Pages

Search This Blog

Showing posts with label பா.ஜ.க.அருண்ஷோரி. Show all posts
Showing posts with label பா.ஜ.க.அருண்ஷோரி. Show all posts

Monday, February 14, 2011

பா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முன்னாள் அமைச்சர் அருண்ஷோரிக்கு சம்மன்

அருண்ஷோரி
2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பா.ஜனதா முன்னாள் மத்திய அமைச் சர் அருண்ஷோரிக்கு, பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சி.பி.அய். சம்மன் அனுப்பி உள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட் டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத் தியது.

இந்தப் பிரச்சினை யில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரை முழுமையாக முடக்கின. இந்த புகா ரின் பேரில் கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று உச்சநீதிமன் றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சி.பி.அய். யும் தீவிர விசாரணை மேற்கொண்டது.

தொலைத் தொடர் புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, டி.பி.ரியாலிட்டி நிறுவன அதிபர் பல்வா மற்றும் தொலை தொடர்புத் துறை உயர் அதிகாரிகள் சிலரை சி.பி.அய். கைது செய்து விசாரணை நடத்தியது. ஆ. இராசாவும், பல்வா வும் தொடர்ந்து சி.பி. அய். காவலில் எடுக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் அமைக் கப்பட்ட விசாரணை ஆணையம் அறிக்கை யில், கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டில் வெளிப்படையான முடிவு எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாற்றப்பட்டு இருந்தது.

சிக்குகிறது பா.ஜ.க.,

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற தவறான கொள்கை அறி முகப்படுத்தப்பட்டதற்கும் பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் காரணம் என்றும் அதில் குறிப் பிடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே உச்சநீதி மன்றம் 2ஜி அலைக் கற்றை பிரச்சினையில் 2001ஆம் ஆண்டில் இருந்தே விசாரணை நடத்தும்படி உத்தர விட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து, வாஜ்பேயி தலைமை யிலான பா.ஜனதா கூட் டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவி வகித்த அருண்ஷோரி யிடம் விசாரணை நடத்த சி.பி.அய். முடிவு செய்தது.

அதன்படி ஸ்பெக்ட் ரம் முறைகேடு புகார் பற்றி விசாரணை நடத் துவதற்காக பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜ ராகும்படி அருண் ஷாரிக்கு, சி.பி.அய். சம் மன் அனுப்பி உள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த அருண்ஷோரி, விசாரணையின்போது சில முக்கிய ஆவணங் களை சி.பி.அய்.யிடம் கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

50 உரிமங்கள் மறைந்த பிரமோத் மகா ஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் தொலை தொடர்புத் துறை அமைச்சர்களாக பதவி வகித்தபோது நடை பெற்ற கூட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் குறித்தும் சி.பி.அய் ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு மாறாக, பார்தி, வோட போன், அய்டியா போன்ற நிறுவனங்களுக்கு 50 உரிமங்கள் வரை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறு வனங்களுக்கு வழங்கப் பட்ட உரிமம் தொடர் பான ஆவணங்கள் குறித் தும் விசாரணை நடத் தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் முறை கேட்டால் பயன் அடைந்தவர்கள் பற்றி யும் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தின் புதிய உத்தரவுப்படி தனது விசாரணை வளை யத்தை சி.பி.அய். மேலும் விரிவுபடுத்தி யுள்ளது. தொழில் அதிபர் அனில் அம்பானியின் ஏ.டி.ஏ.ஜி. குழுமம் உள்பட பல் வேறு நிறுவனங்களின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வரு கிறது.

அனில் அம்பானி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு இது தொடர்பாக சம் மன் அனுப்பப்பட்டு உள்ளது. எங்கள் விசா ரணையின் ஒரு கட்ட மாக பல்வேறு அதிகா ரிகளை விசாரணைக்கு அழைத்து இருப்பதாக சி.பி.அய். செய்தித் தொடர்பாளர் வினிதா தாகூர் நேற்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கடந்த வாரத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அருண்ஷோரி, ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பிரதமர் மன் மோகன்சிங்கை சந்தித்து ஆரம்பத்திலேயே எச்ச ரித்ததாகவும், ஆனால் பிரதமர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்றும் புகார் கூறி இருந்தார்.

பா.ஜ.க.மீதும் குற்றச்சாற்று

அதேபோல் பா. ஜனதா தலைவர்களும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக் கடி கொடுக்கத் தவறி விட்டனர் என்றும் அவர் குற்றம்சாற்ற இருந் தார்.

அருண்ஷோரிக்கு சி.பி.அய். சம்மன் அனுப்பி இருப்பது குறித்து கருத் துத் தெரிவித்த பா. ஜனதா செய்தித் தொடர் பாளர், பா.ஜன தாவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ப தால் எந்த விசாரணை யையும் சந்திக்க தயார் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், கடந்த 2007ஆம் ஆண் டிலேயே பா.ஜனதா தலைவர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் இந்த முறைகேடு பற்றி தெரிவித்ததாகவும், அதற்கு அந்த தலை வர்கள் அமைதி காத்த தாகவும் அருண்ஷோரி குறிப்பிட்டு இருந்ததை அவர் நிராகரித்தார்.
http://viduthalai.in/new/e-paper/3405.html 

Thursday, February 10, 2011

2 ஜி அலைகற்றை -அருண்ஷோரியின் பதைபதைப்பு - பா.ஜ.க.வின் முகத்திரை கிழியும்

2ஜி அலைக்கற்றை முறைகேடு குறித்து 2003ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்திட நீதியரசர் சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக் கப்பட்ட அறிவிப்பு வந்தாலும் வந்தது பா.ஜ.க., வட்டாரத் தின்வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது.

அவருடைய அறிக்கை வெளியாயிற்று. இந்தக் கால கட்டத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகப் பதவியில் இருந்தவர்கள் தவறான முடிவு எடுத்துச் செயல்பட்டுள்ளனர் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

தன்னுடைய வேடம் அம்பலமாகி விட்டதே என்ற ஆத்திரத்தில் திரு அருண்ஷோரி படபடக்கிறார்; பதை பதைக்கிறார்.

நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக்கையே தவறானது - உண்மையைத் திரித்துக் கூறுகிறது - மத்திய அரசைக் காப்பாற்றும் தன்மையில் அமைந்துள்ளது என்று குற்றப் பத்திரிகைப் படிக்கிறார்.

அது என்ன தணிக்கைத் துறை அறிக்கை என்றால் அசல் நெய்யில் பொரித்தது; சிவராஜ்பாட்டீல் ஆணையத் தின் கருத்து என்றால் கலப்பட எண்ணெய்யில் பொரித்ததா?
தங்களுக்கு சாதகமாக இருந்தால், அரசியலில் துருப்புச் சீட்டாகப் பயன்பட்டால் அது சரியானது; தங்களுக்குப் பாதகமாக இருந்தால் அது தவறுடையது என்று கூறும் ஒரு மட்டக் கோலைத் தயாராக வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ!

பா.ஜ.க., ஆட்சிக் காலத்தில் 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன?

யூகத்தின் - அனுமானத்தின் அடிப்படையில் அல்லாமல், இழப்பு என்ற கண்ணோட்டத்தையும் கடந்து உண்மையிலே ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்றெல்லாம் ஆதாரப் பூர்வமாகத் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

1999ஆம் ஆண்டு வாஜ்பேயி தலைமையில் அமைந்த அரசில்தான் இந்தப் பிரச்சினைக்காக கால்கோள் விழா நடத்தப்பட்டது. புதிய தேசியக் கொள்கையை இந்தத் துறையில் வகுத்தது வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தானே - இல்லை என்று மறுக்க முடியுமா?

பல தனியார் நிறுவனங்கள் வாஜ்பேயி காலத்தில் பெரும்பலன் பெற்றனர். அந்த நிறுவனங்கள் சிலரோடு பிரதமர் வாஜ்பேயின் வளர்ப்பு மகளின் கணவனுக்குத் தொடர்பு இருந்தது என்ற உண்மை அப்பொழுது வெளிப்படவில்லையா!

நிராராடியாவின் டேப் விவகாரத்தில் அந்தப் பெயர் இடம் பெற்றுள்ளதே  - அதைப்பற்றி ஏன் வாயைத் திறப்ப தில்லை? உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப் பனத்தி கதையாக பா.ஜ.க. வட்டாரம் விழி பிதுங்குகிறதே!

தனியார் நிறுவனங்கள் நட்டப்பட்டன என்று கூறி அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல் கட்டமாகத் தள்ளுபடி செய்யப்பட்டதா - இல்லையா?

ஆ. இராசா அவர்கள்மீது இவர்கள் கூறும் குற்றச் சாற்று என்பது அனுமானத்தின் அடிப்படையிலானது. ஆனால் வாஜ்பேயி காலத்தில் நடைபெற்றதோ -  அரசுக்கு வர வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதாகும்.

பா.ஜ.க., ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. சோவை அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று நக்கீரன் இதழில் (2011 சனவரி (1-4) விரிவாக வெளிவந்ததே!

அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் ஜக்மோகன் கண்டிப்பானவர். தனியார்துறை முதலாளிகளுக்கு ஆதரவாக லைசென்சு வழங்கும் முறையில் திருத்தங்கள் செய்யப்பட்டதை அவர் எதிர்த்தார். தொலைத் தொடர்புத் துறை லாபத்தில் இயங்க என்ன செய்யவேண்டும் என்று அவர் வாஜ்பேய்க்கு ஒரு பட்டியலையே அளித்தார். தனியார்த்துறை தொழில் அதிபர்களுக்குக் கடிவாளம் போடவில்லையென்றால், அவர்கள் செல்வம் கொழிக்கும் இந்தத் துறையையே சீரழித்து விடுவார்கள் என்றார்.

ஆனால் ஏர்செல் கம்பெனி நிறுவனர் சுனில்மிட்டல் என்ன சொன்னார் தெரியுமா? இன்னும் சில மணி நேரங்களில் ஜக்மோகன் தூக்கி அடிக்கப்படுவார் என்றார். வருவாயைப் பெருக்க ஜக்மோகன் தந்த குறிப்பு கள் குப்பைக் கூடைக்குப் போயின. சுனில்மிட்டல் சொன்ன படி ஜக்மோகன் வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார்.

அப்போதுதான் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றது. ஊழல் என்றால் வருமானத்தில் இழப்பு அல்ல. உண்மையிலேயே தனியார் துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல்  நடைபெற் றது.

ஊழல் என்றால் வருமானத்தில் இழப்பு அல்ல. உண்மையிலேயே தனியார் துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. அந்த ஊழலைத்தான் மத்திய அமைச்சர் கபில்சிபல் அம்பலப்படுத்தினார் என்று மூத்த பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு அவர்கள் தரப்பிலிருந்து மறுப்பு வரவில்லையே - ஏன்?

நீதியரசர் சிவராஜ்பாட்டீல் அறிக்கை வெளிவந்ததும் வராததுமாகத் தாண்டிக் குதிக்கும் திருவாளர் அருண் ஷோரி சென்னைக்கு வந்தபோது என்ன கூறினார்? ஆ. இராசாவால் ஏற்பட்ட இழப்பு என்பது ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியல்ல; வெறும் 22 ஆயிரம் கோடி ரூபாய்தான் - தவறாகச் சொல்லாதீர்கள் என்று சொன்னாரா - இல்லையா?

வாஜ்பேயி காலத்தில் மிகவும் வெளிப்படையாக தனியார் துறைகளிலிருந்து அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய ரூபாய் 50 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டதைக் கணக்கில் கொண்டால், ஆ. இராசா காலத்தில் ஏற்பட்ட இழப்பு மிக மிகச் சாதாரணமானதாகும்.

அதே நேரத்தில் இந்த இழப்பு என்பதுகூட பொது மக்களுக்குக் குறைந்த செலவில் தொலைப்பேசி வசதி கிடைத்த இலாபத்தோடு இணைத்துப் பார்த்தால் அவ்வாறு கூறுவதுகூடத் தவறானதாகும்.

இவர்கள் துடியாய்த் துடிப்பதிலிருந்தே நீதியரசர் சிவராஜ் பாட்டில் ஆணையத்தின் அறிக்கை பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்திருக்கிறது. அது பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழிக்கும் என்று தெரிகிறது.
http://viduthalai.in/new/page-2/3194.html 

weather counter Site Meter