Pages

Search This Blog

Showing posts with label தந்தை பெரியார். Show all posts
Showing posts with label தந்தை பெரியார். Show all posts

Monday, August 19, 2013

சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார் - மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம்


நீடாமங்கலம் ஆக.19- சமு தாயப் புரட்சியாளர்களில் முதன் மையானவர் தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள். இடஒதுக்கீட்டுப் பாதையில்  குறுக்கிட்டுச் சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள். அவற்றையும் சந்தித்து சமூகநீதியை வென் றெடுப்போம் என்றார். நீடாமங் கலத்தையடுத்த வையகளத்தூரில் நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது (17.8.2013).
சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் முதலிடம் வகிக்கிறார்
ஆண்டொன்று போனால், வய தொன்று போகும் என்று சொல் வார்கள், அதேபோலத்தான், ஆண் டொன்று போனால், பழைய நினை வுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். நம்முடைய வரலாறு நமக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது. அந்த வரலாற்றை உருவாக்கி யவர்களுடைய அற்புதமான செயல் கள் நம்முடைய நெஞ்சைவிட்டு அகலக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற விழாக்கள் நடைபெறு கின்றன. அந்த வகையிலே, சுதந்திரப் போராட்டக் காலத்தில், அரசியல் விடுதலைக்கு மட்டும் போராடாமல், சமுதாய விடுதலைக்கும் ஒரு போராட்டம் வேண்டும் என்று ஒரு இயக்கம் தமிழகத்திலே உருவாகியது.
அந்த இயக்கத்தினுடைய தனிப் பெரும் தலைவர் தந்தை பெரியார் என்பதிலே யாருக்கும் கருத்து வேறு பாடு இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், அகில இந்திய அளவிலே, விரல்விட்டு எண்ணக் கூடிய சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் அவர்கள் முதலிடம் வகிக்கிறார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. கரும்பு தின்ன கூலி கேட்பார்களா?
அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு, அந்த இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமுதாய விடுதலைக்காகப் போராடிய மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள். அவருடைய 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடு கிறோம்; நீங்களும் வாருங்கள் என்று அழைத்தால், கரும்பு தின்ன கூலியை யாராவது கேட்பார்களா? ஆகவே தான் மகிழ்ச்சியோடு நான் வந்திருக் கிறேன். என்னுடைய இயக்கத் தோழர் கள் வந்திருக்கிறார்கள். குறிப்பாக, அருமை சகோதரர் திரு.திருநாவுக்க ரசர் அவர்களும், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களும் வந்திருக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்று வழக்கமாக ஒரு கோட்டைக் கிழித்து, இந்தக் கோட் டிற்கு ஒருபுறம் இருப்பவர்கள் திரா விடர்கள்; அந்தப் பக்கம் இருப்ப வர்கள் தேசியம் என்று பிளவுபட்டோ அல்லது பிளக்கப்பட்டோ பேசுவ தும், எழுதுவதும் தமிழகத்தில் ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. ஆனால், வரலாறு அப்படி சொல்லவில்லை. வரலாறு என்ன சொல்கிறது? நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி என்று சொல்கிறது. திராவி டத்திற்கும், தேசியத்திற்கும் பகை, போட்டி, பொறாமை என்று எந்த வரலாற்றுக் குறிப்பும் கிடையாது. நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி இருந்தது உண்மைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை. அன்றைய காங்கிரசு கட்சி, அரசியல் விடுதலை முக்கியம் என்று போரா டியது. அன்றைய நீதிக்கட்சி சமுதாயப் புரட்சி முக்கியம் என்று போராடியது.
ஒரு மனிதனைப் பார்த்து, இடது கண் முக்கியமா? வலது கண் முக் கியமா? என்று யாராவது கேட்டால், கேட்பவன்தான் முட்டாள். இன்று அந்தப் போராட்டங்கள் எல்லாம் முற்றுப் பெற்று, ஒரு நிலையை அடைந்து, சுதந்திர நாட்டிலே, ஓரளவு சமுதாயப் புரட்சி ஏற்பட்ட நாட்டிலே வாழ்ந்து கொண்டி ருக்கும் நாம், திரும்பிப் பார்க்கும் பொழுது, அரசியல் விடுதலை முக்கிய மான குறிக்கோளா? சமுதாயப் புரட்சி முக்கியமான குறிக்கோளா? என்று கேள் வியை கேட்பது கிடையாது; அப்படிக் கேட்டால், நாம்தான் முட்டாள். இரண் டும் தேவை; இரண்டும் முக்கியமாகும்.
அந்த வகையில், அந்தக் காலத்திலே வாழ்ந்தவர்கள், அவரவர்களுக்கு எது முக்கியமாகப்பட்டதோ, சிலருக்கு அரசியல் விடுதலை முக்கியம் என்று நினைத்தவர்கள், காங்கிரசு இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டனர்.
சிலர் இல்லை, இல்லை, அரசியல் விடுதலை மட்டும் கிடைத்தால் போதாது. சமுதாயத்திலே ஒரு புரட்சி ஏற்பட வேண்டும்; சமுதாயத்திலே ஒரு மாறுதல் ஏற்படவேண்டும்; சமுதாயத்திலே ஜாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் இருக் கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண் டும்; அதுதான் முக்கியம் என்று போராடி யவர்கள் தங்களை நீதிக்கட்சியிலே இணைத்துக் கொண்டார்கள்.
ஆக, நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி நடந்ததேயொழிய, திராவிட இயக்கத்திற்கும், தேசிய இயக் கத்திற்கும் போட்டி, பொறாமை, பகை என்பது கிடையாது என்பதை நான் வலி யுறுத்திச் சொல்லக் கடமைப்பட் டுள்ளேன்.
இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை!

இன்னும் சொல்லப்போனால், ஒரு முறை தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது சொல்கிறார், அரசியலிலே எங்களைப் பிற்போக் காளர்கள் என்று சிலர் சாடுகிறார்கள்? நாங்கள் எந்த வகையில் பிற்போக் காளர்கள். அரசியல் துறையில் காங்கிரசுக் காரர்கள் ஆங்கிலேயர்கள் அந்நியர்கள்; அவர்கள் இந்நாட்டைவிட்டு விரட்டப் படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதனை வேண்டாம் என்றா சொல்கிறோம்? காங்கிரசு பூரண சுயாட்சி வேண்டும் என்று சொன்னால், நாங்கள் கூடாது; கால் சுயாட்சி, அரை சுயாட்சியா வேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுகாரர்கள் குடிமக்களுக்கு வரி போடக்கூடாது என்றால், நாங்கள் வரி போட்டுத்தான் ஆகவேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக்காரர்கள் மக்கள் எல்லாம் எழுத, படிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், இல்லை, இல்லை அது தப்பு, ஒரு ஜாதியினர் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் படிப்பது குற்றம் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக் காரர்கள் மக்கள் எல்லாம் கோவிலுக்குள் யாதொரு தடையுமின்றி நுழையலாம் என்று சொன்னால், நாங்கள் அதை தவறு என்று சொல்கிறோமா?
காங்கிரசுக்காரர்கள் இந்த நாட்டில் வரி கொடுக்கும் சகல ஜாதி, மத வகுப்பு களுக்கும், நிர்வாகத்திலும், நீதியிலும்,
பதவியிலும் சம உரிமை அளிக்கப்படவேண்டும்; அதற்குள்ள குறைகள் தகர்க்கப்படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதைக் கூடாது என்றா சொல்கிறோம் என்று இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வலியுறுத்தினாரே ஒழிய, இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை.
இன்னும் சொல்லப்போனால், இரண்டு இயக்கங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒற்றுமைதான் பல நேரங்களில், இரண்டு இயக்கங்களையும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு இயக்கங்களையும் நெருங்கி வரச் செய்கிறது. சில நேரங்களில் இரண்டு இரண்டு இயக்கங்களும் நெருங்கி வருகின்றன; சில நேரங்களில் இரண்டு இயக்கங்களும் விலகி நிற்கின்றன. ஆனால், விலகி நிற்கும் நேரத்தில், திராவிடத்திற்கும், தேசியத்திற்கும் பகை என்று யாரும் கருதக்கூடாது என்று நான் மெத்த அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்!
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்பினை எல்லாம் இங்கே எடுத்துரைத்தார்கள். குறிப்பாக, திராவிடர் கழகத் தலைவர் பெரியவர் வீரமணி அவர்களும், அருமைச் சகோதரர் திருநாவுக்கரசு அவர்களும் பல வரலாற்றுக் குறிப்புகளைச் சொன்னார்கள், அருமைத் தம்பி ராஜேந்திரன் அவர்களும், டாக்டர் கனிமொழி அவர்களும் தங்களுடைய நேரடி அனுபவங்களையெல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டார்கள். அவற்றையெல்லாம் இங்கே விரிவாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான கால அவகாசமும் இல்லை. ஆனால், ஒன்றிரண்டு செய்திகளை மட்டும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்.
முதல் செய்தி, அந்தக் காலத்திலேயே, சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தினுடைய தந்தையார் அவர்கள், தன்னுடைய மூன்று மகன்களையும் எப்படி வளர்த்தார்? எப்படி படிக்க வைத்தார்? அதிலிருந்து என்ன படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
மூத்த மகன் பொறியாளர்; பணியாற்றச் சென்றது உத்தரப்பிரதேச மாநிலம்; இரண்டாவது மகன் மருத்துவர்; புகழ் பெற்ற மருத்துவர்; சென்னையில் கண் மருத்துவத்துறையில் மிகவும் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். மூன்றாவது மகன் வழக்கறிஞர்; சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களை அந்தக் காலத்திலேயே இங்கிலாந்திற்கு அனுப்பி, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை.
ஆக, நான் சொல்வது, 20 ஆம் நூற்றாண்டு தொடக்கம்; 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், திருவாரூருக்கும், நீடாமங்கலத்திற்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒருவர், ரயில்வே துறையில் எழுத்தராகப் பணியாற்றியவர்; பிறகு கிராம முன்சீப்பாகப் பணியாற்றியவர். தன்னுடைய மூன்று மகன்களுக்கும் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தி,, அன்று எல்லோராலும் ஏற்றுக்கொள் ளப்பட்ட மூன்று முக்கிய துறைகளில், ஒன்று, மருத்துவத் துறை; இரண்டு, நீதித்துறை; மூன்று பொறியியல் துறை. இம்மூன்று துறைகளிலேயே மூன்று மகன்களையும் புகுத்தி, அதிலே அவர்களை தலைசிறந்த படிப்பாளிகளாக உருவாக்கி, தலை சிறந்த குடிமக்களாக உருவாக்கினார் என்றால், நூறாண்டுகள் கழித்தும், இன்னும் பல சமுதாயங் கள் கல்வியினுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவில்லையே என நான் உண்மையாக வருத்தப்படுகிறேன். கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை. எல்லோருக்கும் அந்தக் உயர்ந்த கல்வி கிடைக்கவேண்டும் என்பதற் காகத்தான், இங்கே தொடர்ந்து வரும் அரசுகள் பல காரியங்களைச் செய்து வருகின்றன.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ கத்திலே கல்வித் துறையிலே பெரிய புரட்சியினை ஏற்படுத்தினார்; மதிய உணவுத் திட்டம் வந்தது; சத்துணவுத் திட்டமாக உருவாகியது; பிறகு கல்விக் கடன் திட்டம் என்று ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி, இன்று 50 ஆயிரம் கோடி ரூபாய் நாடு முழுவதும் கல்விக் கடனாகப் பெறப்பட்டிருக் கிறது. கல்வியை சட்ட உரிமையாக்கி இருக்கிறோம்; எந்தக் குழந்தையும் பள்ளிக்குப் போகாமல் இருக்கக்கூடாது என்று பல வகையிலே நம்முடைய அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றன.
ஆனால், இன்னும் சில சமுதாயத்தினர் கல்வியினு டைய முக்கியத்துவத்தை உணராமல் இருக்கிறார் களே என்பதற்காக நான் கவலைப்படுகிறேன், வருந்துகிறேன்; கல்வி முக்கியம் என்பதை சர்.ஏ.டி .பன்னீர்செல்வம் அவர்களுடைய தந்தையார் உருவாக்கிய அந்தப் பரம்பரையில் இருந்து நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி  வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?
இரண்டாவது செய்தி, கல்வி முக்கியம் என்றால், அந்தக் கல்வியினுடைய உண்மையான பயன் கிடைக்கவேண்டும் என்றால், எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். பள்ளிக் கூடங்களிலே, கல்லூரிகளிலே, குறிப்பாக, மருத்துவக் கல்லூரியிலே, பொறியியல் கல்லூரி யிலே, உயர் பட்டப் படிப்பு நிறுவனங்களிலே, இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி அந்த வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?
ஒருபுறத்தில், நம்முடைய பிள்ளைகளை 10 ஆவது படிக்க வைத்து, 12 ஆம் வகுப்புவரை படிக்க வைக்கிறோம். கல்லூரி படிப்பையும் முடிக்கிறார்கள். ஆனால், உயர் படிப்புகளில், இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையில், இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்பவர்கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் சிலர் இருக்கிறார்கள். நான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்கிறேன். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்பவர்கள், எல்லா வகையான வித்தைகளையும் கையாள்கிறார்கள். அய்யா வீரமணி அவர்கள் சொன்னார்கள், சில வங்கிகளில் நம்முடைய பிள்ளைகளுக்கு கல்விக் கடன் வழங்குவதில்லை என்று சொன்னார்கள். நான் அதற்காக வருத்தமடைகிறேன். அது ஒரு வித்தை; ஒரு லட்சத்திற்கும் மேல் வங்கிக் கிளைகள் உள்ளன; ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒரு அதிகாரி இருக்கிறார். நான் ஒரு லட்சம் அதிகாரிகளையும் கட்டி வைக்க முடியாது. ஆனால், ஒரு வங்கிக் கிளையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி, கல்விக் கடன் கொடுப்பதில், உயர்ந்த ஜாதி, பிற்படுத் தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று பேதம் பார்த்து, கல்விக் கடன் தந்தால், உயர்ந்த ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கிறது; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கவில்லை என்றால், இது நம்முடைய இட ஒதுக்கீடு கொள்கையை முறியடிப்பதற்கான ஒரு வித்தை; அதிலே ஒரு வித்தைதான் நீதிமன்றத்தை அணுகுவது.
ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து...
நாம் சட்டங்களை வடிக்கிறோம்; விதிகளைப் போடுகிறோம்; திடீரென்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து, நம்முடைய சட்டத்தை, நம்முடைய விதியை முனை மழுங்கச் செய்கிறது. அகில இந்திய மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) என்று மிகப்பெரிய உயர்கல்வி மருத்துவ நிறுவனம் ஒன்று டில்லியில் இருக்கிறது. அதில் தொடர்ந்து ஒரு வழக்கு; ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷா லிட்டி; அதாவது, எம்.பி.பி.எஸ்.,சை, எம்.டி.,யைத் தாண்டி ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷாலிட்டி. அதிலே இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்பது வழக்கு. இது ஒன்றும் புதிய வழக்கு அல்ல; ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குதான். அந்த வழக்கில்திடீரென்று ஒரு தீர்ப்பு வெளிவருகிறது.
ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி
அந்தத் தீர்ப்பு என்ன சொல்கிறது. ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி, அதாவது எம்.பி.பி.எஸ்., அதிலே அல்ல; அதைத் தாண்டி எம்.டி.,  அதிலே அல்ல; அதனையும் தாண்டி ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆகிய துறைகளில், சாதாரணமாக இட ஒதுக்கீடு கூடாது என்று அந்தத் தீர்ப்பு சொல்கிறது. அந்தத் தீர்ப்பு சரியா? இல்லையா? என்பதை நாம் விவாதிக்கலாம்.
அந்தத் தீர்ப்பை சொன்னார்களே, அதோடு நிறுத்திக் கொள்ளலாம் அல்லவா! கேட்கப்பட்ட கேள்வி, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷா லிட்டியில் இட ஒதுக்கீடு செல்லுமா? செல்லாதா? இதற்கு ஆம் என்றும் பதில் சொல்லலாம்; இல்லை என்றும் பதில் சொல்லாம்.
மூன்று நீதிபதிகளிலே, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டிலே இட ஒதுக்கீடு கூடாது என்று சொன்னார்கள்; அந்தத் தீர்ப்பு அதோடு நின்றுவிடவில்லை.
தீர்ப்பினுடைய கடைசி இரண்டு பத்திகளில், இந்த வழக்கு, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பொறுத்த வழக்கு, இதில் நாங்கள் முன்னுதாரணத்தை வைத்து, முக்கோலை தீர்ப்பு சொல்லியிருக்கிறோம். ஆனால், பொறியியல் துறை, மருத்துவத் துறை இன்னும் பல துறைகளில் இட ஒதுக்கீட்டின் காரணமாக, தரம் குறைந்துவிடுகிறது என்று நாங்கள் கவலைப்பட்டு, இந்தத் தரக்குறைவை நிறுத்துவதற்காக அரசு வழிவகைகளைக் கண்டு, அதற்கான காரியங்களைச் செய்யவேண்டும் என்று கூறுகிறோம் என்று, தேவையில்லாமல், இரண்டு பத்திகளில் சொல்லியுள்ளார்கள். அதன் காரணமாக, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டது.
நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்;  கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்;
அதனை அந்நீதிபதிகள் எழுதவேண்டிய அவசியமும் கிடையாது; அந்தக் கேள்வி எழவும் இல்லை; அப்படி எழுந்தால், அதற்கு ஏற்கெனவே 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து விட்டது. அந்த 9 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பின்படி, எல்லாக் கல்லூரிகளிலும், அரசு நடத்தக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும், அரசு நிதியுதவி பெறக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. திடீரென்று இரண்டு பத்திகள், ஒரு 150 வார்த்தைகளை வைத்து, நாட்டிலே 10, 15 ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த ஒரு முன்னேற்றத் தினை, தடை போட்டு நிறுத்திவிடலாம் அல்லது முனை மழுங்கச் செய்துவிடலாம் என்று ஒரு தீர்ப்பு வந்தால், சிலருக்குக் கோபம் வருகிறது; சிலருக்கு வருத்தம் ஏற்படுகிறது. நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்; ஆகவே கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்; ஆகவே வருத்தம்தான்பட முடியும்.
அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.
ஆகவே, இதற்கு ஒரு வழிவகை காணவேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய அரசு தெளிவான முடிவை எடுத்திருக்கிறது. மீண்டும் நீதிமன்றத்தினை அணுகி, நீங்கள், உங்கள் தீர்ப்பின் பிற்பகுதியில் கூறியுள்ளவை தேவையற்ற வார்த்தைகள்; அந்த வார்த்தைகளை, அந்தத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும். அந்தத் தீர்ப்பு, எந்தக் கேள்வி எழுப்பப் பட்டதோ, அந்தக் கேள்விக்கு மட்டும்தான் நீங்கள் தீர்ப்பு அளிக்கவேண்டுமே தவிர, எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்பால், தேவையில்லாத ஒரு பொருளை எடுத்துக்கொண்டு, தேவையில்லாத ஒரு கருத்துக்களைச் சொல்லி, அரசின் நடவடிக்கை களை நீங்கள் தடை செய்தது தவறு; எனவே, அந்தப் பாராக்களை நீக்கவேண்டும் என்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவினை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய தீர்ப்பினை மறு ஆய்வு செய்து, நாம் விரும்பும் தீர்ப்பு வந்தால் நல்லது; வரவில்லை என்றால், அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.
முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார்
அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தினைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள்; முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார். அந்த முதல் திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்று, சட்ட வல்லுநர்களைக் கலந்து, அதனை வடித்து, டில்லிக்கு எடுத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராசர். அந்த முதல் திருத்தத்தினை ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் திருத்தத்தினை முன்மொழிந்து, அரசியல் சாசனத்தை முதன் முதலாகத் திருத்தியவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு.
தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமரா சரும், பண்டிதர் ஜவகர்லால் நேரும், 1951 ஆம் ஆண்டு, சண்பகம் துரைராஜன் என்ற பெண் தொடர்ந்த வழக்கில் தரப்பட்ட தீர்ப்பினை முறியடிப்பதற்காகக் கொண்டு வந்த திருத்தத் தைப்போல, இப்போது, ஏறத்தாழ 62 ஆண்டு களுக்குப் பிறகு, இன்னொரு திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்றால், பரமபத விளையாட்டா நாம் விளையாடிக் கொண்டிருக் கிறோம்? 62 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் சாசனத்தைத் திருத்தி, இந்த திசையில்தான் அது பயணப்படவேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திலே இருக்கிறது; அதுபோல, சமுதாய ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது நம்முடைய நாட்டிற்குத் தேவை என்று, 1951 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. மீண்டும் மீண்டும் அதேபோன்ற திருத்தங்கள்; மீண்டும் மீண்டும் அதையொட்டியே திருத்தங் களைச் செய்யவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள் ளதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், நம்முடைய அரசு தெளிவாக இருக்கிறது. உச்சநீதிமன்றத் தினுடைய அண்மைக்கால தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்படாவிட்டால், கண்டிப்பாக அரசியல் சாசனம் திருத்தப்படும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம்; திருத்தவேண்டும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை இங்கே நான் சொல்லக்கடமைப்பட்டு இருக்கிறேன்.
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப்பற்றி விரிவாகச் சொல் வதற்கு இங்கே வாய்ப்பில்லை. ஆனால், அவர்கள் எங்களுக்கு நிறைய செய்திகளைத் தந்திருக் கிறார்கள்; அவற்றை எல்லாம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துப் பெரும் பயன் அடைந்தேன் என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்; அவர் மறையும்பொழுது அவருக்கு வயது 52. அவர் இங்கிலாந்திற்கு புதிய பொறுப்பினை ஏற்பதற்காக செல்லும்பொழுது, விமான விபத்தில் அவர் மரணமடைந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய தலையங்கம் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் இங்கிலாந்திற்குப் புறப்படுவதற்கு முன்னால், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தலையங்கம் எழுதினார், அதிலே, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய பெருமைகளையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, நமது சர்.செல்வம் அவர்கள், பொறுப்புள்ள பதவிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்; பொறுப்புள்ள நிர்வாகம் அவருக்குப் புதிதா?
எனக்கு வாதாடத் தான் தெரியுமே தவிர, எனக்கு நாடாளத் தெரியாது என்று கூறவேண்டிய நிலையில் உள்ளவர் அல்லர் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இறுதியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்கிறார்கள், பொறுப்பும், புகழும் பொருந்திய பதவி அவருக்கு வழங்கப்பட்டு, அவர் இங்கிலாந்து சீமை சென்று, இந்திய அரசின் ஆலோசகராக வீற்றிருக்கப்போவதைக் கேட்டு, நாம் மிகமிக மகிழ்ந்தோம். சர்.பன்னீர்செல்வம், தமிழர்களின் செல்வம்; அவருக்குக் கிடைத்துள்ள பதவி தமிழருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி; அவருடைய உயர்வு தமிழர் உயர்வு; அவர் மகிழ்வு தமிழர் மகிழ்வு; எனவே, அவரை வாழ்த்துகிறோம் எனில், தமிழ்நாட்டாரை வாழ்த்துகிறோம் என்று பொருள் என்று முடிக்கிறார். பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும்  நன்றி
அந்த வகையிலே, தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர்; சமுதாய இயக்கத்தினுடைய தலைமகன்களில் ஒருவர்; சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர்; தன்னுடைய வாழ்நாளில் சமுகப் புரட்சிக்காக, அனைத்து சமுதாயமும் நீதி பெறவேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர்; கடுமையான உழைப்பாளியாக இருந்து, அந்த இயக்கத்தை வளர்த்தவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நான் என்னுடைய மரியாதையை செலுத்தி, அவருடைய உருவச் சிலையை திறந்து வைக்கக்கூடிய பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றி சொல்லி, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய புகழ் வாழ்க; புகழ் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க என்று சொல்லி விடை பெற்றுக்கொள்கிறேன்.
வணக்கம்.
- இவ்வாறு மத்திய அமைச்சர் ப.சிதம்பம் அவர்கள் உரையாற்றினார்.
19-08-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 1

Wednesday, March 2, 2011

கறுப்புச் சட்டை

20.9.1945 அன்று திரா விடர் கழக 17 ஆவது மாநில மாநாடு திருச்சிராப்பள்ளியில் தந்தை பெரியார் தலைமை யில் கூடியது. அம்மாநாட்டில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வரலாற்று ரீதியான மிக முக்கிய முடிவு - இயக்கத் தோழர்கள் கறுப்புச் சட்டை அணிவது பற்றியதாகும்.

இயக்கத் தொண்டர் களாயிருப்போர் இயக்கக் காரியங்களைக் கவனிக்கும் போதும், கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும், கூடுமானவரையில் முழு நேரமும் கறுஞ்சட்டை அணிந்திருக்கலாம். கழக உறுப்பினர்கள் அனைவருமே சமயம் வாய்க்கும்போதெல் லாம் கறுஞ்சட்டை அணிதல் அவசியமாகும் என்று அறி வித்தார் தந்தை பெரியார்.

கறுப்புச் சட்டைப்படை அமைக்கப்படுவதற்கான தற்காலிகப் பொறுப்பாளர் களாக ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்தப் படையைப் பற்றி குடிஅரசு (17.11.1945) தலை யங்கம் இவ்வாறு கூறுகிறது:
கறுப்புச் சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக் கொண்டு யாருக் காவது தொல்லை கொடுக் கவோ அல்லது நாசவேலை செய்து நம் மக்களையே பலி கொடுக்கவோ, நம் பொரு ளையே பாழாக்கிக் கொள் ளவோ அல்ல என்பதைத் தெளி வாக வலியுறுத்திக் கூறு வோம். மற்றபடி அடிப்படை எதற்காக என்றால், இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்க மும், துக்கமும் அடைந்திருக் கிறார்கள் என்பதைக் காட் டவும், அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக் கிறார்கள் என்பதைக் காட்ட வும், அதற்கான முயற்சி களைச் செய்ய தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்ப தைக் காட்டவுமே ஏற்படுத் தப்பட்டிருப்பதாகும் என்று குடிஅரசு தலையங்கம் பேசு கிறது.

இப்படி ஒரு படை அமைக்கப்பட்டது என்ற வுடன், ஆரியர்களின் வட்டா ரத்தில் கிலி பிடித்துவிட்டது. அதனுடைய தீய விளைவு தான் - மதுரையில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் நடைபெற்ற கறுப்புச் சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் - வைத்திய நாதய்யர் என்ற பார்ப்பனரின் தூண்டுதலால் காலிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகும்.
20 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்கள் அணிவகுத்து ஊர்வலத்தில் சென்ற அந்த மிடுக்கான அணிவகுப்பு, ஆரிய ஆதிக் கக் கோட்டையை நொறுங் கச் செய்யக் கூடிய ஒரு படையை ராமசாமி நாயக்கர் உண்டாக்கி விட்டார் - அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று திட்டமிட்டு அந்தக் கேவலத்தை அரங்கேற்றினர்.

அரசையும் கவனிக்கச் செய்தது. அதன் விளைவு தான் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கறுஞ் சட்டைப் படையைத் தடை செய்யப்படுவதாக உத்தர விட்டார்.

அந்த நாள்தான் இந்த மார்ச் 2 (1948). கிரிமினல் சட்டத் திருத்தத்தின் 16 ஆவது பிரிவின்கீழ் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒரு சட்டத்தினால் இந் தப் படையை அழித்துவிட முடிந்திருக்கிறதா? இன் றைக்கு லட்சோப லட்ச கறுஞ் சட்டைத் தொண்டர்கள் நாட்டில் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறார்களே!

இந்த மார்ச் 2 - நம்மை எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டும் - பெரியார் பிஞ்சு களுக்குக்கூட கறுப்புடை தைத்துக் கொடுக்கவேண் டும். வீடெல்லாம் கழகக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும்.
வாழ்க பெரியார்! - மயிலாடன்

http://viduthalai.in/new/e-paper/4531.html

Monday, October 18, 2010

இந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்திருக்கிறது? தந்தை பெரியார்

உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில் குறிப்பாக எல்லா சமுகத்தைவிட மதசம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆட்சி செய்யும் நாடுகளும் கூட அரசுரிமையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்பவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்துவரும் இக்காலத்தில், இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
நிற்க. பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதரபாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது, இருப்பது மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும் - இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும்.
மூன்றாவது, பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத்தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமுகத்தை பெரும்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட்டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம்பந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.

வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கியருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பாவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ, ஒரு சமுகத்தையோ அடியோடு கொன்று, ஒரு தேசத்தார் வாழத்துணியும் படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமுக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவுகளாகவும், ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும்.

கிறிஸ்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரிகளாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.

அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மதவிஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறிஸ்தவர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாதவர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச் சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.

இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச்சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமுகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம் முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்றார்கள்.

உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக, அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக்கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை, உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள்.

அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில், அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களைபோல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையில் மகமதியர்களையும்- மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக, நடைஉடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுப்பட்டுக் கிடந்தாலும், இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீர அரசர்களான அமீருக்கும் பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.

மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேச குடிஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங்களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின் பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால், புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலியுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள்.

இந்தியாவில் உள்ள மகமதிய சமுகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும், மற்றொரு புறம் தங்கள் சமுக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும், அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால், கூடுமானவரை அந்த சமுக நன்மை சம்பந்தமான கவலையும், ஒற்றுமையுமேயாகும். ஆனால், இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமுக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால், இதிலுள்ள மதப்பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும், ஜாதிப்பிரிவுகளும், அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும், அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும்.

இந்த உள்பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால், மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன: முதலாவது, இந்துக்களுடைய மதக்கொள்கைகளின் படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால், ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்கூடாது.

மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100-க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ, நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.

படிப்பு, மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரியான நிர்ப்பந்தம் இருப்பதோடு மாத்திர மல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதிகளாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல், காணமுடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவைகளையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீரவேண்டும் என்றும், அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.

ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குத் தக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத் தக்கதாக பதினாயிரக்கணக்கான கடவுள்களை சிருஷ்டித்து, ஆயிரக் கணக்கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத்தாருக்கு வேண்டியவைகளை யெல்லாம் அவசியமாக்கி, அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப் பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமான தென்றும், நாஸ்திகமென்றும் அப்படிப்பட்ட நாஸ்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.

இது மாத்திரமல்லாமல், யாராவது துணிந்து இக்கட்டுப்பாட்டையும், கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ்டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றையதினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும், அவைகளைக் கொண்ட புஸ்தகங்களே மத ஆதாரங்களாகவும், அவைகளை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.

உதாரணமாக, இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடை, உடை, ஆச்சாரம், போக போக்கியம் முதலியவைகளில் பழைய கொள்கைகளையும், பழைய அனுபவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்திக் கொடுத்து, அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும், ஆணவமும், இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.

உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள் பெரியோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும், ஒழிக்க வேண்டும் என்றும், அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.

உதாரணமாக, சமீபத்தில் பல இடங்களில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானித்திருப்பதும் போதுமான உதாரணமாகும்.

எனவே, இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும், இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனியம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?

எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும் என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.

எனவே, இந்தியாவில் பார்ப்பனியமற்ற மதமே இல்லை என்றும், இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும், சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லாது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாததென்றே சொல்லுவோம்.

- குடிஅரசு துணைத் தலையங்கம் - 14.4.1929
http://viduthalai.periyar.org.in/20101017/news05.html

Thursday, October 14, 2010

மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது-தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்தநாள்-உலகெங்கும் வெகு சிறப்பாக, எழுச்சியூட்டும் வகையில் நடைபெற்றுள்ளது

தந்தை பெரியார் அவர்களின் இந்த 132ஆம் ஆண்டு பிறந்தநாள்-உலகெங்கும் வெகு சிறப்பாக, எழுச்சியூட்டும் வகையில் நடைபெற்றுள்ளது. அமெ ரிக்கத் தலைநகரமான வாசிங்டனில் கருத்தூட்டத் துடன் கொண்டாடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களும் பங்கேற்று தந்தை பெரியார் அவர்களின் தேவையை நுணுகி உணர்ந்து கொண் டாடியுள்ளனர்.

வட இந்தியாவில் சமூக நீதித்தந்தையான பெரியாரின் பிறந்தநாள் விழா ஆழமான கண் ணோட்டத்தோடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உணர்ச்சிப் பெருக்கோடு மாணவர்கள் அய்யா விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

சட்டத்துக்கு விரோதமாக-எல்லா நடைமுறை களையும் குப்புறத் தள்ளி, இடஒதுக்கீட்டை தூக்கி எறிந்து பார்ப்பன மனுதர்மக் கூடாரமாக பல்கலைக் கழகத்தை மாற்றியுள்ள சூழலில், தந்தை பெரியார் விழா கொண்டாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதி மன்றம் வரை சென்று போராடி, ஓரளவுக்கு உரிமையைப் பெற்றுள்ளனர் மாணவர்கள் என்பது மகிழத்தக்க தாகும்.

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் வேரூன்றினால்தான், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு என்பதை உணர்ந்து, அப்பல்கலைக் கழக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த விழாவை எடுத்துள்ளனர் என்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

சரியான திசையில் தந்தை பெரியார் சிந்தனைகளை கையில் எடுத்துக்கொண்டு பயணிக்கத் தொடங்கியுள் ளனர் என்பது ஆதிக்கவாதிகளின் அடிவயிற்றினைக் கலக்க ஆரம்பித்துவிட்டது. டில்லி தலைநகரில் உருவான இந்தப் புயல் நாட்டின் நாலாத்திசைகளிலும் சுழன்றடிக்கும் என்பதில் அய்யமில்லை.

காசி பல்கலைக் கழக மாணவர்களும் பெரியார் விழாவைக் கொண்டாடியுள்ளனர். சிறுவயதில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரியாமல் (துறவு பூண்டு) பெரியார் வடநாடு சென்றதில் காசி குறிப் பிடத்தக்கதாகும். அங்கு பார்ப்பனர்களின் ஆதிக்க நிலையையும், சாமியார்களின் தானடித்த மூப்பையும், ஆபாசத்தையும், மதத்தின் பெயரால் அங்கு நடைபெறும் அருவருப்புத் தன்மைகளையும் நேரில் காணும் வாய்ப்பு தந்தைபெரியாருக்குக் கிட்டியது.

அந்தக் காசி பல்கலைக் கழக மாணவர்கள்தாம்-இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட உயர்ஜாதியினரான சம்பூர்ணானந்த் சிலை- தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாபு ஜெகஜீவன் ராம் திறந்ததால் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி,கங்கை நீரால் சிலையைக் கழுவினார்கள்.

அத்தகைய காசி பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து தந்தை பெரியார் விழாவினைக் கொண் டாடினர் என்பது எத்தகைய திருப்பம்!

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப.வீரபாண்டியன் அவர்கள் கடந்த வாரம் காசி சென்றபோது அங்குள்ள ஒரு அமைப்பினரைச் சந்திக்க சென்ற நிலையில், அவர்கள் அடையாள அட்டையில் தந்தைபெரியார் படம் இருந்ததைக் கண்டு மெய்சிலிர்த்ததாகக் கூறினார். (பெரியார் திடல் நிகழ்ச்சி ஒன்றில்- 12.10.2010)

பிகார் மாநிலம் பாட்னாவில் செப்.17இல் பெரியார் பிறந்தநாள் பல்துறைப் பெருமக்கள் பங்கேற்க கருத் தாழத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது. மருத்துவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் பங்கு கொண்டு பெரியாரியலை விரிவாகப் பேசியிருக்கின்றனர்.

திரிவேணி சங்கத்தின் சார்பில் இந்தப்பெரியார் விழா கொண்டாடப்பட்டுள்ளது. 1933ஆம் ஆண்டி லேயே உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பு இந்தத்திரிவேணி, சங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1958). ஆம்! அந்தப் புரட்சிக் கவிஞனின் தொலைநோக்குப் பார்வையில் வெளிவந்த வெளிச்சம்-வெண்தாடி வேந்தருக்கு 2010இல் எடுக்கப்படும் விழாவின் மூலம் மேலும் ஒளி பெறுகிறது.

பெரியாரை உலகமயமாக்குவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர். அதன் முக்கிய கட்டம் இப்பொழுது! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

தந்தை பெரியார்-உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர், சிறுபான்மை யினருக்கான மாநாட்டில் பங்கு

தமது 90 ஆம் வயதில் தந்தை பெரியார் அவர்கள் சென்னையிலிருந்து வேன் மூலமாக உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர், சிறுபான்மை யினருக்கான மாநாட்டில் பங்கு ஏற்கப் புறப்பட்டார்கள் (7.10.1968). அன்னை மணி யம்மையார், ஆசிரியர் கி. வீரமணி, திருமதி ரெங் கம்மாள் சிதம்பரம் (ஆசிரி யரின் மாமியார்), உதவியா ளர் தி. மகாலிங்கன் ஆகி யோர் இந்தச் சுற்றுப்பயணத் தில் கலந்துகொண்டனர். அக்டோபர் 12, 13 (1968) இரு நாள்களிலும் தந்தை பெரியார் மாநாட்டில் பங்கு கொண்டார்கள்.

மாநாட்டிற்குத் தந்தை பெரியார் சென்றபோது, மிகப்பிரம்மாண்டமான வர வேற்பு கொடுக்கப்பட்டது.

பெரியார் ராமசாமி ஜிந்தாபாத்!

நாய்க்கர் சாஹேப் ஜிந் தாபாத்! என்று முழக்கமிட்டு வரவேற்றனர்.

மாநாட்டு வரவேற்புக் குழுச் செயலாளர் வழக்கறி ஞர் ஜனாப் ஆசாத் ஹுசேன் மலர்மாலை அணிவித்து தந்தை பெரியாரை வரவேற் றார்.

உ.பி. மாநிலத்திலிருந்து 30 மாவட்டங்களின் 350 பிரதிநிதிகளும், ஆயிரக் கணக்கான பொதுமக்களும் கூடியிருந்தனர். மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவ ராக முகம்மது மஸ்தான் சாருல்லா இருந்தார். புத்த பிக்கு சியாம் சுந்தர் வந்தி ருந்தார்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து தந்தை பெரியார் உரையாற்றினார். தந்தை பெரியார் அவர்களின் தமிழ் உரையை ஆசிரியர் கி. வீர மணி அவர்கள் ஆங்கிலத் தில் மொழி பெயர்க்க, மற் றொருவர் அதனை இந்தியில் மொழி பெயர்த்தார்.

அந்த மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாகும். எனது லட்சியமெல்லாம் எந்தக் காரியம் செய்தாவது நமது சமுதாயத்தின் இழிவு நீக்கப்படவேண்டும் என்பது தான். அது ஜப்பானால் முடி யுமா? ஜெர்மனால் முடியுமா? ரஷ்யாவினால் முடியுமா? பாகிஸ்தானால் முடியுமா? என்பதுபற்றி இன்றைய நிலை யில் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவை யில்லை. யாரால் முடியுமோ அவர்களை அழைத்து நம் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து அதில் இழிவற்ற குடிமகனாக இருக்கலாம் என்பதே என் கருத்து.

நான் சொல்வது அபா யகரமாக இருந்தாலும்கூட, சமுதாய இழிவோடு இருப் பதைவிட, அது ஒழிய போராட்டத்திற்கு ஆளாகி, இறந்து போவதே நல்லது என்று கருதுகின்றேன். மான முள்ள வாழ்வே மனிதனுக்கு அழகு என்று குறிப்பிட்டார்.

அதற்கு முன்பும்கூட 1944 இலும், அதன்பின் 1959 இலும் ஒருமுறை உ.பி.,க்குச் சென்ற துண்டு, கான்பூர் மாநாட்டில் பேசி யுள்ளார் தந்தை பெரியார். (29, 30, 31.12.1944) அப்பொழுது அண்ணா அவர் கள் அய்யாவின் செயலாள ராகச் சென்றுள்ளார். அதன் பின் 1959 இல் ஒருமுறை லக்னோ போன்ற இடங் களுக்குச் சென்றிருக்கிறார். லக்னோ பல்கலைக் கழகத்தில் பேசி யுள்ளார்.

குடியரசுக் கட்சியின் தொண்டர்கள் கான்பூரில் உருவிய வாளுடன் தந்தை பெரியாருக்கு வரவேற்பு கொடுத்தனர். அங்கேயே தங்கி பார்ப்பன ஆதிக்கத்தி லிருந்து தங்களைக் காப் பாற்றுமாறு தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக் கொண்டனர்.

எவ்வளவு மகத்தான, புரட்சிகரமான அத்தியாயங் கள் தந்தை பெரியார் வாழ்விலே!

- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101013/news04.html

Sunday, October 10, 2010

நவராத்திரியின் வரலாறு அறிவுக்கு பொருந்துமா ? - தந்தை பெரியார்

நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்கால மும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராய ணம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக் களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.



நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாச மிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடைய வர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண் டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங் களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப் பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்ப தால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென் றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசையன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங் களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கை களுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வதுபோல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப் பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத் தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம்மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷாசூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண் டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற் சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத் திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படு கிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன்மொழி யான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படு கின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக் கின்றது என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்று தான் கேட்கிறோம்!

மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக் களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர் களுக்குச் சூட்சமமாகவும் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப்பி லடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேக மாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடு வதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண் ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்ச மெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர்ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்த புரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத் திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதி யும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டி ருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.

கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாய வாதங்களை யும் கூட்டி ஆலோசியுங்கள். சரஸ்வதியைக் கொலு விருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ் வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானிய மல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும். ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா? என்று நாங்கள் சொல்லி விட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ் திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு!

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசை யில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற் றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த கோடி கள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனு மான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோ மாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயி ருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங் களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபி ஷேகமும், பூசையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக் களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களை யெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்க ளென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?

ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங் களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்த விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலை யில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலு வால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந் தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

Sunday, October 3, 2010

கேரள சீர்திருத்த மகாநாடு தந்தை பெரியார்-குடிஅரசு கட்டுரை

சகோதரிகளே! சகோதரர்களே!!
இன்று இங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தையும், வாலிபர்களுடைய உற்சாகத்தையும் பார்க்க எனக்கு அளவிலா மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் உங்கள் பாஷையாகிய மலையாளத்தில் பேச எனக்குத் தெரியாம லிருப்பதற்கு வருந்துகின்றேன். எனினும் ஏதோ எனக்குத் தெரிந்த சாதாரண தமிழ் பாஷையில் என்னுடைய அபிப்பிராயத்தை வெளியிடுகிறேன். ஒருவாறாக உங்களுக்கு அது புரியக் கூடும் என்று கருதுகின்றேன்.
சகோதரர்களே! மகாநாட்டைத் திறந்து வைத்த பொழுது நமது நண்பர் திருவாளர் ராமவர்மா தம்பான் அவர்கள் செய்த பிரசங்கத்தில் அநேக விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவைகள் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று கருதி இருந்தவைகளுக்கும் மேலாகவே சொல்லப்பட்டிருப்பவைகளாகும். ஆகையால் இப்போது நானும் அதைத்தான் திருப்பிச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றேன்.
இன்று இங்கு கூடிய இந்த மகாநாட்டிற்குக் கேரள சீர்திருத்தச் சங்க மகாநாடு என்று பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் திருவாளர் தம்பான் அவர்கள் சொன்னபடிக்கு நமது லட்சியத்தின்படி பார்ப்போமானால் சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய காரியம் ஒன்றுமே இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. ஒரு பெரிய தலைகீழான புரட்சியேதான் நாம் செய்ய வேண்டிய வர்களாய் இருக்கின்றோம்.
ஆதலால் இச்சங்க மகாநாட்டில் இந்நாட்டுக்கு ஏதாவது பயன் ஏற்பட வேண்டுமானால் இதைக் கேரள புரட்சிச் சங்க மகாநாடு என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் நமது முன்னேற்றத்திற்கும் மனிதத் தன்மைக்கும் இயற்கைக்கும் விரோதமாய் இருக்கும் மதம், ஜாதி முதலிய காரியங்களில் சீர்திருத்தம் செய்யத்தக்க பாகமோ, மீத்துவைத்துக் கொள்ளத்தக்க பாகமோ ஒரு சிறிதுமே கிடையாது. ஆதலால் தான் அவை களை அடியோடு அழிக்க வேண்டியவர்களாய் இருக் கின்றோம்.
அதோடு இல்லாமல் அவை களுக்கு அதிகமாக ஆதரவளித்து வரும்படியான கடவுள் உணர்ச்சியென் பதையும் நாம் அழித்துத் தொலைக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஆகவே இந்த நாட்டு மக்களால் மாத்திரமல்லாமல் பொதுவாக உலக மக்களாலேயே மிக்க பிரதானமாய்க் கருதப்படும்படியானவைகளான மேற்கண்ட ஜாதி மதம், கடவுள் உணர்ச்சி ஆகியவைகளையெல்லாம் அடியோடு அழிப்பது என்பதை யாரும் சீர்திருத்த வேலை என்று சொல்ல முடியாது.
தைரியமாய்ச் சொல்வதானால் நாம் அவற்றை ஓர் அழிவு வேலை என்பதாகவே கருதி நம்மையும் அழிவு வேலைக்காரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும். ஆகையால் தான் நமது சுயமரியாதை இயக்கம் இதையே தனக்குத் தலையான கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. இந்தக் காரியங்களைச் செய்யப் பயந்தவர்களால் உண்மையான ஒரு முற்போக்குக் காரியமும் செய்து விட முடியாது.
இந்த நாட்டில் சீர்திருத்த வேலைகள் வெகுகாலமாக செய்யப்பட்டு வந்திருக்கின்றன. செய்தவர்களையெல்லாம் சாதாரண மனிதர்களாய் கூடக் கருதாமல் பெரிய தெய்வத் தன்மை பொருந்தினவர்களாகவும், விசேச அவதார புருஷர்களாகவும் மகாத்மாக்களாகவும் கூடக் கருதப்பட்டு வந்திருக்கின்றனர். ஆனால் அவர்களால் ஆன வேலை என்னவென்று பார்ப்போமானால் குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த பலன் போலதான் ஏற்பட்டு வந்திருக்கின்றனவே அல்லாமல் வேறில்லை.
இப்படி இருந்தும் இனியும் அதே துறையில் அநேகர் பாடுபடு கின்றார்கள் என்றாலும், அவர்களாலும் இன்று பலனுள்ள ஒரு காரியமும் நடத்த முடியவில்லை. நடைபெறுமென்ற நம்பிக்கையுமில்லை. காரணம் என்னவென்றால், அவர்கள் மக்களுக்கு எந்தெந்த பலன் ஏற்படவேண்டும் என்கிறார் களோ அந்தந்தப் பலன்களுக்கு எதிராயிருக்கும் அஸ்தி வாரமான தடைகளை நீக்கும் விஷயத்தில் அவர்கள் சிறிதும் சம்மதிப்பதில்லை. அதன் கிட்டப் போவதற்கே பயப்படு கின்றார்கள். மற்றும் பலர் அவைகளைக் காப்பாற்றிக் கொண்டே சீர்திருத்தம் அடைய வேண்டும் என்கின் றார்கள்.
ஆதலால்தான் அப்படிப்பட்டவர்களால் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கானலை அதாவது காட்டை விவசாயம் செய்யும்படியான வயல்களாக ஆக்க வேண்டுமானால் முதலில் அதிலுள்ள புதர்களையும் முட்களையும், செடி, கொடிகளையும் பிடுங்கி நெருப்பிட்டுக் கொளுத்தி ஆகவேண்டும். பிறகு மேடுகளை வெட்டி பள்ளத்தில் போட்டு நிரவவேண்டும், கல்லுகளையும், பாறைகளையும் உடைத்து வெளியாக்க வேண்டும். இந்தக் காரியங்களெல்லாம் செய்த பிறகே அந்த பூமி எந்த விதமான வெள்ளாமை செய்யப் பயன்படும் என்று கருதி அதற்கேற்ற எருக்களிட்டு, பயிர்களைச் செய்து பயன்பெற வேண்டும்.
அப்படிக்கில்லாமல் உள்ள நிலையிலேயே பயிர் செய்வதானது மனிதனது முயற்சியும், ஆற்றலும் விதைப் பண்டமும் வீணாய் போவதுடன் பயனற்ற கொடியும் செடியும் மேலும் வளர்ந்து துஷ்ட மிருகங்களும், விஷ ஜந்துக்களும் தாராளமாய்க் குடியிருக்கத்தகுந்த புதர்களாகத்தான் ஏற்பட்டு விடும். ஆகையால் நாம் இப்போது புதர் களிலுள்ள கொடி, செடி, முள், புல், பூண்டு ஆகியவை களை அழித்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் வேலை யில் இருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
இந்த வேலை செய்யும் முன் பயிர்செய்யும் வேலையில் நாம் ஒரு காலமும் புகக்கூடாது. மேடு பள்ளங்களைச் சமனாக்காமல் அதில் தண்ணீர் பாய்ச்சும் வேலையை நாம் தொடங்க மாட்டோம். ஏனெனில் நாம் பாய்ச்சும் தண்ணீரெல்லாம் ஏற்கனவே தண்ணீர் நிறைந்திருக்கும் பள்ளத்திற்கே போய்ச் சேர்ந்து விடும். மேட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் அங்கு கொஞ்சம் கூடத் தங்காது.
ஆகவே, தைரியமான அழிவு வேலை - அதாவது காட்டைத் திருத்தி மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமனாக்கும் சமத்துவ வேலையைக் கைக்கொள்ள வேண்டும். அதற்கு பயப்படக் கூடாது. இந்த வேலையில் நமக்குப் பெரிதும் கஷ்டமுண்டு என்பதையும் மனதில் வைக்க மறந்து விடக் கூடாது. புதர்களில் இருந்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வரும் ஜந்துக்களால் நமக்கு பல ஆபத்துகள் ஏற்படலாம். அதற்கும் துணிந்து தைரியத்தோடு தான் அழிவு வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.
ஆகவே, சகோதரர்களே! இப்போது நமது நாட்டில் ஆக்க வேலை செய்வது என்பது சாத்தியப்படாதது என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். பாழும் மதத்தின் பேரால் உலகமே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றது. குறிப்பாக, நமது நாடு மதத்தின் பேரால் பிரிந்தது மாத்திரமல்லா மல், ஜாதிகளின் பேரால் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றன.
இவை மாத்திரமல்லாமல் பணக்காரன் - ஏழை, படித்தவன் - பாமரன் என்கின்ற பிரிவுகளும் நிரந்தரமாய் இருக்கும்படி ஏற்பாடுகள் ஆகிக் கொண்டும் வருகின்றன. இந்தப்படி நிரந்தர மாயிருக்கும் படியாக ஏற்பாடு செய்து கொண்ட மேல் ஜாதி, கீழ் ஜாதி முதலாகிய பிரிவுகளை அழிக்க ஆரம்பித்தால் இதை ஆதரவாய்க் கொண்டு மற்றொரு கெடுதி நமது நாட்டில் நிரந்தரமாய் இருக்கும்படியாக அதாவது, பணக்காரன் ஏழை என்கின்ற பிரிவு நிரந்தரமாய் இருக்கும்படியாக ஒரு புது முயற்சி நமது நாட்டில் இப்போது அதிகமாகச் செய்யப்பட்டு வருகின்றது.
முதலாளி, தொழிலாளித் தன்மையும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடாகி வருகின்றது. இவைகள் எல்லாம் அரசியல் கிளர்ச்சியாலும் சீர்திருத்த முயற்சி யாலுமே தான் செய்யப்படுகின்றது. அதாவது இவ் வேற்பாடு களைத்தான் இன்றைய முன்னேற்றமென்றும், சீர்திருத்த மென்றும், சுதந்திரமென்றும் சொல்லப்பட்டு வருகின்றன. நமது பாமர ஜனங்கள் இதன் இரகசியத்தைத் தெரியாமல் அதில் விழுந்து விளக்கில் விட்டில் பூச்சிகள் விழுவது போல் விழுந்து மடிந்து வருகின்றார்கள்.
இதற்காகவே தான் கடவுளும், மதமும், ஜாதியும், அரசியலும் ஏற்படுத்தப்பட்டதென்றும், அந்தப்படியே பயன்படுத்தப்பட்டு வருகின்றதென்றும் நான் உறுதியாய்க் கூறுகிறேன். இவைகளையெல்லாம் அடியோடு ஒழிப்பதுதான் நாம் மனித சமுகத்திற்குச் செய்ய வேண்டிய உண்மையான தொண்டாகும். இதை விட்டுவிட்டுச் செய்யும்படியான வேறு எந்தத் தொண்டும் மனித சமுகத்திற்குக் கேடு விளை விப்பதாகும்.
ஆகவே நாட்டிற்கு நன்மை செய்வதாய்க் கூறிக்கொண்டு மக்களை மீளாத அடிமையிலும், கொடுமையிலும் ஆழ்த்தப் போகும் பாதகமான வேலைகளை எல்லாம் கூட நாம் அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். நாட்டுச் செல்வங்களை நாட்டிலுள்ள மக்களில் சிலர் தங்கள் தேவைகளுக்கு மேலாகவும் தகுதிக்கு மேலாகவும் சேர்த்து வைத்துக் கொண்டு அவை களையெல்லாம் அக்கிரமமான வழியில் செலவு செய்து கொண்டு மக்களை அடிமைப்படுத்தி ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற மக்களேதான் இன்று இந்த நாடு தரித்திர நிலையில் இருக்கின்றது விடுதலை பெற வேண்டும் என்று பாசாங்கு செய்கின்றார்கள். கஷ்டப்படும் மக்களும், ஏழை மக்களும் தங்கள் மீது திரும்பாமல் இருக்கட்டும் என்று அன்னிய நாட்டுக்காரர்களை நமக்குக் காட்டி நம்மை அந்தப்பக்கம் திருப்பி விடுகின்றார்கள்.
சாதாரணமாக, நாம் குழந்தைகளிடம் இருந்து ஏதாவது சாமான்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி அதற்கு வேறு ஒரு வேடிக்கையைப் பார்க்கச் சொல்லி ஆகாயத்தைப் பார், அந்தப் பக்கம் பார் என்பதாக பராக்குக் காட்டி, அது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கும் போது நாம் அந்த சாமானை எடுத்துக் கொள்ளுகின்றோமோ அது போலவே பாமர மக்களை சுயராஜ்யம் பார், பூரண சுயேச்சையைப் பார், மோட்சம் பார், கடவுளை பார் என்று பராக்கு காட்டி அவர்கள் வேலையின் பயனையும் அவர்களது செல்வத்தின் பங்கு களையும் சிலரே கொள்ளை அடித்துக் கொள்ளுகின்றார்கள். இந்தக் கூட்டத்தாரின் தந்திரமே தான் இந்த நாட்டில் தரித்திரம் என்பதற்கும் அடிமைத்தனம் என்பதற்கும் அறிவும் ஆராய்ச் சியும் அற்றதனம் என்பதற்கும் ஆதாரமாய் இருக்கின்றன.
இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும் கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியா மலேயே இந்த நாடு தரித்திரமான நாடு என்று அழுகின்றார்கள்.
இந்த நாட்டில் உள்ள சந்நியாசிகள், துறவிகள், மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துகளும், வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா? அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்த பொருளாதாரவாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக் கணக்கான ரூபாய் சொத்தும் வருஷத்தில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த நாடு ஏழை நாடு, தரித்திர நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன். ஒரு முழம், முக்கால் முழம் உயரமுள்ள குழவிக் கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எத்தனை லட்ச ரூ. வரும்படியும் இருக்கின்றன வென்று பாருங்கள்.
இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு பல கலியாணங்களோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?
இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகின்றானா? மற்றும் பிரபுக்கள் செல்வவான்கள் லட்சுமி புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தனை ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமிகள் உடையவர்களும் எத்தனை ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இன்கம்டாக் வரிகொடுக்கக் கூடிய லாபம் அனுபவித்துக் கொண்டு லட்ச லட்சமாய் கோடி கோடியாய் பொருள் சேர்த்து தாசிவேசி ராஜபோகம் அனுபவித்துக் கொண்டு நிரந்தர ராஜாவாகவும் நிரந்தர ஜமீனாகவும் நிரந்தர பிரபுவாகவும் நிரந்தர பாளையக்காரராகவும் இருக்க முயற்சி மேல் முயற்சி செய்து கொண்டு இருக்கும் மக்கள் பல நூற்றுக் கணக்காக ஆயிரக்கணக்காக இருந்து கொண்டு இருக்கும் இந்த நாட்டை தரித்திரமுள்ள நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா?
மற்றும் நாள் ஒன்றுக்கு 100, 200, 500, 1000, ரூபாய்கள் வீதம் சம்பாதிக்கும் வக்கீல்களும் டாக்டர்களும் ஏராளமாய் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் அய்ம்பதாயிரம், லட்சம், அய்ந்து லட்சம் பெறும்படியான பங்களாக்களில் வாழ்ந்து கொண்டு நிலத்தில் கால் படாமல், நகத்தில் அழுக்குப்படாமல், சரீரத்தில் வேர்வை இல்லாமல் பிழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் பல ஆயிரக்கணக்காக லட்சக்கணக்காக வாழும் இந்த நாட்டை தரித்திரமுள்ள நாடு என்று யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
மற்றும் இந்தக் கூட்டத்தினர்கள்தானே இன்றைய தினம் இந்த நாடு தரித்திர நாடு, ஏழை நாடு, அடிமை நாடு, சுதந்திர நாடு என்றும் ஆக வேண்டும் சுயராஜ்ஜிய நாடு ஆக வேண்டும் என்றும் பிரமாதமாய்க் கூப்பாடு போடுகின் றார்கள். ஒவ்வொரு காலத்திலும் வருகின்ற சீர்திருத்தங்களில் எல்லாம் இந்த மாதிரி ஜனங்கள்தானே நமது பிரதிநிதிகளாய் இருந்து நமக்காக என்று ஆட்சி புரிந்து வருகின்றார்கள். இப்படிப்பட்டவர் களுக்குத் தானே இன்னமும் அதிகாரமும், பெருமையும் கீர்த்தியும், பணமும், வரவும் ஏற்படவும் நாம் மதத்தையும், கடவுளையும், ஜாதியையும் காப்பாற்ற முயற்சிப்ப தோடு சுயராஜ்ஜியமும் பெற வேண்டுமென்று பெரிய பாடுகளைப் படுகின்றோம்.
நமது நிலைக்குக் காரணமென்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றது? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்குக் காரணமாயிருக்கின்றது. மதத்தையாவது ஜாதியையாவது கடவுளையாவது உண்மை யென்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனா லும் மக்களுக்கு சமத்துவமும் அறிவும் தொழிலும் செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது என்பது எனது உறுதி.
ஆனால் இவைகளை அழிக்க மக்கள் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டார்கள். இவைகளைக் காப்பற்ற அனேக விதமான ஸ்தல ஸ்தாபனங்கள் ஆதியிலேயே ஏற்பாடு செய்யப் பட்டு வந்து குழந்தைப் பருவ முதலே நமக்குள் புகுத்தப்பட்டு வந்திருப்பதால் இது சுலப சாத்தியமான காரியமாக இருக்க முடியவில்லை.
இவைகளில் எங்கு கைவைத்தாலும் நமது எதிரிகள் நம்மீது நாஸ்திகன் என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து நம்மை கொல்லப் பார்த்து விடுவார்கள். நமது மக்களும் பெரும்பாலும் மூடர்களாயிருப்பதால் அந்த நாஸ்திகம் என்னும் ஆயுதத்தைக் கொண்டே நமது எதிரிகளுக்கு உதவியாகவும் நமக்கு எதிராகவும் நின்று நமது முயற்சிகளுக்கு இடையூறு செய்வார்கள்.
ஆகையால் நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின் ஆயுதமாகிய நாதிகத்திற்கு பயப்படாமல் ஆமாம் நான் நாதிகன் தான் என்று சொல்லிக் கொண்டு அந்த நாதிகத்தையே நாட்டில் எங்கும் மூலை முடுக்குகளில் கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போது தான் நமது எண்ணம் ஈடேற முடியும். ஆதலால் நாம் இனிச் செய்ய வேண்டியது முக்கியமாய், நாதிகப் பிரசாரமேயாகும். அதாவது எனக்கு இந்த மதம் வேண்டாம் இந்த ஜாதி வேண்டாம், இந்த சாஸ்திரம் வேண்டாம், இந்தக் கடவுள் வேண்டாம் இவைகள் இல்லாமல் ஜீவிக்க என்னால் முடியும் எனக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமும் மனிதத் தன்மை யுமேயாகும் என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும்.
அதுவும் இந்த நாட்டில் இந்த உலகத்திலேயே வேண்டுமே ஒழிய மேல் உலக சங்கதியை இதில் கலக்க வேண்டாம் என்று தைரியமான பிரசாரம் செய்ய வேண்டும். இன்றைய வாலிபர் களுக்கு இது தான் முக்கிய வேலை என்பது எனது உறுதி யான அபிப்பிராயமாகும். இதற்கெல்லாம் முதலில் மனிதனை மோட்சத்தை, சுவர்க்கத்தை மறக்கச் சொல்ல வேண்டும்.
- குடிஅரசு கட்டுரை - 14.9.1930
(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101003/news05.html

weather counter Site Meter