Pages

Search This Blog

Thursday, March 3, 2011

நல்லவர் போல் தோற்றமளிக்கும் திறமைமிக்க ஏமாற்றுக்காரர் நரேந்திர மோடி - தெகல்கா அம்பலப்படுத்தியது

ஒரு மதக் கலவரப் படுகொலைகளில் மோடியின் பங்கு  என்ன என்பது பற்றி விசாரணையில் கேள்வி கேட்கப்படும் முதல் முதலமைச்சர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு உண்டு.  மென்மை யானவையாக இருந்தாலும், நேரடியாக பதில் கூறாமல் தவிர்ப்பவையாக இருந்த  அவர் அளித்த பதில்கள் குஜராத்தின் இரும்பு மனிதர் என்பவரின் மறுபக் கத்தைக் காட்டுவது போல் உள்ளன.

28.3.2010 காலை 9 மணிக்கு காந்தி நகரில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தின் முன் கூடியிருந்த தெலைக்காட்சி செய்தியா ளர்களை நோக்கி கை அசைத்துக் கொண்டே  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்திற்குள் நுழைகிறார். அதன் பின் நடந்த விசாரணை குஜராத் தின் இரும்பு மனிதர் எனப்படும் அவரின் ஆர்வத்தை அளிக்கும் மறுபக்கத்தைக் காட்டுவதாக இருந்தது.

கவுரவ யாத்திரையின் ஒரு பகுதியாக 9.9.2002 அன்று மேக சேனா மாவட்ட பெச்சார்ஜி என்ற ஊரில் தாங்கள் நிகழ்த்திய சொற்பொழிவை தயவு செய்து பாருங்கள்  என்று கூறிய விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா மதஉணர்வுகளைத் தூண்டும் முதல் வரின் பேச்சு அடங்கிய ஆவணத்தை மேஜை மீது வைக்கிறார்.

நிவாரண முகாம்களைக் கொச்சைப்படுத்திய மோடி

என்ன சகோதரர்களே, நாம் நிவா ரண முகாம்களை நடத்த வேண்டுமா? குழந்தைகளை உற்பத்தி செய்யும் மய் யங்களை நான் ஆரம்பிக்க வேண்டுமா? குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பின்பற்றி முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் 5 பேர், ஆனால் அவர்களோ 25 பேர். குஜராத் மாநிலத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவே முடியாதா? அதற்குக் குறுக்கே எவரால் தடைகள் ஏற்படுகின்றன?

எந்த மதம் இதற்குக் குறுக்கே நிற்கிறது? பணம் ஏன் ஏழைகளைச் சென்றடைவதில்லை? சிலர் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே போனால், அக்குழந்தைகள் சைக்கிள் டியூபுக்கு பஞ்சர் ஒட்டும் வேலையைத்தான் செய்ய முடியும். 2002 செப்டம்பரில் கவுரவ யாத்திரை என்ற பெயரில் மோடி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் பேசியது இது.

இந்தக் குறிப்புகள் முஸ்லிம்களைக் குறிப்பிடுபவையா? என்று மல்ஹோத்ரா கேட்கிறார்.
இந்தப் பேச்சு எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையோ, மதத்தினரையோ குறிப்பிடுவது அல்ல. இது ஒரு அரசியல் பேச்சு. அதில் வளர்ந்து வரும் இந்திய மக்கள் தொகையைச் சுட்டிக் காட்ட நான் முயன்றிருக்கிறேன். சில தீய சக்திகள் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ற வாறு எனது பேச்சுக்கு தவறான விளக் கம்  அளித்து திரித்து வெளியிட்டிருக் கின்றன. எனது தேர்தல் பேச்சுக்குப் பிறகு பதற்றமோ, கலவரமோ ஏற்பட வில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று மோடி பதிலளித்தார்.

இத்தகைய பதிலை ஏற்றுக் கொள்ள மல்ஹோத்ரா தயாகரா இல்லை. அவரது அறிக்கையில், மோடி அளித்த பதில் மனநிறைவை அளிப்பதாக இல்லை. நிச்சயமாக அது வளர்ந்து வரும் சிறுபான்மை மக்கள் தொகையைப் பற்றி யதுதான் என்று அவர் தெரிவித் துள்ளார்.

விசாரணை தொடரும்போது, - தனக்கு சாதகமானவற்றை தேர்ந்தெடுத் துக் கூறுவது, நேரடியாக பதிலளிக்காமல் தட்டிக் கழிப்பது, நினைவுமறதி, பச்சைப் பொய், தந்திரமான - திறமையான பேச்சுக்கலை - போன்ற புத்தகத்தில் உள்ள அத்தனை வித்தைகளையும் மோடி பின்பற்றிக் காட்டுகிறார்.

எதிர்வினையா?

1.3.2002 அன்று ஜீ தொலைக் காட்சியின் சுதிர் சவுத்ரிக்கு நீங்கள் அளித்த பேட்டியில், இவை ஒரு சங் கிலித் தொடர் போன்ற வினைகளும், எதிர் வினைகளுமாகும். வினைகளும், எதிர்வினைகளும் நிறுத்தப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்  என்று கூறியிருக்கிறீர்கள். கோத்ரா நிழ்ச்சி இந்தியாவிலும், உலகம் முழுமையிலும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று நீங்கள் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். 

கோத்ரா பகுதி மக்கள் குற்றவியல் குணங்களைக் கொண்டவர்கள்; இதற்கு முன் அவர்கள் பெண் ஆசிரியர்களைக் கொன்றிருக் கின்றனர். இப்போது அவர்கள் இந்த மிருகத்தனமான குற்றத்தைச் செய்திருக் கின்றனர். அதன் எதிர்வினைதான் இப்போது அவர்கள் உணர்வது என்று கூறியிருக்கிறீர்கள். இதைப் பற்றி விளக்கமுடியுமா? என்று மல்ஹோத்ரா கேட்கிறார்.

நேரடியாக பதில் அளிப்பதை மோடி தவிர்த்துவிட்டுக் கூறுகிறார் : குஜராத் வரலாற்றைப் படித்தவர்களுக்கு மத வன்முறைகள் இங்கே ஒரு நீண்ட வரலாற்றைப் பெற்றிருக்கின்றன என்பதை நிச்சயமாக அறிந்திருப்பார்கள். நீண்ட காலமாக, நான் பிறப்பதற்கு முன்பே, இது போன்ற மதக் கலவரங்களைத் தொடர்ச் சியாக குஜராத் சந்தித்து இருக்கிறது. 1714 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, ஆயிரக்கணக்காக மதக் கலவரங்கள் குஜராத்தில் நிகழ்ந்திருப்ப தாக வரலாறு கூறுகிறது.

இன்னமும் அவர் கேள்விக்குப் பதில் கூறவில்லை.  1.3.2002 அன்று ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைப் பொறுத்தவரை, எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், நான் பயன்படுத்திய சொற் களை அவ்வாறே நினைவுபடுத்திக் காண என்னால் இயலவில்லை. என்றாலும், எப்போதுமே அமைதி நிலவவேண்டும், அமைதி மட்டுமே நிலவவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்து வந் துள்ளேன். மக்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று நேரடியான, எளிய மொழியில் கூறியிருக்கிறேன்.

இந்த பதில்களிலிருந்து தேர்தல் பேரணியில் தோன்றிய மோடியைப் பற்றி அறிந்து கொள்வது எளிதல்ல. ஷெரா புடீன் ஷெயிக் கொல்லப்பட்ட போலி என்குவுன்டர் 4-12-2007 அன்று நடந்த தற்குப் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு பெருங்கூட்டத்திடம் மோடி கேட்கிறார்: ஷொராபுடீனை நான் என்ன செய் திருக்க வேண்டும். உணர்ச்சி வயப்பட்ட கும்பல், அவனைக் கொல்; அவனைக் கொல் என்று கத்துகிறது. பின் மோடி சீறுகிறார் :

அதைச் செய்ய நான் சோனியா காந்தியின் அனுமதியை வாங்கவேண்டுமா?

ஆனால் அந்த மோடி இப்போது முற்றிலுமாகக் காணாமல் போய்விட்டார்.

ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை நிச்சயம் உண்டு என்ற நியூட்டனின் விதியைக் குறிப்பிட்டு கோத்ராவுக்குப் பிறகு நடந்த கலவ ரங்களைப் பற்றி ஊடகத்தினரிடம் நீங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட் டீர்களா? என்று மல்ஹோத்ரா கேட்கிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி

இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இண்டியா ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. உண்மை என்னவென்றால் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் இருந்து எவருமே வந்து என்னை சந்திக்கவில்லை என்பது தான் என்று மோடி பதிலளிக்கிறார்.  வினை-எதிர்வினைக் கோட்பாடு என்று அழைக்கப்படுவதன் பொய்த் தன்மை இந்த உண்மையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அது போன்ற எந்த ஒரு பேட்டியையும் கொடுக்க வில்லை என்ற ஒரு மறுப்பை மாநில அரசு வெளியிட்டிருந்தது. அந்த நாளி தழின் உட்பக்கத்தில் ஒரு மூலையில் வெகுநாள்கள் கழித்த பிறகு அந்த மறுப்புச் செய்தி வெளியிடப்பட்டது என்று மோடி கூறினார்.

அந்த நேரத்தில் மோடி கூறுகிறார்:

குஜராத் மொழியில் ஒரு பழமொழி உண்டு. வன்முறைக்கு வன்முறையே பதிலாக இருக்க முடியாது என்பது எனது நிலையான கருத்தாக இருந்து வருவதாகும். அமைதி காக்கவேண்டும் என்றுதான் நான் வேண்டுகோள் விடுத்தேன். ஏதுமறியா அப்பாவிகள் மீது ஒரு கும்பல் மேற்கொண்ட வினை யையோ,  எதிர்வினையையோ நான் எப்போதுமே நியாயப்படுத்தியதில்லை; நியாயப்படுத்தவும் மாட்டேன்.

இன்னமும் சிக்கல்நிறைந்த கேள்வி களுக்கு மோடி தெளிவற்ற குழப்பமான பதில்களை அளித்தார். மோடி மீதான சிறப்பு விசாரணைக் குழுவிற்கு எந்த வித அதிகாரமும் அளிக்கப்பட்டிருக்க வில்லை என்பதால், மோடியால் இவ்வாறு செய்ய முடிந்தது. அவர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை.

மோடி விரும்பி யிருந்தால், சிறப்பு விசாரணைக் குழு வின் முன் ஆஜராவதற்கே அவரால் மறுத்திருக்க முடியும். சட்டத்தை மதிக்காதவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள அவர் விரும்ப வில்லை என்பதுதான் உண்மை. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் விசாரணை அதிகாரியார் தன்னை பதில் அளிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார்.

எனவே, மிகவும் மோசமான மதப் படுகொலை நடந்த 28.2.2002 அன்று மோடியின் நடமாட்டம் பற்றி மல் ஹோத்ரா கேட்டபோது, மோடி கூறி னார்: 28.2.2002 பிற்பகல் ஷாஹி பாக் சர்க்யூட் ஹவுஸ் இணைப்பில் செய்தியாளர்களை நான் சந்தித்தேன்.  ஒரு விசாரணைக் கமிஷன் அமைப்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதை  அப்போது நான் ஊடகத்தி னரிடம் தெரிவித்தேன்.

அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் காக்கும்படி அவர்கள் மூலம் நான் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அன்றைய தினமே, அமைதியையும் மத நல்லிணக் கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு நான் வெளியிட்ட வேண்டுகோள் பற்றிய ஒரு செய்தி தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

2001 அக்டோபரில் குஜராத் முதல மைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிதான் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்த வகையில், சட்டம், ஒழுங்கு, உளவுத் துறை, புலனாய்வு ஆகியவை அனைத்தும் அவரது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவை பற்றிய பிரச்சினைகளில் சிறப்பு விசாரணைக் குழு கேள்விகள் கேட்ட போது, தனது எதுவும் தெரியாதது போலவே மோடி நடித்தார்.

உளவுத்துறை

2002 ஆம் ஆண்டில் அயோத்தி யாவில் விசுவ இந்து பரிசத் நடத்த திட்டமிட்டிருந்த ராம் மகாயக்ஞம் தொடர்பாக குஜராத் மாநில புலனாய் வுத் துறை திரட்டிய உளவுத் தகவல்கள் என்னென்ன? என்று மல்ஹோத்ரா கேட்டார்.

2001 அக்டோபரில்தான் நான் குஜராத் முதலமைச்சராக ஆனேன். அதற்குமுன் டில்லியில் பா.ஜ.கட்சியின் பொதுச் செயலாளராக நான் இருந்தேன். 2001 இல் குஜராத்தில் நடந்த நிலநடுக்கத்திற்குப் பிறகுதான், இங்கு நிவாரணப் பணியையும், மறு கட்டமைப்புப் பணியையும் செய்ய கட்சி யின் தலைமை என்னை அனுப்பியது.

ராஜ்கோட் சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட்டதுதான் நான் முதன் முதலாகத் தேர்தலில் கலந்து கொண் டது என்பதை இங்கு குறிப்பிட வேண் டும். 24.2.2002 அன்று அந்த இடைத் தேர்தல் நடைபெற்றது.  ராம் மகாயக்ஞம் பற்றிய உளவுத் துறை அறிக்கைகளைப் பொருத்தவரை, அவை பொதுவாக காவல்துறை தலைவர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகிய வர்களிடம் வரும்; அலுவலக விதிகளின் படி இவ் விவகாரங்களை அவர்கள்தான் கவனித்து வந்தார்கள்.

நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/4658.html

No comments:


weather counter Site Meter