இன்று (4.11.2010, வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்கள் அழைப்பின் பேரில், தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் முதல்வரைச் சந்தித்தார். பிரம்மாண்டமான முறையில், மிகச் சிறப்புடன் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், தமிழ்நாடு சட்டப்பேரவை, மேலவை ஆகியவை அமைந்துள்ள எழில் கொஞ்சும் கட்டடம், அமைச்சரவை கூடும் அறை, முதலமைச்சர் அறை முதலிய பலவற்றையும், முதல்வருடன் சுற்றிப் பார்த்தார் கழகத் தலைவர்.
முதல்வரின் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வியக்கத்தக்க சாதனைக்காக மிகவும் பாராட்டி நன்றி தெரிவித்து, அவருக்குப் பொன்னாடை போர்த்தி, சிறிது நேரம் உரையாடி திரும்பினார்.
உடன் மாண்புமிகு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் இருந்தனர்.http://www.viduthalai.periyar.org.in/20101104/news04.html
Search This Blog
Showing posts with label தமிழர் தலைவர் கி.வீரமணி. Show all posts
Showing posts with label தமிழர் தலைவர் கி.வீரமணி. Show all posts
Thursday, November 4, 2010
Subscribe to:
Posts (Atom)

