Pages

Search This Blog

Sunday, April 22, 2012

ஆமாம், நம்புங்கள் - பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி அறவேயில்லை!

நம்புங்கள் - பார்ப்பனர்களுக்குப் பாப்பான் என்ற இன உணர்ச்சியே கிடையாது - வெறும் மானுடப் பற்று தான். வேண்டுமானால், இந்த வார துக்ளக்கைப் (18.-4.-2012) புரட்டி பாருங்கள்.

கேள்வி: ராமர் பாலம் கற் பனையானது. கற்பனையான வழி பாட்டு அமைப்பை காப்பாற்றுவதற்காக நாட்டின் வளர்ச்சியை காவு கொடுக்கக் கூடாது. சேதுக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்தவேண்டும் என்கிறாரே ராமதாஸ்?

பதில்: ராமர் பாலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புகைப்படத்திலேயே காணப் பட்டது. இன்றும் பலர் அங்கு போய் இந்தப் பாலத்தைப் பார்த்து வருகிறார்கள். அது பற்றிய குறிப்புகள், தமிழக அரசு நூல்களிலேயே இருக்கின்றன. அதன் புனிதத் தன்மை பற்றி, ராமர் சீதைக்கு விளக்கிச் சொல்வது, வால்மீகி ராமாயணத்தில் இடம பெறுகிறது. சேது கால்வாய்த் திட்டமோ - பொருளாதார ரீதியாகப் பயனளிக்காது என்று நிபுணர்கள் பலர் விவரித்துக் கூறி யிருக்கிறார்கள். இவையெல்லாம், ஏற்கெனவே துக்ளக் கில் விரிவாக அலசப்பட்ட விஷயங்கள். ராமதாஸ் பேசுவது உண்மையல்ல என்கிறார் சோ. அண்டப் புளுகு பேசுவதில் அக்கிரகார ஆசாமிகளை அடித்துக் கொள்ள அன்டார்டிகாவில் தேடினா லும் கிடைக்கமாட்டார்கள்.

இன்டோ-லிங்க்காம் - வைஷ்ணவா நெட்வொர்க் என்ற பார்ப்பன நிறுவனம் ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன் னதாக ஒரு கதையைக் கட்டிவிட்டது.

இந்தக் கட்டுக் கதையைக் கேள் விப்பட்ட மாத்திரத்தில் சேது சமுத் திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டார். நீங்கள் வெளி யிட்டுள்ள படத்தால் இங்குப் பிரச்னை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப் பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? என்று கேட்டார். அன்று மாலையே நாசாவிடமிருந்து தகவல் வந்துவிட்டது. இந்தியா இலங்கைக்கிடையே உள்ள பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று முகத்தில் அறைந் தாற்போல் பதில் கூறிவிட்டதே!

இந்தத் தகவலை சேது சமுத் திரத்திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி செய்தியாளர்களிடம் தெரி வித்துவிட்டாரே. (தினமலர் 26--.7.-2007- பக்கம் 5)

அவாளின் தினமலரில் வெளிவந்த சேதிதான் இது!

உண்மை இவ்வாறு இருக்க சோ ராமசாமி துக்ளக்கிலும் திருவாளர் இல.கணேசன்வாள் சன் தொலைக் காட்சியிலும் புளுகுகிறார்களே! புளுகுதல் என்பது அவாளுக்கு புளியோதரையோ!

இராமநாதபுரத்திற்கும் இலங்கைக் கும் இடையே உள்ள மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேல் இருக்கும் மணல் திட்டை ராமன் தம்பி லட்சுமணன் கட்டினானோ!

இந்தக் கேள்விக்கு இந்த அறிவு ஜீவிகள் இது வரை பதில் சொல்லாதது ஏன்?

இன்னொரு கேள்வி பதில், இதே தேதி துக்ளக்கில்.

கேள்வி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திடீ ரென்று தமிழக முதல்வர் கடிதம் ஏழுதுவதன் நோக்கம் என்ன?

பதில்: திடீரென்று கடிதம் எழுதவில்லை. ராமர் பாலம் பற்றி தனது முடிவான கருத்தைக் கூறி மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. ஆகையால் மத்திய அரசு இந்த விவகாரத்தில், இனியும் மழுப்பாமல் ஒரு முடிவான கருத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒட்டித்தான் தமிழக முதல்வர் ராமர் பாலம் தேசியச் சின்னமாக அறிவிக் கப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறார் என்று மிக சாமர்த்தியமாக பதில் எழுதிட முயற்சிக்கிறார்.

இதே ஜெயலலிதா 2001 சட்டப் வேரவை மற்றும் 2004 மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் ராமன் பாலம் என்று குறிப்பிட்டு இருந்தாரா? இல்லையே! அதை மறைப்பதேன் இந்த மனுதர்ம வியாதி.?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக கிழக்கு நோக்கிக் கப்பல் செல்லவேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள்,; பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப் பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதே. அன்றைய மணல் மேடுகள், பாறைகள் அடங்கிய ஆடம்ஸ் பிரிட்ஜ் - திடீரென்று ராமன் பாலம் என்று செல்வி ஜெயலலிதாவுக்கு ஏதாவது அசரீரி வந்து கூறிற்றா?

இன்னும் ஒரு கட்டம் மேலே தாண்டி சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்கிற அளவுக்கு ஜெய லலிதா சென்றுவிட்டாரே. தமிழர்கள் இதனை அனுமதிப்பார்களா?

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு ஏன் ரத்தம் கொதிக்கிறது? இதயம் சில நிமிடங்கள் நின்று விடுகிறது? தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

கேள்வி: மன்மோகன்சிங், வி.பி.சிங் ஒப்பிடுங்கள்.

பதில்: மன்மோகன்சிங் பதவியில் இருப்பதால் பல கெடுதல்கள் விளைந்தன. பல கெடுதல்களைச் செய்வதற்காகவே பதவியில் இருந்தார் வி.பி.சிங்.

புரிகிறதா? வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதில் 27 விழுக்காடு வேலை வாய்ப்பில் கொடுக்கச் செய்தார் அல்லவா? அந்த ஆத்திரம் அவாளை இன்றுவரை பாடாய்ப் படுத்துகிறது - படுபாவி என்று மண்ணை வாரித் தூற்றுகின்றனர்.

நூற்றுக்கு நூறு இடங்களையும் முழுவதுமாக சுளைசுளையாக முழுங்கி ஏப்பமிட்ட கூட்டம் அல்லவா! - அதில் மண் விழுந்து விட்டதே என்கிற ஆத்திரம்! பாவம் இவர்களுக்கு பார்ப்பன உணர்ச்சியே இல்லை. நம்பித் தொலையுங்கள்.

கேள்வி: கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு தி.மு.க.விற்கு சாதகமா? பாதகமா?

பதில்: காங்கிரசிற்கு இப்போது உப்பு சத்தியா கிரகம் எவ்வளவு தூரம் சாதகமாக இருக்குமோ, அவ் வளவு தூரம் தி.மு.க.விற்கு பார்ப்பன எதிர்ப்பு சாதகமாக இருக்கும். - இப்படி ஒரு துக்ளக் பதில்.

கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்றால் எதற்காக துக்ளக்கில் பக்கம் பக்கமாக பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான திராவிடர் இயக்கம் பற்றியும், அதன் தலைவர்கள் குறித்தும் பார்ப்பனர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும்? அந்த உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி இப்பொழுது எதற்கு எதிர்த்து எழுதிக்கொண்டு இருக்கவேண்டும்?

பரவாயில்லை அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர் எதிர்ப்பு சரியே என்று காலந் தாழ்ந்தாவது சோ அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளாரே!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து இப்பொழுதும் உச்சநீதி மன்றம் செல்பவர்கள் யார்?

தமிழ் செம்மொழியானால் வீட் டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழுதுபவர்கள் யார்?

இப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தான் - கலைஞர் ஏதோ பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதாக பம்மாத்து அடிக்கின்றனர்.

இன்னொரு கேள்வியையும் கேளுங்கள்.

கேள்வி: இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் திராவிடம், ஆரியம், திரா விடப் பாரம்பரியம் என்று கலைஞர் பேசிக் கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது?

பதில்: தி.மு.க.வை அவர் வளர விடமாட்டார் என்பது: தெரிகிறது - இப்படி ஒரு பதில்.

கம்ப்யூட்டர் காலத்தில் இவர்கள் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் ராமன் பாலம் கட்டி னான் என்று எழுதலாம்.

கம்ப்யூட்டர் காலத்திலும் பூணூலைத் தரிப்பதற்காகவே, புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண் டாடலாம்!
அதன் மூலம் தாங்கள் பிரா மணர்கள் - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், - இருபிறப்பாளர்கள் என்று கூறி நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்கள் என்று கூறலாமாம்.

அதனை நாம் எதிர்த்துக் கேட்டால் - கம்ப்யூட்டர் கலத்தில் இப்படிக் கேட்கலாமா என்று கேள்வி கேட்கின்றனர்.
ஆக 2012_லும், நாங்கள் பிராம ணர்கள்தான் என்று மார்பு நிமிர்த்திக் காட்டும் இறுமாப்பைத் திமிர் தண்டத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆமாம். அன்று கலைஞர் வீட்டுக்கு ஓடோடிச் சென்று தேர்தல் கூட்டணிக்காகப் பேரம் பேசியபோது கலைஞர் ஆரியம்-திராவிடம் பேசக்கூடியவர் என்பது திருவாளர் சோ ராமசாமிக்குத் தெரியவில்லையோ!
http://viduthalai.in/page-1/32475.html 

No comments:


weather counter Site Meter