Pages

Search This Blog

Saturday, April 14, 2012

அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லிங்கன்

இன்று உலகிலேயே முதன்மையான வல்லரசாக விளங்கும் அமெரிக்க அய்க்கிய நாடுகள் 19 ஆம் நூற்றாண் டில் ஓர் உள்நாட்டுப் போரைச் சந்திக்க வேண்டி இருந்தது. என்றால் சாமான்ய மக்களுக்கு வியப்பாக இருக்கும். இந்த உள்நாட்டுப் போருக்கு மய்யப் பிரச்னையாக விளங்கியது கறுப்பின மக்களின் அடிமைப் பிரச்சினையே ஆகும். அமெரிக்காவின் வடபகுதி மக்கள் கறுப்பின மக்களின் அடிமைத் தனத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். தென்பகுதி மக்கள் அடிமைத் தனத்தை ஆதரித்தனர். ஆப்ரகாம் லிங்கன் குடியரசுத் தலைவராக 1861 ஏப்ரல் 4 ஆம் நாள் பதவி ஏற்றால். 1861 ஏப்ரல் 12 ஆம் நாள் உள்நாட்டுப் போர் தொடங்கி 1865 ஏப்ரல் 9 ஆம் நாள் முடிந்தது.

லிங்கன் உள்நாட்டுப் போரின் போது, குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து கறுப்பர்களின் அடிமைத் தனத்தை ஒழித்து, உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று அமெரிக்க அய்க்கிய நாடுகளின் ஒருமைப்பாட்டையும் காத்தார்.

உலக வரலாற்றில் இடம் பெற்ற பல தலைவர்கள் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தங்களின் அறிவாற்றலாலும் மக்கள் தொண்டாலும் மிக உயர்ந்த தலைமைப் பதவியை அடைந்தார்கள். அமெரிக்காவில் பதினாறாவது குடியரசுத் தலைவர் லிங்கன், தாமஸ் லிங்கன்-நான்ஸி ஹாங்க்ஸ் என்ற ஏழைத் தம்பதிகளுக்கு 1809 பிப்ரவரி 12 ஆம் நாள் பிறந்தார். ஏழ்மை காரண மாக லிங்கன் வெவ்வேறு பாட சாலைகளில் பன்னிரண்டு மாதங் களுக்கு மேல் கல்வி கற்கவில்லை! இளமைப் பருவத்தில் மரம் வெட்டுதல், நிலத்தில் உழவு செய்தல், மளிகைக் கடை ஊழியர், அஞ்சல் அலுவலர், இராணுவ அலுவலர் என்று பல்வேறு அலுவல் களில் ஈடுபட்டார். படித்து வழக் குரைஞர் தேர்வில் வெற்றி பெற்று 1837 இல் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார்.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை

என்பது வள்ளுவரின் வாய்மொழி. தேவையான போதெல்லாம் உதவி புரிந்து தாங்கி நிற்கும் தன்மைதான் நட்பின் இலக்கணம். வழக்குரைஞர் தொழில் செய்த போது ஏழை கட்சிக் காரர்களிடம் மிக உயர்ந்த மனிதாபி மானத்தோடு நடந்து கொண்டார்.

அமெரிக்க அடிமை எதிர்ப்பு சங்கம் 1839-ல் கறுப்பின மக்கள் வெள்ளைக் காரர்களால் கொடுமைப்படுத்தப் படுவதைப் பற்றி ஒரு நூலை வெளி யிட்டது. கொதிக்கும் நீரில் அவர்களின் கைகள் மூழ்கடிக்கப் பட்டன. கத்தியால் குத்தப்பட்டனர். இடுப்பிலே குழந்தை களை வைத்திருந்த தாய்மார்களிடமி ருந்து குழந்தைகள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏலச் சந்தையில் ஏலம் போடப்பட்டனர். கறுப்புப் பெண்களை கர்ப்பவதியாக் குவதற்கு கட்டுடல் கொண்ட வெள்ளைய இளைஞர்களுக்கு 25 டாலர் பரிசு கொடுக்கப்பட்டது! இப்படிப் பிறக்கும் குழந்தைகள் சிகப்பாக இருப்பதால் ஏலத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்டன.

லிங்கன் அமெரிக்காவில் வெள்ளை முதலாளிகளுக்கும் கறுப்பின அடிமைப் பெண்களுக்கும் பிறந்த கலப்பினத்தவர் 4 லட்சம் போர் இருப்பதாகத் தெரி வித்தார்!

இல்லினாய்ஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர், தலைநகர் வாஷிங்டனில் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஆகிய பதவிகளை லிங்கன் வகித்தபோது அவை பிற்கால நாடு தழுவிய அரசியல் பணிக்குப் பயிற்சிக் களமாக அமைந்தன.

லிங்கன் 1859 நவம்பரில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று 1861 ஏப்ரல் 4 ஆம் நாள் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பதற்கு முன்பாகவே தென்கரோலினா, அலபாமா, புளோரிடா, ஜியார்ஜியா, மிஸிஸிபி, டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்களின் நடுவண் அரசிலிருந்து பிரிந்தன. லிங்கன் பதவி ஏற்ற சில நாட்களிலேயே ஏப்ரல் 12 ஆம் நாள் நடுவண் அரசுக்கும் தென்; மாநிலங் களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கிவிட்டது.

உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே, 1863 நவம்பர் 19 ஆம் நாள் கெட்டிஸ்பர்க் கல்ல றையில் வரலாற்றுப் புகழ் மிக்க சொற்பொழிவு ஆற்றினார். உரையில் மக்களாட்சியின் இலக்கணத்தை விவரிக்கிறார்: மக்களுடைய, மக்களால், மக்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி இந்த உலகிலிருந்து என்றும் அழியாது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவது அரசியல் சட்டப்படி மரபு. 1864 நவம்பர் 8 ஆம் நாள் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மெக்கல்லனைவிட மிகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று புகழ் மிக்க வெற்றி பெற்றார். 1864 நவம்பர் 8 ஆம் நாள் நடந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பெட்டிகள் கண்டுபிடிக்கப் பட்டபின் உலகில் நடந்த மிகப் பெரிய தேர்தல் ஆகும். லிங்கன் 1865 மார்ச் 4 ஆம் நாள் இரண்டாம் முறையாக குடியரசுத் தலைவராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

பதவி ஏற்பு விழாவில் லிங்கன் வரலாற்றுப் புகழ் மிக்க உரை யாற்றினார். உரையின் இறுதிப் பகுதி வருமாறு: போரினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள புண்களை ஆற்றவும், போரில் ஈடுபட்டு ஊனமுற்றோரைப் பாதுகாக்கவும், போரில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் விதவைகளையும், குழந்தைகளையும் பராமரிக்கவும் நாம் பணி மேற்கொள்வோமாக! நம் நாட்டிற்குள்ளும், பிற நாடுகளுடனும் நியாயமான நிரந்தரமான அமைதியை ஏற்படுத்த நாம் புனிதப் பணியை மேற்கொள்வோமாக!

லிங்கன் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த போது மிகுந்த எளிமையைக் கடைப்பிடித்தவர். இந்தப் பண்பை தமிழர் தலைவர் வீரமணியார் பின் வருமாறு குறிப்பிடுகிறார்: லிங்கன் தன் மகனுக்காக ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதுகிறார் இராணுவத் தளபதிக்கு!

என் மகன் ராணுவத்தில் சேர்ந்து வேலை செய்ய விரும்புகிறான். என்னைத் தலைவராக எண்ணாமல் நண்பனாகக் கருதி என் மகனுக்கு மற்ற அலுவலர்களுக்கும் பாதகமில்லாமல் ராணுவத்தில் அவனுக்கு ஏற்ற வேலை தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதுகிறார். இதைப் போல் எந்தக் குடியரசுத் தலைவராவது தன் கீழ் பணிபுரியும் படைத்தளபதிக்கு அடக்கத் துடன் கடிதம் எழுதுவாரா? லிங்கன் விருப்பப்படியே மூத்த மகன் ராபர்ட் இராணுவத்தில் சேர்ந்து பணியாற் றினார். லிங்கன் இரண்டாம் முறையாகக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற அய்ந்து நாள்கள் கழித்து ஏப்ரல் 9 ஆம் நாள் காலை போர் முடிவுக்கு வந்தது. 1861 ஏப்ரல் 12 ஆம் நாள் காலை ;தென்கரோலினா மாநிலத்தில சம்ப்டர் கோட்டையில் தொடங்கிய உள்நாட்டுப் போர் 1865 ஏப்ரல் 9 ஆம் நாள் வர்ஜீனியா மாநிலத்தில் ஒரு சிற்றூரில் தளபதி கிராண்ட்டிடம் தென்னகத் தளபதி லீயின் சரணாகதியுடன் முடிந்தது. நான்காண்டு காலம் நடந்த சகோதரப் போரில்இரு தரப்பிலும் அய்ந்து லட்சம் வெள்ளைப் படைவீரர்கள் மாண்டனர்.

லிங்கன் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றதோடு கறுப்பர் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். அமெரிக்க நாட்டின் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றினார்.

இன்று கறுப்பர் இன பராக் ஒபாமா அமெரிக்கக் குடியரசுத் தலைவராக வீற்றிருக்கிறார் என்றால் அதற்கு ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னால் அடித்தளம் அமைத்தவர் ஆப்ரகாம் லிங்கனே ஆவார்.

தோல்வி அடைந்த தென்னகப் படையிடம் லிங்கன் சகோதரப் பாசத்தோடு நடந்து கொண்டார். லிங்கன் ஆணைப்படி அவர்கள் படையிலிருந்து விடுவிக்கப்பட்டு உழவிலும், வணிகத்திலும் ஈடுபட வீடுகளுக்கு அனுப்பப் பட்டனர்.

ஏப்ரல் 14 ஆம் நாள் இரவு லிங்கன் தன் குடும்பத்தாருடன் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் நாடக அரங்கில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார். பூத் என்ற கொலைகாரன் இரவு 10.13 மணிக்கு லிங்கனின் இடது காதுக்கு அருகில் கைத்துப்பாக்கியால் சுட்டான். 1865 ஏப்ரல் 15 ஆம் நாள் காலை 7.22 மணிக்கு லிங்கன் இயற்கை எய்தினார்.

கறுப்பர் இன அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லிங்கனின் புகழ் மனித குல வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

--செய்யாறு இரெ.செங்கல்வராயன் http://viduthalai.in/page6/31994.html

No comments:


weather counter Site Meter