Pages

Search This Blog

Showing posts with label 2ஜி அலைக்கற்றை. Show all posts
Showing posts with label 2ஜி அலைக்கற்றை. Show all posts

Monday, February 14, 2011

பா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முன்னாள் அமைச்சர் அருண்ஷோரிக்கு சம்மன்

அருண்ஷோரி
2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பா.ஜனதா முன்னாள் மத்திய அமைச் சர் அருண்ஷோரிக்கு, பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சி.பி.அய். சம்மன் அனுப்பி உள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட் டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத் தியது.

இந்தப் பிரச்சினை யில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரை முழுமையாக முடக்கின. இந்த புகா ரின் பேரில் கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று உச்சநீதிமன் றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சி.பி.அய். யும் தீவிர விசாரணை மேற்கொண்டது.

தொலைத் தொடர் புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, டி.பி.ரியாலிட்டி நிறுவன அதிபர் பல்வா மற்றும் தொலை தொடர்புத் துறை உயர் அதிகாரிகள் சிலரை சி.பி.அய். கைது செய்து விசாரணை நடத்தியது. ஆ. இராசாவும், பல்வா வும் தொடர்ந்து சி.பி. அய். காவலில் எடுக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் அமைக் கப்பட்ட விசாரணை ஆணையம் அறிக்கை யில், கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டில் வெளிப்படையான முடிவு எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாற்றப்பட்டு இருந்தது.

சிக்குகிறது பா.ஜ.க.,

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற தவறான கொள்கை அறி முகப்படுத்தப்பட்டதற்கும் பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் காரணம் என்றும் அதில் குறிப் பிடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே உச்சநீதி மன்றம் 2ஜி அலைக் கற்றை பிரச்சினையில் 2001ஆம் ஆண்டில் இருந்தே விசாரணை நடத்தும்படி உத்தர விட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து, வாஜ்பேயி தலைமை யிலான பா.ஜனதா கூட் டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவி வகித்த அருண்ஷோரி யிடம் விசாரணை நடத்த சி.பி.அய். முடிவு செய்தது.

அதன்படி ஸ்பெக்ட் ரம் முறைகேடு புகார் பற்றி விசாரணை நடத் துவதற்காக பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜ ராகும்படி அருண் ஷாரிக்கு, சி.பி.அய். சம் மன் அனுப்பி உள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த அருண்ஷோரி, விசாரணையின்போது சில முக்கிய ஆவணங் களை சி.பி.அய்.யிடம் கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

50 உரிமங்கள் மறைந்த பிரமோத் மகா ஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் தொலை தொடர்புத் துறை அமைச்சர்களாக பதவி வகித்தபோது நடை பெற்ற கூட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் குறித்தும் சி.பி.அய் ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு மாறாக, பார்தி, வோட போன், அய்டியா போன்ற நிறுவனங்களுக்கு 50 உரிமங்கள் வரை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறு வனங்களுக்கு வழங்கப் பட்ட உரிமம் தொடர் பான ஆவணங்கள் குறித் தும் விசாரணை நடத் தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் முறை கேட்டால் பயன் அடைந்தவர்கள் பற்றி யும் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தின் புதிய உத்தரவுப்படி தனது விசாரணை வளை யத்தை சி.பி.அய். மேலும் விரிவுபடுத்தி யுள்ளது. தொழில் அதிபர் அனில் அம்பானியின் ஏ.டி.ஏ.ஜி. குழுமம் உள்பட பல் வேறு நிறுவனங்களின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வரு கிறது.

அனில் அம்பானி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு இது தொடர்பாக சம் மன் அனுப்பப்பட்டு உள்ளது. எங்கள் விசா ரணையின் ஒரு கட்ட மாக பல்வேறு அதிகா ரிகளை விசாரணைக்கு அழைத்து இருப்பதாக சி.பி.அய். செய்தித் தொடர்பாளர் வினிதா தாகூர் நேற்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கடந்த வாரத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அருண்ஷோரி, ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பிரதமர் மன் மோகன்சிங்கை சந்தித்து ஆரம்பத்திலேயே எச்ச ரித்ததாகவும், ஆனால் பிரதமர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்றும் புகார் கூறி இருந்தார்.

பா.ஜ.க.மீதும் குற்றச்சாற்று

அதேபோல் பா. ஜனதா தலைவர்களும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக் கடி கொடுக்கத் தவறி விட்டனர் என்றும் அவர் குற்றம்சாற்ற இருந் தார்.

அருண்ஷோரிக்கு சி.பி.அய். சம்மன் அனுப்பி இருப்பது குறித்து கருத் துத் தெரிவித்த பா. ஜனதா செய்தித் தொடர் பாளர், பா.ஜன தாவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ப தால் எந்த விசாரணை யையும் சந்திக்க தயார் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், கடந்த 2007ஆம் ஆண் டிலேயே பா.ஜனதா தலைவர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் இந்த முறைகேடு பற்றி தெரிவித்ததாகவும், அதற்கு அந்த தலை வர்கள் அமைதி காத்த தாகவும் அருண்ஷோரி குறிப்பிட்டு இருந்ததை அவர் நிராகரித்தார்.
http://viduthalai.in/new/e-paper/3405.html 

Tuesday, January 25, 2011

புஸ்வாணமாகிப்போன 2G பாணம்! கிட்டு மாமா - பட்டு மாமி புலம்பல்!

பட்டு மாமி: ஏன்னா! சீக்கிரம் இங்கே வாங்களேன்! இந்த டி.வியில என்ன செய்தி போடறா பாருங்க!

கிட்டு மாமா: ஏன்டி இப்படி பதர்றே! என்ன செய்தி டி.வி.யில?

பட்டு மாமி: பாருங்கோன்னா! இந்த CAG காராளை. நம்மவா எல்லாம் இந்த ஸ்பெக்ட்ரம் பிரச் சினையை வச்சுத்தானே, இந்த மு.கவை வீட்டுக்கு அனுப்பலாம்னு திட்டம் போட்டு, நம்மவா பத்திரிகையெல்லாம், இந்த பொய்ச் செய்தியை திரும்பத் திரும்ப போட வச்சு, இவ்ளோ கஷ்டப் பட்டோம்.

கிட்டு மாமா: அதுக்கு என்னடி இப்ப!

பட்டு மாமி: இந்த PAC முன்னாடி விசாரணையில, இந்த CAG சொல்றப்ப, ஸ்பெக்ட்ரம் நட்டம் 56,666 கோடி யிலிருந்து 1,76,000 கோடின்னு சும்மா ஒரு ஊகத்துல விளையாட்டுத்தனமா சொன்னோம்னு சொல்லிட்டாளாம். இந்த ஸ்பெக்ட்ரம் கேசு இவ்வளவு வீக்காயிடுச்சேன்னா?

கிட்டு மாமா: பட்டு! இன்னைக்கு இல்லைடி! என்னைக்கு இந்த தி.க. வீரமணி இந்தக் கேசை கையில எடுத் தாளோ, அன்னைக்கே இந்தக் கேசு வீக்காயிடுச்சுடி!

பட்டு மாமி: இந்த தி.க.வும், மு.கவும் இருக்கிற வரை நம்மவா பருப்பு ஒன் னும் வேகாது போல இருக்கேன்னா?

கிட்டு மாமா: என்னடி பண்றது! நம்பவாளும் கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்!

பட்டு மாமி: என்னாண்ணா சொல்றேள்!

கிட்டு மாமா: பின்ன என்னடி! இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எடுத்துக் கோயேன், முதல்ல 30,000 கோடின்னா; பின்னாடி 60,000 கோடின்னா; சிஙிமி வெறும் 20,000 கோடின்னா; இப்ப வந்து 1,76,000 கோடின்றா; அருண் ஷோரி உடனே பதறிப்போய் ஓடிவந்து இந்து பேட்டியில் 30,000 கோடிதான் இருக்கும் 1,76,000 கோடியைப் பிடிச் சுட்டு தொங்காதேள்ன்னார். நம்மவா கேட்டாளா! திரும்பத் திரும்ப 1,76,000 கோடி கோடின்னு கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி சொல்லின்டே இருக்காளே!

பட்டு மாமி: அருண்ஷோரி கரெக் டாத்தான் சொல்லிருக்கார்! பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல-னுமோன்னா?

கிட்டு மாமா: பொய்யைச் சொன்னா மட்டும் போதாதுடி பட்டு! உண் மையை மறைக்கவும் தெரிஞ்சிருக்கணும்!

பட்டு மாமி: நன்னா சொன்னேள்! போங்கோ! அதனாலதான் நம்மவா பத்திரிகையெல்லாம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் வந்த லாபமான ரூ.77,938 கோடியைப் பற்றி மூச்சுக் கூட விடலே!

கிட்டு மாமா: இவா மூச்சுவிட்டிருந்தா, அவ் வளவுதான் பிரச்சினை காத்துபோன பலூனா போயிருக்குமேடி!

பட்டு மாமி: எனக்கு ஒரு விஷயத்தை நினைச்சா, மனசே ஆறலை போங்கோ!

கிட்டு மாமா: என்னடி அது!

பட்டு மாமி: இதோ அரெஸ்ட் பண்ணப் போறாள்! அதோ அரெஸ்ட் பண்ணப் போறாள்! சி.பி.அய். விசாரணை முடிச்சு அங்க வைச்சே அரெஸ்ட் பண்ணப் போறான்னு நம்மவா டி.வி.யெல்லாம், CBI வாசல்லே ராப்பகலா காமிராவை ரெடியா கையிலே பிடிச்சுண்டே, கண்ணுல ஒரு பொட்டுத் தூக்கம்கூட இல்லாம பழியாக் கிடந்தாளே! அவங்க மனச் சாந்திக்காவது அரெஸ்ட் பண்ணியிருக் கலாமேன்னா!

கிட்டு மாமா: ஏண்டி! நீயும் நம் ஜெயலலிதா மாதிரி அரெஸ்ட்பண்ணு! அரெஸ்ட் பண்ணுன்றே! CBI என்ன உங்க தோப்பனார் வீடா! நீ நினைச்சா மாதிரியெல்லாம் நடந்துக்கறதுக்கு!

பட்டு மாமி: நம்ம ஜெயலலிதாவை நினைச்சா நேக்கு ரொம்ப அழுகை அழுகையாய் வர்றதுண்ணா!


கிட்டு மாமா: ஏண்டி!


பட்டு மாமி: கூட்டணிக்காக இவாளும் மாய்ஞ்சு மாய்ஞ்சு கூப்பிட்டுப் பார்க் கறா? காங்கிரசுகாரா இவளை கண்டுக் கவே மாட்டேங்கறாள்! நம்மாத்து மனுஷி இவ்ளோ கஷ்டப்படறாளேன்னு நேக்கு ரொம்ப வருத்தமா இருக்குன்னா?


கிட்டு மாமா: காங்கிரஸ்காரா ஜெயலலிதா கிட்டே எப்படிடி வருவா! அந்தக் காலத்திலே சோனியாவை எவ்வளவு மோசமான்னா திட்டிருக்கா! புருஷாளுக்கே துரோகம் பண்ணவள்னு ஒரு பழியைப் போட்டாளே! இவா தமிழ்லே சொன்னதை யாராவது ஒரு காங்கிரசுகாரா சொல்லாமலா விட் டிருப்பா? பட்டு மாமி: அதான் டைம்ஸ் நவ் பேட்டியில பழசையெல்லாம் மனசுல வச்சுக்கக் கூடாதுன்னு ஜெயலலிதா சொல்லிட்டாளே! நடந்ததுக்கு வருத் தம் தெரிவிச்ச மாதிரி தானேன்னா!

கிட்டு மாமா: அப்படியே வச்சுக்கிட் டாலும் அந்தத் தப்பை இவா இன்னும் பண்ணிக்கிட்டேதானே இருக்கா?

பட்டு மாமி: என்னண்ணா சொல் றேள்!

கிட்டு மாமா: பின்னே என்னடி! ஒரு பக்கம் கூட்டணிக்கு அழைப்பு விடறா! இன்னொரு பக்கம் சுப்பிரமணிசாமிய விட்டு ஜெயா டிவில சோனியாவைப் பத்தி மோசமா பேட்டி குடுக்க வைக்கறா! ராஜிவ்காந்தி, இந்திரா காந்தி இவாளின் கொலைக்கே, சோனியா காந்திதான் காரணம்னு பேட்டி கொடுத்துண்டிருக்கா. ஸ்பெக்ட்ரம் பணம் சோனியா காந்தியின் சிஸ்ட்டர்ஸ்கெல்லாம் போய் சேந்திருக்குன்னு சொல்றா சுப்பிரமணிய சாமி! இத ஏன் ஜெயா டி.வி.யில போடணும்?

பட்டு மாமி: இதுக்காக நீங்க ஏண்ணா ரொம்ப அலுத்துக்கறேள்! நம்ப தமிழ்நாட்டு காங்கிரசு காரா ளுக்குத்தான் இதைப் பெரிசா எடுத் துண்டு போயி சோனியாவிடம் சொல் லவா போறாள்?


கிட்டு மாமா: அப்படி இல்லடி பட்டு! ஒருத்தருக்கு இல்லைன்னாலும் இன்னொருத்தருக்கு கொஞ்சமானும் உறைக்குண்டி! ஜெயலலிதா போடற இரட்டை வேடத்தை அவா புட்டு, புட்டு வச்சிருவாளே! இதென்ன! ஜெய் சங்கர், சோவுடன் இரட்டை வேடத்தில் நடித்த வந்தாளே மகராசி சினிமா வா இது! அரசியல்டி! அரசியல்!

பட்டு மாமி: போங் கோண்ணா! நீங்க ஒரு சுத்த விவஸ்தை கெட்ட பிராம்மணன்! செத்துப் போன ஜெய்சங்கர் பேரை இந்த நேரங்கெட்ட நேரத்துலே ஏன் இழுக் கறேள்!

கிட்டு மாமா: சரிடி பட்டு! ஜெய்சங்கரை நான் இழுக்க மாட்டேன்! இந்த சுப்பிரமணிய சாமிய நினைக் கறப்ப, இந்த சந்திரலேகாவோட ஆசிட் மேட்டரும் எனக்கு நினைப்பு வந்து தொலையறதேடி! இதேமாதிரி ஜனங் களுக்கும் நினைப்பு வந்திடுமோன்னு பயமாயிருக்கேடி!

பட்டு மாமி: அதுக்காக நீங்க ஒன்னும் பெரிசா வருத்தப்படாதேன்னா! ஆம்படையானைப் பறி கொடுத்த சங்கரராமன் ஆத்துக் காரியவே பல்டி அடிக்க வச்சவா நாம! சந்திரலேகா, அனுராதா ரமணன், சங்கரராமன்னு நம்மவாளையே நாம காலி பண்ணினாலும் பிராமண தர்மத்தை காப்பாத்தறதில் எவ்வளவு ஒத்துமையா இருக்கோம்! அதைப் பாருங்கோண்ணா?

கிட்டு மாமா: அதுவும் கரெக்ட் தாண்டி பட்டு! நல்ல வேளையா, நம்ப பெரியவா சங்கராச்சாரி பத்தியோ, ஜெயா வழக்கு பத்தியோ, ஒரு வார்த்தை கூட எழுதாம ரொம்ப உஷாரா இருக்கா! நம்மவா பத்திரிகைகளுக்கு இருக்கற இந்த ஒற்றுமையை நினைச்சா நேக்கு ரொம்ப பெருமையா இருக்குடி!

பட்டு மாமி: பாத்திரிகைன்னதும்தான் நேக்கு ஞாபகம் வர்றது! நம்மவா ஜூவி ஒரு மிகப்பெரிய கின்னஸ் சாதனையைப் பண்ணி இருக்கா.

கிட்டு மாமா: என்னடி அந்த சாதனை!

பட்டு மாமி: ஜூ.வி.யில் ரிப்பீட்டா வந்த ஒரு வார்த்தை ஆ.ராசா. உலகத்திலேயே எந்த ஒரு பத்திரிகையும் ஒரே வார்த்தையை இத்தனை தடவை எழுதினதா வரலாறே இல்லையாம் போங்கா! மிகப்பெரிய ரெகார்ட் பிரேக்கே பண்ணி இருக்கா நம்ம ஜூ.வி! அதுமட்டுமில்லேண்ணா; ஜூ.வி. நிறுவனத்துல இருக்கறவாளுக்கும் பொம்பனாட்டிகள் உட்பட ஜூ.வி. குடும்பத்தாரும் ஆ.ராசாவை பற்றி மட்டும்தான் நினைக்கனும்னு உத்திரவே போட்டிருக்கான்னா பாத்துக்கோங்கோ! கிட்டு மாமா: இந்த கின்னஸ் ரெக் கார்டெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்மவா பத்திரிகை அத்தனைக்கும் சவால் விடறாளே இந்தத் தி.க. விடுதலையும், மு.க. முரசொலியும்! பட்டு மாமி: ஆமாண்ணா! பொய் யானாலும் பவர்புல்லாதான் நம்மவா பாணம் தொடுக்கறா! ஆனா நம்மவா கொடுக்கற பவர்புல்லான பாணத்தை எல்லாம் புஸ்வாணமாக்கிடறாளே, இந்த விடுதலையும், முரசொலியும்!

கிட்டு மாமா: அது மட்டும் இல்லடி பட்டு! இப்ப தி.மு.க. எதிர் பிரச்சாரம் சூறாவளி மாதிரி திடீர்னு சூடுபிடிச்சி எல்லாரையும் ஆட்டிண்டிருக்கு. நம்மவா இப்ப கப்சிப்னு ஆய்ட்டா!

பட்டு மாமி: அச்சச்சோ! இப்ப நம்மவா என்னண்ணா பண்ணுவா?

கிட்டு மாமா: அதான்டி தெரியலை! நேக்கும்! பத்தும் பத்தாதற்கு இந்த தி.க. வீரமணி வேற பழசையெல்லாம் தோண்டி தோண்டி எடுத்துக் குடுத்துக் கிட்டே இருக்கா! லைலா புயலாவது பரவாயில்ல! இந்த ராடியா புயல் வேற எப்படி எந்தப் பக்கம் வரும்னே சொல்ல முடியலேடி! அனந்த குமார், எல்.கே. அத்வானி, நிதின் கட்காரின்னு நம்ம பி.ஜே.பி. வேற இந்த ராடியா புயல்ல இப்ப லேட்டஸ்ட்டா மாட் டிண்டிருக்கா!

பட்டு மாமி: தி.க. வீரமணி எடுத்துக் கொடுக்கற செய்தில, நம்ம ஜென்டில் மேன் வாஜ்பேயி, அருண்ஜெட்லி, சுக்ராம், ஜக்மோகன், அருண்ஷோரி, பிரமோத் மகாஜன்னு எல்லாக் கதையும் இப்ப வர்றது!

கிட்டு மாமா: தொலைத்தொடர்புத் துறையை அதிகமா சாதனைக்காக நம்ம வாஜ்பாயிக்கு நோபல் பரிசு வேற கொடுக்கணும்னு எல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டா. இன்னும் என்னனென் னத்தா நோண்டப்போறாளோ தெரியல. 2001இல் இருந்துவேற விசா ரணை வைக்கனுனிட்டா.

பட்டு மாமி: அய்யய்யோ! அப் புறண்ணா! இந்த கபில் சிபல் நம்மவா தானேண்ணா! வாயை வச்சுண்டு சும்மா இருக்கப்படாதோ! பி.ஜே.பி. பீரியட்ல 1,43,000 கோடி லாஸ்னு எடுத்துக் கொடுக்கறாரே! என்.டி.டி.வி. பேட்டியில!

கிட்டு மாமா: நல்ல வேளைடி பட்டு! நம்மவா பத்திரிகையெல்லாம், கொஞ்சம் கூட இந்த விஷயத்தை சட்டை பண்ணலேடி!

பட்டு மாமி: ஏன்ணா அவாளுக்கு மட்டும் தெரியாதா என்ன? எந்தச் செய்தியை பெருசா போடணும், எந்த செய்தியை சைலண்டா விடனுமின்னு!

கிட்டு மாமா: இருந்தாலும் வீரமணி விடுதலையும், மு.க. முரசொலியும் இதைக் கொட்டை எழுத்தில் போட்டு பேட்டியோட போட்டுட்டாளே!

பட்டு மாமி: எது எப்படியோண்ணா! உச்சநீதி மன்றம் நம்மவா கஸ்டடியிலதான இருக்கு! புதுவருடம் 2011 இல் நமக்கு சாதகமாக நல்ல செய்தியை பத்திரிகைகள் போடத்தான் போறா! நம்ம அக்ரஹார மனுஷா வீட்டில் எல்லாம் பால் பாயசம் பொங்கி கொண்டாடத்தான் போறாள்!

கிட்டு மாமா: நீ ஒரு அவசரக் குடுக்கைடி பட்டு! முன்ன ட்ரிப்பு ஈழப் பிரச்சினையில நம்மவா இப்படித்தான் ஸ்டன்ட் அடிச்சா? எல்லாமே வேஸ் டாயிடுத்தே! ஸ்பெக்ட்ரம் பிரச்சினை யில் நாம பாயசம் வக்கப்போறமா, இல்லை, நம்மளையே கலக்கி பாயசமா ஆக்கப் போறாளான்னு பொறுத் திருந்து தாண்டி பார்க்கணும்!

பட்டு மாமி: ஈழப்பிரச்சினைன்னு சொன்னதும்தான் எனக்கு ஞாபகம் வர்றது! இந்த வி.சி. காரா மறைமலை நகரில் நடத்துன மாநாட்டில், எக்கச்சக்கமான கூட்டமாமே! நம்ப வேலைக்காரி அஞ்சலை செல்போனில் யார்ட்டயோ பெருமையா சொல்லிட் ருந்தா! தி.க. வீரமணியும் கலந்துண்டு அவாளையெல்லாம் உற்சாகப் படுத்திட்டாளாமே!

கிட்டு மாமா: நல்ல வேளைடி பட்டு! நம்மவா பத்திரிகை எல்லாம் அது பத்தின போட்டோ, ஈழப்பிரச்சனை ஒட்டிய தீர்மானம், இவை பற்றி ஏதும் பெரிசா செய்தி போடலே!

பட்டு மாமி: ஆமாண்ணா பின்னே! சேரிக்காராளையெல்லாம், படம் எடுத்தா நம்மவா காமிரா தீட்டாயிடு மோன்னா! மனுஷாள்னா தலைலே ஜலம் விட்டுண்டு தீட்டுக் கழிச்சுக்க லாம். காமிரவுக்கு அந்த மாதிரி பண்ண முடியாதேண்ணா!

கிட்டு மாமா: ஆமாண்டி பட்டு! கரெக்டா சொன்னே!

http://viduthalai.in/new/archive/1813.html

Monday, December 6, 2010

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவை குறை கூறுவது அர்த்தமற்றது! எக்னாமிக் டைம்ஸ் ஏடு படப்பிடிப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கண்மூடித் தனமாக முன்னாள் அமைச்சர் இராசா மீது குற்றம் சாற்ற வேண் டாம் என்று எக்க னாமிக் டைம்ஸ் பத்தி ரிகை செய்தி வெளியிட் டுள்ளது.

அந்தக் கட்டுரையில் மத்திய அரசில் தொழில் நுணுக்கம் நன்கறிந்த உயர் அதிகாரிகளின் பற் றாக்குறையால் 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு அமைச் சரைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த விவகாரத்தில் அத்துறை சார்ந்த செய லாளரின் ஆலோசனைப் படி செயல்பட்ட அமைச் சரைக் குற்றம் சாற்று வதில் அர்த்த மில்லை என்றும் தெரி விக்கப் பட்டுள்ளது.

சி.பிஅய். மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை முடியாமல், தீர்ப்பும் வராத நிலை யில் அவசரப்பட்டு முன்னாள் அமைச்சர் ராசா மீது குற்றம் கூறு வதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஏல விவகாரத்தில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப் பாட்டு ஆணையத்தி லேயே மாறுபட்ட கருத்து நிலவியது. பா.ஜ.க. ஆட்சியில் ஆணையத் தலைவர் பிரதீப் பைஜால் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை எதிர்த்தார் என்றும், அவருக்குப் பின் வந்த நிரிபென்த்ரா மிஷ்ரா ஏலத்தை ஆதரித்தார் என்றும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 2ஜி அலைவரிசை ஒதுக் கீட்டில் அரசுக்கு 44 ஆயிரம் பவுண்டு வரு வாய் கிடைத்த நிலை யில், 3ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் 220 கோடி பவுண்டு கிடைத்த போது, யாரும் இது குறித்து விமர்சனம் செய்யவில்லை என்றும் கட்டுரையாளர் தெரிவித் துள்ளார்.

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி உத் தேசமாக வெளியிட்ட தொகையை அதன் உண் மைத் தன்மையை ஆரா யாமல் ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்பட்ட நாடு என்ற வகையில் கண்மூடித்தன மாக குற்றம் சாற்றாமல், இப்பிரச்சினையை அணுக வேண்டும் என் றும் எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் கபில் சிபல் கண்டனம்

இதற்கிடையே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, நாடாளு மன்றக்கூட்டுக்குழு விசாரணை கோரும் எதிர்க் கட்சிகளின் நட வடிக்கை நியாய மற்றது என மத் திய மனிதவள மேம்பாடு மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் பிரச்சி னையை எழுப்பி நாடா ளுமன்றத்தை எதிர்க் கட்சிகள் முடக்கி வரு வது குறித்து கபில் சிபல் டில்லியில் அளித்துள்ள ஒரு பேட்டியில், எதிர்க் கட்சிகளின் கோரிக்கை முற்றிலும் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார். விசாரணைகள் வெளிப் படையாக நடைபெறு வதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத் தில் ஊக அடிப்படை யில் இழப்பைக் கணக் கிடக் கூடாது என்றார். 2ஜி ஒதுக்கீட்டையும், 3ஜிக்கு ஏலத்தில் கிடைத்த தொகையை யும் ஒப்பிட்டுப் பார்ப் பது சரியாகாது என் றும் அவர் கூறினார். அரசின் செயல்பாடு களை முடக்கவே, எதிர்க் கட்சிகள் தொடர்ந்து கூட்டுக் குழு அமைக்க வலியு றுத்துவதாகவும், கபில் சிபல் குற்றம் சாற்றினார்.

ஊழல் பற்றி பேச ஜெ.வுக்கு அருகதையில்லை!

புதுவையில் செய்தி யாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் வி.நாராயணசாமியும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருவதன் மூலம் அரசுக்கு இது வரை 78 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். ஊழல் பற்றிப் பேச, பா.ஜ.க.வுக்கோ, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலி தாவுக்கோ அருகதை இல்லை என்றும் நாரா யணசாமி தெரிவித்தார்.

நன்றி: முரசொலி

weather counter Site Meter