Pages

Search This Blog

Saturday, April 28, 2012

தேர்தலில் வென்றிருந்தால் ராமதாஸ் இந்த கருத்தைப் பேசுவாரா?

தமிழர்களின் நலன்களை திராவிட அரசியல் புறக் கணித்துவிட்டதாக தற்போது ஒரு கருத்தை சில அரசியல் கட்சிகள் சொல்கின்றனவே?

இப்போது திராவிடம் என்ற கருத் தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்கு வங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளச் சொல்லாடல் ஆகும். அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென்மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமைக்கூறுகள் நிலவுகின்றன. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். தாய் மாமனுக் கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர்களுக்கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய் தெய்வ வழிபாடு. மூன்றாவது இறந்த உடலுக் கான மரியாதை. இது நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது.

இன்றைக்கும் பிராமணர்கள், சடலத் துக்கு மரியாதை கொடுப்பதில்லை. பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாத வர்களுக்கும் இன்னும் நீடித்திருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவ தில்லை. ஏனெனில் கீழ்சாதியினராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ்கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவ தில்லை. ஆம்லெட் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டுகிற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது? கோடையில் தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம் பரில் சங்கீத கச்சேரிகளை வைத்தார்கள். அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடு முறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு? இது இன்றும் தொடர்கிறது. அவர்களின் சாமிக்குக்கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் சுடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டி ருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் சொன்னதை தமிழ்த் தேசியர்கள் இன்றும் சுட்டிக்காட்டு கிறார்களே?

பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடு களை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார்தானே செய்தார். வேறு எந்த தமிழறிஞரும் செய்ய முன்வரவில்லையே. அவர் காலத்து தமிழறிஞர்களான மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவையங்காரோ செய்யவில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா. உரைநடை என்பது மணிக்கொடியால்தான் வளர்ந்தது என்று வேதவசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925 இல் பெரியாரின் தலையங் கங்களைப் பார்க்கவேண்டும். பெரியாரின் உரை நடை அத்தனை அற்புதமாக இருக் கிறது. இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள் தான்.

கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் தமிழகத்தில் ஆட்சி செய்யமுடிகிறது என்றும், ஆனால் தமிழர்கள் அவர்கள் மாநிலத்தில் போய் முதலமைச்சராக முடியுமா என்று ஒரு தர்க்கம் முன்வைக்கப்படுகிறதே...

தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வாக்களித்தது இங்குள்ள தமிழன் தானே. அவன் ஒரு குறுகிய எண்ணத் துக்குள் அடைபட்டவன் அல்ல என்பதைத்தானே காட்டுகிறது. இந்தியாவிலேயே அரசியல் தலைவர்கள் சாதிப்பட்டம் போடாமல் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தானே. கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோரின் சாதி, டெல்லியில் யாருக்காவது தெரி யுமா? ஆனால் வட இந்தியாவில் பார்த் தீர்கள் எனில் குப்தாக்கள், சர்மாக்கள் என எல்லாரும் சாதிப்பெயர் கொண்டவர் கள்தானே. கேரளாவில் கூட நம்பூதிரி, மேனன் எல்லாம் இருக்கிறார்களே. அந்த வகையில் சாதிப்பட்டத்தைத் துறந்தவன் தமிழன்தானே. இது பெரியாரின் வெற்றி அல்லவா. யாவரும் கேளிர் என்ற அடிப் படையில் தெலுங்கனும், மலையாளியும், கேளிர்தான் என்று வாழ்பவன் தமிழன். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் தமிழ னுக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்றுதான் பார்க்கவேண்டும் என்று பெரியார் தெளிவாகச் சொல்கிறார். காவிரி விஷயத்தில் ஜெயலலிதா தமி ழகத்தை விட்டுக்கொடுக்கமாட்டார் அல்லவா? அப்புறம் என்ன? தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துப் போவதில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வைகோ தெலுங்கர்தானே. அவரை தமிழர் இல்லையென்று சொன்னால் தமிழன் ஒத்துக்கொள்வானா?

திராவிடர் கழகம் மற்றும் திமுகவை தமிழர் கழகம் என்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் என்றும் வைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருப்பது பற்றி...

அதை அவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது புறக்கணிக்க வேண் டும். அது வாக்குவங்கி அரசியலோடு சம்பந்தப்பட்டது. ராமதாஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் இப்படிப் பேசியி ருப்பாரா? இது அரசியல். அறிவியல் சார்ந்த பிரச்சினை அல்ல.

திராவிடம் என்கிற கருத்தாக்கம் இன்னும் வலுவானது என்று நினைக் கிறீர்களா?

வலுவாக இருக்கிறது என்று கருத வில்லை. அர்த்தமுடையதாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

திராவிடமொழிக் குடும்பம் என்று கால்டுவெல் கூறினார். அவர்தான் இந்த திராவிடக் கருத்தாக்கத்துக்கு ஆணிவேர் என்று அவரையும்கூட தமிழ்த் தேசியர்கள் கூட்டங்களில் விமர்சிக்கிறார்கள்?

அவர் இன்னொன்றையும் சொன்னார். அது தமிழ்த்தேசியர்களுக்கு உவக்காத விஷயம். பறையர்களை தனது முதல் பதிப்பில் தூயதமிழ் சாதி என்று எழுதியி ருந்தார். அதற்கடுத்த பதிப்பில் அந்தப் பகுதி அகற்றப்பட்டு விட்டது. அந்தப் பகுதியோடு சேர்ந்து தற்போது ஒரு பதிப்பு கவிதாசரண் மூலம் வெளியிடப்பட் டுள்ளது. அத்துடன் கால்டுவெல் இன வரைவியலாளர்தானே தவிர அரசியல் வாதி அல்ல. அவர் வரலாற்றாய்வாளரும் கூட. அவருடைய கருத்துகளை எடுத்துக் கொள்வதும், மறுப்பதும் இவர்களது நேர்மை சார்ந்தது.

ராமதாஸ் சொல்லும் அதே கருத் துகளின் போக்கிலேயே விரக்தியான மனநிலையில் தலித்து களும் சொல் கிறார்கள். திராவிட அரசியல் ஏமாற்றி விட்டது என்ற விமர்சனத்தை வைக் கிறார்கள். ஆனால் அம்பேத்கரின் எழுத்துகளை முதலில் மொழிபெயர்த்து இங்கே 1935-லேயே அவரை அறிமுகப் படுத்தியவர் பெரியார். திராவிட இயக்கத் தலைமைகள் பின்பு, இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பை நம்பி நாசமாகப் போயின. அப்படி நடந்ததற்கு தொண்டர் கள் அல்ல காரணம்.

தமிழ்த் தேசிய இயக்கத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

எந்த இடத்துக்கும் இந்த இயக்கம் நகரமுடியாது. உலகிலேயே வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுதான் மிகவும் எளிமையானது. ஆனால் அதற்கு நீடித்த மதிப்போ, பலனோ கிடைக்காது.

பார்ப்பனர்கள் மேல் உள்ள வெறுப்பை முன்வைத்து தானே பெரி யாரும் அரசியல் செய்தார் என்கி றார்கள்?

பார்ப்பனர்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார் அரசியலை முன் வைத்து உண்மையான சமூக அதிகாரத் தையும் அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியலைச் செய்தவர் பெரியார். அதை வெறுப்பரசியல் என்று குறுக்கக் கூடாது. இன்று மாறியிருக்கும் தமிழ்ச் சமூகநிலையை வைத்து, அவர் செய்த அரசியல், வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

- (நன்றி: த சன்டே இந்தியன் 29 ஏப்ரல் 2012)

விடுதலை வியாழன், 26 ஏப்ரல் 2012 14:08
http://www.viduthalai.in/component/content/article/97-essay/32803-2012-04-26-08-43-53.html 

No comments:


weather counter Site Meter