Pages

Search This Blog

Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Tuesday, March 8, 2011

உலக மகளிர் தின வாழ்த்து செய்தி-முதல் அமைச்சர் கலைஞர்

``தமிழக பெண்கள் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் பெற வேண்டும்`` என்று முதல்-அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள, உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்ப தாவது:-

மகளிர் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா 8-3-2011 அன்று மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க நாட்டில், நியூயார்க் நகரில் நெச வாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8ஆம் நாள். பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக் கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

தந்தை பெரியாரும் - அறிஞர் அண்ணாவும்


தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியா ரும், பேரறிஞர் அண்ணாவும் அறிவுறுத்திய சமத் துவ, சமதர்மக் கொள்கைகளின்படி, பெண்கள் சமுதாயம் ஆண்களுக்கு இணையாக முன்னேற்றம் காண்பதற்குக் கல்வியறிவு பெற்று, வேலை வாய்ப்புகள் எய்தி, பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காகத் தி.மு.க. அரசு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டிடும் வகையில் பல்வேறு பெண்கள் நலத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

1973இல் இந்தியாவிலேயே முதல் முறையாக காவல் துறையில் மகளிர் பணி நியமனம் செய்யப் பட்டு; மகளிர் பலர் இன்று காவல் துறையின் உயர் அதிகாரிகளாக விளங்குகின்றனர்.

மகளிர் வளர்ச்சித் திசையில் திமுக ஆட்சி

1989இல் தொடங்கப்பட்ட மகளிர் திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 682 மகளிரை உறுப்பினர்களாக கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மூலம் 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கி கிராமப்புற மகளிர் பொருளாதார முன்னேற்றம் காண வழி வகுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பத்தாம் வகுப்புவரையேனும் படிக்க வேண்டும் என்பதற்காக 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989இல் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1996இல் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில்; 2001இல் பொறுப் பேற்ற அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்திருந்தது.

ஆனால், ஏழை - எளிய மகளிரின் முன்னேற்றம் கருதி தி.மு.க. அரசு 2006இல் பொறுப்பேற்றபின் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதுடன், 2008இல் 20 ஆயிரம் ரூபாய் எனவும், 2010இல் 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி கடந்த அய்ந் தாண்டுகளில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 538 ஏழை மகளிர் திருமணங்களுக்கு 832 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கி மகளிர் நலம் காத்துள்ளது.

ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989இல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் 2007இல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மகளிர் பயனடைகின்றனர்.

இவைமட்டுமல்லாமல், 1990இல் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிர்க்கு 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்; அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குத் சமஉரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்;

2006இல் தி.மு.க. அரசு பொறுப்பேற்றபின் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்;

டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி யுதவித் திட்டத்தின்கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண் களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் என்பன உள்பட பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தி பெண்கள் சமுதாயம் முன்னேற தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடுகிறது.

பெண்கள் மேலும் ஏற்றம் பெறும்வகையில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் அவர் களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்திட மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது.
வாழ்த்துகள்
இந்நிலையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நிகழ்ந்திடவும், தமிழக மகளிர் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் எய்திடவும் இந்நன்னாளில் எனது உளமார வாழ்த்துகிறேன்.
- இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் கலைஞர் கூறியுள்ளார்.
http://viduthalai.in/new/page-7/5001.html

Saturday, February 26, 2011

கலைஞர், ஜீவாவை நினைவுகூர்ந்தது தவறா?

தினமணி (17.2.2011) நடுப்பக்கத்தில் பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும் (http://www.dinamani.com/edition/Story.aspx?artid=377577)எனும் ஒரு கட்டுரையைத் தகுதி உடைய ஒருவரால் எழுதப்பட்டு வெளியாகி இருக்கிறது. 

சில நாள் களுக்கு முன்பு ஜீவாவின் பெயர்த்தியின் திருமணத்தைப் பெரியார் திடலில் முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். 

அப்போது அவர் ஜீவாவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை, தோழமையை விவரித்துப் பேசி அது ஏடுகளில் எல்லாம் வெளியாகி இருக்கிறது. 

ஜீவாவுக்கும் கலைஞருக்கும் 18 ஆண்டுகள் வித்தி யாசம் இருந்தால் என்ன? அவரைச் சந்திக்கிற வாய்ப்பு, உரையாடுகிற வாய்ப்பு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது.  அந்தத் தோழமையைத் தான் கலைஞர் அந்தத் திருமண விழாவில் எடுத் துரைத்தார். 

அதை மறுத்து ஒரு கட்டுரை ஒருவர் எழுத, அதை தினமணி வெளியிட்டு மகிழ்ந்து இருக்கிறது.கட்டுரையாளர் ஒரு சில வரலாற்று நிகழ்வுகளைச் சரியாக எடுத்துக் கூறி இருக்கிறார். 

அதற்குரிய புத்தகங்கள் அவரிடம் இருக்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால் 1957 தேர்தல் தொடர்பாக தினமணி கட்டுரையாளர் எழுதியுள்ள இமாலயப் பொய்யை எப்படிப் பொறுத்துக் கொள்ளுவது? 

அவர் எழுதுகிறார்:

1957 இல் வண்ணார்பேட்டை தொகுதியில் ஜீவா கம்யூனிஸ்ட் சார்பாகப் போட்டியிட்டபோது, ஜீவரத்தினம் என்ற ஒருவரை நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்த பெருமை தி.மு.கவுக்கு உண்டு, தி.மு.க, முதன் முதலில் பங்கேற்ற தேர்தல் அது.

அப்போதெல்லாம் 234 தொகுதிகளி லும் தி.மு.க. நிற்காது. வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும்.  தி.மு.க. போட்டியிடாத தொகுதிகளில் காங்கி ரஸுக்கு எதிரான சுயேச்சைகளை ஆத ரிக்கும்.

அந்தச் சமயத்தில் ஜீவாவை எதிர்த்து வேட்பாளர் யாரையும் நிறுத்தவேண்டாம் என்று இடதுசாரி இயக்கத்தினர் கெஞ்சிக் கேட்டபோதும்கூட, அதைப் பொருட்படுத் தாமல், ஜீவரத் தினத்தை தி.மு.க. சார்பில் நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்தது தி.மு.க. ஜீவரத்தினத்தை வண்ணார் பேட்டை தொகுதியில் நிறுத்தவேண்டும் என்று முடிவெடுத்ததில் கருணாநிதிக் கும் பங்கு உண்டு.  இன்று ஜீவாவைப் பற்றிப் பேச தி.மு.க.வுக்கும், கருணாநிதிக் கும் என்ன தகுதி இருக்கிறது?

மேலே உள்ள கட்டுரையாளரின் கூற்றைப் பார்த்தால் அவர் எவ்வளவு கற்றுக்குட்டித்தனமாக,  எழுதுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

1957 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. நிற்க வேண்டும் என 1956 இல் முடிவு எடுத்துவிட்டது.  அதன்படி தி.மு.க. 124 இடங்களில் தமிழகச் சட்டமன்றத் திற்குப் போட்டியிட்டது.  போட்டி யிட்டதோடு நாடாளுமன்றத்திற்கு 11 இடங்களில் 1 ஆதரவு வேட்பாளர் 5 பேருக்காகப் பிரச்சாரம் செய்தது.

இது எப்படி வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் போட்டியிடுவது என்று ஆகும்?  இப்படி வேட்பாளர்களை நிறுத்தியதிலிருந்துதான் 15 பேர் சட்ட மன்றத்திற்கும் இருவர் நாடாளுமன்றத் திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது வரலாறு.

1957 ஆம் ஆண்டு தேர்தலில் ஜீவா வண்ணாரப் பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு நிற்கவில்லை.  அவர் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தி.மு.க. தேர்தலில் நிற்கவில்லை. 

திரா விட நாட்டுக் கொள்கையை ஆதரித்து உடன்படிக்கையில் கையெழுத்திட்ட வேட்பாளர்களையே தி.மு.க. ஆதரித்தது.  அதன்படி ஆல்பர்ட் ஜேசுதாசனை தி.மு.க ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது.  1952 இல் ஜீவாதான் வெற்றி பெற்றார்.

1957 ஆம் ஆண்டு தேர்தல் நிலவரம் என்ன? ஜீவா வண்ணாரப்பேட்டையில் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வில்லை, அவர் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட் டியிட்டார்.  அங்கே அப்போது தி.மு.க. வேட்பாளர் நாஞ்சில் கி. மனோகரன். 

ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர். சம்பந்தம் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றார்.  1957 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட்ட கம்யூ னிஸ்ட் வேட்பாளர் ஏ.எஸ்.கே. அய்யங் கார்.  தி.மு.க. வேட்பாளர் எஸ். ஜீவரத் தினம். காங்கிரஸ் வேட்பாளர் மாயாண்டி நாடார் வெற்றி பெற்றார். 

போட்டியிடாத ஜீவாவை யார் தோற்கடித்தது?  1962 ஆம் ஆண்டு தான் ஜீவா மீண்டும் வண்ணாரப் பேட்டை தொகுதியில் போட்டியிடு கிறார். 

மீண்டும் காங்கிரஸ் வேட் பாளர் மாயாண்டி நாடார்தான் வெற்றி பெறுகிறார். 

தி.மு.க. வேட்பாளர் மு. வேதாசலம் வெற்றி வாய்ப்பை இழக்கிறார். 

இதுதான் 1952, 1957, 1962 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் விவரங்கள் சுருக்கமான நிலவரங்கள்.

அப்போது பெற்ற வாக்கு விவரங்கள் வருமாறு: 1957 ஆம் ஆண்டு  வண்ணாரப்பேட்டை தொகுதியின் வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள்

1.  எம். மாயாண்டி நாடார்    11,770  - 29.49%     (காங்)

2.  என் ஜீவரத்தினம் (தி.மு.க. ஆதரவு)       (சுயே)    11,279  - 28.26%

3.  பி.எம். லிங்கேசன்    9,152  - 22.93%       (சுயே)

4.  ஏ.எஸ்.கே. அய்யங்கார் 7,005 - 17.56%       (கம்யூ)

5. எஸ். தெய்வசிகாமணி    707  - 1.76%       (சுயே)

1962 ஆம் ஆண்டுவண்ணாரப் பேட்டை தொகுதியில்

வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள்

1.  எம். மாயாண்டி நாடார்    25,732- 37.8%    (காங்)
2.  எம். வேதாசலம்    24,095  - 35.4%       (தி.மு.க)
3.  பி.ஜீவானந்தம்    10,040  - 14.7%      (கம்யூ)
4.  பி.எம். லிங்கேசன்    2,190   -   -           (சுயே)

நிலைமை இப்படி இருக்கிறபோது, தினமணி கட்டுரையாளர் அவராகவே சில கதைகளை யெல்லாம் விடுகிறார்.  இடதுசாரிகளை எதிர்த்து வேட் பாளர்களைப் போடவேண்டாம் என்று யார் யாரிடம் கேட்டுக் கொண்டார் கள்? 

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் கடுமையாக உழைத்து முன்னேறிக் கொண்டிருந்த காலம் அது!

ஒவ்வொரு கட்சியும் கொள்கை முழக்கம் முழங்கிய நாள்கள் அவை.  கூட்டணி என்று இல்லாமல் தனியாக மக்களை சந்தித்த மகத்தான நாள்கள் அவை! 

கட்டுரையாளர் சொல்லுவது போல எவரும் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை, இதற்கும் கலைஞரை அக்காலகட்டத்தில் சம்பந்தப்படுத்து வது பொருத்தமில்லாதது ஆகும்.  கட்டுரையாளரின் தெளிவின்மையையும் அறிவீனத்தையும் இது காட்டுகிறது.

தி.மு.க.வின் முதல் மாநில மாநாட் டின் மேடையில் அமர்ந்து இருந்தவர் ஜீவா!  திராவிட இயக்கத் தலைவர் களிடையே தோழமை பேணியவர் ஜீவா! 

சுயமரியாதை இயக்கத்தில் உழைத்தவர் ஜீவா!  முற்போக்கு எண் ணம் கொண்டவர்களை மதிப்பவர் ஜீவா.  அந்த வகையில் கலைஞர், ஜீவா வுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை தோழமை பொங்க ஜீவாவின் பெயர்த்தி திருமணவிழாவில் எடுத் துரைத்திருப்பது தவறா?  அதற்கு வயதை ஒப்பிட்டுக் காட்டுவது எப்படிச் சரி?

1963 ஆம் ஆண்டு ஜீவா இயற்கை எய்தினார்.  தமிழ்நாட்டு அர சியலில் கலைஞர் அதற்குள் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகி விட்டார்.  ஜீவாவின் மரணத்தின் போது கலைஞர் தி.மு.க.வின் பொருளா ளர்; நாடறிந்த தலைவர். 

ஜீவாவைச் சந்தித்துப் பேசுகிற அறிமுகமும், வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்து இருக்கின்றன.  இதில் 18 வயது ஜீவா மூத்தவர் என்கிற காரணம் எப்படிச் சரியாக இருக்கமுடியும்? 

அவர் மூத்தவர்தான். அதனால் இளையவர் தோழமை மேலிட முடியாதா, ஜீவா காந்தியைச் சந்தித்தது போல!  தோழமை பொங்க அவரோடு பழகியதை கலைஞர் நினைவு கூர்ந்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வே!  இது தவறாகுமா?
க. திருநாவுக்கரசு
http://viduthalai.in/new/page2/4254.html

Wednesday, October 6, 2010

பா.ம.க.வின் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நம்பமாட்டார்கள் முதலமைச்சர் கலைஞர் சாட்டை

பா.ம.க.வின் ஆர்ப்பாட் டங்களை பொது மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள், நம்பமாட்டார்கள் என்று பா.ம.க. குறித்த கேள்விகளுக்கு முதல் வர் கலைஞர் மேற் கண்டவாறு பதிலளித் துள்ளார்.
முதல்வர் கலைஞர் அவர்கள் இன்று முர சொலியில் அளித் துள்ள பதில்கள் வரு மாறு:
கேள்வி: ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி பா.ம.க; ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடத்தப் போவதாக அறிவிப்பு கொடுத் திருக்கிறார்களே?
கலைஞர்: ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது திராவிடர் இயக்கமான தி.மு.க. வுக்கோ அல்லது தி.மு.க. ஆட்சிக்கோ உடன் பாடில்லாத ஒன்று என்பதுபோல கற்பனை செய்துகொண்டு, கிளர்ச்சிகளில் ஈடு பட்டு, தாங்கள்தான் அதற்கு மூலவர்கள் என்று சொல்லிக் கொள் ளும் போக்கினை யார் கடைப்பிடிக்கிறார்கள் அல்லது எந்தக் கட்சி கடைப்பிடிக்கிறது என் பதை மக்கள் நன் றாகவே அறிவார்கள்.
2011, ஜூன் திங்களில் ஜாதி வாரிக் கணக் கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசே அறிவித்திருக்கிறது. திருமதி.சோனியா காந்தி அம்மையார் அவர்களும் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதுபற்றி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திகள் எல்லா ஏடுகளிலும் வெளிவந்திருக்கின்றன.
இதற்கிடையே, தி.மு.க. ஆட்சியை எதிர்த்து ஏதாவது கிளர்ச்சி செய்யவேண் டும்; ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று எண்ணுகிறார் கள். மக்களைத் தூண்டி விடுகின்ற தோரணை யில் வெளியிடுகிற கிளர்ச்சி, அறிவிப்பு எதனையும் - எந்த மக் களைக் கவர்வதற்காக செய்யப்படுகின்றதோ - அந்த மக்களே, அதன் உள்நோக்கத்தை உணர்ந்து நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.
கேள்வி: இடஒதுக் கீடு கோரி வன்னியர் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிர் நீத்த குடும்பத்தினர்க்கு நீங்கள் செய்த உத வியை எல்லோரும் மறந்து விட்டார்களே?
கலைஞர்: இட ஒதுக்கீடு கோரி, 1987 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் அ.தி. மு.க. ஆட்சியில் உயிர் நீத்த 24 பேரின் குடும் பங்களுக்கு; 11 ஆண்டு கள் கழித்து கழக ஆட் சியில்தான், 1998இல் தலா 3 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
அத்துடன், 24 தியா கிகளின் வாரிசுகளுக் குக் குடும்ப ஓய்வூதிய மாக மாதம் ஆயிரத்து 500 ரூபாய் அனுமதிக் கப்பட்டது. அந்தக் குடும்ப ஓய்வூதியமும் மீண்டும் கழக ஆட்சி யில்தான், 2006 நவம்பர் முதல், மாதம் 1,500 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
கழக அரசு உதவி கள் செய்வதையும், சலுகைகள் வழங்குவ தையும் கடமையாகக் கொண்டு ஆற்றி வரு கிறது. இதனை சிலர் மறந்திருக்கலாம்; மன சாட்சி உள்ள எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. மறந்து விட்டார்கள் என்பது உண்மையானால்; மறந் தோர் செயலை நாமும் மறப்போம்!
http://www.viduthalai.periyar.org.in/20101005/news01.html

Monday, October 4, 2010

திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம்! முதல்வர் கலைஞர் கருத்து

சென்னை, அக். 4- திரா விட இனத்தைப் புறந் தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக் கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல் பட்டிருக்கிறது என்று முரசொலியில் (4.10.2010) கலைஞர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதம் வருமாறு:
ராமர் கிருத யுகத்தில் பிறந்ததாகச் சொல்லப் படுகிறது. கிருதயுகம் என் பது 17 லட்சத்து 28 ஆயி ரம் ஆண்டுகள் கொண் டதாகும். இப்படி கற் பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன், நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பார்க்கும்போது; சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த - தென்ன கத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத் தையோ, அவன் கல்ல றையையோ, அவனுக் கான நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந் தத்தானே வேண்டியுள்ளது.
திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்பட வில்லை என்றாலும்கூட, லெமூரியாக் கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூல மாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறி ஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரிகம் குறைந்தது மூவா யிரம் ஆண்டுகளுக்கு முந் தையது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆரிய நாகரிகமும் - மூட நம்பிக்கையும்
இந்த அடிப்படை யில் - நம்முடைய திரா விட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப் பிட்டு நோக்கும்பொழுது, திராவிட இனம் அறிவி யல் ரீதியாக வாழ்ந் துள்ள உண்மை வரலாற் றினைத் தெளிவாக உல கம் அறிந்துகொள்ள முடி யும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரி கம் அடிப்படை ஆதா ரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக் கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல் பட்டிருக்கிறது என் பதை நீ அறிந்துகொண் டால் போதும்!
- இவ்வாறு முதல மைச்சர் கலைஞர் கடி தத்தில் தெரிவித்துள்ளார்.
http://www.viduthalai.periyar.org.in/20101004/news05.html

Monday, September 27, 2010

தினமலர், தினமணிக்கு ஏன் இந்தப் புத்தி?

தினமணியும், தின மலரும் கலைஞர் அரசை எதிர்க்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாகத் தெரி கிறது. துக்ளக் சோவின் பாணி பார்ப்பனக் கிண்டல் கள் இந்தக் கின்னரர்களின் எழுதுகோல் முனைகளில் தெறிக்கின்றன.
வாரத்துக்கு 5 நாள் கோழி முட்டை சத்துணவு மய்யத்தில் நமது குழந்தை களுக்கு அளிக்கப்படுகின் றன. தினமலர் எழுதுகிறது; சனிக்கிழமை அரை நாள் பள்ளி உள்ளதே அப் பொழுது அரை முட்டை போடப்படுமா? என்று கேலிச்சித்திரம் தீட்டுகிறது.
தினமணியின் மதி எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
சத்துணவில் வாரத் துக்கு 5 நாள் முட்டையாம்! நல்லது, அதையே கலக்கி, ஆம்லேட், பொடிமாஸ், ஆஃப் பாயில், ஃபுல்பாயில்னு நாளுக்கு ஒரு அயிட்டமா கொடுத்தால் பசங்களும் சலிப்பு தட்டாமல் சாப்பிடு வாங்களே..!
தினமலர், தினமணிக்கு ஏன் இந்தப் புத்தி? ஒருக் கால் எந்தப் பாப்பாரக் குஞ் சுக்கும் இந்த முட்டை அளிப் பால் பயனில்லை என்ற நினைப்பு இருக்குமோ!
இந்த ஒரு பிரச்சினை மட்டுமல்ல; தமிழ் செம் மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று கிண் டலடிக்கிறது.
சத்துணவு அளிப்பதும், வாரத்தில் 5 நாள்கள் முட்டை கொடுப்பதும் சாதாரண மான ஒன்றல்ல - தொலை நோக்கோடு பார்க்கும் பொழுதுதான் இதில் உள்ள அருமையும், விளைவும் புரியும்.
இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுகின் றனர். ஆண்டு ஒன்றுக்கு குழந்தைகள் பாதிக்குமேல் மரணம் அடைவது இந்த ஊட்டச் சத்துக் குறைவால் தான்!
இந்தச் செய்தியையும் ஒரு பக்கத்தில் தினமலர் (4.5.2006) தான் வெளி யிடுகிறது.
47 விழுக்காடு குழந் தைகளுக்கு நம் நாட்டில் ஊட்டச்சத்து இல்லை என் கிற தகவலை வெளியிட்டது தினமணிதான் (5.5.2004).
இப்படி ஒரு பக்கத்தில் ஊட்டச் சத்தின் அவசி யத்தை வெளியிடும் தின மணியும், தினமலரும் ஊட்டச்சத்தினை கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அளிக்கும்போது, இந்த ஏடுகள் நல்ல புத்தியோடு பாராட்ட மனம் இல்லா விட்டாலும் கேலியும், கிண் டலும் செய்யாமலாவது இருக்கலாம் அல்லவா!
வாரத்துக்கு 5 நாள்கள் முட்டை அளித்தால், பார்ப்ப னர் அல்லாத குழந்தைகள் ஊட்டச் சத்து பெற்று, உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச் சியும் பெற்று, தேர்வுகளில் இதுவரை முட்டை மார்க்கு வாங்கியவர்கள் இனி அக் மார்க் முத்திரை பொறிப் பார்களோ என்கிற அழுக் குப் புத்திதான் இந்தப் பார்ப்பனர்களுக்கு.
அழுக்கு என்றால் அசிங்கம் மட்டுமல்ல - பொறாமையும்தான்!
- மயிலாடன்

Saturday, September 25, 2010

பெரியார் இல்லாமல் நான் இல்லை- அறிஞர் அண்ணா



அறிஞர் அண்ணா பதவியினால் பெயர் பெற்றவர் அல்லர்.கொள்கையினால் பெயர் பெற்றவர் .பெரியார் அவர்கள் அவருடைய அரசியல் கொள்கையின் படி 1967 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா வைத்த கூட்டணியை எதிர்த்து ஊர் ஊராக கடுமையாக பிரச்சாரம் செய்து ,அதற்க்கு பின்னர் அறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்ற காரணத்தினால் அண்ணா முதலமைச்சராக ஆக வேண்டிய நேரத்தில் அவருக்கு பக்கத்திலே இருந்த நண்பர்கள் கலைஞரை போல  ,நாவலரைப்போல இருக்கிறபோது  அண்ணா சொன்னார் :"வெற்றி பெற்று விட்டோம் .அய்யாவை(பெரியார்) போய் பார்த்து விட்டு வருவோம் " என்றார் . நாவலர் நெடுஞ்செழியன் சொன்னார் : " இவ்வளவு திட்டி பேசுகிறார் .நேற்று வரை நம்மை கண்டித்தார்.இப்போது எதற்கு அவரை போய் பார்க்க வேண்டும்? மெதுவாய் போய் பார்க்கலாம் என்றார்.
அண்ணா சொன்னார் : "அவர் இல்லாமல் நான் இல்லை -பெரியார் இல்லாமல் நான் இல்லை." என்றார்.அந்த அடிப்படை உணர்வு அந்த உணர்வு தான் நம்மை மனிதனாக்குவது.
(26.09.2009 காஞ்சியில் நடை பெற்ற தி.மு.க வின்  முப்பெரும் விழ ,அண்ணா நூற்றாண்டு விழாவில் தி.மு.க பொது செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உரை)
தகவல்:தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு விடுதலை மலர்.

weather counter Site Meter