Pages

Search This Blog

Wednesday, March 2, 2011

அசைக்க முடியாத அஸ்திவாரம் கொண்ட கலைஞர் ஆட்சியைப் பார்த்து எதிரிகளுக்கு அதிர்ச்சி-கி.வீரமணி

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திண்டுக்கல்லில் பேசி நீண்ட நாள் ஆகிவிட்டது...

திண்டுக்கல்லில் ஈசநத்தத்தில் நடைபெற்ற மணவிழாவை ஒட்டி நான் இங்கு வருகின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி தோழர்கள், நீங்கள் திண்டுக்கல்லில் பேசி நீண்ட நாளாகிறது. ஆகவே நீங்கள் பொதுக் கூட்டத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு வலியுறுத்தினார் கள்.

நானும் இங்கு மகிழ்ச்சியோடு வந்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக் கின்றேன். அநேகமாக ஒரு முக்கால் மணி நேரம் அல்லது அதிகமாகத் தாண்டினால் ஒரு மணி நேரம் கருத்துகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால், அந்த நேரத்திற்குள்ளாக பல்வேறு கொள்கை விளக்கங்களை உங்களுக்குச் சொல்லி விட முடியுமா? என்று சொன்னால் நிச்சயம் முடியாது.

ஆரியர்களின் சூழ்ச்சித் திறன்

ஏனென்றால் இந்த நாட்டில் உண்மை விளக்கம் என்று சொல்லுகின்றபொழுது அது ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, பல நாள்கள் செய்ய வேண்டிய அளவுக்கு இன்றைக்கு மிகப்பெரிய பொய்யுரைகள், புனைந்துரைகள், அவதூறுகள், பழிகள் இவை எல்லாம் இந்த நாட்டிலே திராவிட இனத்தின் மீது ஆரியர்களுடைய சூழ்ச்சித்திறனாலே அவர்கள் கையிலே சிக்கியிருக்கிற ஊடகங்கள் மூலமாகவும், மற்ற பல்வேறு பத்திரிகைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கலைஞரின் தனித்தமிழர் ஆட்சி

ஒரு பலூன் போல அது காட்சியளிக்கிறது. ஊரிலே பலூனைக் கட்டி விளம்பரம் செய்வது போல இன்றைக்குத் திராவிடர் ஆட்சி, கலைஞரு டைய ஆட்சி, தனித்தமிழர் ஆட்சியாக இந்த நாட்டில் அசைக்கமுடியாத அஸ்தி வாரத்தோடு அது அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடியவர்கள், எப்படி எல்லாம் இதைப் பற்றி பொய்யுரை பரப்பி, அதன் மூலமாக நாம் வருகின்ற தேர்தலிலே இழந்த பதவியை எப்படியாவது பிடிக்கலாமா? என்பதற் காக பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக் கிறார்கள். அதற்கு ஏதாவது கருவிகள் கிடைக்காதா? ஏதாவது பிரச்சாரத்திற்கு மூலதனம் கிடைக்காதா? என்று தேடிக் கொண்டிருக்கின்ற நேரத்திலே ஒன்றிரண்டு கிடைக்க முடியும். அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

சோ இராமசாமி காலம் வரை...

ஆகவே, இராமாயண காலம் தொட்டு - இன்றைக்கு சோ இராமசாமி காலம் வரையிலே மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு செய்தி என்னவென்று சொன்னால், திராவிடர் இனத்தின்மீது ஆரியர்கள் பழிபோட்டு, அவர்களை எப்படியாவது தண்டிக்கக் கூடிய அளவுக்கு ஆக்கி, பிறகு அந்த மக்களே தங்களுடைய தலைவரை இழந்துவிட்டோமே என்ற அறிவுகூட இல்லாமல் காலம், காலமாக இருந்த ஒரு சூழல் - இராமாயண காலத்திலிருந்து - புராண காலத்திலிருந்து - இதிகாச காலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலே இருந்து கொண்டிருக்கின்றது. இல்லாவிட்டால் தமிழன் தீபாவளி கொண்டாடுவானா? இல்லாவிட்டால் சூரபத்மனை வதம் செய்கிறோம் என்று சொல்லு வானா?

திராவிடர் இனம்

அசுரன் என்று சொன்னாலே அவர்கள் யார்?

திராவிடர் இனம் இந்தியா முழுவதும் பரவி யிருந்த ஓர் இனம். வரலாற்றுப் பெருமை மிகுந்த ஓர் இனம். இந்த மண்ணுக்குரிய இனம். மொகஞ் சதாரோ, ஹரப்பா என்று சொல்லக்கூடிய புதைந்து போன நகரங்களிலே இருந்து மிகப் பெரிய ஆதாரங்களைக் கொண்ட இனம் இது.

இது நாடோடிக் கூட்டமல்ல. பி.ஜே.பி. ஆட் சிக்கு வந்தபொழுது ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அர சியல் வடிவமான அந்த பி.ஜே.பி., அதனுடைய அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? வரலாற்றைக் காவிமயமாக்கித் தலைகீழாகப் புரட்டிப் போட்டார்கள்.

ஆரியர்கள் எல்லாம் இங்கு நிரந்தரமாகக் குடியிருந்தது போலவும், திராவிடர்கள் எல்லாம் இங்கு வந்து குடியேறியதைப் போலவும் அவர்கள் உண்மைக்கு மாறாக சித்திரித்தார்கள்.

காளையை குதிரையாக்கினார்கள்

காளையைப் பிடிப்பது, காளையை அடக்குவது கூட இன்றைக்கு ஜல்லிக்கட்டாக நிகழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். இந்த வட்டாரத்திலே கூட ஜல்லிக்கட்டு நிகழ்வதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் காளை மாட்டைப் பயன்படுத்தி இருக் கின்ற சின்னத்தை அவர்கள் எப்படி மாற்றினார்கள் என்று சொன்னால் நண்பர்களே!

பின்னாலே சொல்லக்கூடிய செய்திக்காக நான் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.முரளி மனோகர் ஜோஷி அவர்கள் பா.ஜ.க. ஆட் சியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நேரத்திலே வரலாற்றையே தலைகுப்புற புரட்டிப் போட்டார், உண்மைக்கு மாறாக, காளை மாட்டுக்குப் பதிலாக மொகஞ்சதாரோ ஹரப்பா வின் சின்னம் குதிரை என்று மாற்றினார்கள்.

ஆரியர்கள் வரும்பொழுது குதிரையுடன் வந்தார்கள். எனவே ஆரிய புராணங்களிலே குதிரை பூட்டிய ரதம் இருக்கும்.

காவி ஆட்சியை அகற்றி...

ஆரியர்களுடைய யாகங்கள். அசுவமேத யாகங்கள் எல்லாம் குதிரையை வைத்துத்தான் இருக்கும்.அது புத்திர காமேஷ்டி யாகமாக இருந்தாலும், அசுவமேத யாகமாக இருந்தாலும், அந்த யாகங் களைப் பற்றி விளக்கிச் சொன்னால் தாய்மார்கள் இங்கே அமர்ந்திருக்க முடியாது. அவ்வளவு அநாகரிகம் படைத்த கூட்டம் அந்தக் கூட்டம். ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே அவர்கள் குதிரையைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக வரலாற்றிலே காளை மாட்டுச் சின்னத்தை குதிரையாக மாற்றினார்கள். கொஞ்சம் அசந்து போயிருந்தால் நமது தமிழ்நாடு ஒத்து ழைத்து அன்றைக்கு அந்த காவி ஆட்சியை மத்தி யிலே இருந்து அகற்றி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்று இன்றைக்கு இரண்டாவது முறை யாகவும், தி.மு.க. உள்பட ஆண்டு கொண்டிருக் கிறார்களோ இந்த ஆட்சி வந்திருக்காவிட்டால் இந்நேரம் எல்லோரையுமே குரங்குகளாக ஆக்கி இருப்பார்கள்.

அனுமார் பரம்பரை...!

நம்மாள்களும் அதற்கு எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள். ஓகோ! நாமும் அனுமார் பரம்பரை போல இருக்கிறது என்று நினைப்பார்கள். பல இடங்களில் உயர, உயரமாக அனுமார் சிலைகளை வைத்திருக்கின்றார்கள்.

சின்ன குரங்கை வீட்டிற்குள் விட்டாலே ஆபத்து. ஆனால் பெரிய அனுமாரைக் கொண்டு வந்து நாட்டிற்குள் விட்டுவிட்டான். ஆகவே அது ஒரு பண்பாட்டுப் படை எடுப்பினுடைய சின்னம். அவர்கள் ஆஞ்சநேயர் கோயில் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்காக அவ்வப்பொழுது அந்த பக்தியைக் கொண்டு வந்து விடுவான்.

நம்மாள் புத்தியை இழக்கவேண்டுமானால் இவனுக்கு சரியான மருந்து பக்திதான் என்று அவன் நினைத்து கொடுக்கிறான்.

அதனால்தான் பெரியார் ரொம்பத் தெளிவாகச் சொன்னார். புத்தி வந்தால் பக்தி போகும். பக்தி வந்தால் புத்தி போகும் என்று. அய்யா அவர்கள் எப்பொழுமே எளிமையாகச் சொல்வார்.

ஆஞ்சனேய ஜனன ஜெயந்தி!

மற்றவர்கள் எல்லாம் பல மணி நேரம் சொல்லக் கூடிய விசயத்தை அய்யா அவர்கள் பட்டென்று, டக்கென்று நெற்றியடி மாதிரி, பொறி தட்டுகிற மாதிரி ரொம்ப அழகாக எடுத்துச் சொல்லுவார்.

திடீரென்று ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை, ஒரு கலாச்சாரப் படை எடுப்பைக் காட்டுவதற்கு, ஆஞ்சனேய ஜனன ஜெயந்தி என்று சொல்லுகின்றான். குரங்கு பிறந்ததை ஜனனம் என்று சொல்லுகின்றான், ஜெயந்தி என்று சொல்லுகின்றான்.

பொறுப்பில்லாமல் சந்தேகத்துடன்...!

இது அறிவு யுகம். பகுத்தறிவு யுகம். அதுவும் 3ஜி தாண்டி, 4ஜி வந்த காலம் இது. இந்த அறிவைப் பயன்படுத்த வேண்டியவன் மூடநம்பிக்கைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்கிறான் என்று சொன்னால், ஆரியம் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் - கட்சிக்கு அப்பாற்பட்ட தமிழர்களே, இந்த இயக்கம் தேவையா? என்று பொறுப்பில்லாமல் இன்னமும் சந்தேகத்துடன் கேட்கக்கூடிய அப்பாவித் தமிழர்களே, அழைத்துச் செல்வதா?

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் - ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இருபத் தோராம் நூற்றாண்டில் உங்களை குரங்கை கும்பிட வைத்து விட்டார்களே!

அன்றைக்கே மார்க்ஸ் சொன்னார்

குரங்கிலிருந்து தான் மனிதன் வந்திருக்கின்றான். வளர்ச்சி அய்ந்தறிவிலிருந்து ஆறறிவுக்கு முன் னேற்றம்.

இவன் என்ன செய்தான்? அதைத் திருப்பி விட்டான். மனிதன் எல்லாம் குரங்கைக் கும்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

காரல் மார்க்ஸ் ரொம்ப நாளைக்கு முன்னா லேயே, அவர் எழுதிய மூலதனம் என்ற நூலில் எழுதியிருக்கின்றார்.

இந்தியாவைப் பற்றி என்ன எழுதியிருக்கின்றார்? இந்தியாவில் இருக்கின்ற மனிதர்கள் குரங்கைக் கும்பிட்டுக் கொண்டிருப்பார்கள் என்று காரல் மார்க்ஸ் எழுதியிருக்கின்றார்.

இதுதான் நமது பண்பாடுமிக்க பாரத கலாச்சாரம். காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்ததை மாற்ற வேண்டும் என்று மார்க்சியம் பேசுகிற தோழர்கள் கூட, இதைப் பற்றி பேசுவதில்லை. குரங்கை கும்பிடுகின்ற கூட்டம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று மார்க்சிய நண்பர்கள்கூட தங்களுடைய அரசியல் போக்கைக் கடைப்பிடிக்க வந்து விட்டார்கள்.

எனவே, இதைத் திருத்துவதற்கு ஆள் கிடையாது. எனவே இதை கலாச்சார ரீதியால் ஆனது என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

மூளையைத் தாக்கி செயலிழக்க வைக்கும்

இது ஏதோ ஒரு சின்னம். ஒரு குரங்கு பொம் மையை விற்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இது மூளையைத் தாக்குகிற மூளைக் காய்ச்சல். மூளையைத் தாக்கிவிட்டால் மூளை பாதிக்கப் பட்ட மனிதன் பயன்படவே மாட்டான். அது மாதிரி இந்த இனத்தினுடைய கலாச்சாரத்தை அழிக்கக் கூடிய வகையிலே அவர்கள் இது போன்ற காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதனால் அசுரன். அசுரன் என்று நம்மையே சொல்ல ஆரம்பித்துவிட்டான். எதிர் கட்சித் தலைவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டுள்ள ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன்.

அசுர குலத்தை அழிக்க வந்த...!

அசுர குலத்தை அழிக்க வந்தவர் என்று போட்டிருந்தார்கள். ரொம்ப மகிழ்ச்சி. இப்படித் தான் நீங்கள் எழுத வேண்டும். இப்படித்தான் நீங்கள் பிரச்சாரத்தை அடிக்கடி செய்ய வேண்டும்.

இப்பொழுது போராட்டமே அசுர குலத்திற்கும், தேவர் குலத்திற்கும் தான் போராட்டம் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அசுர குலம் என்றால் என்ன? அசுரன், அசுரன் என்றால் பயந்து கொண்டிருந்தான். பெரியார் வந்த பொழுதுதான் இழுத்துப் பிடித்து நிறுத்தினார்.

அசுரன் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டாயா? என்று கேட்டால் சுராபானமும் சோமபானமும் குடிப்பவர்கள் ஆரியர்கள். வெளி யிலிருந்து வந்தவன் சதா குடித்துக் கொண்டி ருந்தான். வேதத்தில் பார்த்தால் எனக்கு சுராபானம் கிடைக்காதா? சோம பானம் கிடைக்காதா? என்று இதைத்தான் வேண்டுகோளாக வைத்திருப்பான்.

வேதங்களில் உள்ளது

நல்ல சுராபானத்தைக் கொண்டு வந்து கொடு. இதைத்தான் எழுதியிருப்பான். எதிரிக்கு நோயைக் கொடு. அவனுக்கு மின்னலைக் கொடு. அவனுக்குத் தலைவலியை உண்டாக்கு அவனுக்கு வயிற்று வலியை உண்டாக்கு. யாருக்கு? தஸ்யூக்களுக்கு, கறுப்பர்களுக்கு.

இந்த இனத்தைப் பார்த்து இப்படி சாபம் கொடுத்துவிட்டு, எங்களுக்கு நல்ல சோமபானத்தை வழங்குவாயாக! நல்ல சுராபானத்தைத் தருவாயாக, இதுதான் யஜுர் வேதம், இதுதான் அதர்வண வேதம். இதுதான் எல்லா வேதமும்.

ஆனால் நம்மாள்களுக்கு அது என்ன என்றே தெரியாமல் கும்பிட்டுக் கொண்டிருக்கின்றான். அவர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். வேதத் தைப் படிக்கக் கூடாது. அதைக் கேட்டால் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று. அது என்ன வேத வாக்கா? வேதத்தை மாற்றவே முடியாது.

அரசியல் சட்டத் திருத்தம்

அரசியல் ஸ்டேட்டசையே மாற்றலாம். 60 வருடத்தில் நூறு தடவை அரசியல் சட்டத்தைத் திருத்தியிருக்கின்றார்கள்.

இவன் வேதவாக்கு! என்று சொல்லி அய்ந்தா யிரம் வருடமாக அப்படியே வைத்திருக்கின்றார் கள். நடைமுறையில் ஏதாவது அறிவுக்கும், வளர்ச் சிக்கும் உகந்த செய்தியா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆகவே அசுரன் என்றால் வேறொன்றுமில்லை. சுராபானத்தைக் குடித்தவன் சுரன். அசுரன் என்றால் குடிக்காதவன் என்று அர்த்தம்.

அசுர குலத்தை அழிக்க...!

அசுர குலத்தை அழிக்க வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஒழுக்கமாக இருக்கிறவர்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்பதுதான் அதற்குப் பொருள்.

அசுரர்கள் என்றால் திராவிடர்கள். சுரா பானத்தை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆரியர்கள். எனவே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது வெறும் அரசியல் போராட்ட மல்ல. மாறாக அசுரர்களுக்கும் அதாவது திராவிட இனத்திற்கும், தேவர்கள் என்று நினைக்கக் கூடிய ஆரியக் கூட்டத்திற்கும்தான் இப்பொழுது நடக் கின்ற போராட்டம். இது இனப் போராட்டமாக நிற்கிறது.

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால்...

வெளி உருவத்திலே மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது அதற்கு அரசியல் வர்ணம் தீட்டப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். ஆகவே இந்த தேர்தலில் ஓட்டுப் போடுவது. இந்தக் கட்சிக்கா, அந்த கட்சிக்கா என்பது பிரச்சினையே கிடையாது.

இந்தப் பிரச்சினையா? அந்தப் பிரச்சினையா? என்பது அல்ல. ரொம்பத் தெளிவாக இருக்கக்கூடிய முன் உதாணரம் என்னவென்றால், காலம் காலமாக இருக்கின்ற இந்த மண்ணுக்குரியவர்கள் இந்த நாட்டை ஆளுவதா? அல்லது இந்த மண்ணுக்குச் சம்பந்தமில்லாத ஒரு ஆரிய தத்துவம் - மனுதர் மத்திற்கு இந்த நாட்டிலே உயிர் ஊட்டவேண்டும் என்று நினைக்கின்றார்களே அந்த மனுதர்மத்திற்கு இடம். கொடுப்பது என்பதுதான் மிக முக்கிய மானது.

ஆகவே, திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக இழிவு ஒழிப்பு, சமுதாயத்திலே அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற சமதர்ம நோக்கு, பெண்ணடிமை ஒழிப்பு அனைவரும் சமத்துவத்தோடும், சுதந்திரத்தோடும் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கருத்து - இவை அத்தனையையும் உள்ளடக்கியது. தந்தை பெரியாரின் இந்த இயக்கத்தின் கொள்கைகள்.

ஆரியக் கூட்டத்திற்கு விரோதமானது

பிரெஞ்சுப் புரட்சியின் தத்துவத்தைச் சொல்லும் பொழுதுகூட, சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்று சொல்லுவார்கள். சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம் இந்த மூன்றையும் சொல்லு கிறார்கள் பாருங்கள். இந்த மூன்றும் ஆரியத்திற்கு விரோதமானது. ஆரிய தத்துவத்திற்கு, ஆரிய இனத்திற்கு இந்த மூன்றும் விரோதமானது. ஆரியக் கூட்டம் சுதந் திரத்தை விரும்பாது. நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளவேண்டும். உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறது என்று பார்க்காதே. அறிவைப் பயன்படுத்தினால் அவனை நாத்திகன் என்று சொல்லி முத்திரைக் குத்தி கீழே தள்ளிவிடு. எனவே சொந்தமாக அறிவைப் பயன்படுத்தக் கூடாது.

கேள்வி கேட்டால் - நரகம்!

இது ஆரிய இனத்தின் தத்துவம். திராவிட இனத்தின் தத்துவம் தெரிந்து கொள்ள வேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வள்ளுவரின் குறளைப் பாருங்கள். இதிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

அறிவு அற்றம் காக்கும், அறிவுதான் மிக முக்கியம் என்று இப்படி திராவிடர்களுடைய சிந்தனை இருக்கிறது.

அறிவைப் பயன்படுத்தாதே. அறிவைப் பயன் படுத்தி நீ கேள்வி கேட்காதே. கேள்வி கேட்டால் நீ போகவேண்டியது ரௌரவாதி நரகம். ஆகவே அறிவைப் பயன்படுத்தாதே என்று சொல்லுவது ஆரிய தத்துவம்.


ஆரிய தத்துவத்தில்...

எனவே ஆரிய தத்துவத்தில் சுதந்திரம் என்ப தற்கு இடமே இல்லை, சமத்துவம் என்பதற்கு இடம் இல்லை என்று சொல்லக்கூடிய தத்துவம் தான் வர்ணாசிரம தர்மம்.

சகோதரத்துவம் என்பது என்ன? நாம் எல்லோரும் ஓர் நிறை. யாதும் ஊரே யாவரும் கேளிர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், செம்மொழி மாநாட்டுக்குப் பாட்டுமில்லை இது. நீண்ட காலமாக இருந்த திராவிடர்களுடைய வாழ்க்கை முறைப் புத்தாக்கம் கொடுப்பதுதான் திராவிட பாரம்பரியம். தி.மு.க திராவிடப் பாரம் பரியத்தில் வந்த காரணத்தினாலே. பொற்கால ஆட்சி நடத்துகின்ற கலைஞர் இதனைப் புதுப்பிக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டு வருகின்றார் (கைதட்டல்).

எனவே நடப்பது வெறும் அரசியல் ரீதியான போராட்டமல்ல. அதைவிட ஆழமாகப் பார்க்க வேண்டியது என்னவென்று சொன்னால் இது லட்சிய ரீதியானது.


இனத்தின் லட்சியம்

இந்த இனத்தினுடைய லட்சியம் என்னவென்று சொன்னால் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எல்லாருக் கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற இந்த வாய்ப் பைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.

தி.க-தி.மு.க இரட்டைக் குழல் துப்பாக்கி

இது பலவகையில் வளர்ந்து இன்றைக்கு தி.க. தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், அரசியலுக்குப் போன பிற்பாடு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்தார். அவர் தமது ஆட்சியை எப்படிக் கொண்டு சென்றார்?

இது வெறும் பதவிக்கான வாய்ப்பு என்று அண்ணா அவர்கள் கருதவில்லை. இந்த வரலாறு தனியானது. திராவிடர் இயக்கம் என்றாலே அதன் தனித்தன்மை என்ன என்பது பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் அரசியல் பார்வையோடு பார்த்தால் நீங்கள் சரியான பார்வையோடு பார்க்கவில்லை என்ற குற்றத்திற்கு ஆளாவீர்கள்.

நமது கெட்ட வாய்ப்பு

நமது கெட்டவாய்ப்பு அண்ணா அவர்கள் ஓராண்டு-ஒன்றரை ஆண்டு காலம்தான் ஆட்சியில் இருந்தார். ஆனால் அந்த ஓராண்டிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவுக்குப் போய் சிகிச்சை பெற்று திரும்பி வந்த நேரத்திலே கூட அண்ணா அவர்கள் பேசும்பொழுது ஓராண்டு சாதனைகளாக முப்பெரும் சாதனைகளை சுட்டிக்காட்டினார்கள்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபொழுது மட்டுமல்ல. அது ஆட்சிக்கு வந்த பிற்பாடுகூட அதனுடைய பார்வை-அதனுடைய இலக்கு- அதனுடைய போக்கு எப்படிப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டுமானால், புரிந்து கொள்ளவேண்டுமானால் அவர்களுக்காகப் பாடம் எடுப்பதைப் போல அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

அண்ணா சொன்னார்

ஒரு மரண சாசனத்தைப் போல அண்ணா அவர்கள் சொன்னார்கள். அந்தச் சாதனைகளை சுட்டிக்காட்டினார்கள். நான் ஆட்சியிலே ஓராண்டு காலம் இருந்தபொழுது செய்த சாதனைகள் ஒன்று என்னுடைய தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினேன்.

இது முதல் செயல். இரண்டாவதாக சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினேன். (கைதட்டல்). அந்த சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்றால் ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பை முறியடித்து சுயமரியாதைத் திருமணம் ஆரியர்களுடைய கலாச்சாரப்படி மந்திரம், விவாக சுப முகூர்த்தம் இவைகளுக்கெல்லாம் இடமில்லை. வட மொழிக்கு இடமில்லை. தமிழர்கள் யார் வேண்டுமானாலும் மணவிழாவை நடத்தலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் போதுமானது.

பண்பாட்டுப் படை எடுப்பு!

ஒரு மனதாயினர் தோழி
திருமண மக்கள் நன்கு வாழி
என்ற அடிப்படையிலே இரண்டு மனங்கள் இணைந்தால் திருமணம். அவ்வளவுதான் இரண்டு மாலைகளோடு சரி என்று எளிமையாகத் தந்தை பெரியார் அவர்கள் ஆக்கினார். இந்த ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பு எங்கெல்லாம் நுழைந்ததோ - அங்கெல்லாம் தேடித்தேடி அடித்தார் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த பண்பாட்டுப்படை எடுப்பை முறியடிப்பது தான் சுயமரியாதைத் திருமணம். அது நடந்து பல பத்தாண்டுகள் ஆன நிலையிலே கூட, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று உயர் நீதிமன்றத்திலே இருந்த இரண்டு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்.

நீதிபதிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அன்று முதல் இன்று வரை என்ன நடக்கிறது? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை திராவிடர் இயக்கக்குடும்பங்கள், சுயமரியாதை இயக்கக் குடும்பங்கள். சட்டப்படி திருமணம் செல்லுபடியானால் என்ன? செல்லுபடி ஆகாவிட்டால் என்ன? உன் சட்டத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அதைக்கொண்டு போய் கண்ணாடிக்குப் பக்கத்தில் போடு, அதே நேரத்திலே எங்களது சுயமரியாதை திருமணம் நடப்பது தொடரும் என்று சொல்லி அதற்குப்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்!

அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினார்கள்.

மூன்றாவதாக ஆட்சியில் இருமொழிக் கொள்கைதான். உள்ளூரில் நமது பண்பாட்டைக் காப்பதற்குத் தமிழ், உலகத்தோடு தொடர்பு கொள் வதற்கு ஆங்கிலம். இந்த இருமொழி இருந்தாலே போதும். இதற்கு மேல் மூன்றாவது மொழியாக இந்தி தேவையில்லை. கட்டாய இந்திக்கு இடமில்லை என்ற அந்த உணர்வை அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள். இந்த மூன்றும் அவர் ஆட்சியில் இருந்தபொழுது செய்த சாதனைகள். இதனுடைய அடித்தளம் என்ன?

ஆரியப் பண்பாட்டை எதிர்த்தவர்கள்

இதைக் கூர்ந்து நீங்கள் கவனிப்பீர்களேயானால்-இந்த மூன்றும் சுயமரியாதை கருத்துகள்-தந்தை பெரியாரின் கொள்கை லட்சியங்கள்-சமுதாய லட்சியங்கள் ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்தவைகள்.

தமிழ்நாடு என்று சொல்லும்பொழுதுதான் அந்த உணர்ச்சி வருகிறது.
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!
என்று சொல்லக்கூடிய கட்டம் ஏன் வந்தது? தமிழன் ஏற்கெனவே தலைகுனிந்து நின்றான். அதனால்தான் தலையை நிமிர்ந்து நில் என்று சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு வந்தது (கைதட்டல்).

தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயரில்லையே என்று சொன்ன பிற்பாடுதான் அந்த உணர்வு வந்தது.


கலைஞரின் பொற்கால ஆட்சி!

ஆகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த நேரத்திலே கூட ஆட்சிக்காக ஆட்சி அல்ல. லட்சியத்திற்காக ஆட்சி என்பதை எடுத்துக் காட்டி அண்ணா அவர்கள் அதை உருவாக்கி ஒரு நல்ல அடிக்கட்டுமானத்தைப் போட்டார்கள்.

அண்ணா அவர்கள் விட்ட பணிகளை தொடர்ந்து செய்திட நமக்கு ஓர் அற்புதமான தலைவர் கிடைத்தார். அவர்தான் பொற்கால முதல்வராக இருக்கக்கூடிய 87 வயதிலும் இளை ஞரைப் போல் உழைத்துக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

அவர் எந்தக் கட்டுமானத்தை உருவாக்கி னார்களோ அந்தக் கட்டுமானத்திற்கு மேலே மாளிகைகளை எழுப்பினார். இந்தப் பண்பாட்டுப் படை எடுப்பை எங்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு போனார். ஜாதி இழிவுப்படி சூத்திரனுக்குத் திருமணம் செய்ய உரிமை இல்லை.

எங்களுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வோம். சுயமரியாதைத் திருமணம் சட்ட படியாக செல்லும் என்பதை அண்ணா உருவாக் கினார். விரட்டிக்கொண்டே போனார்

பெரியார் கேட்டார். நான் ஜாதி என்கிற பாம்பை எல்லா இடங்களிலும் அடித்துவிட்டேன். அதை ஒவ்வொரு இடமாக விரட்டிக்கொண்டு வந்தேன்.

ஓட்டலில் தனி இடம் என்று இருந்தது. நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களுக்குள்ளேயே தனி தண்ணீர் பானை இருந்தது. இது பார்ப்பனர்களுக்கு சூத்திரர்களுக்கு என்று.

இதை எல்லாம் ஒழித்தாகிவிட்டது. ஆனால் நான் அடித்த பாம்பு இருக்கிறதே-ஜாதிப்பாம்பு வர்ணாசிரம தர்மப் பாம்பு அது எங்கே போய் பாதுகாப்பாக ஒளிந்துகொண்டது தெரியுமா? கோவில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டது.

கோவில் கருவறைக்குள் ஒளிந்தது

ஏன் கோவில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டது என்றால்-பெரியார் இங்கு வர மாட்டார். கடவுள் சங்கதி என்றவுடன் இவர் அந்தப்பக்கம் போய்விடுவார். ஏனென்றால் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் பாருங்கள் என்று நினைத்தார்கள்.

அப்பொழுது தந்தை பெரியார் ரொம்ப அழகாகச் சொன்னார். இல்லை, இல்லை நான் கடவுளை கும்பிடுகிறேனா-இல்லையா? என்பது பிரச்சினை இல்லை. என் தம்பி கும்பிடுகிறான். என் அண்ணன் கும்பிடுகிறான். என் மாமன் கும்பிடுகிறான். என் மைத்துனன் கும்பிடுகின்றான். அவன் முட்டாளாக இருக்கின்றான்.


பக்திப் பிரச்சினை அல்ல-மனிதனுடைய உரிமைப் பிரச்சினை

அவனுக்குப் பக்தி இருக்கிறது. அவன் கோவிலுக்குப் போனால் அவனை சூத்திரன் என்று சொன்னால் நான் யார்? எங்கள் அம்மா யார்? என்னுடைய தாயையும் அவன் தாசி என்றுதானே சொல்லுகின்றான்? ஆகவே இது இழிவு. இது பக்திப் பிரச்சினை அல்ல. மனிதனுடைய உரிமைப் பிரச்சினை என்று சொல்லி, அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகராக வேண்டும் என்று உண்டாக் கினார்.

உடனே அடுத்த கட்டம். சுயமரியாதைத் திருமணத்தில் எப்படி அண்ணா புரட்சி செய்தாரோ அதற்கு மேல் கட்டுமானத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் செய்தார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லி கடைசியாக அந்தப் பாம்பு எங்கே போய் ஓடி ஒளிந்ததோ அங்கே போய் அடித்தார்.

கலைஞர் மீது ஆத்திரம்

இன்றைக்கு அவர்களால் அதைப் பார்த்துத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எல்லோரும் வரலாம் என்று சொல்லிவிட்டான். ரொம்ப காலமாக அவன் காப்பாற்றிக்கொண்டிருந்தான். அதில் கை வைத்ததால்தான் இப்பொழுது அவர்களுக்கு கலைஞர் மீது ஆத்திரம்.

ஏன் சுப்பிரமணியசாமிக்கு, ஏன் சோவுக்கு , ஏன் ஜெயலலிதாவுக்கு? ஏன் பார்ப்பன ஊடகங்களுக்கு ஏன் பார்ப்பனத் தொலைக்காட்சிகளுக்கு ஆத்திரம்? அவர்களுக்கு வேறு ஒன்றும் இல்லை.

அவர் சாதனையைவிட அடிமடியில் கைவைத்துவிட்டாரே-பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர் நிலை எங்கேயிருக்கிறது என்று சுட்டிக் காட்டினாரே-பெரியார் அடித்த அடி ஜாதி என்கிற பாம்பு கைத்தடியில் வாங்கிய அடியைப் பார்த்தார்கள். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு அய்யா அவர்களைப் புதைக்கிறோமே என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்ட மன்றத்திலே தீர்மானத்தை நிறைவேற்றினார் கலைஞர், ஜாதி ஆதிக்கத்தின் தன்மை தீண்டாமை ஒழிப்பின் தன்மை என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.

பண்பாட்டுப் படை எடுப்பு !

ஏன் இந்த ஆட்சியை பார்ப்பனர்கள் இன் றைக்கு வெறுக்கிறார்கள்? இந்த ஆட்சி மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்றால் காரணம் இதுதான். இந்தப் பண்பாட்டுப் படை எடுப்பினுடைய ஒரு பகுதியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆரிய-திராவிடப் போராட்டம்

நீங்கள் வெளிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நடப்பது இனப் போராட்டம். ஆரியர்-திராவிடர் போராட்டம் என்பதைத் தெளிவாக உங்களாலே உணர்ந்து கொள்ள முடியும். எப்படி என்று சொல்லும் பொழுது இந்த நந்தன் கதையை உங்களுக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும். நந்தனார் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கதைப்படி நந்தனாருக்கு ஆசை வந்துவிட்டது. அவர் பாவம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு சிறிய கிராமம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அந்தக் காலத்தில் நடந்துபோனால் கூட புளிசோறு கட்டிக்கொண்டு போய்விடலாம்.

நடராஜர் நடனமாடுகிறார் ஆருத்ரா தரிசனம் என்று எல்லோரும் சென்று பார்க்கிறார்களே! அந்த மாதிரி நடராஜனை நாம் போய் பார்க்கமாட்டோமா என்று ரொம்ப பேருக்கு ஆசை.


நந்தனுக்கும் ஆசை

ஏனென்றால் நம்ம ஊர் நந்தன்களுக்கெல்லாம் இப்பொழுது நடராஜனைப் பார்க்க வேண்டும் என்பதுதானே ஆசையாக இருக்கிறது. விடு தலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்களை எது இழிவுப்படுத்துகிறது என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அதை எல்லோரும் இன்றைக்கு உணர்ந்திருக்கிறார்கள்.

ஓர் அம்பேத்கர் அப்பொழுது வரவில்லை

ஓர் அம்பேத்கர் அப்பொழுது வரவில்லை. ஒரு பெரியார் வரவில்லை. திடீர் என்று நடராஜரைப் பார்ப்பதற்காகப் போகிறேன் என்று நந்தன் சொன்னார். முதலாளி என்னென்னமோ நிபந்தனைகளை வைத்தார். அதைச் சொன்னாலே ரொம்ப நேரம் ஆகிவிடும் உங்களுக்கு அந்தக் கதையை சுருக்கமாகச் சொல்லுகின்றேன்.

கதைப்படி, நிலப்பிரபு அய்யர் சொல்லுகிறார். நீ இவ்வளவு நெற்பயிரை வளர வைத்து விட்டுத்தான் போக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றார். அய்யர் நிலத்தில் இறங்கியதே கிடையாது. அவருக்கும் ஏர்பிடிப்பதற்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால் நிலப்பிரபு சொல்லிவிட்டார். நந்தனுக்கு வேறு வழியில்லை. உடனே இவர் கடவுளை வேண்டுகிறார்.


கனவில் கடவுள்...!

கடவுள் கனவில் வந்து சொல்லுகின்றார். கதையை எப்படிக் கொண்டு போகிறார்கள் பாருங்கள். நந்தன் இரவு படுத்துத் தூங்கிவிட்டு, பொழுது விடிந்து பார்த்தால் கதிர் ஓர் களம். கட்டு முக்களம்.

இந்த மாதிரி இந்தியாவில் வேண்டிக் கொண்டால் எல்லா மாநிலத்திலேயும் எல்லாம் விளைந்து அது பாட்டுக்குத் தானாகக் கிடைக்கும்.

வெங்காய விலை எப்பொழுதுமே ஒரே மாதிரி இருக்கும். முதலில் எல்லாமே கிடைக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

உடனே நந்தன் நான்தான் எல்லா நிலத்தையும் விளைவித்துவிட்டேனே! நடராசரைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னார். முதலாளியும் சரி போ என்று சொல்லிவிட்டார். நந்தனார் அவசர அவசரமாக மகிழ்ச்சியோடு போகின்றார். ஆஜானபாகுக்கு உதாரணம் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேர் இருக்கிறார்கள். சாதாரணமான பார்ப்பனர் அல்லர். நேரில் போய் பார்த்தால்தான் தெரியும்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவன். பல பார்ப்பனர்களைப் பார்த்தவன். மற்ற பார்ப்பனர்களுக்கும், அவர்களுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும். உருவத்திலேயே ரொம்ப வித்தியாசமுண்டு. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவன் ஆள் மோட்டாவாக இருப்பான். (கைதட்டல்). நெய், பருப்பு எல்லாம் சாப்பிட்டு, சமஸ்கிருதத்தில் ஆஜானபாகு என்று சொல்லுகிறார்கள் பாருங்கள். இந்த ஆஜான பாகுக்கு என்ன உதாரணம் என்றால் அவாள்தன் உதாரணம்.


சிதம்பரம் தீட்சிதர் குடுமியோ...!

மற்ற பார்ப்பனர்கள் எல்லாம் குடுமியைப் பின்னாலே கட்டுவார்கள். சிதம்பரம் தீட்சிதர்கள் மட்டும் சைடிலே கட்டுவார்கள். ரொம்ப பெரிய குடுமியை சைடிலே போட்டுக் கட்டியிருப்பார்கள் (சிரிப்பு-கைதட்டல்).

நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுதே வைத்த பெயர் சைடு பல்பு என்று கூப்பிடுவார்கள்(கைதட்டல்).

பராந்தக சோழன், அந்த சோழன், ராஜேந்திர சோழன், ராஜராஜசோழன், நமது சோழ பரம்பரை எல்லாம் கட்டிக்கொடுத்தது இல்லாமல் தங்க ஓடு போட்டு, உள்ளே எல்லாம் பண்ணி, எல்லாம் செய்து முடித்து வைத்துவிட்டான். சிதம்பரம் தீட்சிதர்கள் சொல்லிவிட்டார்கள். இது எங்களுக்குச் சொந்தமானது யாரும் உள்ளே வரக்கூடாது என்று சொல்லுகிறார்கள்.


கோயிலுக்குள்ளே முதலாளி

மற்ற கோயில்களை எல்லாம் அறநிலையப் பாதுகாப்புத்துறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சிதம்பரம் கோவிலுக்கு மட்டும் நீங்கள் கிட்டவே வர முடியாது.

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது. கொள்வினை-கொடுப்பினை எல்லாமே எங்களுக்குள் பண்ணிக்கொள்வோம். இது பூராவும் எங்களுக்கு சொந்தம். இந்த கோயிலுக்கு நாங்கள்தான் முதலாளி. கோயிலுக்கே முதலாளி வருகிறார். நிலத்துக்கு முதலாளி அவன்தான் அங்கே. கடவுளுக்கும் முதலாளி இவன்தான்.

நந்தன் சிதம்பரம் கோயிலுக்கு வந்து நடராஜரை வழிபட வேண்டும் என்று கேட்டான். அங்கு இருக்கிற தீட்சிதர்கள் நந்தனிடம் ஜாதிப் பெயரைக் கேட்டு, பறையனாக இருக்கிறவன் எப்படி நீ நடராஜரை தரிசிக்க முடியும்? என்று கேட்டார்கள்.

புராணக்கதைப்படி ....

மன்னிக்க வேண்டும். புராணத்தில் இருப்பதைச் சொல்லுகிறேன். எங்களை மாதிரி ஆனால்தானே நீ கடவுளைப் பார்க்க முடியும்? அந்த உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. நீ எப்படி பண்ண முடியும்? என்று கேட்டான்.

நந்தனார் அக்னியில் குதித்தார்

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நந்தன் கேட்டான். ஒன்றும் செய்ய வேண்டாம். நான்சொல்லுவதை செய். நீ உடனே பிராமணர் ஆகிவிடலாம். வேறு ஒன்றும் இல்லை, இதோ நெருப்புக்குழி இருக்கிறது; அக்னி வளர்த்திருப்பார்கள். இந்த அக்னியில் குளித்துவிட்டு வெளியே வந்துவிட்டால் நீ பிராமணன் ஆகிவிடலாம் என்று சொன்னான்.

அதே மாதிரி நந்தனார் போனார். அக்னியில் குதித்தார். பிறகு வெளியே வந்தார் என்று கதை எழுதி வைத்திருக்கின்றான். தண்ணீரில் குளித்து வந்தாலே நமக்கு அழுக்குப் போகுமா? என்பது சந்தேகம் (கைதட்டல்). நந்தன் அக்னியில் குளித்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.


நடராஜருக்கு மனம் இளகுகிறது

நந்தனார் என்ன ஆனார்? நந்தனார் அய்யர் ஆகிவிட்டார்-தீட்சிதர் ஆகிவிட்டார்-சமமாகி விட்டார். வித்தியாசமே இல்லை. அப்படி இருந்தும் நந்தன் சிதம்பரம் கோயிலில் நடராஜரை தரிசிக்க ஆவலாய் உள்ளே போகிறார். உன்னுடைய எல்லை இதுதான். ஆகவே இங்கே நின்று நடராஜரைப் பார் நந்தா என்று தீட்சிதர்கள் சொல்லுகிறார்கள்.

நந்தன் நடராஜனைப் பார்க்கிறார். நந்தி குறுக்கே மறைத்துக்கொண்டிருக்கிறது. நந்தி என்றால் மாடு. அப்பொழுதும் மாட்டைத்தான் நந்தனுக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான்.

நந்தி குறுக்கே நிற்கிறது என்று நந்தன் நடராஜரை வேண்டுகிறார். நடராஜப் பெருமானே, உன்னுடைய பக்தன் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்.

நீ எவ்வளவோ சோதித்திருக்கிறாய். நான் நெருப்பில் குதித்து வந்திருக்கிறேன். அதற்குப் பிறகும் நீ என்னை உள்ளே விடவில்லையே என்று சொன்னவுடனே கடவுள் நடராஜருக்கு மனம் இளகுகிறது.

கடவுள் பட்சாதாபப்பட்டு உதவி பண்ணுகிறார். ஒரு சலுகை காட்டுகிறார். கடவுள் சொல்கிறார், அந்த நந்தன் என்னைப் பார்க்கட்டும். நந்தியே, சற்று விலகியிரு! என்று சொல்லுகின்றார்.

நந்தன் அப்பொழுதுதான் நடராஜரை தரிசித்தார்; அதன் பிறகுதான் மோட்சத்திற்குப் போனார் என்று கதை.


நந்தியே சற்று விலகியிரு!

நந்தன் எப்பொழுது நெருப்பில் விழுந்தாரோ அப்பொழுதே மோட்சத்திற்குப் போவதைத் தவிர வேறு வழியே கிடையாது. ஆனாலும் நந்தியே சற்று விலகியிரு என்றுதான் கடவுள் நடராஜர் சொன்னார். இது கதை. இது நடந்ததா-இல்லையா என்பதுபற்றிக் கவலை இல்லை.

ஆனால் அன்றிலிருந்து இன்றைய வரையில் சிதம்பரம் கோவில் எங்களுக்கு ரொம்ப காலமாக சொந்தம் என்று சொன்னார்கள். நீதிக்கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து முயற்சி செய்து, மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும் அவரே முயற்சி செய்து இந்தக் கோயிலை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு- அரசாங்கத்தினுடைய துறைக்குக் கொண்டு வரமுடியவில்லை.


வரலாறு படைத்தார் கலைஞர்!

ஆனால், வரலாறு படைத்தார் முதல்வர் கலைஞர் அவர்கள். அவருடைய ஆட்சி காலத்திலே தைரியமாக என்ன செய்தார் என்றால், தீட்சிதர்கள் வசம் இருக்கின்ற கோயிலை எடு என்று அதிகார பூர்வமாக உத்தரவு போட்டார். உடனே தீட்சிதர்கள் நீதிமன்றத்திற்கு ஓடினார்கள். நீதிமன்றம்தானே இப்பொழுது பார்ப்பனர்களுக்கு அபயம் கொடுக்கின்ற இடம்.

நமது உழைப்பினாலே நல்ல நீதிபதிகளும் பல நேரங்களில் இருக்கிறார்கள். தீர்ப்பு வந்தாகி விட்டது. சுப்பிரமணிய சாமிகள் ஆகா! அதைப் பண்ணுவேன், இதைப் பண்ணுவேன் என்றெல்லாம் போனார்கள். ஆனால் அங்கு ஒன்றும் நடக்க வில்லை.

மணி 3, 4 ஆகியது. தீர்ப்புக்காக மாலை நேரத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தீர்ப்பு அங்கே சொல்கிறார்கள். தீர்ப்பின் நகல் அவசரமாக வாங்கப்பட்டு அரை மணி நேரத்திற்குள்ளாக அது ஃபேக்ஸ் செய்யப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட பெண் பொறுப்பேற்றுக்கொண்டார்

அந்த ஃபேக்ஸ் அறநிலையத்துறை முக்கிய அதிகாரிகள் கையில் கிடைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் அதிகாரியை விட்டு நீங்கள் உள்ளே போய்ப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கலைஞர் சொல்லிவிட்டார் (கைதட்டல்).

உடனே தீட்சிதர்கள் எல்லாம் ஆகா, ஊகா என்று சொன்னார்கள். பேசாதே, இது உயர்நீதிமன்ற உத்தரவு என்று சொன்னார்கள். நடராஜர் ஒரு காலைத்தூக்கி ஆடிக் கொண்டேயிருக்கிறார் என்று பார்த்துக் கொண்டே, கேட்டுக்கொண்டே யிருக்க வேண்டியதுதான்.

நடராஜர் ஒரு காலைத் தூக்கினார். கலைஞர் அரசாங்கம் இரண்டு கால்களையும் தூக்கி விட்டது. ஆக, இன்றைய வரையில் முயற்சி பண்ணுகிறார்கள். சிதம்பரம் கோயிலைக் கைப்பற்ற வேண்டுமென்று. இவ்வளவு நாள்கள் உண்டியல் பணம் பூராவும், அவர்களைச் சேர்ந்தது.

இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் அரசாங்க அதிகாரிகள் கையில் வந்துவிட்டது. பதின்மூன்றாயிரத்து நான்காயிரம் வரவு; செலவு இவ்வளவு; ரூ.23 மிச்சம் என்று கணக்கு எழுதி வைத்தான்.

நடராஜர் கோயில் உண்டியல் வருமானம்

ஆனால், இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் வருமானம் மாதம் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் வருகிறது என்று அதிகாரிகள் மூலம் அவர் எடுத்துக்காட்டினார்.

எனவே, நந்தனை உள்ளே அழைக்க முடிய வில்லை, அந்தக் காலத்து கடவுள் நடராஜரால். ஆனால் இன்றைக்கு திராவிடர் இயக்க முதல்வர் கலைஞரால் நந்தனை கோயிலுக்கு உள்ளே அனுமதித்தார் (கைதட்டல்). இன்றைக்கு எல்லா நந்தர்களையும் உள்ளே விட்டுவிட்டார்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர். ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். பார்ப்பனர்களும் படித்திருந்தால் அர்ச்சகராகலாம். யாரையும் நாங்கள் வித்தியாசப்படுத்தவில்லை என்று ஆக்கினார்.

சிதம்பரம் கோயில் யாருடையது? இன்று மக்கள் சொத்து என்று ஆக்கிவிட்டார் கலைஞர். இது தனியாருடைய உடைமை அல்ல என்று ஆக்கினார் பாருங்கள், இதுதானய்யா அவர் களுக்குக் கோபம். 60 வருடங்கள் தமிழ் வருடங்கள் என்று சொன்னான். விபவ, பிரபவ, சுக்கில, விரோதி, குரோதி என்று 60 வருடங்கள் சொல்லுகிறார்கள்.

எப்படிப் பிறந்தார்கள் என்று கேட்டான். நாரதருக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தார்கள். என்று சொன்னான். இரண்டு பேரும் ஆண் பிள்ளைகள் ஆயிற்றே என்று இவன் சொன்னான். பெரியார்தான் இது ஆபாசமான கதை என்று சொன்னார்.

தை முதல்நாளே தமிழர்திருநாள், அதுதான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்ற உத்தரவே கலைஞர் போட்டுவிட்டார்.

அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். அந்த அடித்தளத்தின்மீது கலைஞர் அவர்கள் உருவாக்கிய கட்டடம் இருக்கிறதே இதுதான். இதைப் பார்த்தவுடனே அவனால் தாங்க முடியவில்லை.


கலைஞர் ஆட்சியில் பசி-பிணி இல்லை

அய்யோ, இந்த ஆட்சி இருக்கின்ற காரணத்தினால் அல்லவா இப்படி நடக்கிறது? ஆகவே இந்த ஆட்சியை எப்படியாவது வரவிடாமல் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் இந்த ஆட்சி யினாலே பயன் பெறுகிறார்கள்.

கலைஞர் ஆட்சியில் பசியும் இல்லை; பிணியும் இல்லை. சென்ற ஆட்சியில் பசி இருந்தது. சென்ற ஆட்சி தமிழ்நாட்டில் எலிக்கறி சாப்பிடுங்கள் என்று சொன்ன ஆட்சி. ஆனால் இன்றைக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

இந்தியாவிலேயே கலைஞர் ஆட்சிதான்...

முதலில் 1 கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். கடைசி வரையில் கொடுக்க முடியுமா? என்று கேட்டார்கள்.

இப்பொழுது ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்குக் கொடுத்து இந்தியாவிலேயே ஆட்சி நடத்துகின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்; ஒரே ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்; ஒரே முதல்வர் கலைஞர்தான்!

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேசன் கடையில் நேரடியாகவே கொடுக்கப்படுகிறது. மக்கள் நேரடியாகவே பார்க்கிறார்கள். அதுபோல எங்கேயாவது பிணியா? யாராவது மயக்கம் போட்டு விழுந்தாலே மக்களுக்குத் தெரிந்துபோய் விட்டது. காய்கறி விற்கிற முனியம்மாவுக்கும் தெரிகிறது. கடையில் வேலை பார்க்கிற சாதாரண முத்தம்மாவுக்கும் தெரிகிறது.

108-க்கு ஃபோன் பண்ணுகிறான்

சாதாரண வேலை செய்கிறார் பாருங்கள் நம்மாள்-அவருக்கும் தெரிகிறது. ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் என்று பேசிக் கொண்டிருக்கும்பொழுதே இன்னொருத்தர் பையிலே இருக்கின்ற தொலைபேசியைப் பயன்படுத்தி உடனே 108-க்குப் ஃபோன் பண்ணு கின்றார். இதற்கு முன்னால் இந்த 108 என்பதை அர்ச்சனைக்குத்தானய்யா பயன்படுத்தினான் (கைதட்டல்).

இன்றைக்கு அந்த 108அய் மனிதன் உயிர் காக்க கொண்டு வந்த பெருமை முதல்வர் கலைஞர் ஆட்சியைச் சார்ந்தது (கைதட்டல்). திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைச் சார்ந்தது. தூங்கும்பொழுது 108 என்று சொன்னால் கூட ஆம்புலன்ஸ்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இதற்கு முன்னால் காலம் காலமாக 108 விளக்கு என்று சொல்லுவான்; 108 அபிஷேகம் என்று சொல்லுவான்.


அசுர குலத் தலைவர் ஆட்சியில்...

ஒன்றும் உருப்படாத மக்கள் அறிவை பாழ்படுத்தி, பார்ப்பானுக்கு வருமானத்தை உண்டாக்கக்கூடிய வழியைத்தான் பண்ணி னார்கள்.

அந்த 108அய் பகுத்தறிவுவாதி ஆட்சியான, அசுர குலத் தலைவனுடைய ஆட்சியான (பலத்த கைதட்டல்) கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் மக்களுக்குப் பயன்படும் வகையில் 108அய் இப்படி ஆக்கிவிட்டார். அது மட்டுமல்ல; சில பேர் மக்களிடம் பேசினார்கள்.

ஓட்டைக் குடிசையிலே ஒண்ணாரைச் சாண் பாய்தனிலே!

ஓட்டைக் குடிசையிலே, ஒண்ணரைச் சாண் பாய்தனிலே என்று பாட்டுப்பாடி, உங்களுடைய ஏழ்மையைப் போக்குவதற்காக எங்களை அனுப் புங்கள் என்று கேட்பதற்கு வாய்ப்பில்லாமல் அந்தத் துருப்புச் சீட்டையும் எடுத்துவிட்டார் கலைஞர்.

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்

காரணம் என்ன? தமிழ்நாட்டில் எத்தனை குடிசைகள் இருக்கின்றன? கணக்கெடு என்று சொன்னார். 21 லட்சம் குடிசைகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். அந்த 21 லட்சம் குடிசைகளுக்கும் முதலில் திட்டம் போட்டார்.

இந்த ஓராண்டுக்குள்ளாகவே கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்ற பெயரில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்து உடனே அதைச் செயல்படுத்தினார்.

இனிமேல் குடிசைகளே இல்லாத தமிழ்நாடு என்று இந்தியாவிலே முதன்முறையாக உருவாக்கிய வர் (கைதட்டல்). அந்தக் காலத்திலேயே குடிசை மாற்று வாரியத்தையும் உருவாக்கியவர் கலைஞர். இன்றைக்கு இதையும் உண்டாக்கி விட்டார்.

எல்லோருக்கும் கான்கிரீட் வீடு கிடைக்குமா என்று கேட்டார்கள். அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். இந்தாங்க பிடிங்க இது உத்தரவாத சீட்டு என்று அவரவர்களும் வாங்கிக் கொள்ளும்படி செய்தார்.


எங்களை வரவேற்றதே இந்தத் திட்டம்தான்!

எல்லா கிராமங்களிலும் இப்படி உருவாக்கியி ருக்கிறார். இன்றைக்கு காலையிலே நான் ஈசநத்தம் போனேன். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளே நுழையும்பொழுது எது நம்மை வரவேற்கிறது என்றால்- கலைஞர் வீட்டு வசதித்திட்டம்.

நான் சென்னையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கூட சொன்னேன். வேடிக்கையாக நம்முடைய நாட்டில் கிராமத்தில் சொல்லிக்கொண்டிருப்பார் கள். கொடுக்கிற தெய்வமாக இருந்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்லுவார்கள். தெய்வத்திற்குக்கூட ஏண்டா கூரையிருக்கிறது என்று புத்தி வரவில்லை. ஒருவன் ஏன் மாடியில் இருக்க வேண்டும்? இன்னொருவன் ஏன் குடிசையில் இருக்க வேண்டுமென்று கடவுள் எண்ணவில்லை.

எல்லோருமே நமது பிள்ளைகள்தானே! எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கான்கிரீட் வீட்டை கடவுள் கொடுக்கவில்லையே!


மோட்சத்திற்குப் போக

ஒருவரை ஓட்டைக் குடிசையில் வைத்தான். இன்னொருவனை ஒன்பது மாடிக்கு மேலே ஏற்றி வைத்தான். இதைக்கேட்டால் எல்லாம் அவாள் அவாள் தலையெழுத்து என்று சொல்லிக்கொண்டு போனான். இவனும் அதை நம்பிக்கொண்டே இருந்தான். இதை மாற்றுவதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்டான். இதை மாற்று வதற்கு மோட்சத்திற்குப் போனால் போதும்; எங்களுக்கு தட்சணை கொடுத்தால் போதும் என்று, சொன்னதை நம்பிக்கொண்டிருந்தான்.

அதைத் தலைகீழாக மாற்றி, குடிசைகளே இல்லா மாநிலமாக ஆக்கியவர் கலைஞர். அவர் ஈரோட்டுக் குருகுலத்திலே பயின்ற காரணத்தினாலே இன்றைக்கு குடிசை இல்லா தமிழ்நாடு என்று ஆகக்கூடிய அளவிற்கு கான்கிரீட் வீடு திட்டத்தைக் கொடுத்து விட்டார்.
அதனால் தெய்வமே என்று இருந்தால் கற்பனைக்காக நான் ஒன்றைச் சொல்லுகின்றேன். கடவுள் என்ற ஒன்றை நாங்கள் ஒப்புக் கொள்வ தில்லை.

கடவுள்கூட கொடுக்க முடியாது!

கடவுள்கூட இனிமேல் கூரையைப் பிய்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் பிய்க்க முடியாத அளவுக்கு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொடுத்துவிட்டார் கலைஞர்.
இப்படி எல்லா துறைகளிலும் பாருங்கள். பசியில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்க படிப்பு இவ்வளவும் கொடுத்தி ருக்கிறார் கலைஞர்.

எங்கு பார்த்தாலும் தொலைபேசி

இவ்வளவும் கொடுத்த கலைஞர் ஆட்சி மீது குறை சொல்ல என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள். பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். எங்கு பார்த்தாலும் இப்பொழுது தொலைபேசி இருக்கிறது பாருங்கள். தி.மு.க.வைச் சார்ந்த ஆ.இராசா மத்திய அரசில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.
வாஜ்பேயி ஆட்சி காலத்திலிருந்தே தொலைத் தொடர்புத் துறையை நவீன முறையில் பயன்படுத்த வேண்டுமென்பது திட்டம். இதை அய்ந்தாண்டுத் திட்டமாக கொண்டு வந்தார்கள்.

இராசா செய்த மகத்தான புரட்சி!

அவர்கள் உருவாக்கிய கொள்கையாக இருந்தாலும், அதை பெரிய அளவுக்கு விரிவாக்கிய காலகட்டம் யாருடையது என்றால், அமைச்சர் இராசா அவர்கள் செய்த மகத்தான புரட்சியினாலே ஏற்பட்ட மிகப்பெரிய விளைவுகள்.

அதனால்தான் இன்றைக்குப் பார்த்தீர்களே யானால் எல்லோர் கையிலும் செல்ஃபோன் இருக்கிறது. ஒன்று-இரண்டு அல்ல; இரண்டு மூன்று செல்ஃபோன் வைத்திருக்கிறவர்கள் கூட நம்பரை மாற்றாமலே பண்ணலாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை வந்தாகிவிட்டது. இன்றைக்கு இருபது காசு, 30 காசுக்கு பேசும் நிலைமை வந்துவிட்டது. குற்றம் சொல்லக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் சொல்லட்டும்.

எதிர்க்கட்சிக்காரர்களாக இருந்தாலும் சொல்லட்டும். இன்றைக்கு உலகத்திலேயே இங்கே கிடைக்கிற அளவுக்கு டெலிஃபோன் கட்டணம் இவ்வளவு மலிவாக, இவ்வளவு குறைவாக எந்த நாட்டிலாவது உண்டா? தயவு செய்து சொல்லட்டும்.

இன்று 79 கோடி தொலைப்பேசிகள்

அது மட்டுமல்ல; இராசா பதவி ஏற்றுக் கொண்ட காலத்தில் 30 கோடி டெலிஃபோன்கள் இருந்தன என்றால் அவர் பதவியைவிட்டுப் போகிற பொழுது 79 கோடி டெலிஃபோன்கள் இந்த நாட்டிலே இருந்தன. கூநடந னுநளேவைல என்று சொல்லக்கூடிய அளவுக்கு முத்தன், முனியன், குப்பன், சுப்பன் என்று இன்று எல்லோர் கையிலேயும், டெலிஃபோன் இருக்கிறது. எல்லோரும் பேசுகிறார்கள்.


கார் டிரைவர் கையில் செல்ஃபோன்

சாதாரண வேலைக்காரம்மாகூட முதலாளி அம்மாவிடம் சொல்லுகிறது. நான் கொஞ்சம் இன்றைக்கு லேட்டா வருகிறேன் அம்மா என்று செல்ஃபோனில் சொல்லுகிறது. டிரைவரிடம் செல்ஃபோன் கொடுத்துவிட்டார்கள். நீ எங்கேயப்பா இருக்கிறாய் என்று சொல்லுகின்றார். இப்பொழுது டிரைவர் கையில் ஒரு செல்ஃபோன், முதலாளி கையில் ஒரு செல்ஃபோன். உடனே கார் முதலாளி கூப்பிடு கின்றார்.

ஆக, இப்படி எல்லா இடங்களுக்கும் வசதி வந்தாகிவிட்டது. திடீரென்று ஒரு பூதாகாரமாக ஆக்கினார்கள். 1,76,000 கோடி 2 ஜி அலைக்கற்றை மூலமாக இந்த அரசாங்கத்தில் ஊழல், ஊழலோ ஊழல் என்று ஆரம்பித்தார்கள்.

என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இதில் மனதுக்குத் தகுந்தமாதிரி ஒவ்வொருத்தன் சொல்லுகின்றான். தயவு செய்து இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல மணிநேரம் விளக்க வேண்டிய செய்தி இது. உறைய வைக்கும் தகவல்கள் 2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள் என்ற தலைப்பில் ஏராளமான தகவல்களைக் கொண்ட புத்தகத்தை நாங்கள் இங்கே விற்பனைக்காக கொண்டு வந்திருக்கின்றோம்.

நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும். எங்க ளுடைய தோழர்கள் கொண்டு வருவார்கள். மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். நாங்கள் இதைத் தெளிவாகப் படித்துவிட்டுச் சொல்லு கின்றோம்.

ஊழல், ஊழல் என்று சொல்லி அந்தப் புகை மூட்டத்திலேயே திமு.க ஆட்சியை அசைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அசைப்பதற்கு அதில் ஒன்றுமில்லை. முடியாது. தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு உடல்நிலை சரியில்லை

எதிர்க்கட்சித் தலைவருக்கு உடம்புக்கு முடியவில்லை. அதனால் சட்டமன்றத்திற்கு வர முடியவில்லை என்று அவர் அனுமதி வாங்கிய பிறகுதான் தீர்மானம் செய்தவர்களுக்கே புரிந்தது.

ஏனென்றால் அதைக்காட்டி சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கலாம். சட்டமன்றத்திலேயே இப்படி தீர்மானம் நிறைவேற்றி அனுமதி கொடுத்து விட்டார்கள். ஆகவே எனக்கு வாய்தா கொடுங்கள் என்று கேட்கத் தயங்காதவர் அந்த அம்மையார். இருக்கட்டும். ஆனால், அவர்களுடைய தொலைக் காட்சியில் சொல்லும்பொழுது ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்று சொல்லு வதில்லை.

ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி என்று ரவுண்டாக சொல்லுகிறார்கள். அதில் ஏன் சொச்சம் வைப்பானேன் என்று அவர்கள் இப்படி பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.


ஜெயலலிதா தொலைக்காட்சியில்...

ஜெயலலிதா தொலைக்காட்சியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று சொல்லு வார்கள். இன்னொருவர் சு.சாமி என்று இருக்கிறார். அவர் அவ்வளவு, இருக்காது என்று சொல்லுவார். இன்னொருவர் குருமூர்த்தி அய்யர் என்பவர் இண்டியன் எக்ஸ்பிரசில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர், அவர் சொல்லுகிறார் 24 ஆயிரம் கோடிக்கு மேல் சொல்லக்கூடாதுங்க என்று சொல்லுகின்றார்.

பா.ஜ.க வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரிக்கு சி.பி.அய் சம்மன் அனுப்பியிருக்கிறது. அவர் சென்னைக்கு வந்து ஒரு பேட்டியில் சொன்னார். 24 ஆயிரம் கோடி 30 ஆயிரம் கோடிக்கு மேல் சொல்லக்கூடாது. அதற்குள்ளேதான் சொல்ல வேண்டும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று சொல்லாதீர்கள் என்று அவர் சொன்னார்.

சி.பி.அய்யினுடைய எஃப்.அய்.ஆரில் போடப் பட்டது என்ன? 12 ஆயிரம் கோடி என்று போடப்பட்டது. இவற்றை எல்லாம்காட்டி ஏதாவது குறை சொல்லப் பார்க்கிறார்கள். தி.மு.க ஆட்சி ஒழிக்க முடியாத ஆட்சியாக இருக்கிறது. இந்த ஆட்சியை ஊழலோ ஊழல் என்று சொல்லிப் பார்க்கிறார்கள்.


இவர்கள் என்ன பரிசுத்தமானவர்களா?

இவர்கள் எல்லாம் பரிசுத்தமானவர்கள் அல்ல என்பது வேறு செய்தி. இதோ என்னுடைய கையில் இருப்பது சி.ஏ.ஜி ரிப்போர்ட். இது கணக்குத் தணிக்கையாளர் ரிப்போர்ட்.

எங்களுக்கும், மற்றவர்களுக்கும் என்ன தொல்லை என்றால், நாங்கள் எதையும் ஒழுங் காகப் படித்துத் தொலைக்கிறவர்கள். அதுதான் சங்கடமே (கைதட்டல்).

நாங்கள் பெரியாரிடம் இருந்ததாலே எதையும் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். படித்துச் சொல்ல வேண்டும். புரிந்து சொல்ல வேண்டும், தெளிவாகச் சொல்ல வேண்டும்; நியாயமாக இருப்பதைச் சொல்ல வேண்டும்.

நிறையப் புத்தகங்கள் இங்கே விற்கப்படு கின்றன. அவற்றை வாங்கிப் பாருங்கள். எல்லா செய்திகளையும் குறுகிய நேரத்தில் சொல்லிவிட முடியாது. சுருக்கமாக செய்தியைச் சொல்லு கின்றேன்.


முதல் குற்றவாளியே ஜெயலலிதாதான்!

ஆகா, இராசவைக் கைது செய்து விட் டார்களே, இன்றைக்கு அவர் திகார் சிறைச் சாலைக்குப் போய் விட்டாரே என்று சொல்லு கிறார்கள்.

பொது வாழ்க்கையில் இருக்கிறவர்கள் சிறைக்குப் போவதாலேயே குற்றவாளி என்று சொன்னால் முதல் குற்றவாளியாக இருக்க வேண்டியவர் எதிர்க்கட்சித் தலைவர்தான் (கைதட்டல்). அந்த அம்மையார் மீது சொத்து குவிப்பு வழக்கு என்று எத்தனையோ வழக்கு- சி.பி.அய் வழக்கு இருக்கிறது.

அன்றைக்கும் நாங்கள் இதைத்தான் சொன்னோம். இன்றைக்கும் நாங்கள் இதைத்தான் சொல்லு கின்றோம். எங்களுக்கு எங்கள் நிலையில் ஒன்றும் மாறுதல் இல்லை. குற்றவாளி என்று தீர்ப்பு வரவேண்டும். அதுவும் இறுதியாக வழங்கக்கூடிய தீர்ப்பு. அதிலேகூட பல நேரங்களில் தவறுகள் நடப்பது உண்டு.

ஆ.இராசா சொல்கிறார்...!

இன்றைக்கு ஆ.இராசா அவர்கள் எவ்வளவு தெம்போடு, துணிவோடு-ஒன்றும் பயப்பட வில்லை. மற்றவர்கள் மாதிரி இல்லை. திகார் ஜெயிலுக்குப் போகிறார் என்றால் என்ன அர்த்தம்?

ஆ. இராசா சொல்லுகிறார், என்னுடைய குற்றமற்ற தன்மையை நிரூபித்துக் காட்டி வெளியே வருவேன் என்று. இப்படி துணிச்சலாக பத்திரிகையாளரிடம் சொல்லிவிட்டுத்தான் அவர் சிறைக்குப் போயிருக்கிறார்.

ஆ.இராசா இருக்கின்ற திக்கு நோக்கி உண்மையான திராவிடர் இயக்கத் தோழர்கள் வாழ்த்துகிறார்கள், வரவேற்கிறார்கள். ஏனென்றால் அவர் தவறு செய்யவில்லை.


பிரதமர் சொல்லியிருக்கின்றார்

தவறு பண்ணவில்லை என்று நான் சொல்ல வில்லை. பிரதமர் சொல்லியிருக்கின்றார். பிரத மருடைய அந்தப் பேட்டியில் ரொம்பத் தெளிவாக பதில் சொல்லியிருக்கின்றார்.

தி.மு.க மீது அபவாதம், தி.மு.க மீது பழி இவற்றைதான் சொல்லுகிறார்கள். முதலில் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

தணிக்கையாளர் அறிக்கை

தணிக்கையாளர் அறிக்கையில் முன்னுரையில் சொல்லுகிறார். இங்கே மேடையிலே வழக்குரை ஞர்கள் இருக்கிறார்கள். எதிரிலேயும் நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.

என்னுடைய உரையையும் கேட்டுக்கொண்டி ருப்பார்கள். அவர்களுக்கு நான் சொல்லுகின்றேன்- அரசியல் சட்ட விதிப்படி, 151ஆம் பிரிவின்படி. இவர் இந்தத் தணிக்கை அறிக்கையைத் யாருக்காக தயாரிக்கிறார்? குடியரசுத் தலைவருக்காகத் தயாரிக் கிறார். குடியரசுத் தலைவரிடம் இந்த அறிக்கையை ஒப்படைக்கின்றார்-கையெழுத்துப் போட்டு.


எப்படி வெளியானது?

குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது எப்படி வெளியே வந்தது? நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னாலே எப்படி வெளியே வந்தது என்பதை இதுவரை மத்திய அரசோ, சி.பி.அய்யோ ஏன் கண்டு பிடிக்கவில்லை? ஏன் அந்த முயற்சியிலே ஈடுபாடு காட்டவில்லை? அது இன்றைக்கும் நிற்கக் கூடிய கேள்வி, பதில் கிடைக்காத கேள்வி. அதுதான் ஏன் என்று தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க வேண்டுமா- இல்லையா?

எம்.ஜி.ஆர் காலத்தில் வழக்குப் போட்டாரே!

பால் கமிசன் அறிக்கையை வெளியே விட்டார் என்று எம்.ஜி.ஆர் காலத்தில் வழக்கு போட்டார்களா- இல்லையா? ஏற்கெனவே முன்னுதாரணம் இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இது சி.ஏ.ஜி ஆடிட் ரிப்போர்ட். 2 ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பற்றி இதில் ஊழல் என்றால் 2004இலிருந்து சொல்ல வேண்டுமா, இல்லையா? 2003,2004 ஆம் ஆண்டைப்பற்றிச் சொல்லவே இல்லையே! இராசா எந்தக் காலத்தில் இருந்தாரோ அதைப் பற்றி மட்டும் சொல்லுகிறார் என்று சொன்னால், இது உள்நோக்கத்தோடு செய்யப் பட்டதா, இல்லையா? தயவு செய்து நடுநிலையா ளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் பார்க்க வேண்டும். அதற்கடுத்து பல செய்திகள் இருக்கின்றன. கடைசியாக இந்த அறிக்கையை முடிக்கும்பொழுது 1,76,000 கோடி நட்டம் என்று உறுதியாகச் சொல்லியிருக்கின்றாரா? தயவு செய்து ஆளுக்கு ஆள் சொல்ல வேண்டிய அவசியமென்ன?


நட்டம் ஏற்பட்டிருக்கலாம்!

பக்கம் 59இல் சொல்லுகிறார். 2ஜி அலைக் கற்றையில் நட்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லிவிட்டு, அடுத்த வாக்கியம்-என்றாலும், எவ்வளவு நட்டம் வந்தது என்பதை நாம் பேசி முடிவு பண்ணிக்கொள்ளலாம். இன்றைக்குப் பத்திரிகை யாளர்களும், மற்றவர்களும் என்ன சொல்லு கிறார்கள். மத்திய அமைச்சர் கபில்சிபல் சொன்னார்-ஒன்றும் இதில் நட்டமே கிடையாது. ஏனென்று கேட்டால் இது கற்பனையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏலம் விட்டிருந்தால்...

ஏலம் விட்டிருந்தால்... ஆனால் ஏலம் விடவில்லை. ஏன் ஏலம் விடவில்லை? காரணம் இருக்கிறது. அதற்கு உள்நோக்கம் எதையும் சொல்ல முடியாது. ஏலம் விட்டிருந்தால் முதலாளிகள் அதிகம் எடுத்திருப்பான்.

பல பேருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்க முடியாது. இப்படி போட்டி வந்திருக்க முடியாது. இதற்கு முன்பு செல்ஃபோன் கட்டணம் ஒரு ரூபாய் என்று இருந்தது. ஆ.இராசா காலத்திற்குப் பிறகுதான் 20 காசு, 30 காசு என்று வந்தது.

கொள்கை முடிவை எடுத்தது யார்?

அது மட்டுமல்ல; இந்தக் கொள்கை முடிவை யார் எடுத்தது? அமைச்சர் ஆ.இராசா எடுத்ததல்ல. இன்னும் கேட்டால் யு.பி.ஏ என்று சொல்லக்கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த முடிவல்ல. 2003ஆம் ஆண்டிலிருந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்பொழுது வாஜ்பேயி பிரதமர். அப்பொழுது தகவல் துறையிலே பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்திருக்கின்றார்.

பிரமோத் மகாஜனுக்கு அடுத்து அருண்ஷோரி அமைச்சராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு தயாநிதி மாறன் அமைச்சராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு இராசா அமைச்சராக வருகிறார்.

பி.ஜே.பி. ஆட்சியில் எடுத்த முடிவு!

ஆகவே, பி.ஜே.பி ஆட்சியில் 2003இல் என்ன முடிவு எடுத்தார்களோ அதுதான் தொடருகிறது. அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு ஒன்றுமே புரியாது என்று நினைத்துக் கொண்டு சொல்லுகிறார்கள்.

ஆகா! 1,76,000 கோடி ஏதோ மூட்டை கட்டி தூக்கிக்கொண்டு போன மாதிரி சொல்லுகிறார்கள். ஆகா ஒவ்வொரு ரூபாயாக நோட்டை அடுக்கினால் அது எவ்வளவு தூரம் வரும் என்று சொல்லுவது இருக்கிறது பாருங்கள். அது நடைமுறைக்குப் பயன்படுமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

விவாதம் பண்ணி முடிவெடுப்பதா?

ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஒரு கட்டம் கட்டி சொல்லுகிறார் என்றால், அதை நாம் விவாதம் பண்ணி முடிவுபண்ணிக் கொள்ளலாம் என்று வந்தால் இரண்டும், இரண்டும் நான்கு என்றால் நான்குதான்.

இரண்டும், இரண்டும் எட்டு என்று ஒருவர் சொல்லுகிறார். என்னங்க ஒருத்தர் நான்கு என்று சொல்லுகின்றார். இன்னொருத்தர் எட்டு என்று சொல்லுகின்றாரே என்று கேட்டால், விவாதம் பண்ணி எந்த விடை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

அது மாதிரியான, அவ்வளவு மோசடியான சூழல். இதை வைத்துக்கொண்டு ஒரு பழியைச் சுமத்துவதற்கு வாய்ப்பாக இன்றைக்கு அதைப் பயன்படுத்துகின்றார்கள்.


1 ஜி என்றால்...

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லுகின்றேன். நான், நமது சுப.வீ., மற்ற நண்பர்கள் எல்லாம் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்தோம். அதில் அவர் சொன்னார்.

1 ஜி என்பது முதல் தலைமுறை- First Generation;

2 ஜி என்பது இரண்டாவது தலைமுறை- Second Generation.

3 ஜி மூன்றாவது தலைமுறை,

4 ஜி நான்காவது தலைமுறை. எதை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள் என்று சொன்னால், அலைக்கற்றை வேகம், அதன் தன்மையை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள். டெலிஃபோன் துறையில் இருக்கக் கூடிய பொறியாளர்கள் இங்கே இருக்கிறார்கள்.

1 ஜி என்றால் என்ன விளக்கம்? போலீஸ்காரர்கள் கையில் வாக்கி டாக்கி வைத்திருக்கிறார்கள். மேல் அதிகாரி கேட்பார்- வீரமணி மேடைக்கு வந்து விட்டாரா? இங்கே வாக்கி டாக்கி வைத்திருப்பவர் நான் வந்துவிட்டதைப் பார்த்துவிட்டு இவர் ஓவர் என்று சொல்லுவார். இவர் ஓவர் என்று சொல்லி முடித்த பிற்பாடுதான் அவர் பேச முடியும். அவர் சொல்லி முடித்த பிற்பாடுதான் இவர் பேச முடியும். இதுதான் 1 ஜி இது முதற்கட்டம்.

இரண்டாவது தலைமுறை-2 ஜி

இரண்டு பேரும் இதில் டைரக்டாகப் பேச முடியாது. இந்த இரண்டு பேரும் சேர்ந்து பேசுவது. அதுதான் 2 ஜி-அதுதான் இந்த செல்ஃபோன் வேறொன்றுமே இல்லை. நாம் ஹலோ என்று சொன்னவுடனே அடுத்த முனையில் இருக்கிறவரும் ஹலோ என்று சொல்லுகின்றார்.

2ஜி யில் இரண்டு பேரும் டைரக்டாகப் பேசலாம். இதனுடைய வேகத் தன்மைவேறு. இதைவிட சக்தி வேண்டும். இதைவிட வேகம் வேண்டும். ஏனென்றால் வியாபாரம் வளருகிறது. ஒவ்வொரு நிமிடமும் ரொம்ப மிக முக்கியம். அறிவியல் வளர்ந்திருக்கிறது. இப்பொழுது அணுவையே துளைக்கிறான்- ஹவடிஅ என்பதை உடைத்துதான். இது நானோ டெக்னாலஜி. இப்படி உடைத்து, உடைத்து தொழில் நுட்பம் வளருகிறது.

3 ஜி என்பது முகம் பார்த்துப் பேசுவது

இது 4 மெகாஹெர்ட்ஸ் என்றால் 3 ஜிக்கும் மெகாஹெர்ட்ஸ் வரும். முதலில் ஓவர்-1 ஜி. இரண்டு பேரும் பேசினால் அது 2ஜி. மூன்றாவது ஜி இருக்கிறது பாருங்கள், ஏலம் விட்டார்களே, லாபம் வந்ததே-அது என்னவென்றால் முகத்தைப் பார்த்துப் பேசலாம். கலைஞர் சென்னையிலிருந்து கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னத்தைத் திறக்கிறார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக-காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார். பாளையங்கோட்டையில் நிகழ்ச்சி நடக்கிறது.

60 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்

இந்தச் செய்தியை 60 ஆண்டுகளுக்கு முன்னாலே தீர்க்கதரிசனமாக பெரியார் அவர்கள் சொன்னார். இனிமேல் வருகிற காலத்தில் ஒவ்வொருவருடைய கையிலும் தொலைபேசி இருக்கும். அதுமட்டு மல்ல; ஆளுக்கு ஆள் உருவம் காட்டிப் பேசு வார்கள்.

ஒரு வகுப்பில் ஓர் ஆசிரியர் இருந்தால் போதும் எல்லா வகுப்பு மாணவர்களும் அதைக் கேட்கலாம். வீடியோ கான்ஃபரன்சிங்கில் நேரடி யாகப் பேசலாம். 3ஜி டெலிஃபோன் வாங்கினால் அதில் உங்க ளுடைய உருவம் வரும். முகத்தைப் பார்த்துப் பேசலாம். ஒரே ஒரு வசதி குறைவு. நம்மாள் ஃபோனை எடுத்து வைத்துக்கொண்டு சொல்லு வான்:

ஓ அவர்தானுங்களே! அவர் இல்லிங்களே! என்று அவரே சொல்லிவிடுவார். இப்பொழுதுதான் வெளியே போனாருங்க என்று இவரே சொல்லுவார்.

நீங்கள் யாருங்க என்றுகேட்டால், நான் வேலைக்காரன் என்று சொல்லுவார். இதுதான் 3ஜி என்று பெயர். உருவத்தை நேரடியாகப் பார்த்துப் பேசுவது.

அதைவிட இன்னும் வேகமாகப் போவது என்னவென்றால் இஸ்ரோவுக்கெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்களே, இதெல்லாம் நான் காவது ஜெனரேஷன். வளர்ச்சி என்று சொல்லக் கூடிய அளவுக்கு இருக்கிறது.

இந்த 2 ஆவது ஜி.யில் எப்படிக் கொண்டு போவது? அமைச்சர் நினைத்தால் உடனே உத்தரவு போட முடியாது. டிபார்ட்மென்ட் ஆஃப் டெலி கம்யூனிகேசன் என்று இருக்கிறது-தொலைத் தொடர்புத் துறை என்று இருக்கிறது.


டிராய் அமைப்பு

இன்னொன்று டிராய் என்கிற அமைப்பு. தொலைத் தொடர்புத் துறைக்கு ஆலோசனை கூறுகின்ற அமைப்பு. கூநடநயீடிநே சுநபரடயவடிசல ஹரவாடிசவைல டிக னேயை கூசுஹஐ இதை எப்படி கொடுக்க வேண்டும்? எப்படி நடத்த வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இதில் எல்லா நிபுணர்களும் இருக்கிறார்கள். எல்லா அமைப்பைச் சார்ந்தவர்களும் இருக்கி றார்கள். அதுதான் முடிவெடுக்கக் கூடிய அமைப்பு. அதையும் மீறி அமைச்சர் முடிவெடுக்க முடியாது. இந்த அம்சங்களை மக்களுக்கு யாரும் விளக்கு வதில்லை.

பிரதமர்கூட அப்படிச் சொல்ல முடியாது

இது ஏதோ அவரே சுதந்திரமானவர் மாதிரியும் அவரே முடிவெடுக்கிற மாதிரியும் நினைக்கக் கூடாது. யார் முன்னாலே வருகிறார்களோ அவர்களுக்கும் முன்னுரிமை முதலில் கொடுக்கப் படும். இது எனக்குத் தெரியாது என்று பிரதமர் சொல்லியிருந்தால்கூட-அது இவருடைய காலத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல.

அந்த முடிவு யாருடைய காலத்தில் எடுக்கப் பட்டது? வாஜ்பேயி காலத்திலேயே எடுக்கப்பட்ட கொள்கை முடிவு-குசைளவ உடிஅந குசைளவ ளுநசஎநன. ஏனென்றால் எல்லா இடத்திற்கும் பரவலாகப் போக வேண்டும். எல்லா கிராமங்களுக்கும் டெலிஃபோன் போக வேண்டும்.

எல்லோர் கையிலேயும்...

எல்லோருடைய கையிலேயும் வரவேண்டும். அது நிறைய பேருக்குக் கிடைக்கக் கிடைக்க, பயன்பாடு அதிகமாக வர, வர அதனுடைய செலவு குறையும். செலவு குறையக் குறைய போட்டிகள் வரும்.

போட்டிகள் வரும்பொழுது கட்டணத்தினு டைய விகிதம் குறைந்தால்தான் அவர்கள் அந்தத் தொழிலை நடத்த முடியும்.


3 ஜி என்பது என்ன?

3 ஜி என்பது வேகமான தொழில்நுட்பம். உருவத்தைப் பார்த்து பேசக்கூடியது. இதே டிராய் என்ன சொன்னார்கள்? இதே அமைச் சர்கள் என்ன சொன்னார்கள்?

இந்த 2 ஜியில் மாறுதல் பண்ண வேண்டாம். 3 ஜி கொண்டுவருகிறோம் பாருங்கள், அதை வேண்டுமானால் ஏலம் விடலாம் என்று சொன்ன வுடனே இராசா சொன்னார், சரி தாராளமாக செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். அவர் ஒன்றும் ஆட்சேபணை செய்யவில்லை. அவர் இதில் ஒன்றும் குறுக்கே வரவில்லை.

ரூ.75 ஆயிரம் கோடி லாபம்

அதே இராசா 75 ஆயிரம் கோடி லாபத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்றார். அந்த 75ஆயிரம்கோடி லாபம் என்பது யூகக் கணக்கல்ல. ஊழல் என்று சொல்லுகிறார்களே, குற்றம் சுமத்துகிறார்களே இப்படி நடந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் 3 ஜி மூலம் 75ஆயிரம் கோடி என்பது மத்திய அரசின் கருவூலத்திற்குக் கிடைத்த பணம். இவை இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

கனவு கண்டு ஒருவன் காதலியைக் கட்டிப் பிடித்துக்கொள்கிறான் என்பதற்கும், நேரடியாக ஒரு பெண்ணை கலியாணம் பண்ணிக் கொண்டான் என்பதற்கும் என்ன வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.

பலருக்கு இப்பொழுது ஓர் ஆசை

அது கனவில்கண்ட காதல். பலபேருக்கு இப்பொழுது ஓர் ஆசை. அடுத்து எப்படியாவது நாம் ஆட்சிக்கு வந்துவிடமாட்டோமா? எங்கே யாவது மந்திரத்தில் மாங்காய் விழாதா? என்று நினைக்கிறார்கள். நிச்சயமாக அது நடக்காது.

இங்கே கூட நாளைய முதல்வர் என்று ரொம்ப பேருக்கு எழுதி வைத்திருக்கின்றார்கள். இப்படி நிரந்தரமாக எழுதி வைக்க வேண்டும். ஏனென்றால். தேர்தலுக்குப் பிறகும் அந்த போர்டு தேவை. அப்பொழுதும் அவர்களுடைய நம்பிக் கையை குறைக்கக் கூடாது.

நாளைய முதல்வர் ....

நாளைய முதல்வர். நம்பிக்கைதானே வாழ்க்கை. இந்தத் தேர்தலில் இல்லை என்றாலும், நாளைக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். யாரும் அசைக்க முடியாது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த நாட்டினுடைய குடிமகன், சாதாரண ஏழை, எளிய மகன், பசி தீர்த்த மகன் முடிவு செய்துவிட்டான்.

பொற்கால ஆட்சியின் தொடர்ச்சி

மீண்டும் ஆறாவது முறை ஆட்சிக்கு வருவது பொற்கால ஆட்சியின் தொடர்ச்சியாக முதல்வர் கலைஞர்தான் ஆட்சிக்கு வருவார். இதை யாராலும் அசைக்க முடியாது. அது மட்டுமல்ல. போதுமான பலத்தோடு வருவார். சும்மா அவர் மிரட்டலாம், இவர் மிரட்டலாம் என்பதற்கு இங்கே இடம் கிடையாது. (பலத்த கைதட்டல்).

பொதுமக்கள் பார்க்கிறார்கள். பொதுமக்கள் முடிவு பண்ணியிருக்கிறார்கள். பொதுமக்களை நன்றாகத் தெரிந்தவர் ஒருவர் உண்டென்றால் அது கறுப்புச்சட்டைக்காரரைத் தவிர வேறு யாரும் கிடையாது (கைதட்டல்). ஏனென்றால் மக்க ளோடவே நான் பழகிக்கொண்டிருப்பவன்.

சில ஆசைகள் ஏற்பட்டிருக்கிறது

எனவே இதனுடைய அடிப்படை என்ன? நேற்று இதைப் பற்றித்தான் கேள்வி. பிரதமர் மன்மோகன் சிங் ரொம்ப அழகாக பதில் சொல்லியிருக்கின்றார். நம்முடைய மகேந்திரன் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார். பார்ப்பனர்களுக்கு இப்பொழுது ஒரு ஆசை. கலைஞர் ஆட்சியை இல்லாமல் செய்து மீண்டும் பார்ப்பன ஆட்சியை தமிழகத்தில் உண் டாக்க நினைக்கிறார்களோ அதுபோல மத்திய அரசிலே மீண்டும் பார்ப்பன ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்கு சில ஆசைகள் வந்திருக்கிறது.

அதுவும் கனவு காண்கிற ஆசைதான். வேறு ஒன்றும் அதில் சந்தேகமே இல்லை. அவரையே கேள்வி கேட்கிறான், நீங்கள் எப்பொழுது போகப் போகிறீர்கள் என்று.

நான் எப்பொழுதும் போகிற மாதிரி இல்லை. மக்கள் கொடுத்திருக்கிற காலப்படி கடைசி வரைக்கும் எனது பணியை செய்வேன் என்று பதில் சொல்லியிருக்கிறார், உறுதியாக. காரணம் என்ன? நாட்டில் பார்ப்பனரல்லாத ஒரு பிரதமர், நாட்டில் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலைமை இந்த இரண்டையும் அவனால் சகிக்க முடியவில்லை.

கலைஞரால்தான்-காங்கிரஸ்

என்னதான் சிண்டு முடித்தனம் பண்ணினாலும் கலைஞரால்தான் காங்கிரஸ் நிலையாக இருக்க முடியும் என்று உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நிலை. எதார்த்த நிலையைத் தெரிந்து கொண்டிருக் கின்றார்கள். ஆகவே எத்தனை சங்கதி? மீனவர் பிரச்சினை, மற்றவர்கள் பிரச்சினை, ஈழத்துப் பிரச்சினை இவைகளில் திமுக உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை. அந்த உரிமைகளுக்காகப் போராடத் தயாராக இருக்கிறோம்.

கொள்ளிக்கட்டையால் சொறிந்துகொள்ளாதீர்கள்!

ஆனால் அடித்தளத்தில் இதற்கு நேர் விரோத மானவர்கள் இருப்பார்கள், பாருங்கள். அவர்களைக் கொண்டு வந்துவைத்துவிட்டு, நீங்கள் கொள்ளிக்கட்டையை எடுத்து வைத்துக்கொண்டு தலையைச் சொறிந்துகொண்டிருக்க முடியாது. ஆகவே இதைப்பற்றியே நிறைய சொல்லாம். ஒரு செய்தியாளர் கேள்வி கேட்கின்றார்.

இராஜா பிரச்சினைப் பற்றி சொல்லுகிறார். என்ன இப்படி சொல்லுகிறார்களே என்று ராசாவைக் கேட்டேன். அன்றைக்கே இராசா கடிதம் எழுதினார். நான் நடப்பதில் திறந்த புத்தகமாகத்தான் நடந்து கொள்வேன். வெளிப்படையாகத்தான் எல்லாவற் றையும் செய்யலாம். இப்பொழுது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அப்படித்தான் செய்வேன் என்று பதில் எழுதியிருக்கிறார்.

பிரதமர் பேட்டி

பிரதமர் அளித்த பேட்டியை நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருக்கலாம். அந்தத் தொலைக் காட்சிப் பேட்டியை அப்படியே எடுத்து பத்திரிகையில் போட்டிருக்கின்றார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியிருக்கின்ற கேள்வி-பதிலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியைச் சொல்லுகின்றேன். மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு உண்மைகள் போய்ச்சேருவதில்லை.

போர்க்களத்தில் முதல் களபலியாவது உண்மை தான் என்று ஒரு பழமொழி உண்டு. அது வெளிநாட்டில். நம்மூரிலும் போர்க்களம் நடை பெறுகிறது. அது ஆரிய-திராவிடர் போர்க்களம்.


ஏலம் விடவில்லை

இதை ஏலம் விடவில்லை. அதனால்தான் நட்டம் வந்திருக்கிறது. ஏலம் விடுவதற்கு டிராய் என்கிற அமைப்புதான் முடிவு செய்யக்கூடிய அமைப்பு. இந்த டிராய் அமைப்பில் நிதித்துறையைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

அரசு வகுத்த கொள்கைப்படிதான் அமைச்சர் நடக்கமுடியுமே தவிர, அமைச்சர் அதைத் தாண்டி நடக்கக்கூடிய வாய்ப்பு கிடையாது. நடுநிலையிலே பொது நிலையிலே இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய செய்தி இது. டிராய் என்கிற அமைப்பு ஏலம் கூடாது என்று சொல்லியிருக்கிறது. அதற்கு மேல் இருக்கின்ற டெலிகாம் கமிசனும் கூடாது என்று சொல்லியிருக்கிறது.

அமைச்சரவையின் கொள்கை முடிவு

குறைந்தபட்சம் 2 ஜி ஸ்பெக்ட்ரத்திற்காவது நிச்சயமாக இந்த ஏலமுறையைப் பின்பற்ற முடியாது என்று டிராய் சொல்லியிருக்கிறது. டெலிகாம் கமிசன் சொல்லியிருக்கிறது. அடுத்தது 3 ஜி வரட்டும். 3 ஜியில் ஏலம் விடலாம் என்று சொல்லியிருக்கின்றார். அதை விட ஒரு மனிதன் எவ்வளவு நியாயமாக நடந்துகொள்ள முடியும்?

நினைத்துப் பாருங்கள். 2003இல் அமைச்ச ரவை முடிவு. அந்த அமைச்சரவை முடிவுதான் கொள்கை முடிவு. இது ஒரு கொள்கை முடிவு. இதில் எனக்கென்ன தலையிட வேண்டியிருக் கிறது என்று ரொம்ப தெளிவாக சொல்லியிருக் கின்றார்.

உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பாப்பாத்தி மாதிரி இருந்திருக்கிறார்களே தவிர, வேறு அல்ல. இப்பொழுது இருக்கிற பாப்பாத்தி பகிரங்கமாகவே உப்புகண்டம் சாப்பிடுவார் (சிரிப்பு-கைதட்டல்). 2 ஜியைப் பொறுத்த வரையிலே இந்த முறைதான் பொருத்தமானது.

3 ஜிக்கு வேண்டுமானால் ஏலம் விடலாம் எந்த நிதி அமைச்சகம் முதலில் மாறுபட்ட கருத்தைச் சொல்லிற்றோ அதே நிதியமைச்சகம் பின்னாலே ஒப்புக்கொண்டது. இவ்வளவு ஆதாரம் இருக் கிறது. ஆ.இராசா தனியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை

ஆ.இராசா தனியாக ஒரு கொள்கை முடிவை உருவாக்கவில்லை. இராசா ஏற்கெனவே அரசு எடுத்த கொள்கை முடிவைத்தான் தொடர்ந்தார். இன்றைக்குப் பல விசயங்கள் வருகிறது. ஒருவன் கேட்கிறான், 2ஜியில் ஒரு நட்டமும் வரவில்லை என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் சொல்லி யிருக்கிறாரே என்று-கேட்டவுடனே அதற்கு நல்ல பதில் சொல்லியிருக்கின்றார்.

நட்டம் என்று சொல்வது முறையல்ல

இழப்பு, இழப்பு என்று சொல்லுகிறார்களே அதைப்பற்றி பிரதமர் சொல்லுகின்றார். அரசாங்கத்தினுடைய கொள்கை முடிவு என்னவென்றால் ஏலம்விடக் கூடாது என்று வந்ததினாலேதான் அங்கு ஏலம் விடப்படவில்லை. அதைப் போய் நீங்கள் நட்டம் என்று சொல்லுவது முறையல்ல என்று சொல்லிவிட்டு நல்ல உதாரணம் சொல்லுகின்றார்.

பிரதமர் சொல்லுகிறார்

பிரதமர் சொல்லுகிறார்-உணவுக்காக மானியம் தருவதில் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படு கிறது. அதை பொதுமக்களுக்கு இழப்பு என்று சொல்லலாமா?

அது மாதிரி டெலிஃபோன் எல்லா மக்களாலும் பேசப்படவேண்டும். எல்லா இடங்களுக்கும் பரவவேண்டும் என்பதற்காக கை கொள்ளப்பட்ட கொள்கையே தவிர, இதற்குப் போய் இழப்பு என்று எப்படி நீங்கள் சொல்லாம்.

உணவுக்காக ரூ.80,000 கோடி மானியம்

உணவு மானியத்தில் 80 ஆயிரம் கோடி இழப்பீடுதான். நீங்கள் சந்தைக்கடையில் விற்க வேண்டும் என்று சில பேர் சொல்லலாம். இப்படி விற்றால் லாபம் என்று சொல்லலாம். ஆனால் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டுமே?

1 கிலோ அரிசியை 8 ரூபாய்க்கு வாங்குகிறது

ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கலைஞர் கொடுக்கிறார். இதை இவர்கள் உணவு கார்ப்பரே சனிலிருந்து எட்டு ரூபாய்க்கு வாங்குகிறார்கள். ஏழு ரூபாய் அரசாங்கத்திலிருந்து பணம் போடுகிறார்கள்.

எட்டு ரூபாய்க்கு இந்த அரிசியை விற்றால் எவ்வளவு லாபம் வரும்? அந்த லாபத்தை எல்லாம் கலைஞர் நட்டப்படுத்தினார். இவரைக் கொண்டு போய் சிறையில் வையுங்கள் என்று கேட்க முடியுமா? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும். மக்களுக்கு இதை புரியாமல் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் எதிர்க் கட்சியினர் இந்த முயற்சியை எடுக்கிறார்கள்.

உரமானியம் ரூ.60,000 கோடி

அதே போல உரத்திற்கு மானியம் கொடுக்கிறோம். ஒவ்வொரு வருடமும் 60,000 கோடி மானியம் கொடுக்கிறார்கள். உரம் மக்களுக்குப் பயன்பட வேண்டுமே என்பதற்காக அதைப் போய் இழப்பு என்று சொல்ல முடியுமா?

ஏழை கிராம மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். ஏழை விவசாய மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும். அதற்காகத்தான் மானியம் வழங்கப்படுகிறது.

மண்ணெண்ணெய்

அதேபோல மண்ணெண்ணெய்யை கூடுதல் விலைக்கு வாங்கி, விலையைக் குறைத்துக் கொடுக்கின்றோம். அதை இழப்பு என்று சொல்ல முடியுமா? இப்படி எல்லாம் பிரதமர் தெளிவாகக் கேட்டிருக்கிறார்.

அப்படி இருந்தும் துங்குகிறவனை எழுப்பலாம். தூங்குகிறமாதிரி பாசாங்கு செய்கிறவனை எங்காவது எழுப்ப முடியுமா? நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்ற நினைக்காதீர்

ஆகவே மக்களை ஏமாற்றலாம் என்று நீங்கள் நினைத்தால், இந்த உண்மைதான் எல்லா இடங்களுக்கும் போய்ச்சேரும். வழக்கு என்றால் எல்லா இடங்களிலும் வழக்கு இருக்கும். வழக்கை சந்திப்பார்கள். வழக்கைப் பற்றி கவலை இல்லை. கலைஞருக்கு இருக்கிற பெருந்தன்மை இது!

இடையூரப்பா என்று ஒரு முதல்வர்

பக்கத்திலே கருநாடகத்திலே ஒரு முதலமைச்சர் இருக்கிறார். பா.ஜ.க முதலமைச்சர். இடையூரப்பா என்று பெயர். அவருக்கு ஆட்சியில், கட்சியில் ரொம்ப இடையூறப்பா அவருக்கு.

கட்சிக்காரர்களே இடையூறு அவர்களுக்கு. எடியூரப்பா என்று முதலில் தமிழ்ப் பத்திரிகையில் போட்டார்கள். பிறகு இடையூரப்பா என்று போட்டார்கள்.

அவர்மீது புகார்மீது புகார். அதற்கு மேல் கோயில் கோயிலாகச் சுற்றி பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள் என்று ஒருவரிடம் இடையூரப்பா திடீரென்று போய் கேட்டார்.

நிர்வாணமாக...

நான் இதிலிருந்து தப்பிப்பதற்கு என்னங்க வழி என்று கேட்டார். நிர்வாணமாக படுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அவர் அதையும் செய்துவிட்டார்.

நமது நாடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது பார்த்தீர்களா? அறிவியல் துறையில் பார்த்தால் ஒரு பக்கம் 3 ஜி ஸ்பெக்ட்ரம் இன்னொரு பக்கம் நிர்வாணமாகப் படுத்து பதவியைக் காப்பாற்று கின்ற முதலமைச்சர். இவர்கள்இந்த நிலையில் ஊழலைப் பற்றி பேசுகிறார்கள். ஊழலை வண்டி, வண்டியாக வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்.

பைபிளில் ஒரு கதை

பைபிளில் ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து விபச்சாரி என்று சொல்லுகின்ற நேரத்திலே கல்லெடுத்து அடிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது நீங்கள் யார் யோக்கியமானவர்களோ அவர்கள் கல் லெடுத்துப் போடுங்கள் என ஏசுநாதர் சொன்னார் என்று சொல்லுவார்கள்.

இது நடந்ததா? இல்லையா? என்பது வேறு. இந்தத் தத்துவம் சரியான தத்துவம். முதலில் நீ யோக்கியமாக இருந்தால் முதல் கல்லை எடுத்துப் போடு. அதுமாதிரி இருக்கக் கூடிய தத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சூழ்ச்சிப் போராட்டம்

எனவேதான் நண்பர்களே! தி.மு.க ஆட்சிமீது குறை சொல்ல எந்த ஆயுதமும் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடனே மத்தியிலும் பார்ப்பனர் ஆட்சி வரவேண்டும். மாநிலத்திலும் பார்ப்பனர் ஆட்சி வரவேண்டும். மிகப்பெரிய ஒரு சூழ்ச்சிப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு இந்த 2 ஜியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.

அதற்கு ஆ.இராசா ஒரு பலிகடா என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கிற மாதிரி அவர் பலிகடா ஆகிவிட மாட்டார். மீண்டு வருவார். மீண்டும் வருவார்.

தி.மு.க ஆட்சி மீண்டும் வரும்

தி.மு.க ஆட்சியே மீண்டும் வரும். ஆறாவது முறையாக கலைஞரே மீண்டும் முதல்வராக வருவார் என்று கூறி உரையாற்றினார்.

http://viduthalai.in/new/home/archive/4202.html
http://viduthalai.in/new/home/archive/4319.html
http://viduthalai.in/new/home/archive/4355.html
http://viduthalai.in/new/home/archive/4443.html
http://viduthalai.in/new/home/archive/4497.html
http://viduthalai.in/new/page-4/4554.html

No comments:


weather counter Site Meter