Pages

Search This Blog

Wednesday, March 2, 2011

கோத்ரா தீர்ப்பும் நாட்டின் எதிர்பார்ப்பும்

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கோத்ரா ரயில் எரிப்பில் 59 பேர் மடிந்தனர் (27.2.2002). இது தொடர்பான வழக்கில் 11 பேர்களுக்குத் தூக்கும், 20 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறிவிட்டது. அதற்குள் போக விரும்பவில்லை. தண்டனைக்கு ஆளானவர்களுக்கு மேல் முறையீடு செய்ய சட்டப்படி வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், கோத்ரா நிகழ்வினைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலை களுக்கு, பொருள் இழப்புகளுக்கு, வன்முறைத் தாண்டவங்களுக்குத் தண்டனை எப்பொழுது?

கோத்ரா குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாலேயே குஜராத்தில் மோடியின் முயற்சியால் நடந்தேறிய கொலைகளை நியாயப்படுத்த முடியாது.

2000 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன. 230 தர்க்காக்கள் மண் குவியலாகின. 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகள் சாம்பலாக்கப்பட்டன; ஆயிரம் உணவு விடுதிகள் குட்டிச் சுவர்களாக்கப்பட்டன. 3800 கோடி ரூபாய் இழப்புக்கு ஆளானார்கள்- சிறுபான்மை மக்களான முசுலிம்கள்.

இவ்வளவுக் கொடுமைகள் நிகழ்த்தப்படுவதற்கு 12 லட்சம் பேர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். இதன் பின்னணியில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு இருந்திருக்கிறது.

ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லப்படும் கற்பனை யல்ல இது. ஆளும் பி.ஜே.பி.யைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களிடமே தகவல்களை வாங்கி, தெகல்கா  ஊடகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.

48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்; அதற்குள் எல்லா வன்முறைகளையும் நடத்தி முடித்துவிடுங்கள் என்று தமது படைக்கு விசா வழங்கினார் எங்கள் முதலமைச்சர் மோடி என்று அவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். அவர் மட்டும் முதலமைச்சராக இருந்திராவிட்டால், அவரே நேரடியாக வீதிக்கு வந்து வன்முறையில் ஈடுபட்டு இருப்பார் என்றெல்லாம் கூறியிருக்கின்றனர்.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு எப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

நரோடா பாட்டியா என்னும் இடத்தில் சங் பரிவார்க் கும்பல் பந்த் நடத்தியதன் கோர விளைவால் 58 முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகள் உள்படக் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்தப் படுகொலையின் மீது காவல் துறையின் குற்றப் பத்திரிகை வாசகம் என்ன தெரியுமா?

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்ற வன்முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்திருக் கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், மோடி அரசில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், வன்முறையாளர்களுக்குத் தண்டனையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

குஜராத் கலவரத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 4252; இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டன. இதுகுறித்து உச்சநீதிமன்ற அமர்வு (நீதிபதிகள் ரூமாபால், சின்ஹா மற்றும் கபாடியா அடங்கியது) என்ன ஆணையிட்டது தெரியுமா?  அத்தனை வழக்குகள்மீதும் புதிய விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் அந்த ஆணை (17.8.2004).

மோடி அரசு மிக மோசமான அரசு என்பதற்கு இதைவிட மொத்து ஒன்று தேவையா?

குஜராத்தில் வதேரா என்னும் இடத்தில் முசுலிம் ஒருவருக்குச் சொந்தமான பெஸ்ட் பேக்கரி, அதில் பணிபுரிந்த 14 பேர்கள் உயிரோடு வைத்துக் கொளுத் தப்பட்டனர். மிகக் குரூரமான இந்தப் படுகொலையைப் படுதா போட்டு மறைக்க முடியவில்லை. 21 பேர் மீது குற்றப் பத்திரிகை தயார் செய்யப்பட்டது.

செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பு என்ன தெரியுமா? 21 பேர்களும் குற்றவாளிகள் அல்லர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். சாட்சிகள் பல்டியடித்தனர். இதன் காரணம் வெளிப்படையே!

இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதிக்கு வெகுமதி கொடுக்கப்படவேண்டாமா? குஜராத் மாநிலத்தில் மின் வாரியத்தின் ஆலோசகராக மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில்!

வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். குஜராத் மாநிலத்திற்குள் இந்த வழக்கு நடத்தப்பட்டால், நீதி கிடைக்காது என்று கூறி, மகாராட்டிர மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. மோடி அரசு நியமித்திருந்த வழக்கறிஞர்களைத் தூக்கி எறிந்து விட்டு, நீதிமன்றமே புதிய வழக்குரைஞர்களை நியமனம் செய்தது என்றால், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் யோக்கியதையைத் தெரிந்துகொள்ளலாமே!

நீரோ மன்னன் என்ற அடைமொழியையும் தந்தது உச்சநீதிமன்றம். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பில் குற்ற வாளிகள் தண்டிக்கப்படட்டும். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட படுகொலைகளுக்குக் காரணமானவர் களுக்குத் தண்டனை என்னவென்று நாடே எதிர்பார்க்கிறது.
http://viduthalai.in/new/page-2/4537.html</div>

No comments:


weather counter Site Meter