உலக நாடுகளில் அரசியலில் பெண்கள் பங்கு ஏற்பதில் இந்தியா 98ஆம் இடத்தில் இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்பட்டு 64 ஆண்டுகள் ஓடிய பிறகும் இந்த நிலை என்றால் - இதற்கான காரணம் என்ன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். உரிய வகையில் முயற்சிகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாரத மாதா கி ஜே! என்று நாட்டைத் தாய்க்கு ஒப்பிட்டுப் பெருமை பேசினால் மட்டும் போதாது.
மக்கள் தொகையில் சரி பகுதியினராக இருந்து வந்த பெண்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார அமைப்பு ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டது (2009). ஆண் - பெண் முன்னேற்றத்தில் இடைவெளி 134 நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. அதில் இந்தியா 114ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1991இல் ஆயிரம் ஆண்கள் என்று இருந்தால் பெண்களின் எண்ணிக்கை 945 ஆக இருந் தது. 2001ஆம் ஆண்டிலோ பெண்களின் எண்ணிக்கை 923 ஆக வீழ்ச்சி அடைந்துவிட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் முன்னேற்றம் மற்ற நாடுகளைவிட குன்றியிருப்பதற்குக் காரணம் - இந்துத்துவா என்னும் மோசமான - மானுடத்தை அரிக்கும் க்ஷயரோக நோய் தான்.
மனுதர்ம சாத்திரத்தையும், கீதையையும் முதலாவ தாகத் தடை செய்ய வேண்டும். அதன் மூலம் அதிர்ச்சி ஒன்று சமுதாயத்தில் உருவாக்கப்பட்டு, புதிய சிந்தனைக்கு நடவு செய்ய வேண்டும்.
இந்தியாவில் மக்களவையின் உறுப்பினர் எண் ணிக்கை 544. அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 60 ஆகும் (11 சதவிகிதம்). அதுபோலவே மாநிலங்கள வையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 242. அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 26 தான் (10.2 சதவிகிதம்).
இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில்கூட இதைவிட பன்மடங்கு பெண்களின் சதவிகிதம் அதிகமாகும். வங்கதேசம் 65ஆம் இடத்தில் இருக்கிறது (18.6 சதவிகிதம்).
பாகிஸ்தானைவிட 47 இடங்களும், நேபாளத்தைவிட 80 இடங்களும் இந்தியா பின் தங்கியுள்ளது.
சக்திக்குப் பெண் கடவுள், கல்விக்குப் பெண் கடவுள், செல்வத்துக்குப் பெண் கடவுள் என்று கட்டிக்கொண்டு அழும் பாரதப் புண்ணிய பூமியில்தான் பெண்கள் இந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
33 சதவிகிதம் இடங்களில் நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்கள் தேர்வு செய்யப்படு வதற்கே ஆயிரம் ஆயிரம் எதிர்ப்புகள் - குறுக்குச்சால்கள்!
நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே பெண்களுக்கு வழிவிட மறுக்கிறார்கள்.
இந்தத் தடைக்குக் காரணமானவர்கள் கட்சிகளைக் கடந்த ஆண்கள் என்பதுதான் மிகவும் முக்கியமான உண்மையாகும்.
கட்சிகளைக் கடந்து பெண்கள் இந்தப் பிரச் சினையைக் கையில் எடுத்துக் கொள்ளாதவரை இதற்குத் தீர்வு காண்பது முயற்கொம்பே!
நாட்டில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கான குழு 1974இல் அமைக்கப்பட்டது. மத்திய கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத்திடம் அந்தக் குழுவால் அளிக்கப்பட்ட பரிந்துரையில் ஒன்றுதான் - நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
1993இல் ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பகுதி இடங்களை ஒதுக்கிட வகை செய்யும் 73 மற்றும் 74 ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
1996 செப்டம்பர் 12 அன்று தேவகவுடா பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவை களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களுக்கு வகை செய்யும் 81ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
1998இல் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது 84ஆம் அரசியல் சட்டத்திருத்த மசோதாவாக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.
மீண்டும் 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடைசியாக 2010இல் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா மாநிலங் களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டு விட்டது.
ஆனால் மக்களவை இடம் கொடுக்கவில்லை. காரணம் என்ன? உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இடஒதுக் கீட்டை அளிப்பதற்கு என்ன தயக்கம்? சமூகநீதியை ஆதரிக்கும் கட்சிகள்கூட இந்தத் திசையில் சிந்திக்காதது ஏன்? இடதுசாரிகள் ஏன் இந்தத் திசையில் பார்வையைச் செலுத்தக் கூடாது?
உள் ஒதுக்கீடு கேட்பவர்களால்தான் இந்தச் சட்டம் நிறைவேறாமல் இருக்கிறது என்று திசை திருப்பப் பார்க்கிறார்கள். அது அல்ல உண்மை. இந்தச் சட்டம் எந்த வகையிலும் நிறைவேற்றப்படக் கூடாது என்று எண்ணு கின்ற மனோவியாதிக்காரர்களின் பிரச்சாரம் இது. ஊடகங்களும் பார்ப்பனர்களின் கைகளில் இருப்பதால், மனுவாத சிந்தனையோடு பிரச்சினையை அணுகு கிறார்கள். எல்லாக் கட்டுகளையும் உடைத்தெறிய ஒடுக் கப்பட்ட பெண்கள் வீதிக்கு வந்தால்தான் வழி பிறக்கும் - இது தந்தை பெரியார் காட்டும் அறிவு வெளிச்சமாகும்.
http://viduthalai.in/new/page-2/5179.html

1 comment:
எங்கே இந்த இணையக்காலத்திலும் பெண்களை இங்கேயை இழிவாகத்தான் காட்டி எழுதுகிறார்கள்...எழுதிவிட்டு அன்னையும், பிதாவும் முன்ன்றி தெய்வம்...தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்றும் எழுதுகிறார்கள்...மாடு பால் கொடுப்பதால் தாய் என்று ஒரு லூசு பார்ப்பனன் எழுதுகிறான்...பால் கொடுத்த அன்னையை என்னவென்று கூறுவான்..மூடன்.
பெண்ணின் கற்பை பற்றி பேசுகிறான்...அது பகுத்தறிவுக்கு உகந்ததல்ல என்றாலும் அவன கூறிய படியே பார்த்தால் கற்புக்கரசி என்றால் நளாயினி, ஆபாச ராமயணத்தில் வரும் சீதாவைக் கூறுகிறான்..இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கண்ணகி....அதுவும் இல்லாவிட்டால் நல்லாதங்கால், சாவித்திரி... போன்ற காணாதவர்களையும் கூறுவான்.
அவனுக்கு என்றைக்கும் தன்னை ஈன்றெடுத்த தாயைக் கற்புக்கரசியாக கூற நினைவு வராது. தன் உடன்பிறந்த சகோதரியைக்கூற நினைவு வராது...தனக்கு முன் வாழ்ந்த பார்த்த நெருங்கிய உறவுப் பெண்கள் எவரையும் கூற மனம் வராது. இது மாதிரி காணாத புராணங்களை கட்டி அழுவ நினைவு வரும். ஐந்து பேருக்கு மனைவியாக இருந்த கதையில் வரும் பாஞ்சாலியைக் கூற நினைவு வரும்...ஆரிய இராமாயணக் கதையில் வரும் கதாபாத்திரத்தில் வரும் ராமன் என்ற சகோதரனை மணந்த சீதையை கூற நினைவு வரும்.
இப்படிக் கூறிவிட்டு இவனை பெற்ற பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க தாராள மனம் வரும்.
பெண்ணை சகமனுஷியாக பார்க்கின்ற மனோபாவம் சிறுபிராயத்தில் இருந்தே...தன் தாயிடமிருந்தே வளரவேண்டும், அப்படி வந்தால் அனைவரையும் சகமனுஷியாக பார்க்கலாம்.
தற்பொழுது அரசியலில் கூட பெண்ணை சும்மா பொம்மையாக நிற்கவைத்துவிட்டு பின்னாடி ஆணின் செயல்பாடுகளே நிறைய இடத்தில் இருக்கிறது. பெண் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடவிடுவதில்லை இந்த ஆணாதிக்கம், குறிப்பாக இந்த பார்ப்பன ஆணாதிக்கம்...ராப்ரிதேவி அப்படித்தானே...
இதையெல்லாம் உணர்ந்து பெண்தான் வெளியே வரவேண்டும்...அவர்களை இடத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த நிலை வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை விரைவில் வந்துவிடும்.
கட்டுரையை வெளியிட்ட அசுரனுக்கு நன்றி!
Post a Comment