Pages

Search This Blog

Showing posts with label பார்ப்பனீயம். Show all posts
Showing posts with label பார்ப்பனீயம். Show all posts

Saturday, April 30, 2011

இன உணர்வு கொள் தமிழ் நாடு பிராமணர் சங்கத்தை(தாம்ப்ராஸ்) பார்த்தாவது

ஆதாரம் : நங்கநல்லூர் டாக் 
 
தமிழர்களே பார்ப்பனீயம் செத்த பாம்பாகி விட்டது என்று சொல்லும் மேதாவிகளே இதை படித்த பிறகாவது பார்ப்பனீயம் நசுக்க பட வேண்டி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பார்பனர்கள் இன்றும் சங்கம் வைத்து கொண்டு கூபிடுகிரார்கள் என்றால் என்ன பொருள். பார்பனியத்தின் அடிப்படையே சுருதி பேதம்,மனு தர்மம் பாதுகாப்பு இவை தானே.இவற்றை பாது காத்து இன்னும் நம்மை ஏமாற்றி உச்சாணி கொம்பாக வாழவேண்டும் எனபது தானே. 
 
கடவுள் மத போதனைகளை வளர்க்க வேண்டும்.பார்பனை தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரன் என்கிற மனு தர்மத்தை நிலை நட்ட வேண்டும் இவை தானே இதன் பொருள்.
 
அனால் இவற்றை நேரிடையாக சொல்ல முடியாது அதனால் கல்வி சேவை,ஆன்மிக சேவை என்கிற முக முடி அணிந்து கொண்டு அழைக்கிறார்கள். 
 
இதுவரையில் உறுப்பினராகத பிராமணர்கள் அனைவரும் உறுப்பினர் ஆகுங்கள் என்று சொல்கிறது தாம்ப்ராஸ். அப்படியானால் தமிழர்கள் ஆகிய நாம் எல்லாம் திராவிடர் இயக்கத்தில் இணைந்து நமது இன உணர்வை காட்ட வேண்டாமா? தமிழர்களே இன உணர்வு கொள்.

Monday, March 7, 2011

அபசகுனமும்,துக்ளக் சோ வின் பதட்டமும்

அழகிரியும் ஸ்டா லினும் ராவணன் - கும்ப கர்ணன் மாதிரி வாழட் டும்! என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் - திமுக தலைவர் மானமிகு மாண் புமிகு கலைஞர் அவர்கள் குமுதம் பேட்டியில் கூறி விட்டாராம். பொறுக் குமா துக்ளக் திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு?

அட்டைப் படத்துக்கு ஒரு கார்ட்டூனுக்கான சமாச்சாரம் கிடைத்து விட்டது - பிழைக்க வேண்டும் அல்லவா!

துக்ளக்கை நடத் துவதால் எந்தப் பலனும் இல்லை என்று எப்படிச் சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே!

(துக்ளக் 24.10.2007 பக்கம் 26)

என்ன எழுதுகிறார்?

இந்த நேரத்திலே இப்படி அபசகுனமா வாழ்த் தனுமா? ராவணன் - கும்பகர்ணன் மாதிரி ஆட்சியை இழக்கப் போற மோன்னு கவலையா இருக்குது (துக்ளக் கார்ட்டூன் 9.3.2011)

கும்பகர்ணன் - இரா வணன் என்று கலைஞர் அவர்கள் கூறியது எந்தப் பொருளில்? சோ அதனை திசை மாற்றிக் கூறுவது எந்தப் பொரு ளில்?

பெரிய விவாதப் புலி என்று பார்ப்பனர்கள் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு நிலாச் சோறு ஊட்டுகிறார்களே, கொஞ்சுகிறார்களே, அந்த அறிவாளியின் அறிவுத் திறன் எந்தத் தரத்தில் உள்ளது என்ப தற்கு இது ஒன்று போதுமே!

மணமக்களைப் பார்த்து இராமனும் சீதை யும் போல வாழவேண்டும் என்று சோ திருக்கூட்டம் சொல்லுகிறதே - அதற் கும் இதுபோல வியாக் கியானம் செய்ய முடியுமே!

அட பாவமே, ஒரு நல்ல மங்கலகரமான நேரத்தில் இப்படி அபச குனமாகப் பேசலாமா?

14 வருஷம் காட்டில் திரிந்து வாழ வேண்டிய பரிதாபத்துக்கு ஆளான வர்களைக் கூறியா ஆசீர்வதிப்பது?

கணவனை விட்டுப் பிரிந்து, மாற்றானால் கடத்தப்பட்டு, அல்லல் பட்ட ஒரு பெண்தானா போயும் போயும் ஆசீர் வாதத்துக்குக் கிடைத் தார்?

தனது கர்ப்பம் கண வனால் சந்தேகிக்கப் பட்டு, அதன் காரண மாகக் காட்டுக்குள் கொண்டு போய் விடப் பட்ட பெண்தானா இவர் களுக்குக் கிடைத்த உதாரணம்?

கடைசியில் ராமன் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்.

சீதை பூமி பிளந்து தற்கொலையானாள் என்று தானே வால்மீகி சொல்கிறார்?

இந்த மணமக்களும் தற்கொலை செய்து கொண்டுதானா சாக வேண்டும்? இப்படி அபச குனமா ஆசீர்வதிக்க லாமா? சீ... ச்சீ, இவர் களுக்கு ஏன் இந்த அற்பப் புத்தி? என்று கேட்டால் திருவாளர் சோ ராமசாமி தன் மூஞ் சியை எங்கே கொண்டு போய்ப் பதுக்கிக் கொள் வார்?

- மயிலாடன்
http://viduthalai.in/new/home/archive/4678.html

Saturday, February 26, 2011

திரிநூல் தினமணியே ஸ்ரீரங்கம் நினைவிருக்கிறதா?


தினமணி ஏடு ஜாதி அரசிய லைப்பற்றி எழுதுகிறது. பல கட்சி களுக்கும் இப்பொழுதுதான் தங் களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதி பலமும், வாக்கு பலமும் வாக்கு வங்கிப் புள்ளி விவரங்களும் பயன்படும் என்றெல்லாம் தினமணி ஆவர்த்தனம் பாடுகிறது (7.2.2011). எந்தெந்தத் தொகுதிகளில் வன்னியர் கள் ஓட்டு இருக்கிறது என்றெல்லாம் முடி பிளந்து ஆய்வுக் கட்டுரை எழுதுகிறது.

ஜாதியைப் பற்றி எழுதட்டும். சுயமரியாதைப் பற்றியும் தாராளமாக எழுதித் தள்ளட்டும். காகிதம் இருக் கிறது எழுதுகோல் இருக்கிறது கணினி இருக்கிறது அச்சு இயந் திரம் இருக்கிறது அடித்துத் தள் ளட்டும்.

இதைப்பற்றியெல்லாம் எழுதுவதற் கான தகுதி தினமணிக்கு உண்டா என்ற ஒரு கேள்வி எழுகிறதே.

ஜாதி வேண்டாம் அது கூடாது  என்பது தினமணியின் கருத்தா தினமணி வக்கீலாக இருக்கும் -வைத்தியநாதய்யர்கள் மாய்ந்து மாய்ந்து தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்துக்கோ, சங்கர மடத்துக்கோ ஜாதி பற்றிய கருத்து என்ன என் பதை முதலாவதாகத் தெரிவித்து விட்டல்லவா கோதாவில் குதிக்க வேண்டும்?

தினமணி வைத்தியநாதய்யர் களோ, சோ இராமசாமிகளோ,  கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை குருமூர்த்திகளோ, சு.சாமி களோ ஆவணி அவிட்டம் கொண் டாடுகிறார்களா, இல்லையா? பூணூல் அணிந்து கொண்டு இருக் கிறார்களா, இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, ஜாதியைப்பற்றி என்ன வேண்டு மானாலும் எழுதித் தொலையட்டும் நமக்கு ஒன்றும் அட்டியில்லை.

ஜாதியையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை லோகக் குரு என்று துதிபாடுவதற்கு வெட்கப் படாதவர்கள் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதுவதற்கு என்ன யோக் கியதை இருக்கிறது? ஒரு பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால், திராவிடர் கழகம் என்ற ஒன்று உருவெடுக்காமல் இருந்திருந்தால், விடுதலை போன்ற ஏடுகள் விழிப் புணர்வை உண்டாக்காமல் இருந் திருந்தால் இந்தக் கேள்விகள்கூட பிராமணோத்தமர்களை நோக்கி எழுந்திருக்க வாய்ப்பில்லை.

பூணூல் போட்ட பார்ப்பனர் களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி, தோப்புக்கரணம் இதோ, சாமி! என்று கூப்பாடு போட்ட கால மும் துண்டை எடுத்துச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு சேவகம் செய்த காலமும் மலையேறி விட்டது என்று தினமணிகளுக்குத் தெரியாதா?

ஜாதி வாக்கு வங்கி என்றெல்லாம் குறைகூறும் தினமணி, ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் 1967 தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டளியுங்கள் என்று பார்ப்பனர்களுக்குக் கட்டளையிட் டாரே  அதற்கு என்ன பெயராம்? அதற்குப் பெயர் ஜாதி அரசியல் இல்லையா?

ஒவ்வொரு தேர்தலிலும் பார்ப் பனர் சங்கம் மாநாடு கூட்டி அல்லது சங்கக் கூட்டம் நடத்தி பிராமணர் கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு என்றும், பி.ஜே.பி.க்கு என்றும் தீர்மானம் போடுகிறார்களே அப்பொழுது இந்த உலக்கைக் கொழுந்துகள் எங்கே தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டு திரிந்தன?

அக்ரகாரவாசிகளே, இது ஆகாது, ஆகாது; கூடாது, கூடாது. இதுபோல் தீர்மானம் போட்டு உங்களைத் தனியே பிரித்துக் காட்டிக் கொள்ளா தீர்கள். அது ஆபத்தில்  போய் முடி யும்! என்று மண்டையில் அடித்தது போல தினமணி தலையங்கம் தீட்டி யிருந்தால் அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருந்தால் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதிட அதற்கு அருகதை உண்டு.

காலமெல்லாம் பார்ப்பனர்களின் தாசானு தாசராகவும், திராவிட இயக்க வீராதி வீரருமாக விளங்கிய தொங்கு மீசைக்காரர் ம.பொ.சிவ ஞான கிராமணியார் 1971-இல் மயி லாப்பூர் தொகுதி சட்டமன்ற தேர் தலில் போட்டியிட்டபோது கற்ப காம்பாள் கோயிலில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டிக் கொண்டபோது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் அவரை எதிர்த்து நின்ற வேட்பாளரான டி.என். அனந்தநாயகி அம்மையாருக்காக மாற்றி அர்ச் சனை செய்தார் என்று ம.பொ.சி. புலம்பினாரே! ஆரிய தம்பிரானுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன? கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பானுக்குக்கூட இனவுணர்வு ஜாதி உணர்வு இருக்கும்போது மற்றவர்களுக்கு இருக்கக் கூடாதா?

வெகு தூரம் போக வேண்டாம் நடந்து முடிந்த மக்களவைத் தேர் தலில் திருச்சித் தொகுதியில் என்ன நடந்தது?

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும் பூர், கந்தர்வக்கோட்டை, புதுக் கோட்டை, சிறீரங்கம் ஆகியவை அடங்கியவை.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க. வும் பெற்ற வாக்குகள் விவரம்:

திருச்சி கிழக்கு:
             காங்கிரஸ் - 51340
             அ.தி.மு.க.,  -48,954
திருச்சி மேற்கு
              காங்கிரஸ்  -50,890
             அ.தி.மு.க., -50,698
திருவெறும்பூர்:
              காங்கிரஸ் _ 56,312
             அ.தி.மு.க., _ 49,657
கந்தர்வக்கோட்டை
            காங்கிரஸ் _ 41977
            அ.தி.மு.க., _ 41236
புதுக்கோட்டை
              காங்கிரஸ் _ 42,228
             அ.தி.மு.க., _ 37,095
சிறீரங்கம்
            காங்கிரஸ் -- 50,767
           அ.தி.மு.க., -70,949
இந்தப் புள்ளி விவரத்தைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பா ளர் சாருபாலா தொண்டமான் அதிமுக வேட்பாளர் திரு ப. குமாரை விட அதிக வாக்குகள் பெற்றுள் ளார்.

சிறீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்குக் கிடைத்த அதிக வாக்குகள் மேற்கண்ட அய்ந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் கீழே தள்ளி, அதற்குமேலும் 4335 வாக்குகளை அதிகமாக அளித்து வெற்றி பெறச் செய்ததே -இதற்குப் பெயர் என்னவாம்? எல்லோருக்கும் தெரிந்த செய்திதானே? அக்கிரகார வாசிகள் அதிகம் நிறைந்த தொகுதி அல்லவா? சிறீரங்கம் தொகுதி உணர்த்தும் பாடம் என்ன?

ஒன்று திரண்டு ஒரே அடியாக வாக்குகளை அதிமுகவுக்கு அள்ளிப் போட்டுள்ளதில் ஜாதி உணர்வு கிடையவே கிடையாது என்று தினமணி சத்தியம் செய்யப் போகி றதா? துண்டை விரித்துத் தாண்டப் போகிறதா?

இதைப்பற்றி அப்பொழுது தினமணி எழுதியதுண்டா?

தமிழர்களே, தமிழர்களே!

பார்ப்பனர்களைப் பார்த்தாவது இனவுணர்வு கொள்ளுங்கள் என்ப துதான் கருஞ்சட்டை தொண்டர் களின் கனிவான வேண்டுகோள்.

நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைகூட ஆரியர் திராவிடர் போராட்டமாகத்தான் அமையப் போகிறது.

தினமணி, துக்ளக் கல்கி வகையறாக்கள் அதற்கான யாகக் குண்டத்தை வளர்க்க குச்சிகளைப் பொறுக்க ஆரம்பித்துவிட்டனர்; தூபக்கால் தயாராகி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

கலைஞரைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்ன ஆரியகுலத் திலகம் எதிர் அணியில். மீண்டும் ஆரியம் அரியணை ஏறலாமா? அதனை அனுமதிக்க லாமா?

மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தாரே, நினைவிருக் கிறதா?

ராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்ட முடியும் என்று வினா தொடுத்தாரே அந்த அம்மையார் அதனை மறுந்துவிடலாமா?

ஆரிய கலாச்சாரங்களான யாகம், யோகம் இவற்றைப் புதுப்பிக்கும் போக்குக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா?

ஆமாம், நான் பாப்பாத்தி தான்! என்று சட்டப் பேரவையிலே ஆடித் தீர்த்தாரே ஆரிய குல மங்கை நெஞ்சில் நிறுத்துங்கள்.

அன்று புத்த மார்க்கத்தை ஊடுருவி ஆரியம் அழித்தது இன்று திராவிட இயக்கத்திலே ஊடுருவி திராவிடத் தத்துவத்தைக் கபளீகரம் செய்கிறது. மீண்டும் மனு தர்மமா?

தந்தை பெரியார் உழைத்ததும், அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்ததும், தன்மான உணர்வுத் தீயை வளர்த்ததும் எல்லாம் பாழுக்குப் போய் விடலாமா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இந்தத் தேர்தலில் திரண்டெழுகிற தமிழர்களின் இனவுணர்வு எரிமலை யால் காலா காலத்திற்கும் காகப்பட் டர் பரம்பரை எழுந்திருக்கக் கூடாது.

உணர்வு பெறுவீர்! உறுதி கொள்வீர்!

ஓங்கட்டும் இனமானம்!

ஒழியட்டும் ஆரியம்!
http://viduthalai.in/new/page-1/4253.html
--- மின்சாரம் -

Saturday, February 12, 2011

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ்.பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்!

வரட்டும் - அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன.

இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமாம், திராவிடர் கழகமும்தான்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்து மதமோ பார்ப்பனர் ஆதிக்கத்தை, மேலாண்மையைக் கெட்டிப் படுத்தும் வெறி கொண்டதாகும்.

பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண் டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத - பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது.

இந்த நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய தலைவர் தந்தை பெரியார்; இயக்கம் - திராவிடர் இயக்கமாகும்.

துயரப்படும் மக்கள் உண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது.

பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் - அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது. எப்படியோ ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் பார்ப்பனீயத்தோடு இணைந்து நின்ற அமைப்புகளாகி விட்டதால் எதிர்ப்பிரச்சாரப் புயலில் பார்ப்பனீயத்தோடு அதுவும் கட்டுண்டு தாக்குதலுக்கு ஆளானது.

தமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால்கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை - டெபாசிட் காலியாயிற்று.

இடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும்; வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம்.

முதல் கேள்வி - பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா என்ற கேள்வி எழும்.

சங்கர மடத்தில் அடுத்த சங்கராச்சாரி யார்? என்ற வினாவும் வெடிக்கும்.

சம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்ன செய்வார்கள்? முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே! என்ன செய்வார்கள்? கைபிசைந்து நிற்பார்கள்.

கழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா? என்று கேட்கும் நிலை உருவாகட்டும்! உருவாகட்டும்!!

http://viduthalai.in/new/page-2/3311.html 

Sunday, October 24, 2010

முட்டுக்கொடுக்கும் கல்கிகள்! - மின்சாரம்

கேள்வி: அயோத்தி தீர்ப்பின்மீது அப்பீல் செய்யாமல் இரு தரப்பினரும் நேரடியாகப் பேசினால், நிலையான தீர்வு உருவாகும் என்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளாரே?

பதில்: தனது கருத்தைத் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இஸ்லாம் வாரியத் தலைவரை மடத்துக்கு வரவழைத்துப் பேச முற்பட்டிருக்கிறார். பேச்சு வார்த்தை என்றால் ஒரு தரப்பு விட்டுக் கொடுக்க வேண்டும். இன்றைய சூழலில் இது புதிய சிக்கல்களை உருவாக்கக் கூடும். மக்கள் ஏற்றுள்ள தீர்ப்பை மேல் முறையீடின்றித் தலைவர்களும் ஏற்றுச் செயல்படுத்துவதே நல்லது. மதத் தலைவர்கள் விவாதங்களை நிறுத்தி விட்டு கைகோக்க வேண்டிய நேரம் இது.

_ கல்கி (24.10.2010) வார இதழில் வெளிவந்த கேள்வி _ பதில்தான் இது.
அயோத்தி தீர்ப்புக்குப்பிறகு பார்ப்பனர்கள் ரொம்பத்தான் அமைதி விரும்புபவர்கள் போலவும், சமரச சன்மார்க்க ஜீவிகள் போலவும் பேச _ எழுத ஆரம்பித்து விட்டனர். இந்தத் தீர்ப்பு வேறு வகையில் அமைந் திருக்குமேயானால் சங்பரிவார்க் கும்பல் நாட்டை எந்த அளவுக்கு ரத்தக் களரியாக்கியிருக்கும் என்பதைக் கற்பனை செய்வதற்கே அச்சமாக உள்ளது.
சரி.. அது ஒருபுறம் இருக்கட்டும். இதில் காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி ஏதோ காரியம் ஆற்றப் புறப்பட்டுள்ளாராமே.
அவருக்குச் சமுதாயத்தில் இன்றைய தினம் இருக்கிற யோக்கியதைக்கு இது போன்ற வேலைகளில் ஈடுபடும் தகுதி உள்ளவர்தானா? இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தலையிடுவதற்குக் குறைந்த பட்சம் தகுதியும், ஒழுக்கமும் தேவைப்படுமே!
கொலை வழக்கிலும், காமக் கிறுக்கிலும் சிக்குண்டு கதை நாறிப் போய்க் கிடக்கும் ஒரு ஆசாமி, ஏதோ பெரிய மனுஷாள் போலத் தம்மைக் காட்டிக்கொள்வதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றுதான் கருதப்பட முடியும்.
சமரசம் பேச விரும்புபவர் கொஞ்சம் வாயை அடக்கி வாசிக்க வேண்டும்; அதற்குரிய தகுதி உடையவராக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டாமா? தீர்ப்பு வந்தவுடன் என்ன சொன்னார்?
முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு இதே ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்? அதை முஸ்லிம்களே விரும்ப மாட்டார்கள். முஸ்லிம்களுக்கு அயோத்தியில் ஏழு மசூதிகள் உள்ளன. அதனால் இன்னொரு மசூதியைக் கட்ட அவர்கள் விரும்பமாட்டார்கள். மேலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவை யில்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும். அதனால் அந்த இடத்தில்தான் மசூதி கட்ட வேண்டும் என்ற அவசியம் முஸ்லிம் களுக்கு இல்லை (தினத்தந்தி 2.10.2010) இப்படிச் சொன்னவர்தான் இந்த ஜெயேந்திர சரஸ்வதி என்ற கொலை வழக்குக் குற்றவாளி!
முந்திரிக்கொட்டைத்தனமாக இப்படி உளறிக் கொட்டிவிட்டு, இஸ்லாம் வாரியத் தலைவரைப் பேச்சு நடத்திட மடத்துக்கு அழைக்கிறாராம்.
எப்படியிருக்கிறது? எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டுச் சொல்லாமல் இருந்தால் சரி, ஏதோ அழைக்கிறார் _ என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்ற மரியாதையாவது மிஞ்சும்.
நான் உமி கொண்டு வருகிறேன் _ நீ அரிசி கொண்டு வா, ஊதி ஊதித் தின்னலாம்! என்கிற மத்தியஸ்தத்தை எந்தக் கிறுக்கரால்தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியும்.
அவர் ஒரு நடுநிலையாளர் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும்தானே இன்னொரு. தரப்பினர் அவரை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்?
அயோத்திப் பிரச்சினையில் இதற்கு முன்பும்கூட தலையிட்டு மூக்கு உடைபட்டு வந்தவர்தான் இவர்.

நீ சைவன் _ ஸ்மார்த்தன் _ நீ யார் எங்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தில், ராமன் விஷயத்தில் தலையிட? என்று ராமஜென்மபூமி நியாஸ் தலைவர் மூக்கறுக்கவில்லையா? மூக்கறுபட்டு டில்லியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு ஓடி வந்த கதையெல்லாம் ஏராளம் இருக்கின்றனவே!

பாபர் மசூதி இடிப்பு முடிந்து போன பிரச்சினை. அதைப்பற்றிப் பேசுவதோ, நினைவு நாளைக் கொண்டாடுவதோ தவறு. இப்பொழுது ராமர்தான் குடிசையில் வாழ்ந்து வருகிறார். குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு எப்படி அரசுஅந்த இடத்தைப் பட்டா போட்டுக் கொடுக்கிறதோ, அதேபோல் தற்போது குடிசையில் இருக்கும் ராம-ருக்கு அந்த இடத்தைக் கொடுப்பது-தான் நியாயம் (தினத்தந்தி 8.12.1999) என்று சொன்ன இந்த ஆசாமி இஸ்-லாம் வாரியத் தலைவரை சமரசப் பேச்சுக்கு அழைக்கிறாராம்.

இதில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக்கூடாது.

ராமன் என்றால் அடேயப்பா, எப்படி எப்படியெல்லாம் ஏற்றிப் போற்றுவார்கள்! அவரின் அம்பறாத் தூளியிலிருந்து புறப்பட்ட அம்பு எப்படி எப்படி எல்லாம் சென்று தாக்கும் என்று காகித அம்புகளை விடு வார்கள்.

அப்படிப்பட்ட ராமன்பற்றி ஜெயேந்திரர் எப்படி சொல்கிறார்? பாவம் ராமனாம் _ குடிசையில் வசிக்-கிறானாம். அரசு பார்த்து பட்டா கொடுக்க வேண்டிய ஏழையாம்! இதையே கலைஞர் சொல்லியிருந்தால் இந்தக் கூட்டம் கச்சையை இறுக்கிக் கட்டி சலாம்வரிசை ஆடியிருக்காதா? தங்-களுக்குக் காரியம் ஆக வேண்டு-மானால் காலைப் பிடித்துக் கெஞ்சத் தயங்காதவர்களாயிற்றே -_ அதனால்-தான் மகாவிஷ்ணுவின் அவதாரத்தை பாவம் ஏழைக் குடிசையில் கிடக்-கிறான், கொஞ்சம் கருணை காட்-டுங்கள் என்று காலைப் பிடிக்கிறார் சங்கராச்சாரியார்.

பாபர் மசூதி குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்ற பிரச்சினை வெடித்த-போது இதே ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்.

பாபர் மசூதி என்பது ஒரு கட்டடம். ஒரு கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கையாகாது, எனவே (தினமணி 27.11.2000) அவர்கள் பதவி விலகத் தேவையில்லை என்று சொல்லவில் லையா?

இந்த யோக்கிய சிகாமணிகள் சமரச வேலையில் ஈடுபடுகிறார்களாம் _ தூக்கி நிறுத்திப் பல்லக்கில் ஏற்றப் பார்க்கிறது கல்கி வகையறாக்கள்!

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியைவிட கீழே போவதற்கு, தரம் கெட்டுப் போனதற்கு, மக்கள் மத்தியில் சவுங்கை கெட்டுப் போனதற்கு இன்னொருவர் இனி-மேல்தான் பிறக்க வேண்டும். இந்த நிலையிலும் கல்கி சோ கூட்டம் அவரைப் பெரியவாள் என்று குறிப்-பிடுவதும், ஒரு பெரிய சமாச்சாரத்தின் சமரசப் பணியில் ஈடுபடுகிறார் என்றும் பாவனை காட்டுவதுமான சாமர்த் தியத்தை கவனிக்க வேண்டும்.

பார்ப்பனீயம் பார்ப்பனீயம் என்றால் என்ன என்று சிலர் கேட்கிறார்களே _ இதற்குப் பெயர்தான் பல்லிளிக்கும் பார்ப்பனீயம் என்பது!
http://viduthalai.periyar.org.in/20101023/snews01.html

Friday, October 22, 2010

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பார்ப்பனத் துணைவேந்தர் மீனாவின் அதிகாரப் போக்கு!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்த ராக பார்ப்பனப் பெண் மீனா பெறுப்பேற்ற காலம் முதல் தொடர்ந்து அப்பல் கலைக்கழகக் கட்டுப் பாட்டிலுள்ள அனைத்துத் துறைகளிலும், தனது ஆதிக்க வேலையை தொடங்கி உள்ளார். அவர் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே அப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த பெரியார் உயராய்வு மய்யத்தைச் செயல்படவிடாமல் முடக்கிவிட்டு, அதில் மூத்த,அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களாக அறிஞர் களாக பணியாற்றியவர் களின் வயது வரம்பைக் காரணம் காட்டி அவர் களை வீட்டுக்கு அனுப்பி னார். இதனால் பெரியார் உயராய்வு மய்யத்தில் இயங்கி வந்த பெரியாரியல் பட்டய வகுப்பு மாணவர் களின் நிலை கேள்விக் குறியாகிப் போனது.

மேலும் உறுப்புக் கல்லூரிகளுக்கு அண் மையில் ஆசிரியர்கள் நியமனம் நடந்தது. அந்த நியமனத்தில் எந்த விதி முறைகளையும் பின் பற்றாமல், அனைத்து முறைகேடான காரியங் களையே செய்தார். தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் இதுபோன்ற முறைகேடான காரியங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது அனைத்துத் துறை களுக்கும் துணை வேந்தர் அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் பல்கலைக் கழகத் துறைத் தலைவர்கள் யாரும் எந்த பத்திரிகைகளுக்கும் நேரி டையாக தொடர்பு கொண்டு தகவல் அளிக்கக் கூடாது. துறை சார்ந்த செய்திகள் வெளியிட வேண்டுமென்றால், துணைவேந்தரின் ஒப்புதல் பெற்று, துணை வேந்தரின் பெயரில்தான் அந்த அறிக்கைகள் வெளி யிட வேண்டுமென்று கட்டாயமாக அறிவு றுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக நிரு வாகம் என்பது தன்னிச் சையான அமைப்பு. இந்த பல்கலைக் கழகத் தில் பெரியார் உயராய்வு மய்யம் (முடக்கப்பட் டுள்ளது), தொலை உணர்வு மய்யம், அண்ணா இருக்கை, பாரதிதாசன் உயராய்வு மய்யம், பல்கலைக் கழக தகவலியல் மய்யம், நேரு ஆய்வு மய்யம், மாற்றுத் திறனாளிகள் வளமய் யம், தொலைநிலைக் கல்வி மய்யம் என பல் வேறு மய்யங்கள் இப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகின்றன. மேலும் உறுப்பு கல்லூரி களும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையி லும், பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த துறைகளில் நடைபெற்று வரும் சிறப்பு வகுப்புகள், பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் குறித்து, அந் தந்த துறைத் தலைவர் களே அது தொடர்பான செய்தி, அறிக்கை வெளி யிட்டு வந்தனர்.

மேலும் மூத்த அறிஞர்கள் நிறைந்த இந்த பல்கலைக் கழகத்தில், தங்களது கண்டுபிடிப் புகள், ஆய்வறிக்கைகள் வெளியிடுவது வழக்க மாக இருந்து வந்தது. இந்நிலையில் பார்ப் பன துணைவேந்தர் மீனா ஒரு சர்வதிகாரப் போக்கினைத் திடீரென கடைப்பிடித்துக் கொண்டு, மூத்த பேரா சிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு வாய்ப் பூட்டு போட்டிருப்பது என்ன நியாயம்? துணை வேந்தரான தனக்கே எல்லா புகழும், பெயரும் கிடைக்க வேண்டு மென் பதற்காக பல அறிஞர் களுடைய திறமைகளை முடக்கி போடுவதோடு மட்டுமல்லாமல், மேலும் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் முறை கேடுகளை தெரிவித்த தாலும் இதுபோன்ற நடவடிக்கையில் துணை வேந்தர் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிகிறது.

இதனால் பேராசிரி யர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாடு அளவில் சிறந்து விளங்கி வந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் தற்போது மோச மான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் பாரதிதாசன் பல்கலைக் கழக நிரு வாகம் ஒட்டுமொத்த மாக பார்ப்பன துணை வேந்தரின் ஆதிக்கத்தின் உச்சத்திற்கே சென்று விடும் பேராபத்து உரு வாகியுள்ளது.
http://www.viduthalai.periyar.org.in/20101022/news25.html

Sunday, September 26, 2010

பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டதா?-கவிஞர் கலி பூங்குன்றன்


கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...?
பதில்: பிராமணர்கள் உயர்ஜாதி-யினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்-டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்-துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!
(கல்கி 19.9.2010 பக்கம் 30)
_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:
Ignored by Political Parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ ஆத்திரத்-தோடோதான் அய்யர்வாளின் வாயிலி-ருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.
மனிதர்களாக இருப்பவர்கள் தேவையானவர்களே! பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - _ இன்றைக்கும் ஒவ்-வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவு-படுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.

ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எவனாவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கிறாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்-ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்-களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயி-லாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாட-கைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்-பட்டுள்ளது.

மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்-பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்-பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்-வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்-களைப் பிய்த்துத் தின்பது உண்மை-யெனின், சகலவிதமான கூலி வேலை-களையும் செய்ய வேண்டியதுதானே?
தந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கி-றார்களா? களை எடுக்கிறார்களா? ரிக்ஷா இழுக்கிறார்களா? துணி வெளுக்கி-றார்களா? சவரத் தொழில் செய்கி-றார்களா? ஏன் இவற்றைச் செய்வ-தில்லை? வறுமையிலும் வருணா-சிரமம் இருப்பது ஏன்? அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பு-கிறார்கள். அவர்களின் சதவிகி-தமான மூன்று சதவிகிதம் கிடைக்க-வில்லை என்று கூற வருகிறார்களா? அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்-ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -_ அந்த நிலை பறி போய்-விட்டது என்று பதறுகி-றார்களா? என்பதைத் தெரிந்து கொள்-ளவே நமக்கு ஆசை.


2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்-வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்-கள் யார்?


பி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமி-பிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்-நாட்டில் அரசின் தலைமைச் செய-லாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே! இதேபோல தாழ்த்தப்-பட்டவர்களோ, பிற்படுத்தப்-பட்டவர்-களோ, மிகவும் பிற்படுத்தப்-பட்டவர்-களோ தொடர்ந்து தலைமைச் செய-லாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா?

பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா?


மத்திய அரசு துறைகளில் தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! -_ சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.


அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறை-களும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே?இந்த நிறுவனங்களுக்கு பணிய-மர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள்? முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்-பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா? எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து (ஷிக்ஷீஸ்மீஹ்)ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்-தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே!
தந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.
அவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.இதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே!எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்-கூடாது, அவன் ஏழையாகவே இருக்க-வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்-லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.
ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்-பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

(குடிஅரசு 9.11.1946)
பார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்-படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் -_ நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்?

ஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவா-ளர் சோ ராமசாமி? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்று துக்ளக் தலை-யங்கம் தீட்டுகிறதே! (துக்ளக் 18.11.1998)

தமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடி-யுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதி-னாரே! அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார்? பார்ப்பனர்கள் தமிழ்-நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்ப-வில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே!

எவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்-பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.


பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்-விட்டது என்று கல்கி பதில் சொல்-கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்-பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா? (டிசம்பர் 2005)
அந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்? அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா?
2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்-முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்று ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே -_ மறந்து விட்டீர்களா?
தமிழன் என்று சொல்லடா! தலை-நிமிர்ந்து நில்லடா - _ அது ஒரு சுலோகம்.
பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே _ இதுதான் பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா?
பொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது?
பார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன?
நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).
அய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகி-விட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா?

தமிழ் செம்மொழி ஆனால், வீட்-டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்-டாக அரசு அறிவிக்க முடியாது _ அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.


இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது _ பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்-கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டி-ருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்-லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்-ளார் _ இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது -_ வேகவே வேகாது!

இந்தியா முழுமையும் சமஸ்கிருதப் பள்ளிகளா?


மதுரைப் பதிப்பு மாலை முரசு ஏட்டில் (21.9.2010) கீழ்க்கண்ட சேதி இடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பண்டைக் காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வந்த சமஸ்கிருத மொழி படிப்படியாக தனது செல்வாக்கை இழந்தது. இருப்பினும் செம்மொழி என்ற தகுதியுடைய சமஸ்கிருத மொழி அறிவுக் களஞ்சியமாகத் திகழ்வதால், சமஸ்கிருத கல்விக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதையடுத்து, முதலாவதாக மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் சமஸ்கிருதப் பள்ளி தொடங்கப்படுகிறது.
இதில் 55 சதவிகித இடங்கள் அகில இந்திய பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக ஒதுக்கப் பட்டுள்ளன. 15 சதவிகித இடங்கள் ஏழை, எளிய மாணவர் களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்கள் பொதுப் பிரிவின்கீழ் வருகின்றன. பொதுவாக 25 சதவிகித இடங்களை நலிந்த பிரிவினருக்கு ஒதுக்குவது வழக்கம்.
ஆனால், சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களில் 15 சதவிகித இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதால், இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து நன்கொடை பெறலாம். அதன் வாயிலாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது பட்டியலில் இந்தியாவில் 22 மொழிகள் இருக்கின்றன. இதில் சமஸ்கிருதம் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், இம்மொழி செத்த மொழியாகக் கருதப்படும் (Dead Language) நிலையில் உள்ளது.
இந்தியா (1999) பப்ளிக்கேஷன் டிவிஷன் (Ministry of Information and Broadcasting, Govt of India) இந்தியாவில் 18 மொழிகள் பேசும் மக்களின் புள்ளி விவரங்களை வெளி யிட்டுள்ளது. 1971 இல் 2212 பேர், 1981 இல் 6106 பேர், 1991 இல் 49,736 பேர், 1971 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் சூநபடபைடெந என்றும் 1991 இல் வெறும் 0.01 சதவிகிதம் என்றும் அதிகாரப்பூர்வமான மத்திய அரசின் தகவலாக வெளியிடப் பட்டுள்ளது. 1971 மற்றும் 1981 இல் புறக்கணிக்கத்தக்க (Negligible) என்ற சொல்லையே இந்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்ப்பனர்கள் உள்பட நாட்டு மக்களால் புறக்கணிக்கப் பட்ட செத்த மொழிக்கு உயிரூட்டும் வேலையில் மத்திய அரசு ஏன் இறங்கியுள்ளது என்பது முக்கியமான கேள்வியாகும்.
பெரும்பான்மை மக்களின் பணம் சிறுபான்மைப் பார்ப் பனர்களின் தாய்மொழி என்கிற காரணத்தாலும், மத்திய மனித வளத்துறை அமைச்சர் அச்சமூகத்தவர் என்பதாலும்தானே இந்த விரயம்?
குடிஅரசான பத்து ஆண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும் என்று இந்திய அரசமைப்பின் 45 ஆம் பிரிவு அறுதியிட்டுக் கூறியிருந்தும், பல பத்தாண்டுகள் பறந்தோடியும் அந்த நிலை எட்டப்படவில்லை.
2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மறுபடியும் 86 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இன்றைய நிலையில்கூட, இந்தியாவில் எழுத்தறிவு என்பது 64.84 சதவிகிதம்தான்; இதில் பெண்கள் 54.16 சத விகிதம்தான்.
கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விடுபவர்களில் பழங்குடியினர் 87.7 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட வர்கள் 86.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோர் 75.1 விழுக்காடு என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. (செப்டம்பர் 8, 2006, எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி).
இந்த வெட்கம் கெட்ட நிலையில், கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை என்ற பழமொழிக்கேற்ப, செத்துச் சுண்ணாம்பாகிப் போன ஒரு மொழியைக் கற்பிக்க இந்தியா முழுமையும் கல்விக் கூடங்கள் திறக்கப்படுகின்றன என்றால், இதன் பொருள் என்ன?
1925 இல் சேலம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொன்னாரே - வெள்ளைக்காரன் வெளியேறிய சுதந்திர இந் தியாவில் டெமாக்கிரஸி இருக்காது; மாறாக பிராமினோ கிரஸிதான் இருக்கும் என்றாரே - அதுதானே இதன் பொருள்?
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒரு ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து, கோடிக் கணக்கான ரூபாய்களைக் கொட்டி அழுதார்கள். திராவிடர் கழகம்தான் அப்பொழுதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தது. தமிழையும் அவ்வாறு அறிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டார். முதலமைச்சர் கலைஞர் அவர்களும் வேண்டுகோள் விடுத்தார். கடைசிவரை அந்தப் பார்ப்பன நந்தி அசைந்து கொடுக்கவில்லையே.
இப்பொழுது மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காங்கிரஸ் தலைமையில், மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறது. ஆட்சி மாறினாலும், அடிப்படையில் பார்ப்பனத் தன்மை என்கிற நங்கூரம் அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு அடை யாளமாக இதனைக் கருதவேண்டியுள்ளது.
55 சதவிகித இடங்கள் அகில இந்தியப் பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக இத் தகைய சமஸ்கிருதப் பள்ளிகளில் இடங்கள் ஒதுக்கப்படுமாம்.
ஈரோட்டு நுண்ணாடியைக் கொண்டு பார்த்தால், இதில் நெளியும் கிருமிகள் யாவை என்பது எளிதில் விளங்கிவிடுமே.
மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் இடம்பெற்றிருக்கும் வேலை வாய்ப்பு 12 சத விகிதத்தைத் தாண்டாத நிலையில், மீதி உள்ள இடங்களை ஆக்கிரமித்து இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர் களுக்குத்தான் இந்த 55 விழுக்காடு இடங்கள். பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளுக்கு 55 விழுக்காடு என்று நேரடியாகச் சொல்லாமல் - கொஞ்சம் சுற்றி வளைத்து மத்திய அரசுப் பணிகளில் இருக்கும் அதிகாரிகள் வீட்டுப் பிள்ளைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள இதர கட்சிகள் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்குமாக! தடுத்து நிறுத்துமாக!

weather counter Site Meter