அழைத்து எச்சரித்தனர். இந்நிலையில்இன்று அதிகாலை கைசிக ஏகாதசி புராணங்கள் பாடிவிட்டு, வேதவி யாசர் பராசரபட்டர் உள் ளிட்ட பார்ப்பனர்கள் பிரம்மரத மரியாதையைக் கைவிட்டு விட்டு, வழக் கமாக செல்லும் கோவில் முன்புற வழியில் செல் லாமல் பின்புறமாக நடந்தே வீட்டிற்கு ஓட்டம் பிடித்தனர். இத்தகவ லறிந்து பொது மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந் தனர். பல்லக்கில் சுமந்து செல்லும் சீமான் தாங்கிகள் பெருமகிழ்ச்சியடைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விடுதலைச் செய்தி எதிரொலியாலும், திராவிடர் கழகப் போ ராட்ட அறிவிப்பாலும் தான் இந்த முறையை பார்ப்பனர்கள் கைவிட்டனர் என்று தெரிவித்தனர்.http://www.viduthalai.periyar.org.in/20101118/news02.html

3 comments:

போதெம்கின் said...

//இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் ’கைப்புள்ள கதைபோல்’ ’கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!’ என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர். ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.//


வினவில் வந்த கட்டுரை.
http://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/

அசுரன் திராவிடன் said...

கலைஞர் ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்தே அணைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்திற்கு தானே கை எழுது போட்டார்.அந்த கோரிக்கையை வைத்தது யார் முதல்வரிடம்.அது சரி யார் இந்த ம.க.இ.க.? நான் இத கேள்வியே பட்டது இல்லையே? யாரு இதுக்கு தலைவர்?கடந்த 9 ஆம் தேதியிட்ட விடுதலையை படிக்க வேண்டும்.http://viduthalai.periyar.org.in/20101109/thalai.htmlவினவில்
நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கட்டுரை என்றைக்கு எழுதப்பட்டது? தேதியை காணும்.


மற்ற உங்களின் குருட்டதனமான கருத்துக்கெல்லாம் பதில் சொல்லிகொண்டிருக்க முடியாது.

நம்பி said...

சூப்பர்..அடி தூள்...மவனே ஓடவிடு...பேசாம தூக்கிட்டுப்போய் கிணத்துல போட்டுறணும். சாவுங்கடா என்று. களிமண் பிள்ளையாரை கிணத்துல போடற மாதிரி...


weather counter Site Meter