திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக் கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது. ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்! - ஆர்
பசுமைத் தாயகத்தைச் சேர்ந்த அருள் என்கிற தோழர் தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும் - திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு எனும் கட்டுரையை இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அக்கட்டுரை எம் நண்பரால் எமக்கு அனுப்பப்பட்டு நாம் அதை மிகக் கவனமாகப் படித்துப் பார்த்தோம். அக்கட்டுரை தொடர்பாக எமது கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றோம்.
தோழர் அருளின் கட்டுரை மொத் தம் ஏழு பக்கங்கள் உள்ளன. அதில் நுதல் பொருள் (Subject Matter) முழுவதுமாக இல்லை. நிகழ்வரத்தை (Facts) அவர் நடுநிலையோடும் ஆரா யவில்லை, எழுதவும் இல்லை. மேலும் அவர் ஒரு தலைப்பட்சமாகவே எழுதி யிருக்கிறார். ஆயினும் அவருக்கு நாம் நன்றி தெரி விக்கின்றோம். 1921 ஆம் ஆண்டு பின்னி ஆலை வேலை நிறுத் தம் வரலாற்றுப் புகழ் பெற்றது ஆகும்.
இந்நிகழ்வு நீதிக்கட்சி காலத்தில் - அவர்களின் ஆட்சியின்போது நடைபெற்று இருக்கிறது, ஆகவே இவ்வேலை நிறுத்தம் குறித்து நாம் எழுதிய நீதிக்கட்சி வரலாற்றில் அவசியம் இடம்பெற்று இருக்கவேண் டும். ஆனால், இடம்பெறவில்லை. அடுத்த பதிப்பில் பின்னி வேலை நிறுத்தம் குறித்து ஒரு தனி அத் தியாயம் இடம்பெறும். எம் மனத்தி லிருந்து மறப்பெனும் கள்வனால் வாரிச் சென்ற அந்நிகழ்மையை நினைவூட்டிய தோழர் அருளுக்கு நாம் நன்றி சொல்வதில் தவறு இல்லை அல்லவா? பின்னி வேலை நிறுத்தம் குறித்து நிரம்பச் செய்திகள் இருக் கின்றன. ஆனால், கட்டுரையாளர் அருள் ஏதோ ஒன்றை தனக்குச் சாதகமானது போன்ற கருத்தை இணைய தளத்தில் கொளுத்திப் போட்டு விட்டார்.
நமது நாவலர் நெடுஞ்செழியன் மேடைகளில் உரை நிகழ்த்துகிறபோது - எதிரிகளுக்குப் பதில் சொல்கிறபோது, மொட்டை தாதன் குட்டையில் விழுந் தான் என்பதுபோலப் பேசினால், எழுதினால் எப்படி? என்று எதிரிகளை வினவுவார். மொட்டை தாதன் என்றால் எந்த ஊர் மொட்டை; எந்த இடத்தில் உள்ள குளத்தில் விழுந்தான்? என்கிற விவரம் வேண்டாமா? என்று கேட்பார். அதைப்போல நாமும் இந்த இணைய தளக் கட்டுரையாளரைக் கேட்கத் தோன் றுகிறது. அவர் எழுதியுள்ள கட்டுரையில் விவர அடர்த்தியும், ஆழமும் இல்லாமல் பிரச்சினை என்ன என்பதைப் படிப்ப வருக்குப் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கிறது.
1921 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் நிகழ்வுகளைப்பற்றிய நிகழ்வரங்களின் உண்மைகளை நாம் இங்கே எடுத்துக் கூறக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
சென்னை மாநகரத்தின் பழைய தலைமுறையினருக்கு பி அண்ட் சி மில் என்றால் நன்றாகத் தெரியும். இப்போது அந்தப் பெயர் மெல்ல மறைந்து வருகிறது. அந்த மில் மூடி 17 ஆண்டுகள் ஆகி விட்டன. சுமார் 118 ஆண்டுகள் இந்த ஆலை நடைபெற்று வந்திருக்கிறது. ஆலை தொடங்கப்பட்டு 40 ஆவது ஆண் டில் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒரு வேலை நிறுத்தத்தை சந்தித்தது - சென்னை! அவ்வேலை நிறுத்தம் நிகழ்ந்த ஆண்டு 1921. இதைப்பற்றி இன்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்குப் பதில் சொல்லவேண்டிய தேவையும், அவசியமும் நமக்கு இருக்கிறது.
பங்கிங்காம் மில் (1878), கர்நாடிக் மில் (1882) என்கிற இரண்டு ஆலைகள் சென்னை சூளை பட்டாளம் பகுதியில் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாலைகள் இரண்டும் 1920 முதல் ஒரே நிர்வாகத் தின்கீழ் செயல்பட்டன. இந்த ஆலைகள் தொடங்கப்பட்டு சுமார் 40 ஆண்டு களுக்குப் பிறகுதான் சென்னைத் தொழி லாளர் சங்கம் என்கிற அமைப்பு உருவா யிற்று. அப்போது எந்தவித சட்டங்களும், தொழிற்சங்கம் பற்றி இயற்றப்படவில்லை. சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காலம் அநேகமாக முதல் உலகப் போர் முடிந்த நேரம், அந்தக் கால நிலைமை எப்படி இருந்தது தெரியுமா?
உணவுப் பஞ்சம் எல்லா இடங்களிலும் நிலவுகிறது. இப்பகுதிகளில் மழையே இல்லை, காய்ச்சலால் பலர் மடிகின்றனர், வாழ்க்கையே வெறுமையாய் இருக்கிறது
- என்று அந்தக் கால பஞ்ச நிலை மையைக் குறித்து 28.10.1918 ஆம் நாள் மறைமலையடிகள் எழுதிய நாள் குறிப்பு கூறுகிறது.
இப்படி ஒரு நிலைமை இருந்த போதுதான் சென்னைத் தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல தொழிற் சங்கங்கள் சென்னை மாநகரெங்கும் தோற்றுவிக்கப்பட்டன. ஏன்? போலீ சாருக்கும் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு இயங்கியது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன். எந்தவிதமான தொழிற்சங்க சட்டங்களும் அப்போது இயற்றப்படவில்லை. இங்கே இடது சாரி இயக்கத் தலைவர்களின் மார்க் சியம் பயிலப்படவில்லை. அதனைப் பற்றிய நிழலுருவப் பேச்சு இல்லை. ஆனால், பின்னாளில் மார்க்சிய பார்வையில் வேலை நிறுத்தத்தைப் பார்த்தார்கள்; ஆராய்ந்தார்கள். அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் சிக்கலை - பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள் ளவே விரும்பினார்கள். எனவே, தேவைக் கருதிதான் சங்கம் உருவா கிறது. வாழ்நிலையிலிருந்து ஓர் அமைப்பு கட்டப்படுகிறது; உருவா கிறது. இரண்டு ஆலைகளிலுமாகச் சேர்ந்து தோழர் அருள் குறிப்பிடுவது போல 14,000 தொழிலாளர்கள் பணியாற்றவில்லை.
ஆண்டு ப.ஆலை கர்.ஆலை
1878 300 -
1907 4304 3954
1920 5526 5158
1907 4304 3954
1920 5526 5158
இதுதான் வரலாறு சொல்கிற புள்ளிவிவரமாகும். புகழ்பெற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றபோது பதி னொயிரம் தொழிலாளர்கள் என்று திரு.வி.க. எழுதுகிறார். புள்ளி விவரப்படி இரு ஆலைகளிலும் சுமார் 11,000 பேர் பணியாற்றி வந் திருக்கிறார்கள். (விடுதலை நாளிதழ் வியாழன், 13 ஜூன் 2013)
அறிவியல் கண்டுபிடிப்புகள், அத னால் நிகழ்ந்த மாற்றங்கள் ஏற்கெனவே இருந்த முறைகளை மாற்றுதலுக்கு உட்படுத்தின. இந்தியாவில் ஆலைகளின் வரவும், ரயில்களின் வரவும், அய்ரோப் பியக் கலாச்சார ஊடுருவல்களும் இங்கே இந்த ஜாதி அமைப்புகளை கூக்குரல் இடச் செய்தன. பழமை அவலக்குரல் எழுப்பிக் கொண்டே புதுமையை ஏற்றுக் கொண்டது. காரணம் ஒரு ஜான் வயிறு! அது பி அண்டு சி மில்லுக்கும் பொருந்து வதாக இருந்தது.
பி அண்டு சி ஆலை யில் எல்லா ஜாதியினரும் பணியாற் றினர். இவர்களுள் தாழ்த்தப்பட்டோர் சரி பகுதியினர். இவர்கள் சென்னை நகரின் சேரிகளில் வாழ்ந்தனர். பிறர் ஒட்டுக் குடித்தனத்தில் இருந்தனர். ஒரு வீட்டில் 32 குடித்தனங்கள் வரை இருந்தன. அந்தக்குடும்பங்களே ஒரு தொழிற் சாலையாக இயங்கின.
தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ஆலையில் ரூ.26/- பயிற்சியற்ற தொழிலாளிக்கு (Unskilled)
12½ அணா முதல் 14 அணா வரை தினக்கூலி. (78 பைசா முதல் 87 பைசா வரை) இது அக்கால புள்ளி விவரங்கள் தருகின்ற செய்திகளாகும். தொழிற்சங்கம் தொடங் கப்பட்ட காலத்தில் இங்கே நிலைமை என்ன? நீதிக்கட்சி, காங்கிரஸ், ஹோம் ரூல் இயக்கம், முஸ்லிம் லீக் ஆகியவை அரசியல் களத்தில் இருந்து வருகின்ற அமைப்புகள். நீதிக்கட்சியின் தொடக்கக் காலத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள் இரண்டொருவர் இருந்தனர். அதில் ஒருவர் சக்கரைச் செட்டியார். ஹோம்ரூல் இயக்கத்தினரும் இருந்தனர். காங் கிரஸ்காரர்கள் இருந்தனர்.
12½ அணா முதல் 14 அணா வரை தினக்கூலி. (78 பைசா முதல் 87 பைசா வரை) இது அக்கால புள்ளி விவரங்கள் தருகின்ற செய்திகளாகும். தொழிற்சங்கம் தொடங் கப்பட்ட காலத்தில் இங்கே நிலைமை என்ன? நீதிக்கட்சி, காங்கிரஸ், ஹோம் ரூல் இயக்கம், முஸ்லிம் லீக் ஆகியவை அரசியல் களத்தில் இருந்து வருகின்ற அமைப்புகள். நீதிக்கட்சியின் தொடக்கக் காலத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள் இரண்டொருவர் இருந்தனர். அதில் ஒருவர் சக்கரைச் செட்டியார். ஹோம்ரூல் இயக்கத்தினரும் இருந்தனர். காங் கிரஸ்காரர்கள் இருந்தனர்.
அப்படி இருந்தோரில் முக்கியமானவர்கள் திரு. வி.க., B.P. வாடியா, சக்கரைச் செட்டியார், தண்டபாணி பிள்ளை, வ.உ.சி., ம.சிங்காரவேலர், சுப்பிரமணிய சிவா, இ.எல்.அய்யர் (இலும்பை இலட்சுமண அய்யர்) போன்றோர் ஆவர்.
சென்னைத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரே தவிர இதன் உறுப் பினர்கள் பி அண்டு சி ஆலைத் தொழி லாளர்களே ஆவர். இச்சமயம் தொடங் கப்பட்டபோது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளாக B.P.
வாடியா தலைவ ராகவும், திரு. வி.க. துணைத் தலைவராக வும், செல்வபதி செட்டியாரும் இரா மஞ்சலு நாயுடுவும் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹோம் ரூல் இயக்கத்தினர் தொழிற்சங்க இயக்கத் தில் ஆர்வங்காட்டி இதே கால கட்டத்தில் மத்திய சங்கம் அமைத்தனர், இது வெற்றி பெற்றதாகச் சொல்லி விட முடியாது.
வாடியா தலைவ ராகவும், திரு. வி.க. துணைத் தலைவராக வும், செல்வபதி செட்டியாரும் இரா மஞ்சலு நாயுடுவும் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹோம் ரூல் இயக்கத்தினர் தொழிற்சங்க இயக்கத் தில் ஆர்வங்காட்டி இதே கால கட்டத்தில் மத்திய சங்கம் அமைத்தனர், இது வெற்றி பெற்றதாகச் சொல்லி விட முடியாது.
சென்னைத் தொழிலாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்பாகவே பி அண்டு சி யில் 1878-லும், 1889-லும் வேலை நிறுத்தங்கள் நடந்தன. 1902 பங்கிங்காம் ஆலையில் மட்டும் வேலை நிறுத்தம் நடந்தது. உலகப் போர் முடிந்தும், ரஷ்யப் புரட்சி நிகழ்ந்தும் இருந்த வேளையில் பசிப்பிணியும், பஞ்சமும் சென்னையில் வாட்டியதால் 1920-21-இல் அப்போதைய நகரில் மட்டும் 30 வேலை நிறுத்தங்கள் நடைபெற்று இருக்கின்றன. சென்னை யில் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் 25-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இருந்ததாகத் திரு. வி.க. குறிப்பிடுகிறார். இதனால் 90,000 தொழிலாளர்களை வேலை வாங்கும் 35 முதலாளிகள் 1920-ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஒன்று கூடிப்பேசினர். அத்தியாவசியமானதாக கருதப்படுகிற ரயில்வே, மின்சாரம், டிராம்வே, மண் ணெண்ணெய், பெட்ரோல் முதலியன நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தடை செய்யப்பட வேண்டும் என இக் கூட்டம் தந்தி மூலம் அரசைக் கேட்டுக் கொண்டது. இப்படித்தந்தி கொடுத்தவர் யார்? அப்போதைய பின்னி நிறுவனத் தின் இயக்குனரான ஏ.பி.சிமன்ஸ் என்பவர் தான். இத்தந்தியைத் தொடர்ந்து இக்கூட்டத்தினர் அரசினர்க்கு ஒரு கடிதத்தையும் அனுப்பினர். இவற்றைக் கிடைக்கப் பெற்றவுடன் அரசினர் ஓர் ஆணையை வெளியிட்டனர். அதில் தாடண்டர் என்பவர் குறிப்பு எழுதினார். இவர் ஓர் உயர்அரசு அலுவலர். இவர் பெயரில் சென்னை சைதாப்பேட்டையில் தாடண்டர் நகர் இருப்பதை இத்தருணத் தில் இங்கே பதிவு செய்கின்றோம்.
1920-ஆம் ஆண்டு பி அண்டு சி ஆலையில் ஒரு வேலை நிறுத்தம் நடந் தது. போலீஸ், பின்னி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டது. அரசு வெள்ளையர் கையில் இருந்தது. துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு பிரச்சினை போயிற்று. அதனால் இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர். 1920-ஆம் ஆண்டு அக்டோபரில் சங்க நடவடிக்கை களில் பெரிதும் பங்காற்றிய நடேச முதலியார் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் அவர்க்குக் கீழே இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவர்களும் இப் பதவியை ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் அனைவரும் வேலையிலிருந்து நீக்கப்படுகின் றனர். இதனால் தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு இயந் திரங்களுக்கு அருகே அமர்ந்து விடுகின்றனர். அதாவது உள்ளி ருப்பு வேலை நிறுத்தத்தைச் செய்தனர். பிறகு தொழிலா ளர்கள், ஆலை மேலாளரைக் காணச்சென்றனர். கூட்டத்தைக் கண்ட மேலாளர் தன்னுடைய கைத் துப்பாக்கியை எடுத்தான். தொழிலாளர்கள் அதனைக் கைப்பற்றினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நிர்வாகத்தினர் கதவடைப்பு என்று அறிவித்தனர். கதவடைப்புக்குப் பிறகு சென்னைத் தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த பி அண்டு சி ஆலை நிர்வாகம் சென்னைத் தொழிலாளர் சங்கத்தை ஒழிக்க முடிவு எடுத்து செயல்படத் தொடங்கிற்று. வேலை நிறுத்தத்தினால் நிர்வாகத்திற்கு நட்டம் ஏற்பட்டதென்றும் அதனால் இழப்பீடாகத் தொழிற்சங்கம் ரூ. 75,000/- வழங்க வேண்டும் என்றும் வாடியா, திரு. வி.க., ஜி.ராமஞ்சலு நாயுடு, வேதநாயகம், எஸ்.நடேச முதலியார், வரதராஜ நாயகர், கேசவலு நாயுடு, சையட் ஜலால், கோ.மா.நடேச நாயகர், நமசிவாயம் பிள்ளை ஆகிய 10 பேர் மீது பின்னி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்தப் பத்து பேரில் வாடியாவும், திரு. வி.க.வும் தவிர மீதமுள்ள 8 பேரும் ஆலைத் தொழிலாளர்கள். தொழிற்சங்க சட்டங்கள் இயற்றப்படாத காலமாதலால் வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பத்துபேரும் வேலை நிறுத்தம் முடியும் வரை தொழிலாளர் கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் வேலை நிறுத்தக் காலமாதலால் தொழிற்சங்க வங்கிக் கணக் கிலிருந்து பணம் எடுத்து தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தப் போராட்டத்தினால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் இறந்தனர் என்பதை முன்பே குறிப்பிட்டு இருந்தோம்.
B.P. . வாடியாவுக்கு மேலே நாம் குறிப்பிட்டு இருக்கிற உயர்நீதிமன்ற வழக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் - தியோசிபிக்கல் சொசைட்டியச் சேர்ந்தவர். 1921-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் பெசண்ட் அம்மையாரோடு பின்னி கம்பெனியின் தலைமை நிர்வாகி களை இரகசியமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் விளைவாக பத்துபேர் மீதான வழக்குத் திரும்பப் பெறப்படும் என்றும் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவர் என்றும் வாடியா திரு. வி.க.விடம் கூறினார். அதோடு தொழிலாளர் கூட்டத்திலும் என்ன நிபந் தனைகள் என்பதை விளக்கி வாடியா பேசினார். ஆனால் வாடியா பேசிய பேச்சுக்கும் தியோசிபிக்கல் சொசைட்டியின் நாளேடான நியு இந்தியாவில் வெளியான ஒப்பந்த நிபந் தனைகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன. மூன்று மாதங்கள் நடந்த இந்த வேலை நிறுத்தம் அடிப்படை சிக்கல் எதுவும் தீர்க்கப்படாமல் முடிவுற்றது. தொழிலாளர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இந்த ஏமாற்றமே 1921-ஆம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் வேலை நிறுத்தத்திற்கு அடிப் படையாக விளங்கியது.
1921-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை சிறு சிறு வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. மே மாதம் 20ஆம் தேதி சம்பளம் போதாது என்று கர் நாடிக் ஆலையின் பஞ்சை தூய்மைப்படுத்தும் (Carding) பிரிவுத் தொழிலாளர்கள் 600 பேர் வேலை நிறுத்தம் செய்தனர். இப்பிரிவு இயங்காத நிலையில் இதரப்பிரிவுகளுக்கும் வேலை இருக்காது என்பதால் நிர்வாகத்தினர் வேலை இல்லை என்று தொழிலாளர் களுக்கு மே 21-ஆம் தேதி அறிவித்தனர். திரு. வி.க., ஞானியார் அடிகள் கடலூரில் கூட்டிய மாநாடு ஒன்றிற்குச் சென்று இருந் தார். அவருடனோ, பிற சங்க நிர்வாகி களுடனோ கலந்து கொள்ளாமல் தொழி லாளர் வேலை நிறுத்தம் செய்து விட்டனர். சங்கத்தின் கட்டளை இன்றி வேலை நிறுத்தம் செய்தது தவறு என்று இதனைத் திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
எனவே தொழிலாளர் பிரதிநிதிகள் கர்நாடிக் ஆலையின் மேலாளர் ஆஷ் வந்த்தை அணுகினர். வேலைக்குத் திரும்பு கிறோம் என்று கோரினர். அதற்கு மேலாளர் தாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்றும் மேலாண்மை இயக்குனரைச் சந்திக்குமாறு கூறினார். தொழிலாளர்கள் மறுநாள் மே 26-ஆம் தேதி மேலாண்மை இயக்குநரை 30 பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர் சில நிபந் தனைகளை விதித்தார்.
1) இவ்வாண்டுக்குரிய போனஸ் யாருக்கும் கிடையாது.
2) வேலை நிறுத்த நாளுக்குரிய கூலி கிடையாது.
3) விடுமுறை விதிகள் மாற்றியமைக்கப்படும்.
இவையே அந்த நிபந்தனைகள். பிரதி நிதிகள் அனைவருக்கும் இத்தண் டனையை விதித்தல் உரியதாகாது. 600 கார்டிங் தொழிலாளர்களும் பாதிக்கப் படுகிறார்கள். இது முறையற்றது என்று எடுத்துரைத்தார்கள். இதைத் திரு. வி.க.விடமும் கூறினர்.
அவரோ, 600 பேருக்காக 5000 பேரைத் தண்டிப்பது நியாயமல்ல என்று கூறியதோடு இதற்கு ஓர் ஆலையின் வேலை நிறுத்தம் பயன்படாது. இரண்டு ஆலைகளிலும் வேலை நிறுத்தம் செய்தால் தான் பயன் விளையும் என்று திரு. வி.க. விளக்கினார்.
திரு. வி.க.வின் யோசனைப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1921 ஜூன் 3ஆம் தேதி பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களின் கூட்டம் நடத்தப்பட் டது. கூட்ட முடிவுப்படி பின்னி மேலாண்மை இயக்குநருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினர். அறிக்கை மட்டுமின்றி இது குறித்து திரு. வி.க.,
திரு. வி.க.வின் யோசனைப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1921 ஜூன் 3ஆம் தேதி பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களின் கூட்டம் நடத்தப்பட் டது. கூட்ட முடிவுப்படி பின்னி மேலாண்மை இயக்குநருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினர். அறிக்கை மட்டுமின்றி இது குறித்து திரு. வி.க.,
..... எங்களுக்கு இம்மாதம் 11ஆம் தேதிக்குள் தக்க பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்ய நேரிடும். இரண்டு ஆலைகளும் வெவ் வேறானவை, கர்னாடிக் ஆலைக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக் கிறது என்று வினவியவரிடம் இரு மில்களும் ஒரே நிர்வாகத்திற்கு உட்பட்டு உள்ளமை யால் ஒரு மில்லுக்கு ஏற்பட்டது இன் னொரு மில்லுக்கும் ஏற்பட்டதாகும். அதைபற்றி கர்நாடிக் மில் தொழிலாளர்கள் அநியாயமாய் நடத்தப்பட்டபோது எப்படி பங்கிங்காம் தொழிலாளர்கள் சும்மா இருக்க முடியும்?
- நவசக்தி (10.6.1921) என்று எழுதினார். இதற்கு எந்த பதிலையும் பின்னி நிர்வாகம் தொழிற்சங்கத்திற்கு அனுப்பவில்லை, ஆகவே மீண்டும் தொழிலாளர்கள் ஜூன் 14-ஆம் தேதி கூட்டத்தைக் கூட்டி வேலை நிறுத்த அறிவிப்பை நிர்வாகத்திற்கு அனுப்பினர், இது குறித்து திரு. வி.க.
... நீங்கள் கர்நாடிக் மில் தொழி லாளர்களுக்கு நியாயம் செய்யாததற்காக வும் நாங்கள் 4-ஆம் தேதியில் எழுதிய கடிதத் திற்குப் பதில் விடுக்காமல் இருப்பதற் காகவும் வருந்துகிறோம்.
கர்நாடிக் மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அனுதாபத்தைக் காட்டுவதற்காக வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. 14-ஆம் தேதி மாலையில் சங்கக்கூட்டத் தில் கூட்டம் கூட்டி எல்லோரும் 20-ஆம் தேதியில் வேலை நிறுத்தம் செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். எங்களுடைய குறை நிவர்த்திக்கப்படும் வரை வேலை நிறுத்தம் நீடிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
- நவசக்தி (17.6.1921) என்று எழுதி னார் இதற்கு நிர்வாகத் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் ஆலை முதலாளியும், அரசும் கைகோர்த்து கொண்டனர். ஒற்று மையாய் இருந்த தொழிலாளர் களிடையே பிளவுகளை உண்டாக்கினர். ஒரு காலத்தில் இராயப்பேட்டை வெஸ்லியன் கல்லூரியில் திரு.வி.க. வேலை பார்த்த போது அவரோடு ஆசிரியராக வேலை பார்த்த எம்.சி. ராஜா இக்கட்டத்தில் திரு.வி.க. தொழிலாளர் தலைவர் ஆனது போல் அவர் ஆதிதிராவிட வகுப்பாருக்குத் தலைவராகி இருந்தார்.(விடுதலை நாளிதழ் வெள்ளி, 14 ஜூன் 2013)
பி அண்டு சி ஆலை வேலை நிறுத் தத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றில் ஜாதி, இந்துக்கள், முஸ்லிம்கள், ஆதி திராவிடர் என்று வேற்றுமை பார்க் காமல் தொழிலாளர் என்கிற முறையில் ஒட்டு மொத்தமாக பங் கேற்று வந்தனர். 1921 ஜூன் 20-ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் ஆயத்த மாகி இருந்தனர். ஆனால் அதற்கு முதல் நாள் ஜூன் 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு நிலைமை வேறாக இருந்தது. பக்கிங்காம் ஆலையின் ஆதி திரா விட தொழிலாளர்களின் கூட்டம் புளியந்தோப்பு பகுதியில் கூட்டப்பட்டது. அக்கூட்டத்திற்குத் ஆதிதிராவிடத் தலைவரான எம்.சி. ராஜாவும், சுவாமி தேசிகானந்தாவும் முன் நின்றனர், உதவித் தொழில் துறை ஆணையாளரும் உடனிருந் தார். அவர் பெயர் சுந்தராச்சாருலு. இக்கூட்டத் தில் அனுதாப வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடி வெடுக்கப்பட்டது. அரசும், ஆலை நிரு வாகமும் இணைந்தே இப் பிளவை உண்டாக்கினர். எம்.சி.ராஜா இதற்கு துணை நின்றார்.
இந்நிலைமைக் குறித்து வெகுண் டெழுந்து திரு.வி.க.,
... இந்நாளில் எம்.சி.ராஜா வேலை நிறுத்தத்தை உடைத்தெறிய ஊக்கங் கொண்டு முன் வந்ததன் நோக்கத்தை அறிய விரும்புகின்றோம், வேலை நிறுத்த காலத்தில் தலைகாட்டிய சிறீமான் எம்.சி.ராஜா தொழி லாளர்கள் 11ஙூ மணி நேரம் வேலை செய்து வருந்திய காலத்தில் எங்கே சென்றிருந்தார்? தொழிலாளர் இருண்ட காலத்தில் எங்கே சென்றி ருந்தார்? தொழிலாளர் மலக்குப் பையில் அழுத்தப்பட்ட காலத்தில் எங்கே இருந்தார்? பகலில் உணவு கொள்ளப் போதிய நேரம் பெறாது சாப்பிட்டதும் சாப்பிடாமலும் கை கழுவியும், கை கழுவாமலும் மில்லுக் குள் ஓடித் தொழிலாளர் வருந்திய போது எங்கே நண்ணினார்?
தொழிலாளர் சங்கத்தை அமைத் துக் கொண்டு, நியாயக்கிளர்ச்சி செய்து வேலை நேரத்தைப் பத்து மணியாகவும் பகல் உணவு கொள் நேரத்தை ஒரு மணியாகவும் செய்து கொண்டு, வேறு பல நன்மைகளை பெற்று வரும் இந்நாளில் ஆதி திராவிடர் பெயரை முழங்கிக் கொண்டு வேலை நிறுத்தத்தைக் குறைக்க வீர வார்த்தை பேசுவது நியாயமோ? என்று எழுதினார்.
- நவசக்தி நாளிதழ் (25.6.1921) தலையங்கம்
ஆக, வேலை நிறுத்தம் கெடுவதற்கு எம்.சி.ராஜா முக்கிய காரணமாக இருந் திருக்கிறார் என்பது திரு. வி.க.வின் எழுத்துகளிலிருந்தும் பிற ஆய்வு நூல்களிலிருந்தும் காணக்கிடைக்கிற செய்திகளாகும். முதலில் வேலை நிறுத்தத்திற்கு எதி ராக செயல்பட்ட எம்.சி.ராஜா பின்னர் 1930ஆம் ஆண்டு களில் இது குறித்து அவர் வருத்தப்பட்டும் இருக்கிறார் என்று பதிவுகள் கூறுகின் றன. ஆதி திராவிட தலை வர்களில் ஒருவரான ராவ் பகதூர் மதுரைப் பிள்ளை இது குறித்து எம்.சி.ராஜா வின் அணுகுமுறையை ஏற்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது குறித்து அவர்கள் வெளியிட்ட கருத்துக்களையெல்லாம் இக்கட்டுரை யில் இணைத்தால் கட்டுரை மிக நீண்டதாக ஆகிவிடும், ஆகவே அவற்றை நாம் இங்கே வெளியிட விரும்பவில்லை. அவையெல்லாம் ஆவணங்களாக பதிவாகி இருக்கின்றன,
ஆலை வேலை நிறுத்தத்தில் ஏற்பட்ட இக்குழப்பங்களில் போலீஸ் பாதுகாப்பும், வழிக்காவலும் வேலை நிறுத்தத்திற்கு எதிராக இருந்தவர்களுக்குத்தான் சாதகமாக இருந்தது. ஆனாலும் இந் நிலைமைகள் குறித்து எல்லாம் 1921 மே இறுதியில் வெளிவந்த சுதர்மா எனும் ஏடு கீழ்க்காணும்படி எழுதி இருக்கிறது.
... தொழிலாளர் நெடும் போராட் டத்திற்குத் தயாராகி வருகின்றனர். போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு ஆதிதிராவிடரைத்தான் கம்பெனி நம்பியுள்ளது. ஏழை ஆதிதிராவிட தொழிலாளர் வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வேலை நிறுத்தம் முறிவதோடு சங்க ஒற்றுமையும் குலையும், பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்படும் என்பது வெளிப் படை பக்கிங்காம் ஆலையில் சென்ற முறை ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் இதே போல் மிரட்டினர், இம்முறை இது வெறும் மிரட்டலாக முடியுமா, இல்லையா என்பது ஆதிதிராவிடரைப் பொறுத்துள்ளது
எம்.சி.ராஜாவினால் ஆதிதிராவிடர் கள் வேலை நிறுத்தத்திலிருந்து விலகி இரு ஆலைகளுக்கு கொஞ்சம் கொஞ்ச மாகச் செல்லத் தொடங்கினர். இதன் விவரத்தை எயிலிஸ் கமிட்டியின் அறிக்கை கீழ் காணும் விதத்தில் எடுத்து கூறுகிறது. இந்த எயிலிஸ் கமிட்டி என்பது என்ன? என்பது குறித்து பின்னர் ஓர் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம்
இவ்வாறு இரண்டு மாதங்களில் வேலை நிறுத்தம் உடைவதற்கு எம்.சி. ராஜா காரணமாக இருந்தார். ஜூலை 11-ஆம் நாளிலிருந்தே ஆலைகளின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்த திரு. வி.க.வுக்கு ரூபாய் ஒரு இலட்சத்தை காங்கிரஸ் கமிட்டி கொடுத்தது என்று மெயில் எழுதியது. அவதூறான இச் செய்தியை எதிர்த்து வழக்குத் தொட ருவேன் என்று திரு. வி.க. கூறியதால் மெயில் அச்செய்தியைத் திரும்பப் பெற்றது. இதனால் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற் படுவது இயல்பே. இதனால் தொழி லாளர் வாழும் குடிசைப் பகுதிகளில் தீ வைப்பு நிகழ்வுகள் நடந்தேறின. ஆதிதிராவிடர்கள் வாழ்ந்த பகுதி களிலும் தீவைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றை விசாரிப்பதற்காக எயிலிஸ் கமிட்டி அமைக்கப்பட்டது. 1921 ஜூன் 29-ஆம் தேதியிலிருந்து பெரம்பூர் வட்டத்தில் நிகழ்ந்த குழப்பங்களை விசாரிக்கவே இக்கமிட்டி நியமிக் கப்பட்டது.
இக்குழுவில் சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.வேங்கடரத் தினம் நாயுடு, ராவ்பகதூர் நரசிம்ம மாச்சாருலு உறுப்பினர்களாக இருந் தனர். இக்குழுவின் முன் செல்ல திரு. வி.க. மறுத்துவிட்டார். எல்லா ஜாதிகளும் தொழிலாளர் களாகப் பணியாற்றிய நிலையில் சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொண்டபோது எம்.சி.ராஜா ஏற்படுத்திய பிளவே பெருங்குழப்பங்களுக்கு காரணமா யிற்று. ஹோம் ரூல் இயக்கத்தின் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சும் வாடியா விலகி அய்ரோப்பா சென்றதற்குப் பிறகு முற்று பெற்று விட்டது எனலாம். தலைமை பொறுப்பில் திரு.வி.க.வே இயங்கினார் காங்கிரஸ் விடுதலை இயக்கமாக இயங்கிய காலகட்டமாதலால் திரு. வி.க. காங்கிரஸ்காரராக இருந்தும் உழைத்தும் சங்கத்திற்கு நிதி உதவியோ தொழிலாளர்களுக்கு வேறுவித தார்மீக ஆதரவோ வழங்க வில்லை. வழங்குவதாகக் கூறி செய் யவும் இல்லை என்று எழுதினால் இன்றும் சரியானது என்று கருது கின்றோம். அடுத்து நீதிக்கட்சி இக்கட்சி அப்போதுதான் இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. எப்படி மாறுகிறது என்றால் நிதி, இராணுவம், போலீஸ் மூன்றையும் ஆங்கிலேயர் வைத்துக் கொண்டு இதரதுறைகளை இந்தியர் களுக்கு வழங்கியது தான் இரட்டை ஆட்சி முறை. இந்நிலையில்தான் இரண்டு பெரிய கலவரங்கள் சென்னை மாகாணத்தில் உண்டாயின 1) பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தம் 2) மலையூரில் மாப்பிள்ளை கலகம், நாம் அவற்றில் பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தைத்தான் இங்கே பார்த்து வருகின்றோம்.
இப்போது நாம் பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பற்றிய விவரங்களை மிகச்சுருக்கமாக மேலே எடுத்து கூறி இருக்கின்றோம், இனி தோழர் அருள் எழுதியுள்ள வற்றைப் பார்ப்போம்.(விடுதலை நாளிதழ் சனி, 15 ஜூன் 2013)
1) 1921-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினருக் கும் பார்ப்பனரல்லாத ஜாதியினருக்கும் கலவரம் மூண்டபோது நீதிக்கட்சி, அரசாங்கமும் அதன் தலைவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலையை எடுத்தனர் என்று தோழர் அருள் கூறுகிறார் அல்லவா? மேலே நாம் எடுத்துச் சொன்னதிலிருந்து பார்ப்பனர் அல்லாத ஜாதியினர், முஸ்லிம், ஆதி திராவிடர் ஆகிய தொழிலாளர்கள் ஜாதி வித்தியாச மின்றி பணியாற்றியதை, போராடி வந்ததைப் பிளவு படுத்தியது யார் - எம்.சி.ராஜா என்று ஆவணங்கள் இன்றும் பேசிக்கொண்டு இருக்கின்றன. இவரால் தான் கலவரமே மூண்டது அவரே ஒப்புக் கொண்டு நாளடைவில் வருந்தினார். இதற்கு என்ன சொல்லு கிறார் அருள்?
நீதிக்கட்சியின் அதிகாரம் என்னவென்பதை விளக்கி இருக்கின்றோம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எப்படி சும்மா இருக்க முடியும்? களத்தில் இறங்கி சமரசத்திற்கு முயற்சியை மேற்கொண்டார்கள். இதை எதிரான நிலை என்று சொல்லுவது சரியா? பிறகு, எதிரான நிலை எனத் தோழர் அருள் எதனைக் குறிப்பிடுகிறார்? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பல சலுகைகள், ஆணைகளை வழங்கிய கட்சி நீதிக்கட்சி ஆயிற்றே!
பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தம் நடக்கும்போது எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் தானே இருந்தார். இந்த நிலையை அவர் மேற்கொள்ள ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஓ.தணிகாசலம் செட்டியார் வேலை நிறுத்தம் பற்றியும், கலவரம் பற்றியும் சட்டமன்றத்தில் பேசிய அளவுக்கு பொதுமை உணர்ச்சியோடு எம்.சி.ராஜா நடந்து கொள்ளவில்லையே அது ஏன்? என்பதை அருள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.
நீதிக்கட்சி வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் ஆனால் உண்மையான ஆட்சியாளரான ஆங்கிலேயர்கள்தான் எதிர்த்தனர் என்றும் தோழர் அருளே அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன? வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்கள் ஆங்கிலேயர்கள், அவர்கள் தான் வேலை நிறுத்தத்தின்போது ஜாதி பார்க்காமல் போர்க் குணத்தோடு இயங்கியவர்களை - ஆதிதிராவிடர் களைப் பிரித்தார்கள். அதற்குத் துணை நின்றார் எம்.சி.ராஜா என்பது தானே நிகழ்மை. குஹஊகூ இதனால் தானே கலவரம் நிகழ்ந்தது. குழப்பம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடந்தது, 6+2=8 பேர் மாண்டனர். எயிலிஸ் கமிட்டியை அரசாங்கம் போட்டது. கலவரம் நடந்த பகுதிக்கு கவர்னர் லார்டு வெலிங்டன் வந்தார். நீதிக்கட்சியினர் நிதி தண்டியபோது ரூ. 750/- வழங்கினார். இவ்வளவும் ஏற்பட்டது யாரால்? நீதிக் கட்சியாலா? அக்கட்சியின் இதரத் தலைவர்களாலா? அருள்தான் இதனை விளக்க வேண்டும்.
2) கட்டுரையாளர் அருள் பிட்டி.தியாகராயர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது என்றும் அந்த அறிக்கை இந்துவிலும், திராவிடனிலும் வெளிவந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிக்கையை நம்மால் பார்க்க முடியவில்லை. 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி விரிவான ஆவணங்களாக நமக்குக் கிடைப்பவை திரு. வி.க.வின் வாழ்க்கைக்குறிப்புகளும் ஆ.சிவசுப்பிரமணியனும், ஆ.இரா.வேங்கடாசலபதியும் எழுதியுள்ள பின்னி ஆலை வேலை நிறுத்தம் - 1921 எனும் நூலுமாகும். இவ்விரு நூல்களில் நன்றாகப் பிரச்சினை அலசப்பட்டும், ஆராயப்பட்டும் இருக்கின்றன. இதுவன்றி நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் - ஓர் ஆய்வு? எனும் நூலிலும் வேலை நிறுத்தம் பற்றி மேலோட்டமும் கூறப்பட்டு இருக்கிறது. சிங்காரவேலர் எழுதியுள்ள கட்டுரையில் அப்போதைய நிலைமைகள் மட்டும் விளக்கப்பட்டன. எம்.சி.ராஜா தமது நூலில் தமக்கு சாதகமானதைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். இப்படி பல ஆவணங்கள் இருந்தாலும் இது குறித்த சிறந்த ஆவணமாகத் திகழுவது பின்னி வேலை நிறுத்தம் - 1921 எனும் நூல் மட்டுமே! அந்நூலில் இவ்வேலை நிறுத்தம் எல்லாக் கோணங்களிலும் பார்க்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்நூலில் அருள் குறிப்பிடும் பிட்டி. தியாகராயரின் அறிக்கை மட்டும் காணப்படவில்லையே - அது ஏன்? அவர்கள் இருவரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் அல்லர்.
எயிலிஸ் கமிட்டியின் அறிக்கையின்படி 400-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பாதிக் கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு அரசின் சார்பாக முகாம் அமைக்கப்பட்டு உதவி இருக்கிறார்கள் என்றும் ஆவணங்கள் பேசுகின்றன. இவ்வளவு அவலங்களை யும் நீதிக்கட்சித் தலைவர்களான பிட்டி.தியாகராயர், ஓ.தணிகாசலம் செட்டி, டாக்டர் சி.நடேச முதலியார் கலவரப் பகுதிகளைச் சென்று பார்வையிடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள டாக்டர் சி.நடேச முதலியாரின் உறவினர் வீடு பாதிக்கப்பட்டதால் தான் நீதிக்கட்சித் தலைவர்கள் வந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். எது எப்படி இருப்பினும் நீதிக்கட்சித் தலைவர்கள் கலவரப்பகுதியில் சென்று பார்த்து இருக்கிறார்கள். நிதி திரட்டி இருக்கிறார்கள், உதவி இருக்கிறார்கள் கலவரம் நிற்க வேண்டும் - வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தியவர் களாக இருந்திருக்கிறார்கள் என்பது மிக வெளிப் படையாகத் தெரிகிறது.
மேலும் அருள் குறிப்பிட்டு இருக்கிற பிட்டி. தியாகராயர் அறிக்கையைப் படித்து பார்த்தோம். அய்யத்திற்கு இடமின்றி ஆம் (டிக உடிரசளந) என்று ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவ்வறிக்கை அவருடையதாக இருக்க முடியாது என்றே கருத இடமிருக்கின்றது. ஏனென்றால் ஒரு சில ஆவணங்களில் இவ் வேலை நிறுத்த கலவரம் குறித்து அரசுக்கு பிட்டி. தியாராயர் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்கள். அக்கடிதமும் இன்ன தென்று நமக்குத் தெரியவில்லை. அதில் வேலைக்குச் செல்லும் புதியவர்களை அப் புறப்படுத்த சொன்னதாகக் கூறுகிறார்கள். திரு. வி.க.வோ, ம.சிங்காரவேலரோ பிட்டி. தியாகராயரின் அறிக்கையைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் வேலை நிறுத்தம் பற்றி பிட்டி. தியாகராயர் நிகழ்த்திய இராஜதந்திரப் பேச்சைப் பற்றி திரு. வி.க. குறிப்பிடுகிறார்.
அப்பேச்சில் ஓர் இடத்தில் அப்புறப்படுத்துதல் என்ற சொல் வருகிறது. ஆனால் நகரத்தை விட்டே ஆதி திராவிடர்களை ஓட்டும்படியாக அதில் இல்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்தே அதனை அவர் கூறுகிறார். தியாகராயரின் பேச்சு குறித்து திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில்,
வேலை நிறுத்தம் எப்படி முடிந்தது? ராஜா ஸர், இராமசாமி முதலியார் பங்களா வெளியில் கூடிய கூட்டத்தில் சர்.பி.தியாகராய செட்டியார் நிகழ்த்திய இராஜதந்திரச் சொற்பெருக்கில் மூழ்கித் தொழிலாளர்கள் பலர் வேலைக்குத் திரும்பினர். சர்.பி.செட்டியார், மாதங்கள் பல ஆயின. இனிப் பிடிவாதம் வேண்டாம், உங்களுக்கு இராஜ தந்திரம் வேண்டும். மில்களில் புதிய ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள். புது ஆட்கள் தொழிலைப் பயின்று விடுவார்களாயின் உங்களுக்குத் தொல்லை விளையும். போலீஸ் காவலையும், இராணுவக் காவலையும் கடந்து அவர்களைத் தடுத்தல் இயலாது. ஆனால் அவர்களை ஒரு வழியில் அப்புறப்படுத்தல் கூடும். நீங்கள் எல்லோரும் வேலைக்குச் செல்ல உறுதி கொண்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ஆதலால் நீங்கள் உள்ளே போங்கள், நன்மையே விளையும், சங்கம் சாகாது என்று பேசிய பேச்சு அவ்வேளையில் தொழி லாளர்க்கு உசிதமாகத் தோன்றிற்று, சர்.பி.செட்டியாரின் ஜோசியம் பெரிதும் பலித்தது என்று எழுதியிருக்கிறார். திரு.வி.க. இந்து ஏடு வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் கஸ்தூரி ரங்கன் அய்யங்கார் ஆதரவு தந்தார் என்றும் எழுதியிருக்கிறார். ஆக நமக்குத் தெரிந்த அப்புறப்படுத்தல் என்பது தியாகராயரின் பேச்சில் தொழிலாளர் நலன் விழைந்தே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தினர் வரலாற்றை மறைப் பதில்லை. எங்களுக்கு அகப்பகைவர்களும் உண்டு. புறப் பகைவர்களும் உண்டு, அவர்களின் விமர்சனங்களினால் அவை மறைக்கப்படுவது உண்டு.
3) தோழர் அருள் அவரது கட்டுரையில் 1921 வேலை நிறுத்தத்தின் போது 14,000 தொழிலாளர்கள் இருந்த தாகத் தெரிவித்து இருக்கிறார். அக்காலக்கட்டத்தில் இரு ஆலைகளிலுமாக தொழிலாளர்கள் எத்தனை பேர் பணி யாற்றினார்கள் என்பது குறித்து நாம் மேலே குறிப்பிட்டு இருக்கின்றோம். அதன்படி 1921-இல் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது தொழிலாளர்களின் எண்ணிக்கை 14,000 அல்ல; சுமார் 11,000 மட்டுமே! மேலே புள்ளி விவரத்தை ஒப்பு நோக்கிப் பார்த்துக் கொள்க!
4) தோழர் அருள் சொல்லுகிற மற்றொரு செய்தியைப் பார்ப்போம். அவர் கூறுகிறார்:-
இந்த சூழலில் 1921 ஜூன் 28 அன்று இரவு புளியந்தோப்பு சேரி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் பெரும் மோதலாக வெடித்தது. புளியந்தோப்பு கலவரம் 1921 என்று அழைக்கப்படும் இந்த கலவரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், மற்றவர் களும் மோதிக்கொண்டனர். சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. மூன்றுபேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் (இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கலாம்). போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசின் காவல்துறையினர் நடத்திய துப் பாக்கிச் சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு பேரும் பார்ப்பனரல்லாத இந்துக்கள்.
புளியந்தோப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சுமார் மூன்றாயிரம் பேர், அங்கிருந்து ஆங்கிலேய அரசாங்கத்தால் வெளியேற்றப் பட்டு வியாசர்பாடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கே.ஓ.அந்தோணி சிறப்புக் கடமையாற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் அறிக்கை ஜூன் 29/1921-லிருந்து ஜூலை 4-ஆம் தேதி வரை கலவரத்தைப் பற்றி வெளி யிடப்பட்டது. இதில் ஆதிதிராவிடர்களின் குடிசைகள் 269, சக்கிலியர் குடிசைகள் 61, ஓட்டர் குடிசைகள் 17, ஜாதி இந்துக்கள் குடிசைகள் 28, முகமதியர் குடிசைகள் 43 என மொத்தம் 418 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. எந்தெந்த ஜாதியினர் என்னென்ன ஆயுதங்களை வைத்து இருந்தனர் என்ற விவரத்தையும் அப்போதைய நீதித் துறையின் ஆவணங்கள் நமக்கு இன்றும் கூறிக்கொண்டு இருக்கின்றன. இவையன்றி கலவரத்தினால் இறந்த வர்கள் பற்றிய குறிப்பில் ஆதி திராவிடர் எவரும் இல்லை. தோழர் அருள் குறிப்பிட்டிருப்பது போல மூன்று பேர் வெட்டிக் கொல்லப்படவும் இல்லை. ஆதிதிராவிடர் எவரும் இறக்கவும் இல்லை. இறப்பு, காயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:
1921 ஆம் ஆண்டு ஆக்ஸ்டு 29-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்தனர். இவர்களின் சடலம் மறுநாள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இடுக்காட்டில் திரு. வி.க., சிங்கார வேலர், சக்கரைச் செட்டியார் போன்றோர் உரையாற்றினர். இவை தான் கலவரங்களின் போது நடைபெற்ற இழப்புகளாகும்.
தோழர் அருள் வியாசர்பாடி முகாம்களில் 3000 பேர் இருந்ததாக எழுதி இருக்கிறார், அது தவறு. ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முகாமில் 1669 பேர் இருந்தனர். இவர்கள் 446 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஜூலை 2-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2-ஆம் தேதி வரை முகாம் வாழ் மக்கள் அனைவருக்கும் இலவச உணவு, துணிமணிகள் வழங்கப்பட்டன. இதற்காக ரூ. 2885 - 3 - 0 செலவழிக்கப்பட்டது. அகதிகள் முகாம் அமைப்பதற்காக ரூ. 2849 = 13 - 0 செலவழிக்கப்பட்டது. 1922 ஜூன் வரை உணவு வழங்குவதற்காக ரூ. 12,495. 11 - 5 செலவாகி இருக்கிறது. இவ்வளவு அன்பு ஆதிதிராவிடர்கள் மேல் ஆங்கிலேய அரசுக்கு ஏன் ஏற்பட்டது? பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தை உடைத்ததற்காக! எம்.சி.ராஜாவின் வழிகாட்டு தலுக்காக! இந்நிலையில் நீதிக்கட்சி அரசு என்ன செய்ய முடியும்? அதன் தலைவர்கள் என்ன செய்ய முடியும்? இயன்றதைச் செய்ய அவர்கள் தவறவில்லை.
5) எம்.சி.ராஜாவின் சட்டமன்றப் பேச்சைப் பற்றி அருள் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் பேச்சும் குற்றச்சாட்டுகளும் சட்டமன்றத்தில் எடுபடவில்லை. இதர நீதிக்கட்சி தலைவர்களின் பேச்சு சிறப்பாக இருந் தது. ராஜா தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். நீதிக்கட்சியின் மேல் சொந்த பகையை வைத்துக் கொண்டு தனது ஜாதியாரை அவர் பலி கொடுத்து அவர்களுக்கும் அவர் கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுத்தார். அது சரித்திரமாகி விட்டது. அவரே ஒப்புக்கொண்ட அதை அருள் ஒன்றும் செய்ய முடியாது.
காந்தியார், சென்னைக்கு வந்தது பற்றியும் அவரிடம் ஆலை பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டது பற்றியும் தோழர் அருள் கூறியிருக்கிறார். ஆம், காந்தியார் 1921 செப்டம்பர் திங்களில் வந்தார். செப்டம்பர் 16-ஆம் தேதி தொழிலாளர்களிடையே பேசினார். வழக்கம் போல் ஒத்துழையாமை, அகிம் சையைப் பற்றி பேசினாரேயன்றி ஆலைத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரி டையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை. வேலை நிறுத்தம் செய்தவர்கள் சரணடைந்து விட்டதாக அருள் தெரிவிக்கிறார். பிட்டி. தியாகராயரின் பேச்சை ஏற்று தொழிலாளர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆட்சியாள ருக்கு துணை நின்ற எம்.சி.ராஜா போன்றவர்களை வைத்துக் கொண்டு எந்தத் தொழிலாளர்கள் இலக்கை அடைய முடியும்? இன்னும் பல செய்திகள் இது குறித்து சொல்ல வேண்டி இருந்தாலும், அது இங்கே - அருள் எழுப்புகிற பிரச்சினைக்கு பொருந்தாது.
தோழர் அருள் அல்லது அருள் போன்றவர் களுக்கு நாம் சொல்வதெல்லாம் இதுதான்:-
நீதிக்கட்சிக்காரர்கள் ஜாதி இந்துக்கள் தான்; பெருந்தனக்காரர்கள்தான்! ஆனால் மனிதா பிமானிகள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாத வர்கள். பிரித்தாளப்பட்டபோது உண்மையின் பக்கம் நின்றவர்கள் அவர்கள். அரையாட்சி அதிகாரத்தில் எதுவும் செய்யாத நிலையில் இருந்தனர். எதையாவது செய்து பிரச்சினையை அமைதிக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டினார்கள். அவர்கள் எரிந்து கொண்டு இருக்கையில் எண்ணெய்யை வார்க்க வில்லை, ஆதித்திராவிடர்களை ஒழிக்க நினைத்தா பார்ப்பனர் அல்லாதார் தொகுப்பிற்குள் அவர்களை நீதிக்கட்சியினர் கொண்டு வந்தார்கள்? நேரிய பார்வையானாலும் இயல்பாகவே ஒரு பகுதி, பார்வைக்கு உட்படாதது போல பல சிக்கல்கள் நாட்டில் இருப்பதைப் பார்க்க வேண்டும்.
நாம் அடிக்கடி ஒரு கருத்தை வலியுறுத்தி வருவோம். வாழ்நிலையிலிருந்து தான் சிந்தனை தோன்றுகிறது. அந்தச் சிந்தனை பல பரிமாணங்களைத் தோற்றுவிக் கிறது. அப்படித் தோன்றியதுதான் அரசியல் இயக்கங்கள்; நீதிக்கட்சி முதலானவை! அதன் பிறகு தான் தேவையும், மறந்துபோன சேர்த்துக் கொள்ள மறந்தவைகள் பலவும் விவாதத்திற்கு வருகின்றன. இவை இணைத்துக் கொள்ளப்பட்டு அரசியல் இயக்கங்கள் அதனதன் கொள்கைகளுக்கு ஏற்ப முன்நகர்வை இயல்பாக பெறுகின்றன. இவற்றில் சர்ச்சைகள் எழும்; சண்டைகளும், இழப்புகளும் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கும். செய்தவைகள் நியாமானதாகத் தெரியும். பின்னர் அவற்றைப் பரிசீலிக்கிறபோது நேர்ந்தவைகளுக்காக வருத்தப்பட வேண்டி இருக்கிறது. அப்படித்தான் 1921-ஆம் ஆண்டு பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பல அனுபவங்களை அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் நமக்கு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அருள் போன்றவர்கள் தெரிந்து கொண்டால் போதுமானது.(16-06-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2)