Pages

Search This Blog

Showing posts with label பார்ப்பனிய இந்துத்துவா. Show all posts
Showing posts with label பார்ப்பனிய இந்துத்துவா. Show all posts

Saturday, February 12, 2011

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ்.பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்!

வரட்டும் - அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன.

இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமாம், திராவிடர் கழகமும்தான்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்து மதமோ பார்ப்பனர் ஆதிக்கத்தை, மேலாண்மையைக் கெட்டிப் படுத்தும் வெறி கொண்டதாகும்.

பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண் டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத - பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது.

இந்த நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய தலைவர் தந்தை பெரியார்; இயக்கம் - திராவிடர் இயக்கமாகும்.

துயரப்படும் மக்கள் உண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது.

பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் - அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது. எப்படியோ ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் பார்ப்பனீயத்தோடு இணைந்து நின்ற அமைப்புகளாகி விட்டதால் எதிர்ப்பிரச்சாரப் புயலில் பார்ப்பனீயத்தோடு அதுவும் கட்டுண்டு தாக்குதலுக்கு ஆளானது.

தமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால்கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை - டெபாசிட் காலியாயிற்று.

இடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும்; வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம்.

முதல் கேள்வி - பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா என்ற கேள்வி எழும்.

சங்கர மடத்தில் அடுத்த சங்கராச்சாரி யார்? என்ற வினாவும் வெடிக்கும்.

சம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்ன செய்வார்கள்? முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே! என்ன செய்வார்கள்? கைபிசைந்து நிற்பார்கள்.

கழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா? என்று கேட்கும் நிலை உருவாகட்டும்! உருவாகட்டும்!!

http://viduthalai.in/new/page-2/3311.html 

சு.சாமியே, ஓடாதே, நில்! -3

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று அபாண்டமாக பழி சுமத்திய சு.சாமியின் உள்ளி மூக்கை உடைத்தது ஜெயின் கமிஷன் என்றால், மூக்கையே முழுவதும் வெட்டி முடித்தது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கை (10.10.2000)


எல்லாரிடத்திலும் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்த மனிதரின் ஆட்டபாட்டம் திராவிடர் கழகத்திடம் எடுபடவில்லை.

அந்த அறிக்கையிலே சு.சாமியின் அஸ்திவாரத்தையே நொறுக்கித் தள்ளி னார். அதில் ஒரு பகுதி இதோ:

ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை மீது மத்திய அரசு மேற்கொண்ட அடுத்த கட்ட நடவடிக்கைபற்றிய ஓர் அறிக்கையில், இந்த யோக்கியர் சுப்பிரமணிய சுவாமியின் பங்கு ராஜீவ் காந்தி கொலையில் என்னவென்பது பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறது என் பதை நாடு மறந்து விடுமா? நல்லவர்கள் மறந்து விடுவார்கள் என்பது இவரது நினைப்போ? 6 மாதங்களில் 8 முறை விசாரிப்பட்டவர் சு.சுவாமி (20-3-1995. 27-9-1995)

Memorandum of Action on the Final Report of Jain Commission of inquiry.

பக்கம் 17, 31 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கிறது - மத்திய அரசின் உள்துறை? இவரது குருஜி சந்திராசாமி, (அவரது டிரஸ்டில் இடம் பெற்றிருந்த டிரஸ்டிகளில் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி) பற்றி என்ன கூறியிருக்கிறது?

பக்கம் 16 மற்றும் பக்கங்கள் 26,27,28,29,30,31 Taking the entire evidence, material and circumstances brought on record into consideration, a doubt does arise regarding chanrdaswami’s complicity and involvement. so the matter requires further probe. Para 3, Page 232, vol iii) மற்றும் இந்த ATR இல் உள்ளவற்றை அப்படியே தருகிறோம். அதன் தமிழாக் கத்துடன் (தனியே இணைக்கப்பட் டுள்ளது. அது சுப்பிரமணிய சுவாமியின் முகமூடியைக் கிழித்துக் காட்டும்; நாளை வெளி வரும்)

இதன்படி பார்த்தால் ஜெயின் கமிஷன் பரிந்துரைகளை ஆராய்ந்தபின் மத்திய அரசு ((The Multi Disciplinary Monitoring agency) சுப்பிரமணிய சுவாமி பங்கு பற்றி மேலும் விசாரிக்கச் சொல்லித்தான் ஆணையிட்டிருக்கிறது.

திராவிடர் கழகத்தைப் பற்றியோ, வீரமணி பற்றியோ அல்ல.

அது மட்டுமா?

ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அவர் பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் மழுப்பி மறைத்தமைக் காகவும், பொய்யான கருத்துகளையும் இட்டுக்கட்டி கூறியதற்காகவும் இந்திய குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) IPC section 179,193 ஆகியவைகளின் படி அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. வழக்கு நடந்து, இதன்படி சரியான தீர்ப்புக் கிடைத் தால் இவர் பத்தரை ஆண்டு தண்டனை யும், அபராதமும் செலுத்தி ஜெயிலில் தள்ளப்பட வேண்டிய நபர் ஆவார்.

1. இவரது கட்சியில் பொறுப்பில் இருந்தவரே இவரைப்பற்றிய சந்தேகம் கிளப்பி, இவரை அவரது வழக்கில் குறுக்கு விசாரணை ஜெயின் கமிஷனில் செய்தாரே அதற்கு விளக்கமான பதில் அளித்தாரா இவர்? (இதுபற்றிய தகவலும் வெளிவர உள்ளது)

2. அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ஆஜராகிய ஆர்.என்.மிட்டல் என்ற வழக்கறிஞர் கேள்விகளுக்கோ செல்வி ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேள்வி களுக்கோ இவர் ஒழுக்காகப் பதில் அளித்தாரா? திணறி, திக்குமுக்காடி உளறிக் கொட்டவில்லையா - இந்த உத்தமபுத்திரர்?

3. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இந்தியா அப்ராட் (india Abroad - வாசிங்டன் நாள் 22.10.1990) என்ற ஏட்டிற்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகள் முதன் முதலாக இஸ்ரேலியர் களிடம் தொடர்பு கொண்டு, மொசாட் என்ற இராணுவ அமைப்பிடம் இராணு வப் பயிற்சி பெற - தான் உதவியதாக கூறியவர் இந்த சுப்பிரமணிய சுவாமி தான். மேலும் சுப்பிரமணிய சுவாமி ஏற்கெ னவே எல்.டி.டி.யிடம் அனுதாபம் காட்டி வந்ததாகவும், ஈழப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கம் தன்னை (CIA) சி.அய்.ஏ. ஏஜென்ட் என்று கூறிய தால் புலிகள் ஆதரவை தான் விலக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஜெயின் கமிஷனில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் வாதாடிய பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானி சுப்பிர மணிய சுவாமி பற்றி கமிஷனில் என்ன கூறினார்?

சுப்பிரமணிய சுவாமி நீண்ட கால விடுதலைப் புலிகளின் நண்பர். இந்தியா அப்ராட் பத்திரிகையின் செய்தியே அதற்குச் சான்று.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன் நண்பர்கள் ஊடுருவி இருப்பதாக சுவாமி கூறினார். நான் அடுத்தடுத்து குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். ராஜீவ் காந்திக்குப் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் ராஜீவுக்கு வழங்க வேண்டும்; ஆனால் சுப்பிரமணிய சுவாமி அமைச்ச ராக இருந்த போது தக்க ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.

இந்தப் பாதுகாப்பை ராஜீவுக்கு வழங்க வேண்டும் என்று, அவர் பிரதமர் சந்திரசேகரிடம் விவாதிக்கவில்லை. சுப்பிரமணிய சுவாமி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். எனவே அவர்தான் இதற்குப் பொறுப்பு. கருணாநிதிக்கோ சுவாமியைப் போன்று பிரதமராக வேண்டும் என்ற ஆசை கிடையாது. பிரதமர் ஆகும் தருணம் ராஜீவைவிட எனக்குத்தான் உண்டு என்று கூறியவரும் சாமிதான்.

இந்தியப் பிரதமராக சுப்பிரமணிய சுவாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார் என்று சுவாமியே கூறுகிறார். இப்படி ஒரு வியாதி நமது நாட்டுக்குத் தேவையா? 91 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலகட்டத்தில் அடுத்த பிரதமர் ராஜீவ்தான் என்பதை அனைவருமே பேசினர். இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி பிரதமராக வேண்டும் எனில் என்ன செய்வார்? - என்று ராம்ஜெத்மலானி ஜெயின் கமிஷனிலேயே கூறினார்.

இவ்வாறு அறிக்கையின் மூலம் திராவிடர் கழகத்துடன் மோதிய சு.சாமி பார்ப்பானின் முகமூடியை உடைத்தெறிந் தார் தமிழர் தலைவர்.

அதற்குப் பிறகு இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை இந்தஆசாமி. இவரைப்பற்றி ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கைமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் என்ன? அதையும் அடுத்துத் தெரிந்து கொள்வோமே!
http://viduthalai.in/new/page-2/3313.html 

Wednesday, February 9, 2011

பார்பனிய இந்துதுவமும் உலக கோப்பை கிரிக்கெட் மோசடியும்

உலகக் கோப்பை கிரிக் கெட் வரும் 19 ஆம் தேதி துவக்கப்படுகிறது. இந்த முறை இந்தியாதான் கோப் பையைத் தட்டிப் பறிக்கப் போகிறது என்று மூக்கை சொறிந்து விடுகிறார்கள் விமர்சகர்கள்.

அதற்குள் மும்பையில் இந்தியா கோப்பையை வென் றெடுக்க வேண்டும்  என்பதற் காக சித்தி விநாயகர் கோயி லில் விசேஷ பூஜை நடத்தப் பட்டதோடு, சாமி ஊர்வலத் தையும் நடத்தியுள்ளனர்.

இந்துத்துவா மனப் பான்மை என்ற ஒன்று இருக் கிறது. எதிலும் பக்தி ஆஷா டத்தைத் திணிப்பது என்பது அதன் ஆசாரக் குணமாகும். மனிதனின் திறமை, தன் னம்பிக்கை, உழைப்பு இவற் றின் மரியாதையைக் குலைப் பது என்பதுதான் அதன் திரிசூலமாகும்.
கடவுள் சக்தியால் இந் தியா வெற்றி பெறவேண்டும் என்றால், வெற்றி எப்படி விளையாட்டு வீரர்களுக்குச் சொந்தமாக முடியும்?

வெற்றிக்குக் காரணம் கடவுள் சக்தியென்றால், தோல்வி அடையும்போது கடவுளின் தோல்வி என்று ஒப்புக்கொள்வார்களா? அத்தகைய அறிவு நாணயம் எல்லாம் இந்த இந்துத்துவா பார்ப்பனீய மரபில் கிடையவே கிடையாது.

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாதான் கோப்பையை வெல்லப் போகிறது என்று பிரபல ஜோதிடர்கள் எல்லாம் துண் டைப் போட்டுத் தாண்டினார் கள். தோல்வியில் முடிந்தது என்றவுடன், துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று குதிகால் பிடரியில் இடிபட ஓடினார்கள்.

சென்னை அண்ணா நகரில் கடந்த உலகக் கோப் பையின் போது கிரிக்கெட் விநாயகர் கோயிலே உரு வாக்கப்பட்டது. வலது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பதுபோல ஒரு விநாயகரும், இடது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பது போல மற்றொரு பிள்ளை யாரும் பிரதிஷ்டை செய்யப் பட்டன.

பிள்ளையாரைத் தோத் தரிக்கும் பாடல்கள் அடங் கிய குறுந்தகடு (சி.டி.) வெளியிடப்பட்டது. இந்தி யிலும், சமஸ்கிருதத்திலும் அந்தப் பாடல்கள் அமைந்த திலிருந்தே பார்ப்பனர்கள் தான் இதன் பின்னணியில் இருக்கின்றனர் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. (கிரிக்கெட்டே பார்ப்பனர்களுக்கான தனி உடைமைதானே!)

குறுந்தகடில் இடம் பெற்ற கிரிக்கெட் பஜன் வருமாறு:

ஏகாதச சிரச கிரிக்கெட் கணபதி
ஸ்வாகதம் சரணாகதம்
தஷிண நான திரிலோச்சன
கிரிக்கெட் கணபதி ஸ்வாகதம்
சரணாகதம்
வாமஹஸ்த திரிலோச்சன கிரிக்கெட்
கணபதி ஸ்வாகதம் சரணாகதம்
ஓம் பவுண்டரி மார்னே வாலே நமஹ
ஓம் சிக்சர் மார்னே வாலே நமஹ
ஓம் ஆல் ரவுண்டராய நமஹ
ஓம் கேட்ச் பக்கட்னே வாலே நமஹ
இந்தி, சமஸ்கிருதத் துக்கு இடையிடையே இங் கிலீஷும் வேறு.
அத்தோடு விட்டார்களா?

சென்னை குரோம் பேட்டை எஸ்.சி.எஸ். மெட்ரி குலேசன் மேல்நிலைப்பள்ளி யில் சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்தினார்கள். 1500 மாண வர்கள் அதில் கலந்துகொண் டனர். (ஆதாரங்கள்: இந்தியா டுடே, 21.3.2007).

இவ்வளவு செய்தும் இந் திய அணி ஊத்திக்கிட்டது தான் மிச்சம்!
கிரிக்கெட் மட்டுமல்ல, பார்ப்பனிய இந்துத்துவாவின் கடைசி வேர் இருக்கும் வரைக்கும் வீரம், விவேகம், கம்பீரம், தன்னம்பிக்கை அனைத்தும் காயடிக்கப்பட்டு விடும் என்பதை உணர்க!
- மயிலாடன்

http://viduthalai.in/new/page1/3076.html

weather counter Site Meter