Pages

Search This Blog

Showing posts with label ஸ்பெக்ட்ரம். Show all posts
Showing posts with label ஸ்பெக்ட்ரம். Show all posts

Wednesday, November 24, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற போர்வையில் தி.மு.க. ஆட்சியை ஒழிக்க பார்ப்பன முதலாளிகளின் கூட்டு! தி.மு.க.வின் பிரச்சாரப் படை கிளம்பட்டும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற போர்வையில் பார்ப்பன - முதலாளித்துவ சக்திகள் கூட்டு சேர்ந்து தி.மு.க. ஆட்சியை ஒழித்திட முனைந்துள்ளதன் முகத்திரையைக் கிழித்துக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்ந்தாம் முறை தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி, தமிழ்நாட்டின் அசோகரான தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில், இந்தியாவே கண்டு வியக்கத்தக்க வகையில் நடைபெற்று பீடுநடை போடுகிறது. சொன்னதையெல்லாம் செய்து முடித்த ஆட்சி என்ற பெருமையோடு, சொல்லாததையும் செய்து - 108 கலைஞர் உயிர் காக்கும் திட்டம், குடிசைகளற்ற தமிழகம் என்ற இலக்குடன் இயங்கும் கலைஞர் வீட்டுவசதித் திட்டம் போன்றவைகளால் மற்ற கட்சிகளால் எட்ட முடியாத சரித்திர சாதனையின் சிகரத்திற்கே சென்று பெருமை கொண்டுள்ளது தி.மு.க. ஆட்சி! மத்தியில் அய்.மு. கூட்டணியில் தனது பங்கை சிறப் புடனும், சுருதி பேதமின்றியும், கூட்டணித் தலைமையுடன் சுமுக உறவு கொண்டு, முன்பு அவர்கள் தமிழ்நாட்டில் தவ றான கூட்டணியில் சிக்கி அனுபவித்த தலைவலி எதுவும் இன்றி ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெறுவது உலகறிந்த ஒன்று. இதைக்கண்டு பொறுக்காத பார்ப்பனர்கள், விபீட ணர்கள், பதவி இழந்த விரக்தியாளர்கள், நாள்தோறும் தி.மு.க. ஆட்சியின் ஒளி மேலும் தகத்தகாய ஒளியாவது கண்டு ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது. வீழ்த்த சதிவலை பின்னுகிறார்கள்.

கற்பனை அனுமானம்

இந்நிலையில், திடீரென்று அவர்களுக்கு ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை (CAG அறிக்கை) - 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை கிடைத்துவிட்டதை ஏதோ ஒரு புதையல் கிடைத்ததைப்போல எண்ணி, இதைப் பெரிதாக ஊதி ஊதி, மயிரைச் சுட்டுக் கரியாக்கக் கனவு கண்டு வருகின்றனர்! 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை - இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்றெல்லாம் கூறுகின்றனரே - என்ன நடந்துவிட்டது? அத்தொகையை யாராவது எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்களா? இப்படி.... செய்ததற்குப் பதில், இப்படி ஏலம் விட்டிருந்தால், அப்படிச் செய்திருந்தால், இந்தப்படி முறை மாறியிருந்தால் இவ்வருமானம் வந்திருக்குமே என்ற கற்பனை அனுமானத்தின் மீது கணக்குப் போட்டு, கூறப்பட்ட ஒரு தகவல் அறிக்கையே தவிர, அது ஒன்றும் ஆராய்ந்து நீதிமன்றத்தாலோ, வேறு விசாரணை அமைப்புகளாலோ நிறுவப்பட்ட உண்மை அல்ல. தீர்ப்பு அல்ல! தி.மு.க. மீது - அதன் திறமைமிகு அமைச்சர்களில் ஒருவரான ஆ.இராசாமீது சேற்றை வாரி இறைத்து, குற்றமற்ற அவரை வெளியேறச் செய்து, அதன்மூலம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை முறித்து, பார்ப்பன ஜெயலலிதாவுக்கு வரும் தேர்தலில் புனர்வாழ்வு தந்து - ஊழல் வழக்குகளிலிருந்து கரையேற்றவேண்டும் என்பது பார்ப்பன ஊடகங்களின் பேராசை பதவிக் காய்ச்சல்! (பன்றிக் காய்ச்சலைவிட கொடுமையான பதவிக் காய்ச்சலுக்கு ஆளான பலர் - விபீடணர்களும் சேர்ந்து இன்று தலை துள்ளி குதிக்கின்றனர்).

பா.ஜ.க.வின் உள்கட்சிச் சண்டை!


கலகலத்துவரும் கட்சி - உள்கட்சி சண்டையில் நாளும் உளுத்துவரும் பா.ஜ.க., எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் எதை எதையோ நாளும் செய்து வருகின்றது. நாடாளுமன்றம் மக்களின் பிரதிநிதிச் சபை - ஜன நாயகத்தின் பாசறை - அங்குதான் எந்தப் பிரச்சினையும் விவாதித்துத் தீர்வு காணுவது மக்களாட்சியின் மாண்பு. அதை கடந்த 9 நாள்களாக நடத்தவிடாமல் முடக் கிடும், சண்டித்தனம் - சந்தைக் கூச்சல் போடுவது - கலைவது என்று - வாக்களித்தோர் வெட்கப்படும் நிலையில், கண்ட உருப்படி பலன் என்ன? யாரோ அரசியல் தரகர் போன்ற ஒருவர் ஒரு கடிதம் எழுதி ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரை பிராசிகியூட் செய்ய அனுமதி கேட்டால், உடனே அடுத்த தபாலில் பிரதமர் எக்ஸ்பிரஸ் பதில் எழுதி அனுப்பி விடுவாரா? ஏன் காலதாமதம் என்று கேட்பதே சரியான கேள்வியா? நியாயமானதா? இதன்மூலம் ஒரு சில ஆதிக்க சக்திகள் பிரதமரையும், அவரது நேர்மை, நாணயம்பற்றி கறைபடுத்துவதற்கு முயற்சித்து மூக்கறுபட்டுள்ளனர். மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அட்டர்னி ஜெனரல் - வாகனாவதி இப்படி ஒரு கடிதம் பிரதமருக்கு சு.சாமி எழுதியதே தவறு என்று ஓங்கி அடித்துவிட்டார் நீதிபதிகள் முன்பு - பிறகு பிரதமர்பற்றி பிரச்சினையே இதில் அடிபட்டுவிடவில்லையா? உண்மைகள் நிச்சயம் வெளிச்சத்திற்கு மெல்ல வந்து கொண்டுள்ளன.

பார்ப்பன சக்திகள்- முதலாளிகளின் கூட்டணி!

இதற்காகவே சில ஊடகங்கள், பார்ப்பன ஆதிக்கச் சக்திகள், ஏகபோகத்தை இழந்த முதலாளிகள், கூட்டணி சேர்ந்து தங்களிடம் உள்ள சில நாளேடுகள், வார ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்களை பிரச்சார கருவிகளாக்கி தி.மு.க. அமைச்சர் ஆ.இராசாமீது வேட்டையாடி நாளும் கடித்துக் குதறி வருகின்றன! அவரது ராஜினாமா பெற்றுவிட்ட பின்பு, நாடாளுமன் றத்திற்கு வந்து விவாதங்களில் கலந்து, தங்களிடம் உள்ள ஊழல் களஞ்சியங்களையெல்லாம் அவிழ்த்துக் கொட்டி விவாதிக்க வேண்டியதற்குப் பதிலாக, 8 நாள்களாக ஏன் விவாதம் நடத்த முன்வர பயப்படுகின்றனர்? சரக்கு இல்லை அவர்களிடம்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் இதுவரை ஏற்பட்ட பலன் என்ன?

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையில் உள்ள பொதுக்கணக்குக் குழு (PAC) விசாரணை என்பதையேகூட ஏற்க மறுத்து - இல்லாத ஊருக்குப் போகாத பாதையைக் காட்டுகின்றனர்! J.P.C. (Joint Parliamentary Commitee) விசாரணை ஏற்கெனவே நடைபெற்றதே - அதனால் ஏற்பட்ட பலன் என்ன? 1. போஃபர்ஸ் பீரங்கி வாங்கிய ஊழல் - 1987 ஆம் ஆண்டு 2. பங்குச் சந்தை ஊழல் - அர்ஷத் மேத்தா 1992 (ரூ.1000 கோடி ஊழல் - அனுமானம் அல்ல, நடந்தது) 3. பங்குச் சந்தை தரகர் கேதன் பராக் 1999 முதல் 2001 வரை 4. பூச்சி மருந்து கோக்கோகோலா ஊழல் - 2004 (ஜே.பி.சி. - விசாரணையால் எந்தத் தீர்வாவது கிடைத்ததா?) இவை எல்லாம் நடந்தவை. 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஊழலே அல்ல; அனுமான கற்பனை. இப்படி செய்திருந்தால், அப்படிக் கிடைத்திருக் குமே என்ற ஒரு புள்ளி விவரக் கணக்கு. இதனை வைத்துப் பாமரர்களை ஏமாற்ற ஒரு லட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் உலகிலேயே உண்டா என்ற முதலைக் கண் ணீர் வெள்ளம் என்று ஏமாற, மக்கள் எல்லாம் முட்டாள் களா? ஏமாளிகளா? பாமரர்கள் சரியாக இருக்கின்றனர் - படித்த தற்குறிகள்தான் குழப்பமடைந்துள்ளனர். தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான மனுவாதிகளின் மகத்தான சதித் திட்டமே இது!

பிரச்சாரப் படை திரளட்டும்!

இதனை மக்களிடம் தி.மு.க. உடனடியாகத் தெரு முனைப் பிரச்சாரம் தொடங்கி, சிற்றூர்கள், பேரூர்கள் வரை தி.மு.க. பிரச்சாரகர்களை விட்டு தீவிரமான பிரச்சாரத்தை உடனடியாக முடுக்கிவிடவேண்டும்; அதன்மூலம் அதன்மீது தூற்றப்படும் பழி - மலைபோல் வந்தாலும், பனிபோல் கரைய கால தாமதமின்றி உடனடியாக - முன்பு நீதிபதி ஜெயின் கமிஷன் தி.மு.க.மீது பழிபோட்டதை எதிர்த்து உண்மை விளக்கங்களை, கூட்டங்களை நாடு தழுவிய அளவில் நடத்தியதுபோல், தனது பிரச்சார யந்திரத்தை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என்பது நமது அன்பான, உரிமையுடன் கூடிய வேண்டுகோளாகும். இது நமது கருத்து மட்டும் அல்ல; தி.மு.க. ஆட்சியினர், நலம் விரும்பிகள், நடுநிலையாளர்களின் கருத்தும்கூட - பலர் நம்மிடம் தெரிவித்த கருத்தும்கூட!

எதிர்ப்புகள் தி.மு.க.வுக்குப் புதியனவா?

தி.மு.க. வரலாற்றில் எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கண்டிருக்கிறது! தி.மு.க.வைப் பிளந்து கட்சியை ஒழிக்க நினைத்தது உள்பட எத்தனையோ சோதனைகள் வந்தன! அவற்றை படிகட்டுகளாக்கி, சாதனைகளாக்கும் ஆற்றல் ஒப்பற்ற அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுக்கு உண்டு! எனவே, கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு இதனை எடுத்துச் சொல்லவேண்டும்! நாடாளுமன்றத்தினை திட்டமிட்டே 8 நாள்கள் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்க போதிய சரக்கு இல்லை. பதிலடி தருவதற்கு ஆளுங்கூட்டணி தயாராக இருக்கையில், அங்கே வரத் தயங்குவது ஏன்? மக்களிடம் சொல்லுவோம். இதுதான் ஜனநாயகக் கடமையா? அமைச்சர் ஆ.இராசா பெயர் எந்தக் குற்றப் பத்திரிகையிலாவது இருக்கிறதா? இருந்ததா? இருந்தும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் வழியிலும், பிரதமருக் குத் தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம் என்பதற் காகவே, செய்யாத குற்றத்திற்கு ஜென்மதண்டனையை அமைச்சர் இராசா ஏற்று, தி.மு.க. தனது கூட்டணி தர்மத் தைக் காத்தது என்பது மக்களுக்கு விளக்கப்படவேண்டும். வெறும் ஊடகங்களால் ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல தி.மு.க. - ஊர்மக்கள் ஆதரவால் வந்த இயக்கம்; வளர்ந்துவரும் மக்கள் இயக்கம் என்பதைக் கோடிட்டுக் காட்டவேண்டும். தி.மு.க. பயந்துவிட்டது என்று சில உளறுவாயர்கள் கூறுவதை - ஆப்பு அடித்து - நெருக்கடியை எதிர்த்து நின்ற இயக்கம் அது! பயமா? அதன் அகராதியிலா? 1971 மீண்டும் திரும்பும்! 2011 - மனுதர்மத்திற்கு மறு பிறவி அல்ல; 1971- வெற்றி வாகையை மீண்டும் சூடும் வீர வரலாற்றின் தொடர்ச்சி என்று காட்டவேண்டும் என்று மிகுந்த அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்! சிந்திப்பார்களாக!

தலைவர்,
 கி.வீரமணி
 திராவிடர் கழகம்.

Wednesday, November 17, 2010

மீண்டும் அமைச்சரவையில் ஆ.ராசா காங்கிரஸ் உறுதி -ராஜினாமாவின் நிஜ பின்னணி


எந்த நாடாளுமன்றத்தில் இந்தியாவின் பெருமை பற்றி ஒபாமா பேசிவிட்டுச் சென்றாரோ, அவர் சென்ற மறுநாளிலிருந்து அதே நாடாளுமன்றம் எதிர்க்கட்சியினரின் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

அதேசமயத்தில்தான், ஆ.ராசாவை பதவி நீக்குவதன் மூலம் மத்திய அரசுக்கு தி.மு.க. தன் ஆதரவை விலக்கிக்கொண்டால், காங்கிரஸை அ.தி.மு.க. ஆதரிக்கும். 18 எம்.பி.க்களின் ஆதரவை என்னால் பெற்றுத்தர முடியும் என ஜெ. பேட்டி கொடுத்து பரபரப்பைக் கிளப்பிப் பார்த்தார். இதன்பின், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் செய்தித் தொடர்பாளருமான திரிவேதி, ""தி.மு.க. வுடனான எங்கள் உறவு நீடிக்கிறது'' என்றவர், ""பதவி நீக்கம் பற்றிய கேள்விக்கு, அசோக்சவானும் கல்மாடி யும் காங்கிரஸ்காரர்கள் என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ராசா, தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால் அந்தக் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

வியாழனன்று மத்திய நிதியமைச் சர் பிரணாப்முகர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்தார். நாடாளு மன்றத்தை ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடக்கிப் போட்டிருப்பது பற்றி இருவரும் பேசினாலும், இந்தச் சந்திப்பின்போது ஆ.ராசாவின் ராஜினாமா பற்றிய கேள்வி எழவில்லை என்கின்றனர் உண்மை நிலவரம் அறிந்தவர்கள். திங்களன்று எதிர்க்கட்சியினரின் கேள்விகளை எதிர்கொள்வது, பா.ஜ.கவும் இடதுசாரிகளும் ஒரே அணியில் நிற்பதை எப்படி தவிர்க்கச் செய்வது என்பது போன்ற வியூக முறைகளே இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

மீடியாக்கள் பலவித வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தன. சோனியா சொல்லித்தான் ஜெ. அப்படியொரு பேட்டியே கொடுத்திருக்கிறார் என்கிற அளவுக்கு வதந்திகள் உச்சத்தை எட்டின. காங்கிரஸ் வட்டா ரத்தில் உண்மையாக என்ன நடக்கிறது என்பதை நேரில் விசாரித்து தெரிந்துகொள் ளும் பொறுப்பை டி.ஆர். பாலுவிடமும் கனிமொழி யிடமும் ஒப்படைத்தது தி.மு.க. தலைமை.

வெள்ளியன்று டெல்லியில் மீடியாக்களை சந்தித்த ஆ.ராசா, ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீடு சட்டப் படிதான் நடைபெற்றுள் ளது என்பதையும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நீதியின் முன் நிரூபிப்பேன் என்றும் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரி வித்தார். அன்று மாலையில் சென்னை திரும்பிய ராசா, சி.ஐ.டி காலனியில் கலைஞரை சந்தித்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் சட்டப்படி நடந்திருப்பது தொடர்பான விவரங்களை வரிசையாகத் தெரிவித்ததுடன், பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அதே நடைமுறைதான் இப்போதும் செயல்பட்டி ருக்கிறது என்பதையும் விளக்கினார். அத்துடன், "நான் பதவியில் நீடிப்பதால் நமது கூட்டணிக்கோ கட்சிக்கோ நெருக்கடி என்று தலைவர் கருதினால் இப்போதே ராஜினாமாவுக்குத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்ல, ராஜினாமா முடிவை நிராகரித்துவிட்டார் கலைஞர். ஆங்கில மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்த கலைஞர், ராசாவின் நிலையை முழுமையாக ஆதரித்தே பேசினார்.

சனிக்கிழமையன்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மீடியாக்களில் பரபரப்பான செய்தியாக வெளியிடப்பட்டது. காரணம், ஜி-20 மாநாடு முடித்துத் திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தற்போது வலுவாக இருப்பதாகச் சொன்னதோடு, ஜெயலலிதாவின் அழைப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், அதுபற்றி கட்சி மேலிடம்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் சொன்னார். மீடியாக்களிலும் தி.மு.க. வட்டாரத்திலும் இது விவாதத்தைக் கிளப்பியது. காங்கிரசை நம்பி தி.மு.க.வின் கூட்டணிப் பயணம் தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது பட்டேல் தரப்பிட மிருந்து மீடியாக்களுக்கு கசிந்த செய்தியில், பிரணாப் முகர்ஜி சென் னைக்கு வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது. டெல்லியின் உண்மை நிலவரம் என்ன என் பதை அறிந்துகொள் வதில் டி.ஆர்.பாலுவும் கனிமொழியும் தீவிர மாயினர். சென்னைக்கு பிரணாப் வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கப் படவில்லை என்பது அவர்களுக்குத் தெரிய வந்ததுடன், ராகுல் காந்தியின் ஆதரவாளர் களான மாணிக்தாக்கூர் போன்றவர்களும் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் போன்ற சீனியர்களும் கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம் என்ன நினைக்கிறது என்பதை இருவரிடமும் விளக்கியுள்ளனர்.

தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பது சோனியாவின் உறுதியான நிலை. பிரச்சினையில்லாத அலையன்ஸ் பார்ட்னராக தி.மு.க. இருப்பதை சோனியாவும் மூத்த தலைவர்களும் உணர்ந்துள்ளனர். ஜெ.வையும் அவர் பக்கம் இருக்கும் குமாரசாமியையும் நம்பி கூட்டணி அமைக்கமுடியாது. அவர்களின் டிமாண்ட் எக்கச்சக்கமாக இருக்கும் என்று தான் மேலிடம் நினைக்கிறது என தெரிவித் துள்ளனர். அதேநேரத்தில், ராசாவின் ராஜினாமா குறித்து தி.மு.க.வே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என காங்கிரஸ் நினைப்பதும் தி.மு.க. தரப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படியே அலைக்கற்றைகள் ஒதுக்கப் பட்டிருப்பதால் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்பதுதான் தி.மு.க. தலைமையின் முடிவாக இருந்தது.

நவம்பர் 14 ஞாயிறன்று தமிழக அமைச்சர் துரைமுருகன் சட்ட ஆலோசனை தொடர்பாக டெல்லிக்குக் கிளம்ப, ஏர்போர்ட்டிலேயே மீடியாக்களின் பரபரப்பு அதிகமாகிவிட்டது. விரைவாக பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிட்டார் அமைச்சர். நேரு பிறந்தநாளையொட்டி நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாடாளுமன்றத்திலேயே காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்தது. சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப்முகர்ஜி, அகமது பட்டேல் ஆகியோர் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்குவது பற்றி ஆலோசிக்கத் தொடங்கினர். 15 நிமிடங்கள் மட்டுமே இந்தக் கூட்டம் நடந்தது.

இப்போதைய நிலையில் நமக்கு வேறு வழியே இல்லை. ராசா பதவி விலகுவது ஒன்றுதான் எதிர்க்கட்சிகளை சமாளிக்கவும், நாடாளுமன்றத்தை நடத்தவும் உள்ள ஒரே வழி என்று சீனியர்கள் சொல்ல, அப்படியென்றால் இதை நமது கூட்டணியின் மூத்த தலைவரான கலைஞரின் மனம் புண்படாதபடி தெரிவிக்க வேண்டும் என்ற சோனியா, நாம் அவரை பிரஷர் பண்ணுவதாக நினைத்து விடக்கூடாது. ரொம்ப கவனம் என்று, தகவலைத் தெரிவிக்கும் பொறுப்பை பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைத்திருக்கிறார் சோனியா.

பழைய தலைமைச் செயலகத்தில் இருந்தார் முதல்வர் கலைஞர். ஆ.ராசாவும் உடனிருந்த நேரத்தில்தான் பிரணாப் முகர்ஜியிடமிருந்து போன். பார்லிமென்ட்டை நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் ராசா ராஜினாமா செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியலை. கேஸை சீக்கிரம் முடித்துவிட்டு, குற்றமற்றவர் என நிரூபித்து அவரே திரும்ப வும் அந்த இலாகாவை எடுத்துக்கொள்ளட் டும். அதுவரை பிரதமர் வசமேதான் ராசாவின் துறை இருக்கும் என்று பணிவான குரலில் பேசியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. ஸாரி.. தவறாக எடுத்துக்க வேண்டாம். வேறு வழியே தெரியலை என்று அவர் திரும்பத்திரும்பச் சொல்ல, இதை எதிர்பாராத கலைஞருக்கு ஷாக். ""டயம் கொடுங்க.. யோசித்து முடிவெடுத்துச் சொல்கிறேன்'' என்று பதில் சொன்ன கலைஞர், சி.ஐ.டி. காலனிக்குத் திரும்பி, டெல்லித் தகவல் பற்றி டி.ஆர்.பாலுவிடமும் ஆ.ராசாவிடமும் பேசுகிறார்.

அவர்கள் சென்றபிறகு, டெல்லியிலிருந்து மீண்டும் அதே குரலில் பிரணாப் முகர்ஜி பேச, கலைஞர் மூட் அவுட்டாகிவிட்டார். ராசாவை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்வதா தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் பதவிவிலகி, வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவளிப்பதா என்றெல்லாம் தி.மு.க. தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்பின், பிரதமருக்கு கலைஞரின் கடிதம் தயாரானது. நல்ல ஆங்கில நடையில் 2 பக்க அளவில் இருந்த அக்கடிதத்தில், 2004-ல் கூட்டணி அமைந்ததிலிருந்து இன்றுவரை அது வலுவாக இருப்பதையும், மத்திய அரசில் இணக்கமான கூட்டாளியாக தி.மு.க. செயல்பட்டு அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் அதில் குறிப்பிட்ட கலைஞர், ""ஆ.ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதுதான் தி.மு.க.வின் நிலை. கூட்டணி தர்மம் கருதியும் அரசுக்கு எங்களால் நெருடல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்தான் ராஜினாமா முடிவை எடுக்கிறோம். இதன்பிறகும் கூட்டணிக் கட்சியாக இணக்கத்துடன் இருப்போம். காங்கிரசும் அதேபோல் செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என அதில் தெரிவித்திருந்தார். இதேபோல ஒரு கடிதத்தை சோனியாவுக்கும் எழுதினார் கலைஞர்.

இந்தக் கடிதங்களுடன் ஞாயிறு மாலை 5.30 மணி ஜெட் விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார் கனி மொழி. 6.30 மணி விமானத்தில் டி.ஆர்.பாலுவும் ஆ.ராசாவும் புறப் பட்டனர். விமானநிலையத்தில் மீடியாக்கள் சூழ்ந்தபோது, ராஜினாமா செய்வதற்கான அவசியம் இல்லை என்றே தெரிவித்தார் ஆ.ராசா. டெல்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்த கனிமொழி, கலைஞரின் கடிதத்தைக் கொடுத் ததுடன், கலைஞரின் மன நிலையையும் விவரித்திருக் கிறார். பிரதமர் தனக்கு எதிர்க்கட்சிகளால் சூழ்ந் துள்ள நெருக்கடிகளை விவரிக்க, ராஜினாமா என்பது இறுதியானது.

சோனியாவிடமும் கலைஞரின் கடிதத்தைக் கொடுத்த கனிமொழி, டெல்லி வந்த ஆ.ராசாவிடம் நிலவரங்களைத் தெரிவித்து, ரிசைன் பண்ணும்படி தலைவர் சொல்கிறார் எனச் சொன்னதுடன், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவதுதான் என் கடமை. நான் தலைவரிடம் வெள்ளிக் கிழமையே சொல்லிவிட்டேனே.. என்ற ராசா, உடனடியாக பிரதமரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பிறகு மீடியாக்களிடம், ""அரசுக்கு நெருக்கடி உருவாகக்கூடாது என்று எங்கள் தலைவர் கலைஞர் எடுத்த முடிவினால் ராஜினாமாவை அளித்துள்ளேன். இதனால், என் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக ஆகாது. சட்டப்படிதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டுள்ளது'' என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்திச் சொன்னார்.

தன்னுடைய நியாயத்தை நிலைநாட்ட ஆ.ராசா மேற்கொண்ட உறுதியான போராட்டம் எதிர்பாராத முடிவை நோக்கிச் சென்ற அடுத்த விநாடியே, அவருக்குப் பதில் யார் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராவார் என்ற யூகங்கள் கிளம்ப ஆரம் பித்துவிட்டன. தயாநிதி மாறனுக்கு மீண்டும் அந்தப் பதவி தரப்படும் என்றும், கனிமொழிதான் அடுத்த அமைச்சர் என்றும் ஊடகங்களில் செய்தி பரவ, கனிமொழி உடனடியாக அதை மறுத்தார். ராசாவின் கேபினட் அந்தஸ்துக்குப் பதில் இரண்டு இணையமைச்சர்கள் பதவி தி.மு.க.வுக்கு வழங்கப்படும் என்றும் ராசா வுக்குப் பதிலாக தலித் இனத்தவரான ஏ.கே.எஸ். விஜய னுக்கு ஒரு பதவியும், டி.கே.எஸ்.இளங்கோவ னுக்கு ஒரு இணை யமைச்சர் பதவியும் கிடைக்கும் என்றும் யூகங் கள் பரவியபடி இருந்தன. அதேநேரத்தில், அழகிரி மகன் திருமணத்தை யொட்டி நடந்த நலங்கு விழாவிற்காக ரெயின்ட்ரீ நட்சத்திர ஓட்டலில் மாறன் சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்து வைபவத்தில் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.

சி.ஐ.டி. காலனியில் அப்செட்டாக இருந்த கலைஞர் அங்கே பேராசிரியர், ஆற்காட்டார், மு.க.ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்டோரை அழைத்து ராசாவின் ராஜினாமா குறித்த தனது மன அழுத்தத்தை வெளிப்படுத்தியதுடன், உடனடியாக அறிக்கையும் எழுதினார். (கலைஞர் அறிக்கை-பெட்டிச் செய்தியில்). ராசாவின் பதவி விலகல் அவரது சொந்த மாவட்டமான பெரம்பலூரில் கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியும் கவலையும் கொள்ள வைத்தது. சில தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டதுடன், ஒரு பஸ்ஸுக் கும் தீவைக்க முயன்றனர். ராசாவின் நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப் பாளையத்திலும் 2000 தொண்டர்
கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறுநாள் நாடாளுமன்றம் கூடியபோது, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. ராஜினாமா மட்டும் போதாது என்றதுடன், ஆதர்ஷ் வீடுகள்-காமன்வெல்த் விளையாட்டு- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு நட வடிக்கைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தினர். இதை காங்கிரஸ் நிராகரித்துவிட்டதால், அமளி தொடர்ந்தது. இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஆ.ராசா வகித்துவந்த தொலைத்தொடர்புத் துறையை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கியதால் அடுத்தகட்ட பரபரப்பு உருவானது. தி.மு.க.விடமே இத்துறை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாற்றம் குறித்து நம்மிடம் பேசிய ஆ.ராசா தரப்பினர், ""ராஜினாமா கடிதத்துடன் பிரதமரை ராசா சந்தித்தபோதே, இந்தத் துறையை கபில்சிபலிடம் ஒப்படைத்தால், சட்டவல்லுநரான அவரால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டப்படிதான் நடைபெற்றிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என்பதைத் தெரிவித்திருக்கிறார்'' என்றனர்.

டெல்லி காங்கிரஸ் தரப்பினரோ, ""ராசாவின் யோசனையைப் பரிசீலித்த பிரதமரும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில் சட்டரீதியாக வெற்றிபெறவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். கபில்சிபலிடம் இந்தத்துறை சென்றதன் பின்னணி இதுதான். 6 மாதத்தில் வழக்கு விசாரணை முடியும் வகையில் இதனை வேகப்படுத்தி, ஆதாரங் களை முன்வைத்து வெற்றி பெற்றபின், மீண்டும் ராசா இந்தத் துறைக்குப் பொறுப்பேற்பார். இது உறுதி என்பதுடன், ""டெலிகாம் துறைக்குப் பொறுப் பேற்ற யாரும் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்ததில்லை. ராசா எப்படியும் நிறை வேற்றிவிடுவார் என்று நினைத்திருந்தோம். இப்போது கபில்சிபல் வந்திருக்கிறார். மீண்டும் ராசா வருவார்'' என்கின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடித்த நிலைப்பாடு சரியானதுதான் என்பதில் உறுதியாக இருக்கும் ஆ.ராசாவை பதவி விலகச் செய்ததில் பல சதிவலைகள் இருப்பதை டெல்லி அரசியல் வட்டாரத்தினரும் உறுதி செய்கின்றனர். இந்த சதிவலைகள் பற்றி தொடர்ந்து எச்சரித்து வந்த தி.க. தலைவர் வீரமணி, ""கொள்கைப்பற்றுமிக்க ஆ.ராசா மாண்புமிகுவாக இருந்து மானமிகு ஆனதில் எங்களுக்குப் பெருமைதான். அதேநேரத்தில், அவருக்கு எதிராக சதிவலை பின்னி, தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டது யார் என்பதை விசாரிக்கவேண்டும்'' என அறிவித்த துடன், மானமிகுவாக சென்னை திரும்பும் ஆ.ராசாவுக்கு தி.க சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, விமானநிலையத்தில் ராசாவை வரவேற்க தி.க.வினரும், தி.மு.க.வினரும், திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்றுள்ளவர்களும் திரண்டனர். வி.பி.சிங்கிற்குப் பிறகு, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழகத்திற்கு வந்து பலத்த வரவேற்பைப் பெற்றிருப்பவர் ஆ.ராசாதான்.

-காமராஜ்
சகா
மூலம்:நக்கீரன் -17-11-2010

Sunday, November 14, 2010

குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிப்பேன் மத்திய அமைச்சர் ஆ. இராசா பேட்டி(தி ஹிந்து )

கேள்வி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, புதிய நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கியது, உரிம நிபந்தனைகளில் மாற்றம் செய்தது ஆகியவை காரணமாக அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று இந்திய உயர் தணிக்கை அதிகாரியின், தணிக்கை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது என்ற செய்தி கசிந்திருக்கிறது. இதனைப் பற்றி நீங்கள் விளக்கமுடியுமா?

ஆ.இராசா: எழுப் பப்பட்டுள்ள பிரச் சினைகளை இரு வகை களாகப் பிரிக்கலாம். முதலாவது, அரசாங் கத்துக்கு இழப்பு ஏற் பட்டதாகக் கூறப்படு வது. அடுத்தது நடை முறையில் தவறுகள் ஏற்பட்டது என்று கூறப்படுவது.
1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை மத்திய அமைச்சரவை யால் ஏற்றுக் கொள் ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடா ளுமன்றம் பின்னேற்பு வழங்கப்பட்டு உள் ளது. ஏலம் வழியான நடை முறையிலிருந்து(NTP 94) வருவாய் பங் கீடு நடைமுறைக்கு (NTP 99) மாறுவதற்கு இந்த கொள்கை அதி காரம் அளித்துள்ளது. கசிந்துள்ள தணிக்கை அறிக்கையில், ஏல நடை முறையைத்தான் நாம் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்றும், 3-ஜி ஏல வருவாயை கணக் கில் எடுத்துக் கொண்டு கற்பனையிலான வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட் டுள்ளது எனத் தெரி கிறது. எனவே, கற்பனை செய்து கொள்ளப்பட்டுள்ள இழப்பு என்பதை நிர்ணயிக்க எடுத்துக் கொண்ட அளவுகோலே சரியானது அல்ல.
நம் முன் உள்ள பிரச்சினை என்னவென் றால், ஒரு அரசமைப்புச் சட்டப்படி தன்னாட்சி பெற்ற அமைப்பான உயர் தணிக்கை அமைப் புக்கும், அரசமைப்புச் சட்டத்தின்படி தன் னாட்சி பெற்ற இதர அமைப்புகளான அரசாங்கம் மற்றும் நாடா ளுமன்றத்திற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுதான்.
அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் அரசமைப்புச் சட்டப் படி தன்னாட்சி பெற்ற இந்திய தொலைத் தொடர் புக் கட்டுப்பாடு அமைப்புபின் (TRAI) கருத்துடன் உயர் தணிக்கை அதிகாரி கருத்து வேறு பாடு கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. இவ்வாறு அமைப்புகள் தவறான வழிகளைப் பின்பற்றுவதை நீதித் துறையோ அல்லது நாடாளுமன்றமோ தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.

கேள்வி: இந்தக் கொள்கையால் அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க் கட்சிகள் கூறுவதற்கு என்ன பதில ளிக்கிறீர்கள்?

ஆ.இராசா : இந்து நாளிதழுக்கு நான் அளித்த எனது முந்தைய பேட்டியில் நான் விளக்கி யுள்ளபடி, இதில் உள்ள அடிப்படைக் கேள்வி என்னவென்றால், ஏன் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படவில்லை என்பது தான். மத்திய அமைச்சர வையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, நாடா ளுமன்றத்தால் பின் னேற்பு அளிக்கப்பட்ட 1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை யின்படி ஏலம் விட முடியாது. பத்தாம் அய்ந்தாண்டு திட்டம், பதினோராம் அய்ந் தாண்டு திட்டம் மற் றும் தொலைத் தொடர் புக் கட்டுப்பாட்டு அமைப் பின் (TRAI) பரிந்துரைகள் (NTP 99) கொள் கையை ஒட் டியே அமைந்துள்ளன. இந்த (NTP 99) கொள் கையில் ஏதேனும் மாற் றம் செய்யப்பட வேண் டும் என்றால் அது நாடாளுமன்றத்தி னால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
தற்போது நடை முறையில் உள்ள புதிய ஒருங்கிணைந்த சேவை அணுகுமுறை உரிமங் கள் மற்றும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழங் கும் கொள்கை 2003 நவம் பர் மாதத்திலிருந்து தொடர்ந்து பின்பற்றப் பட்டு வரும் வெளிப் படையான கொள்கை யாகும். 2003 அக்டோ பர் 31 அன்று அமைச் சரவை ஒப்புதல் அளித்த கொள்கையில் இருந்து எந்த பிறழலும் இல்லை. உரிமம் வழங்கல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதற்கான கட்டண நிர்ணயம் ஆகியவை பற்றி நிர்ண யிக்கப்பட்ட கொள் கையையே 2003 நவம் பர் முதல் இன்று வரை தொடர்ந்து வந்த அர சுகள் கடைப்பிடித்து வந்துள்ளன.
தொலைத் தொடர் புத் துறையின் வரி விதிப்பு மற்றும் கட்டுப் பாடு பற்றிய அரசின் தாராளமான கொள்கை, வருவாய் ஈட்டல் என் பதற்கு இரண்டாம் இடத்தையே அளித்து, முன்னேற்றம் என்பதற்கே முதலிடம் அளித்தே தொடர்ந்து இருந்து வந்துள்ளது, இருந்து வருகிறது. தொலைத் தொடர்பு இணைப்புகள் அடர்த்தியில் மிகப் பெரிய உயர்வை ஏற்படுத்தி, முன்பு எப் போதும் காணாத அளவிலான வளர்ச்சிக்கு வழி கோலியதால் இக்கொள்கைகள் மாற்றப் பட வில்லை. 2010 செப்டம்பர் நிலையில் கிராமப்புறங் களில் தொலைத் தொடர்பு இணைப்புகள் 28.46 விழுக்காடு அதிகமாகி உள்ளன. தொலைபேசி இணைப்பு அடர்த்தி நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறம் இரண்டுக்கும் சேர்த்து சராசரியாக 60.99 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. 11 ஆவது அய்ந்தாண்டு திட்டத்தின் இலக்கு 60 கோடி தொலை பேசிகள் என்று இருந்த போதும் இப்போது 72.3 கோடி இணைப்புகள் உள்ளன. மேலும், ஆண்டு உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டண வருவாய் அரசின் வரி இல்லாத மிகப் பெரிய வருவாய்த் தொகுப்பாகும். வருவாய் பங்கீடு முறையில், 2010 மார்ச் வரை அரசு 77,938 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 6.2 MHz யைக் கடந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இந்த வகையில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்று ஊகிக்கப் படும் தொகை 36, 729 கோடி. கூடுதலாக ஒரு விழுக்காடு வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில், (ஒப்பந்த உரிமைகளுக்கு அதிக மான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு எந்த வித முன்கட்டணமும் இன்றி), குறிப்பிட்ட அளவு தொலைத் தொடர்பு இணைப்புகள் எட்டப்படும் வரை, சேவை அளிக்கும் நிறுவனங்களின் கோரிக் கையின்படி, 6.2 MHz க்கு மேலாக MHz10 வரை ஒதுக்கீடு செய்யப்பட இடம் இருக்கும் வரை ஒதுக்கீடு செய்வது என்று 2002 ஜனவரி 31 அன்று அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் முடிவு எடுத்தார் என்பதற்கான விவரங்கள் எனது அமைச்சகத்தில் உள்ளன.
அடுத்த அமைச்சர் அருண் ஷோரி 6.2 விழுக் காட்டுக்கும் அதிகமாக 21 MHz-யையும், தயாநிதி மாறன MHz38.8-யையும் ஒதுக்கீடு செய்துள்ளனர். நான் 12.6 ஆழண-யை ஒதுக்கீடு செய்துள்ளேன். இவ்வாறு நான் ஒதுக்கீடு செய்யும்போது, 6.2 ஆழணக்கும் அதிகமாக ஒதுக்கப்படும் ஸ்பெக்ட்ரத் திற்கு அரசு அவ்வப்போது முடிவு செய்து விதிக்கும் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் நான் விதித்திருந்தேன். ஒப்பந்தத்திற்கு அதிகமான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படுவதால் இவ்வாறு கூடுதல் தொகை விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இவ்வாறு நான் கூறுவதால், எனது பொறுப்பை எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் மீது சுமத்து கிறேன் என்பது பொருளல்ல. 1999 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப் பட்டு வரும் நடைமுறையே இதுதான்.
இழப்பு என்று கற்பனை செய்து கூறுவதற்கு நியாயமான அடிப்படை ஏதுமில்லை; இது அறிவுக்குப் பொருத்தமான முறையில் கணக்கிடப் பட்டதும் இல்லை. ஊகத்தின் அடிப்படையில் இழப்பைக் கணக்கிடவே முடியாது. கொள்கை மற்றும் நடைமுறையில் (If) அப்படி இருந்தால், (But) ஆனால் என்ற சொற்களுக்கே இடமில்லை என்பதுதான் இதன் காரணம்.
இது பற்றிய விவாதம் நடத்தப்படுமானால், எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என்பது வெளிப்பட்டு விடும் என்பதால், அவை நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடை செய்கின்றன.
கேள்வி: ஆனால், அரசுக்கு நீங்கள் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறதே. ..
ஆ. இராசா : தொலைத் தொடர்புத் துறையில் இருந்த ஏகபோக ஆதிக்கத்தை நான் உடைத்து விட்டேன் என்பதால் என் மீது இத்தகைய வீண் பழிகள் சுமத்தப்படுகின்றன என்று நான் உறுதியாக நம்புவதற்கான காரணங்கள் உள்ளன. இதே கொள்கையின்படி ஏகபோக உரிமைகள் 1999 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு நான் அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு சில நாட்கள் முன்பு வரை நடைமுறையில் இருந்தன. ஆனால் வேறு எந்த அமைச்சர் மீதும் குறை கூறப்படவில்லை. 1998-99 ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையைப் பாருங்கள். தற்போதுள்ள உரிமங் கள் வழங்கும் நடைமுறையில் இருந்து வருவாய்ப் பங்கீடு நடை முறைக்கு மாறுவது பற்றிய அரசின் கொள்கையை அது கடுமையாக விமர்சித்துள்ளது. சில கடுமையான குற்றச் சாட்டுகளும் அதில் இருந்தன. ஆனால் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு உயர்தணிக்கை அதிகார அமைப்பு இது பற்றி மவுனம் சாதித்துள்ளது; தனது பிந்தைய ஆண்டு களின் அறிக்கைகளில் தொலைத் தொடர்பு அமைச் சகத்தை அது எந்தக் கேள்வியுமே கேட்கவில்லை. உரங்கள், பெட்ரோல், பொது விநியோகத் துறை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் ஆகியவற்றுக்காக அரசு அளிக்கும் மானியத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு, இந்த இழப்பு எப்படி கற்பனையானது என்பதை நான் விளக்குகிறேன். இப்பொருள்களுக்கான சந்தை விலையை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு, அரசு மிகக் குறைந்த விலையில் இவற்றை விற்றதால், அரசுக்கு இத்தனை ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று கூறினால், அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
சரியான, நியாயமான காரணத்துடன் உருவாக்கப் பட்ட கொள்கை ஒன்று உள்ளது. அவ்வப்போது முக்கியமான பிரச்சினைகளில் முடிவு எடுக்கும் அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பும் உள்ளது. NTP கட்டளைப்படி வருவாய்ப் பங்கீடு முறை ஒன்றே நம் முன் இருந்தது.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் சட்டம், மற்றும் நிதி அமைச்சகங்களின் அறிவுரைகளை நீங்கள் ஏன் அலட்சியப்படுத்தினீர்கள்? பிரதமரின் ஆலோசனையையும் நீங்கள் அலட்சியப்படுத் தினீர்கள் என்ற குற்றச்சாட்டும் உங்கள் மீது உள்ளது.

ஆ. இராசா: சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை அவர்களால் தானாக மேற்கொள்ளப்பட்டது அல்ல. குறிப்பிட்ட அளவு ஸ்பெக்ட்ரம் மட்டும் ஒதுக்கீடு செய்ய எஞ்சி இருக்கும் நிலையில், மிக அதிக அளவில் பெறப்பட்ட விண்ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றி ஆலோசனை கேட்டு எங்கள் அமைச்சகத்திலிருந்து சட்ட அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. எங்கள் குறிப்பிலேயே சில வழிமுறைகளை நாங்கள் ஆலோசனையாகத் தெரிவித்திருந்தோம்.
இதைப் பற்றிய கருத்தைத் தெரிவிப்பதற்கு மாறாக, இது அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்பப் பட வேண்டும் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்தது. சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை ஸ்பெக்ட்ரம் விலை நிர்யணம் செய்வது பற்றியதோ, அல்லது வருவாய் பங்கீடு அளவு பற்றியதோ அல்ல. ஒதுக்கீட்டுக்கு இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று தற்போது நடைமுறையில் உள்ள கொள்கையையே பின்பற்ற தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் விரும்பு கிறது என்ற விளக்கமும் பிரதமர் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2001 இல் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்ட ணம் மாற்றப்படவேண்டும் என்று நிதி அமைச்சகம் தொலைத் தொடர்புத் துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியது. நுழைவுக் கட்டணம் நிர்ண யிப்பது ட்ராய் அமைப்பின் அதிகார வரம்பின் கீழிருந்தது என்பது உண்மைதான். வருவாய்த் துறை அமைச்சகத்தின் பிரதிநிதி உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டபடியால், நுழைவுக் கட்டணம் மாற்றப்படத் தேவையில்லை என்ற உறுதியான, திட்டவட்டமான பரிந்துரையை 2007 இல் ட்ராய் அளித்த போது, தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் ட்ராய்யின் பரிந்துரைகள் பற்றி குறிப்பிட்டு நிதி அமைச்சகத்திற்கு பதில் ஒன்று எழுதினார். அத்துடன் இப்பிரச்சினை பற்றிய கடிதப் போக்குவரத்து முடிவுக்கு வந்தது.
இதே போன்று, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் தொலைபேசி சந்தாதாரர் அடிப்படைத் தத்துவம் பற்றி பெறப்பட்ட சில கடிதங்கள் பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தன. இது பற்றிய அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும், அவை மீது மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக் கைகள் பற்றியும் பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவற்றை பிரதமரும் ஏற்றுக் கொண்டார். ஒரு கேபினட் அமைச்சர் மற்ற கேபினட் அமைச்சகங்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்வதும், பிரத மருடன் கேபினட் அமைச்சர்கள் தொடர்பு வைத்துக் கொள்வதும் சாதாரணமான வழக்கம் தான். பிரதமருக்கும் எனக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தின் அடிப்படையில் மட்டுமே பிரத மரின் ஆலோசனையை நான் புறக்கணித்தேன் என்று ஊகித்து எவராலும் கூறமுடியாது.

கேள்வி: உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான இறுதி நாளை வேண்டுமென்றே நீங்கள் ஏன் மாற்றினீர்கள்?

ஆ.இராசா: முதலில் விண்ணப்பித்தவர் விண்ணப் பம் முதலில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை பின்பற்றப்படும் நிலையில், இறுதி நாள் என்பது பொருளற்றதாக ஆகிவிடுகிறது. உத்தேச மாக ஒதுக்கீடு செய்யப்பட இருக்கும் ஸ்பெக்ட்ரம் அளவு மற்றும் 2007 செப்டம்பர் 25 அன்று செய்திக்குறிப்பு வெளி யிடப்படும் வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப் பங்களும் பரிசீலிக்கப்பட்டன. இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், எவரது விண்ணப்ப மாவது கவனிக்கப்படாமல் இருந்ததா, முன்னுரிமை கடைபிடிக்கப்படவில்லையா என்பதுதான்.
எஞ்சியுள்ள விண்ணப்பங்கள் ஒதுக்கீடு செய்யப் பட உள்ள ஸ்பெக்ட்ரம் அளவுக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. எஞ்சிய விண்ணப் பங்கள் நிராகரிக்கப் பட்டன என்பது ஊடகத் துறையில் உள்ள சிலரின் தவறான கருத்தாகும்.

கேள்வி: குறி வைத்து நீங்கள் தாக்கப்படுவது ஏன் என்று கருதுகிறீர்கள்?

ஆ.இராசா: தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்களை விரும்பாத பெரும் எண்ணிக்கையிலா னவர்கள் ஒன்று சேர்ந்து எனக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். எடுத்துக் காட்டாக, நகர்வு எண் (Number Portability) முறையை எதிர்ப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். இது என்னை ஒழித்து விடும் என்று அறிவித்துள்ள என்னை எதிர்ப்பவர்கள் குழு ஒன்று உள்ளது. ஊடகத்தின் மீது அதிக பெரும் செல்வாக்கையும், அதிகாரத்தையும், செல்வத்தையும் அது பெற்றுள்ளது. இந்த நிகழ்வுகளை சில அரசியல் கட்சிகள் தி.மு.க.வுக்குக் களங்கம் கற்பிக்கப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் உண்மை என்ன வென்றால் மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்பதுதான். அரசாலும், என்னாலும் பின்பற்றப்பட்ட கொள்கை களும், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுமே இதற்கான காரணங்கள். கேள்வி: அளிக்கப்பட்ட 125 உரிமங்களில், 85 நிறுவனங்கள் தகுதிக்கான நிபந்தனைகளை நிறைவு செய்யாதது ஏன்?

ஆ.இராசா: மறுபடியும் இக்கருத்து அர்த்தமற்ற தாகும். அரசமைப்புச் சட்டம் 149 ஆவது பிரிவைத் தாண்டி உயர் தணிக்கை அதிகாரி எந்த அதி காரத்தையும் செலுத்தவோ, உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத் திற்கு மட்டுமே அரசமைப்புச் சட்டத்தின் 32 அல்ல 226 பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத் தவோ, முயற்சிக்க முடியாது. கம்பெனிகளின் பெயர் கள் மற்றும் அவற்றின் நிகர நிதி நிலைத் தகுதி பற்றிய விண்ணப்ப தேதியன்றைய விவரங்கள் கம்பெனி களின் பதிவாளரிடம் இருக்க வில்லை என்பதால், நோக்க மாறுதல் பற்றி தணிக்கை அறிக்கையில் தகுதி அற்றவை என்று தெரிவிக்கப் பட்டிருப்பது விளக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் தாங் களாகவே அளிக்கும் உறுதி மொழியை நாங்கள் நம்பியிருக்கிறோம். கம்பெனி களின் பதிவாளர் ஆவணங்களில் பதிவு செய்வது என்பது ஒரு நடைமுறை மட்டும்தான். முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கம்பெனி செயலாள ரால் சான்றளிக்கப்பட்டிருந்தால், பிந்தைய நாளில் ஒரு கம்பெனி பதிவு செய்யப்பட்டிருப்பதால், சட்டப் படி எந்தத் தவறும் இல்லை என்ற கருத்தை சட்ட அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.

கேள்வி: NTP 99 என்பது தவறான கொள்கை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

ஆ. இராசா: இல்லை. NTP 99 இன் கீழான கட்டளை உணர்வு மற்றும் எழுத்து பூர்வமாக இன்று நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஆட்சி அதிகாரம் செலுத்தும் அரசியல் கட்சி மாற்றம் அடைவ தால் மட்டும், அரசின் கொள்கைகளும் மாற்றம் செய்யப் பட வேண்டும் என்பதல்ல. NTP 99 தேசிய ஜனநாயகக் கூட்டணி (NTP) அரசால் உருவாக்கப் பட்டது. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அதனை உருவாக் கியது என்பதற்காக மட்டுமே அதை மாற்ற வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அப் போதைய அரசின் தொலை நோக்குப் பார்வை சரியானதுதான் என்ற எனது கருத்தை நான் நாடாளுமன்றத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

கேள்வி: உயர் தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கையின் உங்கள் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளதை அடுத்து என்ன நடக்கும்? நீங்கள் பதவி விலகுவீர்களா?

ஆ.இராசா: உயர் தணிக்கை அமைப்பை நான் மதிக் கிறேன். தணிக்கைக்கான அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம் பெற்ற அமைப்பு அது. ஒரு தனிப்பட்ட வரைத் தண்டிக்கும் அல்லது அரசின் கொள்கைகளின் மீது முடிவுகளை மேற்கொள்ளும் நீதித்துறை தீர்ப்பாக தணிக்கை அதிகாரியின் அறிக்கையை எடுத்துக் கொள்ள முடியாது.
மேலும், 2000 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 1998-99 ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையிலும் அரசுக்கு எதிராக இது போன்ற குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. பொதுக் கணக்குக் குழுவோ அல்லது நாடாளுமன்றமோ அந்தக் கொள்கையை மாற்றுவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. பொதுக் கணக்குக் குழுவின் நட வடிக்கைகள், ஆலோசனைகள் ஏதும் இல்லாத நிலையில், 2010 வரை உயர்தணிக்கை அமைப்பு எந்த விதக் குறைகளையும் காணவில்லை. இது பற்றி உயர் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் தரவேண்டும்.
பொதுவாழ்வில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாற்றிக் கொள்வதும், விளக்கங்கள் அளிப்பதும் சகஜமானவைதான். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியபடி, எவ்வளவு பெரியவர்களானாலும், சட்டத்தினும் மேலானவர்கள் எவருமில்லை; அடக்கமானவர்கள் எவரும் சட்டத்திற்குக் கீழான வர்களும் இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். ஒரு களங்கத்துடன் நான் செல்ல விரும்பவில்லை.
- நன்றி: தி ஹிந்து 14-11-2010
தமிழில் த.க.பாலகிருட்டிணன்.

Friday, November 12, 2010

இதற்கு பின்னால் உள்ள சக்தி எவை? சதி என்ன? அதுதான் இங்கே 'மில்லியன் டாலர் கேள்வி!-ஆ.ராசா

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஊடகங்கள் லாப நோக்குடன் திட்டமிட்டு சதி செய்கினன. அறியாமையுடன் நடந்து கொள்கின்றன என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உறுதிபட தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஆ.ராசா அளித்த பேட்டி:
 தலைவர் கலைஞரைத் தாண்டி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரத பிரதமர் ஒப்புதல் இன்றி இன்னோருவர் எனக்கு அமைச்சர் பதவியையோ குறிப்பிட்ட இலாக்காவையோ தர முடியும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரசியலில் - நிர்வாகத்தில் முட்டாள் அல்ல. எனவே, சில ஊடகங்கள் தங்கள் அறியாமைக்கு என்னை இரையாக்க வேண்டியதில்லை.
 
நீரா ராடியா டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான  பொதுத் தொடர்பு அலுவலர். அந்த வகையில் டாடா டெலிகம்யூனிகேசன் நிறுவனத்துக்காக நீரா ராடியா ஆப்ரேட்டர் கூட்டங்களிலும் இதர சந்திப்புகளிலும் கலந்துகொண்டுள்ளார்.என்னிடம் பல்வேறு சட்டப்படியான கோரிக்கைகளை கடந்த காலத்தில் வலியுறுத்தியுள்ளார்.

      ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.. ஒரு நிறுவனத்தின் தலைவரோ, அதிகாரியோ என்னை துறை சர்பாக சந்திக்கிறார் என்பதற்காக அவர் துறைக்கு வெளியேயும் மற்ற இடங்களிலும் செய்கிற அல்லது ஈடுபடுகிற காரியங்களுக்கு எல்லாம் என்னை சம்பந்தப்படுத்திப் பேசுவது முறையல்ல. என்னோடு ஒரு விருந்தில் ஒருவர் கலந்து கொண்டு படம் பிடித்துக்கொண்டார் என்பதற்காக அவர் செய்யும் ஏனைய காரியங்களுக்கு நானே பொறுப்பு எனபதுபோல் செய்தி வெளியிட முயற்சிப்பது பத்திரிக்கை தர்மமல்ல என்பதை பத்திரிக்கை துறையிலே இருப்பவர்கள் உணரவேண்டும்.

      நீரா ராடியா என்ன பேசியிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் எந்த ஒரு விதிமுறையும் யாரோ ஒரு தனி நபரால் மாற்றக்கூடிய அளவுக்கு அரசாங்கம் பலகீனமானதல்ல... நானும் சட்டம் படிக்காதவனல்ல!


      என்னுடைய துறையின் பணி எனபது உரிமங்கள் மற்றும் அவைகளுக்கான அலைவரிசை ஒதுக்கீடு மட்டுமே. உரிமங்கள் வழங்கிய பிறகு ஒரு நிறுவனம் கொண்டுவரும் அன்னிய முதலீடு பற்றி நாங்கள் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது நிதி மற்றும் உள்துரை அமைச்சகங்களின் பணிதான்.

    இரண்டு துறைகளுக்கு இடையே நடக்கும் ரகசியக் கடிதப் போக்குவரத்துகள் மீடியாக்களில் வெளிவருகிறது.. இதன் பின்னணியில் எந்த சக்தி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
      நான் பலமுறை எழுப்பும் கேள்விதான் இங்கும்... இந்தத் துறையில் நான் மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன்... குற்றம் சாட்டப்படுகின்றேன்.? புதிதாக நான் ஏதாவது சட்டம் கொண்டு வந்தேனா? அல்லது இருக்கிற சட்டத்தை தூக்கியெறிந்து விட்டேனா? இல்லையே! ஸ்பெக்ட்ரம் அலைவரிசை இருப்பை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்து வைத்துவிட்டு ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா போன்ற ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து தொலைபேசி சேவை வழங்கினால் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையும் உயராது. மக்கள் அளிக்கவேண்டிய கட்டணமும் குறையாது. அதனால் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கையை பிடிவாதமாக இருந்து நிறைவேற்றினேன். கால் நூற்றாண்டு காலமாக தங்கள் கையில் மட்டுமே இருந்த தொழில், இன்னும் சிலபேருக்கு கை மாறுகிறது என்ற கோபத்தில் - ஒரு வர்த்தக கூட்டு உடைக்கப்படுகிறது என்ற எரிச்சலில் சிலர் இருந்திருக்கலாம். இது இயற்கையான, சராசரி வியாபார உணர்ச்சிதான் அதன் விளைவுகளையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

பிரதமர் இதுகுறித்து நன்றாகவே அறிவார். இந்த முயற்சியில் நான் இறங்காமல் இருந்திருந்தால் எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி வந்தபோது, நான் தேங்கிக் கிடக்கும் சாக்கடையாக இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை. நீரோட்டத்தில்தான் மின்சாரம் வெளிப்படும். என்று குறிப்பிட்டு இருக்கிறேன். அது மட்டுமல்ல இந்தத் துறையில் எவ்வளவு அலைவரிசை கையிறுப்பு இருக்கிறது என்று முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்ட இந்தக் துறையின் ஒரே அமைச்சர் நான்தான் என்பதையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இவையெல்லாம் சிலருக்கு தொழில்ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்... அதன் காரணமாகவும் நான் குறி வைக்கப்படுகின்றேன்.

      2ஜி என்பது பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசிபோல! பொதுவிநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது. என்பதற்காக பாசுமதி அரிசியை ஒப்பிடு காட்டி ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2ஜி சேவை எனபது சதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் சேவை. 3ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்க்கும், விடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம் விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர 3ஜி அல்ல! இன்னுமொரு 10,20 ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்பதாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுக்குப் பிறகு 3ஜி சேவை கூட எளிதாக்கப்படலாம்; பட வேண்டும். அப்போது 4ஜி சேவையும் வந்துவிடும். இது குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும் இப்போதைய ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.

      கம்பெனியின் பங்குகள் யார் யாருக்கு சொந்தம் என்பதை இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம். தகவல் உரிமைச் சட்டத்தினாலும் தெரிந்து கொள்ளலாம்.

  மீடியா ஸ்பெக்ட்ராம் விவகாரம் குறித்து விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?

      ஊடகங்களுக்கு இவ்விஷயத்தில் எந்த சார்புத்தன்மையும் இல்லை என்று சொன்னால் பாமர மனிதன் கூட ஏற்றுக் கொள்ளமாட்டான். காரணம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், மீடியாக்கள் மூலமாக விளம்பரத்திற்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 2,000 கோடி வரை செலவு செய்கின்றன. இந்த விளம்பர வருமானத்தை எந்த பத்திரிக்கையோ சேனலோ இழக்க முன்வருமா? எனவே, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பல நேரங்களில் நியாயமாக செயல்படவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. நான் இந்த துறைக்கு பொறுப்பேற்றவுடன் என்னென்ன மாறுதல் அடைந்துள்ளது என்பதைப் பற்றி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் எழுதுவதில்லை. தொலைபேசி இணைப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல்... கட்டணம் குறைந்துள்ளது. நாட்டில் எல்லா பொருளும் விலை ஏற்றத்தில் உள்ளன,. ஆனால், தொலைபேசிக் கட்டணம் மட்டுமே குறைந்து கொண்டே இருக்கிறது. மேலும் பல வசதிகள் கிடைக்கவுள்ளது. உள்ளூர் அழைப்பு 10 பைசாவுக்கும், அகில இந்தியக் கட்டணம் 25 பைசாவுக்கும் விரைவில் வரவுள்ளது. இப்படியிருக்க ஸ்பெக்ட்ரம் குறித்து ஒரு ஆங்கில பொருளாதார நாளேட்டில் ”இராஜாவின் அவமானம்” என்று எழுதினார்கள். நான் சொல்கிறேன்... “It is my pride’’. ஆம், இது எனது பெருமை! நல்ல விஷயங்களைப் பாராட்டவிட்டாலும் போகிறது... உண்மையை இவர்கள் பேச மறுப்பது ஏன்? அதற்கு பின்னால் உள்ள சக்தி எவை? சதி என்ன? அதுதான் இங்கே `மில்லியன் டாலர்` கேள்வி! 

http://www.tamizhankural.com/ Monday, 31 May 2010 05:02

ஸ்பெக்ட்ரம் பற்றி மேலும்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு: முறைகேடு நடைபெறவில்லை உச்சநீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல்

Thursday, November 11, 2010

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை முறிய வைக்க மத்திய அமைச்சர் இராசா குறி வைக்கப்படுகிறார்--திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை முறிய வைக்க மத்திய அமைச்சர் இராசா குறி வைக்கப்படுகிறார்!

நீதிமன்றம், அமைச்சரை குற்றவாளி என்று கூறிவிட்டதா?
ஏகபோகக் கொள்ளையர்களின் பின்னணியில் ஊடகங்களை ஏவிவிடும் சூழ்ச்சி!

1971 தேர்தல்போல 2011 தேர்தலும்
தி.மு.க.வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தமிழர் தலைவர் அறிக்கை

மத்திய அமைச்சர் ஆ. இராசா அவர்களைப் பதவியிலிருந்து வெளியேற்றிட நடைபெறும் சூழ்ச்சிகளைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பதவி விலக வைத்து, அதன்மூலம் தி.மு.க.விற்குப் பழியை - களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது, வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சியினருக்கு அவலாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும்.

இதில் உள்ள முக்கிய காரணம் - உயர்ஜாதி ஆதிக்கவாதிகளான அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொலைக்காட்சியினருக்கு மத்திய அமைச்சர் ஆ. இராசா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதேயாகும்.

தி.மு.க.வை - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற்ற சதி


இரண்டாவது, தி.மு.க.வை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எப்படியாவது வெளியேற்றிவிட இதுவரை செய்த முயற்சிகள் - காங்கிரஸ் தலைமை, தி.மு.க.வின் நம்பகத்தன்மை, நாணயம் மிக்க நட்புறவு இவற்றை மதித்து - பலிக்க இடந்தராமல், தொடர்ந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க.வும், காங்கிரசும் நல்ல நட்புறவுடன் இருக்கும் என்று புரிய வைத்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் கூட்டுச் சேர தனது பல்லவி, அனுபல்லவி எல்லாம் முடிந்து சரணம் பாடியும் அ.தி.மு.க.விற்கு அழைப்பு வராது போலுள்ளதே என்று கருதிய ஜெயலலிதா, இப்படி இதை சாக்காக பிடித்துக்கொண்டு, ஊழலை ஒழிக்க திடீரென பரசுராம அவதாரியாக ஆர்ப்பரிக்கிறார்!
மற்ற அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் - தலைமையில் உள்ள கூட்டணியில் ஒரு களங்கத்தை ஏற்படுத்த இதுதான் சமயம் என்று கருதி, குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து மீண்டும் மீண்டும் ஒப்பாரி வைத்து அழுது நாடகம் ஆடுகின்றனர்.

நரியார்கள் - நாரியர்கள் வேலை


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே முன்வைத்துப் பிரச்சாரமும் செய்து - தோல்வி கண்ட ஓராண்டுக்குப் பிறகு, ஏன் திடீரென இராசாவின் பதவி ரத்தம் குடிக்க இந்த நரியார்கள் - நாரியர்கள் துடிக்கிறார்கள்?
மத்திய அமைச்சர் இராசா இதில் தனியே சொந்தமாக முடிவு எடுத்தாரா? எடுக்கத்தான் இயலுமா?

மத்திய அமைச்சர் இராசாவின் விளக்கம்


டிராய் என்ற தொலைத்தொடர்பு அமைப்புதானே இதனை முடிவு செய்தது - பிரதமர் ஒப்புதலுடன்தானே இத்தகைய நடவடிக்கைகள் நடந்துள்ளன?
இவற்றை நாடாளுமன்ற மக்களவையிலே அமைச்சர் இராசா மிகத் தெளிவாக, ஆணித்தரமாக விளக்கினாரே, அதை மறுக்க முடியுமா?
மராத்தியத்தில் ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என்றால், அது மத்திய நிதி அமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல இரு மாநிலங்கள் பிரச்சினை (மகாராஷ்டிரா, டில்லி) அதனைக் காங் கிரஸ் கட்சி ஆதாரபூர்வ மாகத் தெரிந்து அந்த முடிவை எடுத்தது அவர் களது உரிமை. கமிட்டி சொன்னதை வைத்து நடவடிக்கை.
ஆனால், இங்கே அமைச்சர் இராசா செய்யாத குற்றத்திற்காக ஜென்ம தண்டனை என்பதுபோல இப்போது ஏன் பதவி விலகவேண்டும் - அவர் வேறு இலாகாவிற்கு ஏன் செல்ல வேண்டும்?

குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதா?

சி.பி.அய். வழக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளரா? குற்றம்சாற்றி நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பு வந்துள்ளதா?
ஆடிட்டர் - ஜெனரல் (GAG) அறிக்கைகூட அதிகார பூர்வமாக இன்னமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லையே? குடியரசுத் தலைவரிடம் சமர்ப் பிக்கப்பட்டது என்பதிலிருந்து காகிதப் புலிகளின் ரத்த வேட்டைதானே இப்படி ஆவேசங் காட்டச் செய்கிறது?
இதே இராசா 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல கோடி ரூபாய்கள் அதிகம் விட்டு, மத்திய அரசின் கருவூலத்திற்கு 66,980 ஆயிரம் கோடி ரூபாய் பெரு வருவாய் தந்தாரே - அதற்கு சிறு பாராட்டினை இவர்கள் யாரும் தெரிவித்தார்களா?
மத்திய அமைச்சரவை என்பது பிரதமரின் தலைமையில் கூட்டுப் பொறுப்பு(Collective Responsibility) உள்ள ஒன்று அல்லவா? இதில் தனியாக ஒருவரை பலிகடாவாக்க முயற்சிப்பது எந்த வகையில் ஜனநாயகம் - அமைச்சரவையின் அறம் ஆகும்?

ஊழலுக்கு அப்பாற்பட்டவரா ஜெயலலிதா?


ஜெயலலிதாவின் வழக்குகள் - ஊழல்கள் பலவும் மக்கள் மன்றம் அறிந்ததே! வெளிநாட்டிலிருந்து யாரோ அனுப்பிய நன்கொடையை தன் கணக்கில் வரவு வைத்தாரே - அளவுக்கு அதிகமான சொத்து சேர்ப்பு, டான்சி வழக்கில் நிலத்தை திருப்பித் தந்து வெளியே வந்தது எல்லாம் மக்களுக்கு மறந்துவிடுமா?
இராசாவை பதவி விலகல் கூச்சலில் பல உள்நோக்கங்கள் பலருக்கு!
இது பந்தலிலே பாவக்காய் என்ற ஒப்பாரி வைத்து அழுத பெண்கள் கதைபோல...
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு உள்நோக்கம்!

பின்னணியில் ஏகபோகக் கொள்ளையர்கள்


இதில் மற்றொரு முக்கிய பின்னணி - முன்பு ஏகபோகமாக அனுபவித்த கொள்ளையைத் தடுத்து, லாபக் குபேரர்களின் ஏகபோகமில்லாது - பலருக்கும் பிரித்தளிக்க பிரதமர் ஒப்புதல் முதற்கொண்டு பெற்று, அரசு கருவூலத்திற்கு ஏராள வருவாய் வரும்படி செய்த இராசாவின்மீது ரவுத்திரம் - கோபாக்கினி ஊடகங் களை ஏவிவிடுகின்றனர்!

2011 இல் புரிய வைக்கப்படும்!


தமிழ்நாட்டில் மீண்டும் 1971 தேர்தல் முடிவுகள் அபரிமிதமாக தி.மு.க.வுக்குக் கிடைத்ததே - அதுபோல இராசாபற்றி ஓங்காரக் கூச்சல் நிச்சயம் வெற்றிப் பாதைக்கு தி.மு.க.வை அழைத்துச் செல்லும் என்பது 2011 இல் புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். புரியாவிட்டால் புரிய வைப்போம்!



தலைவர்,
                                                                                                                                திராவிடர் கழகம்.
http://www.viduthalai.periyar.org.in/20101111/news02.html

weather counter Site Meter