Pages

Search This Blog

Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts
Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts

Saturday, February 12, 2011

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ்.பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்!

வரட்டும் - அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன.

இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமாம், திராவிடர் கழகமும்தான்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்து மதமோ பார்ப்பனர் ஆதிக்கத்தை, மேலாண்மையைக் கெட்டிப் படுத்தும் வெறி கொண்டதாகும்.

பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண் டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத - பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது.

இந்த நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய தலைவர் தந்தை பெரியார்; இயக்கம் - திராவிடர் இயக்கமாகும்.

துயரப்படும் மக்கள் உண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது.

பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் - அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது. எப்படியோ ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் பார்ப்பனீயத்தோடு இணைந்து நின்ற அமைப்புகளாகி விட்டதால் எதிர்ப்பிரச்சாரப் புயலில் பார்ப்பனீயத்தோடு அதுவும் கட்டுண்டு தாக்குதலுக்கு ஆளானது.

தமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால்கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை - டெபாசிட் காலியாயிற்று.

இடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும்; வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம்.

முதல் கேள்வி - பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா என்ற கேள்வி எழும்.

சங்கர மடத்தில் அடுத்த சங்கராச்சாரி யார்? என்ற வினாவும் வெடிக்கும்.

சம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்ன செய்வார்கள்? முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே! என்ன செய்வார்கள்? கைபிசைந்து நிற்பார்கள்.

கழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா? என்று கேட்கும் நிலை உருவாகட்டும்! உருவாகட்டும்!!

http://viduthalai.in/new/page-2/3311.html 

Thursday, February 10, 2011

சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி?

மானமிகு கலைஞர்மீது ஏன் இவர் எகிறிக் குதிக்கிறார்-விழுந்து பிராண்டுகிறார்?

மாவீரன் பிரபாகரன் பற்றி பறையன் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்?ஆ.இராசா மீது ஏன் இவ்வளவுத் தூஷணைகள்?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறார்?ராமனுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறார்?

ராமன்தான் பெரியவன் - மக்கள் நலன் பேணும் சேது சமுத்திரத் திட்டம் முக்கியம் அல்ல என்று ஏன் கருதுகிறார்?

சிதம்பரம் கோயில் தீட்சதர் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலையில், அதனை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர் களோடு சேர்ந்து வழக்கில் தம்மை இணைத்துக் கொள்ளத் துடியாய்த் துடிப்பானேன்?

ஜெயலலிதாவுக்கு வாடகை வாயாக ஒலிப்பானேன்? இந்தப் பேர் வழியின் பக்கத்தில் ஈ, காக்கை உண்டா?

இந்தத் தனி மனிதன் வெட்ட வெளியில் சிலம்பாட்டம் ஆடுவதை நாட்டு ஊடகங்கள் தூக்கிச் சுமப்பது ஏன்?

இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஒரு மண்டலம் விரதம் பூணவேண்டியதில்லை. மண்டையை உலுக்கிக் கொண்டு சிந்திக்கவும் தேவையில்லை.மிக எளிதான பதில், மிக மிக எளிதான விடை என்ன தெரியுமா? இந்தப் பேர் வழி ஒரு பச்சைப் பார்ப்பனர் என்பதால்தான் இவ்வளவுப் பெரிய தடபுடல்!

ஆசாமி அடாடிவடித்தனமாகப் பேசக் கூடியவர் என்பதால் இவ்வளவுப் பெரிய விளம்பரம்.அடிப்படையில் பார்ப்பனர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதைப் புரிந்துகொண்டால் இவருடைய சேட்டைகளுக்கான காரணம் சாங் கோபாங்கோமாக பஷ்டமாக பளிச்சென்று புரிந்து விடும்.


இதோ ஓர் எடுத்துக்காட்டு:

கேள்வி: எனக்கு முன்னாள் இருந்த அமைச் சர்கள் என்ன ஃபார்முலாவைக் கடைப்பிடித் தார்களோ, அதையேதான் நான் கடைப்பிடித்தேன். நான் குற்றமற்றவன் என்று ராசா திரும்பத் திரும்ப கூறுகிறாரே?

சு.சாமி: ராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை. ராசா தவறு செய்துள்ளார். அதனால் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
(குமுதம் ரிப்போட்டர் 5.12.2010 பக்கம் 43)

இராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க., அமைச் சர்கள் என்ன செய்தார்கள் என்பது அவருக்குத் தேவையில்லையாம், ஏன் தேவையில்லை?விளக்கம் அளித்தாரா?

விவாதம் புரிந்தாரா?

அதெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது.

பா.ஜ.க. அமைச்சர் தவறு செய்தால் அதைப்பற்றி அவருக்குக் கவலையில்லையாம்!இராசா தவறு செய்தாராம், அதைப் பற்றி மட்டும்தான் பேசுவாராம்.

பா.ஜ.க. வைச் சேர்ந்த அமைச்சர்கள் என்றால் பார்ப்பனர்கள் அவர்களைப் பற்றிப் பேசுவார்களா?

பாரதீய ஜனதா கட்சி என்றால் பார்ப்பனீயத்தைப் பதியம் போட்டு வளர்க்கும் கட்சியாயிற்றே. அதன்மீது தூசு விழலாமா? அப்படி விழுந்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளத்தான் இவர்களால் முடியுமா?

அதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ். காரர் இவர் என்று எழுதுவது ஏனோ தானோ என்ற முறையில் அல்ல. அவரே வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதுவும் எந்த இதழில்? அவாளின் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதத்தில் (ஏப்ரல் 14, 2006)

ஈரோட்டில் நடந்த வி.இ.பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே அரசியல்வாதி நீங்கள்?

அரசியல்வாதியாக நான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஒரு இந்து என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் கலந்துகொண் டேன். நான் வி.இ.பரிஷத் மேடைகளில் பேசுவது புதிது அல்ல. காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு கடந்த 2ஆண்டுகளில் 20-க்கும் அதிகமான வி.இ.பரிஷத் மேடைகளில் நான் பேசியிருக்கின்றேன்.

ஆர்.எஸ்.எஸ். பற்றி உங்கள் அபிப்ராயம்?

நான் தீனதயாள் ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக இருந்திருக்கிறேன். ஆர்கனைசர் வார இதழில் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இப்போது மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனால் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. நாட்டில் இந்து மனப்பான்மையை ஏற்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பங்காற்றி வருகிறது. (விஜயபாரதம், 14.4.2006)

இந்தப் பேட்டி பற்றி விளக்கவா வேண்டும்-விளக்கம் தேவையா இந்த பேட்டிக்கு?

பெயர் - ஜனதா கட்சியின் தலைவர்- ஆனால் அவர் அடிப்படை உணர்வு என்பதோ ஆர்.எஸ்.எஸ். விசுவ ஹிந்து பரிசத் உள்ளிட்ட சங்பரிவார் பக்கம்.

இப்படிப்பட்டவர் எப்படிப் பேசுவார்? எப்படி நடந்து கொள்வார்? அப்படியே பேசுகிறார்- அப்படியே நடந்து கொள்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு அவர் மீது ஆர்வம் பீறிட்டுக் கிளம்பிவிட்டதாம். 2 ஆண்டுகளில் 20 விசுவஹிந்து பரிஷத் கூட்டங்களில் கலந்துகொண்டு முழங்கி இருக்கிறார்.

ஜெயேந்திரர் கைதுக்குக் காரணம் சோனியா வாம்-ஜெயலலிதா இல்லையாம். சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்தாராம் ஜெயலலிதா (ஜெயலலிதாவுக்கே உபயம்!).

சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக எதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்ய வேண்டு மாம்? அப்படி எல்லாம் அவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. கேட்டால் நான் யார் தெரியுமா, ஹார்வேடு பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்துபவன் என்று தலைக்கனத்துடன் பேசுவார்.

அமர்த்தியா சென்னுக்கும் நோபல் பரிசு கிடைத்ததே, கிறிஸ்துவ சதி என்று சொன்ன கூட்டம் அல்லவா. அதே ஆர்.எஸ்.எஸ். பாணியில் ஜெயேந்திரரைக் கைது செய்ததற்கும் காரணம் சோனியா காந்தியாம்.

அப்படி யென்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சங்கரராமன் கொலையே செய்யப்பட வில்லை - கொலை செய்யப்பட்டதாக சொல்வது எல்லாம் சோனியாவின் பிரச்சாரத் தந்திரம் என்று சொல்லுவதற்குக் கூட கூச்சப்படாத ஜென்மம் இது! இவ்வளவுக்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந் திர சரஸ்வதி மீதான குற்றம் சாதாரணமானதா?

இ.பி.கோ. 302, 120-பி, 34, 201 கொலை செய்யத் தூண்டுவது, கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை முதலியவை-இவையெல்லாம் குற்றம் இல்லையாம்!

இந்தக் குற்றவாளிக்காக பூணூலை முறுக்கிக் கொண்டு வக்காலத்து வாங்குவாராம்; 20 கூட்டங்களில் பேசினாராம். ஆனால் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஆ.ராசாவைக் குற்றம் சுமத்தும் விடயத்தில் விண்ணுக்குத் தாவிப் பேசுவாராம். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பாசம்! பூணூல் வாதம் என்பது!

கல்லூரியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.ஸோடு தொடர்பு- ஜனசங்கத்தில் சங்கமம்- குருஜி கோல்வால்கரோடு குசலம். இந்தப் பின்னணி களைத் தெரிந்துகொண்டால் இந்த சு.சாமி பார்ப்பனரின் சூட்சமங்களும், சிண்டு முடியும் நரித்தனங்களும், நஞ்சு தோய்ந்த நாக்கின் நயவஞ்சகங்களும், பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் புரட்டுகளும் எங்கிருந்து கிடைத்தன என்னும் விவரங்கள் விவரமாகவே தெரியும்.

முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது.http://naathigam.blogspot.com/2011/02/2_11.html

                                                                                                                                          --மின்சாரம்-

Tuesday, December 14, 2010

இந்து தீவிரவாதம்- திக்விஜய்சிங் கூறியதில் குற்றமென்ன?

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் எழுப்பிய கேள்விகள் பாரதீய ஜனதா சங் பரிவார் வட்டாரத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டன.

மும்பைத் தாக்குதலில் மகாராட்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்ட விதம் பல அய்யப்பாடுகளைத் தொடக்க முதலே ஏற்படுத்தியது. மத்திய அமைச்சராக உள்ள அப்துல் ரகுமான் அந்துலே அவர்களே நாடாளு மன்றத்திலேயே தன் அய்யப்பாட்டைப் பதிவு செய்தார்.

அதே பிரச்சினையைத்தான் காங்கிரஸ் கட்சியில் அகில இந்தியப் பொதுச்செயலாளர் திக்விஜயசிங் கிளப்பி உள்ளார்.

இதற்கு நியாயமான மறுப்பு இருந்தால் அதனைத் தருவதுதான் அறிவு வயப்பட்டவர்களுக்கு அழகே தவிர, எவ்வாறு எப்படி சொல்லலாம் என்று தாண்டிக் குதித்தால் - அதுவும் பா.ஜ.க. சங் பரிவார்க்கும்பல் தாண்டிக் குதித்தால், அது சந்தேகப்படக் கூடிய ஒன்றாகவே இருக்கும்.

எந்தச் சூழ்நிலையில் அவர் கொல்லப்பட்டார் என்பதுதான் முக்கியமாகும்.

மகாராட்டிர மாநிலம் மாலேகான் சிமி அலுவலகம் முன் குண்டு வெடிப்பில் (29.9.2008) அய்ந்து பேர் பலி யானார்கள். 90 பேர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் டைமர் கருவி பொருத்தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

அந்த மோட்டார் சைக்கிளுக்கு உரிமையாளர் ஒரு பெண் சாமியார். அவர் பெயர் சாத்வி பிரக்ஞா தாக்கூர். மாணவப் பருவந்தொட்டு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப் புடன் தொடர்பு உடையவர். குஜராத் மாநில முதல மைச்சர் நரேந்திர மோடியின் பேரன்புக்கு மிகவும் பாத்திரமானவர்.அதனால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் குஜராத்துக்கே குடியேறிவிட்டார்.

இந்தக் குண்டு வெடிப்பில் மூளையாக இருப்பவர் இந்திய இராணுவத்தின் மிக முக்கியமான புலனாய்வுத் துறையில் பணி புரிந்தவர் - கர்னல் சிறீகாந்த் புரோகித்.

மாலேகான் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து - இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப் படக் கூடியதாகும். இதன்மூலம் இராணுவ அதிகாரி புரோகித்துக்கு இதில் உள்ள தொடர்பை வலுவாக அறுதியிட்டுக் காட்டமுடியும். இந்த ஆசாமி நாசிக் அருகில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்துபவர்.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையா ளுவது எப்படி? என்பது போன்ற பயிற்சிகள் இந்தக் கல்லூரியில் கொடுக்கப்பட்டுவருகின்றன.

கர்னல் சிறீகாந்த் புரோஹித், பெண் சாமியார் பிரக்ஞாசிங் தாக்கூர், சாமியார் தயானந்த பாண்டே, சிவநாராயண கல்சங்கரா, ஷாம் சாகு, முன்னாள் இராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாயா, சமர்குல் கர்னி, அஜய ரசிர்கர், ராகேஷ் தாவ்டே, சுதாகர் சதுர் வேதி ஜெகதீஷ் மார்த்ரே ஆகியோர் குற்றவாளிகள் என்பதைக் கண்டுபிடித்தவர் கார்கரே!

பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு களிலும் இந்தக் கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்ற தகவல்கள் திரட்டப்பட்டு 4000 பக்கங்கள் கொண்ட அறிக்கை தயாரிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் கார்கரே.

அத்தகைய திறமையும், கடமை உணர்வும் நிறைந்த ஒரு காவல்துறை உயரதிகாரி மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்றால் அது குறித்த சந்தேகங் களை எழுப்பக் கூடாதா?

மத்திய அமைச்சர் எழுப்பிய வினாக்கள் அப்படியே இன்று வரை நிற்கின்றனவே.

தீவிரவாதத் தடுப்புக் குழுவின் தலைவர் ஹேமந்த் கார்கரேயையும், அவருடன் இரு மூத்த அதிகாரி களையும் சேர்த்து காமா மருத்துவமனைக்கு அனுப்பி யவர்கள் யார்? உத்தரவிட்டது யார்? எந்தச் சூழ் நிலையில் அந்த மூன்று மூத்த அதிகாரிகளும் பொதுவாக யாரும் அறிந்த சம்பிரதாயப்படி ஒரே வாகனத்தில், சம்பிரதாய விதிகளை (Protocol Norms) மீறி பயணம் செய்தனர். சிஎஸ்டி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த அம் மூவரையும் அங்கிருந்து விடுவித்தது யார்? தாஜ் ஓட்டலுக்கும், ஓபராய் ஓட்டலுக்கும் போகாமல் காமா மருத்துவமனைக்கு அம் மூவரையும் அனுப்பி வைத்ததில் ஏதோ காரணம் இருக்கவேண்டும். அந்தக் காரணம் என்ன?

தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்தான் என்று பிரச்சாரம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அது உண்மைக்கு மாறானது என்பதை உண்மையான தீவிரவாதிகளை ஆணிவேர்வரை சென்று கண்டு பிடித்த ஒருவர் திடீர் என்று மர்மமான வகையில் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா? அதைத் தானே காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் செய்துள்ளார்.

மகாராட்டிர மாநிலக் காவல்துறை முன்னாள் தலைவர் முஷ்ரீஃப் எழுதிய நூல் ஒன்றில் (Who Killed Karkare) அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிச் சத்துக்குக் கொண்டு வந்துள்ளாரே!

பா.ஜ.க. கதறுகிறது என்றால் அதற்கு அர்த்தம் உண்டு. காங்கிரஸ் தலைவர்களுக்கு என்ன வந்தது? திக் விஜய்சிங் சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்லவேண்டும்?

காங்கிரசே கொஞ்சம் பதமான இந்துத்துவா அமைப்பாக இருப்பதுதான் இதுபோன்ற அணுகுமுறை களுக்குக் காரணம் என்ற பொதுவான அபிப்பிரா யத்தை இது உறுதி செய்கிறதோ என்றுதான் கருத வேண்டியுள்ளது.
http://www.viduthalai.periyar.org.in/20101214/news06.html

Saturday, November 13, 2010

தீவிரவாத செயல்களுக்காக கைதான இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு-காங்கிரஸ்

நாக்பூர்: நாட்டில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்துக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாக்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முஸ்லீ்ம்களை தேச விரோதிகள் என்று தொடக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைதான இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு ஆர்.எஸ்.எஸ். என்ன பதில் சொல்லப் போகிறது.

முஸ்லீம்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள், அடைக்கலம் தருகிறார்கள் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதானால் சதி நடக்கிறது என்று கூக்குரலிடுகிறது.

நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். முஸ்லீம்களும் அவர்களுடன் கை கோர்த்து நாட்டை வலிமைப்படுத்த, வளப்படுத்த பாடுபட வேண்டும் என்றார் திக்விஜய் சிங்
http://thatstamil.oneindia.in/news/2010/11/13/rss-hindus-terrrorism-congress-digvijay-singh.html

Monday, November 8, 2010

வீதிக்கு வருகிறார்களாம்!

அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸின் முக்கிய பிரமுகர்கள் தேவேந்தர், லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே, சந்தர் சேகர் லவே, சுனில் ஜோஷி உள் ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியப் பிரமுகரான ஆர்.எஸ்.எஸ். தேசியக் குழுவின் உறுப்பினர் இந்தரேஷ் குமார் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைபேசிகளும், சிம் கார்டுகளும் பல ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளை அடை யாளம் காட்டிவிட்டன.

ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறைப் பிரிவினர் தீவிரமாகச் செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணை யில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அந்த அமைப்பைத் தடை செய்வதற்குப் போதுமானவை என்றும், ஆர்.எஸ்.எஸின் வன்முறை நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதுதான் தாமதம் - தாங்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகிவிட்டோம் என்பதைத் துல்லிய மாக உணர்ந்து கொண்ட ஆர்..எஸ்.எஸ். கும்பல் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது.

ஆர்.எஸ்.எஸின் நாக்பூர் தலைவர் ரவி ஜோஷியும், இணைச் செயலாளர் ஒருவரும் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர்.

கடந்த 80 ஆண்டுகாலமாக கட்டுப்பாடான வாழக்கை வாழ்வது எப்படி என மக்களிடம் எடுத்துரைத்து வருகிறோம். தன்னலமற்ற இந்தச் சேவையை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. தேசிய பேரிடர் வரும்போதெல்லாம், உடனடியாகக் களமிறங்கி, பாதிக்கப்பட்டோருக்குச் சேவை செய்கிறோம். வன்முறைக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் சகட்டு மேனிக்கு எங்களை விமர்சிக்கிறது என்று கூறியுள்ளனர்.

வரும் 10 ஆம் தேதி புதுடில்லியில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டமும் நடத்தப் போகிறார்களாம்.

நெருப்பு சுடாது, பனிக்கட்டி குளிராக இருக்காது என்று சொன்னால், எப்படி நம்பமாட்டார்களோ அதைப் போன்றதுதான் ஆர்.எஸ்.எசுக்கும், வன்முறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாகும்.

மூன்று முறை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டுள்ளதே - அது எந்த அடிப்படையில் என்பதை விளக்குவார்களா?

ஆண்களுக்கும், பெண்களுக்கும் துப்பாக்கிப் பயிற்சிகளையும், வன்முறைப் பயிற்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். கொடுத்து வருகிறதே - இதன் தன்மை என்னவாம்?

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்கள் யார்? கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று தங்கள் மீது விழுந்த கறையைக் கழுவிக் கொள்வதற்காக இவர்கள் மறுக்கலாம்.

நாதுராம் கோட்சேயின் உடன்பிறப்பான கோபால் கோட்சேயும், அவரது மனைவியும் நாதுராம் கோட்சே கடைசிவரை ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பேட்டி கொடுத்துள்ளனரே - மறுக்க முடியுமா?

நெல்லை மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது பழியைச் சுமத்தி மதக் கலவரத்தைத் தூண்ட சதித் திட்டம் போட்டார்களே - அது அம்பலம் ஆகவில்லையா?

கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்தது என்ன? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு, வெடிகுண்டு வெடித்து பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலியானார்களே - அதற்குப் பெயர் என்னவாம்?

2006 ஜூலையில் மும்பை ரயில், 2007 பிப்ரவரியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், அதே ஆண்டு மே திங்களில் அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அக்டோபரில் அஜ்மீர் தர்கா ஷெரீஃப், 2008 ஜூலையில் அகமதாபாத், அதே ஆண்டு செப்டம்பரில் மாலேகான் குண்டுவெடிப்பு களில் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் சம்பந்தப்பட்டனர் என்ற புரளியைக் கிளப்பி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டனரே!

அவையெல்லாம் முழுப் பொய் - இந்த வன் முறைகளின் பின்னணியில் இந்த சங் பரிவார்க் கும்பல்தான் இருந்துள்ளது என்று தக்க ஆதாரத் துடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பேராபத்துத் தலைக்குமேல் வந்தேவிட்டது என்ற அச்சத்தில் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர். இந்த அச் சுறுத்தல்களைக் கண்டு மிரண்டு போகாமல் இந்தக் குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர மத்திய அரசு மேலும் காலம் தாமதம் செய்யாமல் செயல்படவேண்டும். அதன்மூலமே வன்முறை சக்திகளின் ஆணிவேரை வீழ்த்த முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.viduthalai.periyar.org.in/20101108/news06.html

Wednesday, October 20, 2010

ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத்தின் முனை முறியாப் பொய்கள்!

ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தையும், இந்துக்களையும் தொடர்பு படுத்த முடியாது. பயங்கரவாதம் மற்றும் இந்துக்கள் என்ற சொற்கள் நேர் எதிரான முரண்பாடான பொருள் கொண்டவை. ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்த முடியாது. அயோத்தி விவகாரத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு, குறிப்பிட்ட யாருக்கும் எதிரானதல்ல. எனவே, காவி பயங்கரவாதம் எனக் கூறுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடியவர் இவ்வாறு சொல்லியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இந்துத்துவா அமைப்பின் தலைவர் அவ்வாறு கூறவே கடமைப்பட்டவராகிறார்.

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்ல என்று அவர்கள் சொல்லவில்லையா? நாதுராம் கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சேயும், கோபால் கோட்சேயின் மனைவியும் அதனைத் திடமாக மறுத்துள்ளனரே! இருந்தாலும் கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரன் அல்ல என்று மறுத்துத் தீரவேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு.

காந்தியாரைச் சுட்டுக் கொல்லுவதற்கு முன் நாதுராம் கோட்சே என்ன செய்தான்? தன்னை ஒரு முசுலிம் என்று திரித்துக் காட்டிக் கொள்வதற்காக சுன்னத் செய்து கொண்டிருக்கிறான் - தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இருக்கிறான். இப்படி கடைந்தெடுத்த பித்தலாட்டம் - மோசடியை இவர்களைத் தவிர வேறு யார்தான் செய்ய முடியும்?

பயங்கரவாதத்தையும், இந்துத்துவாவையும் தொடர்புபடுத்த முடியாதாம் - அப்படியானால், 1992 டிசம்பர் 6 அன்று 450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் பா.ஜ.க. தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், விசுவ இந்துபரிசத்தினரும், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலும் வன்முறை கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கினார்களே - அதற்கு என்ன பெயராம்?

இவர்கள் எல்லாம் இந்துத்துவாவாதிகள் அல்லர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறப்போகிறாரா?

இவர்களின் இந்துத்துவா கதாநாயகனான இராமன், தவம் செய்த சூத்திரன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அதற்குப் பெயர் வன்முறை யல்லாமல் - நன்முறை என்று பட்டம் கட்டப் போகிறார் களா?

இந்து மதக் கடவுள்களின் கைகளில் எல்லாம் வாளாயுதம், வேலாயுதம், அம்பு, வெட்டரிவாள், கதை, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்கின்றனவே - இவை பலாத்காரத்தின் சின்னங்கள் அல்லவா - கொலை காரக் கருவிகள் அல்லவா!

சண்டை போடாத இந்து மதக் கடவுள்கள் உண்டா? கொலை செய்யாத சாமிகள் உண்டா?

தன் உற்றார் உறவினர்களைக் கொல்ல முயன்ற அர்ச்சுனனுக்கு அறிவுரை புகன்று அவர்களைக் கொல்லுமாறு போர்க்களத்தில் அறிவுரை புகன்றானே - அவர்களின் பகவான் கிருஷ்ணன் - அதற்கு என்ன பெயராம்!

யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும். ஆகையால், அதைக் கொள்ளை யிடுவது தர்மம் (மனுதர்மம் அத்தியாயம் 7, சுலோகம் 24) என்கிறதே இந்து மத சாத்திரம் - இந்தக் கொள்ளையிடுவது என்பதன் பொருள் என்னவோ!

செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங் காமலும், கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளை யிடலாம்!

(மனுதர்மம் அத்தியாயம் 11, சுலோகம் 13)

பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் என்ப தற்குத் தனி அகராதியை மோகன் பகவத்துகள் தயார் செய்து வைத்துள்ளார்களோ!

வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால், பிராம ணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்யவேண்டும்.

(மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 348)

மனுதர்மம் (வர்ணாசிரமம்) முறைப்படி ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை, அந்தத் தண்டத்தைக் கொண்டே -மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாம்.

(மனுதர்மம் அத்தியாயம் 6, சுலோகம் 26)

இவை எல்லாம் பலாத்காரம், பயங்கரவாதம், வன்முறை என்ற பட்டியலில் வராது என்று வெளிப் படையாகச் சொல்லிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்த முடியாது என்று சொல்லட்டும்!

வன்முறை நடவடிக்கைகளுக்காக மூன்று முறை தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். என்பதை மறைக்க அடேயப்பா, இத்தனைப் பொய்புரட்டுப் பேச்சா?
http://www.viduthalai.periyar.org.in/20101020/news07.html

weather counter Site Meter