Pages

Search This Blog

Showing posts with label பார்ப்பான். Show all posts
Showing posts with label பார்ப்பான். Show all posts

Saturday, October 9, 2010

இந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள் பிரபாகரன்

இந்து தீவிரவாதம் என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பு-களில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை 19, 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்-டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடு-கிறோம்.
2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்-தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதி-களின் செயல் என்று வழக்கை விசா-ரித்துவந்த காவல்துறையும், ஊடகங்-களும் பிரச்சாரம் செய்துவந்தன. முஸ்லிம்களின் புனிதத்தலமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்க-ளுக்கு எழலாம். ஆனால், இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை. தேவேந்திர குப்தா கைது-செய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைகாட்டும் வரை, சந்தேகத்தின் கண்கள் அனைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளா-னார்கள். ஆனால் இப்போது இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்புப் படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.
2007ஆம் ஆண்டு மே மாதம் அய்த ராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி- இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJi) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று அய்தராபாத் காவல்துறை அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டா-யப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள-வைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்-படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஅய் கைது செய்தது.
அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்-படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்-போனும் சிம் கார்டும் கொண்டு இயக்-கப்பட்ட அதேவகையான வெடிகுண்டு-தான் அய்தராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்-பட்டிருப்பதை சி.பி.அய் கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்பு-முனை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்-பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அஸ்வனி குமார் என்ற சி.பி.அய் இயக்குநர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்ப-தாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.அய். கண்டுபிடிக்-கும்வரை அய்தராபாத் காவல் துறையின்கட்டுக்கதையே தொடர்ந்தது.
அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்-செய்-துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே, ஜெர்மன் பேக்கரி குண்டு-வெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள்மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்பு-களை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்-பட்டனர். சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்-பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஷ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்புப் படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால், அப்துல் சமது மீது இந்த குண்டு-வெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்-சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஷ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மாலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது; கை-காட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைத்-தான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும். அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன. 2002 _-03வாக்கில் போபால் இரயில் நிலையத்-தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடி-குண்டுகள் தொடர்பாக இராம்நாராயண் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள்மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து-விட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்-டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதை-வைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடி-குண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டி-னார்.
2006ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடி-விபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஷ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில் சிறிய குண்டு-வெடிப்புகள் நடந்துள்ளன. நண்-டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்-காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-- _ ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்த-போது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்க-லாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.
கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவண்ணம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படாமலேயே இருக்கின்றன என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.

மெக்கா மசூதி, மாலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசார-ணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.அய் இப்போதுதான் ஆலோசித்து வருகிறது .

2008 செப்டம்பர் 29இல் மாலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்-பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்-தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்க-வைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்-டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் சிறீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உள்பட 13 பேர் கைது-செய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்த-போது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்-கும் ஆர்.டி.-எக்ஸ் வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்-ளான். அய்தராபாத் காவல்துறை ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-- இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்ட-தனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும், மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும். 4,528 பக்கங்களை கொண்ட மாலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகை-யில் அபிநவ் பாரத் அமைப்பின் பிர-மாண்டமான முழுவடிவமும் அத-னோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இந்து புனிதத்-தலங்களில் நடந்த குண்டுவெடிப்பு-களுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்றும் தனி இந்து தேசத்தை உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும், மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005--_06 ஆண்டு வாக்கில் புனேவில் தற்-போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, தனி இந்து தேசம் அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினை-வாக மாலேகானில் ஒரு இடத்திற்கு கர்கரே சந்திப்பு என்று பெயரிட்டுள்-ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலே-கானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்-பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மாலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்-திருக்கவில்லை. ஆனால் காவல் துறை யால் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்-டி-ருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப் பதற்கு ஒரு மாதம் முன்புவரை காவல் துறை காவலில்-தான் இருந்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்-தான் தீவிரவாத ஒழிப்புப் படை நம்பு-கிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்-படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மாலேகான் குண்டுவெடிப்பை நடத்திய-தாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS 68 பாகிஸ்தானியர்கள் கொலை-செய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியி-டப்படாத சாட்சி ஒருவர் புரோகித்-துடன் நடத்திய தொலைபேசி உரை-யாடலை ஆதாரமாகக் காட்டுகிறது .

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயண் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உள்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சி-கரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஷ்ட்ரா, இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைது-செய்யப் பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் _ கல்சங்கரா என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது. அஜ்மீர், மெக்கா மசூதி, மாலேகான், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் மற்றும் பல குண்டுவெடிப்பு-களும் ஒரு பெரிய சதித் திட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்தச் சம்பவங்களை-யெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஅய் வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.
(Source: Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, Published in ‘The Outlook’, a weekly news magazine, dated july 19,2010).
http://www.outlookindia.com/ariticle.aspx?266145

http://www.viduthalai.periyar.org.in/20101009/snews03.html

Sunday, September 26, 2010

பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டதா?-கவிஞர் கலி பூங்குன்றன்


கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...?
பதில்: பிராமணர்கள் உயர்ஜாதி-யினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்-டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்-துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!
(கல்கி 19.9.2010 பக்கம் 30)
_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:
Ignored by Political Parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ ஆத்திரத்-தோடோதான் அய்யர்வாளின் வாயிலி-ருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.
மனிதர்களாக இருப்பவர்கள் தேவையானவர்களே! பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - _ இன்றைக்கும் ஒவ்-வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவு-படுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.

ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எவனாவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கிறாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்-ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்-களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயி-லாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாட-கைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்-பட்டுள்ளது.

மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்-பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்-பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்-வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்-களைப் பிய்த்துத் தின்பது உண்மை-யெனின், சகலவிதமான கூலி வேலை-களையும் செய்ய வேண்டியதுதானே?
தந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கி-றார்களா? களை எடுக்கிறார்களா? ரிக்ஷா இழுக்கிறார்களா? துணி வெளுக்கி-றார்களா? சவரத் தொழில் செய்கி-றார்களா? ஏன் இவற்றைச் செய்வ-தில்லை? வறுமையிலும் வருணா-சிரமம் இருப்பது ஏன்? அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பு-கிறார்கள். அவர்களின் சதவிகி-தமான மூன்று சதவிகிதம் கிடைக்க-வில்லை என்று கூற வருகிறார்களா? அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்-ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -_ அந்த நிலை பறி போய்-விட்டது என்று பதறுகி-றார்களா? என்பதைத் தெரிந்து கொள்-ளவே நமக்கு ஆசை.


2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்-வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்-கள் யார்?


பி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமி-பிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்-நாட்டில் அரசின் தலைமைச் செய-லாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே! இதேபோல தாழ்த்தப்-பட்டவர்களோ, பிற்படுத்தப்-பட்டவர்-களோ, மிகவும் பிற்படுத்தப்-பட்டவர்-களோ தொடர்ந்து தலைமைச் செய-லாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா?

பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா?


மத்திய அரசு துறைகளில் தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! -_ சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.


அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறை-களும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே?இந்த நிறுவனங்களுக்கு பணிய-மர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள்? முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்-பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா? எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து (ஷிக்ஷீஸ்மீஹ்)ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்-தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே!
தந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.
அவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.இதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே!எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்-கூடாது, அவன் ஏழையாகவே இருக்க-வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்-லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.
ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்-பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

(குடிஅரசு 9.11.1946)
பார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்-படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் -_ நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்?

ஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவா-ளர் சோ ராமசாமி? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்று துக்ளக் தலை-யங்கம் தீட்டுகிறதே! (துக்ளக் 18.11.1998)

தமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடி-யுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதி-னாரே! அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார்? பார்ப்பனர்கள் தமிழ்-நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்ப-வில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே!

எவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்-பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.


பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்-விட்டது என்று கல்கி பதில் சொல்-கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்-பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா? (டிசம்பர் 2005)
அந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்? அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா?
2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்-முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்று ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே -_ மறந்து விட்டீர்களா?
தமிழன் என்று சொல்லடா! தலை-நிமிர்ந்து நில்லடா - _ அது ஒரு சுலோகம்.
பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே _ இதுதான் பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா?
பொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது?
பார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன?
நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).
அய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகி-விட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா?

தமிழ் செம்மொழி ஆனால், வீட்-டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்-டாக அரசு அறிவிக்க முடியாது _ அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.


இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது _ பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்-கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டி-ருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்-லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்-ளார் _ இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது -_ வேகவே வேகாது!

weather counter Site Meter