Pages

Search This Blog

Sunday, March 13, 2011

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்ட கோவில் இடிப்பு!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனை மய்யப் பகுதியில் எந்தவித முன் அனுமதி பெறாமலும், அரசு ஆணைக்கு விரோதமாக புதிதாகக் கட்டப்பட்ட கோவிலை இடித்து அப்புறப் படுத்த வேண்டும் என்று நகர திராவிடர் கழக தலைவர் ப. தேசிங்கு மற்றும் நகர செயலாளர் சு. முருகேசன் ஆகியோர் மூலமாக மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் ஏற்பாட்டின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 3.4.2008 அன்று ளி.ஷி. 143/2008 என்ற வழக்கு தொடுக்கப்பட்டது.

மேற்கண்ட சட்ட விரோத மாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணியை உடனடி யாக நிறுத்தத் தடை விதிக்கக் கோரியும், இதற்கு முன்பே கட்டப்பட்டுள்ள கட்டுமா னத்தை இடித்து அப்புறப் படுத்த வேண்டும் எனவும் வழக்குத் தொடுக்கப்பட்டு, இடைக்கால தடையை நீதிமன்றம் கொடுத்தது.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர் தரப்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் (டீன்) மற்றும் மாவட்ட ஆட்சியரும் வழக்கு விசாரணையின்போது கட்டப்பட்டு வரும் கோவில் வழிபாட்டுத்தலமாக இதுவரை இல்லை என்றும், இந்த கோவில் யாருடைய அனுமதி யும் இல்லாமல் கட்டப்பட் டுள்ளது எனவும், இதை இடித்து அப்புறப்படுத்த ஒப்புக் கொள்கிறோம் எனவும் அவர்களது வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்த குறிப்பாணையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அந்தக் கோவிலை இடித்து அப்புறப் படுத்த 04.11.2009 அன்று உத்தரவிட்டது.

அதன்பிறகு மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் மூலமாக கழகத் தோழர்களுடன் இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரையும், மருத்துவக் கல்லூரி முதல்வரையும் நேரில் சந்தித்து 21.5.2010 அன்று உத்தரவு நகல்களை இணைத்து மனு கொடுத்தும் மீண்டும் இருமுறை நேரில் சந்தித்து நினைவூட்டி மனு கொடுத்தும் சம்பந்தப்பட்ட நிருவாகம் இடித்து அப்புறப்படுத்தாது காலம் தாழ்த்தி வந்த நிலையில் 4.3.2011 அன்று மருத்துவக் கல்லூரி நிருவாகம் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்துள் ளார்கள்.

மருத்துவக் கல்லூரியின் முக்கியமான இடத்தில் கோவில் கட்டி வழிபாடு என்ற பெயரில் ஒலிபெருக்கி வைத்துப் பயன்படுத்தும் நிலையில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மிகப் பெரிய தொல்லை கொடுப்பதோடு, இந்த இந்துக்கோவிலை ஒரு முன் மாதிரியாக காட்டி வேறு மதத்தவர்களும் வழிபாட்டுத்தலம் கட்டும் நிலை ஏற்பட்டால் கல்வி நிலையங்களில் தேவை இல்லாத மதப்பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தோடுதான் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களது ஒப்புதலோடு மேற்கண்ட நடவடிக்கை தஞ்சையில் எடுக்கப்பட்டு அதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது.

இதனை மற்ற மற்ற அரசு அலுவலகங்களும், வளாகங்களும் பின்பற்றுமா?

பின்பற்றாவிடின் கழகம் தன் கடமையைத் தொடர்ந்து செய்யும்.
http://viduthalai.in/new/page4/5248.html 

No comments:


weather counter Site Meter