Pages

Search This Blog

Tuesday, March 22, 2011

வீதி உலா சென்றபொழுது கடவுள் பொத்தென்று கீழே விழுந்தார்! பக்தர்கள் தலைகவிழ்ந்து துயரம்

காளஹஸ்தி, மார்ச் 21- காளஹஸ்தீஸ் வரர் கோவிலில் வீதி உலா வின் போது பல்லக்கில் எடுத்துச்சென்ற காள ஹஸ்தீஸ்வரர் சிலை திடீ ரென்று கீழே விழுந்தது. அம்மன் சிலையும் சரிந்த தால் அங்கிருந்த பக்தர் களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் ராகு- ஞானபிர சுனாம்பிகை உடனுறை காளஹஸ் தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவி லில் ஆண்டு தோறும் பங்குனி மாத பவுர்ணமி விழா கொண் டாடப்படு வது வழக்கமாம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பங்குனி மாத பவுர்ணமியை முன் னிட்டு கோவிலில் மூலவ ருக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம் நடந்த தாம். பின்னர் சிவன் சன்னதி எதிரே உள்ள அலங்கார மண்டபத் தில் உலா மேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரம் நடைபெற்றதாம்.

அதைத்தொடர்ந்து இரவு காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை அலங்கரிக்கப்பட்டு நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக செல்வதற் காக பல்லக்கில் வைத்து வீதி உலா சென்று கொண்டு இருந்தனராம்.
அப்போது திடீரென்று காளஹஸ்தீஸ்வரர் பொம்மை பல்லக்கில் இருந்து கீழே விழுந்தது. அத்துடன் ஞானபிர சுனாம்பிகை அம்மனும் பல்லக்கிலேயே இருந்த படி சாய்ந்ததாம். இத னால் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட் டது. சலசலப்பும் உரு வானது.

உடனடியாக கீழே விழுந்த மொம்மை பல் லக்கில் தூக்கிவைக்கப் பட்டு அலங்காரம் செய் யப்பட்டதாம். அதுபோல அம்மையார் சிலையை யும் சரிசெய்யப்பட்ட தாம். அதை தொடர்ந்து நான்கு மாடவீதிகளி லும் ஊர்வலம் நடந்த தாம்.

இதுகுறித்து பக்தர் கள் கூறுகையில், "காள ஹஸ்தீஸ்வரர் கோவி லில் இதற்கு முன்பு இது மாதிரி நடந்தது கிடை யாது. மேலும் கடந்த ஆண்டு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது. கோவில் கோபுரம் கட்டாததால் இதுபோல நடந்து இருக் கலாம்'' என்று தெரிவித் தனராம்.

Sunday, March 13, 2011

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற இரு நாள் நிகழ்ச்சிகள் திரைப்படம்-நாடகம்-பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் சார்பில் இருநாள்கள் நடைபெறும் நிகழ்ச் சியில் பகுத்தறிவுத் திரைப்படம்- அண் ணாவின் நாடகம், பெரியார் விருது வழங்கல் விழா ஆகிய நிகழ்ச்சிகள் உணர்ச்சி மயமாய் நடைபெறு கின்றன. நிகழ்ச்சியின் நிறைவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உரையாற் றுகிறார்.


தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கோடைகால விழாவாக கொண்டா டுவது வழக்கம்
15 ஆம் ஆண்டு விழா
இந்த ஆண்டு தந்தை பெரியார் முத் தமிழ் மன்றம் 15ஆம் ஆண்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் 15.3.2011 அன்று மாலை 6.30 மணிக்கு முதல்நாள் நிகழ்ச்சி துவங்கி நடைபெறு கிறது. சிந்திக்கத் தூண் டும் பகுத்தறிவுத் திரைப் படம் காட்டப்படு கிறது. பொதுமக்கள்-இனவுணர்வாளர்கள் கண்டுகளிக்கலாம்.
இரண்டாம் நாள் விழா
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற இரண் டாம் நாள் விழா 16.3.2011 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் எழுச்சிகர மாய் தொடங்கி நடக் கிறது. வரியியல் அறி ஞர் ச.இராசரத்தினம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசுகிறார்.
பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கு ரைஞர் கோ.சாமிதுரை, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றுகின் றனர்.

திராவிடர் கழக தலைமை நிலையச் செய லாளர் வீ.அன்புராஜ் அனைவரையும் வர வேற்று உரையாற்று கின்றார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரை நிகழ்த்து கின்றார்.

கவிஞர் செ.வை.ர. சிகாமணி இணைப்பு ரையாற்றுகின்றார்.

அவன் பித்தனா?அண்ணா நாடகம்
அடுத்து திராவிடர் கழக கலைத்துறை அமைப்பாளர் மு.அ. கிரிதரன் அவர்களின் முயற்சியால் அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய அவன் பித்தனா? என்ற மிகச் சிறப்பான நாடகம் நடைபெறும்.

இந்நாடகத்திற்கு பிரபல திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் தலைமை வகித்துப் பேசுகிறார்.

கி.வீரமணி, விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்
ஓவியர் டிராட்ஸ்கி மருது, வளர்ந்து வரும் தொழில்முனைவர்கள் ஆர்.கருணாநிதி, த.ரமேஷ் ஆகியோ ருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி விருது வழங்குகிறார்.

நிறைவாக திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரை யாற்றுகிறார்.
நிகழ்ச்சியின் முடிவில் இறைவி நயினார் நன்றியுரையாற்று கின்றார்.


தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்ட கோவில் இடிப்பு!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனை மய்யப் பகுதியில் எந்தவித முன் அனுமதி பெறாமலும், அரசு ஆணைக்கு விரோதமாக புதிதாகக் கட்டப்பட்ட கோவிலை இடித்து அப்புறப் படுத்த வேண்டும் என்று நகர திராவிடர் கழக தலைவர் ப. தேசிங்கு மற்றும் நகர செயலாளர் சு. முருகேசன் ஆகியோர் மூலமாக மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் ஏற்பாட்டின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 3.4.2008 அன்று ளி.ஷி. 143/2008 என்ற வழக்கு தொடுக்கப்பட்டது.

மேற்கண்ட சட்ட விரோத மாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணியை உடனடி யாக நிறுத்தத் தடை விதிக்கக் கோரியும், இதற்கு முன்பே கட்டப்பட்டுள்ள கட்டுமா னத்தை இடித்து அப்புறப் படுத்த வேண்டும் எனவும் வழக்குத் தொடுக்கப்பட்டு, இடைக்கால தடையை நீதிமன்றம் கொடுத்தது.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர் தரப்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் (டீன்) மற்றும் மாவட்ட ஆட்சியரும் வழக்கு விசாரணையின்போது கட்டப்பட்டு வரும் கோவில் வழிபாட்டுத்தலமாக இதுவரை இல்லை என்றும், இந்த கோவில் யாருடைய அனுமதி யும் இல்லாமல் கட்டப்பட் டுள்ளது எனவும், இதை இடித்து அப்புறப்படுத்த ஒப்புக் கொள்கிறோம் எனவும் அவர்களது வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்த குறிப்பாணையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அந்தக் கோவிலை இடித்து அப்புறப் படுத்த 04.11.2009 அன்று உத்தரவிட்டது.

அதன்பிறகு மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் மூலமாக கழகத் தோழர்களுடன் இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரையும், மருத்துவக் கல்லூரி முதல்வரையும் நேரில் சந்தித்து 21.5.2010 அன்று உத்தரவு நகல்களை இணைத்து மனு கொடுத்தும் மீண்டும் இருமுறை நேரில் சந்தித்து நினைவூட்டி மனு கொடுத்தும் சம்பந்தப்பட்ட நிருவாகம் இடித்து அப்புறப்படுத்தாது காலம் தாழ்த்தி வந்த நிலையில் 4.3.2011 அன்று மருத்துவக் கல்லூரி நிருவாகம் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்துள் ளார்கள்.

மருத்துவக் கல்லூரியின் முக்கியமான இடத்தில் கோவில் கட்டி வழிபாடு என்ற பெயரில் ஒலிபெருக்கி வைத்துப் பயன்படுத்தும் நிலையில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மிகப் பெரிய தொல்லை கொடுப்பதோடு, இந்த இந்துக்கோவிலை ஒரு முன் மாதிரியாக காட்டி வேறு மதத்தவர்களும் வழிபாட்டுத்தலம் கட்டும் நிலை ஏற்பட்டால் கல்வி நிலையங்களில் தேவை இல்லாத மதப்பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தோடுதான் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களது ஒப்புதலோடு மேற்கண்ட நடவடிக்கை தஞ்சையில் எடுக்கப்பட்டு அதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது.

இதனை மற்ற மற்ற அரசு அலுவலகங்களும், வளாகங்களும் பின்பற்றுமா?

பின்பற்றாவிடின் கழகம் தன் கடமையைத் தொடர்ந்து செய்யும்.
http://viduthalai.in/new/page4/5248.html 

Friday, March 11, 2011

அரசியலில் பெண்கள் பங்கு ஏற்பதில் இந்தியா 98ஆம் இடம்

உலக நாடுகளில் அரசியலில் பெண்கள் பங்கு ஏற்பதில் இந்தியா 98ஆம் இடத்தில் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்பட்டு 64 ஆண்டுகள் ஓடிய பிறகும் இந்த நிலை என்றால் - இதற்கான காரணம் என்ன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். உரிய வகையில் முயற்சிகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாரத மாதா கி ஜே! என்று நாட்டைத் தாய்க்கு ஒப்பிட்டுப் பெருமை பேசினால் மட்டும் போதாது.

மக்கள் தொகையில் சரி பகுதியினராக இருந்து வந்த பெண்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பு ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டது (2009). ஆண் - பெண் முன்னேற்றத்தில் இடைவெளி 134 நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. அதில் இந்தியா 114ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1991இல் ஆயிரம் ஆண்கள் என்று இருந்தால் பெண்களின் எண்ணிக்கை 945 ஆக இருந் தது. 2001ஆம் ஆண்டிலோ பெண்களின் எண்ணிக்கை 923 ஆக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் முன்னேற்றம் மற்ற நாடுகளைவிட குன்றியிருப்பதற்குக் காரணம் - இந்துத்துவா என்னும் மோசமான - மானுடத்தை அரிக்கும் க்ஷயரோக நோய் தான்.

மனுதர்ம சாத்திரத்தையும், கீதையையும் முதலாவ தாகத் தடை செய்ய வேண்டும். அதன் மூலம் அதிர்ச்சி ஒன்று சமுதாயத்தில் உருவாக்கப்பட்டு, புதிய சிந்தனைக்கு நடவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் மக்களவையின் உறுப்பினர் எண் ணிக்கை 544. அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 60 ஆகும் (11 சதவிகிதம்). அதுபோலவே மாநிலங்கள வையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 242. அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 26 தான் (10.2 சதவிகிதம்).

இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில்கூட இதைவிட பன்மடங்கு பெண்களின் சதவிகிதம் அதிகமாகும். வங்கதேசம் 65ஆம் இடத்தில் இருக்கிறது (18.6 சதவிகிதம்).

பாகிஸ்தானைவிட 47 இடங்களும், நேபாளத்தைவிட 80 இடங்களும் இந்தியா பின் தங்கியுள்ளது.

சக்திக்குப் பெண் கடவுள், கல்விக்குப் பெண் கடவுள், செல்வத்துக்குப் பெண் கடவுள் என்று கட்டிக்கொண்டு அழும் பாரதப் புண்ணிய பூமியில்தான் பெண்கள் இந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

33 சதவிகிதம் இடங்களில் நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்கள் தேர்வு செய்யப்படு வதற்கே ஆயிரம் ஆயிரம் எதிர்ப்புகள் - குறுக்குச்சால்கள்!

நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே பெண்களுக்கு வழிவிட மறுக்கிறார்கள்.

இந்தத் தடைக்குக் காரணமானவர்கள் கட்சிகளைக் கடந்த ஆண்கள் என்பதுதான் மிகவும் முக்கியமான உண்மையாகும்.

கட்சிகளைக் கடந்து பெண்கள் இந்தப் பிரச் சினையைக் கையில் எடுத்துக் கொள்ளாதவரை இதற்குத் தீர்வு காண்பது முயற்கொம்பே!

நாட்டில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கான குழு 1974இல் அமைக்கப்பட்டது. மத்திய கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத்திடம் அந்தக் குழுவால் அளிக்கப்பட்ட பரிந்துரையில் ஒன்றுதான் - நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

1993இல் ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பகுதி இடங்களை ஒதுக்கிட வகை செய்யும் 73 மற்றும் 74 ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

1996 செப்டம்பர் 12 அன்று தேவகவுடா பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவை களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களுக்கு வகை செய்யும் 81ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

1998இல் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது 84ஆம் அரசியல் சட்டத்திருத்த மசோதாவாக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

மீண்டும் 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடைசியாக 2010இல் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா மாநிலங் களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

ஆனால் மக்களவை இடம் கொடுக்கவில்லை. காரணம் என்ன? உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இடஒதுக் கீட்டை அளிப்பதற்கு என்ன தயக்கம்? சமூகநீதியை ஆதரிக்கும் கட்சிகள்கூட இந்தத் திசையில் சிந்திக்காதது ஏன்? இடதுசாரிகள் ஏன் இந்தத் திசையில் பார்வையைச் செலுத்தக் கூடாது?

உள் ஒதுக்கீடு கேட்பவர்களால்தான் இந்தச் சட்டம் நிறைவேறாமல் இருக்கிறது என்று திசை திருப்பப் பார்க்கிறார்கள். அது அல்ல உண்மை. இந்தச் சட்டம் எந்த வகையிலும் நிறைவேற்றப்படக் கூடாது என்று எண்ணு கின்ற மனோவியாதிக்காரர்களின் பிரச்சாரம் இது. ஊடகங்களும் பார்ப்பனர்களின் கைகளில் இருப்பதால், மனுவாத சிந்தனையோடு பிரச்சினையை அணுகு கிறார்கள். எல்லாக் கட்டுகளையும் உடைத்தெறிய ஒடுக் கப்பட்ட பெண்கள் வீதிக்கு வந்தால்தான் வழி பிறக்கும் - இது தந்தை பெரியார் காட்டும் அறிவு வெளிச்சமாகும்.

http://viduthalai.in/new/page-2/5179.html 

திருநீற்று மோசடி

(எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. - ஆ.ர்)

விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
நீறு புனைவார் வினையை
நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது
நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர்
செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில்
முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

சிவபுராண புளுகு

கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பாவத்திற்குப் பரிகாரம்

தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேசவாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே. இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

http://viduthalai.in/new/page-7/5215.html 

கடவுள்

1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.


2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர்களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.

4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.

6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.

7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாக்கவும் கட்டப்பட்டதாகும்.

8. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது.
ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.

10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

http://viduthalai.in/new/page-7/5214.html 

Wednesday, March 9, 2011

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு இடமில்லை

இந்தியா முழுமையும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்திடும் முடிவை அகில இந்திய மருத்துவக் குழு தன்னிச்சையாக அறிவித்தது.

தொடக்கத்தில் அந்த முடிவுக்குப் பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு- தி.மு.க. ஆளும் தமிழ்நாடு அரசு மற்றும் சில மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போர்க்கொடி உயர்த்தின.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டும் விட்டது.

இந்த நிலையில், மத்திய மருத்துவக் குழு உச்சநீதிமன்றம் சென்றது. மத்திய அரசு புதிய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மாநிலங்களைக் கலந்துகொண்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறியது. இந்த வழக்கில் தி.மு.க. அரசும் தன்னை இணைத்துக் கொண்டது.

மத்திய மருத்துவக் குழுவுக்கு அதிக அதிகாரமா? மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா? என்ற கேள்விக்கிடையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களும் தான்.

அரசுக்கு மேலாக சில குழுக்கள் இருந்துகொண்டு மேல் வருண மனப்பான்மையுடன் நடந்துவருகின்றன. மக்களுக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளவேண்டியதும், பதில் சொல்ல வேண்டியதும் அரசுதானே தவிர, மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகள் அல்ல - அவர்கள் கொழுத்த சம்பளத் தைத் தின்றுகொண்டு குளிர்பதன அறையில் சொகுசான அனுபவத்தில் திளைக்கக் கூடியவர்கள்.

நியாயமாக இதுபோன்ற குழுக்களில் கூட அனைத்துப் பிரிவினருக்குமான பிரதிநிதித்துவம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பிரதமருக்கு ஆலோசனை கூறிடக் குழு ஒன்று உண்டு (முடிறடநனபந ஊடிஅஅளைளடி) அதில் பார்த்தாலும் சமூகநீதி என்றால், இளக்காரமாகப் பார்க்கும் மெத்தப் படித்த பேர்வழிகள்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அனுமதி வழங்காத நிலையில், மருத்துவக் கவுன்சில் தானடித்த மூப்பாக நடந்துகொள்வது சரியானதுதானா?

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகளே மருத்துவக் கல்லூரிகளை நிதி நெருக்கடியையும் சந்தித்து நடத்திக்கொண்டு இருக்கின்றன.

அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப மாணவர்களைத் தேர்வு செய்வது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொறுப்பாகும். இதில் தலையிடுவதற்குத் தார்மீக ரீதியில் எந்தவித உரிமையும் மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது.

மத்திய தொகுப்பு என்று கூறி, பிற மாநிலங்களில் உள்ள மொத்த எண்ணிக்கையில் (எம்.பி.பி.எஸில்.) 15 சத விகிதத்தை எடுத்துக் கொள்கிறது. முதுநிலைப் படிப்புக்கோ 50 விழுக்காட்டைக் கபளீகரம் செய்து கொள்கிறது.

ஒட்டகத்தைக் கூடாரத்துக்குள் நுழையவிட்டால், அதற்குப் பிறகு கூடாரமே அதன் கைக்குப் போய்விடும்.

மாநில மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் சில சதவிகிதங்களை மாநில அரசுகள் கொடுக்கப் போய், கடைசி யில் உள்ளதும் போச்சே என்று கைபிசையும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இந்தத் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபட கல்வி என்பது பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படவேண்டும். நெருக்கடி நிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி பொதுப் பட்டியலுக்குக் கவர்ந்து செல்லப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு கிடையாது என்று அறுதியிட்ட பின்பு, சென்னை உயர்நீதி மன்றமும் அந்தச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்தபின், வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டில் திணிக்க இவர்கள் யார் என்பதுதான் முக்கியமான கேள்வியாகும்.

கடந்த திங்களன்று உச்சநீதிமன்றம் நுழைவுத் தேர்வு குறித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்புக் குறித்துத் தொலைக்காட்சிகளில் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கும், நேற்று நாளேடுகளில் வெளிவந்த தகவலுக்கும் முரண்பாடாக உள்ளது.

நுழைவுத் தேர்வை நடத்துவதா? கூடாதா? என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும் என்று உச்சநீதிமன் றம் சொன்னதாகத் தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன. நேற்று காலை ஏடுகளின் சேதியோ நுழைவுத் தேர்வு நடத்திட உச்சநீதிமன்ற உத்தரவு என்று வெளிவந்துள்ளது.

இதற்கிடையே நேற்று பிற்பகல் - நுழைவுத் தேர்வு கிடையாது; கல்வித் துறை அறிவிப்பு என்று தொலைக் காட்சிகள் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டன.

இன்று காலை செய்தியோ வேறுவிதமாக உள்ளது. நுழைவுத் தேர்வு நடத்திட மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இருந்தால் நடத்தலாம். அப்படிக்கில்லாமல் மத்திய அரசின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுவதாகக் கருதினால் மத்திய அரசின் அறிவுரையைக் கேட்டு செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளதாகச் செய்தி வெளியாகி யுள்ளது.

இது என்ன தீர்ப்பு?

இதைவிடகுழப்பமான உத்தரவைக் கண்டுபிடிப்பது கடினமே!

எது எப்படியாக இருந்தாலும் நுழைவுத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இடம் கிடையாது - கிடையவே கிடையாது. காரணம், சமூகநீதிக் கதிரவன் தந்தை பெரியார் உதித்த மண் இது. அவர் கண்ட திராவிடர் கழகம் சமூகநீதி வாளினைக் கையில் இன்றளவும் ஏந்தி நிற்கும் பூமியாகும் - எச்சரிக்கை!

http://viduthalai.in/new/page-2/5040.html

weather counter Site Meter