Pages

Search This Blog

Saturday, April 28, 2012

நீதித்துறை ஊழல் பற்றி சோ வா பேசுவது அச்சச்சோ

18.04.2012, தேதியிட்ட ''துக்ளக்'' ஏட்டில் பக்கம் 29-ல் ஒன்றுக்கு பதில் அளித்த ''துக்ளக்'' சோ.

''சென்னை உயர்நதிமன்றத்தில் 1962இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது. இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' என்று புலம்பியிருக்கிறார்.

''இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' எனபதிலிருந்தே 1962க்குப் பின்னர் பார்ப்பனரல்லாதார் பெருமளவு (மக்கள் தொகை விகிதாசாரத்திற்கும் குறைவாகத்தான்) நீதிபதிகள் வநது வட்டார்கள் என்பதே பூணூல் அய்யரை இப்படிப் புலம்ப வைத்திருக்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்! இப்புலம்பலில் உண்மை அல்லது நாணயம் உள்ளதா என்பதே நமது கேள்வி.

இதோ வரலாற்றுக் குறிப்பு ஆதாரத்துடன் அய்யர்வாளுக்கு சமர்ப்பணம்:-

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர் களாகவே இருந்த காலத்தில், இன்று சென்னை என அழைக்கப்படும் மதராசபட்டினத்தில் 1644-ஆம் ஆண்டு முதன்முதலாக கிராம நீதிமன்றத்திற்கு அதிகாரியாக, அதாவது மாஜிஸ்ட்ரேட்டாக முதன்முதலாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் பெயர் கண்ணப்பா, அவர் பார்ப்பன இனத்தைச் சார்ந்தவர். சிவில் மற்றும் கிரிமினல் சம்பந்தமான சிறு வழக்குகளை விசாரித்து வந்தார். சிறிது காலத்திலேயே அவர் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார், தகுந்த விசாரணைக்குப்பின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரை பதவியிலிருந்து நீககினார்கள். இதன் விளைவு என்ன தெரியுமா? 1648லிருந்து ஆங்கிலேயர்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு இநதியர்களுக்கு ''பெயர்'' வாங்கித்தந்த ''புனிதமான்'' புண்ணியவான்கள் தான் இந்தப் பார்ப்பனர்கள் என்பதை நாம் சொல்லவில்லை வரலாறு சொல்கிறது. இதோ ஆதாரம்:

‘’According to the old native system a Choultry court was administering justice in the village area of Madharasapatinam. This court was presised over by the village Headman known as “Adigar”, or a Governor of the Town as he was called. An Indian native Kannappa a Brahmin by caste, was appointed first Adigar and magistrate of the Town in 1644 to decide petty civil and criminal cases. Due to some charges of benbery and corruption against Kannappa, he was arrested and placed behind the bars. His downfall encouraged his enemies and a petition was handed over to the higher authorities against him stating certain serious charges. The Agent and the counsel made enquiry into these charges and held Kannappa guilty, and dismissed him from the office, dishonourably. One important consequence of this incident was that European persons were appointed judges to preside over the Choultry court from 1648 onwards.
ஆதாரங்கள்:

1. Lore “Vestiges of old Madras” Vol I, Pages 272,273

2. India Office records, original correspondence servies No. 2542.

மேலே கண்ட தகவல்கள் “Land Marks in Indian Legal History and consititutional History” by V.D. KULSHRESHTHA - Page 44 -ல் காணப்படுகிறது. இந்நுல் சட்டக்கல்லுரி மாணவர்களுக்கு பாட நுலாக பரிந்துரைக்கப்பட்ட நுல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்பொழுது புரிகிறதா? இந்திய வரலாற்றில் முதல் (பார்ப்பன) நீதிபதியின் யோக்யதை?

இதைப் போல திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் ராசகோபாலச்சாரியார் புலம்பி தனது SWARAJYA இதழில் எழுதியதும் உண்டு. அதே சமயம் கோவையைச் சேர்ந்த பார்ப்பன வழக்கறிஞர் HINDU நாளிதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் இதே கருத்தை வெளியிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்ட வரலாறும் உண்டு.

இப்போது நமது உயர்நீதிமன்றம் என்ன செய்யபபோகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்ககிறோம். இன்னும் இது போன்ற ''சாதி ஆணவம்'' கொண்ட சோவை அறிவாளி என எண்ணும் ஏமாந்த அப்பாவித் தமிழர்களுக்கு இனியாவது இன உணர்வு வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

- பி.நடராசன், நீதிபதி (ஓய்வு), மதுரை
விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012
http://viduthalai.in/page3/32947.html 

No comments:


weather counter Site Meter