Pages

Search This Blog

Showing posts with label பிஜேபி. Show all posts
Showing posts with label பிஜேபி. Show all posts

Monday, November 22, 2010

சந்தி சிரிக்கிறது பா.ஜ.க.வின் இலட்சணம்-எடியூரப்பாவா.... இடையூறப்பாவா?

நில மோசடி விவகாரத் தில் சிக்கியுள்ள கரு நாடக முதல்வர் எடி யூரப்பாவுக்குப் பதிலாக, வேறு ஒருவரை முதல் வராக நியமிக்க, பா.ஜ.க., மேலிடம் திட்டமிட் டுள்ளது. முதல்வர் பத வியிலிருந்து விலக மறுத்து, எடியூரப்பா அடம்பிடிக்கிறார். சண் டித்தனம் செய்கிறார். எனக்கு 120 எம்.எல். ஏ.,க்கள் ஆதரவு உள் ளது. எனக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்வ ராக நியமிக்கப்படுவாரா, என்ற கேள்விக்கே இடம் இல்லை' என, பா.ஜ.க., மேலிடத்துக்கு, எடியூ ரப்பா சவால் விடுத்துள் ளார்.

கருநாடக முதல்வர் எடியூரப்பா, அரசுக்கு சொந்தமான நிலத்தை தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாற்றியுள்ளன. எடியூரப்பாவை முதல் வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, அந்த கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ளன. இதில் மற்றொரு திருப்ப மாக, எடியூரப்பா சார் பில் நடத்தப்பட்ட பணப் பரிமாற்றங்கள் குறித்த வங்கிக் கணக்கு தகவல் கள் வெளிவந்திருக்கின் றன.

நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்து வரும் பா.ஜ.க.,வுக்கு, எடி யூரப்பாவின் நில ஊழல் பிரச்சினை பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள் ளது. இந்த விவகாரம் குறித்து, பா.ஜ.க., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவ ராஜ், ராஜ்நாத் சிங் ஆகி யோர் நேற்று டில்லியில் ஆலோசனை நடத்தினர். இதில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், கட் சித் தலைவர் நிதின் கட் காரிக்கு அளிக்கப்படுவ தாக முடிவு எடுக்கப்பட் டது.

இந்தக் கூட்டத்தில், எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்தால், அவ ருக்கு பதிலாக யாரை நியமிப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கரு நாடாகாவில் மிகச் செல் வாக்கான வீரசை லிங் காயத் பிரிவினர் ஆதரவு டைய அவரை அகற்று வது என்பது சுலபமல்ல என்ற நிலை ஏற்பட்டி ருக்கிறது. எடியூரப்பா வின் தலைமையை மாற் றினால், அதனால் ஏற் படும் சாதக, பாதகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எடியூரப்பாவிற்கு பதிலாக, லிங்காயத் இனத்தைச் சேர்ந்தவ ரான ஜெகதீஷ் ஷெட் டரை நியமிப்பதா? அல் லது பின்தங்கிய வகுப் பைச் சேர்ந்த ஈஸ்வரப் பாவை நியமிப்பதா? என்பது குறித்தும் ஆலோ சனை நடந்தது. எவ்வித ஊழல்களிலும் சிக்காத டாக்டர் ஆச்சார்யா அல்லது சுரேஷ் குமார் ஆகியோரை பதவியில் நியமிப்பது தொடர்பாக வும் ஆலோசனை நடத் தப்பட்டது. கட்சியின் மற்றொரு தரப்பினர், எடியூரப்பாவுக்கு ஆத ரவு தெரிவித்துள்ளனர்.

வேறு ஒருவர் முதல்வர்!

இருந்தாலும், பிரச்சி னையை சமாளிக்க, எடி யூரப்பாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வ ராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள் ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

இந்நிலையில், கட்சி யின் மூத்த தலைவர் களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, எடியூ ரப்பா அடம்பிடித்து வருகிறார். நேற்று, எடி யூரப்பாவின் வீட்டில், அவரது ஆதரவு எம்.எல். ஏ.,க்களின் ஆலோச னைக் கூட்டம் நடந்தது.

இதன்பின், செய்தியா ளர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:

கட்சித் தலைமை என் மீது நம்பிக்கை வைத் துள்ளது. எனவே, டில் லிக்கு யாரும் செல்ல வேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்களிடமும், அமைச்சர்களிடமும் தெரிவித்துள்ளேன். எனக்கு ஆதரவாக 110 இல் இருந்து, 120 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர். வெறும் 20 பேரையோ, 40 பேரையோ வைத்துக் கொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. எனக்கு பதிலாக யார் முதல்வ ராக தேர்வு செய்யப்படு வார் என கேட்கின்றனர். எனக்குப் பதிலாக நான் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

- இவ்வாறு எடியூ ரப்பா கூறினார்.

அடம்பிடிக்கும் எடியூரப்பா!

கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம் பிடிப்பதால், பா.ஜ.க., மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள் ளது. இந்த விவகாரத் தால், கருநாடக பா.ஜ.க., வில் பிளவு ஏற்படுமோ என, பா.ஜ.க., தலைவர் கள் அஞ்சுகின்றனர். தென் மாநிலங்களில் முதலாவதாக ஆட்சியை பிடித்ததை இழக்க விருப்பமின்றியும், அதே சமயம் கட்சிக்கு ஏற் பட்ட கெட்ட பெயரை அகற்றமுடியாமலும் மேலிடம் இக்கட்டில் இருப்பதாக கூறப்படு கிறது.

முதல்வர் எடியூரப் பாவை மாற்ற வேண் டாம். தாலுகா, உள் ளாட்சி தேர்தல் வரும் இந்நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன்,'' என கருநாடகா மாநில பா.ஜ.க., தலைவர் ஈஸ் வரப்பா கூறினார்.

ஷிமோகாவில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

எடியூரப்பாவை மாற்றக்கூடாதென்பது தான் எனது முடிவு. இதையே மேலிடத்தில் கூறியுள்ளேன். ஆயினும் மேலிடம் எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன். நான் முதல் வர் வேட்பாளர் இல்லை. அந்த எண்ணம் எதுவும் இல்லை. நான் யாரிட மும் முதல்வர் வேட்பா ளர் என்று கூறவில்லை. பா.ஜ.க.,வில் மாநில தலைவர் முதல்வராக வேண்டும் என்ற மரபு இல்லை.முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டாம். தாலுகா, உள்ளாட்சி தேர்தல் வரும் இந் நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன். வெறும் 28 உறுப்பினர் களை கொண்டுள்ள ம.ஜ.த.,வில், ரேவுண்ணா துணை முதல்வர், குமார சாமி மத்திய அமைச்சர் என கனவு காண்கின்ற னர்.

-இவ்வாறு ஈஸ் வரப்பா கூறினார்.

அனந்தகுமார் அய்யர்வாள்

இதனிடையே, எடியூ ரப்பாவை நீக்கி விட்டு, அனந்தகுமாரை (அய் யரை) முதல்வராக்க ஜனார்த்தன ரெட்டி முயன்றதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த முயற்சி ஏன் வெற்றி பெறவில்லை என்று தெரியவில்லை.

http://www.viduthalai.periyar.org.in/20101122/news01.html

weather counter Site Meter