Pages

Search This Blog

Wednesday, March 2, 2011

குஜராத்- காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்தை சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை

தெகல்கா படப்பிடிப்பு

குஜராத் 9.4.2002 அன்று ஆர்.பி.சிறீகுமார் மாநில புலனாய்வுத் துறை கூடுதல் காவல்துறைத் தலைவ ராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த சிலரை தீர்த்துக்கட்டுவது உள்ளிட்ட மோடியின் சட்டத்திற்குப் புறம்பான, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அறிவுரைகளின் படி தான் நடந்து கொள்ளாததால், மோடியின் வெறுப்புக்குத் தான் ஆளான தாக அவர் கூறினார். சிறீகுமார் அளித்த ஆவண ஆதாரங்களில், கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ளவையும் அடங்கும்.

1) அகமதாபாத் நகரில் தற்போது நிலவும் சமூக நிலவரம் என்ற அறிக் கையைத் தயார் செய்து அப்போதைய உள்துறை கூடுதல் தலைமைச் செய லாளராக இருந்த அசோக் நாராயணி டம் 24.4.2002 அன்று பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள அளிக்கப் பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்த முக்கியமான செய்திகள்:

அ)  குற்றவியல் நீதித்துறை நடை முறையின்மீது கலவரங்களால் பாதிக் கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து விட் டனர். பா.ஜ.க. மற்றும் வி.இ.ப.  உறுப் பினர்களுக்கு எதிராக புகார்களை அளிக்க விடாமல் அவர்களைக் காவல் துறையினர் மிரட்டினர்.

ஆ)  புகார்களில் அளிக்கப்பட்ட குற்றச் சாற்றுகளை காவல்துறை அதி காரிகள் நீர்த்துப் போகச் செய்ததுடன், முதல் தகவல் அறிக்கைகளைத் தனித் தனியாகப் பதியாமல், ஒன்றுக்கும் மேற் பட்டவற்றை  ஒன்றாக இணைத்தனர்.

இ) முஸ்லிம்களுடன் வியாபாரம் செய்யக்கூடாது என்று வி.இ.ப. மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் வியாபாரிகளை வற்புறுத்தினர்.

ஈ) மத உணர்வுகளைத் தூண்டி விடும் அளவுக்கான செய்திகள் அடங் கிய பிரசுரங்களை வி.இ.ப. அமைப்பினர் விநியோகித்து வந்தனர்.

உ) காவல் நிலையங்களில் இருந்த ஆய்வாளர்கள் மேலதிகாரிகளின் அறி வுரைகளைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறாக பா.ஜ.க. தலைவர்களின் நேரடியான வாய்மொழி அறிவுரை களைப் பின்பற்றினர்.

இந்த அறிக்கை உண்மையானது என்பதைக் கண்டு கொண்டது மட்டு மன்றி,  மற்ற சில அதிகாரிகள் தயாரித்த  அறிக்கைகள் சிறீகுமார் அறிக்கை யுடன் ஒத்துப் போவதாகவும் சிறப்பு விசாரணைக் குழு கண்டுகொண் டுள்ளது.

இது பற்றி சிறப்பு விசாரணைக் குழு கேட்டபோது, அந்த அறிக்கையை மோடியிடம் வைத்தேனா இல்லையா என்பது எனக்கு நினைவில்லை என்று அசோக் நாராயண் கூறினார்.

நீறு பூத்த நெருப்பு

2) குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளிலும்  மத உணர்வுகள் இன்னும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருப்பதால், மோடி மேற்கொள்ள உத்தேசித்திருந்த ரத யாத்திரைக்கு எதிராக மற்றொரு அறிக்கையை   25.6.2002 அன்று சிறீகுமார்  அனுப்பி வைத்தார். அவரது பரிந்துரையை மோடி அரசு நிராகரித்துவிட்டது.

3) மக்களிடையே மத உணர்வுகள் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருவதை எடுத்துக்காட்டி, நியாயமற்ற காவல்துறை நடவடிக்கைகள் பற்றியும், கண்துடைப்பு விசாரணை பற்றியும் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து புகார் செய்து வருவதை எடுத்துக்காட்டியும்      20.8.2002 அன்று சிறீகுமார் மற்றொரு அறிக்கையைத் தயார் செய்து அனுப் பினார்.

இந்த அறிக்கை மீது அரசு நட வடிக்கை எடுக்கவில்லை என்று அசோக் நாராயண் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்புக் கொண்டார்.

4) நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒட்டி நிலவும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலை பற்றிய மற்றொரு அறிக்கையை 28.8.2002 அன்று சிறீகுமார் தயாரித்து அளித்திருந்தார். அந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தன்னால் நினைவுபடுத்திக் கூற முடியவில்லை என்று அசோக் நாராயண் கூறினார்.

5) பின்னர் நானாவதி-ஷா கமிஷன் முன் சிறீகுமார்  மூன்று பிரமாண வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். சபர்மதி ரயில் எரிப்பைத் தடுக்க மாநில மற்றும் மத்திய புலனாய்வுத் துறைகள் எவ்வாறு தவறிவிட்டன என்பதை முதல் பிரமாண வாக்குமூலம் விவரித்தது. மாநிலப் புலனாய்வுத் துறையின் அறிக்கை களை மோடி அரசு வேண்டுமென்றே கவனிக்காமல் புறக்கணித்தது என்று இரண்டாவது பிரமாண வாக்குமூலம் குற்றம் சாற்றியது.

சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னதாக நடத்துவதற்கு ஏற்றபடி மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையைப் பற்றி ஆதரவான அறிக்கை அளிக்கும்படி மோடியின் அதி காரிகள் எவ்வாறு தன்னை நிர்ப்பந்தித் தனர் என்பதை மூன்றாவது பிரமாண வாக்குமூலத்தில் அவர் பதிவு செய்திருந் தார்.

அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி கே.எம்.லிங்கோத் தலைமை யில் 9.8.2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக மாநில உள்துறை அதி காரிகளை அவர் கண்டித்த நிகழ்ச்சி யையும் சிறீகுமார் விவரித்திருந்தார். 16.8.2002 பிறப்பித்த ஓர் ஆணையில் லிங்கோத் குறிப்பிட் டிருந்தார்:

182 சட்டமன்றத் தொகுதிகளில் 154 தொகுதிகளைச் சேர்ந்த 151 நகரங் களும், 993 கிராமங்களும் கலவரங் களால் பாதிக்கப்பட்டிருந்தன என்று கூடுதல் காவல்துறைத் தலைவர் சிறீகுமார் தேர்தல் ஆணையத்தின் முன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், சட்டத்திற்குப் புறம்பான, அரசமைப்பு சட்டத்திற்கு மாறான செயல் களைச் செய்யும்படி மோடியும் அவரது அதிகாரிகளும் தனக்கு வாய்மொழி ஆணைகளைப் பிறப்பித்ததாகவும் சிறீகுமார் தனது பிரமாண வாக்குமூலத் தில் குற்றம் சாற்றியிருந்தார்.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணைகளில் சில:

அ) காங்கிரஸ் தலைவர்கள், மோடி யின் போட்டியாளர்கள், ஹிரேன் பாண் டியா போன்ற பா.ஜ.கட்சிக்கு உள்ளேயே இருப்பவர்கள் ஆகியோரின் தொலைப் பேசிப் பேச்சுகளைப் பதிவு செய்வது.

ஆ) மோடியின் அரசியல் நலன் களுக்கு ஏற்றவாறான அறிக்கைகளை அளித்தல்.

இ) மோடியின் ரத யாத்திரைக்குக் குந்தகம் விளைவிக்க முயலும் முஸ்லிம் களை ஒழித்துக்கட்டுவது.

ஈ) மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்த குஜராத் காவல்துறைக்கு உதவி செய்து வந்த மத்திய ராணுவப் படைத் தலைவர் ஜஹுருடீன் ஷா-வின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்தி களைத் துப்பறிந்து கூறுவது.

சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய வாய்மொழி ஆணைகளைப் பதிவு செய்யும் பதிவேடு ஒன்றையும் சிறீகுமார் பராமரித்து வந்தார். ஆனால் சிறப்பு விசாரணைக் குழுவோ, சிறீகுமார் பராமரித்து வந்த பதிவேடு உள்நோக்கம் கொண்டதாகத் தோன்றுவதால், அதன் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடி யாது என்பதாலும், சிறீகுமாரின் வாய் மொழி சாட்சியத்தை வேறு எந்த ஒரு சுதந்திரமான சாட்சியும் உறுதிப்படுத்த வில்லை  என்பதாலும், அதனை நம்பிக் கைக்குகந்த ஓர் ஆவணமாகக் கருத முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளது.

சுதந்திரமான சாட்சியங்கள் என்பதன் மூலம் அசோக் நாராயண், கே.சக்ரவர்த்தி, பி.சி.பாண்டே போன்ற அதிகாரிகளை சிறப்பு விசாரணைக் குழு குறிப்பிடுகிறது.

இந்த அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த பதவிகளை மோடி பரிசாக அளித்தார் என்பதால், அவர்கள் நேர்மையாகப் பேசுவதாகத் தோன்ற வில்லை என்று  சிறப்பு விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளது.

நானாவதி-ஷா கமிஷன் முன்னி லையில் தான் எவ்வாறு சாட்சியம் அளிக்கவேண்டும் என்று பயிற்சி அளித்து, அச்சுறுத்திய உள்துறைச் செயலாளர் ஜி.சி.முர்மு, உள்துறை அதிகாரி தினேஷ் கபாடியா மற்றும் மாநில அரசின் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியா ஆகியோரின் பேச்சுகளைப் பதிவு செய்த ஒலிநாடாவையும் தனது மூன்றாவது பிரமாண வாக்குமூலத்துடன் சிறீகுமார் அளித்திருந்தார்.

இந்த ஒலிப்பதிவு உண்மையானது தான் என்று சிறப்பு விசாரணைக் குழு கண்டு கொண்டபோதும், பதவி உயர்வு அளிப்பதில் தனது பணிமூப்பைப் புறக் கணித்த பின்னர் ஏற்பட்ட கடுங்கோபத் தினால்தான் சிறீகுமார் இந்த ஒலி நாடாவை அளித்துள்ளார் என்று விசா ரணைக் குழு குற்றம் சாற்றியுள்ளது.

மோடி அரசின் மத மற்றும் அரசியல் செயல் திட்டங்களுக்கு எதிராக சிறீகுமார் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலைப்பாட்டைப் போற்றுவதற்கு சிறப்பு விசாரணைக் குழு தவறிவிட்டது.

மாநிலப் புலனாய்வுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட தேதியிலி ருந்து ஒன்பது நாள்களுக்குப் பிறகு 18.4.2002 முதல் இந்தப் பதிவேட்டை சிறீகுமார் பராமரித்து வருகிறார். அப் போதைய நிருவாகம் மற்றும் பாதுகாப்பு காவல்துறைத் தலைவர் ஓ.பி. மாத்தூர் அவர்களைக் கொண்டு இந்தப் பதிவேட் டில் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளது.
நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

மாநில புலனாய்வுத் துறையிலிருந்து சிறீகுமார் வெளியேற்றப்பட்ட  19.9.2002 வரை அவர் அப்பதிவேட்டில் அவ்வப் போது பதிவுகளைச் செய்து வந்துள் ளார். மேலும், மேலே குறிப்பிடப்பட்ட அவரது நான்கு அறிக்கைகளும் தொடர்ந்து ஒரே நிலையை மேற் கொண்டு வந்ததும், களத்திலிருந்து வந்த புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் அவை அமைந்தவையாக உள்ளதும் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி நானாவதி கமிஷன் முன் தனது முதல் பிரமாண வாக்கு மூலத்தை சிறீகுமார் 2002 ஜூலையில் அதாவது,  தனது பதவி உயர்வு புறக் கணிக்கப்பட்டதற்கு வெகு காலத்துக்கு முன்பாகவே  அளித்திருந்தார்.
வழக்கம்போல, உண்மையைப் பேசியதற்காக சிறீகுமாருக்கு பதவி உயர்வை மறுத்ததன் மூலம் தண்டித்த மோடி அரசு, அவரது ஓய்வு காலப் பயன் களையும் நிறுத்தி வைத்தது. என்றாலும் அரசுக்கு எதிராகப் போராடிய சிறீ குமார் மத்திய நிருவாகத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றார்.
இவ்வளவுக்குப் பிறகும், சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன், சிறீகுமாரின் சாட்சியத்தை நிராகரித் துக் கூறுகிறார்: அந்தப் பதிவேடு ஓர் அதிகாரபூர்வமற்ற ஆவணம் என்பது தெளிவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய பதிவேடு ஒன்றைப் பரா மரிக்க சிறீகுமாருக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அது ஓர் ஆதாரம் என்று கருதப்படுவதற்கு எந்தவிதமான மதிப்பையும் பெற்றிருக்கவில்லை.
எவ்வாறாயினும், நானாவதி-ஷா கமிஷன் முன் பதிவு செய்த சிறீகுமாரின் பிரமாண வாக்குமூலங்கள், மாநில புலனாய்வுத் துறைத் தலைவராக அவர் தயாரித்தளித்த எண்ணற்ற அறிக்கை கள் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு முன்னிலையில் அவர் அளித்த சாட்சியம் ஆகியவற்றைப் பற்றி கருத்துக் கூற ராகவன் தவறிவிட்டார். மற்ற அதி காரிகளைப் போலன்றி, முதல் அமைச்ச ருக்கு எதிராக நின்று சிறீகுமார் பேசி யுள்ளார். ஆனால் இவை அனைத்தை யும் பற்றி சிறப்பு விசாரணைக் குழு எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கிறது.
சில முக்கியமான ஆவணங்களைப் பரிசீலிக்கவில்லை என்று சிறப்பு விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளது
சிறப்பு விசாரணைக் குழு கீழ்க்குறிப் பிடப்பட்டுள்ள முக்கியமான ஆவணங் களை சிறப்பு விசாரணைக் குழு பரிசீலிக் கவே இல்லை என்பதை அக்குழுவே ஒப்புக் கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை:
  • மோடி உள்ளிட்ட அவரது அரசில் இருந்த முக்கியமான அமைச்சர் கள், அதிகாரிகளின் தரைவழி தொலை பேசி மற்றும் கைபேசி அழைப்பு பற்றிய ஆவணங்கள்
  • சபர்மதி ரயில் எரிப்பில் பாதிக் கப்பட்டவர்கள் அகமதாபாத் சோலா சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நடைபெற்ற முக்கிய மான நிகழ்வுகளைப் பற்றிய தொலைக் காட்சிப் பதிவுகள்.
  • கலவரங்களின்போது காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்ட காவல் நிலைய டைரிகள் மற்றும் காவலர் போக்குவரத்து பதிவேடு (லாக் புக்).
  • கலவரங்கள் பற்றி விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் பரா மரித்து வந்த வழக்கு டைரிகள்.
  • கலவரங்களுக்குப் பின்னர் கல வர வழக்குகளுக்காக அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்த கோப்புகள்.
  • கலவரங்கள் முடிந்தவுடன் நடைபெற்ற காவல்துறை அதிகாரிகளின் மாற்றங்கள் பற்றிய கோப்புகள்.
  • கலவரங்களுக்கு முன்பும், பின் பும் மாநில மற்றும் மத்தியப் புலனாய்வுத் துறையினரால் அளிக்கப்பட்ட ரகசிய ஒற்றுச் செய்திகள் தொடர்பான ஆவணங்கள்.
  • கலவரங்களின்போது முதல் அமைச்சர், இதர அமைச்சர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகளின் நடமாட்டம் குறித்து பதிவு செய்யப்பட்ட பாதுகாப்புப் பதிவேடுகள்.
  • ராணுவம் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகள் கலவரங்களின்போது அனுப்பப்பட்ட நிலைகள் பற்றி மட்டுமல்லா மல்,  வன்முறையையும், ஆயுதங்களையும் அவர்கள் பயன்படுத்த உள்ளூர் அதி காரிகள் அளித்த அனுமதி பற்றிய ஆவணங்கள்

    இந்தப் பட்டியலை மேலோட்டமாகப் பார்க்கும்போதே மலையளவுக்கு இருக் கக்கூடிய ஆதாரங்கள் இன்னும் பார்க்கப் படவே இல்லை என்பது தெரிகிறது.
சில முக்கியமான சாட்சிகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு தவறிவிட்டது
இது மட்டுமன்றி, கீழ்க்குறிப்பிடப்பட்ட முக்கியமான சாட்சிகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு தவறிவிட்டது.
1) 4.5.2002 அன்று மத்திய அரசால் குஜராத்துக்கு அனுப்பப்பட்டு,  கலவரங் கள் ஓய்ந்த பிறகு காவல்துறை அதிகாரி கள் மாற்றி நியமிக்கப்பட்ட செயலில் முக்கிய பங்காற்றிய கே.பி.எஸ்.கில்.
2) குஜராத்தில் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவப் படை வீரர்கள் நியமனம் செய்யப்படுவதை மேற்பார்வையிட்ட மேஜர் ஜெனரல் ஜஹுருதீன் ஷா.
3) உள்நோக்கம் கொண்ட,  தவறான அறிக்கைகளை அளித்த உள்துறை அதிகாரிகளைக் கண்டித்த அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த ஜே.எம்.லிங்கோத்.
4) கோத்ராவிலிருந்து தீ விபத்தில் இறந்து போனவர்களின் உடல்கள் அகமதாபாத்துக்குக் கொண்டு வந்து 28.2.2002 அன்று ஒட்டு மொத்தமாக எரிக்கப்பட்ட   நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து வெளியிட்ட முன்னணி பத்திரிகை யாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.
5)  இறந்து போனவர்களின் உடல் களுக்குப் பாதுகாப்பாக கோத்ராவிலி ருந்து அகமதாபாத்துக்கு வந்த காவல் துறை அதிகாரிகள்.
6) கலவரங்களின்போது காவல் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்த இரண்டு அமைச்சர்களின் அரசியல்  கூட்டாளிகள். கட்டுப்பாட்டு அறைகளில் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள்.
இந்தப் பட்டியலையும் மேலோட்டமாகப் பார்த்தாலே, இன்னமும் திரட்டப்படாமல் உள்ள முக்கியமான முதல் தரமான சாட்சியங்கள் எந்த அளவுக்கு இருக்க முடியும் என்பதைக் காட்டும். இவ்வாறு தற்போது உள்ள சாட்சியங்கள் - இன்னும் பெற முயற்சிக்கப்படாமல் உள்ள சாட்சியங்கள் ஆகியவை மேற்கொண்டு இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப் படுவதற்குப் போதுமான தகுதியைப் பெற்றிருக்கவில்லையா? சிறப்பு விசா ரணைக் குழு அதிகாரம் என்னும் பற் களுடன் பிறந்தது அல்ல. அப்படியிருந் தும்,  முழுமையான சட்ட அதிகாரம் கொண்ட ஒரு விசாரணையை மோடி அரசு மீது மேற்கொள்ள ஓர் அதிகாரி களின் குழுவை அமைத்து,  ஒரு குற்றச் சாற்றைப் பதிவு செய்யத் தேவையான அளவுக்கு சாட்சியங்களை இதுவரை அது பதிவு செய்யவில்லையா?
நீதியைத் தேடி...
நீதி என்பதைத் தேடி ஓடுவதில் ஒரு குறிப்பிட்ட  அளவு மனச்சோர்வு இருக் கத்தான் செய்கிறது. போராடிப் போராடி சோர்வடைந்து விட்ட மனித உணர்வு கள், போராட்டத்தைக் கைவிட்டு மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுவது இயற்கையே. நாள்கள் செல்லச் செல்ல, மற்றவர்களின் பிரச்சினைகளுக்காகப் போராடியவர்கள் எல்லாம் வறட்டுப் பிடிவாதக்காரர்களாக  பார்க்கப்படுவதற்குப் பதிலாக உள் நோக்கம் கொண்டவர்களாகப் பார்க்கப் படத் தொடங்கியுள்ளதாகத் தோன்ற வில்லையா? போனது போகட்டும் என்று விடுபவர்களாக அவர்கள் ஏன் இல்லை என்று மக்கள் வியப்படைகிறார்கள்.  இயல்பான நிலை என்னும் சொர்க்கத் திற்குத் திரும்பிச் செல்ல ஒவ்வொரு வரையும் ஏன் அவர்கள் அனுமதிப்ப தில்லை? இதனை ஏன் அவர்கள் தங் களின் செயல்திட்டமாக ஏற்றுக் கொண் டார்கள்?
பல மனித உரிமைக் குழுக்களும், தெகல்கா உள்ளிட்ட ஊடகத்தின் பல பிரிவுகளும் குஜராத்தில் இவ்வாறு நீதி படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போர்க்கொடியைத் தூக்கியுள்ளன. இந்தக் கதை எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாமா என்ற எண்ணம் சில நேரங்களில் தோன்றத்தான் செய்கிறது. குஜராத் கலவரங்கள் பற்றியும், நரேந்திர மோடி பற்றியும் போதுமான அளவுக்கு ஏற்கெ னவே பேசப்பட்டுவிட்டது. அப்படியிருந் தும் எந்த வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என்பதால், இந்த விஷயத் தில் சோர்ந்து போகக்கூடிய ஆபத்தும் இப்போது இருக்கிறது. ஆனால், வெளிப் படையாகத் தெரியும் ஒவ்வொரு மனித உரிமை மீறல் செயலுக்கும், அதைச் செய்தவர் எந்த விதத் தண்டனையு மின்றி தப்பிச் செல்வது நம் அனைவரது நினைவையும் விட்டு நீங்காமல் இருப்ப தால்,  ஒரு சமூகமாக மிகவும் இழிந்தவர் களாக நாம் ஆகி விடுகிறோம். யாரும் எதற்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்பதை நாம் நம்புகிறோம். தவறு செய்பவர்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்பதை நாம் நம்புகிறோம். கொடூரமான அனைத்துச் செயல்களின் கொடுமையின் அளவும் குறைந்து கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. கடுங்கோபம் என்னும் நமது நிலநடுக்க அளவுகோல் துருப்பிடித்துப் போய்விட்டது.  மோடி செய்த குற்றங்களை விடக் குறைவான குற்றங்கள் செய்த ஒருவரைக்கூட ஒரு நாகரிக சமூகம் தண்டித்திருக்கும். 1984 இல் டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களுக்குக் காங்கிரசைப் பொறுப்பாக்கியது போல பொறுப்பாக்கி இருக்கும்.
எனவே இந்த மனச்சோர்வளிக்கும் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டுதானிருக்கும். மதவெறி உணர்வைத் தூண்டும் பேச்சுகள், மாற்றப்பட்ட அதிகாரிகள், அழிக்கப்பட்ட அலுவலக ஆவணங்கள், ஒரு தலைசார் பாக செயல்பட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், தவறுகளைப் பற்றி சமரசம் செய்துகொண்ட அதிகார வர்க்கம். குற்றமிழைக்கும் நோக்குடன்- பாகுபாட்டுடன் செயல்பட்ட ஒரு மதவெறி கொண்ட நிருவாகத்திற்கு மோடி தலைமை தாங்கினார் என்பதை மெய்ப்பிக்கப் போதுமான சான்றுகள், சாட்சியங்கள் அல்லவா இவை எல்லாம்? இவையெல்லாம் எடுத்துக் காட்டாக விளங்கக்கூடிய ஒரு மாதிரித் தலை வரின் பண்புகளா?   மோடியால் தேர்ந் தெடுக்கப்பட்ட அதிகாரிகளைப் போன்று சவுகரியத்துக்காக வேண்டு மென்றே ஏற்படுத்திக்கொள்ளும் நினைவு மறதியை குஜராத்தில் என்ன தான் நடந்தது என்பதைப் பற்றிய விஷயத்தில் நாமும் கைக்கொள்ள வேண்டுமா?
உண்மையைக் கூறும்போதுதான், தவறுகளைச் சீர் செய்வது, பரிகாரம் செய்வது என்பவை நிகழ முடியும். குஜராத் கலவரங்கள் பற்றிய கதையைத் தொடருவதில், மோடியைப் போன்ற தனிப்பட்ட மனிதர்கள் அல்லது பா.ஜ.க. போன்ற அரசியல் கட்சிகளை விட மிக அதிகப்படியான இழப்புகளை நாடு எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் பற்றியது இக்கதை. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கேள்விகள் பற்றியது அது:
1984 இல் சீக்கியர்களுக்கு எதிராக டில்லியில் நடந்த கலவரங்கள், 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் போன்றவை மீண்டும் நடைபெற நம்மால் அனுமதிக்க முடியுமா? நியாய உணர்வு என்ற கருத்தே நம்மிடம் மங்கிப் போய் விட்டதா? நாளுக்கு நாள் இந்திய நாட்டின் நற்பெயர் சீரழிய நம்மால் அனுமதிக்க இயலுமா?
இதுபற்றிய முடிவை மார்ச் 3 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் மேற் கொள்ளவிருக்கிறது. அதன் பின் நடக்க இருப்பவைகளைப் பற்றி வாசகர் கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/home/archive/4410.html
http://viduthalai.in/new/page-2/4538.html

No comments:


weather counter Site Meter