Pages

Search This Blog

Monday, March 7, 2011

தி.மு.க., காங்கிரசால் கேவலமாக நடத்தப்பட்டது-சித்தார்த் கவுதம்

மூத்த பத்திரிகையாளர் ஆசிரியர் குறிப்பு: திரு. சித்தார்த் கவுதம், டில்லியின் மூத்த பத்திரி கையாளர். அரசியல் விமர்சககரும் கூட. அவர் Free Lance எழுத்தாளர் என்ற நிலையில் அவரது தனி இணைய தளத்தில் வெளிவந்துள்ள இந்த கருத்துகள் முழுக்க முழுக்க அவருடைய கருத்துக்கள்.

அரசியல், கட்சி, ஜாதி, மதம் முதலிய உணர்வுகளுக்கு அப்பாற் பட்டு எப்படி தமிழ்நாட்டின் கூட்டணி அரசியல் போக்கைப் பார்க்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டத்தக்கது.

- ஆசிரியர்

2ஜி  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றிய பிரச்சினை எழுந்த நாள் முதல், அண்மையில் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி யது வரை, காங்கிரஸ் கட்சியின் மனப்போக் கினால் வெறுப்படைந்து போன தி.மு.க. இறுதியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததன் மூலம் தனது எரிச்சலைக் காட்டிக் கொண்டது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதற் கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி தொடங் கியபோது, காங்கிரசில் இருந்த பல்வேறுபட்ட குழுக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமான அளவில் இருந்தன. இப்போதோ அவர்களின் உற்சாகம் படுபாதாளத்தில் வீழ்ந்துவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க.வுக்கு எதிராக  பல அறிக்கைகளை தமிழ்நாடு காங்கி ரசில் உள்ள ராகுல் காந்தி படை தொடர்ந்து வெளியிட்டு அச்சுறுத்தி வந்தது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒற்றுமையைக் குலைப்பது பற்றி அவர்கள் சிறிதும் கவலைப் படவில்லை.

கூட்டணியைப் பலவீனப்படுத் துவதின் மூலம் தாங்கள் ஜெயலலிதாவுக்கு உதவுகிறோம் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பது மட்டுமன்றி,  கூட்டணியின் ஒற்று மையைக் குலைக்கும் பணியை  அவர்கள் பெருவிருப்பத்துடன் செய்தார்கள் என்று கூடக் கூறலாம். தலைமையைத் துதிபாடும் ஒரு கட்சியமைப்பில் இவ்வாறு ஏற்படவே செய்யும்.

பொதுமக்கள் ஆதரவற்ற, கட்சித் தலைமை யினால் நியமிக்கப்பட்ட  உள்ளூர் கட்சிப் பொறுப் பாளர்களினால் டில்லியில் முடிவு எடுக்கும் நிலையில் உள்ளவர்கள் எப்போதுமே தவறாக வழி நடத்திச் செல்லப்பட்டு வந்துள்ளனர்.

தனது லாப்டாப் பகுத்தாய்வு, அறிவியல் கணக்கு ஆகியவற்றில் கைதேர்ந்தவராக வேண்டு மானால் ராகுல் காந்தி இருக்கலாம். ஆனால், மாயாவதி, லாலு போன்ற களத்தில் உள்ள தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்து வெற்றி பெறும் அளவுக்கு அவர் ஒன்றும் திறமையோ அனுபவமோ படைத்தவர் அல்லர்.

இந்த முறை தனது அதிருஷ்டத்தை அவர், நாட்டின் திறமை மிகுந்த அரசியல் வாதிகளில் ஒருவரான தி.மு.க. முதல்வர் மு.கருணாநிதிமீது சோதித்துப் பார்த்தார்.  இந்த முயற்சி காங்கிரசுக்கே கேடு விளைவிப்பதாக ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 90 இடங்களைக் கேட்டது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அவர்கள் 48 இடங்களில் போட்டியிட்டனர்.  குறைந்த பட்ச பொதுச் செயல்திட்டம், கூட்டணி ஆட்சி, தங்களுக்குத் தேவையான தொகுதிகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை என்று அவர்களின் தேவைப்பட்டியல் வளர்ந்து கொண்டே போனது.

தேர்தலில் தாங்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடு வோம் என்றும், தேர்தல்கள் நடந்து முடிவுகள் அறிவிக்கப் படுவதற்கு முன்னமேயே தங்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றும் காங்கிரசார் கருதுவதையே அவர் களது கோரிக்கைகள் காட்டுவனவாக இருந்தன. பகற்கனவு கண்டு கொண்டிருந்த காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டணி பேச்சு வார்த்தைக்காக டில்லிக்கும் சென்னைக்கும்  பறந்து கொண்டிருந்தனர்.

4ஜி தகவல் தொடர்பு வசதிகள் உள்ள ஒரு காலத்தில்   சோனியா காந்தியுடன் பேசுவதற்கு ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏன் டில்லிக்கு நேரடியாகப் போய் வந்தனர் என்பதை நினைத்தால் வியப்பாகத் தான் இருக்கிறது.

ராடியா டேப் விவகாரத்துக் குப் பிறகு தொலைபேசியில் பேசுவதற்கே அவர்கள் அஞ்சுகிறார்கள் போலும்! காங்கிரசு டனான கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வெளிப்படையாக வைத்துக் கொண்டே, சிறுசிறு கட்சிகளுடனான கூட் டணியை முடிவு செய்யும் முயற்சியில் தி.மு.க. தலைவர் படிப்படியாக ஈடுபட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. போட்டியிட்ட அதே 31  தொகுதிகளை இப்போதும் அளித்து பா.ம.க.வுடனான கூட்டணியை விரைவில் பேசி அவர் முடித்தார்.  பாரம்பரியமான கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. சிறீதர் வாண்டை யாரின் மக்கள் முன்னேற்றக் கழகக்  கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தை களுக்கு  (கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அவர்கள் போட்டியிட்ட 9 தொகுதிகளை விட ஒரு தொகுதி அதிகமாக) பத்து தொகுதிகள் அளிக்கப்பட்டன. புதியதாக கூட்டணிக்கு வந்துள்ள கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவை அனைத்தும் தி.மு.க. முதல் அமைச்சரால் செய்யப்பட்டவை.

இந்தச் சில்லறைக் கூட்டணிக் கட்சிகளுடன் தங்களுக்கு எந்த உறவும் இல்லை என்று கருதுவது போன்று காங்கிரஸ் கட்சி உண்மை நிலைக்கு பொருந்தாத வகையில் தங்கள் கோரிக்கைகளை உயர்த்திக் கொண்டே சென்றனர். கேக்கைத் தயாரிக்கும் பணி எதனையும் செய்யாமல், அதனைச் சாப்பிட மட்டும் விரும்புபவர்களைப் போன்றவர்களாக காங்கிரசார் இருந்தனர்.

சிறுசிறு கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிமுக கூட்டணியில் ஆரவாரமின்றி அமைதியாக நடந்துவரும் நிலையில்,  தி.மு.க. கூட்டணியிலும் அது போல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள காங்கிரசார் தவறிவிட்டார்கள்.

தமிழ்நாட்டிலும் கூட்டணி அரசை தி.மு.க. வின் மீது திணிக் கும் அளவுக்கு, மிகமிகக் குறைந்த எண்ணிக் கையிலான தொகுதிகளிலேயே தி.மு.க. வெற்றி பெறவேண்டும்  என்று காங்கிரஸ் விரும்புவதாகக் கூடக் கூறப்பட்டது. ஸ்பெக்ட் ரம் பிரச்சினையை வைத்து மத்தியப் புலனாய் வுத் துறை மூலம் தி.மு.க.வை காங்கிரஸ் அச்சுறுத்தி பிளாக்மெயில் செய்தது என்றும் கூட ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த் தைகளை காங்கிரஸ் இழுத்தடித்துக் கொண்டே சென்றது, விஜயகாந்தை அதிமுக அணியில் சேர வைத்துவிட்டது. வெள்ளிக்கிழமை விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து தே.மு.தி.க.வுக்கு  41 தொகுதிகள் ஒதுக்கப் பட்டதை ஏற்றுக் கொண்டார்.

அது விரித்த வலையில் காங்கிரஸ் வீழ்ந்து விட்டது. மற்ற அனைத்துக் கட்சிகளும் தி.மு.க. கூட்டணி யிலோ, அதிமுக கூட்டணியிலோ சேர்ந்து முடிந்து விட்ட நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்வதற்கான காலமும் கடந்துவிட்டது.

காங்கிரசின் இத்தகைய முடிவற்ற பிடிவாதப் போக்கு படிப்படியாக தி.மு.க. ஒரு ஆதாயமான நிலையைப் பெறுவதற்கு வழிவகுத்தது. சிறுசிறு கூட்டணிக் கட்சிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தி.மு.க. இடங்களை ஒதுக்கி வந்த நிலையில், காங்கிரசுக்கு ஒதுக்குவதற்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. காங்கிரசு அளித்து வந்த நெருக்கடிகளுக்கு பதிலடி கொடுப்பது போன்று - வாழைப் பழத்தில் ஊசி குத்துவது போன்ற ஒரு உத்தியாக இதனை தி.மு.க. தலைவர் கருதினார். விஜயகாந்தும், ஜெயலலிதாவும் நேருக்குநேர் சந்தித்தனர் என்ற செய்தி வெள்ளிக் கிழமை மாலை கிடைக்கும் வரை தி.மு.க. தலைவர் அமைதியாகக் காத் திருந்தார்.

அதற்குப் பின் உடனடியாக காங்கி ரசுக்கு எதிராகத் தனது குரலை கருணாநிதி உயர்த்தத் தொடங்கிவிட்டார். அதுவரை தி.மு.க.வினர் எவரும் காங்கிரசுக்கு எதிராகப் பேசவில்லை. சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் காங்கிரசு கூட்டணியை விட்டு விலகி வரவேண்டும் என்று தி.மு.க.வுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மட்டும் ஆலோசனை கூறிவந்தார்.

இந்தச் சூழ்நிலையில், சனிக்கிழமை நடை பெற்ற தி.மு.க.வின் உயர்அதிகாரக் குழுக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவையிலிருந்து தங்கள் கட்சி அமைச்சர்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவு மேற்கொள்ளப் பட்டது.

இது பல காங்கிரஸ்காரர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ராகுல் போடும் கணக்கு (ஃபார்முலா) என்னும் பருப்பு தமிழ் நாட்டில் வேகாது என்று அவர்கள் இப்போது உணருகிறார்கள். தேசிய அளவில், தி.மு.க. மேற்கொண்ட முடிவு, காங்கிரசுக்கு கூடுதல் தலை வலியை அளிக்க திரிணாமுல் காங் கிரசுக்கு துணிவையும் ஏற்படுத்தி விட்டது.

தமிழ்நாட்டு அரசியல் விவகாரங்களில் ராகுல் காந்தியின் தலையீட்டினால் மூத்த தலைவர் கருணாநிதி மிகவும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டார் என்பதே இவற்றுக் கெல்லாம் காரணம் என்றும் கூறப்படுகிறது. 

ராகுல் காந்தி பல முறை தமிழகத்திற்கு வந்து போனபோதும், ஒரு முறை கூட - கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் மரியாதையின் நிமித்தமாகக் கூட அவர் தி.மு.க. தலைவரை சந்திக்கவில்லை. தி.மு.க.வின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் தனக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் இவ்வாறு வெறுப்பை அவர் வளர்த்துக் கொண்டிருக்கலாம். கடந்த முறை சோனியாவை சந்திக்க கருணாநிதி டில்லி சென்றபோது பலமணி நேரம் அவர் காக்க வைக்கப்பட்டார்.

கூட்டணி பேச்சு வார்த்தை களில் பங்கு கொள்ள கோல்ஃப் மைதானத்துக்கு விளையாடச் சென்ற ராகுல் காந்தி திரும்பி வரவேண்டும்  என்பதே இதன் காரணம் என்பதை அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவித்தன. நினைவில் வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் தனது கோபத்தைக் காட்ட கருணாநிதிக்கு இதுவே போதுமானதாக இருந்தது.

தமிழ்நாட்டில் சுத்தமாக காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடுவதைத் தவிர்த்துக் காப்பாற்ற வேண்டுமானால்,  தி.மு.க.வின் பின்னால் காங்கிரஸ் ஓடவேண்டிய நேரமிது. இன்னும் ஒரு சில நாட்களில் தி.மு.க. தனது நிலையை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டால், கூட்டுப் பிரச்சாரம் மேற்கொள்ளவதைத் தவிர்த்து தொகுதி உடன்பாடு மட்டும் செய்து கொண்டு நட்புடன் காங்கிரசும் திமுகவும் போட்டியிடுவது என்ற இடைப்பட்ட வழியும் உள்ளது.

(நன்றி: (புதுடில்லி) பேர்மாலிங்க் மார்ச் 5, 2011 - தமிழில் த.க.பாலகிருட்டிணன்)

No comments:


weather counter Site Meter