Pages

Search This Blog

Monday, March 7, 2011

மாநிலத்திற்கு வெளியில் வாழும் மாநில மக்களைப் பாதுகாக்க கேரள அரசின் திட்டமும் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கையும்

வெளிநாட்டில் வாழும் கேரள மக்களுக்காக மலையாளிகள் நல வாரியம் சென்னையில் அமைக்கப் பட்டுள்ளதும் மற்றும் இந்தியா விலுள்ள அனைத்து மாநிலங்களி லும் கேரள இல்லம் அமைப்பது என கேரள அரசின் அறிவிப்பும் மிக உன்னதமான திட்டங்களா கும். மலையாளிகள் நலவாரியம் கடந்த 15 ஆண்டு காலமாக கேரள அரசால் மிகச் சிறப்பாக நடத் தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வெளிநாட்டிலும் வெளிமாநிலங் களிலும் வாழும் மலையாளிகளின் நலனை இந்த வாரியம் பேணிப் பாதுகாத்து வருகிறது. அவர் களுடைய மனித உரிமைப் பிரச் சினைகள், சம்பள பட்டுவாடா, வேலைக்கு உத்தரவாதம், பண் பாட்டு பாதுகாப்பு, மொழிப் பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், பாஸ்போர்ட், விசா விவரங்கள் என பலவற்றை பேணி - பாதுகாத்து வருகிறது.

கேரள சகோதரர்கள் வெளிநாட்டில் சென்று பணி யாற்றி, உழைத்துச் சம்பாதித்து வரும் பணத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதால் இந்தியா விற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் அந்நிய செலாவணி வரு கிறது. இவர்களுடைய நலனைப் பாதுகாக்க இந்திய அரசாங்க வெளியுறவுத் துறையும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

மலையாளிகள் அதிகமாக வாழும் வெளிநாடுகளில் கேர ளாவைச் சார்ந்த மலையாள மொழி தெரிந்த அதிகாரியை மத்திய அரசு நியமிக்கிறது. வெளி நாட்டில் வாழும் மலையாளிகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் இந்திய தூதரகம் உரிய உதவி களைச் செய்து வருகிறது.

இதன் மூலமாக நமக்கு தெரியவருவது என்னவென்றால், மாநிலத்திற்கு அதிக அதிகாரம் தேவை. அப் போதுதான் மாநில மக்களை பாதுகாக்கும் பொறுப்பு மாநிலத் திற்கே உரியது என்பதும் தேவை யானதாகவும் அமையும், மாநில அரசாங்கம் மாநில மக்களைப் முனைந்து பாதுகாக்கும் பணியினை யாரும் தடுக்க முடியாது. இந்தப் பணி மாநில சுயாட்சியின் ஒரு முக்கிய படியாகும்.

இதனுடைய தொடர்ச்சியாகத் தான் தமிழ்நாட்டில் தமிழக அரசு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளிநாட்டுத் தமிழர் நல வாரியம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த அமைப்பு வெளிநாட்டிலும், வெளி மாநிலங்களிலும் வாழுகின்ற தமிழர் களின் வாழ்க்கை நிலை, சமூகப் பிரச் சினை, பொருளாதார பிரச்சினை, மனித உரிமைப் பிரச்சினை, பாஸ் போர்ட் விசா பிரச்சினை, கலை பண் பாட்டு மற்றும் மொழி பிரச்சினை அனைத்திலும் அக்கறை செலுத்திப் பணியாற்றும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

இன்றைய தமிழக அரசும் தி.மு.க. வும் மாநில சுயாட்சி பெற பெரிதும் முனைந்து செயல்பட்டு வரும் வேளை யில் இதை ஒரு மிகச் சிறப்பான திட்டமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தை மாநில அரசு நிறைவேற்றுவது மத்திய அரசு மாநில மக்களை பாதுகாக்க உரிய நட வடிக்கை எடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

இந்தியா பல மாநிலங்களை உள்ள டக்கியது. பல தேசிய இனங்களை உள்ளடக்கியது. அந்தந்த மாநில மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய கடமை மெல்ல மெல்ல மாநில அரசின் கடமையாக மாறி வருகிறது. இதுதான் மாநில சுயாட் சியின் அடிப்படைத் தத்துவமாகும்.

இதனுடைய தொடர்ச்சியாகத் தான் கேரள அரசாங்கம் சிறந்த பணி வருகிறது. அதாவது ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டிற்குப் போய் தூதரகம், பண்பாட்டு மய்யம் தொடங்குவது வழக்கம். அதன் அடிப்படையில்தான் அனைத்து மாநிலங்களும் டில்லியில் அந்தந்த மாநிலத்தினுடைய இல்லங் களைத் தொடங்கி,

அங்கு தங்குவதற் கான அறைகளைக் கட்டி, உணவு விடுதிகளையும் ஏற்பாடு செய்து, கலாச்சார நிலையத்தையும் ஏற்படுத்தி மாநில அரசாங்க அலுவலகத்தை நடத்தி வருகின்றன. இப்படிப்பட்ட தமிழக அரசின் அமைப்பிற்கு தமிழ்நாடு இல்லம் என்றும், கேரள அமைப்பிற்கு கேரள பவன் என்றும், கர்நாடக அமைப்பிற்கு கர்நாடக பவன் எனவும் ஒவ்வொரு மாநிலங் களும் இப்படி தொடங்கி நடத்தி வருகின்றன.

கேரள மாநிலம் மேலும் ஒருபடி சென்று கேரள பவன் எனும் கேரள இல்லத்தை இந்தியாவின் அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் உரு வாக்கி கேரளாவைச் சார்ந்தவர்கள் அங்கு வந்தால் தங்குவதற்கான அறைகள், கேரள உணவு, கேரள பண் பாட்டு மய்யம், கேரள நூல்நிலையம், மாநாட்டுக் கூடம் மற்றும் திருமணக் கூடம் இவையனைத்தையும் ஒன்றி ணைத்து ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உருவாக்கி வருகிறது.

சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரள முதல்வர், அதற்கான இல் லத்தை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கி வைத்தார். இதேபோல பம்பாயிலும், கொல்கத்தாவிலும், பெங்களூருவிலும் என ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் தொடங் கப்பட்டுள்ளது.

இவை மாநிலத்தினு டைய தூதரகம் போலவே பண்பாட்டு மய்யம் போலவே இயங்கி வருகிறது. இது மிகவும் பாராட்டத்தக்கது; போற்றத்தக்கது, இது கேரள மக்கள் நலனை பாதுகாக்கத் தக்க ஓர் உன்னதமான முடிவாகும். இது மாநில சுயாட்சியின் ஓர் அங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது.

மாநில சுயாட்சி கோரி வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு இது போன்று தமிழ்நாடு இல்லத்தை இந்தியாவில் உள்ள 30 மாநிலத்தின் தலைநகரில் உருவாக்கவும், அந்த இல்லங்களில் தங்குவதற்கான அறைகள், தமிழர் உணவு, தமிழ் நூல் நிலையம், மாநாட்டுக் கூடம், திருமண மண்டபம், கலாச்சார மய்யம் என அனைத்தும் உருவாக்கி அந்தந்த மாநிலத்தில் வாழும் தமிழர் களைப் பேணி பாதுகாக்க வேண் டும்.

அந்தந்த மாநிலத்தில் வாழும் தமிழர்கள் அதனைப் பயன் படுத்திக் கொள்ளவும் அதே போல தமிழ் நாட்டிலிருந்து மும்பைக்கோ, சண்டிகருக்கோ, கொல்கத்தா வுக்கோ, அகமதாபாத்திற்கோ செல்லும் போது பயன்படுத்திக் கொள்ளவும், அந்தந்த மாநில மக்களுடன் தமிழ்நாட்டு மக்களை நெருங்கி பழகுவதற்கும் மாநில அரசின் தூதரகம் போல இருக்க ஏதுவாக அமையும்.

பெரிய பெரிய கம்பெனிகளே பல இடங்களில் விருந்து இல்லங் களை வைத்து நடத்துகிறபோது மாநில அரசு இது போன்ற இல் லங்களை தொடர்ந்து நடத்துவது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கோட்பாட் டிற்கு இணங்க அமையும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

இதனால் தனது மாநில மக் களைப் பாதுகாக்க மாநில அர சாங்கம் மேலும் சிறப்பான பணி களை செய்யமுடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

முற்போக்குத் திட்டங்களை செயற்படுத்திவரும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்தியாவின் 30 மாநில தலைநகரிலும் தமிழ்நாடு இல்லம் திறந்திட வேண்டும், இதற்கு மேலும் ஒருபடியாக வெளிநாடு களிலும் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடு களிலும் தமிழ்நாடு இல்லத்தை நிச்சயம் ஏற்படுத்தி செயற்படுத் துவார் என்பதில் சிறிதும் அய்ய மில்லை. மாநில சுயாட்சியின் மீது எப்போதும் அக்கறை கொண் டுள்ள தமிழக மக்களும் இதனைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

(நன்றி: சட்டக்கதிர், மார்ச் 2011)
http://viduthalai.in/new/page-2/4922.html

No comments:


weather counter Site Meter