Pages

Search This Blog

Thursday, March 3, 2011

அட, இந்திரனே-மழை பெய்ய வேண்டுமென்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டிக் கொண்டார்


இந்தியாவில் வரும் காலத்தில் போதுமான அளவு மழை பெய்ய வேண்டுமென்று இந்திரனை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டிக் கொண்டார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய பிரணாப் கடந்த ஆண்டு நாட்டிடை ஒரு பகுதியில் வறட்சியால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு பயிர்களை நாசப்படுத்தியது.

எனவே இந்த ஆண்டு நாட்டில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டுமென்று மழைக் கடவுளான இந்தி ரனை வேண்டிக் கொள்கி றேன்.

அப்போதுதான் இந்த ஆண்டில் சிறப்பான பொரு ளாதார வளர்ச்சி இருக்கும். மழையும் பொருளாதா ரத்தைப் பாதிக்கும் காரணி யாக உள்ளது என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும் குறிப்பிட்டார் (தினமணி 27.2.2010)

நடப்பு ஆண்டு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும் (28.2.2011) அதே கதைதான். கூடுதலாக லட்சுமியையும் அழைத்துக் கொண்டார்.

இந்திரன் ஆசி வழங்க வேண்டும். சரியான நேரத் தில் மழை பொழிய,அவர் உதவ வேண்டும். அதேபோல், கடவுள் லட்சுமியை வணங் குகிறேன். அபாயமான சூழலில் இம்மாதிரி உத்திகள் பலன் தரும் (தினமலர் 1.3.2011) என்று கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் இப்படி மதக் கடவுள்களை அழைத்துக் கொள்கிறாரே, வணங்கு கிறாரே அவற்றால் காதொ டிந்த ஊசி முனைக்காவது பலன் உண்டா?

படித்த மக்களிடத்தில் கூட இத்தகைய மூடநம் பிக்கைகள் குடிகொண்டு இருக்குமாயின் மற்றவர் களைப்பற்றி என்ன சொல்ல!

ஏன் இந்து மதக் கட வுள்களை மட்டும் அழைக் கிறீர்கள்? என்று பிஜேபி யைச் சேர்ந்த ஒரு உறுப் பினர்கூட நிதி அமைச்சரைக் கடாசியிருக்கிறார்.

அறிவுப் பூர்வமாக சிந் தனையைச் செலுத்த வேண் டிய ஒரு இடத்தில்கூட மத நம்பிக்கையைத் திணிப்பது சரியானதுதானா? தங்களின் பொருளாதாரத் தோல்வியை மக்களின் மதநம்பிக்கை என் னும் போர்வையின் பின்பக்கம் நின்று மறைத்துக் கொள்ள லாம் என்கிற யுக்தியாகக்கூட இருக்கலாமோ!

மழைக்குக் காரணம் இந்திரன்தான் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி யின் பேரனோ, பேத்தியோ பரீட்சைத் தாளில் எழுதினால் மதிப்பெண் சுழிதான் கிடைக் கும்.

நேரு போன்ற பகுத்தறிவு வாதிகள் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால், அந்த இடத்திலேயே பிரணாப்பை வம்புக்கு இழுத்திருப்பார். பீகார் பூகம்பத்துக்குக் கார ணம் கடவுளின் கோபம்தான் என்று காந்தியார் சொன் னபோது நேரு அதனைக் கேலி செய்யவில்லையா?

மும்பையில் மத்திய ரயில்வேயில் பணிபுரிந்த சுவாதிசிட்னிஸ், சுஜாதா ஷிண்டே ஆகியோர் பதவி உயர்வுக்காக எழுத்துத் தேர்வு எழுதினர். நன்றாக எழுதியும் தோல்வி அடைந் தனர் - என்ன காரணம் தெரியுமா? விடைத்தாளில் ஸ்ரீ சுவாமி சாம்ரத் மற்றும் ஓம் என எழுதியிருந்தனர். விடைத்தாளில் மதத்தைக் கலந்ததால் அந்த விடைத் தாளை ரத்து செய்து விட் டனர் (தினமலர் 8.7.2008).

இதே கண்ணோட்டம் இந்திரனையும், லட்சுமி யையும் பட்ஜெட்டில் குறிப் பிடும் மத்திய நிதி அமைச் சருக்கும் பொருந்தும் தானே?

மழைக் கடவுள் இந்திரன் இருப்பதாகக் கூறப்படும் இந்நாட்டில்தான் வறட்சி வணக்கம் போட்டு வரவேற் கிறது. செல்வக் கடவுள் லட்சுமி என்று கதைக்கும் இந்நாட்டில் தான் வறுமைக் கோடுகள் வஸ்தாத் செய் கின்றன! ஆகா இதுவல் லவோ பாரதப் புண்ணியத் திருநாடு!

- மயிலாடன்

http://viduthalai.in/new/page1/4650.html

No comments:


weather counter Site Meter