Pages

Search This Blog

Showing posts with label நவராத்திரி. Show all posts
Showing posts with label நவராத்திரி. Show all posts

Tuesday, October 19, 2010

கலாச்சாரக் காவலர்கள் எங்கே போனார்கள்?-நவராத்திரி

ஒன்பது நாள்கள் நடைபெறும் நவராத்திரிப் பண்டிகை -மகாராஷ்டிரத்தில் குறிப்பாக மும்பையில் எந்தத் தரத்தில் நடைபோடுகிறது? அந்த ஒன்பது நாள்கள் இரவிலும் நடைபெறும் ஒழுக்கக்கேடுகள் பற்றி தகவல்கள் வெளி வந்துள்ளன. இவ்வாண்டு மட்டுமல்ல; கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாகவே ஆபாசமான, அபாயமான செய்திகள் புள்ளி விவரங்களுடன் வெளிவந்தும், அதனைத் தடுத்து நிறுத்த பெற்றோர்களும், பக்த சிரோன்மணிகளும் முன்வரவில்லை என்பது வெட்கக் கேடாகும்.

இரவு நள்ளிரவு வரை இந்த விழா கொண் டாடப்படுவதால் வாலிப வயதுள்ள ஆண்களும், பெண்களும் இஷ்டத்திற்குக் கேளிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற நாள்களில் எல்லாம் தங்கள் வீட்டுப் பெண்கள் அந்திப் பொழுதுக்குள் வீட்டுக்கு வர வேண்டும் என்று வாசலில் காத்துக் கிடக்கும் பெற்றோர்கள்கூட, நவராத்திரி பண்டிகை நடக்கும் அந்த ஒன்பது நாள்களில் தங்கள் பெண்களை நடுநிசி வரை அனுமதித்து விடுகின்றனராம்.

கடந்த 2009ஆம் ஆண்டில் இந்த நவராத்திரி யின் போது ஆண்களும், பெண்களும் வெகு நெருக்கமாகப் பழகிக் கொள்ள அனுமதிக்கப் படுவதால், வாய்ப்பு அளிக்கப்படுவதால் ஏற்பட்ட பின் விளைவுகள் என்ன?

இந்த ஒன்பது நாள்களில் கர்ப்பம் அடைந்த பெண்களின் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவித்தனர். தசராவுக்கு (நவராத்திரிக்கு)ப் பிறகு மூன்று மாத காலகட்டத்தில் மருத்துவமனைகளில் கிளீனிக்கு களில் நடந்த கருக்கலைப்புகளைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப்பட்டது.

16 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களே இதில் அதிகம்.

இந்த ஆண்டு (2009) தசராவில் அகமதாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் (ஊடினேடிஅள) வாங்குகிறார்கள்; இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்குப் பெண்களுக்குக் கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகம்

இவ்வளவுத் தகவல்களையும் தெரிவித்தது விடுதலை ஏடு அல்ல. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (25.11.2009) என்ற நாளேடாகும்.

இவ்வாண்டும் (2010) அதே நிலை மும்பையில் நவராத்திரியின் போது நடைபெற்ற அவலங்கள் வெளிவந்துள்ளன.

காதலர் தினம் கொண்டாடப்படக் கூடாது! அது கலாச்சாரச் சீரழிவு என்று சிலிர்த்துக் கொண்டு எழும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், இந்து முன்னணிக் காரர்கள் இந்த இந்துமதப் பண்டிகையான நவராத்திரியின் பெயரால் இவ்வளவுக் கேவலமான, சீரழிவான, ஆபாசமான சமாச்சாரங்கள் அரங்கேறு கின்றனவே, இதற்கு என்ன பதில்?

கலாச்சாரக் காவலர்கள் என்ற பட்டியலில் சிவசேனா தான் முந்திரிக் கொட்டைபோல முந்திக் கொண்டு தலையை நீட்டி வருவது வாடிக் கையாகும்.

அந்தச் சிவசேனாவின் தலைநகரான மும்பை யில் தான் - நவராத்திரி என்ற பெயரில் இந்தியா விலேயே மிகப் பெரிய அளவுக்கு ஆபாசங்கள் நிர்வாணக் கூத்தாடுகின்றன.

இதுபற்றி பால் தாக்ரே வாய் திறக்காதது ஏன்? சங்பரிவார்க் கும்பல் பிரச்சினையைக் கிளப்பாதது ஏன்?

நவராத்திரியைத் தடை செய் என்று சொல்லு வதற்குப் பகுத்தறிவும், பக்குவமும் தேவை. அந்த அளவுக்கு முடியவில்லை என்றாலும் நவராத்திரியை ஒட்டி நடக்கும் இந்த அலங்கோலங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாமே - விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தலாமே!

ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்ய ஆரம்பித்தால் நவராத்திரி புஸ்வாணம் ஆகி விடும். அதற்குள்ள ஈர்ப்பும், கவர்ச்சியும் கரைந்தோடிப் போய்விடும்; களை இழந்த நிலை ஏற்பட்டுவிடும் அவரவர்களும் தனிமையில் அமர்ந்து ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் நிலைதான் ஏற்படும் என்பதால் இதில் தலையிடத் தயங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. இன்னொன்று - இந்து மதக் கடவுள்கள் என்றாலே விபச்சாரம் செய்யாத கடவுளே கிடையாதே - அப்படி இருக்கும்போது, இதில் எப்படி தலையிடுவது என்கிற மன ஒதுக்கீடும் இருக்கும் அல்லவா?

Saturday, October 16, 2010

நவராத்திரிப் புளுகு

உலகம் முழுவதும் மதங் கள் இருக்கின்றன. கடவுள் கள் இருக்கின்றன. எல்லா வற்றிலும் மூட நம்பிக்கை களின் முடைநாற்றம் உண்டு, உண்டு, அய்யம் இல்லை.

ஆனாலும், இந்து மதக் காரர்கள் கொட்டி வைத் துள்ள புளுகுகள், கட்டுக் கதைகளின் முன்னால் எல்லா மதங்களும் பிச்சை வாங்கவேண்டும்.
பக்தி என்று வந்து விட்டால், மாட்டுச் சாணி யையும், மாட்டு மூத்திரத் தையும் கலந்து குடிக்க வைக்கலாம் (பஞ்சகவ்யம்: மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்) அதுவும் தட்சணை பெற்றுக்கொண்டு குடிக்க வைக்கலாம் என்கிற அளவுக்கு இந்து மதக்கார னின் மூளையை ஆபாசமாக் கியதற்குப் பிறகு - முடக்கி விட்ட பிறகு எதைத்தான் எழுத மாட்டார்கள் - எந்த எல்லைக்குச் சென்றுதான் உளறமாட்டார்கள்?

21 ஆம் நூற்றாண்டின் முகப்பில் நவீன (ழபை கூநஉ) கருவிகளையெல்லாம் பயன்படுத்தி நடத்தப்படும் ஏடுகளும், இதழ்களும் வெட்கம் கெட்ட மூளிக்கு மானமாவது, அறிவாவது என்கிற தன்மையில் நடந்துகொள்கின்றனவே - இவைகளுக்கெல்லாம் உட லில் ஆடைகள் ஒரு கேடா என்று நாக்கைப் பிடுங்கக் கேட்கத் தோன்றுகிறது.

நவராத்திரி என்று கூறி ஒன்பது நாள் மூடக் கூத்துப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டூகக் கதை!

ஏழாம் நாள் நவராத்திரி பற்றி கதை என்னவாம்!

பிருங்கி முனிவன் சிவ பக்தனாம், சிவனைத் தவிர யாரையும் கும்பிடமாட்டா னாம்; இது பார்வதிக்குக் கோபமாம்!
ஒருமுறை சிவலோகத் துக்கே (முகவரி என்னவோ!) இந்த முனிவன் சென்றானாம். சிவனும், பார்வதியும் ஒரு சேர உட்கார்ந்துகொண்டு இருந் தார்களாம்! பார்வதியைக் கும்பிடக் கூடாது என்று அந்த முனிவன் வண்டு உருவம் எடுத்து சிவனைச் சுற்றிப் பறந்து வணங்கினா னாம்.
உடனே சிவன் செய்த சித்து விளையாட்டு என்ன தெரியுமா? பார்வதியை இடுப்பின் இடதுபுறத்தில் தூக்கி வைத்து அர்த்த நாரீஸ்வரராக (ஆண்பாதி - பெண் பாதி) காட்சியளித் தானாம். வேறு வழியின்றி அந்த முனிவன் இருவரையும் வணங்கித் தொலைத்தா னாம்.

எப்படி இருக்கிறது? கட வுள் ஒருவரே - உருவமற்ற வன் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் இத்தனை உரு வங்கள், சாதாரண மனிதர் களிடத்தில் உள்ள ஆசா பாசங்கள் கடவுளிடத்தில் என்றால், இது முட்டாள்தனம் மட்டுமல்ல - மிகவும் கீழிறக் கப் பண்பாடும் ஆகும்.
கடவுளிடத்திலும் தன் முனைப்பு - தன்னை வணங்கவேண்டும் என்று ஆணவம் - முனிவர் போன்ற பக்தி நிலையில் உள்ளவர் களிடத்திலே கூட விருப்பு - வெறுப்பு என்றால், இவற்றை நம்புவதால், வழிபடுவதால், நல்லறிவும், நற்பண்பும் கிட்டுமா என்பதை எண்ணிப் பார்ப்பார்களா?
- மயிலாடன்

Sunday, October 10, 2010

நவராத்திரியைத் தடை செய்வார்களா?


காதலர் தினத்தால் கற்பு கெட்டுப் போய் விடுகிறது _ ஒழுக்கம் ஓடி ஒளிந்து விடுகிறது. நமது கலாச்சாரம் சீரழிகிறது! கூடாது! கூடவே கூடாது - _ அதனைத் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்று தண்டால், பஸ்கி எடுக்கும் ராம்சேனா, இந்து முன்னணி வகையறாக்களுக்கு ஒரு கேள்வி. நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதத்தில் ஒன்பது நாள்கள் விழா கொண்டாடப்படுகிறதே தெரியுமா?
மூன்று நாள் சக்திக்கு (பார்வதிக்கு), மூன்று நாள் லட்சுமிக்கு, மூன்றுநாள் சரஸ்வதிக்கென்று கொலு வைத்துக் கும்மாளம் அடிக்கிறார்களே -_ அந்த ஒன்பது நாள்களில் நடக்கும் அசிங்கம், ஆபாசம் பற்றி அறியுமா இந்த இந்து முன்னணி சங்பரிவார் வட்டாரம்? மும்பையையே கதிகலங்க வைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மாலையில் தொடங்கி நள்ளிரவில் களை கட்டும். இவற்றில் 50 லட்சம் பேர் பங்கேற்று ஆட்டம் பாட்டத்தில் ஜமாய்ப் பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இளை ஞர்கள், இளம் பெண்கள். வழக்கமாக இரவில் நீண்ட நேரத்துக்கு வெளியே இருக்க இளம் பெண்களைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. ஆனால் தசரா கொண்டாட்ட சீசன் முழுதும் இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரைகூட இளம்பெண்கள் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு.

இந்தக் கொண்டாட்டங்களின் போது இளசுகளிடையே ஆண், பெண், தெரிந்தவர், தெரி யாதவர், நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசங் கள் பார்க்கப்படுவதில்லை. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களுடன் இளம் பெண்கள் கைகோத்து ஆடுவதும் கச்சேரிகளில் ஆடிப் பாடுவதும் சகஜம். இதனால் இரவில் நீண்ட நேரம் வெளியில் தங்கும் இளம் பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஊர் சுற்றுவதும், காதலர் வீட்டில் தங்குவதும் நடப்பதால் பெண்கள் கற்பிழக்கும் நிலை ஏற்படுகிறது. தவிர, மும்பை நகரெங்கும் கட்டுக்கடங்காத கூட்டத்தை இரவு நேரத்தில் பார்க்கும் விபசாரப் பெண்களும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் குவிப்பதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களால் தசரா பண்டிகைக்குப் பிறகு கர்ப்பம் அடையும் திருமணம் ஆகாத இளம் பெண்கள் எண்ணிக்கையும் எய்ட்ஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிக ரிப்பதாக மும்பை மகப்பேறு இயல் அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

கடந்த ஆண்டு தசராவுக்குப் பிறகு திருமண மாகாமல் கர்ப்பம் அடைந்த இளம் பெண்கள் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தசராவுக்குப் பிறகு மூன்று மாத கால கட்டத்தில், ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் நடந்த கருக்கலைப்புகளைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப்பட்டது. 16 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களே இதில் அதிகம்.

இவ்வளவுத் தகவல்களையும் வெளியிட்டது. விடுதலை ஏடு அல்ல. 26.9.2005 நாளிட்ட தினகரன் தான். கலாச்சாரத்தைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத் ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிவசேனா என்ன செய்யப் போகிறது?

பால்தாக்கரே இந்தப் பாலியல் சமாச்சாரத்துக்குச் செய்யப் போகும் பரிகாரம் என்ன?

பகவான் கிருஷ்ணன் செய்ததுதானே என்று சமாதானம் சொல்லப் போகிறாரா?

காதலர் தினத்தால் போச்சு, போச்சு, கலாச்சாரம் போச்சு என்று கலவரக் கொடியைத் தூக்கிப் பிடிக்கும் இந்த இந்துத்துவாவாதிகள் இந்துக்களின் நவராத்திரி விழாவில் இளம் பெண்கள் திருமணம் ஆகும் முன்பே சூறையாடப்படுகிறார்களே இதற்கு என்ன பதில்?

கடந்த ஆண்டு தசராவில் அகமதாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் நிகழ்ந்த ஆபாசம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை (25.11.2009) விரிவாகவே செய்தி வெளியிட்டதே. பெண்கள் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் (சிஷீஸீபீஷீனீ) வாங்குகிறார்களாம். இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்கு பெண்களுக்கான கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகமாம்.

நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறார்களா சங்பரிவார்க் கும்பல்? அல்லது நவராத்திரிக்கு எதிராக மறியல் செய்வார்களா? நவராத்திரி விழா கொண்டாட்டங்களின் போது கருத்தடை உறை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிறப்பு விற்பனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தின என்று கூறுகிறார். -_ அகமதாபாத் மருந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜஸ்வந்த் படேல். வெற்றிலைப் பாக்-குக் கடைகளிலும்கூட இந்தக் கருத்தடை உறைகள் விற்கப்பட்டனென்றும் அவர் கூறியுள்ளனர். இத் தகைய உறைகளை எந்தவிதக் கூச்சமோ வெட்கமோ இன்றிப் பெண்கள் கேட்டு வாங்கினார்களாம். சொல் வது விடுதலை அல்ல _ டைம்ஸ் ஆப் இந்தியா. காதலர் தினத்தால் கலாச்சாரம் கெட்டொழிந்துவிட்டது என்று கூச்சல் போடும் மானஸ்தர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்து ராஜ்ஜியம் உருவாக் குவதில் சேனாதிபதியாக வாள் தூக்கும் நரேந்திர மோடியின் குஜராத்திலே - _ நவராத்திரி நேரத்திலே காண்டம் விற்பனை அதிகம் என்று புள்ளி விவரம் பேசுகிறதே _ என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்து மதமே ஆபாசக் கிடங்குதானே! கற்பழிக் காத கடவுள் உண்டா? சோரம் போகாத கடவுளச்சி கள்தான் உண்டா? குரு பத்தினியைக் கற்பழிக்கும் சீடர்கள் வரை உண்டே!

இந்த யோக்கியதையில் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க கம்பும் தடியுமாகக் கிளம்புகிறார்களாம், வெட்கம்! மகாவெட்கம்!




கருஞ்சட்டை
http://viduthalai.periyar.org.in/20100214/news04.html

Wednesday, October 6, 2010

பூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க் கத்தைத்தான் கொடுக்கும் என்பதற்கு நவராத் திரிப் பண்டிகை ஒன்று போதாதா?

இந்து மதத்தில் பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்; ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செய லிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.

ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவை யாகும்.


விநாயகர் சதுர்த்தி கழிந்தது என்றால், இம்மாதத்தில் நவராத்திரி - ஆயுத பூஜை வகையறாக்கள். நவராத்திரி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல - எல்லாம் ஆரிய வடமொழியின் இறக்குமதிச் சொற்கள்தாம்.

கருநாடக மாநிலத்தில் இதே பண்டிகை தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் அல்ல, இரு நாள்கள் அல்ல, ஒன்பது நாள்கள் (நவ என்றால் ஒன்பது) கொண்டாடப் படுகின்றன.

ஒவ்வொரு நிமிடமும் மனித வாழ்வுக்கு இன்றியமையாத காலமாகும். காலத்தைக் கண்ணாகப் போற்றும் மனிதனும், நாடும்தான் முன்னேற்றப் பாதையில் முனைந்து ஓடும்.

தொடர்ச்சியாக ஒன்பது நாள்களை மதத்தின் பெயரால் பாழ்படுத்தும் ஒரு நாடு எப்படித்தான் முன்னேறித் தொலைய முடியும்?

ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான கதையளப்பு! அறிவுக்குச் சற்றும் பொருந்தாத அழுக்கு மூட்டைகள் அவை.

கடவுள் உருவமற்றவர், கண்ணுக்குத் தெரியாதவர், விருப்பு வெறுப்பு அற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் சூலாயுதத்துடனும், வேலாயுதத்துடனும், கபாலத்துடனும், சிங்கத்தின்மீதும், மூஞ்சூறு மீதும், புலியின் மீதும், காகத்தின் மீதும் சவாரி செய்வது போன்ற உருவங்கள் - வழிபாடுகள் - கோயில்கள் என்றால் இந்த முரண்பட்ட, வெட்கம் கெட்ட மூடத் தனத்தை எண்ணி எங்கு போய் முட்டிக்கொள்வது!

ஒவ்வொன்றுக்கும் ஸ்தல புராணக் குப்பைகள் வேறு - பராசக்தியே துர்க்கையாக இருந்து தீமை களை அழிக்கிறாளாம்; அவளே சரசுவதியாக இருந்து கல்வியையும், அறிவையும் கொடுக்கி றாளாம்; அவளே மகாலட்சுமியாக இருந்து செல்வத்தையும் வாரி வழங்குகிறாளாம்.

இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்திலேயே இந்து மதக்காரர்கள்தான் கல்வியிலும், செல்வத்திலும், ஆற்றலிலும் முத லிடத்தில் இருக்கவேண்டும்.

11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் போட்டும் இன்னும் தற்குறித்தனம் ஒழிக்கப்படவில்லை. இன்னும் 77 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் ரூபாய் 20 தான். சீனாக்காரன் கையில் உள்ள இந்தியாவின் நிலப் பகுதிகள் இன்னும் மீட்கப்படவில்லை.

பூஜைகளுக்கும், புராணப் புளுகுகளுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். சரசுவதி பூஜை கொண்டாடாத நாட்டில் நூற்றுக்கு நூறு படித்திருக்கிறார்களே! முயற்சி வேண்டாம் - பக்தி போதும் என்று போதனை செய்து வளர்க்கப்பட்ட நாட்டிலே புத்தி எப்படி வளப்பம் பெறும் - முன்னேற்றம் எங்கே முளைகட்டும்?

ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவி கள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?

அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப் படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழி லாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பூஜைக்குரியவை எவை என்ற கேள்விகள் எழாதா?

குண்டூசி கூட கண்டுபிடிக்கத் தெரியாத நாட்டில் ஆயுத பூஜைக்கு மட்டும் குறைவு இல்லை. கடவுள்களின் கைகளில் இருக்கும் கருவிகள் எல்லாம் கொலைக்கருவிகளாகத்தான் இருக் கின்றன - அந்தக் கருவிகளைக் கொண்டு இந்து மதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளன - கொலைகளைச் செய்துள்ளன - அதற்காகத்தான் பூஜை புனஷ்காரங்களா?

பூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க் கத்தைத்தான் கொடுக்கும் என்பதற்கு நவராத் திரிப் பண்டிகை ஒன்று போதாதா?

http://www.viduthalai.periyar.org.in/20101006/news05.html

weather counter Site Meter