Pages

Search This Blog

Wednesday, March 9, 2011

மோடியின் பதில் அறிவுக்குப் பொருந்தாதது! தெகல்காவின் படப்பிடிப்பு

விசாரணை அலுவலர் மேலும் வற்புறுத்திக் கேட்டபோது, தவறை அதிகாரிகள் மீதும், காவல்துறை அதி காரிகள் மீதும் மோடி தள்ளிவிட்டார்.

மாநில புலனாய்வுத் துறைக்குக் கிடைத்த துப்புத் தகவல்கள் அரசுக்கு அனுப்பப்பட்டனவா? அப்படியானால் எப்போது, யாரால் அனுப்பப்பட்டது? என்று மல்ஹோத்ரா கேட்டார்.

ராம் மகாயக்ஞத்துக்காக குஜராத் திலிருந்து சில ராம் சேவகர்கள் அயோத்திக்குச் செல்வதாக எனக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்களின் பயணத் திட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இதுபற்றி தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் பணி காவல் துறை அதிகாரிகள் மற்றும் உள்துறையைச் சார்ந்தது என்று மோடி பதிலளித்தார்.
மாநில புலனாய்வுத் துறை கரசேவ கர்கள் பயணத்தைப் பற்றி எந்தக் கடிதத்தையாவது அனுப்பியதா? அப்படி யானால் எப்போது, யாருக்கு அனுப்பப் பட்டது? மல்ஹோத்ரா மறுபடியும் அவரைக் கேட்டார்.

மாநிலப் புலனாய்வுத் துறையிலி ருந்து இது போன்ற கடிதம் எதுவும் வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரி யாது. அப்படி கடிதம் ஏதேனும் வந்திருந் தால் அது அத்துறையில் இருக்க வேண்டும் என்று மோடி பதிலளித்தார்.

ஒவ்வொரு நாள் காலையிலும் முதலாவதாக ஒரு முதலமைச்சர் தவ றாமல் செய்வது மாநிலப் புலனாய்வுத் துறைத் தலைவரை சந்தித்து துப்பறியப் பட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்வது தான். எனவே, மோடியின் பதில் அறிவுக்குப் பொருந்தாததாகத் தோன் றுகிறது. தனது அரசின் விவகாரங் களில் ஓர் இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரு திறமை மிகுந்த நிருவாகி என்று கூறப்படு பவரின் தோற்றத்தை அது சிதைப்ப தாகவும் இருக்கிறது.

இரு முறை இடைவெளி விட்டு, விடியற்காலை 1 மணி வரை மோடியிடம் கேள்வி கேட்கும் பணி தொடர்ந்தது. மொத்தமாக 71 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகளைத் தவிர்த்த மற்ற சில முக்கியமான கேள்விகள் இங்கே கீழே அளிக்கப்பட்டுள்ளன.

கேள்வி: கோத்ரா ரயில் எரிப்பு முன்னதாக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும், இதன் பின்னணியில் பாகிஸ் தானின் அய்.எஸ்.அய். உள்ளது என்றும் நீங்கள் அறிவித்தீர்களா? அறிவித் திருந்தால், அதற்கு அடிப்படை என்ன?
மோடி: சட்டமன்றத்தில் இது போன்ற சொற்கள் எதையும் நான் கூறவில்லை. ஊடகங்கள் என்னிடம் சில கேள்விகள் கேட்டன; ஆனால், விசாரணை இன்ன மும் நடந்து வருவதால், அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாது என்றுதான் நான் கூறினேன்.

கேள்வி: கோத்ரா ரயில் எரிப்பு விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அகமதாபாத்துக்குக் கொண்டு வருவது என்ற முடிவை யார் எடுத்தார்கள்? எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது?

மோடி: இறந்தவர்களின் உடல் களை அகமதாபாத்துக்குக் கொண்டு செல்வ தென்ற முடிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், அங்கு வந்திருந்தவர்களுடன் கலந் தாலோசித்தபின் எடுக்கப்பட்ட கூட்டு முடிவாகும். பதற்றம் அதிகமாகக் கூடாது என்பதற்காக அந்த உடல்களை அகமதாபாத் புற நகர்ப் பகுதியில் உள்ள சோலா சிவில் மருத்துவமனையில் வைக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தி யிருந்தேன். இறந்தவர்களில் பெரும் பாலோர் அகமதாபாத்தையும், அதற்கு அப்பால் உள்ள இடங்களையும் சேர்ந்த வர்கள் என்பதாலும், அவர்களது உறவி னர்கள் உடல்களை அடையாளம் காட்ட வும், பெற்றுக்கொள்ளவும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த கோத்ராவுக்கு வரவேண்டாம் என்பதாலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

கேள்வி: அப்போது மாவட்ட ஆட்சிய ராக இருந்த ஜெயந்தி ரவி இறந்தவர் களின் உடல்களை அகமதாபாத்துக்குக் கொண்டு செல்வதற்கு ஆட்சேபணை தெரிவித்தாரா?

மோடி: இறந்தவர்களில் பெரும்பா லோர் அகமதாபாத் மற்றும் அதற்கு அருகில் உள்ள இடங்களைச் சேர்ந்தவர் கள் என்பதால் அவர்களது உடல்களை சோலா சிவில் மருத்துவமனைக்கு எடுத் துச் செல்ல கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து கோத்ராவிலேயே இருந்தால், பதற்றம் இன்னும் அதிகமாகும் என்று அஞ்சுவதால், அந்த உடல்களை கோத்ராவிலிருந்து உடனே எடுத்துச் செல்லவேண்டும் என்று மாவட்ட ஆட்சிய ராகவும், மாவட்ட குற்றவியல் நீதிபதி யாகவும் இருந்த ஜெயந்தி ரவி கருத்து தெரிவித்தார்.

கேள்வி: அப்போதைய வி.இ.ப. பொதுச் செயலாளர் ஜெய்தீப் படேலை உங் களுக்குத் தெரியுமா? உங்களை கோத்ராவில் சந்தித்த அவர், இறந்தவர் களின் உடல்களுடன் தானும் அக மதாபாத்துக்குச் செல்ல அனுமதிக் கப்படவேண்டும் என்று கேட்டாரா?

மோடி: அவரை நான் அறிவேன். அவரை கோத்ராவில் சந்தித்ததாக எனக்கு நினைவில்லை. இறந்த வர்களின் உடல்களை அகமதா பாத்துக்குக் கொண்டு செல்ல முடிவு எடுத்தபிறகு, அவற்றை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது பற்றி முடிவெடுப்பது மாவட்ட நிருவாகத்தின் பொறுப்பு. உடல்கள் எப்போது, எப்படி அகமதாபாத்தை வந்தடைந்தன என்பது போன்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. என்றாலும், இறந்தவர்களின் உடல்கள் மாவட்ட நிருவாகம், கால்துறை அதிகாரிகள், மருத்துவ மனை அதிகாரிகள் ஆகி யோரின் பாதுகாப்பில் இருந்தன.

கேள்வி: 27.2.2002 அன்று கோத்ரா விலிருந்து திரும்பிய பிறகு, அப்போது நிலவிய சட்டம், ஒழுங்கு சூழ்நிலையைப் பற்றியும் , கோத்ரா ரயில் எரிப்பினால் ஏற்படக்கூடிய கடும் விளைவுகளைப் பற்றியும் பரிசீலனை செய்யவும் ஒரு கூட்டத்தைக் கூட்டினீர்களா?
மோடி: அன்று வீட்டுக்குத் திரும் பியவுடன், சட்டம்- ஒழுங்கு பற்றிய ஒரு கூட்டத்தினைக் கூட்டினேன். அக் கூட்டத்தில் நிருவாக, உள்துறை, காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/5042.html

No comments:


weather counter Site Meter