Pages

Search This Blog

Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

Friday, October 8, 2010

ஈழத் தமிழர்களைக் கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?

யுத்த நெறிகளை புறம் தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தற்போது அலுமினிய தட்டுடன் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். உடலும் மனதும் களைப்படைந்து போய், கடந்த கால சம்பவங்களை நினைத்து விம்மிவிம்மி அழுது கொண்டிருக்கிறார்.
இலங்கையின் ராணுவத் தளபதி யாக இருந்த சரத் பொன்சேகா, போரின் வெற்றி யாருக்குச் சொந்தம் என்கிற பஞ்சாயத்தில் ராஜபக்சே சகோதரர்களிடம் மல்லு கட்டினார். இந்த மல்லுக்கட்டில் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். இதனால் ராஜபக் சேவும் பொன்சேகாவும் எதிரிகளானார் கள்.
போருக்குப் பின்பு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்கிய பொன் சேகா, தேர்தலில் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக பொன்சேகாவை கைது செய்தார் ராஜ்பக்சே. ராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் பொன்சேகா ஊழல் செய்தார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப் பட்டது.

இந்த குற்றச்சாட்டின்படி ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார் பொன் சேகா. இந்த வழக்கை சுமார் ஒரு வருட மாக விசாரித்து வந்த ராணுவத்தின் இரண்டாம் நிலை நீதிமன்றம், பொன்சேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு 3 வருட கடும் சிறை தண்டனை விதிக்கப் படுகிறதுஎன்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் அதனை அதிபருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி ராஜபக்சேவின் பார்வைக்கு தீர்ப்பினை அனுப்பி வைத்தது கோர்ட். அப்போது அமெரிக்காவில் ராஜபக்சே இருந்த தால் இந்த தீர்ப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமெரிக்காவிலிருந்து கடந்த 30-ந்தேதி இலங்கை திரும்பியதும், பொன்சேகாவிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஃபைலை அன்று இரவு ஆராய்ந்த ராஜபக்சே, ராணுவ கோர்ட் தந்துள்ள 3 வருட சிறைத் தண்டனையை இரண் டரை வருடமாக (30 மாதங்கள்) குறைத்து ஒப்புதல் அளித்தார்.

பொன்சேகாவிற்கு கோர்ட் தந்த சிறை தண்டனையை ராஜபக்சே ஏற்று ஒப்புதல் அளித்ததால் ராணுவ சிறை கொட்டடியிலிருந்து கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைக்கு மாற்றப் பட்டார் பொன்சேகா என்கிறது அதிபர் மாளிகை.

வெலிக்கடை சிறைக்கு பொன் சேகா கொண்டு செல்லப்பட்டதும் வெள்ளை நிறத்தில் அவர் அணிந் திருந்த தேசிய ஆடையை அகற்றி விட்டு கைதிகளுக்கான ஆடை கொடுக்கப்பட்டது. அந்த ஆடை மிகவும் லூசாக- தொளதொள வென்று இருந்ததால் அதனை அணிய பொன்சேகா மறுக்க, இதனைத்தான் நீ போட்டுக்கொள்ள வேண்டும். மறுத்தால் டெய்லர் வந்து அளவு எடுத்து சரியான ஆடையை தைத்து கொண்டு வரும்வரை அரை நிர்வாண மாகத்தான் இருக்க வேண்டும். தேசிய ஆடையுடன் சிறையில் இருக்க அனுமதிக்க முடியாது. இது அதிபரின் உத்தரவு என்று ஒருமையில் அதட்டி னார் ஜெயில் வார்டன். தன் நிலையை நினைத்து நொந்த வாறு அந்த ஆடையை வாங்கி கொண்டார் பொன்சேகா. அவருக்கு 0/22032 எண் கொண்ட கைதி எண்ணை ஆடையில் குத்தி விட்டுப் போனார் ஜெயில் வார்டன்.

சிறையில் எஸ் பிரிவில் அடைக்கப் பட்டுள்ளார் பொன்சேகா. இது ஒரு தனிமைச் சிறை. ஜெயவர்த்தனா அதிபராக இருந்தபோது, தீவிரவாதி களுடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட விஜயதுங்கே அடைக்கப் பட்ட அதே அறைதான் பொன்சேகா விற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் அடைக்கப்பட்ட பொன் சேகா, இரவு தூக்கம் இன்றி தவித்தார். மின் விசிறிகள் எதுவும் அந்த அறையில் இல்லை. நூற்றுக்கணக்கான எறும்பு கள் அந்த அறையில் குடியிருந்தன. காற்று வசதி இல்லாமலும் எறும்புகளின் கடியிலும் இரவு முழுக்க அவஸ்தை பட்டார். விடியற்காலை 5 மணிக்கு எல்லா கைதிகளையும் எழுப்புவது போல பொன்சேகாவையும் எழுப்ப வந்தார் சிறை பணியாளர். ஆனால் அவர் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டி ருந்ததை பார்த்து எழுந்துட்டீங்களா? என்று மட்டும் சொல்லிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போனார்.

அந்த அறையில் இருந்த கழி வறையை பயன்படுத்த அவர் நினைத்த போது அதில் தண்ணீர் வரவில்லை. அப்போது அங்கு வந்த வார்டனிடம் இதனை அவர் சொன்னபோது, ஒரு அலுமினிய ஜக்கை கொடுத்து அதோ அங்கிருக்கிற தொட்டியில் தண்ணீ இருக்கு. அதிலிருந்து தண்ணீயை எடுத்து பொது கழிவறையை யூஸ் பண்ணிக்கோங்க என்று வார்டன் சொல்ல, அதே போல ஜக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போனார் பொன்சேகா. பிறகு மற்ற கைதிகளைப் போலவே கியூவில் நின்று குளித்தார். குளித்து விட்டு வந்த பொன்சேகாவின் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும் கொடுக்கப்பட்டது. அந்த அலுமினிய தட்டை ஏந்தியவாறு கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். 10 மணிக்கு வந்த டெய்லர் அவருக்கு சரியான ஆடை தைக்க அளவு எடுத்துக் கொண்டு போனார்.

முதல் நாளில் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. காலை போலவே மதியமும் இரவும் கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். மாலை 6 மணிக்கெல்லாம் அறைக்குள் போகச் சொல்லி அவரை பூட்டினர். பகலில் மற்ற கைதிகள் யாரிடமும் பொன்சேகாவை பேச அனுமதிக்க வில்லை சிறை நிர்வாகம். முதல் நாளை போலவே இரண் டாவது இரவிலும் அவஸ்தைப்பட்டார் பொன்சேகா. சிறையில் சொகுசாக பொன்சேகா இருக்கக்கூடாது. அதனால் அச்சகத்தில் பணிபுரியும் வேலையைக் கொடுக்கலாமா அல்லது தோட்டத்தை பராமரிக்கும் வேலையை கொடுக்கலாமா என்று 4 ஆம் தேதி வரை சிறை நிர்வாகம் ஆலோசித்துக் கொண்டிருந்தது.

வெலிக்கடை சிறைக்குள் வந்ததிலி ருந்து யாரிடமும் பேசுவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. நிறைய நேரம் அழுது கொண்டே இருந்தார். ஒருமுறை தனது அறையின் கம்பிகளை பிடித்துக் கொண்டு கதறினார் பொன்சேகா. இவரை சிறைக்குள் கொண்டுவருவ தற்கு முதல் நாள் வரை அந்த அறையில் இரண்டு மின்விசிறிகள் இருந்தன.

திடீரென்று அதனை அகற்றி விட்டனர். ஏன் என்று வார்டனிடம் கைதிகள் சிலர் கேட்க, இந்த அறையில் தான் நாளை இரவு பொன்சேகா அடைக்கப்படவிருக்கிறார். மின் விசிறிகளை அகற்ற சொல்லி அர சாங்கம் உத்தரவிட்டிருக்கிறதுன்னு சொன்னார் வார்டன் என்கின்றன சிறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட பொன் சேகாவை அவரது மனைவி அனோமா சென்று சந்தித்தார். அவரிடம் தான் அணிந்திருந்த தேசிய ஆடையையும் இதுநாள்வரை பயன்படுத்திக் கொண் டிருந்த கருப்பு பேக்கையும் கொடுத்தார் பொன்சேகா. கணவனின் நிலையை கண்டு கதறிய அனோமாவிடம் தனது அறையை பற்றியும் தூக்கமில்லா இரவுகளையும் தெரிவித்திருக்கிறார் நொந்து போய். பொன்சேகாவை சந்தித்து விட்டு வெளியே வந்த அனோமா,ஒரு போர் வீரனாக நின்று இந்த நாட்டை மீட்டுக் கொடுத்த என் கணவருக்கு கடைசி யில் மிஞ்சியது ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும்தான். அந்த நிலையை பார்க்க முடியவில்லை. காற்று வசதி யில்லாமலும் எறும்புக் கடியிலும் கொடு மையை அனுபவிக்கிறார் என் கணவர். அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை சுகாதாரமின்றி அசுத்தமாக இருக்கிறது. இதற்கெல்லாம் இந்த அரசாங்கம் விரைவில் பதில் சொல் லியே ஆக வேண்டும் என்றார்.

பொன்சேகாவை ஆதரிக்கும் சிங்கள கட்சியான ஜே.வி.பி.யின் நாடா ளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து நெத்தி,பொன்சேகாவை பார்த்து அச்சம் கொண்டுள்ளது இந்த அரசு. அதனால்தான் கோர்ட் தீர்ப்பில் அவசரம் அவசரமாக ஒரு முடிவெடுத்து அவரை வெலிக்கடை சிறையில் அடைத்திருக்கிறார் அதிபர் என்கிறார். ஆனால் மற்றொரு சிங்கள கட்சி யான ஜாதிஹெல உறுமயவின் செய்தி தொடர்பாளர் நிசாந்தஸ்ரீவர்ண சிங்கே,இந்த தண்டனை பொன் சேகாவிற்கு சரியான, நியாயமான தண்டைனைதான். இவர் ராணுவ தளபதியாக இருந்த போது ராணுவ அதிகாரிகள் பலருக்கும் இதே போல தணடனை கொடுத்திருக்கிறார். அதே சட்டத்தில்தான் இவருக்கும் தண் டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

இதற்கிடையே,குற்றங்களை ஒப்புக்கொண்டு பொன்சேகா மன்னிப்பு கேட்கட்டும். அவருக்கு பொது மன் னிப்பு கொடுக்க தயாராக இருக்கிறார் அதிபர் ராஜபக்சே என்கிறார் பொன்சேகாவின் தண்டனை குறித்து கருத்து தெரிவிக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் அனோமா பொன் சேகாவோ, என் கணவர் குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்யாத அவர் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? மன்னிப்பு கேட்க மாட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத் ததற்காக இந்த அரசாங்கம் ஒரு நாள் வருந்தப் போகிறது என்கிறார் ஆவேச மாக.

இந்நிலையில், பொன்சேகாவின் இன்றைய நிலை அறிந்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் ஈழத்தமிழர்கள், சர்வதேச நெறிகளுக்கு எதிராகவும் மனித நேயமின்றியும் கொடூரமான யுத்தம் நடத்தி பல லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்ததில் முதல் குற்றவாளி ராஜபக்சே. இரண்டாவது குற்றவாளி பொன்சேகா. இரண்டாவது குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தி ருக்கிறது. அதேபோல முதல் குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கும். அதிலிருந்து ராஜபக்சே தப்பிக்க முடியாது. கொன்ற வனுக்கு தண்டனை என்றால் கொல்ல ஏவியவனையும் (ராஜ பக்சே) நிச்சயம் காலம் தண்டிக்கும் என்கிறார்கள்.

- கொழும்பிலிருந்து எழில்

நன்றி: நக்கீரன்
(2010 அக். 6-8)
http://www.viduthalai.periyar.org.in/20101008/news05.html

Sunday, October 3, 2010

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமராக உருத்திரகுமாரன் தேர்வு நியூயார்க்கில் நடைபெற்ற முதல் பாராளுமன்ற கூட்டம்

நியூயார்க், அக்.3- இலங்கை தமிழர்களுக் காக அமைக்கப்பட் டுள்ள நாடு கடந்த தமி ழீழ அரசு முறைப்படி செயல்படத் தொடங் கியது. நியூயார்க்கில் நடந்த கூட்டத்தில் முதல் பிரத மராக உருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டார். இலங்கையில் நடந்த உச்சகட்ட போரில் விடு தலைப்புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதாக, அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. இதனால், இலங்கைத் தமிழர்களின் தனி ஈழ நாடு அமைக்கும் கனவு முடிந்து விட்டதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாடு களில் இருந்தபடியே தமிழீழ அரசை செயல் படுத்துவது என இலங்கை தமிழர் ஆதரவு அமைப் பினர் முடிவு செய்தனர். அதன்படி, நாடு கடந்த தமிழீழ அரசு அமைக் கப்பட்டது. அதற்காக, உலக அளவில் இலங்கைத் தமிழர்களிடையே வாக் கெடுப்பு நடத்தி மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி.க் கள்) தேர்வு செய்யப்பட் டனர்.
இணைய தளம் வாயிலாகவே, இத் தகைய முயற்சிகள் அனைத்தும் நடைபெற் றன. இத்தகைய நட வடிக்கைகள் மூலமாக நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பிரதிநிதிகளின் முதல் கூட்டம் அமெ ரிக்காவில் நடைபெற் றது. மூன்று நாள் கூட்டம்.
நியூயார்க் நகரில் அய்.நா.சபை அருகே உள்ள ஓர் உணவு விடுதி யில் நடந்த அந்த கூட் டத்தில் ஏராளமான பிர திநிதிகள் பங்கேற்றனர். லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண் டனர். கடந்த 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடந்த அந்த கூட்டத்தில், தமிழீழ அரசுக்கான அரச மைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதல் நாள் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்தவர் களுக்கு அமைதி மரி யாதை செலுத்தப்பட் டது. அதன் பின்னர் நடந்த கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் சட்ட அமைச்சர் கிளார்க், மலேசியாவில் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, கொலம்பியா பல்கலைக் கழக மனித உரிமைகள் கல்வி மய்யத் தின் பேராசிரியர் பிலிப், வாஷிங்டன் சட்டக் கல்லூரி பேராசிரியர் அலி பெய்டவுன் போன் றோர் உரையாற்றினர்.
பிரதமர், சபாநாயகர் அதைத்தொடர்ந்து, மரபு சார்ந்த பாராளு மன்ற கட்டமைப்பே தமிழீழ அரசுக்கு உகந் தது, அரசின் தலைவராக பிரதமர் செயல்படுவார், அவருக்கு உதவியாக மூன்று துணைப் பிரதமர் களை தேர்வு செய்வது, ஏழு அமைச்சர்களை நியமிப்பது போன்ற தீர்மானங்களை பிரதி நிதிகள் அடங்கிய பாரா ளுமன்றம் நிறைவேற்றி யது.
மக்கள் பிரதிநிதிகள், நியமன பிரதிநிதிகள் (செனட்) என இரண்டு அவைகளைக் கொண் டதாக பாராளுமன்றம் செயல்படும். தேர்வு செய் யப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடைமுறை யும் பாராளுமன்றத்தால் வகுக்கப்பட உள்ளது. மேலும், நாடு கடந்த தமிழீழ அரசின் முத லாவது புதிய பிரதமராக விசுவநாதன் உருத்திர குமாரன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தின் சபா நாயகராக கனடாவை சேர்ந்த பொன் பால் ராஜன் என்பவரும் துணை சபாநாயகராக சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுகன்யா புத்திரசிகா மணி என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
http://www.viduthalai.periyar.org.in/20101003/news02.html

ராஜபக்சேவிடம் மன்னிப்பு கேட்க மாட்டோம் பொன்சேகாவின் மனைவி ஆவேசம்

எனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை. ஆகவே அவரோ, நானோ ராஜபக்சேவிடம் மன் னிப்பு கேட்கும் பேச் சுக்கே இடமில்லை என்று சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா கதறி அழுதபடி ஆவேசமாக கூறினார்.
இலங்கை ராணுவத் தின் முன்னாள் தலைமை தளபதி பொன்சேகா மீது ராணுவ நீதிமன்றத் தில் 2 வழக்குகள் தொட ரப்பட்டன. ஒரு வழக் கில் அவரது ஜெனரல் என்ற தகுதி மற்றும் ராணுவ தளபதிக்கான முத்திரைகள் பறிக்கப் பட்டன.
ராணுவத்துக்கு ஆயு தம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக இன்னொரு வழக்கும் தொடரப்பட் டது. இந்த வழக்கில், அவருக்கு ராணுவ நீதி மன்றம் 30 மாதம் கடுங் காவல் சிறை தண்டனை விதித்தது. அதற்கு அதி பர் ராஜபக்சேவும் ஒப்பு தல் அளிக்க, பொன் சேகா கொழும்பு வெலிக் கடையில் உள்ள சிறை யில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சிறையில் அடைக்கப் பட்டுள்ள பொன்சேகா மன்னிப்பு கேட்டால், அவரை மன்னித்து விடு தலை செய்ய அதிபர் ராஜபக்சே பரிசீலிப்பார் என்று பாதுகாப்புத் துறை செயலாளரும், அதிபர் மகிந்தா ராஜ பக்சேவின் தம்பியுமான கோதபய்ய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், பொன்சேகா மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது அல்ல. ராணுவ நீதிமன்றம் எடுத்த நட வடிக்கை. அதனால், இந்த விவகாரத்துக்கு போராட் டத்தின் மூலமோ, மூன் றாம் நபரின் தலையீட்டு மூலமோ தீர்வு காண முடியாது. பொன்சேகா தனக்கு அளிக்கப்பட்ட 30 மாத சிறைத் தண் டனையை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை விடுத்தால், அதை பரி சீலிக்க அதிபர் ராஜ பக்சே தயாராக இருக் கிறார் என்று சொன்னார்.
ஆனால், மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொன் சேகாவின் மனைவி அனோமா திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள தனது கணவரைப் பார்க்க அனோமா சென்று இருந் தார். அவரைப் பார்த்து விட்டு திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போரை வென்று இந்த நாட்டை மீட்டுக் கொடுத்த எனது கணவ ருக்கு அதிபர் கொடுத் துள்ள சன்மானமே 30 மாத சிறை தண்டனை. அவர் மன்னிப்பு கோரு மளவுக்கு எந்தக் குற்ற மும் இழைக்கவில்லை. எனவே மன்னிப்பு கோரு வது என்பது சாத்திய மற்றது. எனது கணவர் உண் மையிலேயே குற்றம் புரிந்து இருந்தால் மன் னிப்பு கோரலாம். அவர் நிரபராதி என்கிற போது ஏன் மன்னிப்பு கோர வேண்டும்? அவர் மீதான நடவடிக்கை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை. அதிபர் ராஜபக்சேவின் விருப்பத்துக்கு இணங்க, எனது கணவருக்கு தண் டனை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆகவே எந்த தவறும் செய்யாத என் கண வரோ, நானோ ராஜ பக்சேவிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. மன்னிப்பு கேட்பது என்பதை நினைத்துப் பார்ப்பது கூட கஷ்டமானதே. ஏனென்றால், எனது கண வர் போரை வென்று நாட்டை மீட்ட ராணுவ வீரர்.
அவருக்கு சிறை தண் டனை வழங்கப்பட்டு இருப்பது மிகவும் கொடு மையானது. 30 வருட போரை வென்ற எனது கணவருக்கு இறுதியில் எஞ்சியது ஒரு பீங்கா னும், ஒரு கோப்பையும், பாயும், தலையணையும் மட்டுமே. (சிறையில் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளவை). அவரது தேசிய உடை யும் கழற்றப்பட்டு, கைதி உடை வழங்கப்பட்டு உள்ளது. (இவ்வாறு கூறும்போது அனோமா கண்ணீர் விட்டு அழுத படி பொன்சேகாவின் கழற்றப்பட்ட தேசிய உடையையும், கைப்பை யையும் காண்பித்தார்.)
எனது கணவர் அடைக் கப்பட்டுள்ள இடம் சுத்தமானதாக இல்லை. அவரது இருப்பிடம் பாம்புகளால் சூழப் பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். அவரது உடல் நிலை சற்று தளர் வடைந்து உள்ளது. அவ ருக்கு அங்கு எந்த வித வசதிகளும் செய்து தரப் படவில்லை. எதனை மனதில் வைத்து அவர் இவ்வாறு நடத்தப்படு கிறார் என்று எங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்றார் அவர்.
http://www.viduthalai.periyar.org.in/20101003/news29.html

weather counter Site Meter