Pages

Search This Blog

Showing posts with label திராவிடர் கழகம். Show all posts
Showing posts with label திராவிடர் கழகம். Show all posts

Wednesday, March 2, 2011

மருத்துவமனைகளைவிட மருத்துவ மனங்கள் முக்கியம்(வாழ்வியல் சிந்தனைகள்)

கோவையின் தொண்டறச் செம்மல் டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்களது மிகப் பரந்து வளர்ந்தோங்கி நிற்கும் மருத்துவ, கலை அறிவியல், கணினித் துறை, செவிலியத் துறை முதலிய பல்கலைக் கல்விக் கூடங்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சீரிய செயலாற்றல் மிக்க புத்தாயிரத்து இந்தியக் குடிமகன் என்ற விருது வழங்கி, அவர்களை ஊக்க, ஊட்டச் சத்தாக இளைய தலைமுறை யினருக்குக் காட்டி எழுச்சியூட்டக் கூடிய தனித்தன்மையான விழா எடுத்து பெரு மிதம் சேர்க்கிறார்.

இவ்வாண்டு ஆந்திராவின் மிகப் பெரிய நிருவாகியும், சேவையாளருமான வெங்கட் சங்கவள்ளி எம்.பி.ஏ. அவர் களுக்கும், எனக்கும் விருது அளித்துப் பெருமைப்படுத்தினார்.

எனக்கு இது மிகவும் சங்கடமாக அமைந்தபோதிலும், 26 ஆண்டுகளுக்கு முன் (1985 வாக்கில்) எனக்கு கோவை யில் மாரடைப்பு (Heart Attack) முதன் முதலில் நள்ளிரவில் திடீரென்று வந்த நிலையில், அவரது கே.ஜி. மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரு டைய அருமையான சேவை, கவனிப்பு கண்காணிப்பு மூலம் நான் மீண்டும் புதுவாழ்வு பெற்றேன் என்பதால் அவரது விருப்பத்தை அன்புக் கட்டளையாகவே ஏற்று மறுப்பேதுமின்றி ஒப்புக் கொண்டு சென்றேன் - இணையரோடு.

அவ்விழா எளிமை, இனிமை, விருந் தோம்பல், உற்சாகம், மாணவ சமுதாயத் தின் எடுத்துக்காட்டான கட்டுப்பாடு - இவைகளின் எடுத்துக்காட்டாக நடை பெற்ற விழாவாகும்!
கூட்டுக் குழு வெற்றி (Team Spirit) என்பது அன்னார் அருமைச்செல்வன் அசோக் பக்தவத்சலம் தலைமையில் அவரது சக கூட்டுப் பணித் தோழர்கள் உற்சாகத்துடன் தொண்டாற்றி மகிழ்ந் தனர்!

அதில் பாராட்டு விருது பெற்ற பெருந்தகையாளர் வெங்கட் சங்கவள்ளி அவர்கள் ஆந்திராவின் நிறுவனமான சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் வளர்ந்தோங்கிட மூல காரணமானவர்.

அவர் தந்த திட்டம்தான் இப்போது தமிழ்நாட்டில் நாம் கலைஞர் ஆட்சியில் மக்கள் உயிர் காக்கும் திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆந்திராவில் அறிமுகப்படுத்த காரணமானவராக கருத்துரை கூறியவர் என்று அறிமுகப் படுத்தினார்.

திரு. வெங்கட் அவர்கள் பேசும்போது ஒரு முக்கிய தகவலைக் கூறினார் - வியத்தகு செய்தி.

இந்த ஆம்புலன்ஸ் சர்வீஸ் துவக்கப் பட்டதிலிருந்து சுமார் 65,000 தாய்மார் களின் மகப்பேறு (பிரசவங்கள்) நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 40 லட்சம் பேர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டி ருப்பதாகவும் குறிப்பிட்டு, கேட்டவர்களை மிகவும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக் கினார்கள்!

அதற்கு முதலில் கிராமங்களில் உள்ள தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் கயிற்றுக் கட்டிலில் வைத்து பல மைல் தூக்கிச் சென்று, வழியிலேயே சரியான மருத்துவ வசதி கிட்டாத தினால் இறந்தவர்கள் பலர் என்பது இப்பொழுதும் மாற்றப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் - திருவாரூர் - மயிலாடு துறை சாலையில் உள்ள கங்களாஞ் சேரியிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் பக்கத்து மற்றும் சுற்று கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்த போது அங்கே பெரிதும் விவசாயிகளான அன்றாடம் பணிபுரியும் இருபாலர் -பெரிதும் தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதர - சகோதரிகள் நிறைந்த பகுதி என்ற நிலையில் நான் கண்ட காட்சி மனதை மிகவும் நெருடச் செய்தது!

கயிற்றுக் கட்டிலில் வைத்து பிரசவ வலியால் துடிக்கும் ஏழை - எளிய தாய்மார்களை திருவாரூருக்கோ, நாகூருக்கோ அழைத்துச் செல்லும் (தூக்கிச் செல்லும்) காட்சியைக் கண்டு, அந்தப் பகுதியில் எப்படியாவது ஒரு மகப்பேறு மருத்துவமனை தொடங்கிடத் திட்டமிட்டு, இன்று சோழங்கநல்லூரில் (திருவாரூர்) அந்த கங்களாஞ்சேரி - நாகூர் சாலையில் நிலத்தைப் பெற்று பெரியார் மருத்துவமனை பல படுக்கை வசதிகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது; (அரசுகளின் எந்த உதவியும் இதற்குக் கிடையாது; இன்னமும் கிட்டவில்லை என்றாலும்) சிறப்பாக நடைபெறுகிறது.

மருத்துவ வசதிகள் எங்கணும் சிறப் புடன் நடைபெற மருத்துவமனைகள் மட்டும் போதாது; மருத்துவ மனங் களும் தேவை.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்த கிராமப்புற இளைஞர்கள் (இருபால்) கூட, கிராமங்களில் போய் தங்கி மருத்துவ சேவை செய்ய முன் வர மறுக்கிறார்கள் - அரசு சம்பளம் விகிதம் தந்தாலும்கூட மருத்துவர்கள் கிடைப்பதில்லை.

இதற்கொரு திட்டம் 108 ஆம்புலன்ஸ் போன்று அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும் போலும்!

என்ன செய்வது! பணமே வாழ்க்கை என்றாகிவிட்டதால் குணம் விடை பெற்று, பணம் ஆட்சி செய்து, மக்களை பிணம் ஆக்கும் கொடுமை நீடிக்கிறது!

நிலைமை மாறும் - கலைஞர் போன்ற மனிதநேயர்கள் ஆட்சியில். அதற்கும் ஒரு விடையும் - விடியலும் கிடைக்கும் என்று நம்புவோமாக!

கருஞ்சட்டைக் கடலே, கை வரிசையைக் காட்ட வருக! வருக!! பட்டுக்கோட்டையாம் பாடி வீடு அழைக்கிறது! அழைக்கிறது!!

அஞ்சா நெஞ்சன் அழகிரி
பட்டுக்கோட்டை என்றாலே சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை என்று பொருள். இந்தக் கோட்டையிலிருந்து கிளம்பிய சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் ஏராளம், ஏராளம்! கருஞ்சட்டைக் காளையர்கள் கணக்கற்றவர்கள்!

அஞ்சா நெஞ்சன் அழகிரி என்ற சொல்லை உச் சரிக்கும் போதே உடலின் ஒவ்வொரு அணுவும் புல்லரிக்கும். அரிமாவின் கர்ச்சனை என்பார்களே, அது அவருக்கே பொருந்தும்.

ரத்தம் கக்கக் கக்க தன்மான எரிமலைக் குழம்பை யொத்த உரையை, மரத்துப் போன தமிழர்களின் உடலில் சூடேற்றும் வண்ணம் பொழிந்தவர் அவர். ஆண்டு அரை நூறு அடைவதற்கு முன்பே இயற்கை அவரைக் கொத்திக்கொண்டு போய்விட்டதே!

இன்னும் எத்தனை எத்தனையோ மாவீரர்கள் உண்டு. இன்று நூறு வயதைத் தொட்டுக்கொள்ளத் துடிக்கும் மாமுண்டி என்று அன்போடு அழைக்கப்படும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நா.இராமாமிர்தம் அவர்கள் வரை எடுத்துச்சொல்ல ஆரம்பித்தால் அதுவே ஒரு தொகுப்பாக வளரும்.

இந்த ஊரிலே எத்தனை எத்தனையோ மாநாடுகள்!

அதிலே ஒரு குறிப்பிடத்தக்க மாநாடுதான் 1929ஆம் ஆண்டு மே மாதம் 25, 26 நாள்களிலேயே நடைபெற்ற முதலாவது தமிழர் மாகாண சுயமரியாதைத் தொண்டர் கள் மாநாடாகும். தொண்டர்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட முதல் மாநாடு என்ற மகுடத்திற்குரியது அந்த மாநாடு. அந்த மாநாட்டில் பங்கேற்ற பெருமக்கள் யார் யார்? குடிஅரசு (12.5.1929) பட்டியலிடுகிறது-இதோ,

26ஆம் தேதி மகாநாடன்று தஞ்சை திருச்சி ஜில்லா சுயமரியாதை மகாநாடு பட்டுக்கோட்டையிலேயே நடைபெறும். சர்வகட்சி பார்ப்பனரல்லாதாரும் மகா நாட்டுக்கு விஜயமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாகாண முழுவதுமுள்ள சங்கங்கள் மற்ற கட்சி நண்பர்கள் தங்களூரிலிருந்து எத்தனைப் பிரதிநிதிகள் விஜயமாகின்றார்கள் என்ற விவரத்தை வரவேற்புக் கழகத்திற்கு அறிவிக்கக் கோருகிறோம்.

மகாநாட்டிற்கு சென்னை அரசாங்க சட்ட மெம்பர் கனம் திவான் பகதூர் எம்.கிருஷ்ணன் நாயர் அவர்கள் வைக்கம் வீரர் திரு.ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் திருஉருவப்படத்தைத் திறந்து வைப்பார்.

அவ்வைபவத்திற்கு இரண்டாவது மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் தலைமை வகிப்பார். மகாநாட்டுப் பந்தலில் சட்ட மெம்பர் திவான்பகதூர் எம். கிருஷ்ணன்நாயர், திரு.ஈ.வெ.ராமசாமியார் திரு.பி.டி. ராஜன் முதலிய தலைவர்களுக்கு வரவேற்பளிக்கப்படும். உபசாரப் பத்திரமளிப்புக் கூட்டத்திற்கு தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் ராவ் பகதூர் ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.

சுயமரியாதைத் தொண்டர்கள் மாகாண மாநாட்டிற்கு ரிவோல்ட் உதவி ஆசிரியர் திருவாளர் எஸ்.குருசாமி அவர்கள் தலைமை வகிப்பார். காரைக்குடி குமரன் ஆசிரியர் திரு.சொ.முருகப்பர் மாநாட்டைத் திறந்து வைப்பார்.

திருச்சி திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் சுயமரியாதைக் கொடியை உயர்த்துவார்.

உயர்திரு. கைவல்ய சாமியாரின் திருஉருவப்படத்தை திரு.கே.வி.அழகர்சாமி திறந்து வைப்பார்.

அவ்வைபவத்திற்கு திரு.சாமி சிதம்பரனார் தலைமை வகிப்பார்.

மகாநாட்டிற்குக் கட்டணம் அடியிற்கண்டவாறு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வரவேற்பு அங்கத்தினர் ரூ.5

பிரதிநிதி ரூ.2

மாகாண சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாட்டு பொக்கிஷதார் திரு.எஸ்.கே.சிதம்பரம் அவர்கள் மகாநாட்டின் நன்கொடை வசூலிக்கவும், வரவேற்புக் கழக அங்கத்தினர்கள் சேர்க்கவும் வெளி ஜில்லாக்களில் சுற்றுப் பிரயாணம் செய்கிறார். 5,6 நாட்கள் வரையில் திருச்சி, நாமக்கல், சேலம் தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் முதலிய இடங்களுக்குச் செல்வார். அந்தந்த ஊர் சகோதரர்கள் தக்க ஆதரவு காட்ட வேண்டுகிறோம்.

-வரவேற்புக் கழகத்தார்.

மாநாடு முடிந்தவுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது பொதுக்கூட்டத்திற்கு சிவகங்கை வழக்குரைஞர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

காரைக்குடி குமரன் இதழின் ஆசிரியர் சொ.முரு கப்பா உரையில் கேலியும், கிண்டலும் பீறிட்டுக் கிளம்பின. இந்து மதத்தின் ஆபாசமும், பார்ப்பனர் ஏற்படுத்திய புரட்டும் என்பது தலைப்பானால் முருகப்பா போன்றோர்களின் பேச்சைப் பற்றிக் கேட்கவும் வேண் டுமோ! பேச்சின் கால அளவு இரண்டு மணிநேரம்.

அந்தப் பேச்சு வெறும் கேலி, கிண்டலோடும், சிரிப்பை வரவழைத்ததோடும் நின்று விட்டதா? அதுதான் இல்லை.

அது பற்றி குடிஅரசு (2.6.1929) எழுதுகிறது:

முருகப்பாவின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண் டிருந்தவர்களில் நாமத்தை அழித்தவர்கள் பலரும், ருத்திராட்சத்தைப் பிடுங்கி எறிந்தவர்கள் பலரும், கூட்டத்தில் பிடுங்கி எறிய சங்கோஜப்பட்டு மறைத்துக் கொண்டவர்கள் பலரும், நாமக்காரர்களையும், விபூதிக் காரர்களையும், பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் பலரும், விஷயங்களை எங்கு வினயமாய்க் கவனித்து இதுவரையிலும் தாங்கள் மவுடிகத் தன்மானவும், மூடத் தனமாகவும் நடந்து வந்ததையும் மாற்றிக்கொண் டவர்கள் பலருமாய் இருந்த காட்சி அற்புதக் காட்சியாக இருந்தது,

கலப்பு மணம், விதவை மணம் சம்பந்தமான தீர்மானம் வந்தபோது தலைவர் அத்தீர்மானத்தை நடவடிக்கையில் நடத்தக்கூடியவர்களை எழுந்து நிற்கும்படி கேட்டபோது சுமார் 200 வாலிபர்களும் 2,3 பெண்களும் எழுந்து நின்ற காட்சி, எல்லாக்காட்சிகளையும் விட மேலான காட்சி யாயிருந்தது என்று குடிஅரசு குறிப்பிட்டிருப்பதைப் படிக்கும்பொழுது விம்மிதம் கொள்கிறோம்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகக் குருதியில் குடைந்து ஊறிக்கிடந்த பழக்க வழக்கங்களை அதன் அடிவேர், சல்லிவேர் வரை சென்று ஒரு மாநாடு-ஒரு பொதுக்கூட்டம் பிடுங்கி வெளியில் எறிகிறது என்றால், இந்தச் சாதனைக்கு நிகரானதை எந்த நிகண்டுவில் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?

அந்த உணர்வு இன்றைக்கும் கூடத் தேவைப்படு கிறது. பார்ப்பனீயம் பல வகைகளில் மாறுவேடம் தரித்து தன் அற்பப் புத்தியை அரங்கேற்றிக் கொண்டுதானிருக் கிறது. அதற்கு அவ்வப்போது சூடு கொடுக்கவும், நம்மக்களுக்குச் சூடு, சொரணையை ஏற்படுத்தவும் கழகத்தின் மாநாடுகளும், பிரச்சாரங்களும் தேவைப் பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில் கழகத்தின் சார்பில் அலை அலையாக மாநாடுகள் நடத்தப்பட்டது வேறு எந்தக் காலகட்டத்திலுமே கிடையாது.


2011ஆம் ஆண்டு தொடக்கமே களை கட்டியது!

உலக நாத்திகர்கள் மாநாட்டை திருச்சி மாநகரில் நடத்திக்காட்டி (2011, சனவரி 7,8,9) உலகத்தையே நம்மை நோக்கிப் பார்க்க வைத்தோம்.

இதோ மார்ச் 5ஆம் தேதி பட்டுக்கோட்டையில் மகத் தான பேரணியுடன்கூடிய தஞ்சை மண்டல இளைஞரணி மாநாடு. கழகப் பாரம்பரிய மிக்க பட்டுக்கோட்டைப் பாசறையில் கழக இளைஞர்கள் கூடி எக்காளமிட இருக்கின்றனர்.

தேர்தல் களம் சூடு கிளம்பும் ஒரு காலகட்டத்தில், தமிழ் மண்ணை இனமான நெருப்புச் சூளையாக வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நமது கழகத்திற்கு இருக்கிறதே!

ஆரியர்- திராவிடர் போர் என்று அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கும் கலைஞரே ஆவேசத்துடன் அறிவித்துவிட்ட நிலையில், நமது மாநாட்டுக்குக் கூடுதல் உத்வேகமும் பொறுப்புணர்ச்சியும் தானாகவே வந்து சேர்ந்துவிட்டது.

ஊழலைப்பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது? அவர் களின் பிறப்பே ஊழல் தன்மையானது. (அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்றால், அதன் பொருள் இதுதானே?).

அவர்கள் நடப்பே ஊழல் மயமானது! கடவுளிடம் காணிக்கை என்னும் லஞ்சம் கொடுத்து கரையேறப் பார்க்கும் கயமைத்தனமானது.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப் பானுக்கே மோட்ச லோக டிக்கெட் கொடுப்பதற்கு-பசுமாட்டுக்குப் புல் போட்டாலேபோதும் என்கிற அளவுக்குக் கையூட்டுக்குப் பெயர் போனது.

இந்து மதமே ஊழல்மயம்தானே?

மதத்தையும், ஜாதியையும், கடவுளையும், மூடநம்பிக் கைகளையும் விமர்சிக்கும் ஒரே ஒரு முதல்வர் உலகி லேயே நமது மானமிகு கலைஞர்அவர்கள்தாம்!

தமிழர் தலைவர் மிக நேர்த்தியாகச் சொன்னது போல நெருக்கடி கால எரிமலையையே விழுங்கி ஏப்பமிட்டவர் அவர்!

இளைஞர்களைத் தயார் செய்ய வேண்டும். சினிமா மாயை என்னும் தொற்று நோய்க்குப் பலியாகாமல், பகுத்தறிவுத் தடுப்பூசி போடும் கடமை சமுதாய மருத்துவப் பாசறையாம் நம்மைச் சார்ந்தது.

பட்டுக்கோட்டையில் ஒரு திட்டத்தோடு சந்திப்போம். பட்டுக்கோட்டை கொடுக்கும் குரல் தமிழ் மண்ணையே அதிரச் செய்யட்டும்!

அரிமாக்களே, அவசியம் வாருங்கள்! தமிழர் தலைவர் அழைக்கிறார். தன்மான முரசு கொட்டுவோம், தவறாமல் கூடுங்கள்! கூடுங்கள்!!

என்ன தைரியம் இருந்தால் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தெய்வத்தைத் துணை கொண்டு தேர்தலில் குதிப்போம் என்று கூப்பாடு போடுவார்கள்?

அந்த ராமன் தெய்வத்தைத்தான் சேலத்திலேயே பார்த்தோமே! ராமன் கை கொடுத்தானா? - பெரியார் ராமசாமி (ராமனுக்கே சாமி) கை கொடுத்தாரா? என்பது நாட்டுக்குத் தெரியுமே!

கருஞ்சட்டைக் கடலே,
கை வரிசையைக் காட்ட வருக! வருக!!
பட்டுக்கோட்டையாம் பாடி வீடு
அழைக்கிறது! அழைக்கிறது!!
தங்கள் வருகையைத் தருக! தருக!!

மின்சாரம்

http://viduthalai.in/new/home/archive/4487.html

கறுப்புச் சட்டை

20.9.1945 அன்று திரா விடர் கழக 17 ஆவது மாநில மாநாடு திருச்சிராப்பள்ளியில் தந்தை பெரியார் தலைமை யில் கூடியது. அம்மாநாட்டில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வரலாற்று ரீதியான மிக முக்கிய முடிவு - இயக்கத் தோழர்கள் கறுப்புச் சட்டை அணிவது பற்றியதாகும்.

இயக்கத் தொண்டர் களாயிருப்போர் இயக்கக் காரியங்களைக் கவனிக்கும் போதும், கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும், கூடுமானவரையில் முழு நேரமும் கறுஞ்சட்டை அணிந்திருக்கலாம். கழக உறுப்பினர்கள் அனைவருமே சமயம் வாய்க்கும்போதெல் லாம் கறுஞ்சட்டை அணிதல் அவசியமாகும் என்று அறி வித்தார் தந்தை பெரியார்.

கறுப்புச் சட்டைப்படை அமைக்கப்படுவதற்கான தற்காலிகப் பொறுப்பாளர் களாக ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்தப் படையைப் பற்றி குடிஅரசு (17.11.1945) தலை யங்கம் இவ்வாறு கூறுகிறது:
கறுப்புச் சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக் கொண்டு யாருக் காவது தொல்லை கொடுக் கவோ அல்லது நாசவேலை செய்து நம் மக்களையே பலி கொடுக்கவோ, நம் பொரு ளையே பாழாக்கிக் கொள் ளவோ அல்ல என்பதைத் தெளி வாக வலியுறுத்திக் கூறு வோம். மற்றபடி அடிப்படை எதற்காக என்றால், இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்க மும், துக்கமும் அடைந்திருக் கிறார்கள் என்பதைக் காட் டவும், அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக் கிறார்கள் என்பதைக் காட்ட வும், அதற்கான முயற்சி களைச் செய்ய தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்ப தைக் காட்டவுமே ஏற்படுத் தப்பட்டிருப்பதாகும் என்று குடிஅரசு தலையங்கம் பேசு கிறது.

இப்படி ஒரு படை அமைக்கப்பட்டது என்ற வுடன், ஆரியர்களின் வட்டா ரத்தில் கிலி பிடித்துவிட்டது. அதனுடைய தீய விளைவு தான் - மதுரையில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் நடைபெற்ற கறுப்புச் சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் - வைத்திய நாதய்யர் என்ற பார்ப்பனரின் தூண்டுதலால் காலிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகும்.
20 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்கள் அணிவகுத்து ஊர்வலத்தில் சென்ற அந்த மிடுக்கான அணிவகுப்பு, ஆரிய ஆதிக் கக் கோட்டையை நொறுங் கச் செய்யக் கூடிய ஒரு படையை ராமசாமி நாயக்கர் உண்டாக்கி விட்டார் - அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று திட்டமிட்டு அந்தக் கேவலத்தை அரங்கேற்றினர்.

அரசையும் கவனிக்கச் செய்தது. அதன் விளைவு தான் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கறுஞ் சட்டைப் படையைத் தடை செய்யப்படுவதாக உத்தர விட்டார்.

அந்த நாள்தான் இந்த மார்ச் 2 (1948). கிரிமினல் சட்டத் திருத்தத்தின் 16 ஆவது பிரிவின்கீழ் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒரு சட்டத்தினால் இந் தப் படையை அழித்துவிட முடிந்திருக்கிறதா? இன் றைக்கு லட்சோப லட்ச கறுஞ் சட்டைத் தொண்டர்கள் நாட்டில் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறார்களே!

இந்த மார்ச் 2 - நம்மை எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டும் - பெரியார் பிஞ்சு களுக்குக்கூட கறுப்புடை தைத்துக் கொடுக்கவேண் டும். வீடெல்லாம் கழகக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும்.
வாழ்க பெரியார்! - மயிலாடன்

http://viduthalai.in/new/e-paper/4531.html

Friday, October 29, 2010

பெரியார் போற்றிய பெண்ணியம்!


தந்தை பெரியாரின் தனித்துவம் பற்றி பகுத்தறிவுப் பகலவனின் அருமையான படப்பிடிப்பு `அவர் ஒரு விருப்பு-வெறுப்பற்ற பவுதிகத் தராசு என்பதை எடுத்துச் சொல்கிறது.

வழக்காடும் வன்மையில் தமிழ்நாட்டு வால்டேர்

முழக்குச் சிந்தனையில் முதியவர் சாக்ரட்டீஸ்

போதனைத் துறையில் புரட்சிசேர் புத்தன்

சாதனை புரிவதில் நபிகள் நாயகம்

பொருளியல் வகுப்பதில் புலமைசேர் மார்க்ஸ் கருத்து வண்ணத்தில் உருக்கு கன்பூசியஸ்

மறுத்துரை கூறலில் மதிப்புறு இங்கர்சால்

பழைமையைச் சாடலில் அறிஞர் பெர்னாட்ஷா

புதுமைகள் சேர்த்தலில் புயலெனும் ரூசோ

இத்தனைப் பேரின் மொத்தச் சரக்கவர்.

வைதீகர்க்கெல்லாம் ஒற்றைத் தலைவலி மெய்யறிவாளர்க்கோ மிதந்த பூங்காற்று விருப்பு வெறுப்பற்ற பவுதிகத் தராசு

மானுடசமத்துவம் என்ற விருப்பே தந்தை பெரியாரை சாதனைத் தலைவராய் செதுக் கியது. காலத்தின் நெருக்கடி பிரசவித்த பெம்மான் பெரியார் மட்டும் பிறவாது போயி ருந்தால் தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் இன்றைய முன்னேற்றம் கானல் நீரே. பல்வேறு நூற்றாண்டுகளை-அந்த நூற்றாண்டுகளில் தோன்றிய சிந்தனையா ளர்களின் சிந்தனைகளை உள்ளடக்கியவர் பெரியார் என்பது பேரறிஞர் அண்ணாவின் கணிப்பு. பெரியார் தனிமனிதரல்லர்- அவர் ஒரு வரலாறு

காலகட்டம்

திருப்பம் என்றும் புகழ்ந்தார் அண்ணா.

உலக அனுபவம் என்னும் கலாசாலை யில் முற்றுணர்ந்த பேராசிரியர்என்று பெரி யாரை போற்றினார் கல்கி. `பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர்.

பாராட்டை எதிர்பார்க்காத ஈரோட்டுப் பாதையின் ஏந்தலான தன்மானத் தந்தை பெரியார்.

அனைத்துவித ஒடுக்குமுறைகளிலிருந் தும் மக்களை மீட்டெடுக்கும் பெரும் போரில் ஈடுபட்டார். அவரின் போராட்டத்தின் வெற்றி பெருமிதமான வாழ்க்கையை நம் மக்களுக் குத் தந்தது. அறிவில் திருவுண்டானது; ஆற்றலில் புதுவேகம் பிறந்தது; அடிமைத் தளை அகன்றது; எட்டா நிலையிலிருந்த வேலை வாய்ப்புப் பெற்றனர் மக்கள். காரணம் கிட்டா கனியாயிருந்த கல்வி கிடைத்ததால்! சமூகநீதி மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு அந்நீதி கிடைக்கச் செய்தவர் பெரியாரே! ஒடுக்கப்பட்ட இடத்தில் எல்லாம் பெரியார் நுழைந்தார்; உடைந்து நொறுங்கின ஆதிக்க கதவுகள்! பெரியாரின் எண்ணம் ஈடேறியது-ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமையால்!

ஒடுக்குமுறைகளிலேயே கீழான-மோச மான ஒடுக்குமுறை பெண்கள் மீதான ஒடுக்குமுறையே! ஜாதீய ஒடுக்குமுறை மைக்கும் கொடுமையானது பெண்ணிய ஒடுக்குமுறை. அதனால் தான் நாட்டின் விடுதலை என்பது கூட பெண் விடுதலைக் குப் பிறகே என்பதற்கொப்ப புரட்சிக்கவிஞர் பெண்ணடிமை தீருமட்டும்-பேசுந் திரு நாட்டு மண்ணடிமை தீருவது முயற் கொம்பே என்றார்.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது.

மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக் காரர்களை நடத்துவதைவிட, பணக்காரர்-ஏழையை நடத்துவதைவிட, எஜமான்-அடிமையை நடத்துவதைவிட மோசமான தாகும். அவர்கள் எல்லாரும் இருவருக்கும் சம்பந்தம் ஏற்படும் சமயங்களில் மாத்திரம் தான் அடிமையாக நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களை பிறப்பு முதல் இறப்பு வரை அடிமையாகவும் கொடு மையாகவும் நடத்துகிறார்கள் என்று ஆணாதிக்க மனோபாவத்தையும், பெண் ணடிமையின் நீட்சியையும் பெரியார் குறிப்பிட்டார்.

சிறுவயதில் தந்தைக்கும், திருமணமான வுடன் கணவனுக்கும், வயது முதிர்ந்த நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக பெண் இருக்க வேண்டும் என்பது கொடுமை அல்லவா? என்றார் பெரியார்.

பெண்களை அடிமைத்தளையிலிருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச் சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சமபொறுப்பும் ஏற்படும்படிச் செய்து விட்டோமேயானால் மனித சமூகத் தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங் களில் பெரும்பாகத்தையும் செய்தவர்கள் ஆவோம்என்று சமுதாயப் பொறுப்பினை அறிவுறுத்தியவர் பெரியார்.

ஆண்மை-தாய்மை

பெண்கள் வியாதியஸ்தர்களாய் ஆவ தற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற் கும், ஆயுள் குறைவதற்கும் இந்தக் கர்ப்பம் என்பதே முலகாரணமாக இருக்கின்றது.... பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று பெண்கள் கருதுவதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமையானதுமான காரியங்களுக்கு ஆளாகிறார்கள்....

`ஆண்மையின் கொடுமையிலிருந்து மட்டுமல்லாது பெண்கள் தாய்மையின் கொடுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்றதோடு,

ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக் காரனாய் இருப்பதனாலேயே தான் யோக்கி யமாகவும், சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது என்றும் பிள்ளைப் பேறு என்பது பற்றிய தமது மதிப்பீட்டை வெளிப்படையாக பகன்றவர் பெரியார்.

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பெரியார் பெண்கள் கல்வியையும், வேலையையும்தான் தங்கள் அழகாகக் கருதிட வேண்டும் என்றார். உலகப் பெண் கள் எல்லோரையும் விட இன்பமாகவும், சுதந்திரமாகவும், முழுவாழ்க்கை வாழுகின் றவர்களாகவும் மாறவேண்டும் என்றார்.

அதிசயம் அவர்!

ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் மிகமிக அற்புதமான காணக்கிடைக்காத அதிசயம் பெரியார். பெரியாரின் சிந்தனை யிலும், செயலிலும் மிக உன்னதமானது பெண்ணுரிமைக் கோட்பாடு. தனி வாழ்க்கை வேறு; பொதுவாழ்க்கை வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாதது பெரி யாரின் வாழ்வு. உண்மையும், நேர்மையும், துணிச்சலும் மனிதத்துவமும் நிறைந்த அவரைப் போன்ற பொதுத்தொண்டு புரிந்தோர் அரிதினும் அரிதானவர்களே! உலகில் பெண்ணியச் சிந்தனைக்கும், பெண் விடுதலைக்குமான செயல்பாடு களுக்கும் முன் மாதிரியாகவும், வேறு எவரையும் ஒப்பிடமுடியாதபடி திகழ்ந்த வரும் பெரியாரே ஆவார். பெண் உரிமைக் காவலர் என்பதன் முழு அடையாளமும் அவரே.

தொலைநோக்கு

புத்துலக தீர்க்கதரிசி அவர். பெண் களுக்கான புதுயுகம் காணப் போராடியவர். அதனால் பெண்ணடிமைச் சாடலில் அவரிடம் சுட்டெரிக்கும் சொற்களை காண் கிறோம். தார்மீக கோபம் நிரம்பி வழிந்தது அவரின் வார்த்தைகளில்.

பெண் விடுதலைக்கான தொலை நோக்குச் சிந்தனையில் கர்ப்பத்தடையை அறிமுகம் செய்து வலியுறுத்திய முதல் பெண்ணுரிமைப் போராளி பெரியார். குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரத்தை இந்த நாட்டில் அரசு தொடங்குவதற்கு முன்பே பெண்கள் கருப்பாதையைச் சாத்திட ஆணையிட்டவர் பெரியார்.

எவரும் கற்பனை செய்துகூட பார்க்காத காலத்திலேயே ஆண்-பெண் சேர்க்கை யின்றி பிள்ளை பெறும் காலம் வரும் என்று சோதனைக் குழாய் குழந்தை சிந்தனையை வெளியிட்ட சமூக விஞ்ஞானி பெரியார். அவரின் அன்றைய முன்னறிவிப்பு இன்று நிரூபணமாகி உள்ளதை-வெற்றி பெற்றுள் ளதை நாம் பார்க்கிறோம்.

ஆணாதிக்கச் சூழலும், பழைமைவாதி களும், புராண-இதிகாச விரும்பிகளும், வேத படைப்பாளர்களும், ஆரவார சுகபோகிகளும் பெண்களின் இருப்பை மறுத்தவர்கள்தாம். பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு அர்ப் பணிக்க வேண்டிய கடமையே என்று உறுதிப் படுத்தினர். பெண்களின் கோபத்தைக்கூட ஊடல் என்று உருக்குலைத்தார்கள். பெண் களையும், பெண்களின் உறுப்புகளையும் அழகின் அடையாளம் என்றார்கள்.

ஜாதிபேத சமுதாய அமைப்பு கெட்டிப் படுத்தப்பட்ட இந்திய சமுதாயத்தில் ஆண்கள் எஜமானர்கள். பெண்களோ எல்லாவிதமான ஆதிக்கச் சமூக அமைப்புக்கும் அடிபணிந்து போன ஆண் அடிமைகளுக்கும் அடிமை யாகித் தவித்தார்கள். ஆண்களின் ஆழ்மன தில் பெண்கள் தீனியாகவே திணிக்கப் பட்டார்கள் நமது சமுதாய அமைப்பில்!

மொழிகளையும், நாடுகளையும் கடந்து விரிந்து நின்ற பெண்ணடிமைத் தனம் மானுட உலகின் அவமானச் சின்னமன்றோ! ஆணாதிக்கத்தால் வாழ்வின் இனிமைகள் எல்லாம் மன உணர்ச்சிகள் எல்லாம் மறுக் கப்பட்ட கொடுமை-கொடுமையிலும் கொடு மையன்றோ!

உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண் குலத்தை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண் டும். பெண்ணடிமை ஒழிந்த இடமே சமத்து வம், சுதந்திரம் எனும் முளை முளைக்குமிடம் என்று அறிவித்தவர் பெரியார் மட்டுமே! பெண்களுக்கான விடுதலைத்தீர்வாய்-தியாக முத்திரையாய் பெரியார் ஒருவரே திகழ்ந்தார்.

இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும் பெண்களை அழைத்துச் சென்றவர் பெரியார். பெண்ணடிமைச் சாடலில்-பெண்ணுரிமை கோரலில் தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பு மாத்திரமல்ல; அவருக்குப் பின்பு கூட இதுவரையில் யாரும் தோன்றவில்லை... எதிர்காலத்திலும்... கேள்விக்குறியே! பெண் ணுரிமைக்கான தளத்தில் உலகின் தன்னி கரில்லா சுய சிந்தனையாளராக உயர்ந்து நிற்பவர் பெரியார் மட்டுமே!


வேறுபாடு ஏன்?

அங்க அமைப்பின்றி அறிவின் பெருக் கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் களுக்கும், பெண்களுக்கும் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் இல்லை, என்ற பெரியார் ஆணுக்குத் தனிச் சொத்து என்ற முறை ஏற்பட்ட காலத்தில்தான் அவனது மனைவி அச்சொத்துக்கும் பாதுகாப்பாக மட்டுமல் லாது, அவனது தனிச்சொத்தாகவும் அமைந்து போனதை உறுதிசெய்து கொண்டார்.

ன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால், அவளைத் தனக்கே உரிமை யாக்கிக் கொள்ளவும் அவளைத் தன்னை யன்றி வேறு புருஷனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவும் ஆன நிர்ப்பந்தம் ஏற்பட்ட தானது-பெண் அடிமையாக்கப்படவும், அவளது இயற்கை ஆளுமை பறிமுதல் செய் யப்படவும், ஆணுக்கு மட்டும் சொத்துரிமை கொடுக்கப்பட்டதுதான் அடிப்படை காரணம் என்று ஆய்ந்து, தனியுடைமை ஒழியாமல் பெண்ணடிமைத்தனம் ஒழியாது என்னும் முடிவுக்கு வந்தார்.

வீரம்-துணிச்சல் என்பது ஆணின் குணமாகவும், மென்மை-அச்சம் போன் றவை பெண்ணின் குணமாகவும் ஆணா திக்கச் சமூகத்தில் உருவகிக்கப்பட்டதை பெரியார் கடுமையாக மறுத்தார். ஆணுக்கும் `சாந்தம்,`மென்மை போன்ற குணஇயல்புகள் தேவையானவையே; பெண்ணுக்கும் `வீரம், `துணிச்சல் ஆகியவை இயற்கையான குணங்களே என்றார். பிள்ளை பெறுகின்ற உடலமைப்பைப் தவிர பெண்ணுக்கும், ஆணுக்குமிடையே வேறெந்த பாகுபாடும் இல்லையென்றார். பெண்களின் உயிரியல் வேறுபாடுகளை வைத்து அவர்களுக்கு பாலியல் தன்மை கற்பிக்கப்படுவதை கண்டனம் செய்தார் பெரியார்!

திருமண முறை

பெண்களை ஒரு பொருளாகக் கருதி `ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறை ஒழிய வேண்டும் என்றார். பெண்களை நாம் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடி வாழச் செய்வது தான் கடமை என்றார்.

நமது நாட்டில் நடக்கும் திருமணமுறை பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கும் சூழ்ச்சிதான் என்றார். புருஷன்-மனைவி சம்மந்தமே, எஜமான்-அடிமை சம்பந்தமேயொழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்புமுறை சம்பந்தமோ அல்ல! என்றார்.

ஓர் அரசனுடைய மகளாயினும் ஒரு பெண் ஒரு வேலைக்காரனுக்கு வாழ்க் கைப்பட நேரிட்டால் அவனும் அடிபணிந்து நடக்க வேண்டியதுதான். தந்தை ஒரு நாட்டுக்கு அரசனாயிருக்கிறான் என்ற அளவுக்குத்தான் பெருமை அடையலாமே யன்றி, மனைவி என்ற முறையில் மற்ற பெண்களைப் போலவே அவளும் தன் கண வனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியவள் தான் என்றார் பெரியார்.

பெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென் பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கூறியவர் பெரியார். ஓர் ஆணுக்கு என்னென்னவெல்லாம் உரிமை களாக உள்ளதோ-அத்துணையும் பெண் ணுக்கும் உண்டு என ஓம்புவதே பெண் ணுரிமை என்றும் கூறினார்.

கற்பு

`கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது என்பதை பெரியார் மட்டுமே உணர்ந்தார். `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை என கேட்டார். `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது என்றார்.

புருஷன்-மனைவி, கற்பு, பிள்ளைப் பேறு, போலவே விதவை, விபச்சாரம் என்பனவும் கூட பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே என்பது அய்யா பெரியாரின் கருத்து. மனைவியை இழந்த ஆண் `விதவன் என்றோ விலை மகளிரிடம் செல்லும் ஆண் `விபச்சாரன் என்றோ ஏன் குறிப்பிடப்படுவதில்லை என்று பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடைபகர்ந்தார் எவரும் இல்லை.

விதவைத்தன்மை என்பது எளியாரை வலியார் அடக்கி இம்சிப்பதல்லாமல் வேறல்ல என்றார். விதவைப் பெண்களின் நிலையையும், வேதனையையும், எண்ணிக் கையையும் எடுத்துக்கூறி விதவை மறு மணத்தை வலியுறுத்தினார் பெரியார். விபச் சாரம் என்பதற்குப் பொருள் என்னவென் றால் தங்கள் ஆசைக்கும், மன உணர்ச்சிக் கும் விரோதமாய் வேறு நிர்ப்பந்தத்திற்காக அடிமைப்படுவதே ஆகும் என்றார்.

இளமை மணம்

`பால்ய விவாகம் என்ற பேரால் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டதை பெரியார் எதிர்த்தார். பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளுக்கு, கல் யாணம் என்ற கடுவிலங்கு பூட்டி பிஞ்சிலே பழுக்கச் செய்து, வெம்பி அழியச் செய்யும் கொலை பாதகத்தைக் கண்டு எந்தக் கருணை உள்ளம்தான் சகித்துக் கொண்டி ருக்க முடியும்? என்றார்.

பெண்களின் திருமண வயது உயர்த் தப்படவேண்டும்; வயது அதிகம் ஆக ஆகத் தான் ஒரு பெண் உளவியல், உணர்ச்சி இயல் அடிப்படையில் திருமணத்தை எதிர்கொள்ளவும் முடியும். என்றதுடன், இளம்பெண் திருமணத் தடைச்சட்டத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரமும் அந்தக் கால கட்டத்தில் செய்தவர் பெரியார். தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வர குரல் கொடுத் தார். தேவதாசிகள் சமுதாயத்தில் இருந்து தான் தீர வேண்டும் என்ற சத்தியமூர்த்தி பரம்பரையை முறியடித்தார்.

சொத்துரிமை

பெண்விடுதலைக்கு சொத்துரிமை இன்றியமையாதது என உணர்ந்த பெரியார், பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும், பொருளாதார ரீதியான பாதுகாப்பும் சுதந் திரமும் பெண்களுக்கு இருக்க வேண்டுமா னால், அதற்கு சுயமாகச் சம்பாதிப்பதற்கு வேலையும், கல்வியும்தான் அவசியம் என்றார். ஆண்கள் புரியும் அனைத்து வேலைகளிலும் பெண்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சமவாய்ப்பு தேவை என்றார். என்னிடம் ஆட்சி இருந்தால் ஆண்களுக் கான கல்வியைத் தடை செய்துவிட்டு பெண்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலம் படிக்க உத்திரவிடுவேன் என்றார்.

பெண் கல்வி

`வெறும் ஆண்களை மாத்திரம் படிக்கவைத்துவிட்டு, பெண்களை படிக்க வைக்காமல் இருக்கும் சமூகம் ஒரு கண் குருடாக உள்ள சமூகத்தை ஒத்ததாகும் என்பது பெரியாரின் கருத்து.

பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இவை இரண்டும் பெற்றோர்களால் கற்பிக் கப்பட்டு விட்டால் சொத்து சம்பாதிக்கும் சந்தி வந்துவிடும். பிறகு தனக்கு வேண்டிய துணையைத் தேர்ந்தெடுக்கவும், சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகும். பெண்ணடிமை என் பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள் சொத் துரிமை இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும். ஆதலால், பெண்கள் தாராளமாய், துணிவுடன் முன்வந்து சொத்துரிமைக் காகக் கிளர்ச்சி செய்து பெற வேண்டும் என்றார் பெரியார்.

தந்திர ஏற்பாடு....

ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதின் கருத்தே பெண் களை அடிமையாக்கவும், அடக்கிப் பய முறுத்திவைக்கவும் செய்த தந்திரமே ஆகும் என்றும், காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு, அவைகளில் உலோகங்களை மாட்டிவைப்பது, மாடுகளுக்கு மூக் கணாங்கயிறு போட்டதால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகி இருப்பதால், ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கி னால் எதிர்த்து அடிக்க வராமல் இருக்க, எங்கே காது போய் விடுகிறதோ, மூக் கறுந்து போய் விடுகிறதோ என்று தலை குனிந்து முதுகைக் காட்டத் தயாராய் இருப்பதற்காகவே அது உதவுகிறது என் றும் பெண்களின் அணிமணிகள் ஆசை யையும், அதனை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களின் மனோபாவத்தையும் கண்டித்தார்.

நகை என்பது பெண்உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பொன்விலங்கு என்பதைப் பெண்இனம் மறக்கக் கூடாது. கொத்து கொத்தாக நகை அணியும் பித்து நம் குலப் பெண்களை அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அளவுக்கு மிஞ்சி நகை அணிவதைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். ஓரளவு நகை களுக்கு மேல் அணிகின்றவர்களுக்குத் தண்டனை அல்லது வரிவிதிக்கச் சட்டம் இயற்றும் சர்க்காரை நான் வரவேற்கி றேன். பெரியாரின் கோபமொழிகள் இவை. ஏன்? பெண் விடுதலையின் மீது அய்யா பெரியாருக்கு இருந்த தாகம்!

பெண்களின் ஆசையிலும், வாழ்க்கை லட்சியத்திலும் தலைகீழான புரட்சி ஏற்பட வேண்டும். ஆண்கள் செய் கின்ற எல்லா வேலைகளுக்கும் பெண்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆண்களைப் போன்று துணிவாக நடந்துகொள்ள வேண்டும். பெண்கள் தனியாக வாழமுடியும், எதனை யும் சாதிக்கமுடியும் என்கின்ற நிலைக்கு வரவேண்டும். சுதந்திரமாக, கவலையற்று வாழ, தொல்லையற்று வாழ அறிவைக் கொண்டு சிந்தித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இதுதான் மகளிர் சமுதாயம் சுயசார்போடு வாழும் வல்லமை பெறுவதே பெண்ணுரிமைக்கும், பாதுகாப் புக்கும் வழி என்பது தந்தை பெரியாரின் தீர்க்கமான முடிவு.

பொதுவாக மக்களின் அடிமைத்தனம் அகல-அடிமைத்தொழில் அகல பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்பது அய்யாவின் கருத்து. பெண்களை அடிமை களாக ஆக்கியதன் பயனாய் மக்கள் அடிமை களால் வளர்க்கப்பட்டார்கள். அடிமைகளால் வளர்க்கப்பட்டதன் பலனாய் மக்கள் சகலத் திலும் அடிமைகளானார்கள். எனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டு மானால் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! பெண்கள் அடிமை நீங்க வேண்டும்!! முக்காலமும் பெண்கள் அடிமை நீங்க வேண் டும்!!!- இப்படி பெண்ணடிமை ஒழிவதே அனைத்து அடிமைத்தனங்களும் அகல வாய்ப்பாகும் என்று பெரியார் கருதிய காரணத்தால்தான் பெண்ணுரிமைக்காகப் பாடுபடலானார்- போராடலானார்- பரப்புரை யில் ஈடுபடலானார். அம்முயற்சியில் பெரியார் பெரு வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும். மகளிர் சமுதாயம் இன்று அடைந்துள்ள வளர்ச்சி அனைத்துக்கும் காரணம்-அடிப்படை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனையே!

தமிழ்நாட்டில்,
இந்திய துணைக் கண்டத்தில்,

ஏன்? உலக அளவில் `பெண்ணினத்தின் வரலாறு புதுப்பிக்கப்பட்டது தந்தை பெரி யாரின் அரிய தொண்டினால் தான். பெண் விடுதலைக்காகப் பெரியார் தம்மை அர்ப் பணித்துக் கொண்ட புதுயுகம் இது . பெண் களின் ஆளுமையும், ஆற்றலும் வெளிப் படுத்தப்பட்டது அவராலே.

உங்களுக்குப் பெருமை வேண்டு மானாலும், உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதர்களுக்குத் தொண்டு புரிவதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்ளுங்கள் என்ற பெரியார்,

`மனித வாழ்க்கை என்பது தொண்டு செய்வதுதான். தொண்டு செய்யாத வாழ்க்கை மிருக வாழ்க்கைக்குச் சமம் என்றும் மனிதத் தொண்டுக்கு மகிமை ஏற்படுத்தியவரும் பெரியாரே!

ஜாதீய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை...

கல்வி-வேலைவாய்ப்பு எனும் வாழ் வுரிமைக்கான வாய்ப்பு...

மொழி உரிமை....

இன மேம்பாடு-விடுதலை...

வழிபாட்டுரிமை....

அனைத்துவிதமான ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை....

இப்படி பல்வேறு தடங்களில் முத்திரை பதித்த பெரியாரின் தொண்டு `பெண் விடுதலை எனும் தடத்திலும் புதுப்பாதை சமைத்தது! பெண்ணடிமைத்தனத்தை பெரியார் போல் உலக அளவில் சாடியவர்கள் வேறு எவரும் இலர். பெண்களே கூடி நடத்திய பெண்கள் மாநாட்டில் `பெரியார் எனும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தனர் தந்தைக்கு! பெரியார் போற்றிய பெண்ணுரிமை காப்போம்!

(புதுச்சேரி வானொலி நிலையத்தில் 17.9.2010 அன்று ஒலிபரப்பப்பட்ட ` பெரியாரின் பெண்ணுடிமைச் சாடல்! எனும் தலைப்பில் துரை.சந்திரசேகரன் ஆற்றிய உரை)
http://viduthalai.periyar.org.in/20101028/news05.html
http://www.viduthalai.periyar.org.in/20101029/news07.html

Saturday, October 2, 2010

பயிரை மேயும் வேலிகள்! -மின்சாரம்

அப்பாடா! ஒரு வழியாகப் பிரச்சினை தீர்ந்தது என்று பெருமூச்சு விடுகின்றனர் சிலர்; இது என்ன தீர்ப்பு _ கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு என்று விமர்சனம் செய்பவர் சிலர். அடித்த-வனும், அடிபட்டவனும் ஒன்றுதானா என்று ஏக்கப் பெரு மூச்சுவிடுபவர் சிலர்.
இப்படியெல்லாம் பழைய கதை-களைத் தோண்ட ஆரம்பித்தால், அது திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே ஆபத்து வந்துவிடும். அதற்கு ஏராளமாக ஆதாரங்கள் உண்டு. ஆய்வு நூல்களும் வெளிவந்து இருக்கின்றனவே - _ வீணாகப் புதிய புயலை உண்டாக்-கலாமா அலகாபாத் உயர்நீதிமன்றம் என்று வினா எழுப்புவோர் உண்டு.
நமக்கு ஏன் இந்த வீண் வம்பு என்று பந்தை உச்சநீதிமன்றம் பக்கம் தள்ளி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து-விட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம் என்பது சிலரின் கணிப்பு. 1949 டிசம்பர் 23ஆம் தேதியன்று திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் நுழைந்து பாபர் மசூதியின் மய்யப் பகுதிக்குள் _ அதுதான் ராமன் பிறந்த இடம் என்று கூறி ராமன் பொம்-மையை வைத்தார்களே, அந்த அத்து-மீறல் திருட்டுத்தனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டதா? அப்படி-யென்றால் மதக்காரணத்தைக் காட்டி இதுபோன்ற சட்ட விரோதமான காரி-யங்களில் ஈடுபடுவது சரிதான் _- அது ஒன்றும் குற்றமில்லை என்று உயர்நீதி-மன்றம் கூறி விட்டதாகக் கருதலாமா?
ராமன் பிறந்த இடம் அந்த இடம்தான் என்று சொன்னதன் மூலம் ராம ஜென்ம பூமிக்காரர்களின் குரலுக்கு நியாய வண்ணத்தைத் தீட்டும் ஓவியர்-களாக நீதிபதிகள் மாறி விட்டார்களா?
புராணம் மற்றும் இதிகாசங்களில் புனையப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள் எல்லாம் வரலாற்று மாந்தர்களாக நினைப்பதை பொது அறிவு உடைய-வர்களும், வரலாற்று ஆசிரியர்களும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகி-றார்கள்? அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு இதன்மூலம் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறதா _ இல்லையா?
ராமன் பிறப்பு என்பதை ஏற்கும்போது, அதே இராமாயணத்தில் ராமன் எப்படிப் பிறந்தான் என்று வால்மீகி வரைந்து தள்ளியிருக்கிறாரே -_ குதிரையோடு தசரதனின் மனைவி-மார்கள் ஓர் இரவு முழுவதும் கட்டிப் புரண்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்? புரோகிதர்களிடம் தசரதனின் மனைவிமார்கள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள்மூலம் அப்பெண்கள் கர்ப்பம் தரித்தார்கள் என்பதையும் கனம் நீதிபதிகள் கவனத்தில் கொள்ளாமலா இருந்திருப்பார்கள்?
சட்டம் எல்லாம் தேவையில்லை -_ இது மதசம்பந்தமான நம்பிக்கைப் பிரச்சினை _ இதில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது _ -கூடாது என்று சங்பரிவார்க் கூட்டம் உரக்கக் கூறிக் கொண்டு இருந்ததே -_ அந்தக் கூற்றுக்கு ஆமாம் சாமி போட்டு விட்டனரா நீதிபதிகள்?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலை அறிக்கையில் (1.10.2010) குறிப்பிட்டி-ருந்தபடி- _ பிற்காலத்தில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா? சட்டத்தை நெட்டித் தள்ளிவிட்டு, நம்பிக்கை எனும் வெளிச்சத்தில்தான் இனி நீதிபதிகள் தீர்ப்புகளை தோண்டி எடுப்பார்களோ!
சாட்சியம், ஆதாரம், ஆவணங்கள் என்பவைகளை எல்லாம் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நம்பிக்கை என்னும் போலிக் கோபுரங்களை எழுப்பிடும் ஆபத்துக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்து விட்டதோ அலகாபாத் உயர்நீதிமன்றம்!
இந்த நம்பிக்கை என்பது இந்து-மதக்காரர்களுக்கு மட்டுமே உள்ள ஏகக் குத்தகையா? அதே நம்பிக்கையைக் காட்டி கிறித்தவர்களோ, முஸ்லிம்-களோ, பவுத்த மார்க்கத்தவர்களோ பிரச்சினைகளைக் கிளப்பினால் நாட்டின் கெதி என்னாகும்?
விநாயகன் கோயில்கள் எல்லாம் ஒரு காலத்தில் புத்தர் விகார்கள் அல்லவா! புத்தருக்குத்தான் விநாயகன் - _ தலைவன் என்று பெயர் இருந்தது என்பதற்கு எதிர்க்க முடியாத ஆதாரங்கள் உண்டே!
சாஸ்தா என்றுகூட புத்தருக்குப் பெயருண்டு. அந்தப் பெயரைத் திருடி அய்யப்பனுக்கு வைத்துக் கோயில் எழுப்பி விட்டனரே _ அய்யப்பன் கோயில்களை மீண்டும் புத்தர் விகார்-களாக மாற்றிட அலகாபாத் உயர்நீதி-மன்றம் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்துவிட்டது என்று நம்பலாமா?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று நீதிமன்றம் பச்சை மையால் கையொப்-பம் போட்டுக் கொடுத்து விட்ட பிறகு பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் நியாயவான்கள் ஆகிவிட்டார்களா? இந்தத் தீர்ப்பு வெளிவந்த அந்தக் கணமே அத்தனைக் குற்றவாளிகளும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று பொருளா?
நிலுவையில் இருக்கும் அந்த வழக்கில் அலகாபாத் தீர்ப்பு முக்கிய இடம் பெற வாய்ப்பு _ இருக்குமோ!
ஏற்கெனவே ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் -_ இந்து சாம்ராஜ்யத்தை நிறுவப் போகிறோம் என்று இசுரேல் வரை சென்று திட்டம் தீட்டியவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது என்று அந்த வெறிபிடித்த காவிக் கொடி அனுமார்கள் பூமிக்கும் வானுக்கும் தாவிக் குதிக்க மாட்டார்களா? அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமா?
அயோத்தியைத் தவிர காசி உள்பட ஆயிரக்கணக்கான மசூதிகளின் பட்டியல் எங்கள் கைகளில் இருக்கின்றன என்று கனல் கக்கிக் கொண்டிருந்தவர்களுக்குக் கைலாகு கொடுத்துவிட்டது நீதித்துறை என்று குற்றம் சொன்னால், அது தவறாகுமா?
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளது. அது என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறதோ!
வேலியே பயிரை மேயலாமா என்ற கேள்வியை இனியாரும் கேட்க முடியாது! மேய்கிறது! மேய்கிறது!! மேய்ந்துகொண்டே இருக்கிறது!!! 
http://www.viduthalai.periyar.org.in/20101002/snews01.html

ஆசிரியர் கேள்வி பதில்கள் -கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்

கேள்வி: நடைபாதைகளில் குடிசைகள் ஆக்கிரமிப்புபற்றி படத்துடன் செய்தி வெளியிட்ட தினமலர் போன்ற ஏடுகள், நடைபாதைகளில் ஆக்கிரமிக்கும் கோயில்கள் பற்றி படத்தையோ, செய்தியையோ வெளியிடுவதில்லையே -_ ஏன்?
- சி. இராசம் கந்தசாமி, சென்னை - 2
பதில்: அவாள் புத்திக்கு இது அப்பட்டமான எடுத்துக்காட்டு. பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்று ஆரிய மாயைபற்றி அண்ணா சொன்னதற்கு அரிய உதாரணம்!

கேள்வி: குறிப்பிட்ட ஒரு ஜாதிக்காக மட்டுமே குரல் கொடுப்பவர்கள் சமூகநீதிக்காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொள்ள முடியுமா?
-- மு. இரவிச்சந்திரன், திண்டிவனம்
பதில்: அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி தத்துவம். என் ஜாதி, என் மதம் மட்டும் என்பது ஒரு குலத்துக்கொரு நீதியே!

கேள்வி: பீகார் தேர்தல் பிரச்சாரத்துக்கு நரேந்திரமோடி வரக் கூடாது என்று நிதீஷ்குமார் கூறுவது -_ ஏன்?
-- மு. சுலைமான், பாளையங்கோட்டை
பதில்: மோடி! (மஸ்தான்) வந்தால் ஓட்டு மர்கயா -_ வாக்கு வங்கியில் தோல்வி என்பது அவரது எண்ணம்.

கேள்வி: போப்பைக் கொலை செய்ய முயன்ற 5 பேர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளனரே?
-- ஜே.ஜோசப், சென்னை-1
பதில்: ஆண்டவரையே கொலை செய்ய முடியுமா? முடியாது எங்களால் என்று அவர்கள் கோர்ட்டில் வாதாடு வார்களோ!

கேள்வி: கணக்கு மற்றும் இலக்கணம் என்றால் மாணவர்களில் பெரும் பாலோர்க்குக் கசக்கிறதே _ பள்ளிப் பருவத்தில் தாங்கள் எப்படி?
-- சா. தமிழரசன் (மாணவன்), சேத்தியாதோப்பு
பதில்: கசக்கவில்லை; இனிக்கவில்லை. மதிப்பெண் கூடுதலாகவும் வாங்கினேன். பொதுவாக எனக்கு கசப்பு பிடிக்கும்.

கேள்வி : மத்திய அமைச்சகத்தில் இணை அமைச்சர் என்று ஒரு பிரிவு இருக்கிறதே - _ இவர்களுக்கு உருப்படி யாக ஏதாவது பொறுப்புகள் உண்டா?
-- ஆடுதுறை ந.கவுதமன், சென்னை-112
பதில்: உண்டே! _ விழாக்களில் கலந்து கொள்வது! சில துறைகளில் இவர்களுக்கு கோப்புகளும் வரக் கூடும்!

கேள்வி : மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இந்தி நாள் கொண்டாடப்பட்டுள்ளதே?
-- கி. சிவாஜி, மதுரை-2
பதில்: தமிழ் வளர்த்த மதுரையிலா இக்கொடுமை! நம் மாணவர்கள் சினிமாவின்முன், தொலைக்காட்சி முன் கிரிக்கெட் மைதானத்தில் திரண்டுள்ளார்களே -_ அதன் பலனா இது?

கேள்வி: ஆண்டாள் -_ரங்கநாதன் உறவு - _ பக்தி என்ற நிலையைக் கடந்து கணவன் _ மனைவி யானது நயத்தக்க நாகரிகம்தானா?
-- புலவர் நக்கீரன், இராசபாளையம்
பதில்: பக்திக்கும், புத்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே இல்லையே! பிரம்மா _ சரஸ்வதி உறவை விடவா மோசம் இது?

Thursday, September 30, 2010

இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?

சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி - பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வலத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.
அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனையும் பிரார்த்தித்தது தினமணி - தி.மு.க. தோற்க வேண்டுமாம்
முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.
இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.
இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?
ஆஸ்திகம் - நாஸ்திகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ்திகம் வென்றுவிட்டதே - நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!
------------மின்சாரம் அவர்கள் 10-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_11.html

சிங்க இளைஞனே, சிலிர்த்தெழு!-திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல்

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற (29.9.2010) திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல், கலந்துகொண்ட இளைஞரணியினருக்கு மட்டு மல்ல, கழகத் தலைவர் உள்பட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், நன்னம்பிக்கையினையும் ஏற்படுத்திவிட்டது.
ஓர் இயக்கத்தின் - ஓர் அமைப்பின் எதிர்காலம் என்பது அந்த இயக்கத்தின், அந்த அமைப்பின் இளைஞர்கள் தம் பலத்தைப் பொறுத்ததே!
அதுவும் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம்பற்றிச் சொல்லவே தேவையில்லை. நான் இளைஞர்களை நேசிக்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியது இந்த அர்த்தத்தில்தான்.
இன்றைய சமூக அமைப்பில் அரசியல் என்பது பளபளப்பானது - கலைத்துறை - சினிமாத் துறை என்பது கவர்ச்சிக்குரியது. இந்த இரண்டையும் தாண்டி கொள்கை, கோட்பாடு, இலட்சியம் கண் ணோட்டத்தோடு திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்கள் படையெடுக்கிறார்கள் என்றால், அது ஒன்றும் சாதாரணமானதல்ல.
இம்மாதம் சீர்காழியில் நடந்த மண்டல மாநாட்டில்கூட பொறுக்குமணி போன்ற இளைஞர் கள் கழகத்திற்கு வந்து சேர்ந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மற்றும் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் கிடைத்துள்ள செய்தி இதனை உறுதிப்படுத்துகிறது.
இளைஞர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தல் என்று தமிழர் தலைவர் கூட்டத்தில் தெரி வித்தது - கவனிக்கத்தக்கது - கருத்தூன்றிச் சிந்திக்கத் தகுந்ததாகும்.
மதப் போர்வையில் நாட்டில் நடக்கும் சண்டை, சச்சரவுகள், கலவரங்கள் (உலகம் எங்கும் கூட) ஜாதிப் பிரச்சினைகள், தீண்டாமைக் கொடுமைகள், ஊடகங்களின் போக்குகள், கலைத் துறைகளின் காமக் களியாட்டங்கள், சமூகநீதிக் களத்தில் மத்திய தேர்வாணைக் குழுவின் தில்லுமுல்லுகள், இது தொடர்பாக நீதிமன்றத்தின் போக்குகள், மதவெறியைக் கிளப்பிவிட விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் நடத்தும் விஷம வேலைகள் - இவற்றை எல்லாம் எதார்த்தமாகக் காணும் இளை ஞர்கள் மத்தியில் புதிய சிந்தனை மின்னல் சிறகடிக் கிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்ட தன்மையில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளும், சமூகநீதித் தத்துவங்களும், கலாச்சாரக் கண் ணோட்டமும், மனிதநேயக் கண்ணோட்டமும், ஜாதி ஒழிப்புப் பார்வையும்தான் - இன்றைய சிக்கல் களுக்குச் சரியான தீர்வுகளாக இருக்க முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கை இளைஞர்களை இயக்கத்தின் பக்கம் இழுத்து வருகிறது என்றே கருதவேண்டும்.
மற்ற மற்ற மாநிலங்களில் மதவாத சக்திகள், குறிப்பாக இந்துத்துவா சக்திகள் நாளும் நடத்தி வரும் வன்முறைகள், அமைதியைக் குலைக்கும் முயற்சிகளைத் தெரிந்துகொண்டுள்ள இளைஞர் கள், தமிழ்நாடு இந்தத் தன்மையிலிருந்து விலகி அமைதிப் பூங்காவாக மணம் வீசிக் கொண்டிருப்ப தற்குக் காரணம் - தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், சிந்தனைகள் இங்குப் பலமாக வேர்ப் பிடித்திருப்பதுதான் என்ற முடிவுக்கு வந் துள்ளனர். மக்கள் மத்தியில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் பூக்கப் புயல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பது திராவிடர் கழகமே என்று தெரிந்துகொண்ட நிலையில், இந்த இயக்கம்தான் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்பதை உள்வாங் கிக் கொண்டு, கழகத்தை நோக்கி வருகிறார்கள்.
குறிப்பாக, கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்களை நாம் இலக்காகக் கொண்டு உரிய பிரச்சார யுக்திகளை வகுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
மாணவர் கழகத் தோழர்களே, இளைஞரணி வீரர்களே! உங்கள் கவனம் தமிழின இளைஞர் களின் மூளையின்மீதே இருக்கட்டும்! அதன்மீது பூட்டப்பட்ட மூட விலங்குகளிலிருந்து அவர்களை விடுவிப்பதில் சதாகவனம் செலுத்துங்கள்.
ஏடுகளைக் கொண்டுபோய் போடுங்கள்; நூல்களைக் கொடுத்து உதவுங்கள்; கொள்கைப் பிரச்சார இடத்திற்கு அழைத்து வாருங்கள்; இவற்றை முறையாகச் செய்துவிட்டால், அந்த மாணவர்கள், இளைஞர்கள் பெரியார் திடலின் முகவரி தேடிப் பறந்து வருவார்கள் - இதில் அய்யத்திற்கே இடமில்லை.
சிங்க இளைஞனே சிலிர்த்தெழு! தன்மானச் சிங்கமாம் நம் தலைவர் தந்தை பெரியார் அவர் களின் கொள்கை என்ற ஆயுதத்தைக் கையில் எடுங்கள்! செயல்படுங்கள்!! வெற்றி நமதே!!!
http://www.viduthalai.periyar.org.in/20100930/news04.html

Sunday, September 26, 2010

பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டதா?-கவிஞர் கலி பூங்குன்றன்


கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...?
பதில்: பிராமணர்கள் உயர்ஜாதி-யினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்-டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்-துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!
(கல்கி 19.9.2010 பக்கம் 30)
_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:
Ignored by Political Parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ ஆத்திரத்-தோடோதான் அய்யர்வாளின் வாயிலி-ருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.
மனிதர்களாக இருப்பவர்கள் தேவையானவர்களே! பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - _ இன்றைக்கும் ஒவ்-வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவு-படுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.

ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எவனாவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கிறாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்-ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்-களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயி-லாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாட-கைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்-பட்டுள்ளது.

மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்-பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்-பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்-வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்-களைப் பிய்த்துத் தின்பது உண்மை-யெனின், சகலவிதமான கூலி வேலை-களையும் செய்ய வேண்டியதுதானே?
தந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கி-றார்களா? களை எடுக்கிறார்களா? ரிக்ஷா இழுக்கிறார்களா? துணி வெளுக்கி-றார்களா? சவரத் தொழில் செய்கி-றார்களா? ஏன் இவற்றைச் செய்வ-தில்லை? வறுமையிலும் வருணா-சிரமம் இருப்பது ஏன்? அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பு-கிறார்கள். அவர்களின் சதவிகி-தமான மூன்று சதவிகிதம் கிடைக்க-வில்லை என்று கூற வருகிறார்களா? அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்-ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -_ அந்த நிலை பறி போய்-விட்டது என்று பதறுகி-றார்களா? என்பதைத் தெரிந்து கொள்-ளவே நமக்கு ஆசை.


2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்-வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்-கள் யார்?


பி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமி-பிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்-நாட்டில் அரசின் தலைமைச் செய-லாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே! இதேபோல தாழ்த்தப்-பட்டவர்களோ, பிற்படுத்தப்-பட்டவர்-களோ, மிகவும் பிற்படுத்தப்-பட்டவர்-களோ தொடர்ந்து தலைமைச் செய-லாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா?

பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா?


மத்திய அரசு துறைகளில் தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! -_ சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.


அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறை-களும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே?இந்த நிறுவனங்களுக்கு பணிய-மர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள்? முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்-பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா? எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து (ஷிக்ஷீஸ்மீஹ்)ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்-தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே!
தந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.
அவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.இதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே!எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்-கூடாது, அவன் ஏழையாகவே இருக்க-வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்-லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.
ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்-பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

(குடிஅரசு 9.11.1946)
பார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்-படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் -_ நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்?

ஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவா-ளர் சோ ராமசாமி? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்று துக்ளக் தலை-யங்கம் தீட்டுகிறதே! (துக்ளக் 18.11.1998)

தமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடி-யுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதி-னாரே! அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார்? பார்ப்பனர்கள் தமிழ்-நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்ப-வில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே!

எவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்-பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.


பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்-விட்டது என்று கல்கி பதில் சொல்-கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்-பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா? (டிசம்பர் 2005)
அந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்? அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா?
2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்-முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்று ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே -_ மறந்து விட்டீர்களா?
தமிழன் என்று சொல்லடா! தலை-நிமிர்ந்து நில்லடா - _ அது ஒரு சுலோகம்.
பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே _ இதுதான் பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா?
பொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது?
பார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன?
நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).
அய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகி-விட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா?

தமிழ் செம்மொழி ஆனால், வீட்-டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்-டாக அரசு அறிவிக்க முடியாது _ அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.


இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது _ பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்-கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டி-ருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்-லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்-ளார் _ இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது -_ வேகவே வேகாது!

இந்தியா முழுமையும் சமஸ்கிருதப் பள்ளிகளா?


மதுரைப் பதிப்பு மாலை முரசு ஏட்டில் (21.9.2010) கீழ்க்கண்ட சேதி இடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பண்டைக் காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வந்த சமஸ்கிருத மொழி படிப்படியாக தனது செல்வாக்கை இழந்தது. இருப்பினும் செம்மொழி என்ற தகுதியுடைய சமஸ்கிருத மொழி அறிவுக் களஞ்சியமாகத் திகழ்வதால், சமஸ்கிருத கல்விக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதையடுத்து, முதலாவதாக மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் சமஸ்கிருதப் பள்ளி தொடங்கப்படுகிறது.
இதில் 55 சதவிகித இடங்கள் அகில இந்திய பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக ஒதுக்கப் பட்டுள்ளன. 15 சதவிகித இடங்கள் ஏழை, எளிய மாணவர் களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்கள் பொதுப் பிரிவின்கீழ் வருகின்றன. பொதுவாக 25 சதவிகித இடங்களை நலிந்த பிரிவினருக்கு ஒதுக்குவது வழக்கம்.
ஆனால், சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களில் 15 சதவிகித இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதால், இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து நன்கொடை பெறலாம். அதன் வாயிலாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது பட்டியலில் இந்தியாவில் 22 மொழிகள் இருக்கின்றன. இதில் சமஸ்கிருதம் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், இம்மொழி செத்த மொழியாகக் கருதப்படும் (Dead Language) நிலையில் உள்ளது.
இந்தியா (1999) பப்ளிக்கேஷன் டிவிஷன் (Ministry of Information and Broadcasting, Govt of India) இந்தியாவில் 18 மொழிகள் பேசும் மக்களின் புள்ளி விவரங்களை வெளி யிட்டுள்ளது. 1971 இல் 2212 பேர், 1981 இல் 6106 பேர், 1991 இல் 49,736 பேர், 1971 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் சூநபடபைடெந என்றும் 1991 இல் வெறும் 0.01 சதவிகிதம் என்றும் அதிகாரப்பூர்வமான மத்திய அரசின் தகவலாக வெளியிடப் பட்டுள்ளது. 1971 மற்றும் 1981 இல் புறக்கணிக்கத்தக்க (Negligible) என்ற சொல்லையே இந்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்ப்பனர்கள் உள்பட நாட்டு மக்களால் புறக்கணிக்கப் பட்ட செத்த மொழிக்கு உயிரூட்டும் வேலையில் மத்திய அரசு ஏன் இறங்கியுள்ளது என்பது முக்கியமான கேள்வியாகும்.
பெரும்பான்மை மக்களின் பணம் சிறுபான்மைப் பார்ப் பனர்களின் தாய்மொழி என்கிற காரணத்தாலும், மத்திய மனித வளத்துறை அமைச்சர் அச்சமூகத்தவர் என்பதாலும்தானே இந்த விரயம்?
குடிஅரசான பத்து ஆண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும் என்று இந்திய அரசமைப்பின் 45 ஆம் பிரிவு அறுதியிட்டுக் கூறியிருந்தும், பல பத்தாண்டுகள் பறந்தோடியும் அந்த நிலை எட்டப்படவில்லை.
2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மறுபடியும் 86 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இன்றைய நிலையில்கூட, இந்தியாவில் எழுத்தறிவு என்பது 64.84 சதவிகிதம்தான்; இதில் பெண்கள் 54.16 சத விகிதம்தான்.
கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விடுபவர்களில் பழங்குடியினர் 87.7 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட வர்கள் 86.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோர் 75.1 விழுக்காடு என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. (செப்டம்பர் 8, 2006, எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி).
இந்த வெட்கம் கெட்ட நிலையில், கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை என்ற பழமொழிக்கேற்ப, செத்துச் சுண்ணாம்பாகிப் போன ஒரு மொழியைக் கற்பிக்க இந்தியா முழுமையும் கல்விக் கூடங்கள் திறக்கப்படுகின்றன என்றால், இதன் பொருள் என்ன?
1925 இல் சேலம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொன்னாரே - வெள்ளைக்காரன் வெளியேறிய சுதந்திர இந் தியாவில் டெமாக்கிரஸி இருக்காது; மாறாக பிராமினோ கிரஸிதான் இருக்கும் என்றாரே - அதுதானே இதன் பொருள்?
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒரு ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து, கோடிக் கணக்கான ரூபாய்களைக் கொட்டி அழுதார்கள். திராவிடர் கழகம்தான் அப்பொழுதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தது. தமிழையும் அவ்வாறு அறிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டார். முதலமைச்சர் கலைஞர் அவர்களும் வேண்டுகோள் விடுத்தார். கடைசிவரை அந்தப் பார்ப்பன நந்தி அசைந்து கொடுக்கவில்லையே.
இப்பொழுது மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காங்கிரஸ் தலைமையில், மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறது. ஆட்சி மாறினாலும், அடிப்படையில் பார்ப்பனத் தன்மை என்கிற நங்கூரம் அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு அடை யாளமாக இதனைக் கருதவேண்டியுள்ளது.
55 சதவிகித இடங்கள் அகில இந்தியப் பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக இத் தகைய சமஸ்கிருதப் பள்ளிகளில் இடங்கள் ஒதுக்கப்படுமாம்.
ஈரோட்டு நுண்ணாடியைக் கொண்டு பார்த்தால், இதில் நெளியும் கிருமிகள் யாவை என்பது எளிதில் விளங்கிவிடுமே.
மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் இடம்பெற்றிருக்கும் வேலை வாய்ப்பு 12 சத விகிதத்தைத் தாண்டாத நிலையில், மீதி உள்ள இடங்களை ஆக்கிரமித்து இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர் களுக்குத்தான் இந்த 55 விழுக்காடு இடங்கள். பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளுக்கு 55 விழுக்காடு என்று நேரடியாகச் சொல்லாமல் - கொஞ்சம் சுற்றி வளைத்து மத்திய அரசுப் பணிகளில் இருக்கும் அதிகாரிகள் வீட்டுப் பிள்ளைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள இதர கட்சிகள் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்குமாக! தடுத்து நிறுத்துமாக!

weather counter Site Meter