2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற போர்வையில் பார்ப்பன - முதலாளித்துவ சக்திகள் கூட்டு சேர்ந்து தி.மு.க. ஆட்சியை ஒழித்திட முனைந்துள்ளதன் முகத்திரையைக் கிழித்துக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அய்ந்தாம் முறை தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி, தமிழ்நாட்டின் அசோகரான தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில், இந்தியாவே கண்டு வியக்கத்தக்க வகையில் நடைபெற்று பீடுநடை போடுகிறது. சொன்னதையெல்லாம் செய்து முடித்த ஆட்சி என்ற பெருமையோடு, சொல்லாததையும் செய்து - 108 கலைஞர் உயிர் காக்கும் திட்டம், குடிசைகளற்ற தமிழகம் என்ற இலக்குடன் இயங்கும் கலைஞர் வீட்டுவசதித் திட்டம் போன்றவைகளால் மற்ற கட்சிகளால் எட்ட முடியாத சரித்திர சாதனையின் சிகரத்திற்கே சென்று பெருமை கொண்டுள்ளது தி.மு.க. ஆட்சி! மத்தியில் அய்.மு. கூட்டணியில் தனது பங்கை சிறப் புடனும், சுருதி பேதமின்றியும், கூட்டணித் தலைமையுடன் சுமுக உறவு கொண்டு, முன்பு அவர்கள் தமிழ்நாட்டில் தவ றான கூட்டணியில் சிக்கி அனுபவித்த தலைவலி எதுவும் இன்றி ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெறுவது உலகறிந்த ஒன்று. இதைக்கண்டு பொறுக்காத பார்ப்பனர்கள், விபீட ணர்கள், பதவி இழந்த விரக்தியாளர்கள், நாள்தோறும் தி.மு.க. ஆட்சியின் ஒளி மேலும் தகத்தகாய ஒளியாவது கண்டு ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது. வீழ்த்த சதிவலை பின்னுகிறார்கள்.
கற்பனை அனுமானம்
இந்நிலையில், திடீரென்று அவர்களுக்கு ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை (CAG அறிக்கை) - 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை கிடைத்துவிட்டதை ஏதோ ஒரு புதையல் கிடைத்ததைப்போல எண்ணி, இதைப் பெரிதாக ஊதி ஊதி, மயிரைச் சுட்டுக் கரியாக்கக் கனவு கண்டு வருகின்றனர்! 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை - இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்றெல்லாம் கூறுகின்றனரே - என்ன நடந்துவிட்டது? அத்தொகையை யாராவது எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்களா? இப்படி.... செய்ததற்குப் பதில், இப்படி ஏலம் விட்டிருந்தால், அப்படிச் செய்திருந்தால், இந்தப்படி முறை மாறியிருந்தால் இவ்வருமானம் வந்திருக்குமே என்ற கற்பனை அனுமானத்தின் மீது கணக்குப் போட்டு, கூறப்பட்ட ஒரு தகவல் அறிக்கையே தவிர, அது ஒன்றும் ஆராய்ந்து நீதிமன்றத்தாலோ, வேறு விசாரணை அமைப்புகளாலோ நிறுவப்பட்ட உண்மை அல்ல. தீர்ப்பு அல்ல! தி.மு.க. மீது - அதன் திறமைமிகு அமைச்சர்களில் ஒருவரான ஆ.இராசாமீது சேற்றை வாரி இறைத்து, குற்றமற்ற அவரை வெளியேறச் செய்து, அதன்மூலம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை முறித்து, பார்ப்பன ஜெயலலிதாவுக்கு வரும் தேர்தலில் புனர்வாழ்வு தந்து - ஊழல் வழக்குகளிலிருந்து கரையேற்றவேண்டும் என்பது பார்ப்பன ஊடகங்களின் பேராசை பதவிக் காய்ச்சல்! (பன்றிக் காய்ச்சலைவிட கொடுமையான பதவிக் காய்ச்சலுக்கு ஆளான பலர் - விபீடணர்களும் சேர்ந்து இன்று தலை துள்ளி குதிக்கின்றனர்).
பா.ஜ.க.வின் உள்கட்சிச் சண்டை!
கலகலத்துவரும் கட்சி - உள்கட்சி சண்டையில் நாளும் உளுத்துவரும் பா.ஜ.க., எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் எதை எதையோ நாளும் செய்து வருகின்றது. நாடாளுமன்றம் மக்களின் பிரதிநிதிச் சபை - ஜன நாயகத்தின் பாசறை - அங்குதான் எந்தப் பிரச்சினையும் விவாதித்துத் தீர்வு காணுவது மக்களாட்சியின் மாண்பு. அதை கடந்த 9 நாள்களாக நடத்தவிடாமல் முடக் கிடும், சண்டித்தனம் - சந்தைக் கூச்சல் போடுவது - கலைவது என்று - வாக்களித்தோர் வெட்கப்படும் நிலையில், கண்ட உருப்படி பலன் என்ன? யாரோ அரசியல் தரகர் போன்ற ஒருவர் ஒரு கடிதம் எழுதி ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரை பிராசிகியூட் செய்ய அனுமதி கேட்டால், உடனே அடுத்த தபாலில் பிரதமர் எக்ஸ்பிரஸ் பதில் எழுதி அனுப்பி விடுவாரா? ஏன் காலதாமதம் என்று கேட்பதே சரியான கேள்வியா? நியாயமானதா? இதன்மூலம் ஒரு சில ஆதிக்க சக்திகள் பிரதமரையும், அவரது நேர்மை, நாணயம்பற்றி கறைபடுத்துவதற்கு முயற்சித்து மூக்கறுபட்டுள்ளனர். மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அட்டர்னி ஜெனரல் - வாகனாவதி இப்படி ஒரு கடிதம் பிரதமருக்கு சு.சாமி எழுதியதே தவறு என்று ஓங்கி அடித்துவிட்டார் நீதிபதிகள் முன்பு - பிறகு பிரதமர்பற்றி பிரச்சினையே இதில் அடிபட்டுவிடவில்லையா? உண்மைகள் நிச்சயம் வெளிச்சத்திற்கு மெல்ல வந்து கொண்டுள்ளன.
பார்ப்பன சக்திகள்- முதலாளிகளின் கூட்டணி!
இதற்காகவே சில ஊடகங்கள், பார்ப்பன ஆதிக்கச் சக்திகள், ஏகபோகத்தை இழந்த முதலாளிகள், கூட்டணி சேர்ந்து தங்களிடம் உள்ள சில நாளேடுகள், வார ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்களை பிரச்சார கருவிகளாக்கி தி.மு.க. அமைச்சர் ஆ.இராசாமீது வேட்டையாடி நாளும் கடித்துக் குதறி வருகின்றன! அவரது ராஜினாமா பெற்றுவிட்ட பின்பு, நாடாளுமன் றத்திற்கு வந்து விவாதங்களில் கலந்து, தங்களிடம் உள்ள ஊழல் களஞ்சியங்களையெல்லாம் அவிழ்த்துக் கொட்டி விவாதிக்க வேண்டியதற்குப் பதிலாக, 8 நாள்களாக ஏன் விவாதம் நடத்த முன்வர பயப்படுகின்றனர்? சரக்கு இல்லை அவர்களிடம்.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் இதுவரை ஏற்பட்ட பலன் என்ன?
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையில் உள்ள பொதுக்கணக்குக் குழு (PAC) விசாரணை என்பதையேகூட ஏற்க மறுத்து - இல்லாத ஊருக்குப் போகாத பாதையைக் காட்டுகின்றனர்! J.P.C. (Joint Parliamentary Commitee) விசாரணை ஏற்கெனவே நடைபெற்றதே - அதனால் ஏற்பட்ட பலன் என்ன? 1. போஃபர்ஸ் பீரங்கி வாங்கிய ஊழல் - 1987 ஆம் ஆண்டு 2. பங்குச் சந்தை ஊழல் - அர்ஷத் மேத்தா 1992 (ரூ.1000 கோடி ஊழல் - அனுமானம் அல்ல, நடந்தது) 3. பங்குச் சந்தை தரகர் கேதன் பராக் 1999 முதல் 2001 வரை 4. பூச்சி மருந்து கோக்கோகோலா ஊழல் - 2004 (ஜே.பி.சி. - விசாரணையால் எந்தத் தீர்வாவது கிடைத்ததா?) இவை எல்லாம் நடந்தவை. 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஊழலே அல்ல; அனுமான கற்பனை. இப்படி செய்திருந்தால், அப்படிக் கிடைத்திருக் குமே என்ற ஒரு புள்ளி விவரக் கணக்கு. இதனை வைத்துப் பாமரர்களை ஏமாற்ற ஒரு லட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் உலகிலேயே உண்டா என்ற முதலைக் கண் ணீர் வெள்ளம் என்று ஏமாற, மக்கள் எல்லாம் முட்டாள் களா? ஏமாளிகளா? பாமரர்கள் சரியாக இருக்கின்றனர் - படித்த தற்குறிகள்தான் குழப்பமடைந்துள்ளனர். தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான மனுவாதிகளின் மகத்தான சதித் திட்டமே இது!
பிரச்சாரப் படை திரளட்டும்!
இதனை மக்களிடம் தி.மு.க. உடனடியாகத் தெரு முனைப் பிரச்சாரம் தொடங்கி, சிற்றூர்கள், பேரூர்கள் வரை தி.மு.க. பிரச்சாரகர்களை விட்டு தீவிரமான பிரச்சாரத்தை உடனடியாக முடுக்கிவிடவேண்டும்; அதன்மூலம் அதன்மீது தூற்றப்படும் பழி - மலைபோல் வந்தாலும், பனிபோல் கரைய கால தாமதமின்றி உடனடியாக - முன்பு நீதிபதி ஜெயின் கமிஷன் தி.மு.க.மீது பழிபோட்டதை எதிர்த்து உண்மை விளக்கங்களை, கூட்டங்களை நாடு தழுவிய அளவில் நடத்தியதுபோல், தனது பிரச்சார யந்திரத்தை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என்பது நமது அன்பான, உரிமையுடன் கூடிய வேண்டுகோளாகும். இது நமது கருத்து மட்டும் அல்ல; தி.மு.க. ஆட்சியினர், நலம் விரும்பிகள், நடுநிலையாளர்களின் கருத்தும்கூட - பலர் நம்மிடம் தெரிவித்த கருத்தும்கூட!
எதிர்ப்புகள் தி.மு.க.வுக்குப் புதியனவா?
தி.மு.க. வரலாற்றில் எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கண்டிருக்கிறது! தி.மு.க.வைப் பிளந்து கட்சியை ஒழிக்க நினைத்தது உள்பட எத்தனையோ சோதனைகள் வந்தன! அவற்றை படிகட்டுகளாக்கி, சாதனைகளாக்கும் ஆற்றல் ஒப்பற்ற அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுக்கு உண்டு! எனவே, கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு இதனை எடுத்துச் சொல்லவேண்டும்! நாடாளுமன்றத்தினை திட்டமிட்டே 8 நாள்கள் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்க போதிய சரக்கு இல்லை. பதிலடி தருவதற்கு ஆளுங்கூட்டணி தயாராக இருக்கையில், அங்கே வரத் தயங்குவது ஏன்? மக்களிடம் சொல்லுவோம். இதுதான் ஜனநாயகக் கடமையா? அமைச்சர் ஆ.இராசா பெயர் எந்தக் குற்றப் பத்திரிகையிலாவது இருக்கிறதா? இருந்ததா? இருந்தும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் வழியிலும், பிரதமருக் குத் தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம் என்பதற் காகவே, செய்யாத குற்றத்திற்கு ஜென்மதண்டனையை அமைச்சர் இராசா ஏற்று, தி.மு.க. தனது கூட்டணி தர்மத் தைக் காத்தது என்பது மக்களுக்கு விளக்கப்படவேண்டும். வெறும் ஊடகங்களால் ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல தி.மு.க. - ஊர்மக்கள் ஆதரவால் வந்த இயக்கம்; வளர்ந்துவரும் மக்கள் இயக்கம் என்பதைக் கோடிட்டுக் காட்டவேண்டும். தி.மு.க. பயந்துவிட்டது என்று சில உளறுவாயர்கள் கூறுவதை - ஆப்பு அடித்து - நெருக்கடியை எதிர்த்து நின்ற இயக்கம் அது! பயமா? அதன் அகராதியிலா? 1971 மீண்டும் திரும்பும்! 2011 - மனுதர்மத்திற்கு மறு பிறவி அல்ல; 1971- வெற்றி வாகையை மீண்டும் சூடும் வீர வரலாற்றின் தொடர்ச்சி என்று காட்டவேண்டும் என்று மிகுந்த அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்! சிந்திப்பார்களாக!
தலைவர்,
கி.வீரமணி
திராவிடர் கழகம்.
Search This Blog
Showing posts with label பார்பனிய ஆதிக்கம். Show all posts
Showing posts with label பார்பனிய ஆதிக்கம். Show all posts
Wednesday, November 24, 2010
Sunday, September 26, 2010
பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டதா?-கவிஞர் கலி பூங்குன்றன்
கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...?
பதில்: பிராமணர்கள் உயர்ஜாதி-யினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்-டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்-துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!
(கல்கி 19.9.2010 பக்கம் 30)
_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:
Ignored by Political Parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.
இதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.
அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.
மனிதர்களாக இருப்பவர்கள் தேவையானவர்களே! பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - _ இன்றைக்கும் ஒவ்-வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவு-படுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.
ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.
நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.
பார்ப்பனன் எவனாவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கிறாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்-ளார்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்-களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயி-லாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாட-கைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்-பட்டுள்ளது.
மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்-பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்-பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்-வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்-களைப் பிய்த்துத் தின்பது உண்மை-யெனின், சகலவிதமான கூலி வேலை-களையும் செய்ய வேண்டியதுதானே?
தந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கி-றார்களா? களை எடுக்கிறார்களா? ரிக்ஷா இழுக்கிறார்களா? துணி வெளுக்கி-றார்களா? சவரத் தொழில் செய்கி-றார்களா? ஏன் இவற்றைச் செய்வ-தில்லை? வறுமையிலும் வருணா-சிரமம் இருப்பது ஏன்? அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பு-கிறார்கள். அவர்களின் சதவிகி-தமான மூன்று சதவிகிதம் கிடைக்க-வில்லை என்று கூற வருகிறார்களா? அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்-ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -_ அந்த நிலை பறி போய்-விட்டது என்று பதறுகி-றார்களா? என்பதைத் தெரிந்து கொள்-ளவே நமக்கு ஆசை.
2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்-வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்-கள் யார்?
பி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமி-பிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்-நாட்டில் அரசின் தலைமைச் செய-லாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே! இதேபோல தாழ்த்தப்-பட்டவர்களோ, பிற்படுத்தப்-பட்டவர்-களோ, மிகவும் பிற்படுத்தப்-பட்டவர்-களோ தொடர்ந்து தலைமைச் செய-லாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா?
பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா?
மத்திய அரசு துறைகளில் தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! -_ சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.
தந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.
அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறை-களும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே?இந்த நிறுவனங்களுக்கு பணிய-மர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள்? முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்-பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா? எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து (ஷிக்ஷீஸ்மீஹ்)ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்-தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே!
அவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.இதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே!எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்-கூடாது, அவன் ஏழையாகவே இருக்க-வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்-லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.
ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்-பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.
(குடிஅரசு 9.11.1946)
பார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்-படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் -_ நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்?
ஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.
கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவா-ளர் சோ ராமசாமி? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்று துக்ளக் தலை-யங்கம் தீட்டுகிறதே! (துக்ளக் 18.11.1998)
தமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடி-யுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதி-னாரே! அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார்? பார்ப்பனர்கள் தமிழ்-நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்ப-வில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே!
எவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்-பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.
பார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா?
பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்-விட்டது என்று கல்கி பதில் சொல்-கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்-பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.தமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா? (டிசம்பர் 2005)அந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்? அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா?2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்-முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்று ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே -_ மறந்து விட்டீர்களா?தமிழன் என்று சொல்லடா! தலை-நிமிர்ந்து நில்லடா - _ அது ஒரு சுலோகம்.பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே _ இதுதான் பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா?பொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது?
பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன?
நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).
அய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகி-விட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா?
தமிழ் செம்மொழி ஆனால், வீட்-டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது?
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்-டாக அரசு அறிவிக்க முடியாது _ அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.
இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது _ பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்-கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டி-ருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்-லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்-ளார் _ இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது -_ வேகவே வேகாது!
Saturday, September 25, 2010
சமுக நீதி கடந்து வந்த பாதை -இன்றைய நிலை தமிழ் நாட்டில்
19 ஆம் நூற்றாண்டி கடைசி கால் பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதலாவது கால் பகுதி ஆகிய கால கட்டங்களில் சென்னை அரசாங்கத்தின் எல்லா துறைகளிலும் , ஏறக்குறைய அனைத்து கல்வி நிலையங்களிலும் பார்ப்பனர் ஆதிக்கம் மிக மிக அதிகமாக இருந்தது.
1971 ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்ட மேலவையில் எழுதப்பட்ட கேள்விக்கு அரசாங்கத்தின் தரப்பிலிருந்து கொடுக்க பட்ட பதில் சென்னை தலைமை செயலகத்தில் மாத சம்பளம் ரூ.50 முதல் 99 முடியவுள்ள மொத்தம் 208 பணியிடங்களில் அமர்த்தப்பட்ட பார்ப்பனர்கள் 128 ,பார்ப்பனர் அல்லாத இந்துகள் 52 ,முகம்மதியர்கள் 8 , இந்திய கிருத்தவர்கள் 18 ,மற்றவர்கள் 2.
இதே போல மாத சம்பளம் ரூ.நூறு முதல் 299 முடிய உள்ள 110 பணிகளில் பார்ப்பனர்கள் 78; பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 18 முகம்மதியர்கள் ஒருவர் இந்திய கிருத்தவர்கள் 7,மற்றவர்கள் 6.
மாத சம்பளம் ரூ 300 முதல் 499 முடியவுள்ள 13 பதவிகளில் பார்பனர்கள் 8 பார்பனர் அல்லாத இந்துக்கள் 3 ,இந்திய கிருத்தவர்கள் 2.
கல்வி துறையில்...
1915 ஆம் ஆண்டு மொத்தமுள்ள 518 பணிகளில் நியமிக்கப்பட்ட வர்கள் விவரம் :
பார்ப்பனர்கள் 399 ,பார்ப்பனர்கள் அல்லாத இந்துக்கள் 18, ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிருத்தவர்கள் 73,முகம்மதியர்கள் 28.
1914 ஆம் ஆண்டு சென்னை பல்கலை கழகம் நடத்திய பல்வேறு தேர்வுகளும்,அவற்றில் தெரிய மாணவர்களின் எண்ணிக்கை வருமாறு
தேர்வு பார்ப்பனர்களின் பார்ப்பனர் அல்லாதார்
எண்ணிக்கை எண்ணிக்கை
இன்டர் மீடியேட் 775 240
பி.ஏ 210 60
பி.எஸ்ஸி 159 49
எம்.ஏ 67 9
எல்.டி 95 10
(நூல்:"ஒ.தணிகாசலம் செட்டியார் சமுதாய நீதியின் மகத்தான தலைவர்" - பக்கம் 38-39,நூலாசிரியர் :ம.இளஞ்செழியன் எம்.ஏ.)
இன்றைய நிலை தமிழ் நாட்டில்
மருத்துவ கல்லுரி சேர்க்கை (2009 ஆம் ஆண்டு)
திறந்த போட்டி இடங்கள் 460
பிற்படுதாபட்டோர் 300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72
தாழ்த்தப்பட்டோர் 18
முஸ்லிம்கள் 16
முற்படுத்தப்பட்டோர் 54
200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றோர் எண்ணிக்கை 8 , அதில் பிற்படுத்தப்பட்டோர் 7, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1
இந்த மாற்றதிக்கு யார் காரணம்? சிந்திப்பீர் !
குறிப்பு: தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரிகள் மட்டும் 500 தாண்டி விட்டன.
Subscribe to:
Posts (Atom)


