Pages

Search This Blog

Showing posts with label திராவிடர். Show all posts
Showing posts with label திராவிடர். Show all posts

Sunday, August 4, 2013

திராவிடர்களும் இந்து மதத் தோற்றமும் - பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.,

திராவிடர்கள், சிறப்பான செயல் களை செய்து இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தினார்கள். இந்த திராவிடர்களுக்கு இந்திய சட்ட அமைப்பில் அங்கீகாரம் உள்ளனவா? திராவிடர்கள் தொன்மையானவர்களா? அல்லது இந்து மதம் தொன்மை யானதா? என்பது இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகின்றது.
இந்து மதம் பற்றி இந்துக்கள்:
இந்தியத் தகவல் அறியும் சட்டத்தின் படி இந்து மதம் எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது? என்று கேட்டால் பதில் சொல்ல தலைமை பீடம் எதுவும் இல்லை. இருந்த போதி லும் இந்துக்கள் ஏற்றுக் கொண்ட தலைவர்களில், சுவாமி விவேகானந் தரும் சுதந்திர போர் வீரரும் ஆன்மீக வாதியுமான பாலகங்காதர திலகரும் கூறியுள்ள தகவல்கள் கீழே தரப்பட் டுள்ளன.
1.    ஆரியர்கள் சிறுசிறு கூட்டங் களாக  இந்தியாவிற்குள் நுழைந் தார்கள். நாளடைவில் இந்தக்  கூட்டங் கள் பெருகி, இறுதியில் அவர்கள் இந்தியாவின் எதிர்ப்பற்ற ஆட்சியாளர் கள் ஆயினர். பின்னர் வந்தது இந்தப் பெரும் போர். ஒரு குடும்பத்தின் இரு கிளையினரிடையே  அதுதான் மகா பாரதப்போர்'.
(ஆதாரம்: கலிபோர்னியாவில் விவேகானந்தர் 01.02.1900 அன்று நிகழ்த்திய உரை)
2.    ஆங்கிலேய அரசால் சிறையில் வாடிய திலகர் பேராசிரியர் மேக்ஸ் முல்லரிடமிருந்து ரிக் வேதம்' என்ற நூலைப் பெற்றார். ரிக்வேதத்தின் மூல நூலான அவெஸ்தன் மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படித்தார். நிலவியல் (Geology) மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி (Archaeology)க் குறிப்புகளைப் படித்தார். இறுதியில் 1903இல் வேதங்களின்  துருவப்பிரதேச பிறப்பிடம் (Arctic Home in the Vedas) என்ற நூலை வெளியிட்டார். இதன்படி ஆரியர்கள் ஆர்க்டிக் பிரதேசத்திலி ருந்து பாரசீகம் வழியாக இந்தியாவிற் குள் வந்தார்கள் எனவும், ஆரியர்களின் மூதாதையினர் ஆன ரிஷிகள் பனிப் பிரதேசத்தை பிறப்பிடம் ஆகக் கொண் டவர்கள் எனவும் தெரிந்து கொள்ள லாம். இந்த ஆரியர்கள் இயற்றிய வேதங்களின் அடிப்படையில் ஆரியர் களின் மதத் கொள்கைகளே வேதமத மாக அழைக்கப்பட்டது. இந்த வேத மதம் புத்த சமண மதங்கள் தோற்றத் தால் (கி.மு.6ஆம் நூற்றாண்டு) வீழ்ச்சி யடைந்தது.
3.    ஆரியர்களின் மதக் கொள் கைகள் அனைத்தும் வேதகாலத்தில்  வேதமொழியில் (இந்திய மொழிகளும் பாரசீகமொழியும் கலந்த மொழி) எழுதப்பட்டன. இந்த வேதமொழியை புத்த சமண மதங்கள் ஆதரிக்கவில்லை. எனவே வேத மொழி வீழ்ச்சியடைந்தது இந்த வேத மொழியை செம்மைப் படுத்தி பாணினி இலக்கணம் அமைத் தார். செம்மைப்படுத்தப்பட்ட மொழிக்கு பாஷா' எனப் பெயரிட்டார். இந்த பாஷா மொழியே பிற்காலத்தில் சமஸ்கிருத மொழியாக மாற்றம் பெற்றது.
4.    சமஸ்கிருத மொழியில், ஆரம்பகாலத்தில்  நிக்கை வளைத்து ஒலிக்கும் ஒலிகளான‘‘T, Th, D, Dh’’  /ட, த, ண, ள (Retro Flex) இடம் பெற வில்லை. மேலும் இந்த ஒலி வடிவங்கள் ஆரிய மொழிக் குடும்பத்திலும் மற்றும் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்திலும் காணப்படவில்லை. இந்த ஒலி வடிவங்கள் திராவிட மொழிகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. இந்த ஒலி வடிவங்களைப் பெற்ற பின் தான் சமஸ் கிருதம் (த) என்ற பெயர் தோன்றி யிருக்க வேண்டும். (ஆதாரம் = மொழி யியல் குறித்த நூல்கள் மற்றும் பாட நூல்கள்)
அ.இந்து என்ற சொல் உருவான கதை:
1.  இந்து என்ற சொல் பெருமைக் குரிய சொல் அல்ல. அதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. இந்து என்ற சொல்லின் பொருளை மேம்படுத்தும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.இதைக் கூறுபவர் இந்து மதத்துறவி விவேகானந்தர். இது அவருடைய சொற்களில் தரப்படு கின்றது.
நாம் இந்துக்கள், இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் நான் பயன்படுத்தவில்லை. இந்த சொல்லிற்கு மோசமான பொருள் இருக்கிறது என்று கூறுபவர்களின் கருத் தையும் ஏற்கவில்லை. பழங்காலத்தில் அந்த சொல் இந்து நதியின் மறு கரையில் வாழ்பவர்கள் என்று பொருள் பட்டது. நம்மை வெறுப்பவர்களுள் பலர் அதற்கு மோசமான பொருள் தற்போது கூறலாம், ஆனால் பெயரில் ஒன்றுமே இல்லை.
நம் செயல்கள் மூலம் அந்த வார்த்தையை உலகில் உள்ள எந்த மொழியும் உருவாக்க முடி யாத உயர்ந்த வார்த்தையாக மாற்றுவோம். நமது முன்னோர்களைக் குறித்து அவமானம் கொள்ளக் கூடாது என்பது என் வாழ்க்கையின் கோட் பாடுகளுள் ஒன்றாக உள்ளது' (ஆதாரம்: இது லாகூரில் 1897 நவம்பர் 5_இல் செய்யப்பட்ட உரை).
இந்த உரையின் மூலம் ஆரியர்கள் சிந்து நதிக்கரையில் வசித்தவர்கள் என்பதை அறியலாம். மேலும் சிந்து சமவெளி நாகரிகம் முடிவடைந்த பின் ஆரியர்களின் வேதகால நாகரிகம் தோன்றியது எனக் கூறலாம்.  சிந்து நதிக்கரையில் வாழ்ந்த ஆரியர்கள் பின்னர் கங்கைக் கரைக்கும் தென் னாட்டிற்கும் பரவினார்கள் என் பதையும் அறியலாம்.
2. இன்றைய இந்து மதம் ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண் டது. இந்த ரிக்வேதம் பாரசீக நாட்டின் மதக் கொள்கைகளை உள்ளடக்கியது. மேலும் பாரசீக மொழியால் அவஸ்தன் மொழியை ஒட்டி இந்த ரிக் வேதம் ஆரியர்களால் உருவாக்கப்பட்டபோது, இந்துக்கள்  என்றால் திருடர்கள் என பொருள் தந்த காரணத்தால் ஆரியர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று அழைக்கவில்லை. வேதமதம் அல்லது வைதிக மதம் என்றே அழைத்தார்கள்.
3.  இந்து என்றால் சைவ சித்தாந்த நூல் பதிப்பில் வெளிவந்துள்ளது. அக ராதி கீழ்க்கண்ட பொருளைத் தரு கின்றது.அவை மதி, சந்திரன், மிருக சீரிடம், இந்துப்பு (மருந்து) எட்டி.
4. வீரமாமுனிவர் தனது சதுரக ராதியில் (கி.பி.1732) இந்து என்ற சொல் லுக்கு தரும் பொருள் கரடி, கரி, (கருப்பு) சந்திரன்.
5. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்துத்வா என்ற நூலில் இந்து என்ற சொல்லுக்கு மதத்தின் பெயரைக் குறிப்பதாக இந்திய மொழிகளில் எதிலும் இடம் பெற வில்லை எனக் கூறுகின்றார். கமலாபதி திரிபாதி நூல்:-  இந்து என்ற சொல் இந்து மத  நூல்களான, வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படவில்லை. கி.பி 1323இல், தென்னிந்தியாவில், காசுமீரில், நூல்களில் இந்து என்ற சொல் காணப் பட்டது. மேலும் 1618  ஆண்டுகளில், வங்காளி கௌடியன வைஷ்ணவ மத நூல்களில் இருந்து அன்னியர்களிடம் இருந்து இந்தியரை  வேறுபடுத்த இந்தியர்கள் இந்துக்கள் என்று சொல்லப்பட்டனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட் டத்தில்  இந்துக்கள் என்ற சொல்லின் பொருள் குறித்து, உச்சநீதிமன்றம், 1995, 2005, 2006 ஆண்டுகளில் பல விளக் கங்களை, தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்து என்ற சொல்லின் உண்மை யான பொருள் கீழே தரப்பட்டுள்ளது  1) கருப்பு மற்றும் கோரமானவன் 2) நாகரிகம் இல்லாத காட்டு மிராண் டிகள் 3) திருடர்கள் 4) இந்தியாவை சேர்ந்தவர்கள். (ஆதாரம்: 1) கமலபதி திரிபாதி (முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் மற்றும் முதலமைச்சர் எழுதிய நூல் 2) சப்தசாகர் என்னும் இந்தி மொழி பேரகாரதி, வாரணாசிப் பதிப்பு)
இந்து மதம் பற்றி கா.சு.பிள்ளை:
இவர் இந்து மதம் ஒரு மதமன்று என்று கூறுகிறார்.இந்து என்ற சொல் இடத்தைக் குறிக்கும் சொல் சிந்து நதிக்கரையில் வாழ்பவன் என்று பெயர். ஆங்கிலேயரும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வசித்த மக்களை இந் துக்கள் என்று அழைத்தனர். இவ்வாறு இந்தியாவில் வசிப்பவர்களை இந் துக்கள் என்று அழைத்தால் சப்பானிய மதம் ஆங்கில மதம் அமெரிக்க மதம் என்று நாட்டின் பெயர்களை மதங் களுக்கு வைக்கப்படுதல் வேண்டும். எனவே இந்து மதம் என்று கூறுவது சரியல்ல.(13-07-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6)
ஆ.இந்து மதம் பற்றி இஸ்லாமியர்கள்
1.  கி.பி.998_1030இல் வாழ்ந்த கஜினி முகம்மது, தனது இளம் வயது  முதல் உருவ வழிபாடு செய்பவர்களை (infidels and idolatry)
வெறுத்தார். அவர் இந்தியாவின் மீது படையெடுத்து, பிராமண மதத்தலைவர்களை அழிப்பதற்கு பல யுத்தங்களை நடத்தினார். கஜினி செல்வத்தை அதிகம் விரும்பவில்லை. இலஞ்சத்தை ஏற்பவர் இல்லை'.இதைக் கூறுபவர் ஜியாவுதின் பரணி, இவர் Medcival India
என்ற இதழில் 1958இல் எழுதியுள்ளார்.
இதனால் பிராமண மதம் என்று அழைக்கப்பட்ட வேத மதத்தைச் சேர்ந் தவர்களை விக்கிரக வழிபாட்டு    மக்கள்' என்று கஜினி முகம்மது காலத் தில் அழைத்தார்கள்.இந்துக்கள் என்று அழைக்கப்படவில்லை என்பதை அறியலாம்.
2. மீர்சையது அலி ஹம்தரனி (1384) இவர்  சஹிராத்' (Zahirat) என்ற நூலை நிர்வாகத்தை நடத்துவதற்காக எழுதினார். இவர் ஒரு இந்திய அரசர். இந்த நூலின்படி இந்திய குடிமக்கள், அவர்களின் மதச்சட்டத்தின்படி நடத்தப்படுவார்கள். இவர் குடிமக்களை இரண்டாகப் பிரித்தார்.அவை முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதார். முஸ்லீம் அல்லாதவர்கள் (Kafirs)தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட் டார்கள்' இதன்படி வேத மதத்தைச் சேர்ந்தவர்கள் தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இந்துக் கள் என்று அழைக்கப்படவில்லை.
3.  கிபி 1526இல் தோன்றிய முகலாயர் ஆட்சியில் பிராமணர்கள்  மதிக்கப்பட் டார்கள். அக்பர் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மாற்றம் செய்ய உதவினார். அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார். இவர் அவதாரங்களை நம்பினார். இவர் புருஷோத்தமன் என்ற பிராமணனிடம், தியானம், யோகம் கற்றுக் கொண்டார். இவர் காலத்தில் பிராமண மதம் இந்து மதம் என்று சிறிய அளவில் அறிமுகமானது.
இ.இந்து மதச்சட்டங்கள் பற்றி ஆங்கிலேயர்:
நெல்சன் என்ற ஆங்கிலேய நீதிபதி சென்னையில் 1877இல் இந்துக்களின் சட்டம், சட்டம் தெரியாத சமஸ்கிருத பண்டிதர்களாலும், சமஸ்கிருதம் தெரியாத நீதிபதிகளாலும் நிர்வகிக்கப் படுகிறது என்று கூறினார். ஏனென்றால் இந்துக்களின் தர்ம சாஸ்திரங்களை பண்டிதர்கள் கூற நீதிபதி தீர்ப்பு சொல் லுவார். இதற்குக் காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் (1772_1864). இந்துக்களின் பொதுச்சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டம், ஆரியர்களின் தர்ம சாஸ்திரம், வேதங்கள், ஆட்சியாளர் களால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் ஆகியவைகளின் அடிப்படையில் உரு வானது. இந்தச்சட்டம் பிராமணர்களா லும், ஊர் பெரிய மனிதர்களாலும் (Elite) தரப்பட்டது. இந்தப் பொதுச் சட்டம், பெரும் எண்ணிக்கை கொண்ட பிராமணரல்லாதாரை அடக் கியாள பெரிதும் பயன்பட்டது. இந்தச் சட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் சாஸ்திரம் தெரிந்த பண்டிட் (பிராமண) சட்ட அதிகாரி யாக நியமிக்கப்பட்டார். இத்தகைய நீதிமன்றம் 1864 வரை தொடர்ந்தது. பின்னர் பண்டிட் மற்றும் மௌல் விகள் பதவி நீக்கப்பட்டது. இதன் பின்னர் சுதந்திரமடையும் வரை இந்த நிலையே நீடித்தது. (ஆதாரம்: இந் துக்களில் பொது சட்ட அறிமுகம் என்ற நூல். ஆசிரியர்கள் திமோத்திலேபின், டொனால்டு டேவிஸ், கிருட்டிணன்.)
ஆங்கிலேயர் காலத்தில் உருவான இந்துக்களின் பொதுச் சட்டம், 1955ல் சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்துக்களின் சட்டம் கீழ்க்கண்ட வர்களை இந்துக்களாக வரையறை செய்கின்றது. அவை.
1. இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கீழ்க்கண்டோரை விலக்கு அளித்துள் ளது  பார்சிகள், யூதர்கள், இஸ்லாமியர், கிறித்துவர்கள் மற்றும் தங்களுக்கான தனிச்சட்டம் உள்ளவர்கள்.
2.    இந்துக்களில் அடங்குபவர்கள் கீழ்க்கண்டவர் ஆகும். இந்துக்கள், சமணர்கள், புத்தமதத்தினர், தங்களுக்கு எனத் தனிச்சட்டம் இல்லாதவர்கள். மேலும் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை, இந்தியர் தாதைகளின் மதத்தின் அடிப்படையிலும், இரத்த உறவு கொண்டவர்களின் மதத்தின் அடிப்படையிலும் நிர்ணயம் செய்யப் பட்டது.
இந்த சட்டத்தில் உள்ள குறைகள் பின்வருமாறு:
அ.    இந்துக்கள் என்றால் சிந்து நிதிக்கரையில் வாழ்ந்த இந்தியன் ஒரு பகுதியினராகத்தான் குறிக்கின்றது. இது குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்குப் பொருந்தாது.
ஆ.    இந்து மதம் ஒரு தலைமையின்  கீழ் இயங்கும் இயக்கம் அல்ல. ஆனால் இந்துக்கள் என்ற தலைப்பில் சேர்க்கப் பட்டுள்ள சமண மதம், புத்தமதம், சீக்கிய மதம் ஆகியவற்றுக்குத் தலைமை பீடங்கள் உள்ளன. அவற்றிற்குத்தனியே அமைப்பு, வேதங்கள் உள்ளன. அந்த மதங்கள் யாரால் எப்போது எங்கு உரு வாக்கப்பட்டது என்பதினைக் குறித்து தெளிவான செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
இ.    இந்து மதத்துக்குள்ளேயே பல உட்பிரிவுகள், தனித்தனியே இயங்கு கின்றன. அவைகளுள் சில கீழே தரப்பட்டுள்ளன. சைவ மதம், வைணவ மதம், அத்வைத மதம், துவைத மதம், விசிஷ்டாத்வைத மதம், தனிப்பட்ட ஆசிரமங்கள், மடங்கள் என்று சுயக் கட்டுப்பாட்டில் Independent)  இயங்கும் இயக்கங்கள், இந்நிலையில் எல்லாப் பிரிவினரையும் இந்துக்கள் என்பது ஒரே அளவுள்ள சட்டைகளை பலமக் களுக்குத் தருவதற்குச் சமம். இது நடை முறைக்கு ஒவ்வாத நீதிமுறையாகும்.
ஈ.    இந்துக்கள் என்று சட்டத்தில் குறிக்கப்படுபவர்களில் பிராமணர்கள் மட்டும் தான் இருமுறை பிறந்தவர்கள். ஒரு முறை பிரம்மாவின் முகத்திலும், மறுமுறை வேறு விதமாக பூணூல் மூலமாகப் பிறக்கிறார்கள். இத்தகைய ஆரியர்களுக்கும் இரண்டு முறைப் பிறக்காதவர்களையும் ஒரே மதத்தில் சேர்ப்பது முரண்பட்டது ஆகும்.
உ.    தற்போது ஆரியர்கள் முன்பு போல ஆரிய குருக்களிடம் குருகுலக் கல்வியை 12 முதல் 48 ஆண்டுகள் கற்ப தில்லை. மாறாக சூத்திரர்களுடன் சேர்ந்து, சூத்திர மருத்துவமனையில் பிறக்கிறார்கள். சூத்திரர்களுடன் சேர்ந்து, செருப்பு அணிந்து குடைப் பிடித்து, சீருடை அணிந்து கல்வி கற்கிறார்கள். சூத்திரர்களைப் போல் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறார்கள். எனவே ஆரியர்களுக்கு மனுநீதிதர்மத்தில் தரப்பட்டுள்ள சலுகைகளை தருவதில் எந்தவித நியாயமும் இல்லை.
ஊ.    வேதமதம் அல்லது சனாதன தர்மத்தின்படி ஒவ்வொரு இந்துவும் கீழ்க்கண்ட நிலைகளை அல்லது ஆசி ரமங்களை தன்னுடைய வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும். 1. பிரம்மச்சர்யம், 2.கிருகச்சர்யம், 3.வானப்பிரஸ்தம், 4.சன்னியாசம். இதில் கிருகஸ்தனேமற்ற மூன்று வாழ்க்கை நிலையில் உள்ளவர் களுக்கு ஆதாரம் ஆனவன். இதன்படி ஒரு இந்து தனது 27 வயதில் (12+15) வானப்பிரஸ்தம் பணி ஓய்வு நிலையை எட்ட வேண்டும். இதற்குமாறாக தசரத மன்னன்  60000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவதாரமான இராமன் 11,000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே வேதத்தில் விதிக்கப்பட்ட தர் மங்களைக் கடைப்பிடித்தல் சாதாரண இல்லறம் செய்பவனுக்கு இயலாத ஒன்று. அதுவும் தற்போது பால்ய விவாகம் கிடையாது. பிரம்மச்சர்ய வாழ்க்கை (மாணவர் பருவம்) 12 ஆண்டுகளுக்கு மேலானது. பதிவுத் திருமணங்கள், சுயமயாதை திருமணங் கள் நடைபெறுகின்றன. மேலும் விதவை மறுமணம் அனுமதிக்கப்பட் டுள்ளது. ஆண்டவனின் படைப்புத் தொழில், குடும்பக் கட்டுப்பாடு முறை யால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துமுறை பெரும் அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. மேலும் குருகுலக்கல்வி முறை தற்போது கிடையாது. குருதட்சினை எதுவும் கிடையாது. முதியோர் இல்லம் நடை முறையில் உள்ளது. இவ்வாறு கிரகஸ் தனின் இல்லறதர்மம் மிகவும் மிகவும் மங்கிப்போய்விட்டது. இத்தகைய சனாதன தர்மத்தை அடிப்படையான இந்துக்களின் பொதுச் சட்டங்கள் செயல்படும் தன்மையை இழந்து விட்டன.
மேலே கூறப்பட்டவற்றின் அடிப் படையில், இந்துக்களின் பொதுச்சட்டம் முரண்பாடானவை. செயல்படுத்த முடியாதவை. இந்து மதத்தின் வேதகால நாகரிகம், வேளாண்மையுகத்தைச் சார்ந்த ஆசிரம வாழ்க்கை வாழும் ரிஷிகளுக்கு ஏற்ற கிராம  நாகரிகம் ஆகும்.
இத்தகைய இந்து மதம், தற்போது நடைபெறும், தொழில் மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்ட, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு உலகமயமாக்குதல் கொண்ட நவீன நாகரிகயுகத்திற்கு சிறிதும் ஏற்றது அல்ல. எனவே இந்துக்களின் பொதுச்சட்டம் இற்றுப்போன சட்டம். இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு, மாற்றங்களுக்கு வகைசெய்யக் கூடிய எதிர்காலத்தை உருவாக்க துணைபுரியும் புதிய சட்டத்தை இழிவான பொருள் கொண்ட சூத்திரப்பட்டம் நீங்கும் வகையில் புதிய சட்டத்தினை இந்து மதம் என்ற சொல்லிற்குப் பதிலாக சைவம், வைணவம், நாத்திகமதங்களை சமண, புத்தமதத்தினை தனித்தனியே பிரித்து உருவாக்க வேண்டும்.(20-07-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6)

இந்து மதத்தால் தாழ்ந்தோம்:
இந்து மதம் ஆங்கிலேயரால் சட்ட பூர்வமாக ஆக்கப்பட்ட மதம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் நம்மை திராவிடர்களை இந் துக்கள் என்று அழைத்தது. இந்த ஆங்கி லேயன் சட்டம் அப்படியே எந்தவித மாறுதலும் இல்லாமல், இந்தியக் குடியரசு சட்டத்தில் சேர்க்கப்பட்டது, திராவிடர்களுக்கு, சூத்திரர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப் பட்ட மாபெரும் கொடுமை. இதனால் சுதந்திர இந்தியாவில் வர்ணாசிரம தர்மம் சட்டபூர்வமாக நிலைபெற்றது. இந்த கொடுமையான சட்டத்தால் ஆரியர் அல்லாத திராவிடர்களுக்கு எந்த விதப் பலனும் கிடையாது. இதனால் ஏற்படும் தீமைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
1.    பகவத் கீதையில் சொல்லப் பட்ட வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில், நாம் சூத்திரர்களாக அழைக்கப்படுவோம். இந்த  சூத்திரப் பட்டத்தை நீக்க, சுதந்திர இந்தியாவில் எந்த வித சட்டமும் இல்லை.
2.    அரசியல் சட்டத்தில், சட்டத் திற்கு முன்பு எல்லோரும் சமம் என்று சொல்லப்பட்ட அடிப்படை உரிமை இந்துமதம் என்ற போர்வையில் பறிக்கப்படுகின்றது.
3.    இந்து மதத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. வேதம் படிக்க உரிமை இல்லை. அர்ச்சனை செய்ய உரிமை இல்லை. ஆண்களுக்குச் சமமாக பெண் சொர்க்க லோகம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
4.    மத நம்பிக்கைகளின் அடிப் படையில், சடங்குமொழியான சமஸ் கிருதத்திற்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. பேச்சு வழக்கில் இல்லாத மொழிக்கு செய் யப்படும் பணம் எந்தவிதப் பலனையும் தராது இந்தப் பணத்தை சமஸ்கிருத மல்லாத மாநில மொழிகளுக்குச் செல விட்டால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இந்திய பண்பாடு மேம்படும்.
5.    இந்தியாவில் ஜாதிகளை உருவாக்கியது ஆரிய கலாச்சாரம். இந்தச் ஜாதிமுறை இந்தியர்களைப் பிரிக்கின்றது. ஜாதிக் கலவரங்களால் பொருள் சேதம், உயிர் சேதம் உண் டாகின்றன. சட்டத்தில் எல்லோரும் சமம் என்று கூறும் இந்திய அரசியல் சட்டம் ஜாதிகளை தடை செய்யும் சட்டப்பிரிவுகளை கொண்டிருக்கவில்லை.
6.    ஆண்டவன் முன் அனைவரும் சமம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.  ஆனால் ஆண்டவருக்கு அர்ச்சனை செய்யும் தகுதி ஆரியர் களுக்கு மட்டும் தனி உரிமையாக இருப்பது ஆங்கிலேயர் கொண்டு வந்த இந்து சட்டத்தின் படி எல்லா கோவில்களையும் கட்டுப்படுத்துகிறது.
திராவிடம் பற்றி புத்தர்:
புத்தர் கோசல நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அரச குடும்பத் தில் பிறந்தார். இவர் ஆரியர்களின் வேத காலத்தின்  (கி.மு.1600-_500) இறுதியில் பிறந்தார். இவர் இளம் வயதில் கல்விப் பயில கல்விக்கூடம் சென்றார். அப்போது அவர் ஆசிரியர் முன்பு பல தேசங்களின் பெயர்களை (திராவிடர் உள்பட) லிபி பலகையில் (கரும்பலகை என்று தற்போது அழைக்கப்படும் பலகை புத்தர் காலத்தில் லிபி பலகை என்று அழைக்கப்பட்டது எழுதி காட்டினார். பலகை என்ற சொல் தமிழ் சொல் ஆகும். இது தமிழின் தொன் மையைக் குறிக்கின்றது) எழுதிக் காண்பித்தார். இந்த செய்தியைத் தருபவர் சமஸ்கிருத அறிஞர், வேத நாகரிக எழுத்து முறையில் நூல்கள் அச்சிட பயன்படுத்தியவர் ஆன மேக்ஸ்ணில்லர் என்ற செர்மானியர் ஆவர்.
வேத மதங்களில் தமிழ்சொற்கள்:
மாலதி சென்டகே என்ற சமஸ்கிருத ஆய்வாளர் பல ஆய்வு நூல்களை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளார். இவரது நூலில் ரிக்வேதத்தில், தமிழ் உள்பட்ட பல திராவிட மொழிச் சொற் கள் காணப்படுவதாகக் கூறியுள்ளார். ஆரியர்கள்தங்கள் மதத்தில் இறைவனை வேத முதல்வன் என்று கூறுகிறார்கள். வேதங்களுக்கு உரை எழுதிய சயணர் என்பவர், வேதங்களின் அடிப்படை யிலே இறைவன் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்ததாகக் கூறுகிறார். மேலும் வேதங்களை நம்பு பவர்கள் ஆஸ்திகர்கள் என்றும், வேதங் களை நம்பாதவர்களை நாத்திகர்கள் என்றும் ஆரியர்கள் கூறினார்கள். இத்தகைய வேத மதத்தில், சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய வேதமதத்தில், வேதங்கள் தமிழ் சொற்களை பயன்படுத்தியது, தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிகள் இந்துமதத்தை விட தொன்மையானது என்பதைக் குறிக்கின்றது அன்னியர் களான ஆரியர்கள் பல தவறான கொள்கைகளை தங்களது வேதத்தில் சொல்லியதால் வேதமதம் அழிந்தது. நாத்திக மதங்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்ட சமண மதம், புத்த மதம் வளர்ந்தன.
திராவிடம் பற்றி வீரமாமுனிவர்:
இந்தியாவில் பண்டைய காலத்தில், 56 தேசங்கள் இருந்ததாகக் கூறுகிறார். அதில் காணப்படும் தேசங்களின் பெயர்கள் சில இங்கே தரப்படுகின்றன.
கோசலம், கூர்ச்சரம், பாஞ்சாலம், மகதம், கேரளம், கொல்லம், வங்காளம், அவந்தி, அருணம், காம்போசம், காசுமீரம், கன்னடம், ஆந்திரம், யவனம், திராவிடம், சிந்து, சிங்களம், சீனம், நிபாளம், நடதம்,, பல்லவம், பப்பரம், புவிதம், பாண்டியம், மாரடம், மலையாளம்......'இவ்வாறு வீரமாமுனிவர் தந்துள்ள பட்டியலில் திராவிடம்' என்ற தேசம் இடம் பெற்றதைக் காண்போம். மேலும் இந்த 56 தேசங்கள் இருந்த காலத்தில் சீனம், யவனம், சிங்களம், சிந்து போன்ற அயல் நாடுகளும் இடம்பெற்று இருப்பது ஆய்வுக்கு உரியது.
திராவிடத்தால் எழுந்தோம்: வர்ணாசிரமத் தர்மத்தில் சூதாடுவது சத்திரியர்களின் தர்மமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் மகாபாரதக்கதையில் தர்மர் துரியோ தனனுடன் சூதாடி தன் நாடு, மனைவி, சகோதரர்கள், வேலைக்காரர்களை இழந்தார்கள். மேலும் குப்தர்கள் காலத்தில் சூதாட்டம் மூலம் அரசுக்கு வருமானம் வந்ததற்கு சான்றுகள் உள்ளன. சூதாட்ட கண்காணிப்பு அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என்று கவுடில்யன் அர்த்த சாஸ் திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தைவிட வேறு இடங்களில் சூதாட்டம் நடந்தால் 12 பணம் அபராதம் வசூலிக்கப்படும் வகை செய்யப்பட்டுள்ளது. சூதாடுபவன் வெற்றி பெற்ற  பணத்தில் 5% அரசுக்கு வரியாக செலுத்தவேண்டும் என்று கவுடில்யர் கூறியருக்கிறார். இந்த சூதாட்டத்தினால் அரசு வசூலிக்க வேண்டிய வரிகளைப் பற்றி நாரதர், யாக்ஞ வல்கியர்,மனு  ஆகியோர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
1) இத்தகைய சூதாட்டக் கலாச் சாரத்தை ஆரியர் தர்மசாஸ்திரங்கள் அனுமதிப்பதால் இன்று கூட கிரிக்கெட் சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கலைஞர் தலைமையில் நடந்த ஆட்சியில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டது. இது திராவிட இயக்கத்தால் கிடைத்த பலன்.
இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.(27-07-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6)


2) தந்தைப் பெரியார் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் தீவிர முயற்சியால் தமிழ்நாட்டில் 1929ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
3) கம்யூனிச சிந்தாந்தவாதிகளுக்கு முன்னோடியாக கலைஞர் தமது ஆட்சிகாலத்தில் பேருந்து போக்கு வரத்தை நாட்டுடைமையாக்கியது. அதுபோல், நில உடைமைக்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது (1969_1976).
4) பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் பிராமணர் இல்லாமல் நடந்த சுயமயாதை திருமணங்களை செல்லத்தக்கதாக சட்டம் இயற்றினார். (6769)
5) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தவர் இராசாசி.பலபள்ளிக் கூடங் களை மூடியவர் இராசாசி இத்தகைய ஆட்சியை அகற்றியவர் தந்தை பெரியார்(1952).
6) முகலாயர் காலத்தில் உருவான மொழிகள், இந்தி, இந்துஸ்தானி, உருது. இவை பேச்சு வழக்கில் ஒரே மொழி யாகும். போதிய வளர்ச்சி பெறாத இந்தியை ஆட்சிமொழியாக்கி, இந்தி மொழி பேசாத மக்களை இரண்டாந்தர மக்களாக்கும் முயற்சிகளை எதிர்த்து திராவிட இயங்கங்கள் இணைந்து போராடின. தமிழக அரசு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை நீக்கி இரு மொழி கொள்கைகளாக மாற்றி உத்தரவிட்டது. (67_69)
7) அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை தந்தை பெரியாரின் கனவை நனவாக்க, தமிழக அரசு கொண்டுவந்தது.
8) மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம்  பெறுவதற்காக மாநில சுயாட்சி குழுவை இராசமன்னார் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நியமித்து அதன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது. (1974)  இது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திமுக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கியது.
9) சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில்
9ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கு திரா விடர் கழகத் தலைவர் கோரிக்கையை ஏற்று அதிமுக அரசு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தந்தது.
10)  மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்பினை மத்திய அரசு வழங்கியது.
11) மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகளைத் துவக்கியது.
12) கலைஞர் தலைமையில் அமைந்த தமிழக அரசு 1989இல் பெண்களுக்குத் தந்தையின் சொத்தில் சம பங்கு அளித்தது.
13) 1996இல் உள்ளாட்சி தேர்தலில் விகிதாச்சார முறையில் (33 1/3%) பெண் களுக்கு போட்டியிட வாய்ப்பு அரசு ஆணையால் வழங்கப்பட்டது.
14) 1970இல் பரம்பரை அர்ச்சகர் களுக்குப் பதிலாக அறங்காவலருக்கு அர்ச்சகரை நியமிக்கும் உரிமை அளிப்பதற்கு சட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து பரம்பரை அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கினை உச்ச நீதிமன்றம் 14.03.1972ல் தள்ளுபடி செய்தது.
இவ்வாறு இந்திய வரலாற்றினை மாற்றியமைக்கும் வகையில் திராவிட இயக்கங்கள் மக்கள் பிரச்சினைகளை முன் எடுத்துச் சென்று பல சீர் திருத்தங்களுக்கு வழிவகுப்பதில் ஆரியர்களைவிட திராவிட இயக்கங்கள் தங்கள் பங்களிப்பை செய்திருக் கிறார்கள் என்பதனை அறியலாம்.
முடிவுரை:
ஆரியர்கள், இந்தியாவின் முன் னேற்றத்திற்கு எதிராக பல நேர்வுகளில் செயல்பட்டார்கள். ஆரியர்களின் ஆதிக்கத்தில் இந்தியா இருந்த போது இந்திய பூர்வீகக்  குடிமக்களை சூத்தி ரர்களாக சித்தரித்து அடிமைகளாய் வைத்து இருந்தார்கள். ஆரிய நாகரி கத்தால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட தீங்குகள் கீழே தரப்பட்டுள்ளன.
1.    திராவிடர்கள் நாகரிகமான, நகர நாகரிகம் கொண்ட சிந்து வெளி நாகரிகத்தை வளர்க்காமல், தங்கள் கிராம நாகரிகத்தை வளர்த்தார்கள்.
2.    திராவிடர்களின் நகரங்களை அழிக்க ஆரியர்கள் யாகங்களில் கால்நடைகளைப் பலியிட்டார்கள். மேலும் யாகக் கடவுளான இந்திரனுக்கு திராவிடர்களை அழிக்க யாகத்தில் கோரிக்கை வைத்தனர்.
3.    பாரசீக மொழியான அவெஸ் தன் மொழியுடன் பிராகிருத மொழிச் சொற்கள் மற்றும் திராவிட மொழிச் சொற்கள் கொண்ட வேத மொழியில் வேதங்கள் இயற்றினார்கள்.
4.    ஆரியர்களின் மதக் கொள் கைகள் மற்றும்  மொழிக் கொள்கை களை எதிர்த்து, சமண புத்த மதங்கள் உருவாகின. இந்த மதங்கள்  அர்த்த மாகதி மற்றும் பாலி மொழிகளை ஆதரித்தன. ஆரியர்களின் வேத மதம், வேத மொழியும் அழிந்தன (கிமு 600)
5.    கிமு 1500ல் தோன்றிய வேத மதம் மீண்டும் கி.பி.150ல் ருத்ரதாமன் என்ற மன்னன் காலத்தில் புத்துயிர் பெற்று சமஸ்கிருதத்தில்  கல்வெட்டு உருவானது.
6.    பின்னர் கி.பி. 7ஆம் நூற்றாண் டில் சமஸ்கிருதத்தில் வேதம் எழுதப் பட்டது. பல நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதனால் சமஸ்கிருதம் தன்மை மொழியானது.
7.    புத்தர் சமணர் காலத்தில் குடைவரைக் கோவில்கள் குப்தர்கள் காலத்தில் (கிபி. 320_470) கற்களால் கட்டப்பட்ட சிறு சிறு கோவில்கள் தோன்றின. அந்தக் கோவில்கள் எதுவும் ஆகம விதிப்படி கட்டப்படவில்லை. இதனால் எல்லா பிரிவு மக்களும் கட வுள் சிலை அருகே சென்று இஷ்டப் பட்ட மொழியில் வணங்கினார்கள். இந்த  குப்தர்கள் காலத்தில் இந்துமதம் என்று எதுவும் தோன்றவில்லை. சைவ வைணவ மதங்களே இருந்தன.
8.    ஆரியர்களால் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட அன்னியர்கள் ஆங்கிலேயர்கள் இந்தப் புண்ணிய பூமியை ஆண்டபோது பூமாதேவி என்ற தெய்வத்திற்கு களங்கம் /தீட்டு ஏற்படவில்லை.
9.    இந்து மதத்தில் சூத்திரர்கள், பஞ்சமர் என்று அழைக்கப்பட்டவர்கள் இந்த பாரத பூமியில் பல காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் பூமாதேவி என்ற தெய்வத்திற்கு தீட்டு ஏற்படவில்லையே.
10.இந்து  மதத்தில் கங்கை நதி ஒரு கடவுள். இந்த நதியில் சகல சாதி யினரும் மதத்தினரும் எந்தவித வேறு பாடும் இன்றி ஒன்றாக குளிக்கிறார்கள். அதை அனுமதிக்கும் போது எல்லா சாதியினரும் அர்ச்சகராவதில் என்ன தவறு இருக்கிறது?
11.    ஒரு கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி தேரில் சூத்திரர்களால் இழுத்து வரப்படுகிறார். தேரில் இருக்கும் உற்சவமூர்த்திக்கு தேரை இழுப்பவர்கள் அர்ச்சனை செய்தால் என்ன தீட்டு ஏற்பட்டுவிடும். (மூல விக்ரகம் வெளியே உலா வராது)
12.    அரசாங்க ஆதரவுடன் செயல் படும் பொது இடங்களில் குடிநீர் நிலைகள், பொதுக் குளியல் இடங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் ஒரு இந்திய குடிமகனை, சாதியின் பெய ராலோ, இனத்தின் பெயராலோ பிறப்பின் அடிப்படையாலோ பாலியல் வேற்றுமையாலோ அனுமதிக்க மறுப்புத் தெரிவிக்கக் கூடாது என்று இந்திய அடிப்படை உரிமைகள் சட்டத்தில் (ART15) தெரிவிக்கப்பட்டுள் ளது. இதைக் கருத்தில் கொண்டால், தன்னைப் படைத்த ஆண்டவனுக்கு, தனக்கு தெரிந்த மொழியில் அர்ச்சனை செய்து கொள்ள மதங்களோ, சட்டங் களோ தடை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே, கேரள மாநிலத்தில் இந்து மதத் தில் உள்ளது போல், நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் அனைத் துச் சாதியினரும் அர்ச்சகர்களாகும் நிலை விரைவில் வந்தே தீரும்.
13.    தேரில் அல்லது பல்லக்கில் வரும் உற்சவ மூர்த்திக்கு, சூத்திரர் அர்ச்சனை செய்தால் தீட்டு ஏற்படும் என்று கருதினால், காயத்திரி மந்திரம் சொன்னால் அல்லது உபநயன மந்திரம் சொன்னால் போய்விடும்.
14.    ஆரியர், சூத்திரர் என்று பேத மில்லாமல் வாழ்தலே நம் இந்தியா அல் லது ஜம்புத்விப (நாவலந்தீவு) வல்லரசு நாடாக மாறுவதற்கு உதவி புரியும்.
15.    சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண் டவன் அருள் கிடைக்காது, என்றாலும் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்வதையே விரும்புவார்கள்.
16.    இந்து மதத்தில் உள்ள சூத் திரர்களுக்கு இந்து மதத்தால் இரண்டு முறை அவமானப்படுத்தப்படுகிறார்கள். விவேகானந்தர் சொல்படி இந்து என்ற சொல் பெருமை தரவில்லை; மாறாக இழிவைத் தருகின்றது. மேலும் வர்ணாசிரமதர்மம் சூத்திரர்களை தஷ்யூக்கள் என்றும், தாசர்கள் என்றும் இழிவுப்படுத்துகின்றது. இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.(03-08-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6)
(நிறைவு) 

Monday, April 18, 2011

திராவிடரின் வரலாற்றுச் சிறப்புகள் -P. கோவிந்தராசன் B.E., M.B.A., (M.A)

இந்தியா இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் கொண்ட மிகப் பழைமையான நீண்ட நெடிய வரலாற் றினையும் கொண்ட ஒரு துணைக் கண்டம். இந்தியா என்று அழைக்கப் படும், நாவலந் தீவின் சமூக, இலக்கிய, நாகரிக மேம்பாட்டினை நேரில் காண வும், பொருளாதார வணிக தொடர்பு கொள்ளவும், அந்நியர்கள் படை யெடுத்து வந்தனர்.

அவ்வாறு வந்தவர் களில் முதன்மையானவர்கள் ஆரியர்கள். இறுதியாக வந்தவர்கள் ஆங்கிலே யர்கள். ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் இருந்த காலம் 1857 முதல் 1947 வரைதான். அந்த காலகட்டத்தில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், படை நிருவாகம், அரசு நிருவாகம் ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பங் களைப் புகுத்தி ஒரு தொழிற்புரட்சியை ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் இருந்த மொழிகளில் எல்லாவற்றையும் விட தமிழ்மொழியை நேசித்தார்கள். ஒப்பிலக்கணம் தந்தார்கள்.

காவியம் தந்தார்கள். அறிவு, அன்பு ஆகிய வற்றை புத்தர் வழியில் போதித்தனர். திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கி லத்தில் மொழி பெயர்த்து ஆங்கிலத் தின் வளத்தை விரிவுபடுத்தினார்கள். அய்ரோப்பிய கண்டத்திலிருந்து வந்து, தமிழ் வளர்த்து, திராவிட நாகரிகத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய பெருமை கிறித்துவ மதத்தையே சாரும்.

அதே சமயத்தில் இந்து மதம் என்றும், இந்தியா என்றும் அழைத்துக்கொண்டு தமிழையும் திராவிடர் நாகரிகத்தையும் அழிக்க இன்று நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணும்போது கிறித்துவர்கள், ஆங்கிலேயர்கள் செய்த சேவைகள் வரலாற்று சிறப்புடையாதாக விளங்குகின்றது.

அதானால் தான் திராவிடத்தின் தலைமகன் தந்தை பெரி யார் ஆங்கிலேயர் ஆட்சி தொடர வேண்டும் என்று கூறினார். நாவலந் தீவு எனப்பட்ட இந்தியாவில் இந்து மதம் என்ற பெயரில் திராவிடர் நாக ரிகத்தை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதால் திரா விடரின் வரலாற்றுச் சிறப்பினை மீள வும் நினைவுகூர வேண்டிய கட்டாயத் தில் இருக்கிறோம்.

கடல் வாணிகம்

மதவாதிகள் கூறுவதைப்போல் இந்த உலகம் ஒருநாளில் கடவுளால் படைக்கப்படவில்லை. ஏனென்றால் இந்த பூமிபந்து நெருப்புக் கோளாய் இருந்து, பின் குறிர்ந்து பல கண்டங் களாக பிரிந்து, உயிர்கள் தோன்றி, நாகரிகம் பெற பல கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயின. இவ்வாறு உயிர்கள் தோன்றியபோது முதல் மனிதன் தோன்றியது பூமத்திய ரேகை அருகே இருந்த லெமூரிய கண்டத்தில்தான். இந்த லெமூரியாக்கண்டம் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களை இணைத்து ஒரே நிலப்பரப்பாக விளங்கியது.

முதல் மனிதன் தோன்றிய லெமூரியாக் கண் டத்தில் வாழ்ந்தவர்கள், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். கடல் வாணிகத்திலும் சிறந்து விளங்கின வர்கள் இவர்களே. பின் அய்ரோப் பாவில், சிந்துசமவெளியில், கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் நிலப்பகுதியில் குடியேறினர் (ஆதாரம் Atlantis and Lost World என்ற நூல் ஆசிரியர் ஜோசப் பிராங்க்). இதையே புகழ்பெற்ற வரலாற் றாளர் எஸ். ஆர். இராவ் அவர்கள், திராவிடர்கள் தெற்கு அய்ரோப்பாவில் சென்று குடியேறினர் என்ற தனது Memoirs of Archaeology of India என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். பன் மொழிப்புலவர் அவர்கள் Trazan என்ற அய்ரோப்பா நாட்டினரை திராஜன் என்ற தமிழ் மொழிபெயர்ப்பாளர் படைத்துள்ளார்.

மேலும் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர், அரேபி யருடனும், கிரேக்கருடனும், உரோம ருடனும், ஜாவனியருடனும் மற்ற அயல் நாட்டினருடனும் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்ற கூறுகிறார். இதை எடுத்துக்காட்டும் வகையில் நில நூலாசிரியர்கள் பிளினி (கி.பி. 75), தாலமி (கி.பி. முதல் நூற்றாண்டு) மற் றும் செங்கடற்பயணம் ஆய்வுக்குறிப்புக் கள் கடைசியில் (Periplus Maris Erithrerien) எரித்திரையன் இந்துமாக் கடல் போன்ற நூல்களில் குறிப்பிடப் படும் தமிழகத்தில் இருந்த துறைமுக நகரங்களை விரிவாக ஆய்வு செய் துள்ளார்.

அவற்றில் சில நகரங்கள்:

1. பாலைப்பட்டினம்: (palae Patme) Dabhol என்று தற்போது குஜராத்தில் விளங்குகின்றது.

2. மந்தராகிரி: (Mandagore) Bankote என்று தற்போது பெயர் பெற்றுள்ளது. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. கப்பல் கட்டுமான நகரமாக விளங்கியது.

3. கண்ணனூர்: கேரளாவில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

4. Baryagaza: குஜராத்தில் உள்ள புரோச் (Broach).

5. Colchi - தற்போதுள்ள Cochi சிலப்பதிகாரத்தில் கொற்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6. Kayal - Morcopola வால் Coil என்று குறிப்பிடப்பட்டுள்ள நாகர் கோவில்.

7. Tyndis- (பொன்னானி) தமிழகத் தின் முதல்தர துறைமுகம் (மஜும்தார் இதனை தமிழகத்தின தொண்டி துறைமுகம் எனக் கூறுகிறார்).

8. முசிறி (Cranganore) கேரளாவில் உள்ளது. அரபு நாட்டுடன் கடல் வணிகம் நடந்தது.

9. நீல்கண்டா (Nelganda என்று Fabricius என்பரால் அழைக்கப்பட்டது. Melkynda என்று கால்டுவெல் அழைத் தார்). இது கோட்டயம் அருகே உள் ளது.

10. Camara (காவிரிப்பூம்பட்டினம்)

11. Poduca (பாண்டிச்சேரி) அரிக் கமேடு ஆய்வுகள் இதனை உறுதிப் படுத்தியுள்ளது.

12. Supatana (Fairtown) (சென்னைப் பட்டினம்) மதராஸ் என்ற அழைக் கப்பட்ட சென்னை. இந்த துறைமுகம் கங்ககைக்கரை வரை இணைப்புச் சாலைகள் கொண்டது).

13. Maisolai or Ma Solia இது மசூலிப்பட்டணத்தை குறிக்கின்றது. இங்கிருந்து மரக்கலங்கள் (Vessels) சைனா, மெக்கா, சுமத்ரா போன்ற நாடுகளுடன் வாணிகம் நடந்தது.

14. கண்டசாலா: இந்த துறைமுகம் கிருஷ்ணா நதி முகத்துவாரத்தில் உள்ளது. இது சுவர்ண தீவுடன் வாணிபத் தொடர்பு கொண்டது.

15. சரித்திரபுரா: சீனாவின் யுவான் சுவாங்கினால் குறிக்கப்பட்டுள்ளது. இது ஒரிசாவில் உள்ளது.

16. Paloura (பாலூரா) ஒரிஸ்ஸாவில் உள்ளது. பர்மாவுடன் வணிகம் நடந்தது.

17. தாம்ரலிப்தி (Tamaralipti): வங்கா ளத்தில் உள்ளது. மவுரிய பேரரசர் அசோகர் இங்கு வந்தார். அப்போது போதிமரத்தின் கிளை தாம்ரபோன் என்றழைக்கப்பட்ட சிலோனுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் கிரேக்க நாட்டில் இருந்து வந்த மார்க்கோபோலோ மற்றும் நிக்கோலா கோண்டி (Nichoicolo Conti) ஆகியோர், தென்னிந்தியர்கள் கப் பல்கள் கட்டும் துறையில் சிறந்து விளங்கினார்கள்.

அவர்கள் கட்டிய கப்பல்கள் 25 யானைகளை ஒரே சமயத்தில் ஏற்றிச்செல்லக் கூடிய வலிமை பெற்றவைகளாக விளங்கின என்று கூறினார்கள். தமிழில் நாவாய் என்ற சொல்லே ஆங்கிலத்தில் Navy என மாறியது. இது தமிழின் சிறப்பு மற்றும் கடல் வணிகத்தின் சிறப்பு ஆகும்.

எனவே முதல் மனிதன் திராவி டத்தை உள்ளடக்கிய லெமூரியர்கள் முதல் தற்போதுள்ள திராவிடர்கள் வரை (குமரி முனை முதல் கங்கைக் கரையைத் தொடும் விந்திய மலை வரை பரவியவர்கள்) கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கி பொன்னும், மணியும் குவித்தனர் என்பதை அறியலாம். பெருகிய செல்வம் இலக்கியங்கள் படைக்க உதவின. திராவிடம் என்பதும் திருவிடம் என்பதும் திரைகடல்களால் சூழ்ந்த திரைவிடமாக விளங்கியது.

ஆரிய இலக்கியங்கள்

இந்தியாவின் தொன்மையான மொழிகள் தமிழும், சமஸ்கிருதமும் ஆகும். சமஸ்கிருதம் இன்று எந்த மாநில மக்களாலும் பேசப்படவில்லை. 2001இல் சமஸ்கிருதம் பேசுபவர்கள் எண்ணிக்கை 14135 (ஆதாரம் Encyclopedia of wicky pedia). சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை. (இந்துமத தர்ம வினா _ விடை -_ ஆசிரியர் சங்கராச்சாரியார்) இதற்கு இலக்கணம் அமைத்து சமஸ்கிருதம் என்று பெயரிட்டவர் பனை என்ற ஊரில் பிறந்த கி.மு. 400 அய் சார்ந்த பாணினி (Panini) என்பவர் ஆவார்.

1. எரித்திரையன் கடற்பயணம்: செங்கடற்பயணம் அல்லது செங்கடல், பாரசீக வளைகுடா மற்றும் இந்துமாக் கடல் அடங்கிய கடற்பயணம்

2. Ratnaray - அரபிக்கடல்

3. Mahadadhi - வங்காள விரிகுடா

4. பாணிணி எழுதிய இலக்கணம் நூல் (சமஸ்கிருதம்) எட்டு அத்தியா யங்களைக் கொண்டது. எனவே அஷ்டத்யாயி என அழைக்கப்பட்டது. இது தமிழ் மரபின்படி அமைந்த பெயர்.

உதாரணம்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, நாலடியார். சமஸ்கிருதம் தோன்றி பலகாலம் இலக்கியங்கள் இயற்றப்படவில்லை.

கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தில் இலக்கியம் என்று எதுவுமே கிடையாது. சமஸ்கிருதத்திற்கு மாறாக தமிழ் பல. இலக்கியங்களைக் கொண்டிருந்தது. அவை தமிழர் வாழ்க்கை மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகள் பற்றியும் பல அரிய தகவல்களை தந்தன.

இதிகாசங்கள்

வேதகாலத்தில் இயற்றப்பட்ட ரிக்வேதம் அவெஸ்தன் என்ற பாரசீக நூலின் இந்திய பதிப்பு ஆகும். இதனை தொடர்ந்து யஜுர், சாம அதர்வன வேதங்கள் ஆகும். பின்னர் இராமா யணம், மகாபாரதம் போன்ற காவி யங்கள் கி.மு. 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை இயற்றப் பட்டன. ஆனால் இவை அனைத்தும் எழுத்து வடிவில் எழுதப்பட்டவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான். இவை நடந்தது _ ஏறக்குறைய குப்தர்கள் ஆட்சிகாலத்தில்தான்.

இராமாயணத்தில் வால்மீகியால் சில காண்டங்கள் புனையப்பட்டன. பிற் காலத்தில் அயோத்தியா காண்டம், பால காண்டம், உத்ரகாண்டம் முதலியன மற்ற ஆசிரியர்களால் எழுதி சேர்க்கப்பட்டன. இதேபோல் மகா பாரதத்தின் உண்மையான காவிய நாயகன் அர்ஜுனன். இவனின் வில் லாற்றலினையே மூல பலமாகக் கொண்டு பல வீரச்செயல்கள் நடை பெற்றன.

இப்பேர்பட்ட மாவீரன் போர்க்களத்தில் மனச்சோர்வடைந்து போரிட மறுப்பதாக சித்திரிக்கப் பட்டுள்ளது. அவனை போரில் ஈடு படுத்தும் பணி பரமாத்மா கிருஷ்ண னால் பகவத்கீதை மூலமாக நிறை வேற்றப்படுகின்றது. இந்த பகவத்கீதை மகாபாரதம் இயற்றிய பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து பிற்சேர்க்கை யாக சேர்க்கப்பட்டதாகும். வீரத்தை சித்திரிக்கவேண்டிய நூல் பக்தி நூலாக மாற்றம் அடைந்தது.

தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள்:

அரசர்களையும், கடவுள்களையும், மதச்சடங்குகளையும் மய்யமாக வைத்து புனையப்பட்டவை சமஸ்கிருத இலக்கியங்கள். தமிழர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தார்கள். முதல் தமிழ்ச்சங்கம் 4400 ஆண்டுகள் தென் மதுரையில் இருந்தது. இந்த முதல் சங்கத்தில் 4449 புலவர்கள் தங்கள் படைப்புகள் சமர்ப்பித்தார்கள். இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் நடைபெற்றது.

அதில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர் பாண்டுரெங்கன் திரையன் மாறன் (துவாரகை மன்னன்). இந்தச் சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்களில் தொல்காப்பியமும், அகத்தியமும் அடங்கும். இறுதியாக தற்போதைய மதுரையில் கடைச்சங்கம் 1850 ஆண் டுகள் நடைபெற்றது. எனவே சங்க காலம் (4449+3700+1850 = 9999) ஆண் டுகள் கொண்ட ஒரு நீண்ட நெடிய காலம். இது தமிழ் நீண்ட காலம் சிறப்புடன் இருந்ததை அறியலாம்.

தமிழர்களின் வீர வரலாறு:

வீரம் என்ற சொல்லை மற்ற மொழிகளுக்குத் தந்தது தமிழ் மொழியாகும். உதாரணம் வீரபூமி, வீரசக்கரா விருது, மகாவீர் தியாகி, மாகவீர்பிரசாத், மகாவீரர், இதேபோல் ஆங்கிலத்தில் சொல்லப்படும் வேலர் என்ற வேல் ஆயுதத்துடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். எனவே வீறு கொள்ளுதல், வேலெறிதல் சேரனின் விற்கொடி, சோழனின் புலிக்கொடி முதலானவை தமிழ் மண்ணைச் சார்ந் ததாகும். தமிழர்கள் வீரத்தை பெரிதும் போற்றினார்.

வீர விளையாட்டுகள், போட்டிகள், மிருகங்களை அடக்குதல் முதலியன தமிழர்களின் வாழ்க்கையில், திருமணங்கள் மற்றும் திருவிழாக் களுடன் இரண்டறக் கலந்தவை. புலியை வேட்டையாடி புலிப்பல்லுடன் கூடிய மங்கல நாணைக் கொண்டு வரும் மணமகனுக்கு மணமகளை பரிசாகத் தந்தார்கள். போர்க் களத்திலே புறமுதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல.

மார்பிலே காயப் பட்டு இறப்பதையே பெரிதும் விரும் பினார்கள். இத்தகைய வீர மறவர் களுக்கு இணையான வீரர்களை உலகில் காண முடியாது. முதுகில் காயப்பட்டதினால் பெற்ற மகனை தாயே வெட்டிக்கொன்ற காட்சிகளை இலக்கியங்களிலே காணுகின்றோம். திராவிடர்களின் முக்கியப் போர் ஆயுதங்கள் வாள், ஈட்டி, சூலம், வில் முதலியனவாகும். ஆரியர்கள் குதிரையைப் பெரிதும் பயன்படுத் தினார்கள். மாறாக, மகாபாரதத்தில் பீஷ்மர் முதுகில் அம்புகள் துளைக்க படுத்திருந்தார். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் 13 முதல் 14 ஆண்டுகள் வரை காவியக் கதாநாயகர்கள் வனவாசம் சென் றார்கள்.

அப்போது அவர்கள் காட்டில் உண்மையாகவே வசிக்கும் புலி, சிங்கம், யானை போன்ற மிகக் கொடிய மிருகங்களுடன் போரிட வில்லை. மாறாக தேவர் உலகத்தில் இருந்து வந்த, சமஸ்கிருதம் பேசும், ஜடாயு, ஜாம் பாவான், வாலி, ஆஞ்ச நேயர், இலங்கைக்கு பாலம் கட்டியதாக சொல்லப் படும் நளன் என்னும் குரங்கு முதலி யனவற்றைத்தான் சந்தித்தார்கள்.

திராவிடநாட்டில் கேரளாவில் ஆலப்புழாவில் நடைபெறும் படகுப் போட்டி, மதுரை ஜல்லிக்கட்டு, திருச்சூர், மைசூர் ஆகிய நகரங்களில் நடை பெறுகின்ற திருவிழாக்களில் யானைகளின் அணிவகுப்பு நடை பெறுகின்றது. இது திராவிடர்களின் கடல் வாணிகத்தின் சிறப்பினையும், காட்டு மிருகங்களை அடக்கி, நாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்துவதையும் தெரிவிக்கின்றது. ஆரிய கலாச்சாரத்தில் உறியடிக்கும் நிகழ்ச்சி திருவிழாக்களில் பெரிதும் காணப்படுகின்றது.

ஆரியர் வரலாறும் - கோவில்களும்:

சரகோணிய (Sargonya) ர்களின் வம்சத்தில் அசுரபணிபால் (Ashurapanipal) (கி.மு. 669_ 627) பாபிலோனியாவை ஆண்டான். அவன் ஈழத்தை ஆண்ட மன்னன் மற்றும் மகன் தாமரிதுவை வென்றான். அவனது அரசு நைல்நதி முதல் காகஸ் மலை வரையிலும், மற்றும் மத்திய தரைக்கடல் முதல் பாரசீக வளைகுடா வரை பரந்து இருந் தது. இந்த மன்னன் சிறந்த நூலகத்தை நிறுவினான். இலக்கியங்களை வளர்த் தான்.

கி.மு. 1000இல் ஆரியர்கள் ஒரு பகுதி யினர் காகஸ் மலைப்பகுதி (ஆர்மெனியா) யில் இருந்து வெளியேறி பாரசீகத்தில் தங்கினார்கள். இதன்பின் பாரசீகம் எழுச்சி பெற்றது. யூதர்களால் “The Lords” மற்றும் ‘anointed’ என்ற அழைக் கப்பட்ட சைரஸ் (Syrus). அவரது மகன் ஷெர்ஷா (கி.மு. 486_465) இருவரும் அய்ரோப்பா வரை படையெடுத்துச் சென்று கிரேக்க கட்டடங்களையும், கோவில்களையும் கொளுத்தினார்கள். இதற்குப் பழி வாங்க அலெக்ஸாண்டர் கி.மு. 331இல் பாரசீக நகரங்களைக் கொளுத்தினார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், இந்தியாவுக்குள் கி.மு. 1500இல் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ் சமாக வளர்ந்து கி.பி. 325 இல் வைசிய ரான குப்தர்களால் கருடக்கொடியுடன் கூடிய வைணவப் பேரரசை நிறுவி னார்கள். இவர்கள் காலத்தில் வேதமதம், வைணவமதமாக மாறி புராணங்கள், இதிகாசங்கள் வளர்ந்தன. குப்த மன்னர்கள் பாகவதர்கள் என்றழைக்கப் பட்டனர். குப்தர்காலத்துக்குப்பின் சமஸ் கிருதம் வட்டார மொழியானது. மேலும் ஆரியர்கள் மதச்சடங்குகள் செய்து தானம் பெறுவதில் நாட்டம் கொண் டார்கள்.

கோவில்களும் , திராவிடர்களும்:

திராவிட நாகரிகத்தினை பிரதி பலிப்பவை கோவில்களாகும். கோ என்றால் அரசனை அல்லது இறை வனைக் குறிக்கும். அரசனும், இறை வனும் வசிக்கும் இடம் நகர். நகர் என்றால் கோவில் என்ற ஒருபொருள் உண்டு. நாகரிகம் வளர்ச்சி அடைந்த போது கோவில் நகரங்கள் தோன்றின. நகரத்தை மட்டும் எல்லையாகக் கொண்ட நகர அரசுகள் (City States) தோன்றின.

உதாரணம் சிப்பாய் கலகத்தின் போது (1857) முகலாய மன் னன் பகதூர்ஷா டில்லியை மட்டும் ஆண்டார். இந்தியாவில் 56 தேசங்கள் இருந்ததாக சொல்லப்படுவது 56 நகரங்களைக் குறிக்கின்றது. மேலும் புரம் என்றால் கோட்டை என்று பெயர். இவ்வாறு நகர் என்றும் கோவில் என்றும், குடி என்றும், குன்றம் என்றும், ஊர் என்றும், பட்டணம் என்றும் வழங்கப்படும் ஊர்கள் இந்தியாவெங்கும் பரவி இருக்கின்றன.

இந்த பெயர்கள் அனைத்தும் இந்த உலகத்திற்கு திராவிடரின் நாகரிகத்தைப் பறை சாற்றுகின்றன. இந்த திராவிட நாகரி கத்தின் அடையாளமாக்க, சிந்து சமவெளியில் காணப்படும், நகர நாகரிகம் ஆகும். மற்ற நாட்டினரெல்லாம் கல்லறை கட்டிய காலத்தில் நகர நாகரிகம் படைத்தவன் திராவிடன்.

பழங்காலத்தில் நாவலந் தீவில் (இந்தியாவில்) திகழ்ந்த கட்டடக் கலைகளில் முதன்மையானவை (அ) காந்தாரக்கலை (ஆ) பாரசீகக்கலை (இ) திராவிடக்கலை இவைகளின் சிறப் புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காந்தாரக் கலை

இந்தக் கலை அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது இந்தியாவில் பரவியது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்த கனிஷ்கர் போன்ற மன்னர்கள் புத்த விகாரங்கள், புத்தர் சிலைகளை உரு வாக்கினார்கள். காந்தாரக்கலையின் சிறப்புகள் அகன்ற மதிற்சுவர்கள், குறுகிய இடைவெளியில் தூண்கள், துண்களை இணைக்க விட்டங்கள் இந்தக் கலையின் காலம் கி.மு. 650 முதல் 100 கி.மு. வரை.

பாரசீக கட்டடக் கலை:

1526 பாபர் உருவாக்கிய பேரரசு 1540இல் முடிவுற்றது. முகல் (Mughal) என்றால் பாரசீகமொழியில் மங் கோலியரை குறிக்கும். எனவே 1540இல் நாட்டை இழந்த ஹுயூமான் பாரசீகத்தில் தஞ்சம் அடைந்தார். பின் பாரசீக இளவரசியை மணந்து படைதிரட்டி வந்து 1555-இல் டில் லியைப் பிடித்தார். இந்த இடைக் காலத்தில் 1528 இல் கட்டப்பட்ட பாபர் மசூதி யாரிடம் இருந்தது என சிந்திக்கவும்.

ஹுமாயூன் பாரசீகத்தின் துணையால் அமைத்த டில்லி பேரர சில், டில்லியைச் சுற்றி கோட்டைகள், மசூதி அரண்மனைகள் டில்லியை அலங்கரிக்கின்றன. பாரசீக கட்டடக் கலையை ஒட்டி அமைந்தவற்றில் அமெரிக்க குடியரசு தலைவர் பாரக் ஒபாமா கண்டுகளித்த ஹுமாயூன் Tomb. தாஜ்மஹால் முதலியனவாகும். பாரசீக கலை இல்லையேல் டில்லி இல்லை. இந்தக் கால கட்டத்தில் ஆரிய கட்டடக்கலை என்று இருந்ததாக வரலாறு சொல்லவில்லை.

திராவிட கட்டடக் கலை:

இந்தியாவில் குப்தர்கள் காலம் (கி.பி. 320 முதல் 650 வரை) சிறு கோவில்களே கட்டப்பட்டன. இதில் கி.பி. 500 முதல் கி.பி. 800 வரை உருவான குடைவரை கோவில்கள் பிராம்மானியம் அல்லது சமணம் சார்ந்தவை. கி.பி. 800 இல் சாளுக்கியர்கள் வீழ்ந்து ராஷ்டிர கூடர்கள் வந்தார்கள். இவர்கள் திரா விட கட்டடக்கலையை ஊக்குவித்து எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டினார்கள்.

சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் நாகரா மற்றும் திராவிடக்கலை கலந்த வேசர அமைப்பைக் கொண்டு கோவில்களை வடகர்நாடகாவில் கட் டினார்கள். உதாரணம் பட்டக் கல்லில் உள்ள காசிநாதர்கோவில் (கி.பி. 450 முதல் 650) திராவிடக் கட்ட டக் கலையை வளர்த்தவர்கள் கீழ் வருமாறு:

1. பல்லவர்கள் (600 முதல் 900) மாமல்லபுரத்தில் கல்லில் குடையப் பட்ட இரதங்கள், காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவில்.

2. சோழர்கள் (900 முதல் 1200) திராவிடக்கலை முழுமை அடைந்தது. தஞ்சையில் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்கள் குறிப்பிடத்தக்கவை.

3. விஜயநகர அரசர்கள் (1350 முதல் 1565) மதுரை, திருவரங்கம் , ஹம்பி, விட்டல்லா கோவில்கள் கட்டினார்கள்.

4. நாயக்கர்கள் (1600 முதல் 1750) இவை தவிர சண்டெல்லா இனத் தவர் எழுப்பிய கஜுராஹா, சோலங் கியர் எழுப்பிய குஜராத் சூரியனார் கோவில்கள் தனித்தன்மை வாய்ந்தவை. மேலும் கூர்ஜரர்கள் சோமநாதபுரத்தில் தங்கத்தால் ஆலயத்தைக் கட்டினார்கள். இந்த ஆலயத்தை கட்டிய பீமதேவ் என்ற மன்னன் கஜினிமுகமதுவுடன் போரிட் டுத் தோற்றான்.

திராவிடர்களின் இன்றைய நிலை:

சேலத்தில் ஆரியர் ஒருவர் வழக் குரைஞர் தொழில் நடத்தி வந்தார். அவர் குதிரை வண்டியில் பயணம் செய்தபோது சோதனைச்சாவடி ஊழியர் வண்டியை நிறுத்தினார். கோபங்கொண்ட வழக்குரைஞர் உடனே துப்பாக்கியை எடுத்து சுட்டார். உடனே ஊழியர் இறந்தார். வழக் குரைஞர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவர் வேறு யாரும் அல்லர்; ராஜாஜி தான். பின்னாளில் அவர் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு அடுத்து கவர்னர் ஜெனரல் ஆனார். இவ்வாறு நீதி தேவன் மயக்கமடைந்ததற்கு காரணம் ஆரியமாயை போன்ற நூல்களை படித்தவர்களுக்கு தெரியும்.

அடுத்து சென்னை மாநகரத்தில் 1996 _ 2001 காலத்தில் மேம்பாலங்களின் தரத்தைக் கண்டறிந்து அரசுக்கு அறிக்கை தர குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு மேம்பாலங்களை பக்கச்சாலைகள் போதிய அகலம் கொண்டிருக்கவில்லை. அதனால் இடிக்க முடிவு செய்தது.

அறிக்கை என்னிடம் ஒப்புதலுக்கு வந்தது. கட்டுமான விதிகளுக்குட்பட்டு, தரங்கள் சோதிக்கப்பட்ட மேம்பாலங் களை இடிப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்ற அறிக்கை சமர்ப்பித்தேன். இந்தப் பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு இன்றும் தொடர்கிறது என்பதில் என்னைப் போன்ற திராவிடர்களுக்கு மகிழ்ச் சியைத் தருகின்றது.

மேலும் சென்ற ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதியாக மாண்புமிகு கே.ஜி. பாலகிருஷ்ணன் இருந்தார். மத்திய அமைச்சராக மாண்புமிகு ஆ.ராசா இருந்தார். மக்களவை சபாநாயகராக மாண்புமிகு. மீராகுமார் இருந்தார்; தற்போதும் இருக்கிறார். ஆனால் திராவிடர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இந்தப் பலக்குறைவு ஓர் இடைக்கால நிகழ்வு.

மீண்டும் திராவிடர்களின் பலம் நிருவாகத்தில் அதிகரிப்பது உறுதி. உதாரணமாக முன்னொரு காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை ஆரியப் படைகள் சூழ்ந்தன. ஆனால் வெற்றி திராவிடருக்கே.

திராவிடர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், நீதிமன்றங்களில், தலைமைக் கணக்காயர் அலுவலகத்தில், அரசு அலுவலகங்களில், வர்த்தக நிறுவனங்களில், ஊடகத் துறையிலும் திராவிடர்களின் ஆதிக்கம் பெருக வேண்டும்.

சுயமரியாதையைக் காப்பாற்றவேண்டும். தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் வழியில் நடந்து இழந்த திராவிடரின் மாண்பு களை மீட்கவேண்டும்.

வளர்க திராவிடர்கள்!

http://viduthalai.in/new/page2/7492.html 

Friday, October 8, 2010

ஆரியராவது - திராவிடராவது - பார்ப்பனராவது - தமிழராவது - எல்லாம் காலாவதியான சரக்கு

ஆரியராவது - திராவிடராவது - பார்ப்பனராவது - தமிழராவது - எல்லாம் காலாவதியான சரக்கு! இப்பொழுதெல்லாம் அந்த வேறுபாடுகள் காணாமற் போய்விட்டன என்று விரிந்து பரந்த விசால மனம் தங்களுக்கு உண்டு என்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக நீட்டி முழங்கும் நெடுமரங்கள் நம் நாட்டில் உண்டு.

ஜில்லிட்டுப் போன அந்த மனிதர்களுக்குக் கொஞ்சம் சூடுகாட்டி, உண்மையை உணர்த்துவதற்கு ஓர் ஆதாரம்தான் பார்ப்பனர்கள் நடத்தும் தாம்ப்ராஸ் என்னும் மாத இதழ்.

இம்மாத இதழில் பார்ப்பன அமைப்பான தாம்ப்ராஸின் தலைவர் திருவாளர் என். நாராயணன் எழுதியுள்ள தலையங்கக் கட்டுரை ஒன்று போதும் - பார்ப்பனீயத்தை உதறித் தள்ளிவிட்டுப் பிராமணர் என்ற அகந்தையை அகற்றிவிட்டு மனிதர்களாக ஆகி விட்டார்களா, இல்லையா என்று தெரிந்துகொள் வதற்கு.

இன்றைக்குப் பல பிராமணக் குடும்பங்களில் அவரவர்கள் அகத்தில் உரையாடுகின்ற பொழுது பிராமண பாஷை பயன்படுத்தப்படுவதில்லை. பூஜை அறை என்றும், சுவாமி அறை என்றும், பெருமாள் உள் என்றும் ஒவ்வொரு அகத்திலும் இருந்து வந்து, அன்றாடம் காலையில் குடும்பத்தலைவரோ, குடும்பத் தலைவியோ அல்லது ஓர் குடும்ப உறுப்பினரோ ஸ்லோகங்கள் சொல்லி, ஸ்வாமி நமஸ்காரம் செய்து நைவேத்யம், கற்பூர ஹாரத்தி காண்பித்து பூஜை செய்யும் பழக்கமோ, பெரியவர்களும், சிறியவர்களும் கூட்டாக அமர்ந்து கொண்டு ஸ்லோகங்கள் சொல்லும் வழக்கமோ இன்று கடைபிடிக்கப் போவதில்லை என்று தாம்ப்ராஸ் ஏடு குறைப்பட்டுக் கொள்கிறது.

இன்றைய சமூகச் சூழலில், பொருளாதார வளர்ச்சி யில், நுகர்வோர் கலாச்சாரச் சூழலில் பார்ப்பனக் குடும்பங்களில், தாம்ப்ராஸ் கூறும் - அவர்கள் கண்ணோட்டத்தில் குறைபாடுகளாகக் கருதப்படும் நிலைமை உண்மையாகக்கூட இருக்கலாம்.

அத்தகைய பழக்கவழக்கங்கள், ஆச்சார அனுஷ் டானங்களை அன்றாடம் அவர்கள் கடைப்பிடிக்க வில்லை என்பதற்காக - பார்ப்பன உணர்வைத் துறந்துவிட்டார்கள் என்று பொருளல்ல - எந்தச் சம்பிரதாய அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க மறந்தாலும், ஆவணி அவிட்டப் பூணூலை மட்டும் புதுப்பித்துக் கொள்ள மறந்துவிடுவதில்லை - தவிர்ப்பதும் இல்லை.

பயணக் காலங்களில் உடன் பயணிக்கும் மற்றவர்கள் இதனைச் சரியாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. சூட்டு - கோட்டு அணிந்திருந்தாலும், அந்தப் பூணூலை அணிவதை மட்டும் தவிர்ப்பதில்லை.

அன்றாட அனுஷ்டானங்களை அவர்கள் அனுசரிப்பதில்லை என்பதைக் குறையாகக் கூறி அவற்றை அனுசரிக்கவேண்டும் என்று அவர்களின் அமைப்பான தாம்ப்ராஸ் வலியுறுத்துவதன் நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வீட்டில் பிராமண பாஷையை ஏன் பயன்படுத்து வதில்லை - அது தவறு - அந்தப் பாஷையைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று பாடம் படிப்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?

பல பிராமண குடும்பங்கள் அவர்களது அன்றாட வாழ்க்கை முறையில் பெரும் Technical Correction செய்யப்படவேண்டிய நிலையில் இருக்கின்றன.

வெகு வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையால் ( Life Style ) நமது கலாச்சாரம், பாரம்பரியம் மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை மனதிலே கொண்டு, நாம் தக்க நடைமுறைகளைக் கடைப்பிடித் தால்தான் நம் கலாச்சாரப் பாரம்பரிய வாழ்க்கை நமது இளைய தலைமுறையினரால் தொடரப்படும்; காப்பாற்றப்படும் என்றும் தாம்ப்ராஸ் ஏடு எழுதுகிறது.

இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? அவர்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதில் அவர்கள் கவலை செலுத்துகிறார்கள் என்பதுதானே?

கட்டிக் காக்கப்படும் கலாச்சாரம் என்றால் அதன் பொருள் என்ன? ஜாதியில் உயர்ந்தவர்கள் என்பதைத் தவிர அவர்களின் கலாச்சாரம் என்ன?

வீட்டிலே சமஸ்கிருதத்தைப் பேசவேண்டும் என்று வற்புறுத்துவதன் நோக்கம் என்ன?

நாம் தமிழர்கள் அல்ல; நாம் இனத்தால் ஆரியர்கள் - அதனை மறந்துவிடவேண்டாம் என்று எச்சரிப்பது தானே?

தாக்குதலுக்கு அவர்கள் உள்ளாகி வருகின்றனர் என்பதன் உட்பொருள் என்ன? ஜாதி வேண்டாம் - சமநிலை உருவாக்கப்படவேண்டும் என்று கூறுவது அவர்களைப் பொறுத்தவரை தாக்குவதாக கொள் கின்றனர் என்பதைக் கவனிக்கவேண்டும்.

அவர்களுக்கென்று உள்ள அமைப்பானது அவர்களைப் பழைய சனாதனத்தில்தான் கட்டிப் போட விரும்புகிறது - பார்ப்பனக் கலாச்சார வேலியைத் தாண்டி வெளியில் வந்துவிடக் கூடாது என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று எழுதும், கூறும், நம்பும் தமிழர்கள் இந்த நிலைகளை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கக் கடமைப்படவில்லையா?

ஆவணி அவிட்டத்தை நிறுத்தும்வரை - அவர்கள் எந்த வேடம் தரித்தாலும் அவர்கள்மீது ஆழமாகப் பதிந்த உயர்ஜாதி ஆணவ முத்திரை அழியப் போவதில்லை.
http://www.viduthalai.periyar.org.in/20101008/news04.html

weather counter Site Meter