Pages

Search This Blog

Showing posts with label கி.வீரமணி. Show all posts
Showing posts with label கி.வீரமணி. Show all posts

Wednesday, April 18, 2012

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - கி.வீரமணி

புராணங்கள் என்பவை எவை? அவைகள் எப்படி உருவாயின.

1. வேதங்களை - சூத்திரர்களோ, பெண்களோ படிக்கக் கூடாது என்ற தடை உண்டு.

ஏன் சமஸ்கிருத பாஷையே தேவ பாஷை - அவை சூத்திரர் அறியக் கூடாது.

வேதங்கள் ஓதுவதை காதால் கேட்கும் சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவேண்டும்; நாக்கை அறுக்கவேண்டும்.

ஆரியர்கள் - பிராமணர்கள் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப வழிவேண்டுமே!
இதோ அதற்காக நவாலியூர் நடராஜன் கூறுகிறார்:
வேதங்களோடு ஒத்த பெருமையுடைய புராண இதிகாசங்கள், சூத்திரரும், பெண்டிரும் படிப்பதற்கே ஏற்பட்டவை என்றார்.

இவை பாபங்களைப் போக்குமாம்!
வேதம் - வேதியர் - கீழ்ஜாதி
புராணம் - புரோகிதர் - மற்றவை

வேதங்களுக்கு அடுத்தபடியாகப் புராணங்கள் அய்ந்தாவது வேதமாகக் கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தைப் போலவே புராணங்களும் சமய இலுக்கியமாகக் கருதப்பட்டு வந்துள்ளன. வேதங்களைப் போலவே அமையும் பழைமையுடைனவென்பது ஆன்றோர் கருத்து. உருவத்திலும், பொருளிலும் அவை இதிகாசங்களோடும், ஸ்மிருதிகளோடும் ஒப்பிடத்தக்கன. இந்திய தரிசனங்களின் வரலாற்றையும், விரதானுட்டானங்களையும் அறிவதற்குப் புராணங்கள் மிகப் பயனுடையன. இந்திய நாகரிகத்தின் கருவூலம் புராணங்களே எனலாம். புராதனமாக இருந்து வருவது புராணம் எனப்படுகிறது. புராணம் செவி வாயிலாக வந்த புராதனச் செய்திகளெனவும் கூறலாம். வேத காலந்தொட்டு வந்த கதைகளும், வரலாறுகளும் மக்களிடையே பிரபலம் பெற்றுப் புராணமாக வடிவெடுத்தன. இவை சூதர் என்ற பாடகர்களால் ஆதியிற் பாடப்பட்டு வந்தன. அதனாலேதான் புராணங்கள் சூதபவுராணிகராற் கூறப்பட்டன என வழங்கும். புராணங்கள் மக்களிடையே பிரபலமடைந்து வந்ததால், புரோகிதர்கள் புராணங்களைப் பயன்படுத்திச் சமய போதனை செய்யவும், விரதானுட்டானங்களைப் பற்றிப் பிரசாரஞ் செய்யவும் முயன்றனர்.

பிரமாணங்களிற் புராணம் பற்றிய செய்தி

புராணம் என்ற சொல் பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் காணப்படுகின்றது. பண்டைக் கதைகள், உலக வரலாறுகள் என்ற பொருளிலேயே அங்கு இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. வேத சுருதிகளுக்கு முன்னரே இத்தகைய புராணக் கதைகள் இருந்திருக்கலாம். ஆனால், இன்று உள்ளதுபோலத் தனிப்பட்டதோர் இலக்கியமாகப் புராணங்கள் இருக்கவில்லை. அதர்வ வேதத்திலே புராணத்தைப்பற்றி, றூச: சாமானி சந்தாம்னி புராணம் எனத் தனிப்பட்டுக் கூறப்பட்டபோதிலும், அவை புராண இலக்கியங்களே எனக் கூறிக் கொள்ள முடியாது. சாந்தோக்கிய உபநிடதம் சதுர்த்த கிதிஹாச புராணம் பஞ்சமம் வேதானாம் வேத மிதி எனக் குறிப்பிடுகிறது. இதிகாசம் புராணம் என்பன பழைய சரித்திரக் கதைகளையும், ஆக்கியானங்களையும் குறிப்பிட்டன. பின்னர், சூத்திர இலக்கியங்களிலே புராணம் திட்டமாக ஒரு தனி இலக்கியமாய்க் குறிப்பிடப்படுகின்றது. மகாபாரதத்திலே இருடிகளின் பாரம்பரியம் தேவர்களின் விருத்தாந்தம் முதலியவற்றைக் குறிப்பிடப் புராணமென்ற சொல் வழங்குவதாயிற்று. வேதங்களை விளக்குவதற்கு (உப பிராமணம்) புராணங்கள் பயன்படுவதாக ஸ்மிருதிகள் குறிப்பிடுகின்றன. இருக்கு வேத சூக்தங்களிலே பரிச்சயமான புரூரவன், ஊர்வசி, சரண்யூ, முட்கலன் போன்ற கதைகள் புராணங்களிலே காணப்படுகின்றன. அரசன் வேதத்தையும், தர்ம சூத்திரங்களையும், வேதாங்கங்களையும் பிரமாணமாகக் கொள்வது போலவே, புராணங்களையும் நீதி பரிபாலனத்துக்குப் பிரமாணமாகக் கொள்ளவேண்டும். ஒழுக்கம், வழக்கு, தண்டம் எனப் பரிமேலழகர் திருக்குறள் உரையிற் கூறிய நீதி பரிபாலனத்துக்கு இப்புராணங்களும் பிரமாண நூல்களாய்க் கருதப்பட்டு வந்தன என அறிந்துகொள்ளலாம்.

சூத்திர இலக்கியத்திற் புராண மேற்கோள்கள்

ஆபஸ்தம்ப தரும சூத்திரத்திலே புராணங்களிலிருந்தும் பவிஷ்ய புராணத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. இத்தரும சூத்திரங்கள் கி.மு. 4 ஆம் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கௌடிலிய அர்த்த சாத்திரத்திலே, அரசர்க்குக் கல்வி புகட்டுவதற்குப் புராணக் கதைகளைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுகின்றது. இது கி.பி. 3 ஆம் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்.

மகாபாரதம், ஒரு புராணமாகவே தன்னை வருணித்துக் கொள்கின்றது. அத்துடன் புராணங்கள் கதையை ஆரம்பிப்பது போலவே, புராணங்களிற் புலமை பெற்றவரும் லோமஹர்ஷணர் மகனுமான சூதர் சொன்னார் எனப் பாரதம் ஆரம்பிக்கின்றது. இவற்றிலிருந்து மகாபாரதம் இப்போதைய உருவத்தைப் பெறுவதற்கு முன்னரே புராணங்கள் தனி இலக்கியமாக இருந்தன என்று சொல்லலாம். புராணங்களும், மகாபாரதமும் போலவே பல ஆசிரியராற் காலத்துக்குக் காலம் விரித்தும் புதுக்கியும் செய்யப்பட்டன. எனவே, புராணங்களிற்கூட முந்திய பகுதி, பிந்திய இடைச் செருகல் என்றெல்லாமுண்டு. மகாபாரதக் கதைகளுக்கும், புராணக் கதைகளுக்கும் ஒற்றுமை காணப்பட்டால், அது ஒருகால் இரண்டுக்கும் பொதுவானதொரு கதைக் களஞ்சியத்திலிருந்து வந்திருக்க வேண்டுமென்று கருதவேண்டும். அல்லது ஒன்றை மற்றொன்று பின்பற்றியதென்று கொள்ளவேண்டும்.

கதைமூலம்

பொதுவான கதையூற்று கேள்வியாக வந்திருக்கலாம். அதிலே, வேத காலத்திலிருந்து வாய்மொழியாக வந்து பிராமணத்திற் கலந்த கதைகளிலிருக்கலாம். அரசர் அவைக் களங்களிலே சூதர் என்ற பாணர் வகையினராற் பாடப்பட்ட கதைகளிருக்கலாம். சில திட்டமான புராண உருவில் இருந்திருக்கலாம். விஷ்ணு புராணத்திலே ஆதியில் நான்கு புராணங்களே இருந்தனவெனக் கூறப்படுகின்றது. இந்தப் புராணங்களில் மூல சங்கிதையைச் சூதலோமஹர்ஷணரும் அவருடைய மாணாக்கர் மூவரும் கூறினர். சில ஆசிரியர்கள் எல்லாப் புராணங்களும் ஆதியானதாம் புராணமொன்றிலிருந்தே கிளைத்திருக்க வேண்டுமெனப் பலர் கூறுகின்றனர். அஃது அத்துணைப் பொருத்தமுடைய கருத்தன்று. பழைய கிரந்தங்களிலே புராணம் என்று குறிக்கப்பட்டால், அது பழைய மரபு என்றே கொள்ளவேண்டும். வேதம், மிருதி, சுருதி என்பவற்றிற்குச் சாதாரணமாக என்ன பொருளுண்டோ அதே பொருளையே புராணத்துக்கும் கொடுக்கவேண்டும். ஆதியிலே புராணம் என வழங்கப்பட்டவற்றுக்கும் இக்காலத்திற் புராணமென நாம் கொள்ளும் நூல்களுக்கும் பல பேதங்களுண்டு.

புராண இலக்கணம்

புராணங்களுக்கு இலக்கணம் வகுத்த பிற்காலத்தவர் அய்ந்து இலக்கணத்தைக் குறிப்பிடுவர். அவை சர்க்கம் (சிருட்டி), பிரதி சர்க்கம் (அழித்து மறுமடி உண்டாக்குவது), வம்சம் (தெய்வபரம்பரை), மன்வந்தரம் (மனுக்களின் காலம்), வம்சியானு சரிதம் (அரச வமிசங்களின் வரலாறு) என்பனவாகும்.

இன்று நிலவும் புராணம் எதிலும் இந்த இலக்கணங்களை முற்றாய்க் காண முடியாது. சில புராணங்களிலே இவற்றைவிட வேறுபல விஷயங்களும் காணப்படுகின்றன. வேறு சில இந்த இலக்கணங்கள் சிறிதுமின்றி வேறு விஷயங்களைக் குறிப்பிடுகின்றன. இன்றுள்ள புராணங்களிலே பல தானம், விரதம், தீர்த்தம், மூர்த்தி, தலம், சிராத்தம் முதலியவற்றைக் குறிப்பிடுகின்றன.

பிற்காலத்திற் புராணத்துக்கு இலக்கணம் வகுத்தவர்கள் பஞ்சலக்கணம் உபபுராணங்களுக்கே யுரியனவென்றும், மகாபுராணங்கள் தசலக்கணம் பெற்றிருக்க வேண்டுமென்றும் விதித்தனர். இவை விருத்தி (தொழில்), ரக்ஷா (தெய்வங்களின் அவதாரம்), முத்தி (வீடு), ஹேது (அவ்யக்தமான உயிர்), அபாச்ரய (பிரமம்) என்பனவாகும்.

இவற்றைவிட, பிரமா, விட்டுணு, சூரியன், உருத்திரன் என்ற தெய்வங்களின் பராக்கிரமத்தைக் கூறுவனவாயும், உலகின் சிருட்டி, திதி, சங்காரம் என்பனவற்றையும், அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றையும் கூறுகின்றனவாயுமிருக்கின்றன. இது கூடப் பூரணமான இலக்கணம் எனச் சொல்ல முடியாது. புராணங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் அடக்கியுள்ளன என்று ஹரிப்பிரசாத சாஸ்திரி என்னும் அறிஞர் கூறுகிறார்.

பதினெண் புராணங்கள்

பரம்பரையாகக் கூறப்பட்டு வந்த புராணங்கள் 18. இவை மகாபுராணங்கள். பின்வருமாறு:

பிரமம், பதுமம், விஷ்ணு, வாயு, பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், அக்கினி, பவிஷ்யம், பிரம்மவைவர்த்தம், வராகம், லிங்கம், ஸ்காந்தம், வாமனம், கூர்மம், மத்ஸ்யம், கருடம், பிரமாண்டம் என்பன.

வாயு புராணத்துக்குப் பதிலாகச் சிவபுராணமும், பாகவதத்துக்குப் பதிலாக
தேவீபாகவதமும் பேசப்படுகின்றன.

 

http://www.unmaionline.com/new/807-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html 

April 01-15

- தொடரும்

Wednesday, March 2, 2011

மருத்துவமனைகளைவிட மருத்துவ மனங்கள் முக்கியம்(வாழ்வியல் சிந்தனைகள்)

கோவையின் தொண்டறச் செம்மல் டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்களது மிகப் பரந்து வளர்ந்தோங்கி நிற்கும் மருத்துவ, கலை அறிவியல், கணினித் துறை, செவிலியத் துறை முதலிய பல்கலைக் கல்விக் கூடங்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சீரிய செயலாற்றல் மிக்க புத்தாயிரத்து இந்தியக் குடிமகன் என்ற விருது வழங்கி, அவர்களை ஊக்க, ஊட்டச் சத்தாக இளைய தலைமுறை யினருக்குக் காட்டி எழுச்சியூட்டக் கூடிய தனித்தன்மையான விழா எடுத்து பெரு மிதம் சேர்க்கிறார்.

இவ்வாண்டு ஆந்திராவின் மிகப் பெரிய நிருவாகியும், சேவையாளருமான வெங்கட் சங்கவள்ளி எம்.பி.ஏ. அவர் களுக்கும், எனக்கும் விருது அளித்துப் பெருமைப்படுத்தினார்.

எனக்கு இது மிகவும் சங்கடமாக அமைந்தபோதிலும், 26 ஆண்டுகளுக்கு முன் (1985 வாக்கில்) எனக்கு கோவை யில் மாரடைப்பு (Heart Attack) முதன் முதலில் நள்ளிரவில் திடீரென்று வந்த நிலையில், அவரது கே.ஜி. மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரு டைய அருமையான சேவை, கவனிப்பு கண்காணிப்பு மூலம் நான் மீண்டும் புதுவாழ்வு பெற்றேன் என்பதால் அவரது விருப்பத்தை அன்புக் கட்டளையாகவே ஏற்று மறுப்பேதுமின்றி ஒப்புக் கொண்டு சென்றேன் - இணையரோடு.

அவ்விழா எளிமை, இனிமை, விருந் தோம்பல், உற்சாகம், மாணவ சமுதாயத் தின் எடுத்துக்காட்டான கட்டுப்பாடு - இவைகளின் எடுத்துக்காட்டாக நடை பெற்ற விழாவாகும்!
கூட்டுக் குழு வெற்றி (Team Spirit) என்பது அன்னார் அருமைச்செல்வன் அசோக் பக்தவத்சலம் தலைமையில் அவரது சக கூட்டுப் பணித் தோழர்கள் உற்சாகத்துடன் தொண்டாற்றி மகிழ்ந் தனர்!

அதில் பாராட்டு விருது பெற்ற பெருந்தகையாளர் வெங்கட் சங்கவள்ளி அவர்கள் ஆந்திராவின் நிறுவனமான சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் வளர்ந்தோங்கிட மூல காரணமானவர்.

அவர் தந்த திட்டம்தான் இப்போது தமிழ்நாட்டில் நாம் கலைஞர் ஆட்சியில் மக்கள் உயிர் காக்கும் திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆந்திராவில் அறிமுகப்படுத்த காரணமானவராக கருத்துரை கூறியவர் என்று அறிமுகப் படுத்தினார்.

திரு. வெங்கட் அவர்கள் பேசும்போது ஒரு முக்கிய தகவலைக் கூறினார் - வியத்தகு செய்தி.

இந்த ஆம்புலன்ஸ் சர்வீஸ் துவக்கப் பட்டதிலிருந்து சுமார் 65,000 தாய்மார் களின் மகப்பேறு (பிரசவங்கள்) நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 40 லட்சம் பேர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டி ருப்பதாகவும் குறிப்பிட்டு, கேட்டவர்களை மிகவும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக் கினார்கள்!

அதற்கு முதலில் கிராமங்களில் உள்ள தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் கயிற்றுக் கட்டிலில் வைத்து பல மைல் தூக்கிச் சென்று, வழியிலேயே சரியான மருத்துவ வசதி கிட்டாத தினால் இறந்தவர்கள் பலர் என்பது இப்பொழுதும் மாற்றப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் - திருவாரூர் - மயிலாடு துறை சாலையில் உள்ள கங்களாஞ் சேரியிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் பக்கத்து மற்றும் சுற்று கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்த போது அங்கே பெரிதும் விவசாயிகளான அன்றாடம் பணிபுரியும் இருபாலர் -பெரிதும் தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதர - சகோதரிகள் நிறைந்த பகுதி என்ற நிலையில் நான் கண்ட காட்சி மனதை மிகவும் நெருடச் செய்தது!

கயிற்றுக் கட்டிலில் வைத்து பிரசவ வலியால் துடிக்கும் ஏழை - எளிய தாய்மார்களை திருவாரூருக்கோ, நாகூருக்கோ அழைத்துச் செல்லும் (தூக்கிச் செல்லும்) காட்சியைக் கண்டு, அந்தப் பகுதியில் எப்படியாவது ஒரு மகப்பேறு மருத்துவமனை தொடங்கிடத் திட்டமிட்டு, இன்று சோழங்கநல்லூரில் (திருவாரூர்) அந்த கங்களாஞ்சேரி - நாகூர் சாலையில் நிலத்தைப் பெற்று பெரியார் மருத்துவமனை பல படுக்கை வசதிகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது; (அரசுகளின் எந்த உதவியும் இதற்குக் கிடையாது; இன்னமும் கிட்டவில்லை என்றாலும்) சிறப்பாக நடைபெறுகிறது.

மருத்துவ வசதிகள் எங்கணும் சிறப் புடன் நடைபெற மருத்துவமனைகள் மட்டும் போதாது; மருத்துவ மனங் களும் தேவை.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்த கிராமப்புற இளைஞர்கள் (இருபால்) கூட, கிராமங்களில் போய் தங்கி மருத்துவ சேவை செய்ய முன் வர மறுக்கிறார்கள் - அரசு சம்பளம் விகிதம் தந்தாலும்கூட மருத்துவர்கள் கிடைப்பதில்லை.

இதற்கொரு திட்டம் 108 ஆம்புலன்ஸ் போன்று அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும் போலும்!

என்ன செய்வது! பணமே வாழ்க்கை என்றாகிவிட்டதால் குணம் விடை பெற்று, பணம் ஆட்சி செய்து, மக்களை பிணம் ஆக்கும் கொடுமை நீடிக்கிறது!

நிலைமை மாறும் - கலைஞர் போன்ற மனிதநேயர்கள் ஆட்சியில். அதற்கும் ஒரு விடையும் - விடியலும் கிடைக்கும் என்று நம்புவோமாக!

Monday, January 31, 2011

மேலவன்னிப்பட்டு வழிகாட்டுகிறது டாக்டர் கி.வீரமணி எடைக்கு எடை 10 ரூபாய் நோட்டு அளிப்பு

உரத்தநாடு ஒன்றியம் மேல வன்னிப்பட்டு என்னும் ஒரு சிறிய கிராமத்தில் நேற்று (30-1-2011) நான்கு விழாக்களை இணைத்து ஒரு பெருவிழா நடைபெற்றது.

தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம், டாக்டர் கி.வீரமணி நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழாக்களும், தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை 10 ரூபாய் நோட்டு அளிப்பும் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையே ஈர்த்த ஒன்று என்பதில் அய்யமில்லை.

தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் எடைக்கு எடை பரிசுப் பொருள்கள் குவிக்கப்பட்டதுண்டு. ஆனால், எடைக்கு எடை ரூபாய் நோட்டு அளிப்பது என்பது இதுதான் முதல் தடவை என்பதால் பொதுமக்களின் கவனம் அந்தப் பக்கம் சுழன்றது.

தங்களின் மதிப்புக்கும், அன்புக்கும், வழிகாட்டுதலுக்கும் உரிய தலைவருக்கு பரிசுப் பெருள்கள் கொடுப்பது என்பது இயல்பானதே என்றாலும், தந்தை பெரியார் அவர்களுக்குத் தொண்டர்கள் வகைவகையாக ஆசை தீரப் பொருள்களை வழங்கியது போல உலக வரலாற்றில் வேறு எவருக்கும் வழங்கப்பட்டதில்லை.

மாட்டு வண்டி, டயர், கைத்தறிப் போர்வைகள், அரிசி, வெல்லம், வெங்காயம், காய்கறி என்று விதவிதமாகப் பொருள்களை வழங்கினர்.

1957 நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சாவூரில் ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாடு ஒன்றை தந்தை பெரியார் நடத்தினார்.

அந்த மாநாட்டில்தான் எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கும் துலாபாரம் நடந்தது. கொடுக்கப் பட்ட தொகை ரூ. 7704 ஆகும். அந்தக் காலத்தில் இது பெரிய தொகையே! பல லட்சம் மக்கள் கூடிக் கண்டு களித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உணர்ச்சித் தீப் பிழம்பு வெடித்துக் கிளர்ந்த மாநாடு அது!

ஜாதி ஒழிப்புக்கான திட்டம் தந்த மாநாடு. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதி அகற்றப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அவகாசமும் அளிக்கப்பட்டது. அதற்குள் அரசமைப்புச் சட்டத் தைத் திருத்தாததால் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பகுதியைக் கொளுத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 26 (1957) அந்தப் போராட்டம் மநடைபெற்றது. 10 ஆயிரம் பேர் பங்கு கொண்டனர். 15 பேர்களைக் காவு கொண்டது.

பரிசுகளைப் பெற்றுக் கொண்ட தந்தை பெரியார் மகிழ்ச்சி அடைந்தாலும், தனது நிலை எத்தகையது என்பதில் தெளிவாகவே இருந்தார்.

ஒரு கால கட்டத்தில் என் கூட்டங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள், பாம்பைக் கூட்டத்தில் விட்டுக் கலைக்கச் செய்ய முயன்றவர்கள், கழுதைகளின் வாலில் வெடிகளைக் கட்டி, தீவைத்து கூட்டத்துக்குள் விரட்டி விட்டவர்கள் எல்லாம் உண்டு. அதே மக்கள் அல்லது அவர்களின் சந்ததியினர் இப்பொழுது பரிசுப் பொருள்களை வாரித் தருகின்றனர் என்றால் அதன் பொருள் என்ன?

தந்தை பெரியார் சிந்தித்தார் - சிந்தித்துப் பரிசுகளைக் கொட்டிக் கொடுத்த அந்தப்  பொது மக்களைப் பார்த்து ஒரு வினாவை எழுப்பினார்.

நான் என் கொள்கையில் பல்டி அடித்தேனா? அல்லது  உங்களுக்கு நல்ல புத்தி வந்தது என்று காட்டிக் கொள்கிறீர்களா? என்ற வினாவை எழுப்பி அதற்கு விடையும் தந்தார்.

நான் என் கொள்கையில் மேலும் மேலும், நாளும் நாளும் தீவிரம் அடைந்துதான் வருகிறேன். என்னிடம் சமரசம் இல்லை. அப்படியென்றால் உங்களுக்கு நல்ல புத்தி வந்து விட்டது என்று இப்பொருள்களை எனக்கு அளித்ததன் மூலம் காட்டிக் கொள்கிறீர்கள் என்றாரே பார்க்கலாம். அதற்கும் இந்நாட்டு மக்கள் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.

1938 நவம்பர் 13 இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்று பட்டம் கொடுக்கப்பட்ட மாநாட்டிலேகூட பெண்களே இந்தி எதிர்ப்புப் போரில் குதியுங்கள் என்று அழைப்புக் கொடுத்தார்.

நமது தலைவர்கள் நாம் அளிக்கும் பொருள்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வார்கள்தான்; அதற்காக புகழ் மயக்கத்தில் வீழ்ந்துவிடக் கூடியவர்கள் அல்லர்.
அது போலவே தமிழர் தலைவருக்குத் தங்கம், வெள்ளி உள்பட பொருள்களைக் குவித்துக் கொடுத்தாலும், அந்தப் பொருள்களை ஆக்க ரீதியான பணிகளுக்குத்தான் பயன் படுத்தி வருகிறார்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் வந்ததும், டில்லியில் பெரியார் மய்யம் நிலை கொண்டதும் இந்த அடிப்படையில் தான்.

மேலவன்னிப்பட்டில் கழகத் தொண்டர்களின் கடும் முயற்சியினால் எடைக்கு எடை அளிக்கப்பட்ட தொகை ரூபாய் 8 லட்சமும். எதற்குப் பயன்படும் என்பதை அந்த விழாவிலேயே அறிவித்தார்.

நம் நாட்டு அறிவியல் சாதனங்களான தொலைக் காட்சிகள், ஊடகங்கள் ஆகியவை அறிவியல் வளர்ச்சிக்கு, முற்போக்குச் சிந்தனைக்குப் பயன்படாமல், மூட நம்பிக்கைகளை, பிற்போக்குத் தனங்களை மக்கள் மத்தியில் திணிப்பவைகளாக உள்ளன.

இந்த அறிவு நாணயமற்ற  தன்மையிலிருந்து மக்களை மீட்க, மூட நம்பிக்கைகளை ஒழிக்க, சமத்துவச் சிந்தனைகளைத் தட்டி எழுப்பிட பெரியார் தொலைக் காட்சி உருவாக்குவது எனும் திட்டம் கழகத்திடம் உண்டு.

அந்தத்  திசையில் நாம் முக்கியமான அடியை எடுத்து வைக்க மேலவன்னிப்பட்டில் அளிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் நிதி பயன் படுத்தப்படும் என்று தமிழர் தலைவர் வெளியிட்ட அறிவிப்பானது - உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள், தமிழர்களுக்கு அப்பாற்பட்ட வேறு நாடுகளைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மனித நேய மாண்பாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை, ஆர்வ அலைகளைத் தட்டி எழுப்பிடும் என்பதில் அய்யமில்லை.

ஆனாலும் இந்தத் தொகையெல்லாம் கூட யானைப் பசிக்குச் சோளப் பொரி போன்றதுதான். ஒரு தொலைக் காட்சி தொடங்குவது என்றால் இந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் நிதி தேவைப்படும்.

விழாவில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு ராஜகிரி கோ. தங்கராசு அவர்கள் குறிப்பிட்டது போல, மேலவன்னிப்பட்டு தொடங்கிக் கொடுத்ததை மற்ற மற்ற பகுதிகளிலும் தொடர வேண்டியது அவசியமாகும்.

பொருள் - பொருள் பொதிந்த வார்த்தையாகும். அதற்கான பொருளைக் கொடுத்த வன்னிப்பட்டு கிராமத்தைப் பாராட்டுகிறோம்.

பகல் - இரவு பாராமல் உழைத்த கழகக் கண்மணிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
http://viduthalai.in/new/page-2/2487.html

Thursday, October 7, 2010

பிள்ளை வளர்ப்பும் தென்னை வளர்ப்பும் வாழ்வியல் சிந்தனைகள் -கி.வீரமணி

குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புற வாய்ப்பில்லாதவர்கள் என்று பிள்ளைகளைப்பற்றி வள்ளுவர் தம் குறளில் எழுதினார்!

இன்றும் குழந்தைகளோடு நாம் பழகும்போதும், அவர்தம் மழலை அமுதை நாம் உண்ணும்போதும் பிறகு அதுபற்றி எண்ணும்போதும் எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.

தஞ்சை வல்லத்தில் குழந்தைகளுடன் நான்கு நாள்கள் இருந்தபோது எத்துணை இன்பம்! எவ்வளவு மகிழ்ச்சி!! அடடா எழுத்தில் வடித்திட முடியாதே!

ஆனால், தற்போதுள்ள சமுதாயச் சூழலில் படிப்பு வளர வளர பாசம் குறைந்து வருவதோடு - பெற்றோர்களிடம்கூட பெரியவர்களானவுடன் உறிஞ்ச வேண்டியவைகளை உறிஞ்சிக்கொண்டு, பிறகு தூக்கி வீசிடும் நன்றி (கெட்ட) நாயகர்களாக, நாயகிகளாக வாழும் அவலம் நம் குடும்பங்களில் அன்றாடக் காட்சிகளாக அரங்கேறிக் கொண்டே இருக்கிறது!

தென்னையை வைத்தால் இளநீறு

பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு!

என்பது வெறும் திரைப்படப் பாடல் அல்ல!

அங்கிங்கெனாதபடி எங்கெங்கு காணினும் அவலக் காட்சிகள்!

ஆசையோடு, வாரி அணைத்தவர்களுக்குக் கிடைக்கும் கடைசி காலப் பரிசு, அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளாகி விடுவதோடு நில்லாமல், அவர்கள் மனம் சிதறு தேங்காய்போல சிதறிச் சில்லுகளாக நொறுங்கிவிடும் கோரக் காட்சிகளை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்!

சொல்லி அழக்கூட முடியாத சோகப் படலத்தின் உச்சத்தில் எரிதழலாய் மாற்றப்பட்டு விடுகின்றனர்!

பெரிய நிலைக்குத் தம் பிள்ளைகள் வரவேண்டும் என்பதற்காக அந்தப் பெற்றோர்கள் செய்த அரும் பெரும் தியாகங்கள், பொய்யாய், பழங்கதையாய், கனவாகிப் போகின்றன ஒரு நொடிப் பொழுதில்!

மனிதம் ஆள வேண்டிய இளம் வாலிப உள்ளங்களில் மமதையும், மடை திறந்த வெள்ளம் போன்ற சுயநலமும் குடியேறி கோலோச்சி வரும் கொடுமையால் பாதிக்கப்பட்ட முதியோர், ஏன்தான் வாழ்கிறோம்; எப்போது நமக்கு முடிவு வருமோ என்று நொந்து நூலாகி வெந்து சாம்பல் நிலைக்கு சாய்ந்து கொள்ளுகின்றனர்!

...காடுவரை பிள்ளை என்பதெல்லாம் அந்தக் காலம்; நம்மை (சுடு) காட்டுக்கு அனுப்ப முந்துறும் பிள்ளைகளே - முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாள் கழித்துப் பெற்ற பிள்ளைகள்!

எனவே நல்ல வாழ்வியல் - பகுத்தறிவு சிந்தனையாளர்களே! உங்கள் குடும்பத்தவரை நம்புவதைவிட, நெருக்கமான உயிர்காக்கும் தோழர்கள், தோழிகளோடு வாழுங்கள் - உங்கள் வாழ்விணையர்களையே பெரிதும் நம்புங்கள்.

இறுதிவரை உங்கள் கால்களில் நீங்கள் நில்லுங்கள் - உங்களது பிள்ளைப் பாசம், பரிவுக்கும்கூட உச்சவரம்பு தேவை- இந்தப் புது யுகத்தில் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ற முன்னேற்பாட்டுடன் முதுமையை சந்தியுங்கள்!

தொண்டறம் மூலம் மகிழ்ச்சியை அடையுங்கள். ஊர்நலம், உலக நலம் ஓம்புவது உங்கள் வழியானால், உங்களைப் பாதுகாக்க, உங்கள்மீது பாசம் கொட்ட கோடிக் கைகள் உண்டு என்பதை மறவாதீர்கள்!

நல்ல நண்பர்கள் - கைம்மாறு கருதாத நட்பாளர்கள் - உடுக்கை இழந்தவன் கைபோல உதவுவதற்கு எப்போதும் முன்வருபவர்கள்; அவர்களை அடையாளம் கண்டு அபயம் தேடத் தவறாதீர்கள்!

Wednesday, October 6, 2010

ஓட்டுப் பொறுக்காத தலைவரிடம் மோத வேண்டாம்-மருத்துவர் ராமதாசுக்கு பதிலடி

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு.ச. ராமதாசு தேவையில்லா மல் திராவிடர் கழகத் தலைவரைச் சீண்டுகிறார் - வம்புக்கும் இழுக்கிறார்.
அவ்வப்போது விரக்தி நோயினால் அவர் வார்த்தைகளைக் கொட்டும் பொழுதெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் உள்பட பல வகையான மருத்துவ உதவிகளை நாம் செய்திருந்தும், குணப்படுத்தப்பட முடியாத அளவுக்கு விஷயம் முற்றிப் போய்விட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஜாதிவாரிக் கணக்கெடுப்புப்பற்றி அவர் பேசியதாக வெளிவந்துள்ள செய்தியாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லாததுபோல பா.ம.க.வினர் கற்பனை செய்து கொண்டு, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சி செய்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதில் எவ்வித கற்பனையும் இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை. இதை நாங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறோம்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியைப்போல, நானும் இந்த அரசை எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டு மட்டும் இருக்க முடியாது.
மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களை பா.ம.க. தொடர்ந்து நடத்தும், அதைத்தான் முதல்வர் கருணாநிதி யால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று சென்னை சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் ச. ராமதாசு பேசியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதலமைச்சர் கலைஞர் தெளிவாகவே தெரிவித்துவிட்டார். மத்திய அமைச்சரவையே ஒப்புக்கொண்டு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதில் மருத்துவருக்கு என்ன குழப்பம் என்று தெரியவில்லை! தேர்தல் கூட்டணிக் குழப்பம் மேலோங்கிப் போயிருப்பதால், தாம் இருப்பதைக் காட்டிக் கொள்ளவேண்டும் என்ற தடுமாற்றத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார் போலும்!
கோபாலபுரத்துக்கும், போயஸ் கார்டனுக்கும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அலைவது என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் இனிமேல் இந்த வகையில் அலைய மாட்டார் என்று எவரும் அவசர முடிவுக்கு வந்துவிடவேண்டாம். கடந்த காலத்தில் அவரின் கால்கள் எப்படி எப்படியெல்லாம் அலைந்தன - வாய் எப்படி எப்படியெல்லாம் பேசியது என்பது அனைவருக்கும்தான் தெரியுமே!
பிற்படுத்தப்பட்டோர்பற்றிய ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது - தமிழ்நாட்டைப் பொறுத்து மட்டும் அமைந்துவிடக் கூடியதல்ல. அகில இந்திய அளவில் தேவைப்படக்கூடியதாகும்.
இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்குமேல் போகக்கூடாது என்ற ஒரு நிலை உச்சநீதிமன்றத்தின் முட்டுக்கட்டையால் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் என்று காட்டப்படவேண்டிய நெருக்கடி உள்ளது.
ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையில் அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பது - மருத்துவர் அவர்கள் ஆரம்பப்பள்ளிக்கூட நிலையிலேயே அரசியலில் இருக்கிறார் என்பதற்கான அடையாளமே!
மத்திய தேர்வாணையம் இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் மிக மோசமான குளறுபடிகளைச் செய்திருக்கிறது. திறந்த போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குக் கொண்டு சென்று, திறந்த போட்டி என்பது உயர்ஜாதியினருக்கே தாரைவார்ப்பு என்ற நிலை நிலவி வருகிறது. உச்சநீதிமன்றமும் இந்தச் சட்ட விரோத செயலுக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டது.
மருத்துவரின் மகன் மத்திய அமைச்சரவையிலே இருந்த போதும் இது நடந்திருக்கிறது.
இந்த உயிர்நாடி, அடிப்படைப் பிரச்சினைகளில் எல்லாம் கடுகளவு கவனம் செலுத்தாதவரா திராவிடர் கழகத் தலைவரை விமர்சிப்பது?
இந்தப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் - வீதியில் நின்று தொடர்ந்து போராடுவதும் திராவிடர் கழகமும், அதன் தலைவர் வீரமணி அவர்களுமே!
திராவிடர் கழகத் தலைவர் இந்த அரசை எப்போதும் புகழ்கிறார் என்று குற்றஞ்சாற்றுகிறார். புகழ்வது உண்மைதான். எந்த அடிப்படையில்? கருத்தைச் செலுத்திக் கவனிக்க வேண்டாமா?
இந்த ஆட்சியிலேதானே அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் செய்யப்பட்டது! இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆட்சியில்தானே தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தரப்பட்டது? தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் செய்யப்பட்டது - பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள் உண்டாக்கப்பட்டது! தீட்சதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவரப்பட்டது - எவ்வளவுக் காலத்து ஆதிக்கம் நொறுக்கப்பட்டது - வடலூர் வள்ளலாரின் சத்திய ஞானசபையிலிருந்து பார்ப்பன அர்ச்சகன் வெளியேற்றப்பட்டது இந்த ஆட்சியில்தானே!
இந்த ஆட்சியில்தானே மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், அருந்ததியினருக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது! மருத்துவருக்குத் தேவைப்பட்டால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்த வள்ளல் கலைஞர் என்பார், தனியே நாற்காலி போட்டு இவர்தான் முதலமைச்சர் என்பார்.
தனது சுயநலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் இதனையே கூட, வேறு மாதிரி திரித்துக் கூறுவார். இரட்டை நாக்கு என்று ஆரியத்தைப்பற்றிதான் அண்ணா எழுதினார்.
அது மருத்துவருக்கும் பொருந்துகிறதே, என்ன செய்ய...?
அரசுகள் வரலாம், போகலாம்; சாலைகள் போடலாம், தெருவிளக்குகள் போடலாம்; ஆனால், இந்த அடிப்படை சமூகக் கலாச்சார கட்டுமானத்தில் கை வைக்க யார் துணிந்தார்கள்? இந்தப் பிரச்சினைகளில் மருத்துவர் ராமதாசு அவர்களின் பங்களிப்பு என்ன? காதுடைந்த ஊசி முனை அளவுக்காவது உண்டா?
இந்த அடிப்படைப் பணிகள் கலைஞர் ஆட்சியில் நடைபெற்று இருப்பதற்கு திராவிடர் கழகமும், அதன் தலைவரின் அழுத்தமான பலமும், ஆதரவும் முக்கியமானவையல்லவா!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஒரு பார்ப்பன அம்மையார் துணைவேந்தராக நியமிக்கப்பட்டாரே - அங்கு பணியாற்றிய சிறப்புத் தகுதி வாய்ந்த தமிழினப் பேராசிரியர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனரே - மருத்துவர் ராமதாசு மலைவாசம் சென்றிருந்தாரா? ஒரே ஒருவரி விமர்சனம் உண்டா? திராவிடர் கழகத் தலைவரும், விடுதலையும்தானே வீறுகொண்டு எழுந்தது?
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடைபாதைக் கோயில்களைத் தமிழ்நாடு அரசு அகற்றவேண்டும்; இல்லையேல் திராவிடர் கழக இளைஞரணியினர் சம்மட்டியோடு புறப்படுவார்கள் என்று அறிவித்தது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள்தானே!
பெரியார், பெரியார் என்று வார்த்தையளவில் கூறினால் மட்டும் போதுமா? அவரின் அடிப்படைக் கொள்கை - பிரச்சினைகள் பக்கம் எப்பொழுதாவது மருத்துவர் தலை வைத்துப் படுத்ததுண்டா?
சரி, ராமதாசு அவர்கள் கலைஞர் அவர்களைப்பற்றி மனம் போன வாக்கில் விமர்சிக்கிறாரே - அவரின் அருமை மகனுக்கு கலைஞர் அவர்கள் ஒரு ராஜ்யசபை சீட்டுக் கொடுத்திருந்தால், எல்லாமே தலைகீழாக மாறியிருக்குமே! மாறாக எப்படி எப்படியெல்லாம் துதி பாடியிருப்பார்?!
தமிழ்நாட்டில் மேலவை கொண்டுவரும் சட்டசபை தீர் மானத்துக்கு ஆதரவு கொடுத்ததே... தன் மகனுக்கு மாநிலங் களவையில் இடம் கிடைக்கச் செய்வதற்கே என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டவர் - கொள்கைகள்பற்றியும், சமூகநீதிபற்றியும் பேசலாமா?
சாதாரண மக்கள் மத்தியிலும் மருத்துவர் ராமதாசு நடத்தும் அரசியல் கேலிக்கும், பரிகாசத்துக்கும் ஆளாகிவிட்டதே - அதன் விளைவுதானே கடந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள்!
அதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையே! இன்னும் கெட்டுப் போகிறேன் - என்ன பந்தயம் கட்டுகிறாய்? என்று சொல் பவரிடம் ஏன் பந்தயம் கட்டவேண்டும்? அவர்தான் தானாகவே தோற்கப் போவதாக முடிவு எடுத்துவிட்டாரே!
அரசியலில் யாரிடம்தான் கொள்கை இருக்கிறது - நாங்கள் உள்பட என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர், ஓட்டுப் பொறுக்க அவசியம் இல்லாத திராவிடர் கழகத்தோடு மோதவேண்டாம்!
கண்ணாடி கல் மலையோடு மோதினால், நட்டம் கண்ணாடிக்கே தவிர, கல் மலைக்கு அல்ல.
- கலி. பூங்குன்றன்
பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்.

Tuesday, September 28, 2010

சீர்காழியைக் குலுக்கிய சேனை!-திராவிடர் கழக மண்டல மாநாடு

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம்
சீர்காழியில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. உடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழக முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர் (சீர்காழி, 27.9.2010).
சீர்காழி மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளிக்கப்பட்டது. தராசில் தமிழர் தலைவர் அமர்வதற்குமுன் மாநாட்டு வரவேற்புக் குழுவினரும், பல்துறையைச் சேர்ந்த பொதுமக்களும் சால்வை போர்த்தி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். தராசின் ஒரு தட்டில் தமிழர் தலைவர் அமர, மறுதட்டில் ரூபாய் நாணயங்கள் கொட்டப்பட்டன. சம அளவு வந்தபோது, தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்று பொதுமக்கள் முழக்கமிட்டனர். அதன் தொகை ரூபாய் 15 ஆயிரம் ஆகும். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு இத்தொகை அளிக்கப்படும் என்று, மாநாட்டில் கழகத் தலைவர் அறிவித்தார்.

திருஞானசம்பந்தன் ஞானப்பால் குடித்தான் என்ற மூட நம்பிக்கை கொழுத்த சீர்காழியில் திராவிடர் கழகத்தின் கருஞ் சட்டைச் சேனை - பேரணியாய் அலையடித்து பகுத்தறிவுப் பேரணியாய்ப் பிரவாகித்தது.
மாலை 5 மணிக்கு சீர்காழி தென்பாதியி லிருந்து மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி - மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோமல் மு. நடராசன் தலைமை யிலும், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், கழகப் பொதுக் குழு உறுப்பினர் வீ. மோகன் ஆகியோர் முன்னிலையிலும் புறப்பட்டது.
புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவ மனை சாலை, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக மாநாடு நடை பெற்ற பழைய பேருந்து நிலையத்தை வந் தடைந்தது. பேரணி தொடங்கப்பட்ட இடத் திலும், பேரணி அணிவகுத்து வந்த பாதை களின் இருபுறத்திலும் ஏராளமான பொது மக்கள் கூடிநின்று, பேரணியில் இடம்பெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
மூட நம்பிக்கைகளைச் சுட்டு எரிக்கும் முழக்கங்களைக் கழகத் தோழர்கள் வழி நெடுக ஒலித்து வந்தனர்.
அலகு குத்தி கார் இழுத்தல்
சாமி சக்தியால்தான் முதுகில் அலகு குத்தி கார் இழுக்க முடியும் என்ற மூட நம்பிக்கையின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் கழகத் தோழர்கள் திருக்குவளை கவியரசன் (திருவாரூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர்), தஞ்சைத் தோழர்கள் தேவா, ராஜா ஆகியோர் முதுகில் அலகு குத்தி கடவுள் மறுப்பு வாசகங்களை முழங்கிய வண்ணம் அம்பாசிடர் காரை இழுத்து வந்த காட்சியைக் கண்டு பொது மக்கள் அதிசயப்பட்டனர்.
அலகுக்காவடி
ஜெயங்கொண்டம் பெரியார் பெருந் தொண்டர் கே.பி. கலியமூர்த்தி, உரத்தநாடு வினோத், கண்கொடுத்தவனிதம் செந்தில் குமார், தஞ்சை ராஜேஷ் ஆகியோர் அலகுக் காவடி எடுத்து, மூட நம்பிக்கை ஒழிப்பு கருத்துகளை முழங்கி வந்தனர்.
அரிவாள்மீது ஏறி நின்று அசத்தல்!
கரம்பக்குடி தோழர் முத்து சில்லத்தூர் சிற்றரசு குழுவினர், பளபளக்கும் கூரிய அரிவாள்மீது ஏறி நின்று, கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று ஓங்கி ஒலித்தனர்.
திருவாரூர் மாவட்ட கழக மகளிர் பாசறை அமைப்பாளர் சி. செந்தமிழ்ச்செல்வி தலைமை யில் மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்தனர். தீச்சட்டி இங்கே - மாரியாத்தாள் எங்கே என்று அவர்கள் முழக்கமிட்டு வந்த காட்சியை பெண்கள் பார்த்து வியந்தனர். தோழியர்கள் சரசுவதி, சைனம்பூ, சூரனூர் அஞ்சம்மாள், சூரனூர் இராசாங்கம் ஆகியோர் தீச்சட்டி ஏந்தி வந்தனர்.
திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், மாநில மாணவரணி செயலாளர் ரெ.ரஞ்சித் குமார், தோழர்கள் திராவிட எழில், சாமி. அரசிளங்கோ, பர்தீன், ராஜேஷ் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து வழிநடத்தி வந்தனர்.
கட்டுக்கோப்போடு போக்குவரத்திற்கு இடையூறின்றி இருவர் இருவராக அணி வகுத்து தலைமைக் கழகம் அளித்த கொள்கை முழக்கங்களை பூமியதிர முழங்கி வந்த நேர்த்தியைக் கண்டு பொதுமக்கள் பாராட் டினர்; இளைஞர்கள் எழுச்சி பெற்றனர்.
சீர்காழியில் திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நடைபெற்ற மாபெரும்
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி காட்சிகள் (27.9.2010)

சீர்காழியில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர் (27.9.2010)

விடுதலை :28/09/2010
http://www.viduthalai.periyar.org.in/20100928/news26.html

Sunday, September 26, 2010

ஆசிரியர் விடை அளிக்கிறார் -கேள்வி பதில்கள் -வைக்கம் போராட்டத்தில் காமராசர் கலந்துகொண்டாரா?


கேள்வி: தர்மம்தான் எக்காலத்திலும் வெற்றிபெறும். அதர்மம் வெற்றி பெறாது என காஞ்சி ஜெயேந்திரர் கூறியுள்ளதுபற்றி தங்கள் கருத்தென்ன?

பதில்: ஆம். அதிலென்ன சந்தேகம்? கொலை வழக்கில் முதல் குற்றவாளி இவர்; 33 சாட்சியங்களுக்கு மேல் பிறழ் சாட்சிகளாக (பிஷீவீறீமீ கீவீஸீமீ) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி உள்பட மாறியது, இவர் செய்த தர்மத்தின் பயன் தானே! தர்மத்தின்விலை மதிப்பு என்னவோ?

கேள்வி: வைக்கம் போராட்டத்தில் காமராசர் கலந்து கொண்டு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் என்பது உண்மையா? - இரா. தமிழன்பன், சாத்திப்பட்டி

பதில்: ஓர் இளைஞராக இருந்தபோது அவர் கலந்துகொள்ளச் சென்றார். பிறகு உடனே திரும்பி விட்டார் என்பதுதான் தகவல். அப்போது அவர் ஒரு காங்கிரஸ் தொண்டர்.

கேள்வி : அயல்நாட்டு _ அயல் மாநில அரசியல் பிரமுகர்கள் எல்லாம் தங்கள் பாபங்களைக் கழுவிக் கொள்ள தமிழ்நாட்டுக் கடவுள்களைத் தேடி வருவது ஏன்/ அவர்கள் நாட்டுக் கடவுள்கள் என்னவாகின? - நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: அங்குள்ள கடவுளுக்கும் ஊழலில் பங்கு வாங்கியிருக்கும் போலிருக்கிறது! இங்குள்ளவர்கள் அவர்களிடமிருந்து இனிமேல்தான் பங்கு வாங்கு வார்கள் _ அவர்கள் தட்சணை, நன்கொடைகள் மூலம்!

கேள்வி : விநாயகர் சதுர்த்தி பற்றிய விளக்கத் துண்டு அறிக்கைகளை கழகத் தோழர்கள் விநியோகம் செய்தமைக்காக சில ஊர்களில் கழகத் தோழர்கள்மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதே? - கு. மனோகரன், திண்டுக்கல்

பதில்: வல்லபை கணபதி என்ற பெண்ணுறுப்பில் துதிக்கை விட்ட கடவுள் _ கணபதி சிலை இருப்பதை யெல்லாம் (தருமபுரி மத்தூர் கோயிலில்) நார் நாராய்க் கிழித்தெறிய நல்வாய்ப்பு. இதன்மூலம் பக்தர்களும், அவர்களைப் பாதுகாத்த காவல்துறை கறுப்பு ஆடுகளும் நாக்கைப் பிடுங்கி சாவது உறுதி! அதை எதிர்பார்க் கிறோம். முடிவு முத்தாய்ப்பாக வரும்!

கேள்வி : ராஜீவ்காந்தியின் பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சென்னைப் பொது மருத்துவ மனைக்குப் பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று நீங்கள் அறிக்கை கொடுத்தீர்களா? - வ.மு. சிவனேசன், சென்னை-40

பதில்: காமாலைக் கண்ணனுக்கு கண்டது எல்லாம் மஞ்சள்தானே!
பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது அம் மருத்துவமனை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டபோதே நாம் எழுப்பிய வேண்டுகோள் என்பது விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

கேள்வி : நபிகள் நாயகம் விழாவில் திராவிட இயக்கத் தவர்கள் கலந்து கொள்வது எந்த அடிப்படையில்? - அ. தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: அவர் ஒரு மனிதநேயர் -_ 1400 ஆண்டுகளுக்கு முன்பே சிலை வணக்கத்தை ஒழித்தவர்; விதவைக்கு மறுமணம் என்பதை நடத்திக் காட்டியவர்; சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தியவர் என்பதால்.

கேள்வி : அண்ணா பெயரில் திமுக (அதிமுக). ஆனால், அண்ணா பிறந்த நாளில்கூட வெளியில் வந்து அண்ணா சிலைக்கு மாலை போடுவதில்லையே ஜெயலலிதா? - அ.க. கலைமதி,, உதகை

பதில்: சிலைக்கு மாலை போட்டால் அது நல்லதல்ல என்று ஜோசியர்கள் கூறியிருக்கிறார்களாம் என்று ஒரு தோட்டத்துக் குருவி கூறுகிறது. அண்ணா பெயரில் அவ்வளவு மரியாதை.

கேள்வி : காவிரி நீரைக் கிடைக்காமல் செய்தவர்தான் கருணாநிதி என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளாரே? - சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

பதில்: தேர்தல் நெருங்குகிறதே! பின் இப்படிப் பேசினால் தானேஅவர் பலரது கவனத்தை ஈர்க்க முடியும்? பிரதமர் வி.பி. சிங் நடுவர் மன்றத்தை அமைக்கச் செய்ததே அவரல்லவா!

கேள்வி: தங்களுடைய அறிக்கையில் இப்பொழு-தெல்லாம் திருக்குறள் அதிகமாக எடுத்துக்காட்டப்-படுவதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா? - மு. அகம்மது, நாகை

பதில்: இயல்பான சிந்தனைதான்; இப்பொழுது மட்டும் என்பதில்லை.

கேள்வி: முற்போக்குவாதிகள்கூட துரதிர்ஷ்ட வசமாக என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்துகிறார்களே? -


பதில்: தவறுதான்; குருட்டுதனம் என்பது அதிர்ஷ்டம் என்பதன் பொருள். - துர்+அதிர்ஷ்டம் _ எதிர்பொருள் அதற்கு. அதை இப்படித் தவறாகப் பயன்படுத்தலாமா?
வி. அம்மணி, வாசுதேவநல்லூர்

Friday, September 24, 2010

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி -குற்றத்தின் மூலவேர் எங்கே?

கேரள மாநிலம் ஆலப்புழை அருகே சேத்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜோன் என்பவர். இவர் ஓட்டல் ஒன்றில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுமா. இவர் வயது 38. இவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவலக எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்குமுன்பு வேலையில் இருந்து இவர் விலகிவிட்டாராம்!
ஜோன் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் 3 ஆவது குழந்தை சஜின். பிறந்து 8 மாதங்களே ஆகிறது. இந்தக் குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருப்பானாம்!
இது இந்தத் தாய்க்கு (சுமாவுக்கு) எரிச்சலை ஏற்படுத்தியதாம்! தினமும் குழந்தை அழுவதும், சத்தம் போடுவதும் இந்தத் தாயை ஆத்திரமடையச் செய்ததாம்!
சம்பவ நாள் அன்று மற்ற 2 குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டன! கணவர் ஜோன் பணிக்குப் போய்விட்டார். வீட்டில் இந்தப் பெண்மணி மட்டும் தனியே இருந்தார்; அப்போது குழந்தை சஜின் அழத் தொடங்கியது. இதனால் கோபமடைந்த சுமா, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார். என்றாலும், அதன் அழுகை நின்ற பாடில்லை. இதனால் சுமா கோபத்தில் வெறி பிடித்தவராக மாறினார்!
பெற்ற குழந்தை - பிஞ்சு குழந்தை என்றுகூட பாராமல், வீட்டிலிருந்த வாஷிங்மெஷினில் சஜினைப் போட்டு அமுக்கினார். இதனால் குழந்தை மேலும் கதறியது. ஆனால், நெஞ்சை கல்லாக்கிக் கொண்ட சுமா, துடிக்கத் துடிக்க தனது குழந்தையை வாஷிங்மெஷினில் மூழ்கடித்தாராம்! இதில் சிறிது நேரத்திலேயே குழந்தையின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.
குழந்தையைக் கொலை செய்த பின்பு வீட்டை விட்டு வெளியே வந்த சுமா ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு சேத்தலை காவல் நிலையம் சென்று சரணடைந்தாராம்!
போலீசாரின் விசாரணையில் கடந்த 4 மாதங்களுக்குமுன்பு (இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால்) தனது கை நரம்பை தானே அறுத்துத் தற்கொலைக்கு முயன்றவராம்!
இச்செய்தியைப் படிக்கும் மனிதாபிமானம் உள்ள எவருக்கும் கண்களில் நீர் வடியத்தான் செய்யும்!
நோய்நாடி நோய் முதல் நாடவேண்டும் என்ற அறிவுரைப்படி, இதற்கு மூலகாரணம் கோபமா? ஆத்திரமா? பாதிக்கப்பட்ட மனநிலையா? என்று எளிதில் முடிவுக்கு வர இயலாது! மூன்று பிள்ளைகளைப் பெற்ற தாய்க்கு அவர்களை சரிவர பராமரிக்க முடியாத அளவுக்கு - இவ்வளவுக்கும் வசதி வாய்ப்புள்ள உயர் நடுத்தர குடும்பம் அது! இல்லாவிட்டால் வாஷிங் மெஷின் அவ்வீட்டில் இருக்குமா?
வாஷிங் மெஷின் இதற்காகவா பயன்படுவது? எவ்வளவு கொடூரமான தாயும்கூட இப்படி ஒரு கொடுஞ்செயலை மனதறியச் செய்ய முன்வரமாட்டார்! பாதிக்கப்பட்ட மனநிலையா? எல்லையற்ற கோபமா? எரிச்சலா? எளிதில் விடை காண இயலாது.
அற்பத்தனமான காரணங்களுக்காக முன்கோபத்தால் இப்படிப்பட்ட கொலைகள் திடீர் என்று க்ஷண நேரத்தில் நடந்துவிடுவதுண்டு!
1976 ஆம் ஆண்டு மிசாவில் நாங்கள் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது எங்களிடம் சுமுகமாக பழகிய ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர், மிக நன்றாக திருக்குறள்பற்றி என்னிடம் விளக்கம் கேட்டு மிக நீண்ட நேரம் உரையாடுவார். சுமார் 55 வயதுள்ளவர். பண்புடன் நடந்துகொள்வார்.
எனக்கு மிகவும் ஆச்சரியம்! இவர் எப்படி ஆயுள் தண்டனை கைதி ஆனார் என்று அறிய விருப்பம்; ஒரு நாள் அவரிடமே கேட்டேன். நீங்கள் குறளில் இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறீர்களே, பின் எப்படி குற்றம் புரிந்தீர்கள்? எப்படி ஆயுள் தண்டனை கைதியானீர்கள்? என்று.
அவர் சொன்னார், எல்லாம் க்ஷண நேர அதிதீவிர ஆத்திரம் பீறிட்ட கோபத்தினால் ஏற்பட்ட கொடுமை. மனைவிபற்றி தாறுமாறாகப் பேசியவன்மீது ஓங்கிப் பாய்ந்து அடித்தேன்; அவன் இறந்து போனான். அது கொலையாயிற்று - திட்டமிட்டு நடந்திராத குற்றம் அது! அதன் பிறகு சிறையில் வந்த பிறகுதான் திருக்குறள் - பொறையுடைமை எல்லாம் படித்தேன்! இப்போது ஞானம் பெற்றுள்ளேன். என்ன செய்வது அய்யா? காலங்கடந்த ஞானோதயம். கணமேனும் காத்தல் அரிதான சினத்தின் சீற்றம் என்றார்!
மேற்காட்டிய தாய்க்கு கோபமா? மனநிலை கெட்டுப் போனதாலா? பொறுமையற்ற நிலையா? மூன்று பிள்ளைகளைப் பெற்றதாலா? இப்படிப்பட்ட மன நோயாளிக்கு அவரது துணைவர் சரியான சிகிச்சை அளிக்கப் போதுமான முயற்சிகளை எடுக்காததாலா இந்தத் துன்பஇயல் கொடுமை நிகழ்வு?
எளிதில் விடை காண முடியாது!
பெற்றால் மட்டும் போதாது; பேணி வளர்க்கவும், வாய்ப்பும் உருவாகவேண்டும். பல தாய்கள் வறுமையால் நல்ல தங்காள் ஆகிறார்கள் - ஆனால், இங்கே வறுமையில் வளமை இருந்தது என்றாலும், வளமையின் வாழ்வைப் புலப்படுத்தும் கருவியே கொலைக் கருவியாகி விடுவதா?
என்னே மானிட சமூகத்தின் பாழ்பட்ட பகுத்தறிவு! இக் கொடுமைக்குத் தீர்வுதான் என்ன?

weather counter Site Meter